You are on page 1of 227

BOOK – 1 – Tamil Composition (Paper 1)

பொருளடக்கம் - கட்டுரை

எண் பொருள் பக்கம்

தொகுதி 1

1 உன்னைக் கவர்ந்த ஆசிரியர் ஒருவரைப் பற்றியும், அவர் உன்னைக் 1-3


கவர்ந்ததற்கான காரணங்களையும் விளக்கி எழுதுக.
2 சிங்கப்பூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்மொழி விழாக்கள் உனது 4-6
மொழியை மேம்படுத்திக் கொள்ள எவ்வாறு உதவுகின்றன என்பதை விளக்கி
எழுதவும்.
3 இக்காலச் சிங்கப்பூரர்களுள் பெரும்பாலானோர் தன்னலமிக்கவர்களாக 7-8
இருக்கிறார்கள். இக்கருத்தினை நீ ஏற்றுக்கொள்கிறாயா? ஏன்?

தொகுதி 2

4 பெற்றோர்களே பிள்ளைகளின் உயர்வு தாழ்வுக்குக் காரணமாவர் , இது குறித்து 9-11


உமது கருத்தை எழுதுக.
5 அண்மையில் நடந்த இயற்கைப் பேரிடர்க்காக உன் பள்ளி ஏற்பாடு செய்திருந்த 12-14
நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நீ கலந்து கொண்டதன் மூலம் உனக்கு ஏற்பட்ட
அனுபவத்தை விவரிக்கவும்.
6 வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் உள்ள உன் நண்பனுக்கு நீ செய்த 15-16
உதவி.

தொகுதி 3

1
7 ஒரு மாணவர் வாழ்க்கையில் வெற்றியடையத் தேவையான பண்புகள் யாவை 17-19
என்பதை விளக்கி எழுதுக.
8 இக்காலத் தகவல் தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மை, தீமைகளை விளக்கி 20-22
எழுதுக.
9 தொலைக்காட்சியில் நீ விரும்பிப் பார்த்த ஒரு நிகழ்ச்சியும், அது உன்னைக் 23-24

கவர்ந்ததற்கான காரணங்களையும் விளக்கி எழுதுக.

தொகுதி 4

10 உமது பள்ளி ஏற்பாடு செய்த விடுமுறை முகாமில் கலந்துகொண்டு நீவிர் அடைந்த 25-27
பயன்களையும், அதன்மூலம் நீ எவ்வாறு உம்மை மேம்படுத்திக் கொண்டாய்
என்பதையும் விளக்கி எழுதுக.

11 பள்ளியின் பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் 28-30


அவற்றை மாணவர்கள் பாதுகாப்பதற்கான வழிவகைகளையும் விளக்கி எழுதுக.

12 இக்கால மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் உள்ள பிணைப்பை எவ்வாறு 31-32


மேம்படுத்தலாம் என்பதையும், அதனால் ஏற்படும் பயன்களையும் விவரித்து
எழுதுக.

தொகுதி 5

13 நீ கண்டு மகிழ்ந்த ஒரு திரைப்படத்தைப் பற்றியும், அது உனது நினைவில் 33-35


நிற்பதற்கான காரணத்தையும் விவரித்து எழுதுக.

14 நீ முடிவெடுக்கச் சிரமப்பட்ட ஒரு பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்றும், 36-38


அதற்காக நீ மேற்கொண்ட செயல்களையும், சந்தித்த சவால்களையும் விவரித்து
எழுதுக.
15 பள்ளிகள் ஏற்பாடு செய்யும் வெளிநாட்டுக் கற்றல் பயணங்கள் ஒரு மாணவனின் 39-40
முழுமைக் கல்விக்குத் துணைபுரிகின்றன. கருத்துரைக்க.

தொகுதி 6

16 உமது பள்ளியில் நீவிர் ஏற்படுத்த விரும்பும் மாற்றங்களைப் பற்றி விவரித்து 41-43


எழுதுக.

17 உன் குடும்பத்தில் ஏற்படவிருந்த ஒரு விபரீதத்தை நீ எவ்வாறு பொறுப்புடன் 44-46


இருந்து சமாளித்தாய் என்பதையும், அதைச் சமாளிக்கும்போது நீ எதிர்நோக்கிய

2
சவால்களையும் விவரித்து எழுதுக.

18 வாழ்க்கையில் ஒருவரை முன்னேறச் செய்வது கல்வியே. இக்கருத்தினை நீ 47-48


ஏற்றுக்கொள்வாயா? (ஏற்றுக்கொள்கிறேன் என்ற அடிப்படையில் அமைந்த
கருத்துகள்)

தொகுதி 7

19 நூல் வாசிப்பதன் அவசியத்தைப் பற்றியும் அதை மாணவர்களிடம் வளர்ப்பதற்கான 49-51


வழிவகைகளையும் விளக்கி எழுதுக.

20 உமது ஆசிரியர் உம்மீது வைத்த நம்பிக்கையால் உம்மிடமிருந்த திறமை 52-54


வெளிப்பட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது நம்பிக்கையைப் பொய்யாக்காமல்
உம்மை நிரூபித்துக் கொண்ட அனுபவத்தை விளக்கி எழுதுக.

21 நல்ல நண்பர்களின் அவசியத்தையும், அவர்களுடன் நட்புறவை 55-57


வளர்த்துக்கொள்ளும் வழிவகைகளையும் விவரித்து எழுதுக.

தொகுதி 8

22 நீவிர் போற்றும் ஒருவருடைய நற்பண்புகளையும், அவர் செய்த நற்செயல்களையும் 58-59


விளக்கி எழுதுக.

23 நீ இனிமேல் சந்திக்கவே கூடாது என்று முடிவெடுத்திருந்த நண்பர் ஒருவரைப் பல 60-62


வருடங்களுக்குப் பின் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அவரை ஏன்
சந்திக்கக் கூடாது என்று நினைத்தாய் என்பதையும், அவரை மீண்டும் சந்தித்த
போது உனக்கு ஏற்பட்ட மனநிலையையும், பாதிப்புகளையும் விளக்கி எழுதுக.

24 நீ பெருவிரைவுப் போக்குவரத்து இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது 63-64


நடந்த ஒரு சம்பவம் உன்னை வருத்தமடையச் செய்தது. அது என்ன சம்பவம்
என்றும், அது உன்னை வருத்தமடையச் செய்ததற்கான காரணங்களையும் விவரித்து
எழுதுக.

தொகுதி 9

25 ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியத்தைப் பற்றியும், அவற்றைக் 65-67


கடைப்பிடிப்பதற்கான வழிமுறைகளையும் எழுதுக.

26 உனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தையும், அதன்மூலம் நீ கற்றுக்கொண்ட 68-69


படிப்பினையையும் விளக்கி எழுதுக.

3
27 உன் நீண்ட நாள் பழக்கமொன்று மாறுவதற்குக் காரணமாக அமைந்த 70-71
சம்பவத்தையும், அதன்மூலம் நீ கண்ட மாற்றத்தையும் விவரித்து எழுதுக.

தொகுதி 10

28 நண்பர்களின் செல்வாக்கு ஒருவரது வாழ்வில் பல்வேறு பாதிப்புகளை 72-74


ஏற்படுத்துகிறது என்னும் கருத்தை நீ ஏற்றுக் கொள்கிறாயா? ஏன்?

29 நீ செய்யாத ஒரு குற்றத்திற்காக உன் மீது பழி சுமத்தப்பட்டது. அது எவ்வாறு 75-77
நடந்தது என்றும், அதன்மூலம் நீ எவ்வாறு பாதிக்கப்பட்டாய் என்றும் விவரித்து
எழுதுக.
30 “தோல்வியே வெற்றிக்கு முதல் படி” என்பதை உணர்ந்து நீ வாழ்வில் வெற்றி 78-79
கண்ட சம்பவத்தையும், அதன்மூலம் நீ பெற்ற அனுபவத்தையும் விளக்கி எழுதுக.

தொகுதி 11

31 மாணவர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பத்தின் பாரத்தை எவ்வாறு குறைக்கலாம்? 80-82

32 காலத்தின் அருமையைப் பற்றி உனக்கு உணர்த்திய ஒரு சம்பவத்தைப் பற்றியும், 83-85


அதன்மூலம் நீ கற்றுக்கொண்ட பாடத்தைப் பற்றியும் விவரித்து எழுதுக.

33 இன்றைய இளையர்கள் எதிர்நோக்கும் சவால்களையும், அவற்றை எவ்வாறு 86-87


அவர்கள் சமாளிக்கலாம் என்பதனையும் விளக்கி எழுதுக.

தொகுதி 12

34 இளைஞர்கள் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மதிப்பதில்லை என்ற கருத்தை 88-90


விவரித்து எழுதவும்.

35 இப்படித்தான் முடியும் என்று நீ நினைத்திருந்த ஒரு சம்பவம் நீ எதிர்பாராத 91-93


விதத்தில் முடிந்தது. அது என்ன சம்பவம் என்றும், அது நீ எதிர்பார்த்த விதத்தில்
முடியாத காரணத்தையும் விவரித்து எழுதுக.

36 “சிங்கப்பூர் வாழ்வதற்கேற்ற வளமிக்க நாடு” - இக்கருத்தினை நீ 94-95


ஏற்றுக்கொள்கிறாயா? ஏன்?

தொகுதி 13

4
37 சாதிக்க இயலாதது எதுவுமில்லை என்று உம்முடைய நம்பிக்கையை 96-98
உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த சம்பவம் ஒன்றினை விளக்கி எழுதுக.

38 உனக்கு விருப்பமில்லாத செயல் ஒன்றினைச் செய்யும் கட்டாயத்திற்கு நீ 99-101


ஆளாக்கப்படுகிறாய். அச்சம்பவம் எவ்வாறு நடந்தது என்றும், அது உன்னை
எவ்வகையில் பாதித்தது என்றும் விவரித்து எழுதுக.

39 சிங்கப்பூரர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளில் குடியேற விரும்புவதில்லை - 102-103


கருத்துரைக்க.

தொகுதி 14

40 நீ மிகவும் விரும்பும் ஒரு தலைவர் பற்றியும் அவர் உன்னைக் கவர்ந்த 104-105


காரணத்தையும் விவரித்து எழுதுக. (திரு.லீ குவான் இயூ)

41 விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தால் உன் மனம் 106-108


வருத்தமடைந்தது. அது என்ன சம்பவம் என்றும், அது உன்னை வருத்தமடையச்
செய்ததற்கான காரணத்தையும் விவரித்து எழுதுக.

42 உதவும் மனப்பான்மையை எவ்வாறு சிங்கப்பூரர்களிடையே வளர்க்கலாம் 109-110


என்பதற்கான ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் விளக்கி எழுதுக.

தொகுதி 15

43 நட்பின் சிறப்பை உனக்கு உணர வைத்த ஒரு சம்பவம் பற்றி விளக்கி எழுதவும். 111-113

44 வாய்ப்புக் கிடைத்தபோது நீ அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியதால் உன் 114-116


முன்னேற்றம் தடைப்பட்டுப் போனது. அது எவ்வாறு நடந்தது என்பதையும்,
அதன் மூலம் நீ தெரிந்துகொண்ட உண்மைகளையும் விவரித்து எழுதுக.
45 சிங்கப்பூரர்கள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் - கருத்துரைக்க. 117-118

தொகுதி 16

46 விளையாட்டுத்தனமான ஒரு செயல் விபரீதத்தில் முடிந்தது. அந்தச் சம்பவத்தை 119-121


விவரித்து எழுதுக.

இக்கால இளைஞர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது, நண்பர்களின் 122-124


47
தகாத சேர்க்கையும் ஆடம்பர வாழ்கைமுறையுமே என்ற கருத்தை நீ ஏற்றுக்

5
கொள்வாயா? ஏன்?

துணைப்பாட வகுப்புகளினால் ஏற்படும் நன்மைத் தீமைகளைப் பற்றி விளக்கி


48 எழுதுக. 125-126

தொகுதி 17

49 மாணவர்களிடையே சமூக சேவையை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பதை 127-129


விவரித்து எழுதுக.

50 தண்ணீர் சேமிப்பின் அவசியத்தையும், அதைப் பற்றிச் சிங்கப்பூரர்களுக்கு 130-131


வலியுறுத்த நீ கூறும் வழிவகைகளையும் விளக்கி எழுதுக.

51 உன்னுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வழி செய்த ஒரு சம்பவத்தை 132-133


விளக்கி எழுதுக.

தொகுதி 18

52 உன் குடும்பத்தார் நட்புணர்வோடு பழகுவதில்லை என்றும், தம்முடைய 134-135


உணர்வுகளை மதித்து நடப்பதில்லை என்றும் உன் அண்டைவீட்டார் கருதினர்.
ஆனால் நீயும் உன் குடும்பத்தினரும் செய்த செயல் ஒன்று அவருடைய
எண்ணத்தை மாற்றியது. நீயும் உன் குடும்பத்தாரும் என்ன செய்தீர்கள்
என்பதனையும், அதிலிருந்து நீ பெற்ற படிப்பினையையும் விவரித்து எழுதவும்.
53 இனநல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தையும், அதை சிங்கப்பூரர்களிடம் வளர்ப்பதற்கு 136-138
நீ கூறும் சில ஆலோசனைகளையும் விளக்கி எழுதுக.
54 விடாமுயற்சியே வெற்றிக்கு வழி என்பதை உனக்கு உணர்த்திய அறிஞர் 139-140
ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றியும், அது உனக்குக் கற்றுக் கொடுத்த
பாடத்தையும் விளக்கி எழுதுக.

தொகுதி 19

55 நீ உன் பெற்றோருக்குப் பெருமை சேர்த்த ஒரு செயலை எழுது. 141-143

56 சிங்கப்பூரில் குற்றச்செயல்கள் ஏற்படுவதற்கான காரணங்களையும், அவற்றைக் 144-146


குறைப்பதற்கான ஆலோசனைகளையும் விளக்கி எழுதுக.

57 உன் வகுப்பில் அயல்நாட்டு மாணவன் ஒருவன் புதிதாக வந்து சேர்கிறான். 147-148

6
வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்கள் அவன் பேசுவதைக் கிண்டல் செய்து
அவனை மனவருத்தம் அடையச் செய்கின்றனர். இதனைக் கண்ட நீ, அயல்நாட்டு
மாணவனுக்கு ஆறுதல் கூறுவதோடு, மற்ற மாணவர்கள் தங்கள் தவற்றை
உணரும்படிச் செய்கிறாய். இச்சம்பவத்தை விவரித்து எழுதுவதோடு, அதன்மூலம் நீ
மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்த படிப்பினையையும் எழுதுக.

தொகுதி 20

58 நம் நாட்டில் கொண்டாடப்படும் விழாக்கள் சிங்கப்பூரர்களிடம் ஒற்றுமையையும் 149-151


பிணைப்பையும் ஏற்படுத்துகின்றன - கருத்துரைக்க.

59 பணிப்பெண்கள் சிங்கப்பூரர்களுக்குச் சுகமா, சுமையா? - கருத்துரைக்க. 152-154

60 தொழில்நுட்பம் இக்கால இளையர்களை அதிகச் சோம்பேறிகளாக்கிவிட்டது -


கருத்துரைக்க. 155-156

7
பொருளடக்கம் – மின்னஞ்சல்

தொகுதி மின்னஞ்சல் வகை தலைப்பு பக்க எண்

a. அலுவலக மின்னஞ்சல் புகார் செய்தல் - வினா 159-159


1
b. உறவுமுறை மின்னஞ்சல் அறிவுரை கேட்டல் - வினா 159-159

a. அலுவலக மின்னஞ்சல் விமர்சனம் செய்தல் - வினா 160-160


2
b. உறவுமுறை மின்னஞ்சல் ஆலோசனை கேட்டல் - வினா 161-161

a. அலுவலக மின்னஞ்சல் அனுமதி கேட்டல் - வினா 162- 162


3
b. உறவுமுறை மின்னஞ்சல் தகவல் கேட்டல் - வினா 162-162

a. அலுவலக மின்னஞ்சல் விண்ணப்பித்தல் - வினா 163-163


4
b. உறவுமுறை மின்னஞ்சல் பகிர்ந்துகொள்ளுதல் - வினா 163-163

a. அலுவலக மின்னஞ்சல் மன்னிப்புக் கேட்டல் - வினா 164-164


5
b. உறவுமுறை மின்னஞ்சல் பரிந்துரைத்தல் - வினா 164-164

a. அலுவலக மின்னஞ்சல் தகவல் கேட்டறிதல் - வினா 165-165


6
b. உறவுமுறை மின்னஞ்சல் தகவல் அறிவித்தல் - வினா 165-165

a. அலுவலக மின்னஞ்சல் பரிந்துரைத்தல் - வினா 166-166


7
b. உறவுமுறை மின்னஞ்சல் பாராட்டு தெரிவித்தல் - வினா 166-166

a. அலுவலக மின்னஞ்சல் பாராட்டு தெரிவித்தல் - வினா 167-167


8
b. உறவுமுறை மின்னஞ்சல் நன்றி தெரிவித்தல் - வினா 167-167

a. அலுவலக மின்னஞ்சல் ஆலோசனை கூறுதல் - வினா 168-168


9
b. உறவுமுறை மின்னஞ்சல் மன்னிப்புக் கேட்டல் - வினா 168-168

8
a. அலுவலக மின்னஞ்சல் முறையிடுதல் - வினா 169-169
10
b. உறவுமுறை மின்னஞ்சல் விளக்கம் கேட்டல் - வினா 169-169

அலுவலக மின்னஞ்சல் - 1a to 10a


11 விடைத்தாள்கள் 171-202
உறவுமுறை மின்னஞ்சல் - 1b to 10b

9
தொகுதி 1

Model Compo - மாதிரிக் கட்டுரை


1. உன்னைக் கவர்ந்த ஆசிரியர் ஒருவரைப் பற்றியும், அவர் உன்னைக் கவர்ந்ததற்கான
காரணங்களையும் விளக்கி எழுதுக.

‘ஒரு விதைக்குத் தாய் என்பது மண்’ என்றால், 'தந்தை என்பது நீர்’ என்றால், அந்த விதையானது தாயால்
உயிர் பெறும், தந்தையால் வளம் பெறும். ஆனால் செழித்து வளராது. அதற்குத் தேவை நல்ல உரம். அந்த உரமாய்
இருந்து ஒரு சிறுவிதையை மாபெரும் விருட்சமாய் உருவாக்குபவர்கள்தாம் நல்ல ஆசிரியர்கள். எனவேதான்,
‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என நம் பழந்தமிழ்ப் பெரியோர்கள் ஆசிரியர்களைக் கடவுள் நிலைக்கு
உயர்த்திப் போற்றினார்கள். நமது சமூகத்தில் ஆசிரியர்களுக்கு அன்றும் இன்றும் நல்ல புகழும், நீடித்த பெயரும்
நிலைபெற்றுள்ளது. ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையும், கண்ணியம் மிக்க கல்விப் பணியுமே இதற்குக்
காரணங்கள். எனக்கு ஆசிரியர்கள் மீது எப்போதும் மிகுந்த மரியாதையும், நிறைந்த அன்பும் உண்டு. அந்த வகையில்
எனது நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த ஆசிரியர்கள் வரிசையில் என் தமிழாசிரியர் திரு தங்கபாண்டியனும் ஒருவர்.
அவர் எவ்வாறு எனது உள்ளத்தைக் கவர்ந்தார் என்பதையும், அவர் கற்பித்த பாடங்கள் எவ்வாறு எனது
உள்ளத்தைக் கவர்ந்து எனக்குச் சுவையளித்தன என்பதையும் கீழே விவரிக்க உள்ளேன்.

