You are on page 1of 2

சுமங்கலியாக வாழ ஒவ்வொரு பெண்ணின் ஜாதக ரீதியாகவும் 8 ஆம் பாவமானது

பலமாக அமைய வேண்டும். பெண்களுக்கு 8 ஆம் பாவம் மாங்கல்ய ஸ்தானமாகும். 7


ஆம் இடம் களத்திர ஸ்தானம் என்றாலும் 8 ஆம் இடம் மாங்கல்ய ஸ்தானம் என்பதால், 8
ஆம் வட்டாதிபதி
ீ ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 8 ஆம் வட்டை
ீ குரு போன்ற சுப
கிரகங்கள் பார்வை செய்தாலும், களத்திர ஸ்தானமான 7 ஆம் பாவமும் பலமிழக்காமல்
இருந்தாலும் கணவனுக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், நிலையான மாங்கல்ய
பாக்கியம், தாம்பத்திய வாழ்வில் அன்யோன்யம் உண்டாகும். 

8 ஆம் வட்டை
ீ குரு, சுக்கிரன், வளர்பிறை, சந்திரன் பார்வை செய்வது உத்தமம்.  அதுவே
சுபர் பார்வை 8 ஆம் வட்டிற்கு
ீ இல்லாமல் இருந்து 8 ல் சனி, செவ்வாய், சூரியன், ராகு,
கேது அமையப் பெற்றாலும், 8 ஆம் அதிபதி சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது
சேர்க்கை பெற்றாலும், 8 ஆம் அதிபதி நீசம் பெற்றாலும் வக்ரம் பெற்றாலும் மாங்கல்ய
தோஷம் உண்டாகி வரக்கூடிய கணவருக்கு கண்டம் ஏற்படுகிறது. 8 ஆம் அதிபதி பலம்
இழந்து அதாவது நீசம் பெற்று மற்ற கிரகங்களால் பங்கம் பெற்றிருந்தாலும் முதலில்
அமையும் வாழ்க்கையானது நிலைப்பதில்லை. 

7 ஆம் வட்டதிபதி
ீ நீசம் பெற்றாலும் சனி, சூரியன், செவ்வாய், ராகு போன்ற பாவிகள்
சேர்க்கை பெற்றாலும் கணவருக்கு கண்டம் உண்டாகிறது. அது மட்டுமின்றி 7 ஆம்
அதிபதி நீசபங்கம் ஏற்பட்டிருந்தாலும் முதலில் அமையக்கூடிய வாழ்வில் ஒரு பாதிப்பு
ஏற்பட்டு அதன் பிறகு தான் வாழ்க்கை சிறப்பாக அமையும். 7 ஆம் வட்டிற்கும்
ீ 8 ஆம்
வட்டிற்கும்
ீ இரு புறமும் பாவிகள் அமைவதும், 8 ஆம் அதிபதி இருக்கும் வட்டிற்கும்

இருபுறமும் பாவிகள் அமைவதும் மாங்கல்ய தோஷமாகும்.

மாங்கல்ய ஸ்தானமான 8 ஆம் வட்டிற்கு


ீ சமசப்தம ஸ்தானமான 2 இல் பாவிகள்
அமைவதும் மாங்கல்ய தோஷமாகும். அது போல பெண்களுக்கு களத்திர காரகன் என
வர்ணிக்கபடக்கூடிய செவ்வாய், சுக்கிரன் ஆகியவர்கள் சனி, ராகு போன்ற பாவகிரக
சேர்க்கைப் பெற்றிருப்பதும் மாங்கல்ய தோஷமாகும்.  8 ஆம் இடம் மாங்கல்ய ஸ்தானம்
என்பதால் அதனை சனி, செவ்வாய், போன்ற பாவ கிரகங்கள் பார்வை செய்வதால்
மாங்கல்ய தோஷம் உண்டாகிறது. 

பொதுவாக 7,8 ஆம் பாவங்கள் களத்திர ஸ்தானம், மாங்கல்ய ஸ்தானம் என்பதால்,


பெண்கள் ஜாதகத்தில் 7,8 ஆம் பாவங்கள் சுத்தமாக இருக்கிறதா எனப் பார்த்து தான்
திருமணம் செய்வார்கள். அப்பொழுதுதான் பெண்கள் நீண்ட காலம் சுமங்கலியாக
வாழக்கூடிய பாக்கியத்தைப் பெறுவார்கள். 
பெண்களுக்கு  மாங்கல்ய  தோஷம்  விளக்கம் 

         8  க்குடையவன்  சூனியம்  அடைந்தாலோ  . சூன்ய  ராசியில் நின்றாலோ  , சூ
னிய  கிரகத்தின்   சாரம்  பெற்றாலோ மாங்கல்ய தோஷம் ஏற்படும் .
         8  குடையவன்   நீசம்   பெற்றாலோ  ,  அஸ்தங்க தோஷம் பெற்றாலோ ,
6  க்குடையவன்  சேர்ந்தாலோ  ,
6 க்குடையவன்  சாரம்  பெற்றாலோ  மாங்கல்ய தோஷம் ஏற்படும் .

          8  ல் ராகு  ,  கேது  , மாந்தி  , சூரியன் ,  செவ்வாய்  , சனி
அமர்ந்தால்   மாங்கல்ய தோஷமாகும் .
          

           8 க்குடையவனுடன்   இராகு  ,கேது  , மாந்தி  . சூரியன்  ,செவ்வாய்  , ச


னி  ஆகிய  கிரகங்கள்  பார்த்தால்   ,இணைந்தால்  மாங்கல்ய  தோஷமாகும் .

         8  குடையவனையோ  ,
8  மிடத்தையோ   இராகு  , கேது  ,மாந்தி  . சூரியன் , செவ்வாய் , சனி   ஆகிய  கி
ரகங்கள்  பார்த்தால் தோஷமாகும்

           8 க்கு  குடையவன்  பாதாகாதிபதி   சம்பந்தப்பட்டால்  8  ம்
மிடத்தில்   பாதகாதிபதி  சம்பந்தம்  ஏற்பட்டால்   மாங்கல்ய தோஷமாகும் .

           ரிசப  லக்னத்துக்கும் , சிம்ம லக்னத்திற்கும்  , குரு  சூன்யம்
அடைந்தலோ  , மாந்தி  , ராகு  , கேது  ஆகியன
சம்பந்தப்பட்டாலோ  , அஸ்தங்கம்  அடைந்தாலோ  மாங்கல்ய
தோஷமாகும் ,

         பலமான மங்கல்ய
தோஷத்தை  ஏற்படுத்தும்  கிரகங்கள் இராகு , கேது  மாந்தி  ஆகியன ஆகும் .

         “  பாம்பும்   சனியும்  உடன்  கூடில்  சேயரிடடம்
        தேள்  , தனுசு  , சிங்கம்   இவையினில்  அமர்ந்திட
      நேய ஆள்பவர்   தனக்கும்   நாட்டிற்கும்  துன்பமே “ .

You might also like