எனக்கு எல்லாப் பாடங்களும் விருப்பம் என்றாலும். தமிழ்ப்பாடம்மீது எனக்கு எப்போதும் தனிப்பிரியம்


உண்டு. எனது உயர்நிலை மூன்றிலும் நான்கிலும் எனக்குத் தமிழ்ப்பாடம் கற்பித்துக் கொடுத்தவர் திரு
தங்கபாண்டியன் ஆவார். தமது கம்பீரமான தோற்றத்தாலும், கண்ணியமான பேச்சினாலும், கருத்தாழம் மிக்க
கவின்மிகு கற்பித்தல் திறனாலும், முதல் வகுப்பிலேயே அவர் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார். எனக்கு
மட்டுமன்று, என் வகுப்பு மாணவர்கள் அனைவரின் உள்ளத்திலும் அவர் ஒரு நாளிலேயே உயரிய இடத்தைப்
பிடித்து விட்டார். சிங்கப்பூர் சூழலில் பொதுவாகத் தாய்மொழிப் பாடங்களில் மாணவர்கள் அதிக ஆர்வம்
காட்டுவதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், கற்பிக்கும் ஆசிரியர்களும் பாடங்களை அவர்கள்
கற்பிக்கும் போக்கும் முக்கியக் காரணங்கள் என நான் கருதுகின்றேன். கற்பிக்கும் திறனும், கனிவான நெஞ்சமும்
கொண்ட ஆசிரியர்கள் மட்டும் மாணவர்களுக்கு அமைந்துவிட்டால், எந்தப் பாடமும் அவர்களுக்குக் கசப்பாக
இருக்காது என்பது எனது தாழ்மையான கருத்து.

1
ஆசிரியர் திரு. தங்கபாண்டியன், தமிழ் இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர் என்றால் அது மிகையாகாது.
அந்தக்காலச் சங்க இலக்கியங்கள் முதல் இந்தக் கால “ஹைக்கூ” கவிதை வரை அவருக்கு அத்துப்படி.. அவரிடம்
பாடங்களில் எந்தச் சந்தேகத்தையும் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். “நாளை சொல்கிறேன்” என்னும்
வார்த்தை அவர் வாயிலிருந்து வரவே வராது. கேட்கும் ஐயங்களுக்குத் தெளிவான பதில் அளித்துச் சந்தேகங்களை
உடனுக்குடன் போக்குவார். ‘பெண்ணாசையால் விளைந்தது இராமாயணம், மண்ணாசையால் விளைந்தது மகாபாரதம்’
எனத் தமிழின் இரண்டு பெரிய காப்பியங்களை ஆசிரியர் ஒரே வரியில் சுருங்கச் சொல்லி விளக்கிடுவார். ‘பால்
நகையாள், வெண்முத்துப் பல்நகையாள், கண்ணகியாள் தன் கால் நகையால் கழுத்து நகை இழந்த கதை’ எனச்
சிலப்பதிகாரத்தைப் புதுக்கவிதை மூலம் அவர் விளக்கிய விதம் இன்னும் எனது நெஞ்சில் நிழலாடுகின்றது. அவர்,
தமிழிலக்கியப் பாடங்களை நடத்தும்போது மாணவர்களை அந்தக்காலச் சூழலுக்கே அழைத்துச் செல்வார். கதை
மாந்தர்களின் உணர்வுகளோடு மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிணையச் செய்வார். கதைகளில் அவர்கள்
சிரிக்கும்போது மாணவர்களும் சிரிப்பர், அவர்கள் சோகத்தில் அழும்போது மாணவர்களும் அழுவர். தமிழ்மொழி
மிக உயர்ந்தச் செம்மொழி என்பதையும், காலத்தைக் கடந்து இன்றும் வாழும்மொழியாக அது இருக்கிறது
என்பதையும், எனக்கு உணர்த்தியவர் அவரே! தமிழ்மொழி மீது பற்றும், மேலும் மேலும் தமிழைக் கற்கவேண்டும்
என்னும் தாளாத ஆர்வமும், அவர் மூலமே எனக்கு வந்தது என்பது உண்மையிலும் உண்மை.

என் ஆசிரியர் கல்வியில் எவ்வளவு தூரம் கரை கண்டவரோ அவ்வளவு தூரம் கனிவான உள்ளத்திலும்
கங்குகரை காணாதவர் ஆவார். என் வகுப்புத்தோழன் இரமணன் வசதி குறைந்த குடும்பத்தைச் சார்ந்தவன்.
பெரும்பாலும் காலை உணவு சாப்பிடாமலேயே பள்ளிக்கு வருவான். பள்ளி உணவகத்திலும் வாங்கிச் சாப்பிட
அவனுக்கு வசதி இருக்காது. இது யாருக்கும் தெரியாது. ஆனால், இதை அறிந்த என் ஆசிரியர் பள்ளி உணவகத்தில்
தமது செலவில் தினமும் உணவு வழங்க ஏற்பாடு செய்தார். அதனோடு நின்று விடாமல், ‘சிண்டா’ மூலம் நிரந்தர
உதவி கிடைக்க வழி வகை செய்தார். ஊனமுற்ற தம் தந்தையாருக்காக அவர் திருமணம் செய்துகொள்ளாமல்
அவர்களோடு அவர் சேர்ந்து வாழ்கின்றார். இதனை என் நண்பன் மூலம் அறிந்த நான் இந்தக் காலத்திலும் இப்படி
‘ஒரு மனிதரா?’ என வியந்து போனேன்.

திரு தங்கபாண்டியன் ஆசிரியர், சிறந்த கல்விமான், உயர்ந்த குணவான். அவர் மிகுந்த கண்டிப்பும்
நிறைந்தவர் என்பதையும் நான் குறிப்பிட விரும்புகின்றேன். அரையாண்டுத் தேர்வில் கணிதப்பாடத்தில் இன்னொரு
மாணவனைப் பார்த்து எழுத முயற்சி செய்த என் வகுப்புத் தோழி மாதவிக்கு எந்தப் பரிவும் காட்டாமல் பள்ளித்
தேர்வுக் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைத்துத் தண்டனை வாங்கித் தந்தார். மாதவி, அவருக்குப் பிடித்த
மாணவியருள் ஒருத்தி. ஆனாலும், ஒழுங்கீனத்தையும் தவறான நடத்தையையும் யார் கொண்டிருந்தாலும் அது
அவருக்கு அறவே பிடிக்காது என்பதால், அவளிடம் அவர் சிறிதும் இரக்கம் காட்டவில்லை.
ஒழுக்கக்கோட்பாடுகளையும் உயர்ந்த பண்புகளையும் மாணவர்கள் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும்
விட்டுவிடக்கூடாது என்பது, அவர் எங்களுக்குப் போதித்த முக்கிய அறிவுரைகளுள் ஒன்றாகும்.

2
பாடங்களில் மட்டுமல்லாது, இணைப்பாட நடவடிக்கைகளிலும் அவர் மாணவர்களுக்குத் தூணாக இருந்து
தோள் கொடுப்பார். நாடகம், நடனம், பாட்டு, விவாதப்போட்டி முதலிய எல்லாப் போட்டிகளிலும் மாணவர்கள்
பங்கெடுக்க அவர் ஊக்குவிப்பார். தாமே, குறிப்புகளும் பயிற்சிகளும் கொடுத்து மாணவர்களைப் பயிற்றுவிப்பார்.
பாடங்கள் முடிந்து வீடு திரும்பாமல் மாலை நேரங்களில் மாணவர்களுடன் இருந்து அவர்கள் போட்டிகளில்
வெற்றிபெற உதவி செய்வார். நாங்கள் வெறும் ஏட்டுச்சுரைக்காயாக மட்டும் இருந்துவிடக்கூடாது என்பதில் முழு
அக்கறை கொண்ட எங்கள் ஆசிரியர், விளையாட்டுகளிலும் நாங்கள் இமயத்தைத் தொட வேண்டும் என்பதிலும்
கண்ணும் கருத்துமாக இருந்தார் என்றால் அது மிகையாகாது.

‘தோல்வி என்பது வெற்றியின் முதல்படி’ இதுதான் ஆசிரியர் தங்கபாண்டியன் எங்களுக்கு அடிக்கடி கூறும்
பொன்மொழி. நாங்கள் தேர்விலோ அல்லது விளையாட்டுப் போட்டியிலோ, எதில் தோல்வி கண்டாலும் அதற்கான
காரணத்தை ஆராய வேண்டுமே தவிர, மூலையில் உட்கார்ந்து அழக்கூடாது என்னும் அவரது வாசகம் ஒவ்வொரு
முறையும் நாங்கள் தோல்வி காணும்போது எங்கள் காதுகளில் ஒலிக்கும். ‘முயற்சியை விடாதவன் ஒருநாள்
ஜெயிப்பான், முயற்சி செய்யாதவன் என்றுமே தோற்பான்’ என்று கூறி அவர் எங்களைத் தட்டிக்கொடுப்பார். அவர்
கூறியதைப் பின்பற்றியதால் இன்று எங்களில் பலர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். எங்கள் ஆசிரியரைக்
காணும்போது,

தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சி தன்


மெய்வருத்தக் கூலி தரும்

என்றுரைத்த தெய்வப்புலவராகவே காட்சியளித்தார்.

இவ்வாறு, என் ஆசிரியர் தங்கபாண்டியன் ஏட்டுக்கல்வி நிரம்பியவராக மட்டுமே இல்லாமல், மாணவர்களின்


இதயங்களையும் வாசிக்கும் திறன் பெற்றவராகவும் இருந்தார். போதிப்பது என்னும் ஒன்றையே போக்காகக்
கொள்ளாமல், போதித்ததைச் செயலிலும் செய்து காட்டிய சாதனையாளராகவும் இருந்தார். கல்வியாளராகவும் கனிந்த
நெஞ்சினராகவும் மட்டுமே அல்லாது தீமை கண்ட இடத்து அதனை அஞ்சாது அகற்றும் திறன் படைத்தவராகவும்
இருந்தார். தோல்வி வந்தபோது எங்களுக்குத் தோள்கொடுக்கும் நல்ல தோழனாக இருந்தார். இத்தகைய
இயல்புகளைக் கொண்ட தங்க நெஞ்சினர் ஆசிரியர் திரு தங்கபாண்டியன், என்றும் என் உள்ளத்தில் தங்கி
வாழ்கின்றார்.

அருஞ்சொற்பொருள்

உரமாய் எருவாய் தாளாத அடக்க முடியாத

3
விருட்சமாய் மரமாய் நிரந்தர நிலையான

கண்ணியமான கௌரவமான தாளாத அடக்க முடியாத

கவின்மிகு அழகு நிறைந்த நிரந்தர நிலையான

அனைத்தும் அறிந்த
அத்துப்படி கோட்பாடுகளையும் கொள்கைகளையும்
நிலை

பால் போன்ற வெறும்பாடப்புத்தகத்தை


பால் நகையாள் ஏட்டுச்சுரைக்காய்
சிரிப்பினள் மட்டும் படிப்பது

நினைவுக்கு
நிழலாடுகின்றது இமயத்தை உயர்நிலையை
வருகின்றது

மாந்தர்களின் மனிதர்களின் மிகையாகாது அதிகமாகாது

பயிற்சி வினா 2 மற்றும் 3


கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்,
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

2. சிங்கப்பூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்மொழி விழாக்கள் உனது மொழியை


மேம்படுத்திக் கொள்ள எவ்வாறு உதவுகின்றன என்பதை விளக்கி எழுதவும்.

முன்னுரை விளக்கம்

'தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை;


தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை’
● தாய்மொழி ஒருவரது அடையாளம்.
● தாய்மொழியே கலை, பண்பாடு, ஒழுக்கம் ஆகியனவற்றின் புரிதலுக்கும்
மேம்பாட்டுக்கும் அடிப்படை.
● தமிழ்மொழிப் புழக்கம் குறைந்த சிங்கப்பூர் போன்ற நாடுகளில்
மொழிப் புழக்கம் வளரவும், தாய்மொழியின் மீது பற்றும் பாசமும்

4
ஏற்படவும் தமிழ்மொழி விழாக்கள் அவசியம் தேவை

கருத்து 1

அரசாங்கத்தின் ஆதரவும் ● தாய்மொழிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.


தமிழ்மொழி விழாக்களும் ● ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் முழுவதும் அரசாங்க ஆதரவுடன் பல
இடங்களில் தமிழ்மொழி விழாக்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.
● பள்ளிகள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள் முதலியன இவற்றை
நடத்துகின்றன.
● எடுத்துக்காட்டுகள்: சொற்களம், சிறுகதைப் பயிலரங்குகள், பாரம்பரியக்
கலைநிகழ்ச்சிகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

கருத்து 2

முறைசாராத் தமிழ் ● பள்ளிப் பாடத்திட்டங்களில் தமிழ் இலக்கிய அறிமுகம் மிகக் குறைவு.


இலக்கிய அறிமுகம் ● இலக்கியச் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், கவி அரங்குகள்
அகண்ட இலக்கிய அறிவைப் பெறப் பெரும் உதவியாய் உள்ளன.
● மாணவர்கள் பார்வையாளர்களாய் வருவதோடு அல்லாமல், தாங்களும்
பங்கேற்பாளர்களாகப் பேச்சுப் போட்டி, பாடல் மனப்பாட ஒப்புவிப்பு,
விவாதக்குழு உறுப்பினர்கள் என நேரடிப் பயிற்சி பெறும் வாய்ப்பு.
● இது மாணவர்களின் தமிழ்ப்புலமையை மேம்படுத்தி, அவர்களின்
தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கருத்து 3

பள்ளியில் நடத்தப்படும் ● தமிழ் நாடகங்களில் பார்வையாளர்களாகவும், பங்கேற்பாளர்களாகவும்


தமிழ்க் கலைவிழாக்கள் பங்கெடுக்கும் வாய்ப்பு
● தமிழைச் சரளமாகப் பேசும் பயிற்சிக்கு வாய்ப்பு
● தமிழில் படைப்புகளைப் படைக்கப் புத்தாக்கப் பயிற்சி, தமிழிலேயே
சிந்தித்து எழுத, பேசப் பயிற்சியும் வாய்ப்பும்
● தமிழ்க் கலைகளின் பழமை, மாண்பு, புதுமை, கலாச்சாரப் பெருமை
முதலியனவற்றை அறிந்து மகிழும் வாய்ப்பு
● மாணவர்களுள் புதையுண்டு கிடக்கும் திறன்களை வெளிக்கொண்டுவர
வாய்ப்பளிக்கும்

கருத்து 4

தமிழ்மொழி தொடர்பான ● தமிழ்மொழிப் போட்டிகள் இல்லாத குறை நீங்குதல்


பல்வேறு போட்டிகளில் ● போட்டிகளில் பங்கெடுப்பதால் சுயமாகச் சிந்தித்தல், தமிழ்மொழி, தமிழ்
பங்கெடுத்தல், நடத்துதல் இலக்கியம் தொடர்பான தரவுகளைக் கணினியில் தேடும் வாய்ப்பு
● இன்றைய மாணவர்கள் தகவல் தொழில் நுட்பத்தில் அதிகம் ஈடுபாடு

5
கொண்டவர்களாக இருப்பதால், இணையம் மூலம் தமிழுக்காகத்
தகவல்களைச் சேர்ப்பது அவர்களை வெகுவாகக் கவரும்
● தமிழ்த் தட்டச்சுச் செய்யும் வாய்ப்பும் தமிழ் இணையப் பக்கங்களைத்
தெரிந்து கொள்ளும் வாய்ப்பு
● போட்டிகளைப் பள்ளி, கல்லூரி சார்பாக நடத்தும்போது தமிழிலேயே
அறிவிப்பு, பேச்சு முதலியனவற்றைச் செய்வதால் ஏற்படும் மொழிப்
புழக்கம்

முடிவுரை

● ‘கற்றிலன் ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம்


துணை’ என்னும் திருக்குறளுக்கேற்ப,
 தமிழைப் படிக்காவிட்டாலும் காதில் கேட்டாவது மொழிப்புழக்கம் வளர
● தமிழ்மொழியின் ஆழத்தையும் அகலத்தையும் உணர்த்த நடத்தும்
இலக்கியப் பொழிவுகள் மூலமாகத் தமிழின் பெருமையை உணர
● தமிழின் மீது கொண்டுள்ள அறியாமை அகல
● ஆர்வத்துடன் தமிழ் பயில, தடையின்றிப் பேச, தமிழில் படைப்புகளை
உருவாக்க
தமிழ்மொழியில் விரிந்த அறிவு பெற, வாழும் மொழியாகச் சிங்கையில்
நிலைபெறச் சிங்கப்பூரில் நடக்கும் தமிழ்மொழி விழாக்கள் பெரிதும்
உதவுகின்றன

கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:

● ‘தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ - பாரதிதாசன்
● ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ - பாரதியார்
● ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ - பாரதியார்
● ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு’ - பாரதிதாசன்
● ‘எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!’ - மனோன்மணியம் சுந்தரனார்
● ‘தமிழன் என்றோர் இனம் உண்டு! தனியே அவர்க்கு ஒரு குணம் உண்டு!
அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்’ – நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்
பிள்ளை
● ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

அருஞ்சொற்பொருள்

புழக்கம் பயன்பாடு
6
முரைசாரா முறையான மதீப்பீட்டைச் சாராத

அகண்ட விரிந்த

ஒப்புவிப்பு மனனம் செய்து கூறுதல்

மாண்பு சிறப்பு

தரவுகளை தகவல்களை

3. இக்காலச் சிங்கப்பூரர்களுள் பெரும்பாலானோர் தன்னலமிக்கவர்களாக இருக்கிறார்கள்.


இக்கருத்தினை நீ ஏற்றுக்கொள்கிறாயா, ஏன்? (உதவிக் குறிப்புகள் – ஏற்றுக்கொள்ளவில்லை
என்ற கருத்தின் அடிப்படையில்)

முன்னுரை

➢ தன்னலம் மறந்து பிறர் நலத்தில் அக்கறை

➢ பொதுநலம் போற்றும் தலைவர்கள் நிறைந்த நாடு

➢ மூப்படைந்து வரும் சமூகத்தைப் பேணிக் காத்தல்


இடையுரை

➢ சமூக மன்றங்களில் தொண்டூழியர்களின் சேவை

➢ பேரிடர் காலத்தில் உலகநாடுகளுக்கு உதவும் செஞ்சிலுவை இயக்கச் சிங்கப்பூரர்கள்

➢ பல்லின மக்கள் வாழும் சூழலில் சகிப்புத்தன்மையுடன் நடத்தல்


➢ வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிகள் புரிதல்

➢ தன்னலம் மறந்து நாட்டிற்காக இராணுவச் சேவை

➢ சிண்டா என்ற இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தில் நூற்றுக்கணக்கான இளம் தொண்டூழியர்கள் இருக்கிறார்கள்

➢ இளம் வயதிலிருந்தே மாணவர்களுக்குப் பொதுநலத்தைப் பற்றிப் பள்ளிகள் கற்றுக்கொடுக்கின்றன

➢ சமூகச் சேவை என்பது பள்ளிகளில் கட்டாயச் சேவையாக இருக்கிறது

➢ இரத்தத் தானம் நடவடிக்கை, நிதி திரட்டும் நடவடிக்கை போன்ற தன்னலம் பாராத செயல்களில் அதிகமான
இளையர்கள் ஈடுபடுகிறார்கள்

➢ சிங்கப்பூர்க் காவல் படையினர் தன்னலம் பாராது மக்களின் பாதுகாப்பிற்காக அல்லும் பகலும்


உழைக்கிறார்கள் – (அண்மையில் நம் முன்னாள் மதியுரை அமைச்சர் திரு லீ குவான் யூ அவர்களின்

7
அஞ்சலியின்போது மழை வெயில் என்றும் பாராது காவல் படையினரும், தொண்டூழியர்களும் நாள்கணக்கில்
பணிபுரிந்தனர்)

➢ பேருந்துகளிலும் பெருவிரைவுப் போக்குவரத்து இரயிலிலும் முதியோருக்கு முதலிடம் வழங்குகிறார்கள்

➢ புகைமூட்டக் காலத்தில் சிங்கப்பூரர்கள் முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்குச் சென்று இலவச


முகக்கவசங்களை விநியோகம் செய்தார்கள்

➢ மாணவர்கள் ஆண்டுதோறும் இளையர் தினத்தன்று (Youth Day) ஆதரவற்ற சிறுவர் இல்லங்களுக்குப்


பள்ளிகள்மூலம் நன்கொடை வழங்குகிறார்கள்

➢ பேரிடர்களால் பாதிக்கப்படும் உலக நாடுகளுக்கு நன்கொடை திரட்டி உதவுகிறார்கள்


(எ. கா – அண்மையில் சென்னையில் ஏற்பட்ட பெரும் வெள்ள நிவாரணத்திற்காகச் சிங்கப்பூர் மக்கள்
லிட்டில் இந்தியாவில் நன்கொடை திரட்டினார்கள்)

முடிவுரை

➢ தன்னலம் மக்கட்பண்பு அல்ல

➢ உலகில் யாரும் தனித்து வாழ இயலாது

➢ பொது நலமே சாலச் சிறந்தது


இனிய தொடர்கள்

➢ ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு’

➢ ‘பிறர்நலம் கருதி உழைத்தலே நோன்பு’

➢ ‘அறம் செய விரும்பு’

➢ உலகம் வேண்டுவது ஒழுக்கமே! சுயநலம் தீய ஒழுக்கம்! பொதுநலம் நல்லொழுக்கம் – விவேகானந்தர்

➢ ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ – திருநாவுக்கரசர்

➢ ‘மக்களுக்குச் செய்யும் சேவை மகேசனுக்குச் செய்யும் சேவை’

➢ ‘தனிமரம் தோப்பாகாது’

➢ ‘அன்பிற்கு உண்டோ அடைக்குந் தாழ்’

➢ ‘வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை’

➢ ‘தட்டிப்பறிப்பவன் வாழ்ந்ததில்லை, விட்டுக்கொடுப்பவன் வீழ்ந்ததில்லை’

➢ ‘எது என்றபோதும் பொது என்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்’

➢ ‘வலது கை கொடுப்பதை இடது கை அறியாது’


8
➢ ‘தர்மம் தலைகாக்கும்’

➢ ‘சுயநலம் உள்ள மனிதன் தூற்றப்படுவான், பொதுநலம் உள்ள மனிதன் போற்றப்படுவான்’

➢ ‘உலகில் எல்லையற்றது ஒன்று உண்டு என்றால், அது பிறரிடம் அன்பு செலுத்துவதே ஆகும்’

அருஞ்சொற்பொருள்

மூப்படைந்து வயதாகி

பேணி காக்க

செஞ்சிலுவை ஆபத்துக்காலத்தில் உதவி செய்யும் ஒரு சங்கம் /


Redcross

விநியோகம் வழங்குவது / distribution

பணி வேலை

தொகுதி 2

Model Compo - மாதிரிக் கட்டுரை

4. “பெற்றோர்களே பிள்ளைகளின் உயர்வு தாழ்வுக்குக் காரணமாவர்” - இது குறித்து உமது கருத்தை


எழுதுக.

‘பிள்ளையைப் பெற்றெடுத்தால் போதுமா? பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா?’ என்னும் இந்தத்


திரைப்படப்பாடலின் ஒவ்வொரு வரியிலும் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை இன்று நமது சமூகத்தில்
நிகழும் நிகழ்வுகள் மூலம் நாம் நன்கு உணரலாம். ‘அவரை விதை போட்டால் துவரைச் செடி முளையாது’ என்னும்
பழமொழி இதை நமக்கு மேலும் நன்கு விளக்கும். ஒரு விவசாயி, வயலில் விதைகள் விதைத்துப் பயிராக்கிக் களை
பறித்துப் பாதுகாத்துப் பயன்தரும் பயிராக அதை உருவாக்கி அறுவடைக்குத் தயாராக்குகின்றார். அதைப் போலவே,

9
பெற்றோர்கள், தமது தளராத முயற்சியால் தம் பிள்ளைகளை நல்லவர்களாகவும் சமூகத்தின் உயர்தரக்
குடிமக்களாகவும் உருவாக்க வேண்டும். இக்கடமை, முழுக்க முழுக்கப் பெற்றோர்களையே சார்ந்துள்ளது.

பெற்று வளர்த்து, உலகத்தை எதிர்கொள்ளத் தயாரானவர்களாகக் குழந்தைகளை உருவாக்குதல் தாயின்


கடமை என்றும், அக்குழந்தைகளை உயர்ந்தோர்கள் ஆக்குதல் தந்தையின் கடமை என்றும் ‘புறநானூறு’ என்னும்
பழந்தமிழ் இலக்கியம் பெற்றோர்களின் கடமைகளைத் தனது ஒரு பாடலில் வலியுறுத்துகிறது. பிறந்த குழந்தை சற்று
வளர்ந்து கல்விச்சாலைக்குப் போகும் முன் வீட்டில் அதற்கு முறையான வளர்ப்பும், பெற்றோர்களின் அன்பும்
அரவணைப்பும் தேவை. ஆனால், இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் இளங்குழந்தைகளைத் தங்களது
நேரடிப் பொறுப்பில் வளர்ப்பதில்லை என்பதே உண்மை. இன்றைய சமூகச் சூழலில், பெற்றோர் இருவருமே
வேலைக்குச் செல்வதால் குழந்தைகள் பணிப்பெண்களின் கண்காணிப்பிலேயே வளர்கின்றனர். பணிப்பெண்கள்
குழந்தைகளை வளர்ப்பது தவறானது என்று நான் கூறவரவில்லை. ஆனால், உளவியல், பண்பாடு, கலாச்சாரம் குடும்ப
உணர்வு அடிப்படைகளில் அக்குழந்தைகள் பணிப்பெண்கள் மூலம் நன்கு வளர முடியாது என நான் கருதுகிறேன்.
பணத்திற்காக வேலை செய்பவர்களிடம், பரிவையும் பாசத்தையும் எதிர்பார்க்க முடியாது.

பத்து மாதம் சுமந்த தாயால் மட்டுமே, தாய்ப்பாலுடன் பாசத்தையும் பரிவையும் நற்பண்புகளையும் ஒருசேர
ஊட்டமுடியும். ஒரு தந்தையால் மட்டுமே, குழந்தைக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் பாசத்தோடு
அளிக்க முடியும். இந்த உண்மையைப் புரிந்து கொண்ட பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகளே வாழ்வில்
உயர்நிலையை அடைகின்றனர்.

சிலைகளைச் செதுக்கும் சிற்பிகளைப்போலத் தங்களுக்குப் பிறந்த குழந்தைகளின் குணங்களையும் நடத்தைகளையும்


பெற்றோர்களே வடிவமைக்கின்றனர்.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்


உயிரினும் ஓம்பப் படும்”

என்று திருவள்ளுவர் கூறியது போல், ஒழுக்கமே ஒரு மனிதனின் உயிராக இருக்கிறது. எனவே, ஒழுக்கத்தில் சிறந்த
குழந்தைகளை உருவாக்கக் கட்டுப்பாடுகள் அவசியமாகின்றன. பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே
கட்டுப்பாடுகளையும், நல்ல கோட்பாடுகளையும் வலியுறுத்திக் குழந்தைகளைத் தங்களின் நேரடிக் கண்காணிப்பில்
கண்டிப்புடன் வளர்க்க வேண்டும். இப்படிப்பட்ட பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகளே, வளர்ந்து
பெரியவர்கள் ஆகும்போது மாபெரும் சாதனைகள் புரிகின்றனர். மாபெரும் சபைகளில் மாலைகள்
அணிவிக்கப்பெற்று மாற்றுக் குறையாத தங்கங்கள் என்று போற்றப்படுகின்றனர். இவ்வாறு நல்லொழுக்கம்,
நற்பண்புகள் முதலியன யாவற்றிற்கும் பெற்றோர்களே காரணமாக அமைகின்றனர்.

10
அதிகமான சுதந்திரமும், அதிகமான கட்டுப்பாடுகளும் பிள்ளைகளை மிகவும் பாதிக்கின்றன என்பதைப்
பெற்றோர்கள் உணர வேண்டும். பெற்றோர்கள் அதிகக் கண்டிப்புக் காட்டும்போது பிள்ளைகள் தத்தம் வேலைகளை
வெறும் கடமைக்காகவே செய்வர். அவற்றில் முழுமையும் முழு ஈடுபாடும் இருக்காது. சிறு பிள்ளைகளாக
இருக்கும்போது தாய்தந்தையர் கண்டிப்புக்குப் பயந்து அவர்கள் சொல்லைத் தலைமேற் கொண்டிருக்கலாம். ஆனால்,
அவர்களே பெரியவர்களாக வளர்ந்த பிறகு, வேலை பார்த்துத் தமது சொந்தக் கால்களில் நிற்கும்போது
பெற்றோர்களை அலட்சியப்படுத்துவர். தங்களின் திருமணம், வேலை, எதிர்காலம் முதலியவற்றில் பெற்றோர்களை
மதிக்காமல் அவர்களே முடிவெடுப்பர். ஓர் அணையில் அளவுக்கு அதிகமாகத் தண்ணீரைத் தேக்கி வைத்தால்
எவ்வாறு அணை கடந்த வெள்ளமாக அது அணையை உடைத்துக்கொண்டு வெளியேறுகிறதோ, அவ்வாறே சில
பிள்ளைகள் பெற்றோர்களின் அதிகமான கட்டுப்பாடுகளைத் தாங்க முடியாமல் தீய வழிகளில் சென்று தங்கள்
வாழ்க்கையையே அழித்துக் கொள்கின்றனர்.

நமது மூத்த தலைமுறையினருக்கு ஐந்து, ஆறு, ஏன் பத்து, பன்னிரெண்டு பிள்ளைகள் வரை
இருந்திருக்கிறார்கள். ஆனால், இக்காலப் பெற்றோர்களோ ‘ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு’ என்று வீட்டுக்கு ஒரு
பிள்ளையையோ அல்லது இரண்டு பிள்ளைகளையோ வைத்திருக்கிறார்கள். இக்குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டி
வளர்க்கும் பெற்றோர்கள், அவர்களுக்குச் செல்லம் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாகவே சுதந்திரம்
கொடுக்கிறார்கள். குறிப்பாக, அவர்களின் இணையப்பயன்பாடு, இணைய உரையாடல், கைத்தொலைபேசியின்
பயன்பாடு ஆகியவற்றைக் கண்காணிக்காமல் இருக்கிறார்கள். இதனைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ளும்
பிள்ளைகள் இணையத்தின் வழி தகாத உறவுகளை வளர்த்துக்கொண்டு, இறுதியில் பேராபத்தில் சிக்கிக்கொண்டோ,
மீளமுடியாத துன்ப வலையில் மாட்டிக்கொண்டோ பரிதவிக்கிறார்கள். பெற்றோர்கள் ஓரளவுக்குத் தங்கள்
பிள்ளைகளுக்கு இடங்கொடுக்கலாம். ஆனால், அது கட்டுப்படுத்தப்பட்ட, கண்காணிப்புள்ள சுதந்திரமாக இருப்பது
பாதுகாப்பானது.

பிறர் சொல்லிக் கற்பதைவிட, தாங்கள் சுயமாகப் பார்த்துக் கற்பதே பிள்ளைகளின் மனத்தில் ஆழமாகப்
பதிகிறது என்று உளவியலாளர்கள் இயம்பியுள்ளனர். எனவே, பிள்ளைகளின் கல்வியின் மீது அக்கறை, ஒழுக்கக்
கோட்பாடுகளை ஊட்டி வளர்ப்பது, அன்பும் அரவணைப்பும் காட்டுவது, கட்டுப்பாட்டையும் சுதந்திரத்தையும் சமமாக
அளிப்பது என்றெல்லாம் திட்டமிட்டுப் பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பது மட்டும் போதாது. அவர்கள்
குடும்பத்தில் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும். கல்வி, ஒழுக்கம், பண்புகள்
முதலியனவற்றில் பெற்றோர்கள் சிறந்து விளங்க வேண்டும். கடமை உணர்வோடு அவர்கள் குடும்பத்தின் மூத்த
உறுப்பினர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். பெற்றோர் குழந்தைகள் முன் சண்டையிட்டுக் கொள்ளாமல்
புரிந்துணர்வுடன் நடந்து கொண்டு குடும்பப் பண்புகளைக் காக்க வேண்டும். ‘அவர்’ மாதிரி தான் ஆகவேண்டும்,
‘இவர்’ மாதிரி தான் ஆகவேண்டும் என்றெல்லாம் பிள்ளைகள் கனவுகாணாமல் எதிர்காலத்தில் தாங்கள், தம் தாய்

11
தந்தையர் போல ஆகவேண்டும் என்று பிள்ளைகளைக் கனவு காண வைக்கவேண்டும். இப்படிப் பெற்றோர்கள்
வாழ்ந்தால்தான் பிள்ளைகளின் வாழ்க்கை இலட்சிய வாழ்க்கையாக இருக்கும்.

தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் கல்விமான்களாக, பல்துறை வல்லுநர்களாக ஆகவேண்டும் என்று


ஒவ்வோர் பெற்றோரும் மனக்கோட்டை கட்டுவதுண்டு. ஆனால், அதற்கென்று பிள்ளைகளின் ஓய்வு நேரத்தைப்
பணயம் வைத்து ஒவ்வொரு பாடத்திற்கும் துணைப்பாட வகுப்பு, நடன வகுப்பு, நீச்சல் வகுப்பு, தற்காப்பு வகுப்பு
என்று பணத்தைக் கொட்டி ஏற்பாடு செய்து பிள்ளைகளை அனுப்புவது அவர்களுக்கு மனஉளைச்சலை
அதிகரிக்குமே ஒழிய, எக்காலமும் மனநிம்மதியை அளிக்காது. போதுமான ஓய்வின்றிப் பெற்றோர்களைத்
திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே இவ்வகுப்புகளுக்குச் சென்றுவரும் பிள்ளைகளால் அவற்றில் சிறந்து விளங்க
முடியாது. இதனால் அவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டுத் தேர்வுகளில் தோல்வியைச் சந்திக்க நேரிடும். எனவே,
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் தேவை அறிந்து அவர்களைக் கூடுதலான பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்ப
வேண்டும்.

‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும், தீயவராவதும்


அன்னை வளர்ப்பதிலே’ என்று பாடினார் ஒரு கவிஞர். இது முற்றிலும் உண்மை. ஒரு கட்டிடத்திற்கு பலம் அதன்
அடித்தளம், அதுபோன்று பிள்ளைகளுக்கு உரம் அவர்களின் பெற்றோர்கள். எனவே, பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளுக்கு உறுதுணையாக இருந்து, அவர்களை நாட்டிற்கும் வீட்டிற்கும் கடமையாற்றும் நல்ல பிள்ளைகளாக
வளர்க்க வேண்டும். உணவின் சுவை அதைச் சமைத்தவரைப் பிரதிபலிப்பதைப்போல, பிள்ளைகளின் வளர்ச்சி
அவர்களின் பெற்றோர்களையே பிரதிபலிக்கும்.

அருஞ்சொற்பொருள்

பேணி காப்பாற்றி மாற்று தரம்

எதிர்கொள்ள சந்திக்க தேக்கி சேமித்து

உளவியல் மனோதத்துவம் பணயம் வைத்து பந்தயமாக வைத்து

விழுப்பம் சிறப்பு உரம் சக்தி

ஓம்பப் படும் காப்பாற்றப்படும் பிரதிபலிப்பதை வெளிப்படுத்துவதை

12
பயிற்சி வினா 5 மற்றும் 6
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

5. அண்மையில் நடந்த இயற்கைப் பேரிடர்க்காக உன் பள்ளி ஏற்பாடு செய்திருந்த நிதி திரட்டும்
நிகழ்ச்சியில் நீ கலந்து கொண்டதன் மூலம் உனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்கவும்.

முன்னுரை விளக்கம்

● நிலநடுக்கத்தை எவ்வாறு அறிந்துகொண்டாய்?

● செய்தித்தாள் / வானொலி / சமூக ஊடகங்கள் மூலமாக

● எவ்வாறு கலந்து கொள்ள நேரிட்டது

● பள்ளிச் சீருடை அணியினர் ஏற்பாடு செய்த நிதி திரட்டும்


நிகழ்ச்சியில்

● நில நடுக்கம் எந்த நாட்டில் நடந்தது?

● இந்தியா / ஜப்பான் / இந்தோனீசியா / சீனா

கருத்து 1 விரிவாக்கம்

நிலநடுக்கத்தால் மக்கள் ● சொல்லொண்ணாத் துன்பம்


பட்ட துயரத்தைக் ● இவர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?
கண்டபோது / கேட்டபோது நீ
● முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏன் எடுக்கவில்லை?
அடைந்த வேதனை
● பாதிக்கப்பட்ட மக்கள் இருக்க வீடுகூட இல்லாமல் படும் துயர்
● இரக்கம், பரிதாபம், உதவ வேண்டும் என்னும் உந்துதல்

கருத்து 2 விரிவாக்கம்

நிதிதிரட்ட வீடு வீடாகச் ● பொது மக்களை எவ்வாறு அணுகுவது?


செல்லும் போது நீ என்ன ● பொது மக்கள் என்னை நம்புவார்கள்
நினைத்தாய், பொது மக்கள்
உன்னிடம் எவ்வாறு நடந்து ● அன்பாகவும் சிரித்த முகத்துடனும் பேசினார்கள்
கொண்டார்கள் என்று ● முன்வந்து நன்கொடை வழங்கினார்கள்
எழுதவும். ● என்னைப் பாராட்டினார்கள்

13
● சிலர் முகம் சுளித்தார்கள்
● பெரும்பாலானோர் உதவினார்கள்

கருத்து 3 விரிவாக்கம்

திரட்டும் நிதி எவ்வாறு ● அடிப்படைத் தேவைகளான உணவு, உடை பெற


பாதிக்கப்பட்ட மக்களுக்கு ● இடிந்துபோன வீடுகளைச் சீர்ப்படுத்த
உதவும் என்று கூறியதை ● மருத்துவச் செலவு
எழுதவும்
● மேம்பாட்டுப் பணிகள் / நிவாரணப் பணிகள்
● குடும்பத்திற்குத் தேவையான செலவு

கருத்து 4 விரிவாக்கம்

நிதிதிரட்டும் நிகழ்ச்சி மூலம் நீ ● பொது மக்களிடம் பேசும் திறன்


பெற்ற திறன்களை எழுதவும் ● வேறுபட்ட மக்களிடம் பேசும் திறன்
● பொறுமை
● பணிவு
● குறைந்த நேரத்தில் நிறைவாகச் செயல்படும் திறன்

முடிவுரை ● மனத்திருப்தி ஏற்பட்டது


● பிறர் நலன் கருதும் மனப்பான்மை மேலோங்கியது
● தொடர்ந்து இத்தகைய செயல்களைச் செய்யப்போகிறேன்

கட்டுரைக் சிறக்க உதவும் வரிகள்:

● வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் – வள்ளலார்


● அனலில் இட்ட புழுப் போல
● காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ - பாரதியார்

● வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்


குறி எதிர்ப்பை நீரது உடைத்து – திருக்குறள்
● அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
● தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் - பாரதியார்

14
● தனக்குத் தனக்கு என்று ஒதுக்காதே
 செய்த தர்மம் தலைகாக்கும் மறக்காதே
● அறம் செய விரும்பு
● ஐயம் இட்டு உண்
● தர்மம் தலைகாக்கும்
● உப்பிட்டவரை உள்ளளவும் நினை
● எடுப்பார் மழுவைத் தடுப்பார் புலியை கொடுப்பார் அருமை
● அணைகடந்த வெள்ளம் போல்
● காட்டில் நிலவாய்க் கடலில் மழையாய் - பிறந்தால் யாருக்கு லாபம்
 பகையில் துணையாய்ப் பசியில் உணவாய் - இருந்தால் ஊருக்கு லாபம்
● மழைபெய்வது பொதுநலம் - குடை பிடிப்பது சுயநலம்
● வலது கை கொடுப்பதை இடது கை அறியாது

அருஞ்சொற்பொருள்

சொல்லொண்ணா சொல்ல முடியாத அளவு

முகம் சுளித்தார்கள் வெறுப்பைக் காட்டினார்கள்

சீர்ப்படுத்த சரிப்படுத்த

நிவாரண சரிசெய்ய/குணப்படுத்த

அனலில் நெருப்பில்

வறியார் ஏழை எளியோர்

ஜகத்தினை உலகத்தினை

ஐயம் பிறர்க்குக் கொடுப்பது

மழு கோடாரி

15
6. வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் உள்ள உன் நண்பனுக்கு நீ செய்த உதவி.

முன்னுரை

➢ வாழ்க்கை என்பது இன்பத்துன்பம் நிறைந்தது


➢ நேற்று நடந்தது இன்று நடப்பது இல்லை
➢ வாழ்க்கை வாழ்வதற்கே
➢ நம் வாழ்க்கையை நாம் மகிழ்ச்சியானதாக அமைக்க வேண்டும்
➢ நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்விக்க வேண்டும்

இடையுரை

➢ திடீர் சந்திப்பு, மனவருத்தம்


➢ நன்றாகப் படிக்கும் மாணவன்
➢ வேலையின்மை
➢ நண்பனின் மனவுளைச்சல்
➢ ஆறுதல், நம்பிக்கையூட்டுதல்
➢ வாழ்க்கையில் பிடிப்பு உண்டாக்குதல்
➢ ஊக்கமூட்டும் சரித்திரக் கதைகளை நண்பனிடம் கூறுதல் (ஹெலன் கெல்லர், பீத்தோவன், அப்துல் கலாம்)
➢ நண்பனுக்குத் திட்டம்போட்டு வேலைகளைச் செய்வதற்கு உதவுதல்
➢ உன் வாழ்க்கையில் நடந்த ஒரு அனுபவத்தை அவனிடம் பகிர்ந்துகொள்ளுதல்
(எ. கா - உனக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்ட அனுபவம்)
➢ ஊக்கமூட்டும் திரைப்படங்களைக் காண அழைத்துச் செல்லுதல்
➢ ஊக்கமூட்டும் கதைப்புத்தகங்களை இரவல் பெற்று அவனைப் படிக்கச் சொல்லுதல்
➢ பண உதவி, சுயதொழில்
➢ கடின உழைப்பு, முன்னேற்றம்
➢ சிங்கப்பூரின் சிறந்த இளம் தொழிலதிபருக்கான விருது
➢ நன்றிக்கடன்

முடிவுரை

16
➢ நண்பன் சிந்தித்தான்
➢ தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தினான்
➢ வாழ்வில் தன்னை மேம்படுத்திக்கொள்ளப் போவதாக உறுதி அளித்தான்
➢ வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்தான்
➢ நன்றி கூறினான்

இனிய தொடர்கள்

➢ ‘முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து


அகம்நக நட்பது நட்பு’
➢ ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’
என்பது போல நண்பனுக்கு உதவுவதல்
➢ ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’, ‘முயற்சிதிருவினையாக்கும் போன்ற பொன்மொழிகள்
➢ தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்மெய்
வருத்தக் கூலி தரும்’
➢ ‘மனதில் உறுதி வேண்டும்’ - பாரதியார்
➢ ‘அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்’ என்ற பழமொழியுடன்
➢ ‘வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா, தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா’
➢ ‘துணிந்து நில், தொடர்ந்து செல், தோல்வி கிடையாது தம்பி’
➢ ‘உன்னால் முடியும் தம்பி, உனக்குள் இருக்கும் உன்னை நம்பி’
➢ ‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’
➢ ‘வெற்றி என்பது பெற்றுக்கொள்வது, தோல்வி என்பது நாம் கற்றுக்கொள்வது’
➢ ‘வெற்றி சிலருக்குக் கழுவும் மீனில் நழுவும் மீனாய் உள்ளது’
➢ ‘நேற்று என்பது முடிந்தது, அது திரும்பாது’

அருஞ்சொற்பொருள்

சரித்திரம் வரலாறு

சுயதொழில் சொந்த வேலைவாய்ப்பு/Self-


employment

17
மேம்படுத்தி உயர்த்தி

இடுக்கண் துன்பம்

தொகுதி 3

Model Compo - மாதிரிக் கட்டுரை

7. ஒரு மாணவர் வாழ்க்கையில் வெற்றியடையத் தேவையான பண்புகள் யாவை என்பதை விளக்கி


எழுதுக.

‘நீராட்டில் மனித வாழ்க்கை தொடங்குகின்றது. நீராட்டில் மனிதவாழ்க்கை முடிகின்றது.’

இடையில், பாராட்டு அவனுக்கு இல்லையென்றால் பாவி மனிதன் அவன் ஏன் பிறந்தான்?’

என்று கவிஞர் கண்ணதாசன் மனித வாழ்வின் இலக்கு பற்றித் தமது கவிதையில் கூறுவார். ‘பிறந்தோம் வாழ்ந்தோம்
இறந்தோம்’ என்றில்லாமல் ‘சிறந்தோம்’ என்று வாழ்வதே மனித வாழ்வின் குறிக்கோள் ஆகும். உலகில்
எத்தனையோ மனிதர்கள் பிறக்கிறார்கள்; எத்தனையோ மனிதர்கள் இறக்கிறார்கள். ஆனால், அத்தனை மனிதர்களும்
வெற்றி பெற்ற மனிதர்களாக வாழ்ந்ததில்லை. அகிலத்தில் நல்ல மனிதனாக வாழ்பவன் வானகத்தில் உள்ள
தெய்வத்தின் வரிசையில் வைக்கப்படுவான் என்றார் வள்ளுவர்.

‘கனவு காணுங்கள். பின்னர், அந்தக் கனவுகளை, எண்ணங்களாக ஆக்கி அவற்றைச் செயல்படுத்த


முனையுங்கள். அப்போதுதான் நீங்கள் நினைத்த இலக்கை அடைய முடியும்’ என்று மாணவர்களுக்கு அறைகூவல்
விடுத்தார் டாக்டர் அப்துல்கலாம். ‘பழுதுபோய் ஒழிந்தன நாட்கள்’ என்றில்லாமல், ஒவ்வொருநாளும் பயனுற
வாழ்வதே மனித வாழ்வின் சிறப்பாகும். வாழ்க்கையில் நாம் எல்லோருமே வெற்றியை விரும்புகின்றோம். ஆனால்,

18
பெரும்பாலோர் அதை அடைவதற்கு எவ்வித முயற்சியும் செய்வதில்லை. ஏனென்றால், மந்திரத்தால் மாங்காய்
விழுந்துவிடும் என்னும் குருட்டு நம்பிக்கை அவர்களுக்கு!

இளமைப் பருவம் நமக்கு இனிய பருவம். இந்தப் பருவத்தில் நாம் திசை மாறிச் சென்றுவிட இன்று
எத்தனையோ புறச்சூழல்கள் நமது வாழ்வை அழிக்கக் காத்துக் கிடப்பதால் நாம் விளக்கில் விழும் விட்டில்
பூச்சிகளைப் போல நம்மை அழித்துக் கொள்ளக்கூடாது. அதிலும், மாணவப்பருவம் நமக்கு மிக முக்கியமானது.
இப்பருவம்தான் நமக்கு எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைகின்றது. எனவே, இப்பருவத்தை வீணாக்காது
கடமையும் கண்ணியமும் கொண்டு வாழ்க்கையில் வெற்றியடையத் தேவையான பண்புகளைக் கைக்கொள்ள
வேண்டும். அப்பண்புகள் மூலம் வாழ்வில் வெற்றியடைந்து கலங்கரை விளக்காய் ஒளி வீச வேண்டும்.

வாழ்க்கையின் உயரத்திற்கு மாணவர்கள் செல்வதற்கு முதலில், ‘திட்டமிடுதல்’ (Planning) என்னும் பண்பு


அவசியமானது என்பதை அவர்கள் உணர வேண்டும். ‘எப்போதும் எனக்கு வேலை இருக்கிறது என்று
சொல்பவர்கள் திட்டமிடத் தெரியாதவர்கள்’ என, ஓர் அறிஞர் கூறுகின்றார். அந்த வேலையிலும், அதனதன் நேரத்தில்
தெளிவாகத் திட்டமிட்டு ஒவ்வொரு காரியத்தையும் செய்வதுதான் வாழ்க்கையின் வெற்றிக்கு அடிப்படை.
மாணவர்களுக்குக் கல்வியும், கல்வியின் தேர்ச்சியுமே இப்போது முக்கிய இலக்கு. மாணவர்கள் பலர் திட்டமிட்டு
நேரம் ஒதுக்கி எல்லாப் பாடங்களையும் படிப்பதில்லை. சில சமயம் ஓரிரு பாடங்களைப் படித்தும், பல சமயம்
எதனையும் தொடர்ந்து படிக்காமலும் இருந்து விடுகின்றனர். அதனால்தான், அவர்கள் தோல்வியின் விளிம்புவரை
சென்று விடுகின்றனர். எனவே, பாடங்களைத் திட்டமிட்டுத் தேர்வுக்கு முறையாகப் படித்தலும், அதற்குரிய நேரங்களை
ஒதுக்குதலும் மிகவும் அவசியம். இந்தத் திட்டமிடுதல் பயிற்சி அவர்கள் பெரியவர்கள் ஆனதும் எதனை, எங்கு,
எப்படிச் செய்யலாம், வெற்றி பெறலாம் என்னும் வழிமுறைகளில் கைத்தேர்ந்தவர்களாக்கி வெற்றியின் சிகரத்திற்கு
அழைத்துச் செல்லும் என்பது உறுதி.

மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற ‘உழைப்பு’ என்னும் பண்பு மிகவும் அவசியமாகின்றது.

மடியை மடியா ஒழுகல் குடியைக்


குடியாக வேண்டு பவர்

என்னும் குறளில், தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த வேண்டும் என விரும்புவோர், சோம்பலை
ஒழித்து உழைக்க முயல வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். எதனையும் நாளை செய்யலாம் என்பது இன்று
மாணவர்கள் பலரின் ‘தாரக மந்திரமாக’ உள்ளது. இது மிகவும் தவறு. எதனையும் ஆறப்போடாமல் அன்றன்றைய
பாடங்களை, வேலைகளை அன்றன்றே செய்தால் ஆண்டிறுதியில் அல்லல்படாமல் அமைதியான முறையில்
தேர்வுகளை எழுதி, அதிக மதிப்பெண்கள் பெறலாம். இந்தத் தளராத உழைப்பு அவர்களின் எதிர்கால வாழ்க்கையை
ஒளிமயமாக்கும். ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’?

‘தன்னம்பிக்கை’ என்னும் பண்பு மாணவர்களுக்கு மிகவும் அவசியமான பண்பாகும். செய்யும் காரியங்களில்


தோல்வி ஏற்பட்டால் மாணவர்கள் துவண்டு விடுகின்றனர். ‘வெற்றி வேண்டுமா, போட்டுப் பாரடா எதிர்நீச்சல்!
சரிதான் போடா, தலைவிதி என்பது வெறும் கூச்சல்! எண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது? கொஞ்சம்
முயன்றால் இங்கு எது கிடைக்காது?’ என்னும் திரைப்பாடல் வரிகள், தன்னம்பிக்கையை மாணவர்க்கு அள்ளி அள்ளி
ஊட்டும் சிறந்த வரிகள் ஆகும். வாழ்க்கை என்பது தடை ஓட்டம் போன்றது. அங்கு தோல்வி என்னும் தடைகள்
வரத்தான் செய்யும். அந்தத் தடைகளைத் தாண்டித் தன்னம்பிக்கையுடன் ஓடுபவன்தான் வெற்றி அடைவான். எனவே,
19
மாணவர்கள் தோல்வியைக் கண்டு மிரளாமல் தன்னம்பிக்கையுடனும், எதுவும் நம்மால் முடியும் என்னும் திடமான
மனத்துடனும் முயலவேண்டும். இந்த முயற்சி அவர்களை எதிர்கால வாழ்வில் மாபெரும் வெற்றிக்கு அழைத்துச்
செல்லும் என்பது உறுதி.

‘கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு’ என்ற பழமொழியை நாம் நம் பாலர் பருவத்தில்
கற்றிருப்போம். இப்பழமொழி கல்விக்கு எல்லையே இல்லை என்னும் உண்மையை நமக்கு உணர்த்துகிறது.
அதனுடன், நாம் வாழும் இந்தக் காலம் சவால்களும் போட்டிகளும் நிறைந்த காலமாக விளங்குகின்றது.
போட்டித்திறன்களில் வெல்பவர்கள் மட்டுமே வாழ்க்கைப் பயணத்தில் வெல்ல முடியும், எனவே, மாணவர்கள்
தாங்கள் கற்ற கல்வியும், பெற்ற திறன்களும் போதும் என்று வாளா இருந்து விடக்கூடாது. ‘வாழ்நாள் கல்வி’
என்னும் சிங்கப்பூரின் கொள்கைக்கு ஏற்ப, மாறிவரும் சூழலுக்கேற்ப, மாணவர்கள் மேலும்மேலும் புதிதாகக் கற்க
வேண்டும். சலிப்பின்றிப் புதிய திறன்களைக் கற்று, அதற்கேற்பத் தங்களைத் தயார்செய்து கொள்ள வேண்டும்.
இன்றைய தொழில்நுட்பம் நாளை இருப்பதில்லை. அப்படியிருக்கும்போது மாணவர்கள் புதிய விஷயங்களைப்
படித்து, தங்களை ஒவ்வொரு நாளும் மேம்படுத்திக்கொண்டால்தான் காலத்திற்கு ஏற்ற மனிதர்களாக அவர்களால்
வாழ முடியும், வாழ்க்கையில் உயர்நிலையை அடைய முடியும்.

‘நீ போகலாம் என்பவன் எஜமான், வா போகலாம் என்பவன் தலைவன்’ என்கிறது அண்மைய


பாடலொன்று. ஆம், தலைமைத்துவப் பண்பு மாணவர்களின் வெற்றிக்குத் தலையாய் இருக்கும் பண்புகளில்
ஒன்றாகும். அதை ஒவ்வொரு மாணவரும் பெற்றிருப்பது அவசியம் என்பதை உணர்ந்து தொடக்கப்
பள்ளியிலிருந்தே மாணவர்களுக்கு இப்பண்பினைப் பல்வேறு நடவடிக்கைகளிலும், பொறுப்புகளிலும் புகுத்துகிறது
நமது கல்வி அமைச்சு. மாணவர் தலைவர், சட்டாம்பிள்ளை, குழுத்தலைவர், இணைப்பாட நடவடிக்கைகளில் முக்கியப்
பொறுப்பாளர் போன்ற பதவிகளை மாணவர்கள் ஏற்கும்போது அவர்கள் மற்றவர்களை வழிநடத்தி, அவர்களையும்
பொறுப்புள்ள தலைவர்களாக உருவாக்கும் திறனைக் கற்கிறார்கள். தங்கள் சக மாணவர்களுக்கு நல்ல
முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள். தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்,
அவரிடம் மற்றவர்கள் எவற்றையெல்லாம் எதிர்பார்ப்பார்கள் என்பதை மாணவர்கள் கற்று, உள்வாங்கிக்கொண்டு
அதன்வழி நடக்கிறார்கள். இப்பண்புநலன் அவர்கள் பிற்காலத்தில் பணிபுரியும்போது அவர்களின் தன்னம்பிக்கையை
உயர்த்தி, எப்பொறுப்பினையும் தயக்கமின்றி ஏற்பதற்கு அவர்களுக்குத் தோள்கொடுக்கும் என்பதில் எள்ளளவும்
ஐயமில்லை.

‘வெற்றி என்பது எட்டாத கனியன்று, அதைப் பார்த்து ஏங்குவதற்கு.’ அது கிடைக்கக்கூடிய ஒன்றுதான்.
ஆனால், அது கிட்ட வேண்டுமென்றால் அதற்குத் தேவையான பண்புகளை மாணவர்களாகிய நாம் பெற்றிருக்க
வேண்டும். ‘படித்தவனைவிடப் பண்புள்ளவனையே இந்த உலகம் போற்றும்’ என்பது பொன்மொழி. இந்தப்
பொன்மொழிக்கேற்ப வாழ்க்கைக்கு வளமூட்டும் பண்புகளைப் பெற்றிருப்பவன் எந்நாளும் துவண்டுபோகமாட்டான்.
அப்பண்புகளை நாம் பெற்றுவிட்டால் மாணவர் பருவத்தில் மட்டுமல்ல, என்றுமே வெற்றி நம் பக்கம்தான்!

அருஞ்சொற்பொருள்
நீராட்டில் குளிப்பாட்டுதலில்

அகிலத்தில் உலகத்தில்

அறைகூவல் பொது அழைப்பு

20
பழுதுபோய் வீணாகி

விளிம்புவரை இறுதிவரை

மடியை சோம்பலை

தாரகமந்திரமாக முக்கியச் சுலோகமாக

வாளா ஒன்றும் செய்யாமல்

புகுத்துகிறது செலுத்துகிறது

பயிற்சி வினா 8 மற்றும் 9

கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்


(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

8. இக்காலத் தகவல் தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மை, தீமைகளை விளக்கி எழுதுக.

முன்னுரை விளக்கம்

● தகவல் தொழில்நுட்ப யுகம்

● நாளுக்கு நாள் அதிமுன்னேற்றம்

● வாழ்க்கையைச் சுலபமாக்குகிறது

● கணினி இல்லாத வாழ்க்கைச்சுழல் திரும்பாது

● ஆதிக்கம் செய்கிறது

● எல்லாரும் கற்றுக்கொள்ளும் அவசியம் ஏற்பட்டுவிட்டது

கருத்து 1 விரிவாக்கம்

நேரத்தை மிச்சப்படுத்தி ● அமர்ந்த இடத்திலேயே அலுவல்களைச் செய்து முடிக்கலாம்


21
● அதிக அலைச்சலுக்கு இடமில்லை
விரைவாகச் செயல்பட
● தகவல்களை உடனுக்குடன் பெற முடிகிறது
முடியும் ● மின்னஞ்சல், குறுஞ்செய்தி வழி உடனுக்குடன் பதிலை
எதிர்பார்க்கலாம்
● இணையம்வழிப் பொருள்கள், உணவுவகைகளை வீட்டிற்குக்
கொண்டு வரலாம்

கருத்து 2 விரிவாக்கம்

அதிகப் பாதுகாப்பு / வசதி ● செய்யும் செயல்களை மறைச்சொல் மூலம் காத்துக்கொள்ளலாம்


நிறைந்த வாழ்க்கைச் ● தானியங்கிப் பணம் எடுக்கும் இயந்திரங்கள் மூலம் எந்நேரமும்
சூழலை எதிர்பார்க்கலாம் பணம் எடுக்கலாம்
● கண்காணிப்புப் புகைப்படக் கருவிகள் பொருத்தப்பட்ட
வீடமைப்பு வட்டாரங்கள், கடைத்தொகுதிகள் மற்றும் பல
● வீடுகளில் பொருத்தப்படும் பாதுகாப்பு இயந்திரங்கள்
● நீண்ட வரிசைகளைத் தவிர்க்கப் பேரங்காடிகளில் சொந்தமாகப்
பணம்கட்டிக்கொள்ளும் வசதி
● திறன் பேசிகள் (smartphones)

கருத்து 3 விரிவாக்கம்

இணையம்மூலம் ஏற்படும் ● சமூக வலைத்தளங்களின் தாக்கம்


ஆபத்துகள் ● இளையர்களால் அதிகமாக ஈர்க்கப்படுதல்
● இளையர்கள் இணைய உரையாடல்களில் அதிகமாக ஈடுபடுதல்
அதனால் ஏற்படும் ஆபத்து
● இணையத்தின் மூலம் வாங்கிய பொருளைத் திரும்பக் கொடுக்க
முடியாது 100% நம்பகத்தன்மை இல்லை

கருத்து 4 விரிவாக்கம்

உடல் நோவு / சோம்பல் / ● முதுகு வலி/கண் கோளாறுகள்


வேலை பாதிப்பு ● உடற்பயிற்சி இல்லை
● மனிதத் தொடர்பு குறைதல்
● வேலை வாய்ப்புகள் குறைதல்/வேலை நீக்கம்
● மறையும் பணிகள்
(தபால்காரர், தந்தி அனுப்புபவர், பேருந்து நடத்துநர்)

22
முடிவுரை ● தகவல் தொழில்நுட்பம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது
● குடும்பப் பிணைப்பு குறைகிறது
● இரண்டுக்கும் வகைசெய்தல் அவசியம்
● பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும்

கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:

● எங்கும் கணினி எதிலும் கணினி


● பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
● கணினியைவிட மனித மூளை சக்தி வாய்ந்தது
● தகவல்கள் கிடைக்கும் வழி பெருகிவிட்டது, ஆனால் அவற்றை ஆராயும் வழி குறைந்துவிட்டது
● மின்னஞ்சல் விண்ணுக்கும் செல்லக்கூடிய காலம் தொலைவில் இல்லை
● பழையன கழிதலும் புதியன புகுதலும்
● காலத்திற்கேற்ற கோலம்
● ஊரும் பேரும் தெரியாதவர்கள்
● பசுத்தோல் போர்த்திய புலி
● மின்னுவதெல்லாம் பொன்னல்ல
● காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும்

அருஞ்சொற்பொருள்

யுகம் நீண்ட காலம்

அலுவல் வேலை

குறுஞ்செய்தி சிறிய செய்தி (sms)

மறைசொல் மறைந்திருக்கும் சொல் (password)

தானியங்கி சொந்தமாகச் செயல்படும்

23
கண்காணிப்புப்
Surveillance camera
புகைப்படக் கருவிகள்

இணையத்தில் மக்களை
சமூக வலைத்தளம் இணைக்கும் வலைப்பக்கங்கள்
(social network)

நம்பகத்தன்மை நம்பிக்கை

கழிதலும் நீக்குதலும்

கோலம் வேடம்

24
9. தொலைக்காட்சியில் நீ விரும்பிப் பார்த்த ஒரு நிகழ்ச்சியும், அது உன்னைக் கவர்ந்ததற்கான
காரணங்களையும் விளக்கி எழுதுக.

முன்னுரை

➢ சிங்கப்பூரில் தொலைக்காட்சியின் தோற்றம்


➢ வசந்தம் ஒளிவழியின் தொடக்கம்
➢ வசந்தம் ஒளிவழியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளைப் பற்றி சிறு தொகுப்பு
(எ. கா - தகவல் நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், நாடகங்கள், போட்டி நிகழ்ச்சி)
➢ தகவல் சாதனங்களில் இணையத்திற்கு அடுத்ததாக இருக்கிறது

இடையுரை

➢ உன்னைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி


(எ.கா உள்ளூர் நாடகங்கள் கானல், குடும்பம் யுனைட்டட், வேட்டை, வெற்றி தகவல் நிகழ்ச்சிகள்-
எதிரொளி, இமயத்தை நோக்கி, புதிய அரங்கம் போட்டி நிகழ்ச்சிகள் சவால் சிங்கப்பூர், சதுரங்க
வேட்டை, பரமபதம்
➢ பொது அறிவை மேம்படுத்தும் (செய்திகளில் இடம்பெறும் ‘இன்றைய தகவல்’)
➢ சிங்கப்பூரின் வரலாறு மற்றும் சிங்கப்பூர் பற்றிய நிறையச் செய்திகளைத் தெரிந்துகொள்ள முடியும்
➢ விழிப்புணர்வை உண்டாக்கும்
➢ மொழி வளம் பெருகும் (நாளும் ஒரு சொல்)
➢ கற்பனை வளத்தை அதிகரிக்கும்
➢ தமிழில் பேசுவதற்கு அதிக ஆர்வத்தை உண்டாக்கும்
➢ நல்ல உரையாடல்களை மனத்தில் பதிய வைக்கலாம்
➢ வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டியதை நாடகம் வழி நமக்கு உணர்த்தும்
➢ நிகழ்ச்சிகளை வழிநடத்துபவர்களின் தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவை நமக்கு ஊக்குவிப்பாக இருக்கும்
➢ அவர்களின் உடையலங்காரம் கண்களைக் கொள்ளை கொள்ளும்
➢ நாடகத்தின் கதையோட்டம் ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தும்
➢ சிங்கப்பூர் சூழலுக்கேற்ற நாடகங்கள் பாராட்டுக்குரியன
➢ தகவல் நிகழ்ச்சிகள் நமக்குக் கருத்துப் பெட்டகமாக அமைகின்றன

25
➢ பள்ளிப் பாடங்களுக்கு உதவும்
➢ கட்டுரைகளைச் சிறப்பாக எழுதலாம்
➢ வாய்மொழிப் பாடங்களில் வளமூட்டும் கருத்துகளைப் பேசலாம்
➢ நேரத்தைப் பயனுள்ள வழியில் செலவிடலாம்
➢ குடும்பத்தோடு இணைந்து தொலைக்காட்சி பார்த்தல்
➢ நிகழ்ச்சியைப் பற்றிப் பெற்றோருடன் கலந்துரையாடி, குடும்பப் பிணைப்பை இறுக்கமாக்கலாம்

முடிவுரை

➢ சிங்கப்பூரில் பெரும்பாலானோர் வீட்டில் தொலைக்காட்சி இருக்கிறது


➢ 24 நான்கு மணி நேரமும் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன
➢ தேவையான, நல்ல நிகழ்ச்சிகளை மட்டும் பார்க்க வேண்டும்
➢ நேரத்தைத் தொலைக்காட்சியிலேயே கழிக்கக்கூடாது
➢ படிப்பிற்கே முன்னுரிமை வழங்க வேண்டும்
➢ நேரத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்
➢ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பயன் அடையலாம்

இனிய தொடர்கள்

➢ உலகம் ஒரு நாடக மேடை, இதில் எல்லாரும் நடிகர்கள் – ஷேக்ஸ்பியர்


➢ தொலைவில் நடப்பதை அருகில் பார்ப்பதே தொலைக்காட்சி
➢ கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்
➢ இமைகொட்டாமல் பார்த்தேன்
➢ கண்கள் தொலைக்காட்சியை விட்டு நகரா
➢ அறிவைப் பெருக்கி அறியாமையை நீக்கும்
➢ படங்கள் ஆயிரம் வார்த்தைகளைப் பேசும்
➢ கத்தியைக் காய்கறி வெட்டவும் பயன்படுத்தலாம், கொலை செய்யவும் பயன்படுத்தலாம்
➢ அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
➢ தொலைக்காட்சி கைநுனிகளில் இயங்குகிறது (works on a remote controller)

26
அருஞ்சொற்பொருள்

தொகுப்பு பலவற்றை ஒன்றாகச் சேர்ப்பது

உள்ளூர் சொந்த ஊரில்

கானல் பொய்

அரங்கம் மேடை

சதுரங்கம் நான்கு மூலைகொண்ட வடிவம் (square)

பரமபதம் ஒரு பாரம்பரிய விளையாட்டு (snake and ladder)

வழிநடத்துபவர் நிகழ்ச்சியைக் கொண்டு செல்பவர்

கதையோட்டம் கதை செல்லும் விதம்

முன்னுரிமை முதல் சலுகை

இமைகொட்டாமல் கண்மூடாமல்

தொகுதி 4

Model Compo - மாதிரிக் கட்டுரை

10. உமது பள்ளி ஏற்பாடு செய்த விடுமுறை முகாமில் கலந்துகொண்டு நீவிர் அடைந்த
பயன்களையும் அதன்மூலம், நீ எவ்வாறு உம்மை மேம்படுத்திக் கொண்டாய் என்பதையும்
விளக்கி எழுதுக.

விடுமுறை நாட்கள் என்பன இப்போதெல்லாம் நேரம் காலம் தெரியாமல் நீண்ட நேரம் உறங்கும் நாட்கள்
என்றாகிவிட்டன. நானும் முன்பெல்லாம் இப்படியே, நல்ல பொழுதை எல்லாம் நாளும் உறங்கியே கழித்தேன்.
ஆனால், இந்த ஆண்டு ஜூன் விடுமுறையில் எனது பள்ளி ஏற்பாடு செய்திருந்த தமிழ்மொழி முகாம் எனது அறிவுக்
கண்களைத் திறந்து விட்டது. விடுமுறை நாட்கள் நமக்கு விடுதலை நாட்கள் அல்ல என்பதையும், ‘காலம் பொன்
27
போன்றது’ என்பது எவ்வாறு என்பதையும், ஒவ்வொரு மனிதரிடமும் மறைந்து கிடக்கும் மாபெரும் திறன்களை
எவ்வாறு உணர்ந்து அவர்கள், அதை மேம்படுத்தலாம் என்பதையும் அந்த மொழி முகாம் எனக்குக் கற்பித்தது.
‘இறைவனைப் பற்றிப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!’ என்றார் ஓர் அடியவர். அதைப்போலப் பயனுள்ள
வழிகளில் பொழுதைக் கழிக்காத ஒவ்வொரு நாளும் நமக்குப் பிறவா நாளே என்பதை நாம் உணர வேண்டும்.

எனது பள்ளியின் தமிழ்மன்றம், சென்ற ஜூன் விடுமுறையில் இரண்டு நாட்கள் தொடர் நடவடிக்கைகள்
நிறைந்த மொழி முகாம் ஒன்றைப் பள்ளியில் நடத்தியது. எனது பள்ளித் தமிழாசிரியர்கள் கண்காணிப்பில், தமிழ்
மன்ற நிர்வாகக் குழு மாணவர்கள் இதை நடத்தினர். விடுமுறை நாட்களில் இரண்டு நாட்கள் வீணாகிப்
போகின்றனவே என்று வேண்டா வெறுப்பாகத்தான் நான் அம்முகாமில் கலந்து கொண்டேன். ஆனால், நான்
அம்முகாமில் கலந்து கொண்ட பிறகே அது எத்தகைய பயனுள்ள முகாம் என்பதைப் புரிந்துகொண்டேன்.
தமிழ்மொழி முகாம் என்பதால் பங்கு பெற்ற மாணவர்கள் அனைவரும் தமிழ் பயிலும் இந்திய மாணவர்கள்
என்பதும், இந்திய மாணவர்களுடன் மட்டுமே இரண்டு நாட்கள் ஓர் இரவு உட்பட ஒன்றாக இருக்க வேண்டும்
என்பதும் எனக்குப் புது அனுபவமாக இருந்தது. அனைவரும் தமிழில்தான் உரையாட வேண்டும் என்பதும்,
தமிழ்மொழி சார்ந்த நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடவேண்டும் என்பதும் எனக்கு மலைப்பாக இருந்தது. ஆனால்,
நேரம் செல்லச் செல்ல, ‘தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று
பாவேந்தர் பாரதிதாசன் பாடிய பாடல் வரிகளின் உண்மை எனக்குப் புலப்பட்டது. ஆம்! தமிழ்மொழி முகாமின்
நடவடிக்கைகளும், மொழி விளையாட்டுகளும் என்னை வேறொரு உலகிற்கு இழுத்துச் சென்றுவிட்டன.

இந்தியத் தமிழ் மாணவர்களுக்கு எப்போதும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். தமிழ்மாணவர்களுடன்


தமிழில் பேசத் தயங்குவார்கள். ஆனால், இந்த மொழி முகாம் அந்தத் தயக்கத்தையும் தாழ்வு மனப்பான்மையையும்
தகர்த்து எறிந்து விட்டது. மொழி முகாமிற்கு வருகை தந்த சிறப்புப் பேச்சாளர், தமிழ்மொழியின் தொன்மையையும்
சிறப்பையும் இலக்கியவளங்களையும் சிறப்பாக எடுத்துரைத்தபோது என் மேனி புல்லரித்தது. திருவள்ளுவர்,
இளங்கோவடிகள், கம்பர், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், வாலி, வைரமுத்து முதலியோரின் கவிதைகள்
வாயிலாகத் தமிழின் சிறப்பையும் அழகையும் எடுத்துரைத்த அவர், தாய்மொழியான தமிழ்தான் ஒவ்வொரு தமிழரின்
அடையாளம் என்றும் முழங்கினார். சிங்கப்பூரில் அரசாங்கம் தாய்மொழிக் கல்விக்குக் கொடுக்கும்
முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். ‘தாய்மொழியை மறந்தவன் தாயை மறந்தவனுக்குச் சமம்’ என்று அவர்
வருந்திக் கூறியபோது, எனது கண்களில் நீர் கசிந்தது. தாய்மொழிக்கல்வி எவ்வளவு அவசியம் என்பதை நான்
மட்டுமன்று; அங்கே கூடியிருந்த அத்தனை மாணவர்களும் நன்கு புரிந்துகொண்டனர். தமிழ் கற்பதையும் தமிழில்
பேசுவதையும் எப்போதும் நான் கைவிடமாட்டேன் என்று அங்கு உறுதி பூண்டேன்.

‘பணம் இல்லாமல் இந்த உலகம் இருக்கலாம், ஆனால், இணையம் இல்லாமல் இந்த உலகம் இல்லை’ என்ற
புதுமொழி இப்போது வந்துவிட்டது. இணையம் என்றால் ஆங்கிலம் மட்டுமே என்று நான் நினைத்திருந்தேன்.
ஆனால், இணையத்தில் ஏராளமான தமிழ் வலைப்பூக்கள், தமிழ் மின் புத்தகங்கள், வலைப்பக்கங்கள், தமிழ்
மின்னஞ்சல், தமிழ் இணைய உரையாடல், தமிழ் ஆய்வுச்செய்திகள் என ஏராளமானவை கொட்டிக் கிடக்கின்றன
என்பதை நான் அந்த முகாமில்தான் தெரிந்துகொண்டேன். எங்களுக்கு அந்தமொழி முகாமில் தமிழ் இணையப்
பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழில் தகவல் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வதற்கும் அதில் திறன் பெறுவதற்கும்
இந்த மொழிமுகாம் பெரும் உதவியாக இருந்தது. இணைய வகுப்புகள் மூலம் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள
பள்ளி ஒன்றின் வகுப்பறைப் பாடங்களை நான் பார்க்கும் வாய்ப்பும் அங்கு உள்ள மாணவர்களுடன் உரையாடும்
வாய்ப்பும் பெற்று நான் உலகை ஒரு புதிய கோணத்தில் பார்க்கும் பார்வையைப் பெற்றேன்.

28
அடுத்து ‘நீயா? நானா?’ என்னும் தலைப்பில் ஒரு விவாதப் போட்டி நடைபெற்றது. தமிழ் ஆசிரியர்
நடுவராகச் செயல்பட்டார். தமிழில் பேசுவதற்கு ஓடி ஒளியும் மாணவர்கள் கூட ஆர்வத்துடன் பங்கெடுத்ததைக்
கண்டு நான் வியப்பில் ஆழ்ந்தேன். செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். செந்தமிழில் சொந்தமாகவும் பைந்தமிழில்
சரளமாகவும் மேடை ஏறிப் பேச வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது, என்னுள் மறைந்து கிடந்த மாபெரும் ஆற்றல்
எனக்கு அப்போது தான் புரிந்தது.

சிலம்பாட்டம், சடுகுடு போன்ற வீரவிளையாட்டுகள், பல்லாங்குழி, தாயம் போன்ற வீட்டு விளையாட்டுகள்


தமிழர்களின் பாரம்பரியத்தை எனக்கு உணர்த்தின. சடுகுடு விளையாடவும் தென்னங்கீற்றில் தோரணம் பின்னவும்
கற்றுக் கொண்டேன். கோலாட்டம், கும்மி, காவடியாட்டம், மயிலாட்டம், புரவியாட்டம் போன்ற பழந்தமிழ்க்
கலைநிகழ்ச்சிகளின் தொகுப்பினைக் குறும்படம் ஒன்றின் மூலம் கண்டு வியப்பு அடைந்தேன். தமிழர்களின் மொழி,
வாழ்வு, கலை, விளையாட்டு முதலியன பற்றிய மீள் பார்வையும் அவற்றினைக் குறித்த மதிப்பும் பெருமையும் எனது
மனத்தினுள்ளே எழுந்தன. தமிழ்மொழி முகாமின் இறுதி நாள் இரவு நடந்த சுடரொளிக் களியாட்டம் (Camp Fire)
எங்களுக்குள் இருந்த ஒற்றுமையையும் அன்பையும் வெளிப்படுத்தின. தமிழில் புத்தாக்கச் சிந்தனையுடன் நாங்கள்
நடத்திய சிறு சிறு கலை நிகழ்ச்சிகள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றதோடு, எங்களையும் ஒரு புதிய
அறிவார்ந்த பாதைக்கு அழைத்துச் சென்றதை உணர்ந்தேன்.

‘கல்லெல்லாம் சிலை செய்தான் பல்லவ ராஜா’ என்று பாடப் புத்தகத்தில் பல்லவ மன்னர்களைப் பற்றியும்
அவர்களின் கைவண்ணத்தைப் பற்றியும் படித்திருக்கிறேன். அதனை நேரில் கண்டபோது மலைத்து நின்றேன். 7 ஆம்
நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் கட்டிய மாமல்லபுரத்திற்குச் செல்லும் வாய்ப்பு இந்த முகாமில் கிடைத்தது.
தொழில்நுட்பமும், மின்சாரமும், பெரிய இயந்திரங்களும் இல்லாத அக்காலத்திலேயே உயரமான சிற்பங்களையும்,
கோயில்களையும் எழுப்பி, அவற்றுக்குக் கலைவண்ணம் கொடுத்து, மக்கள் வியக்கும் அளவிற்குச் செய்துள்ளனர் நம்
மன்னர்கள். இவற்றையெல்லாம் படித்தபொழுது எவ்வித உணர்வும் எனக்கு ஏற்படவில்லை. ஆனால் நேரில்
கண்டபோது நம் தமிழர்களின் திறமையையும், அவர்களின் உழைப்பையும், விடாமுயற்சியையும், கற்பனைத்
திறனையும், கலையார்வத்தையும் என்னால் உணர முடிந்தது. கல்லிலே கலைவண்ணம் கண்டவர்கள் நம்
முன்னோர்கள். அவர்கள்வழிச் சென்று நானும் இனி என் கலையார்வத்தை வளர்த்துக்கொள்ள முடிவெடுத்தேன்.

இவ்வாறு, இரண்டு நாட்கள் சென்றதே தெரியாமல் தமிழ்மொழி முகாம் இனிமையாகக் கழிந்தது. தமிழ்
மொழியின் பெருமை, அதன் தொன்மை, குறையாத செழுமை முதலியவற்றை அறிந்ததோடு தமிழ் உணர்வு, தமிழில்
தொழில் நுட்ப அறிவு, தமிழ்க் கலை, கலாச்சாரம் குறித்த புதிய பார்வை, ஒற்றுமை உணர்வு, புத்தாக்கத் திறன்
ஆகியனவற்றையும் நான் அம்முகாமில் பெற்றேன். இனி, சிங்கப்பூர் திரும்பியதும் தமிழை வளர்ப்பதற்கு என்னால்
முடிந்த அனைத்தையும் செய்யப் போகிறேன். ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே
முழங்கு’ என்னும் பாவேந்தர் வரிகளின் உண்மை அனுபவத்தை உணர்ந்தேன்.

அருஞ்சொற்பொருள்

அடியவர் பக்தர் வாயிலாக மூலமாக

வேண்டா விருப்பம்
பாரம்பரியத்தை மரபினை
வெறுப்பாகத்தான் இல்லாமல்தான்

29
பொய்க்கால் குதிரை
நேர் சமம் புரவியாட்டம்
ஆட்டம்

புலப்பட்டது விளங்கியது மீள்பார்வை மறு நோக்கு

தகர்த்து உடைத்து செழுமை வளமை

தொன்மையையும் பழமையையும் மங்காத குறையாத

பயிற்சி வினா 11 மற்றும் 12


கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

11. பள்ளியின் பொதுச் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், அவற்றை


மாணவர்கள் பாதுகாப்பதற்கான வழிவகைகளையும் விளக்கி எழுதுக.

முன்னுரை விளக்கம்

● கல்வியமைச்சு பள்ளிகளுக்கு நிறைய வசதிகளைச்


செய்துள்ளது
● மாணவர்களுக்கு ஏற்புடைய கற்றல் சூழலை உருவாக்குதல்
● கற்கும் சூழல் மிகவும் இன்றியமையாதது
● சில நாடுகளில் இருக்கும் பள்ளிகளில் இவ்வசதிகள்
கிடைப்பதில்லை

கருத்து 1 விரிவாக்கம்

வகுப்பறை ● மாணவர்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்வதற்கு


மாணவர்களுடையது என்ற அட்டவணை தயாரித்தல்
எண்ணத்தை உருவாக்குதல் ● ஒவ்வொரு மாணவரும் தமது தனிப்பட்ட மேசையைப்
பிளாஸ்டிக் அட்டைபோட்டுப் பாதுகாத்தல்
● மாணவர்களுக்கு வகுப்பு விதிமுறைகளை உருவாக்குதல்
● மேசையில் கிறுக்குவோருக்கு அபராதம்/தண்டனை

30
● வகுப்பு முடிந்த பிறகு விளக்கு/மின்விசிறி ஆகியவற்றை
நிறுத்துதல்

கருத்து 2 விரிவாக்கம்

கணினி அறைகளைப் ● கணினிகளைப் பாதுகாப்புடன் இயக்குதல்


பாதுகாத்தல் ● கணினி அறைகளில் உணவு / தண்ணீர் அருந்தக்கூடாது
எனும் உத்தரவு விதிக்க வேண்டும் - மீறுவோருக்குத் தக்க
தண்டனை வழங்குதல்
● எந்த வகுப்பு கணினி அறையைப் பயன்படுத்துகிறது
என்பதற்கான குறிப்புப் புத்தகம்
● கணினி அறையைக் கண்காணிக்கும் பொறுப்பை இரண்டு
மாணவர்களுக்கு வழங்குதல்
● குளிர்சாதன இயந்திரத்தைப் பாடம் முடிந்ததும் நிறுத்துதல்

கருத்து 3 விரிவாக்கம்

உடற்பயிற்சி் சாதனங்களைப் ● உடற்பயிற்சி வகுப்பிற்கான சாதனங்களை மாணவர்கள்


பாதுகாத்தல் பாதுகாப்புடன் பயன்படுத்துதல்
● வாரம் ஒரு வகுப்பு அவற்றைச் சுத்தப்படுத்தும் பணியில்
ஈடுபடுதல்
● உடற்பயிற்சி வகுப்பிற்குமுன் அவற்றின் எண்ணிக்கையைச்
சரிபார்த்தல், முடிந்தபின்னும் எண்ணிக்கையைச் சரிபார்த்தல்
● உடற்பயிற்சி வகுப்பு அல்லாத சமயத்தில் பயன்படுத்த
விரும்பும்போது ஆசிரியரின் அனுமதி தேவை
● ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு அல்லது இரு மாணவர்களை
இச்சாதனங்களுக்குப் பொறுப்பேற்க நியமனம் செய்தல்

கருத்து 4 விரிவாக்கம்

பள்ளியின் நூலகத்தைப் ● இரவல் பெற்ற புத்தங்களில் கிறுக்கவோ, வரிகள்மீது அழுத்தம்


பாதுகாத்தல் (highlight) செய்யவோ கூடாது
● புத்தகங்களைச் சரியான தேதியில் திரும்பக் கொடுத்தல்
● புத்தகங்களை மற்றவர்களுக்குக் கொடுப்பது கூடாது
● பக்கங்களைக் கிழிக்கவோ, அட்டைகளைப் பழுதாக்கவோ
கூடாது
● மீறுபவர்களுக்குத் தக்க தண்டனை வழங்குதல்

முடிவுரை ● பள்ளி பொது இடம்

31
● வசதிகள் எல்லாருக்கும் பயனளிக்க வேண்டும்
● பழுதுபட்டுவிட்டால் யாருக்கும் பயன் அளிக்காது
● பொறுப்புள்ள மாணவர்களாக நடந்துகொள்ளுதல் அவசியம்
● நம்முடையது இல்லை என்ற மனப்பான்மையைப் போக்க
வேண்டும்

32
கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:
● கெடுப்பதூம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
● கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு
● புதியதோர் உலகைப் படைப்போம்
● நான் என்று சொல்லாதே, நாம் என்று சொல்
● பகிர்ந்துண்டு வாழ்

அருஞ்சொற்பொருள்

இன்றியமையாதது முக்கியம்

மீறுவோருக்கு பின்பற்றாமல் விடுபவர்க்கு

நியமனம் தேர்ந்தெடுத்தல் (nominate)

பழுதாக்க சீர்குலைக்க

33
12. இக்கால மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் உள்ள பிணைப்பை எவ்வாறு மேம்படுத்தலாம்
என்பதையும், அதனால் ஏற்படும் பயன்களையும் விவரித்து எழுதுக.
முன்னுரை

➢ ஆசிரியர் தொழிலின் முக்கியத்துவம்


➢ மாணவர்களின் வாழ்க்கையில் அவர்களின் பங்கு
➢ முற்காலத்தில் ஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருந்தது (குருகுலக் கல்விமுறை)
➢ மாணவர்கள் ஆசிரியரைத் தேடிச் சென்று கல்வி கற்றார்கள்
➢ இக்காலக் கல்வி முறையின் மாற்றங்கள்
➢ பள்ளிக்கூடங்களின் அமைப்புமுறை

இடையுரை

➢ மாணவர்களை நண்பர்களைப்போல் நடத்துதல்


➢ ஆசிரியர்கள் முன்வந்து மாணவருக்கு வணக்கம் கூறுதல்
➢ படிப்பு தொடர்பான உரையாடல்களைத் தவிர்த்து மாணவர்களின் மற்ற விருப்பு வெறுப்புகளைப் பற்றி
உரையாடுதல்
➢ மாணவர்களுக்குக் கல்வியில் இருக்கும் இடர்ப்பாடுகளைப் பற்றிப் பேசி அவர்களின் ஐயங்களைப்
பாடவேளைக்கு அப்பாலும் தீர்த்து வைத்தல்
➢ பள்ளி உணவகத்தில் மாணவர்களுடன் உணவருந்துதல்
➢ மாணவர்களுடன் விளையாட்டுகளிலும், போட்டிகளிலும் ஈடுபடுதல்
➢ (எ.கா - மாணவர்களுடன் காற்பந்து விளையாடுதல்)
➢ மாணவர்களுடன் அன்பாகப் பேசுதல்
➢ மாணவர்களைத் திட்டும் சூழல் ஏற்பட்டாலும் மறுகணமே அவர்களுக்கு அன்பாக எடுத்துரைத்தல்
➢ மாணவர்களின் நம்பிக்கையைப் பெறுதல்
➢ மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுதல்
➢ வகுப்பறையில் மாணவர்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் வழங்குதல்
➢ மாணவர்களை ஊக்கப்படுத்தச் சிறுசிறு பரிசுப்பொருள்கள் வழங்குதல்
➢ ஆசிரியர் தினத்தன்று மாணவர்கள் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தல், வாழ்த்து அட்டைகள் தயாரித்துத்
தருதல்
➢ இளையர் தினத்தன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்காக நிகழ்ச்சிகள் படைத்தல்
➢ ‘வாட்ஸ் அப்’ செயல்கள்மூலம் குழுக்கள் உருவாக்கி, அதன்மூலம் காலை வணக்கம் மேலும்
உரையாடல்களைப் பகிர்தல்
34
➢ தீபாவளி, கிறிஸ்துமஸ், நோன்புப் பெருநாள் போன்ற வைபவங்களில் ஆசிரியரை வீட்டுக்கு அழைத்து
விருந்துபசரிப்புச் செய்தல்

முடிவுரை

➢ கல்விமுறை மாறிக்கொண்டே போகிறது


➢ அக்காலத்தில் மாணவர்கள் ஆசிரியரின் இல்லத்திற்குச் சென்று கல்வி கற்றனர்
➢ இடைக்காலத்தில் ஆசிரியரை மாணவர் பொது இடத்தில் (பள்ளி) சந்தித்துக் கல்வி கற்றனர்
➢ இக்காலத்தில் ஆசிரியர் மாணவர் இல்லம் வந்து கல்வி கற்பிக்கிறார் (துணைப்பாடம்)
➢ எதிர்காலத்தில் ஆசிரியர் இல்லாமலேயே மாணவர் பாடம் கற்பார் (இணையக்கல்வி)
➢ அதனால் ஆசிரியர் - மாணவர் பிணைப்பு மிக அவசியம்

இனிய தொடர்கள்

➢ எழுத்தறிவித்தவன் இறைவனாகும்
➢ மாதா, பிதா, குரு, தெய்வம்
➢ கையைப் பிடித்து, சிந்தனையை விரித்து, இதயத்தைத் தொடுபவரே நல்லாசிரியர்
➢ கல்விமுறை மாறலாம், ஆனால் கல்வி என்றும் மாறாது
➢ ஆசிரியர் என்பவர் இரத்த பந்தம் இல்லாத அன்னை

அருஞ்சொற்பொருள்

குருகுலம் ஆசிரியரின் இல்லம்

விருப்பு வெறுப்புகளை பிடித்தவை பிடிக்காதவை

இடர்ப்பாடுகளை துன்பங்களை

அப்பாலும் தாண்டி

வைபவங்களில் விழாக்களில்

எழுத்தறிவித்தவன் பாடம் கற்றுக்கொடுப்பவன்

35
தொகுதி 5

Model Compo - மாதிரிக் கட்டுரை


13. நீ கண்டு மகிழ்ந்த ஒரு திரைப்படத்தைப் பற்றியும், அது உனது நினைவில் நிற்பதற்கான
காரணத்தையும் விவரித்து எழுதுக.

தமிழ்மொழி அதிகம் புழக்கம் இல்லாத சிங்கப்பூர் போன்ற நாடுகளில், தமிழ்மொழியின் பயன்பாட்டைத்


தமிழ் இளையர்களிடம் அதிகம் வளர்த்து வருவது தமிழ்த் திரைப்படங்கள் என்றால் அது மிகையாகாது. என்
பள்ளித் தமிழாசிரியர் அவ்வப்போது சிங்கப்பூரில் திரையிடப்படும் சிறந்த தமிழ்த்திரைப்படங்களை அறிமுகம் செய்து
எங்களை அந்தப் படங்களைப் பார்த்து வருமாறு அறிவுறுத்துவார். அந்த வகையில், நான் அண்மையில் என்
குடும்பத்தாருடன் சென்று கண்டு மகிழ்ந்த திரைப்படம் ‘காக்கா முட்டை’ என்னும் படமாகும். ‘காக்கா முட்டை’
என்னும் பெயர் உடனடியாகத் திரையரங்கு சென்று அந்தத் திரைப்படத்தைக் காணவேண்டும் என்னும் ஆவலை
ஊட்டவில்லை. ஆனால், அந்தத் திரைப்படத்தைப் பார்த்த பிறகுதான் நான் அந்தப் படத்தைப் பார்க்காமல்
விட்டிருந்தால் எத்தகைய இழப்பு எனக்கு ஏற்பட்டிருக்கும் என்பதை உணர்ந்தேன். நானும் எனது நினைவு தெரிந்த
நாள் முதல் எவ்வளவோ திரைப்படங்களைக் கண்டிருக்கிறேன். ஆனால், ‘காக்கா முட்டை’ என் நினைவில் நின்ற
அளவு வேறு எந்தத் திரைப்படமும் நிற்கவில்லை என்பதுதான் உண்மை.

சென்னை குடிசைப் பகுதி ஒன்றில் வசிக்கும் சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை ஆகிய இரு
சிறுவர்களுக்கும் பீட்சா சாப்பிடவேண்டும் என்பது நெடுநாளைய ஆசை. ஆனால், ஒரு பீட்சாவின் விலை ரூபாய்
முந்நூறு. ஏழைச் சிறுவர்கள் அவ்வளவு காசுக்கு எங்கே போவார்கள்? ரயில் பாதையில் சிந்தும் நிலக்கரியைச் சேர்த்து
எடைக்குப் போட்டுக் காசு சேர்க்கிறார்கள். சேர்த்த காசை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு அருகில் புதிதாக வந்துள்ள
பீட்சா கடைக்குப் போகிறார்கள். ஆனால், பரட்டைத் தலையும் அழுக்கு உடையும் கொண்ட இவர்களைப் பார்த்த
வாயில் காவலாளி இவர்களை விரட்டியடிக்கிறான். சரி, உடைதானே பிரச்சினை என்று அதற்கும் காசு சேர்த்துக்
கொண்டு இரண்டு புதிய உடைகள் வாங்கி அணிந்து கொண்டு பீட்சா சாப்பிடப் போகிறார்கள். ஆனால், காவலாளி
அவர்களை உள்ளே விட மறுத்து அடித்துத் துரத்துகின்றான். கடைசியில், அவர்களின் பீட்சா கனவு எப்படி
நனவாகியது என்பது தான் திரைப்படத்தின் உச்சக்கட்டமாகும்.

இப்போதெல்லாம், தமிழ்த்திரைப்படங்கள் என்றால் ஆபாசம், இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள்,


புண்படுத்தும் நகைச்சுவைக் காட்சிகள் என்றாகிவிட்டன என்பது பெரும்பாலோரின் குற்றச்சாட்டு ஆகும். ஆனால்,
‘காக்கா முட்டை’ என்னும் இந்தப் படம் பாலைவனத்தில் ஒரு சோலைவனமாக விளங்குகிறது. வாழ்க்கையின்
உயர்தர வசதிகளை, உயர் தொழில் நுட்ப நுணுக்கங்களை, தூய்மையும் பாதுகாப்பும் நிறைந்த சுற்றுச்சூழல்களைத்
தினம்தினம் அனுபவித்து வரும் நான் இந்தத் திரைப்படத்தில் வரும் குப்பத்துக் காட்சிகளைக் கண்டு அதிர்ந்து

36
போனேன். விருந்து, உணவகம், வீடு முதலியனவற்றில் பரிமாறப்படும் உணவு வகைகளை அரைகுறையாக உண்டு
மீதியை நாம் குப்பைத்தொட்டியில் வீசி எறிகின்றோம். ஆனால், இந்தத் திரைப்படத்தில் இரண்டு சிறுவர்கள்
பீட்சாவுக்காகத் தங்கள் வாழ்வையே பணயம் வைக்கின்றனர். ‘வெயிலுக்கு வந்தால்தான் நிழலின் அருமை தெரியும்’
என்பார்கள். அதைப்போல, இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பிறகுதான் ஏழைகளின் வாழ்க்கைச் சூழலும்,
தினந்தோறும் ஒரு வேளை உணவிற்காக அவர்கள் படும் வேதனையும் எனக்கு நன்கு புரிந்தது.

‘கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்றார் ஔவையார்.
அதைப்போல, மிகச்சிறிய இளம் வயதில் இந்தப் படத்தின் இரு கதாநாயகச் சிறுவர்கள் வறுமையில் சிக்குண்டு
அல்லல்படும் காட்சிகள் எனது கண்களில் நீரை வரவழைத்தன. பெற்ற தந்தை சிறையில் வாட, தாயோ கூலி வேலை
செய்கிறார். பள்ளிக்குச் செல்லும் பருவத்தில் இந்தச் சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாகக் கூலி வேலை
செய்கின்றனர். அடிப்படை வசதிகள் சிறிதும் இல்லாத, குப்பை நிறைந்த கூவம் ஆற்றோரத்தில் வாழும்
அச்சிறுவர்களின் வாழ்க்கை இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான ஏழை மக்களின் மிக மோசமான வாழ்க்கைச்
சூழலுக்கு ஓர் உதாரணம் என்பதை உணர்ந்தேன். ஆனால், இத்தகைய மோசமான வாழ்க்கைச் சூழலிலும்
அவர்களுக்கிடையே நிலவும் குடும்பப் பிணைப்பும் பாச உணர்வும் என்னைப் பரவசத்தில் ஆழ்த்தின. பிள்ளைகள்
மீது உயிரையே வைத்திருக்கும் தாய், மகன்களைப் பார்க்கத் துடிக்கும் தந்தை, பீட்சாவைப்போல் தோசை சுட்டு
அதை ஊட்டும் பாட்டி, பிறருக்கு உதவும் அக்கம்பக்கம், சகோதர பாசம் என்று வாழ்க்கையின் உயர்பண்புகளை
இந்த ஓலைக் குடிசைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

பீட்சா கடையின் வியாபாரப் போக்கு, ஊடகங்களின் சுயநலப் போக்கு, அரசியல்வாதிகளின் இரட்டை


வேடம் என்று இத்திரைப்படம் இக்காலச்சூழல்களின் போக்கினை இயல்பாகச் சித்தரிக்கின்றது. வெறும்
பிரச்சாரப்படமாக இல்லாமல் இது சிறந்த கலைப்படமாக அமைந்துள்ளதுதான் இதன் முக்கியச் சிறப்பாகும்.
பாத்திரங்களின் இயல்பான நடிப்பு, விறுவிறுப்பான கதை அமைப்பு, மிகச்சிறந்த காட்சி அமைப்பு, இசை, வண்ணம்
என்று தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கும் படமாக இது அமைந்துள்ளது.

‘காக்கா முட்டை’ எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற பல மாணவர்களுக்கும் ஓரு


விழிப்புணர்வாகயிருக்கும் என்பது என் நம்பிக்கையாகும். அமர்ந்த இடத்திலேயே தொலைபேசிமூலம்
தொடர்புகொண்டு பீட்சாவை வரவழைத்துச் சாப்பிடும் நாட்டில் நாம் பிறந்துள்ளோம். இப்படத்தில் வரும்
சிறுவர்கள்போலப் பள்ளிக்கூடம் எது என்று தெரியாமல் இல்லாமல் கட்டாயக் கல்வி வழங்கும் நாட்டில் நாம்
வசிக்கிறோம். அதுமட்டுமன்றி, வசதியற்ற குடும்பங்களில் இருக்கும் பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்பதற்காக
அரசாங்கம் நிதி உதவி வழங்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம். இப்படிப்பட்ட நாட்டில் வாழ்வதற்கு ஒவ்வொரு
குடிமகனும் தெய்வத்தை இருகரம் கூப்பிக் கும்பிட வேண்டும். இப்படத்தினைப் பார்க்கும்போது நம் தாய்நாடான
சிங்கப்பூரின்மீது எனக்கு அதிகப் பற்றுதல் ஏற்பட்டது என்றால் அது மிகையாகாது.

37
திரைப்படம் என்பது மிக வலிமையான ஒரு சாதனம். படித்தவர் முதல் பாமரர் வரை இன்று
அனைவரையும் தனது வசத்தில் வைத்திருக்கும் மிகப் பெரிய ஊடகம் அது. ஆக்கத்திற்கு உருவாக்கிய அணுசக்தி
இன்று பெரும்பாலும் அழிவிற்கே பயன்படுத்தப்படுகின்றது. அதைப்போல், தமிழ்த்திரைப்படம் இளைஞர்களை
நாசப்படுத்தவே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது என்பது எனது எண்ணமாக இருந்தது. ஆனால், ‘காக்கா முட்டை’
என்னும் இந்தத் திரைப்படம் எனது மனப்போக்கை அடியோடு மாற்றிவிட்டது. மனிதர்கள் மீதும் வாழ்க்கையின்
மீதும் நம்பிக்கை தரும் திரைப்படமாக இது அமைந்து வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லும் ஒரு காவியமாக
எனது நினைவில் நின்று நிலவுகின்றது.

அருஞ்சொற்பொருள்

மிகையாகாது அதிகமாகாது

பரட்டைத் தலையும் எண்ணெய்ப் பசை இல்லாமல் தாறுமாறாகப் பரந்து கிடக்கும் தலைமுடி

உச்சக்கட்டமாகும் முடிவை நெருங்கும் இடமாக

சோலைவனமாக பூங்காவனமாக

குப்பத்து குடிசைகள் நிறைந்த வசிப்பிடத்து

அதிர்ந்து நடுங்கி

பணயம் பந்தயம்

அதனினும் அதைவிட

சிக்குண்டு மாட்டிக்கொண்டு

பரவசத்தில் மகிழ்ச்சியில்

சித்தரிக்கின்றது விவரிக்கின்றது

பிரச்சாரப்படமாக கொள்கைபரப்பும் படமாக

சாதனம் கருவி

பாமரர் போதிய கல்வியோ பயிற்சியோ இல்லாத மக்கள்

வசத்தில் பிடியில்

பயிற்சி வினா 14 மற்றும் 15


கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

38
14. நீ முடிவெடுக்கச் சிரமப்பட்ட ஒரு பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்றும், அதற்காக நீ
மேற்கொண்ட செயல்களையும், சந்தித்த சவால்களையும் விவரித்து எழுதுக.

முன்னுரை விளக்கம்

● பிரச்சினைகளைத் தவிர்க்க முடியாது


● பிரச்சினைகள் நம் வாழ்வுடன் இணைந்தவை
● அவற்றைச் சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்
● பிரச்சினைகள் நம் திறன்களை வலுவாக்கும்

கருத்து 1 விரிவாக்கம்

பிரச்சினை ஏற்படுவதற்கு ● நெருங்கிய நண்பர்கள் வட்டம்


முன்னால் இருந்த சூழல் ● எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளுதல்
● விடுமுறையின்போது ‘ஷெலே’ செல்ல முடிவெடுத்தனர்
● அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் நடந்தன
● எல்லாரும் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்

கருத்து 2 விரிவாக்கம்

பிரச்சினையின் விளக்கம் ● ‘ஷெலே’ செல்லும் முதல் நாள் உன்னுடைய பாட்டி


தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்தார்கள்
● பாட்டி என்றால் உனக்கு உயிர்
● பெற்றோர் உனது பொறுப்பில் பாட்டியை விட்டுவிட்டு அவசர
வேலையாக அயல்நாடு சென்றனர்
● உன்னால் ‘ஷெலே’ செல்ல இயலாது என்று அறிந்தாய்
● போகாவிட்டால் நண்பர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள்
● ‘ஷெலே’விற்கு நீதான் முதலில் பண ஏற்பாடு செய்வதாகக்
கூறியிருந்தாய்
● உன்னை நம்பித்தான் நண்பர்கள் இருந்தார்கள்
● பாட்டியைத் தனியாக விட்டுவிட்டுப் போக முடியாது

கருத்து 3 விரிவாக்கம்

பிரச்சினையின் வளர்ச்சி ● நண்பர்களிடம் எடுத்துரைத்தல்


39
● நண்பர்கள் ‘சுயநலவாதி’ என்று குற்றம் சாட்டினர்
● அவர்களின் பெற்றோர்கள் எல்லாரும் அனுமதி வழங்கி
விட்டனர்
● நண்பர்களை ஏமாற்ற விருப்பமில்லை
● பாட்டியைத் தனியாக வீட்டில் விடவும் விருப்பமில்லை
● குழப்பநிலை

கருத்து 4 விரிவாக்கம்

பிரச்சினைக்கு ● பெற்றோருக்குத் தெரிவித்தல்


முடிவெடுத்த விதம் ● அவர்கள் இதைப்பற்றி மறந்துவிட்டதாகக் கூறுதல்
● என் எண்ணங்களையும் ஆசையையும் மதித்தல்
● அண்டைவீட்டாரின் உதவியை நாடும்படி கூறுதல்
● அண்டைவீட்டார் வீட்டில் இல்லை
● பாட்டியை உடன் அழைத்துச் செல்லுதல்
● ஆனால் அன்றிரவே திரும்பிவிட வேண்டும் என்று
முடிவெடுத்தல்
● நண்பர்கள் முடிவை ஏற்றுக்கொண்டனர்

முடிவுரை ● பிரச்சினைக்கு நல்ல முடிவு கிடைத்தது


● எல்லாருக்கும் மகிழ்ச்சி
● வாழ்க்கையில் இத்தகைய சூழல்கள் ஏற்படும்
● இக்கட்டான சூழ்நிலையில் முடிவெடுக்கக் கற்றுக்கொள்ள
வேண்டும்

கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:

● இரவும் பகலும்போல் தவிர்க்க முடியாதவை


● புடம் போட்டால்தான் தங்கம் பளபளக்கும்
● உல்லாச வானில் பறந்தோம்
● வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தோம்
● அழையாத விருந்தாளி
● அன்பால் குளிப்பாட்டியவர்
40
● செய்வதறியாது திகைத்து நின்றாய்
● மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்
● இருதலைக்கொள்ளி எறும்புபோல்
● முகத்தில் அடித்தாற்போல் கூறினார்கள்
● நம்பிக்கை ஒளி தெரிந்தது
● கானல்நீராகப் போய்விட்டது
● காண்பது கனவோ, நனவோ
● கட்டியணைத்து முத்தமாரி பொழிந்தேன்

அருஞ்சொற்பொருள்

தவிர்க்க விலக

முன்னேற்பாடுகள் முன்கூட்டியே செய்யும் ஏற்பாடுகள்

உயிர் மிகவும் பிடிக்கும்

சுயநலவாதி தன்னலம் வாய்ந்தவன்

சாட்டினர் கூறினர்

கானல் பொய்யான தோற்றம்

மாரி மழை

15. பள்ளிகள் ஏற்பாடு செய்யும் வெளிநாட்டுக் கற்றல் பயணங்கள் ஒரு மாணவனின் முழுமைக்
கல்விக்குத் துணைபுரிகின்றன - கருத்துரைக்க.

முன்னுரை
41
➢ வெளிநாட்டுப் பயணம் என்பது மற்ற நாடுகளில் கல்விச் சுற்றுலா அல்லது சமூகச் சேவை செய்வதைக்
குறிக்கிறது
➢ முழுமைக் கல்வி என்பது ஏட்டுக்கல்வி, விளையாட்டுத்திறன், சிந்திக்கும் ஆற்றல், மொழித் திறன்கள், பரந்த
நோக்கு, சவால்களை எதிர்கொள்ளும் திறன்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பதைக் குறிக்கும்
➢ கல்வி அமைச்சு பள்ளிகளில் வெளிநாட்டுக் கற்றல் பயணத்தைக் கட்டாயமாக்கி உள்ளது
➢ அதன் நோக்கம் - இருபத்தொன்றாம் திறன்களை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும்
➢ அவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பளிக்க வேண்டும்
➢ ஏட்டில் கற்றதை நேரில் காண வாய்ப்பளிக்க வேண்டும்
➢ எடுத்துக்காட்டுக்கு வியட்னாம், சீனா, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளுக்குக் கற்றல் பயணம்

இடையுரை

➢ மற்ற நாட்டினரின் மொழி, கலாச்சாரம், பழக்க வழக்கம், பாரம்பரியம், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பற்றித்
தெரிந்துகொள்ள வாய்ப்பு
➢ அவற்றை மதிக்கக் கற்றுக்கொள்வர்
➢ அறியாமை நீங்கி, புரிந்துணர்வு, விழிப்புணர்வு அதிகரிக்கும்
➢ சிங்கப்பூரையும் தாண்டி நட்புவட்டம் அதிகரிக்கும்
➢ அடிப்படை வசதி கூட இல்லாத சிறுவர்களைக் காணும் வாய்ப்பு
➢ அவர்களுக்கு உதவுவதற்கு ஒரு வாய்ப்பு
➢ வெளிநாட்டில் சமூக சேவை செய்ய வாய்ப்பு

(எ. கா - பள்ளிகளுக்கு வண்ணம் பூசுதல், பாலர் பள்ளியில் கதைகள் வாசித்தல், ஆதரவற்ற சிறுவர்
இல்லங்களுக்குச் சென்று சேவையாற்றுதல்)
➢ மலையேறும் நடவடிக்கைகள் (எ.கா - இமயமலை ஏறுதல்)
➢ இதன்மூலம் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி ஆகிய பண்புகள் வளரும்
➢ பிற நாட்டினரின் வசதியற்ற பாடசாலைகளைக் காணும் வாய்ப்பு
➢ நமக்குக் கிடைத்திருக்கும் வசதிகளைப் போற்றுதல்
➢ பிற நாட்டுக் கல்வி முறையினையைப் பற்றி அறிதல்
➢ பொது அறிவு அதிகரித்தல்
➢ சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு
➢ முகாம்களில் மற்றவர்களை நம்பியிருக்கக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளுதல்
➢ ஆபத்துக் காலம் / அவசரக் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளுதல்

42
➢ வீர விளையாட்டுகளில் ஈடுபடுதல் (எ. கா - சுவர்தாண்டுதல், கயிற்றில் நடத்தல், கயிற்றில் சரிந்து வருதல்
(flying fox), படகோட்டுதல், இரவு நடை)

முடிவுரை

➢ மாணவர்கள் கிணற்றுத் தவளைகளாய் இருத்தல் கூடாது


➢ சவால்கள் நிறைந்த உலகம்
➢ போட்டிகள் நிறைந்த நாடு
➢ சவால்களைச் சமாளிக்கக் கல்வியமைச்சு நம்மைத் தயார்ப்படுத்துகிறது
➢ பள்ளியில் இவை அனைத்தையும் செய்ய முடியாது

இனிய தொடர்கள்

➢ செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்


செல்வத்துள் எல்லாம் தலை
➢ தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
➢ கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க
அதற்குத் தக
➢ ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது
➢ கிணற்றுத் தவளையால் உலகை அறிய முடியாது
➢ சவாலே சமாளி
➢ வாழ்நாள் கல்வி
➢ பட்டை தீட்டிய வைரம்
➢ கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு

அருஞ்சொற்பொருள்

முழுமைக் கல்வி அனைத்துத் திறன்களையும் பெற்ற கல்வி (holistic education)

பரந்த நோக்கு விரிந்த பார்வை

அடிப்படை அடித்தளம்

பாலர் சிறுவர்

பாடசாலை பள்ளிக்கூடம்

43
முகாம் camp

தொகுதி 6

Model Compo - மாதிரிக் கட்டுரை

16. உமது பள்ளியில் நீவிர் ஏற்படுத்த விரும்பும் மாற்றங்களைப் பற்றி விவரித்து எழுதுக.

‘மாற்றம் என்பது மானிடத் தத்துவம்! மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!’ என்றார் கவிஞர்
கண்ணதாசன். ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்று குடிமக்களை வியக்க வைக்கும் அளவு சிங்கப்பூர், தினம் தினம்
புதிய மாற்றங்களை அறிமுகம் செய்து உலகிற்கே முன் மாதிரியாகத் திகழ்கின்றது. ‘பழையன கழிதல் புதியன
புகுதல்’ என்பது சிங்கப்பூரர் அனைவருக்கும் மிகப் பிடித்தமான ஒன்று. சிங்கப்பூர்க் கல்வித்திட்டம் வெறும் வேலை
வாய்ப்பு என்னும் ஒன்றிற்காக உருவாக்கப்பட்டது அன்று. அது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கும் மானுடப்
பண்புகளின் உருவாக்கத்திற்கும் வாழ்க்கையின் விழுமியங்களை உணர வைப்பதற்கும் உருவாக்கப்பட்ட
முழுமையான ஒரு கல்வித்திட்டம் ஆகும். எனவே, பாடத்திட்டம், கல்விமுறை போன்றவற்றை விடுத்துப்
பள்ளிச்சூழல், நேரம், விடுமுறை போன்ற நிர்வாகப் போக்குகளில் சிற்சில மாற்றங்களைக் காண நான் மிகவும்
விழைகிறேன்.

பள்ளி தினந்தோறும் காலை 7.30 மணிக்குச் செயல்பட ஆரம்பிக்கின்றது. இவ்வளவு இளங்காலையில்


வகுப்புகளைத் தொடங்கவேண்டுமா என்பது தான் எனது ஆதங்கம். காலை 7.30 மணி வகுப்பிற்காகத் தினந்தோறும்
அதிகாலை 5.00 மணிக்கே கண் விழிக்க வேண்டியுள்ளது. முதல் நாள் இரவு பள்ளிப்பாடம், வீட்டுப் பாடம் என்று
படித்து முடித்துப் படுக்கைக்குச் செல்வதற்கு நள்ளிரவு ஆகிவிடுகின்றது. எனவே, மறுநாள் அதிகாலை என்பது
தூக்கம் தெளியாத ஒரு துக்கமான காலையாகவே இருக்கின்றது. காலைக் கடன்களைச் செய்யவும் கூடப் போதுமான
நேரம் கிடைப்பதில்லை. எல்லாம் இயந்திரமயம் தான்.

மேலும், காலை உணவு என்பது இளம் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஆனால்,
அதிகாலையிலேயே மாணவர்கள் வீட்டை விட்டுப் பள்ளிக்குக் கிளம்ப வேண்டிய கட்டாயம் இருப்பதால்,
பெரும்பாலான மாணவர்கள் காலை உணவைத் தவிர்த்துவிடுகின்றனர். இதனால், நாள் முழுவதும் சோர்வு,
கவனமின்மை போன்றவை ஏற்பட்டுப் பாடங்களைக் கவனிக்க முடியாத சூழல் ஏற்படுகின்றது. எனவே, பள்ளி
ஆரம்பிக்கும் நேரம் காலை 9.00 மணியாக இருந்தால் இந்தப் பிரச்சினைகள் ஏற்படா என்று நான் எண்ணுகின்றேன்.
காலைக்கடன்களை ஆற அமரச் செய்வதற்கும், காலை உணவைச் சாப்பிடுவதற்கும் பள்ளிக்குப் பயணம்
செய்வதற்கும் போதுமான நேரம் கிடைக்கும் என்று நான் கருதுகின்றேன்.
44
அடுத்து, பாடநேரங்களில் மாற்றம் வேண்டும் என்பது நான் விரும்பும் மற்றொரு மாற்றம் ஆகும். தற்போது,
பாடவேளை 45 மணித்துளிகள்தாம். ஒரு வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பு மாறுவதற்குள் 10 முதல் 15 நிமிடங்கள்
ஓடிவிடுகின்றன. அடுத்து, ஆசிரியர் வந்து சில அறிவிப்புகள் செய்து பாடத்தைத் தொடங்குவதற்கு 5 நிமிடங்கள்
ஆகிவிடுகின்றன. மீதம் 25 நிமிடத்திற்குள் பாடங்களைச் சரியாக முடிக்கவும், பாடங்களைச் சரியாகக் கவனிக்கவும்
ஆசிரியராலும் மாணவராலும் முடிவதில்லை. மேலும், அரைநாள் பள்ளி என்று அவசரம் அவசரமாகப் பாடங்களைத்
தொடர்ந்து நடத்தி மதிய நேரமும் மாலை நேரமும் வீணாய்ப் போகின்றன. ஒரு பாட வேளை ஒரு மணி நேரம்
என்று அமைத்து மாலை 4.00 மணி வரை வகுப்புகள் நடத்தினால், மாணவர்கள் ஆழமாகக் கற்க வாய்ப்பு ஏற்படும்.
மதியம் ஒரு மணி நேரம் மதிய உணவு இடைவேளை என்று வைத்து அனைத்து மாணவர்களையும் ஒன்றாக உணவு
உண்ண வைக்கலாம். இதன் மூலம் நட்புணர்வு, புரிந்துணர்வு ஏற்படுவதுடன், மாணவர்கள் மன இறுக்கம் இன்றி
அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் கல்வி கற்க முனைவர்.

இணைப்பாட நடவடிக்கைகளின் நேரத்தில் மாற்றத்தை நான் பெரிதும் விரும்புகிறேன். இணைப்பாடங்கள்


பெரும்பாலும் மதியம் அல்லது மாலை வேளைகளில் தொடங்குகின்றன. காலையில் பாடங்களைக் கவனித்துக்
களைப்படைந்த மாணவர்கள் மனவெழுச்சியுடன் இணைப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட இயலாது. மாறாக
அனைத்து இணைப்பாட நடவடிக்கைகளும் பள்ளி தொடங்கும் முதல் வேளைகளிலேயே இருந்தால் மாணவர்கள்
அனைவரும் தவறாது உற்சாகத்துடன் அந்நடவடிக்கைகளில் ஈடுபடுவர். மாலை நேரங்களில் கால தாமதம் இன்றி
அனைவரும் ஒன்றாக வீடு திரும்புவர். வீட்டில் வீட்டுப் பாடங்கள் செய்யவும், பொழுதுபோக்கு நடவடிக்கைகளில்
சிறிது நேரம் ஈடுபடவும் போதுமான நேரம் கிடைக்கும். மேலும், இணைப்பாடங்கள் வெறும் விளையாட்டு என்று
உடலுக்கு மட்டுமல்லாமல் கலை, கலாச்சாரம், பண்பாடு என்று உள்ளம் மேம்பாடு அடையும் கலாச்சார
நடவடிக்கைகளும் இடம் பெற வேண்டும்.

மேலும், அரையாண்டுத் தேர்வு, ஆண்டிறுதித் தேர்வு ஆகியவற்றை அந்தப் பருவத்தில் ஒரு மாதத்திற்கு
முன்பே விரைவாக நடத்தி முடித்துவிட்டுப் பள்ளிகளில் ஏறக்குறைய ஒரு மாத காலம் முறையான பாடங்கள் ஏதும்
நடப்பதில்லை. எனவே, தேர்வுகளை விடுமுறைக்குச் சில நாட்கள் முன்புதான் நடத்த வேண்டும். இவ்வாறு செய்வதால்
அந்த அந்த ஆண்டுப் பாடங்களை நன்கு ஆழமாகக் கற்கவும் புரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். குடும்பப்
பிணைப்பு, ஓய்வுக் காலம் ஆகியனவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் விடுமுறைக் காலங்களில் பல்வேறு
காரணங்களுக்காக மாணவர்களைப் பள்ளிக்கு வருமாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

இத்தகைய மாற்றங்களோடு மாணவர்களின் கல்விப் பயணத்திற்குச் சுவையூட்டக் கற்றலில் ஆசிரியர்கள்


அவர்களுக்கு அதிகச் சுதந்திரத்தை வழங்க வேண்டும். கற்றல் பயணங்களுக்கான இடங்களை மாணவர்களே தெரிவு
செய்வது, வகுப்பறையைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப அலங்கரிப்பது, கட்டுரை எழுதுவதற்கான தலைப்புகளைத்
தாங்களே உருவாக்குவது போன்ற சுதந்திரத்தை அவ்வப்போது மாணவர்களே செய்யும்போது அவர்களுக்குப்
பள்ளியின் மீதும், கற்றலின்மீதும் அவர்களின் ஈடுபாடு அதிகரித்து ‘இது என்னுடையது, இதற்கான முழுப்பொறுப்பும்
என்னுடையது’ என்ற மனப்பான்மை மேலோங்கும். சுயமான கற்றலுக்கு வழிவிட்டு மாணவர்களுக்குள் முக்கியமான
பண்புகளில் ஒன்றான பொறுப்புணர்வை வளர்த்து, அவர்களைத் தன்னம்பிக்கை பெற்ற குடிமக்களாக உருவாக்கி,
எதிர்காலச் சவால்களைச் சமாளிக்கத் தயார்ப்படுத்தும்.

45
இத்தகைய மாற்றங்கள் பள்ளியில் ஏற்படுமானால் ‘கல்வி கற்பது கரும்பாக இனிக்கும்.’ ‘பள்ளிக்குச்
செல்வது என்றால் பாகாய்ச் சுவைக்கும்.’ நமது கல்வியமைச்சு நாளுக்கு நாள் பற்பல மாற்றங்களையும்
வசதிகளையும் பள்ளிகளுக்குச் செய்துகொண்டுதான் வருகின்றது. அவற்றுள் இவைகளும் அடங்கினால் பள்ளிக்கு
வரும் மாணவர்களுக்கு ஆர்வம் பெருகி, கற்பதில் ஈடுபாடும் தோன்றும். மேலும் அவர்களின் வாழ்வில் ஏற்றங்கள்
என்பது எளிதாய்ப் பிறக்கும் என்பது திண்ணம்.

அருஞ்சொற்பொருள்
தத்துவம் கோட்பாடு

விழுமியங்களை அறநெறிக் கொள்கைகளை

விடுத்து விலக்கி / நீக்கி

ஆதங்கம் கவலை

தெளியாத கலையாத

மன இறுக்கம் மன உளைச்சல்

மனவெழுச்சியுடன் உற்சாகத்துடன்

தவிர்க்க விலக்க

தெரிவு தேர்ந்தெடுக்க

பாகாய் சர்க்கரைக் கரைசலாய்

46
பயிற்சி வினா 17 மற்றும் 18
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

17. உன் குடும்பத்தில் ஏற்படவிருந்த ஒரு விபரீதத்தை நீ எவ்வாறு பொறுப்புடன் இருந்து


சமாளித்தாய் என்பதையும், அதைச் சமாளிக்கும் போது நீ எதிர்நோக்கிய சவால்களையும்
விவரித்து எழுதுக.

முன்னுரை விளக்கம்

● விபரீதங்கள் எப்போது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது


● அலட்சியப் போக்கு இருத்தல் கூடாது
● எப்போதுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
● தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
● வருமுன் காக்கும் பண்பைக் கொண்டிருக்க வேண்டும்

கருத்து 1 விரிவாக்கம்

47
விபரீதம் எவ்வாறு நடக்க ● கதவு தட்டப்பட்டது
விருந்தது ● கதவின் துவாரத்தின் வழி பார்க்காமல் கதவைப் பணிப்பெண்
திறந்தார்
● இரண்டு நபர்கள் வீட்டு வாசல்முன் நின்றுகொண்டிருந்தனர்
● வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திலிருந்து வந்திருப்பதாகக் கூறல்
● சன்னல்களைச் சரிபார்க்க வந்திருப்பதாகக் கூறல்
● வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்டல்

கருத்து 2 விரிவாக்கம்

சம்பவத்தின் தொடர்ச்சி ● பணிப்பெண்ணிடம் சம்மந்தம் இல்லாத கேள்விகளைக் கேட்டல்


● உனக்குச் சந்தேகம் ஏற்பட்டது
● வீட்டின் எல்லா ஜன்னல்களையும் பார்வையிட வேண்டும் என்று
கேட்டார்கள்
● எல்லாம் தற்போதுதான் பழுதுபார்த்தோம் என்று நீ கூறினாய்
● பார்க்கவேண்டும் என்று வற்புறுத்தினர்
● உன் சந்தேகம் மேலிட்டது
● அவர்களின் அனுமதி அட்டைகளை நீ கேட்டல்

கருத்து 3 விரிவாக்கம்

விபரீதத்தைச் சமாளித்த ● அது போலியானது என்பதைக் கண்டுபிடித்தல்


விதம் ● வரப்போகிற ஆபத்தை ஊகித்தல்
● பணிப்பெண்ணை அவர்களுக்குத் தேநீர் தயாரிக்கக் கூறுதல்
● அண்டைவீட்டாரின் உதவியை நாடுதல்

கருத்து 4 விரிவாக்கம்

விபரீதத்தைச் சமாளித்த ● காவலர்களுக்கு அழைப்பு விடுதல்


விதம் - தொடர்ச்சி ● காவலர்கள் வரும்வரை போலி நபர்களிடம் பேச்சுக் கொடுத்தல்
● காவலர்கள் வந்தனர்
● போலி நபர்களைக் கைது செய்தல்

48
● கொள்ளையடிப்பதற்கு நோட்டம் பார்க்க வந்திருப்பதை அறிதல்

முடிவுரை ● பணிப்பெண்ணுக்குப் பாதுகாப்பு முறைகளை விளக்குதல்


● குற்றவாளிகளைக் கண்டு அஞ்சுதல் கூடாது
● தைரியமாகச் செயல்பட வேண்டும்
● சிங்கப்பூர்க் காவலர்கள் மிகவும் துரிதமாகச் செயல்படுவார்கள்
● நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்

கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:

● வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்


வைத்தூறு போலக் கெடும்

● வருமுன் காப்பதே சிறந்தது


● அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
● ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு
● துணிந்து நில் தொடர்ந்து செல்
● கண்களில் உண்மை இல்லை
● தட்டுத்தடுமாறிப் பேசினர்
● பலநாள் திருடன் ஒருநாள் சிறையில்
● ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்

அருஞ்சொற்பொருள்

போலி பொய்யானது
ஊகித்தல் உத்தேசமாக
நபர் மனிதர்
துரிதமாக விரைவாக
அரண்டவன் பயப்படுபவன்
49
இலேசு சுலபம்
தட்டுத்தடுமாறி நிலைத்தன்மை இல்லாமல்

18. வாழ்க்கையில் ஒருவரை முன்னேறச் செய்வது கல்வியே - இக்கருத்தினை நீ ஏற்றுக்கொள்வாயா?


(ஏற்றுக்கொள்கிறேன் என்ற அடிப்படையில் அமைந்த கருத்துகள்)

முன்னுரை

➢ வாழ்க்கையில் ஒருவரின் அடிப்படைத் தேவைகள்

 இருக்க வீடு, உடுத்த உடை, உண்ண உணவு, குடிக்க நீர்


➢ வாழ்க்கையில் ஒருவருக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பது கல்வி
➢ செல்வம் பெருகக்கூடியது - ஆனால் அழியக்கூடியது
➢ கல்வி பெருகக்கூடியது - ஆனால் என்றும் அழியாதது
➢ கல்வியினால் வீழ்ந்தவர் எவருமில்லை

இடையுரை

➢ கல்வி ஒருவரின் அறிவுக்கண்களைத் திறக்கும்


➢ பொது அறிவை வளர்த்து, மேம்படுத்தும்
➢ அறியாமையை நீக்கும், அறிவுக்கண்ணைத் திறக்கும்
➢ கல்வி என்பது ஏட்டில் மட்டும் அடங்காது
➢ நமக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி அதை மற்றவர்களுக்கும் பயனாக்கும்
➢ மக்கள் பண்புகள், வாழ்க்கைப் பண்புகளைக் கற்பிக்கும்
➢ நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்
➢ கல்வி கற்றோரை உலக நாட்டினர் வரவேற்பார்கள்
➢ எங்கு சென்றாலும் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது (எ.கா.- சிங்கப்பூரில் கல்வியில்
சிறந்து விளங்கும் வெளிநாட்டு ஊழியர்கள் பலர் உயர் பதவிகளை வகிக்கின்றனர்)
➢ உயர் சம்பளத்தை எதிர்பார்க்கலாம்
➢ வசதியான வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளலாம்
➢ கல்வி சிந்தித்துச் செயல்பட வைக்கும்
➢ கல்வி திட்டமிட்டுச் செயல்பட வைக்கும்
➢ மற்றவர்களையும் மேம்படுத்தும் (எ.கா - ஆசிரியர்கள், பயிற்றுநர்கள்)
➢ கற்றோரின் வட்டத்தில் நன்மதிப்புக் கிடைக்கும்
➢ ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டில் உள்ள கற்றவர்களின் எண்ணிக்கையை வைத்தே முடிவு
செய்யப்படுகிறது

50
➢ கற்றவர்கள் குறைந்திருக்கும் நாடு வளர்ச்சி அடையாத நாடாகக் கருதப்படுகிறது
➢ கற்றவர்களுக்கு எக்காலமும் மதிப்பும் மரியாதையும் உண்டு

முடிவுரை

➢ கல்வி ஒருக்காலும் நம்மைக் குப்பை மேட்டில் தள்ளாது


➢ செல்வம் ஒருவருக்குத் தற்காலிக மதிப்பை மட்டுமே தரும்
➢ அதனால் கல்வியில் தேர்ச்சி அடைந்து நாம் வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும்
➢ மாணவர்கள் கல்வியைக் கற்பதற்குக் கலங்கக்கூடாது

இனிய தொடர்கள்

➢ செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்


செல்வத்துள் எல்லாம் தலை
➢ தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
➢ கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
➢ கல்வியே உலகத்தைப் பார்க்கும் கண்கள்
➢ கற்கையில் கல்வி கசக்கும் கற்றபின் அதுவே இனிக்கும்
➢ அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
➢ கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
➢ இளமையில் கல்வி சிலையில் எழுத்து
➢ கற்காமல் இருப்பதைவிட, பிறக்காமல் இருப்பதே நன்று
➢ கற்காதவர் கண்ணில்லாதவருக்குச் சமம்
➢ கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு

அருஞ்சொற்பொருள்

அடங்காது கொள்ளாது

வகிக்கின்றனர் ஏற்றுள்ளனர்

நன்மதிப்பு நல்ல மதிப்பு

ஒருக்காலும் எப்போதும்

51
கலங்கக்கூடாது வருத்தப்படக்கூடாது

தொகுதி 7

Model Compo - மாதிரிக் கட்டுரை

19. நூல் வாசிப்பதன் அவசியத்தைப் பற்றியும் அதை மாணவர்களிடம் வளர்ப்பதற்கான


வழிவகைகளையும் விளக்கி எழுதுக.

புத்தகங்கள் என்பவை வெறும் தாள்களாலும் அட்டைகளாலும் ஆனவை அல்ல. அறிவுப் பெட்டகங்கள்


அவை. கால வெள்ளத்தில் அந்தப் புத்தகங்கள் மறைந்து போனாலும், அவை கொடுத்த அறிவும் வாழ்க்கைத்
தெளிவும் உலகம் உள்ள அளவும் தொலைந்து போகா. எனவேதான், ‘நூல் பல கல்’ என்றும், ‘ஓதுவது ஒழியேல்’
என்றும் ஔவை மூதாட்டி அறிவுறுத்தினார். பழங்காலத்தில் வேற்று நாட்டின் மீது படை எடுக்கும் எதிரிகள், முதலில்
அந்நாட்டில் உள்ள நூல்களை எல்லாம் முற்றிலும் சிதைத்து அழித்து விடுவார்களாம்.

ஒரு நாட்டின், ஓர் இனத்தின் மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் முதலிய யாவற்றையும் ஒரே நொடியில்
அழிக்க அவர்கள் கையாளும் கொடிய செயல் முறை இது. இதிலிருந்து, ஒரு நாட்டின் பண்பாட்டின் பெட்டகமாக,
வாழ்வின் விழுமியங்களைப் போதிக்கும் அமுதசுரபியாக, ஆணிவேராக இருப்பன நூல்கள்தாம் என்பது நமக்கு
விளங்கும். எனவே, திருவள்ளுவர் விரும்புவதுபோல் ‘மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து சிறக்க
வேண்டுமென்றால்’ அவன் முதலில் நூலறிவைப் பெற வேண்டும்; இடைவிடாமல் நூல்களை வாசிக்க வேண்டும்.
இதுவே அவனது முதல் கடமையாகும்.

பள்ளிப் பாடநூல்களை வாசிப்பதையே ‘வாசித்தல்’ என மாணவர் பலர் கருதுகின்றனர். இது தவறாகும்.


ஏனென்றால், பள்ளிப்பாடங்கள் மட்டும் நமது அறிவை வளர்க்கா. பாடங்கள் தொடர்புடைய பல தகவல்களைப் பெற,
நாம் வேறு பல நூல்களை வாசிக்க வேண்டியது அவசியமாகின்றது. அறிவு என்பது வேலின் வடிவம் போன்று
ஆழமாகவும் அகலமாகவும் கூர்மையாகவும் இருக்க வேண்டும் என்று ஆன்றோர் கூறுவர். இத்தகைய அறிவினைப்
பெறத் தொடர்நூல் வாசிப்பே ஒருவனுக்கு உதவுகின்றது. கம்பர் என்னும் தமிழ்க்கவிஞர் ‘கவிச்சக்ரவர்த்தி’ என்று
போற்றப்படுகின்றார். இவர் எழுதிய ராமாயணம் தமிழின் ஈடுஇணையற்ற காவியமாக மதிக்கப்படுகின்றது. இதற்குக்
காரணம், கம்பரின் பல நூல் அறிவே எனக் கூறப்படுகின்றது. அவர், மூல நூலான வால்மீகி ராமாயணத்தை மட்டும்
கற்கவில்லை; சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, திருக்குறள் போன்ற பலநூல்களையும் ஆழமாகக் கற்றார்.
அதனால்தான், ‘கல்வியில் பெரியவர் கம்பர்’ என அறிஞர்களால் அவர் போற்றப்படுகின்றார். எனவே, ஆழமான
கல்விக்கும், விரிவான அறிவுக்கும் ‘பல நூல் வாசிப்பு’ ஒருவருக்கு மிகவும் அவசியமாகின்றது.

52
ஒரு மொழியைப் பிழையறப் வேசுவதற்கும், எழுதுவதற்கும் நூல் வாசிப்பு மிகவும் அவசியமாகின்றது.
மொழியில் புலமை பெற, நூல் வாசிப்பு மிக இன்றியமையாதது. மொழிப்பாடங்களில் தொடக்கப்பள்ளி,
உயர்நிலைப்பள்ளி ஆகியனவற்றில் மாணவர்களின் எழுத்துப்பிழைகள், ஒலிப்பிழைகள், வாக்கியப்பிழைகள்,
தட்டுத்தடுமாறிப் பேசுதல் முதலிய குறைகள் யாவற்றிற்கும் நூல் வாசிப்பு இன்மையே முக்கியக் காரணம் ஆகும்.
கலிகாலம் என்பது இன்று கணினிக் காலம் என்றாகிவிட்டது. கணினியில் விளையாடுவதும் உரையாடுவதும் போன்ற
கணினி விளையாட்டையே மாணவர்கள் பெரிதும் விரும்புவதால், இன்று நூலகத்தில் நூல் வாசிப்பு பெரிதும்
அருகிவிட்டது.

“தொட்ட அனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு


கற்ற அனைத்து ஊறும் அறிவு”

என்பது மறந்து போய், அனைத்தும் கணினி, கைத்தொலைபேசி விளையாட்டாய் மாறிவிட்டது. நூலகங்களில்


பேழைகளில் நூல்கள் தொடுவதற்கும் ஆளின்றித் தூங்குகின்றன. புத்தக அலமாரிகள் திறப்பதற்கு ஒருவரும் இன்றிப்
பூட்டியே கிடக்கின்றன. ‘அறிவின் திறவுகோல் புத்தகங்கள் தாம்’ என்னும் பொன்மொழியை மாணவர்கள்
மறக்கலாகாது. ‘பாடை ஏறினும் ஏடது கைவிடேல்’ என்னும் பழமொழியைத் துறக்கலாகாது.

எனவே, நூல் வாசிப்பை மாணவர்களிடம் ஊக்குவிப்பது அனைவரின் கடமையாகும். முதலில், பெற்றோர்


தாங்கள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தாங்கள் படித்த நூல்களைப் பிள்ளைகளிடம்
சொல்லி அந்நூல்களை வாசிக்குமாறு அவர்களை ஊக்குவிக்கவேண்டும். திரையரங்கம், உணவகம், விளையாட்டுத்
திடல் போன்றவற்றிற்குப் பிள்ளைகளை அழைத்துச் செல்வது போல, நூலகங்களுக்கும் ஒரு நாள் கட்டாயம்
அழைத்துச் சென்று வாசிக்க ஊக்குவிக்க வேண்டும். பள்ளியில், ஆசிரியர்கள் பாடப் புத்தகங்களுக்கு அப்பால், நூல்
வாசிப்பிற்கு ஒரு பாடவேளை ஒதுக்கி அவர்களை நூலகம் அழைத்துச் சென்று வாசிக்க வைக்க வேண்டும். அடுத்த
வகுப்பில், அவர்கள் வாசித்த செய்திகளைத் தொகுத்து ஒவ்வொருவரையும் வகுப்பில் பேச வைக்க வேண்டும்.
அவர்கள் அறிவுக்குப் பொருத்தமான புதிய நூல்களை ஆசிரியர் அறிமுகம் செய்ய வேண்டும். விடுமுறைக் கால
வீட்டுப் பாடமாகப் ‘புத்தக விமர்சனம்’ எழுதி வரச் செய்ய வேண்டும்.

தற்போது காலத்திற்கேற்பப் புத்தகங்களும் தங்கள் வடிவினை மாற்றிக் கொண்டு விட்டன. மின்நூல்கள்,


முப்பரிமாண நூல்கள் என்று கண்ணைக் கவரும் வண்ணம் நம்மிடையில் உலவுகின்றன. வடிவம் வேறாக இருப்பினும்
அவற்றுள் புதைந்திருக்கும் செய்திகளும், தகவல்களும், கதைகளும் மாறவில்லை. நூலகத்திற்குச் சென்று புத்தகத்தை
எடுக்க நேரமில்லை என்று நொண்டிச் சாக்குகளைக் கூறிக்கொண்டிருக்கும் மாணவர்கள் தங்கள் கைகளிலேயே
இருபத்தி நான்கு மணிநேரமும் தவழ்ந்துகொண்டிருக்கும் கையடக்கத் தொலைபேசியின் மூலமே இப்போது நூல்களை
வாசிக்கலாம்.

நூல்களை வாசிக்காதவன் நாளடைவில் பெரும் இழப்பிற்கு ஆளாகிறான். அவனால் கற்றோர் மத்தியில்


கலந்துரையாட முடியாது. சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்துத் தெரிந்துகொண்டு தனது
வாழ்வைச் செம்மைப்படுத்த முடியாது, வினா-விடை புதிர்ப்போட்டிகளில் தங்கள் பிள்ளைகளுடன் இணைந்து
பங்கெடுக்க முடியாது. கற்பனை வளத்தை வளர்க்க முடியாது, கதையின் சுவையை ரசிக்கத் தெரியாது. இப்படிப் பல
இன்பங்களை அனுபவிக்க முடியாமல் போகிறான். வயிற்றுக்கு மட்டும் உணவளித்துவிட்டு மூளைக்கு உணவளிக்க
மறக்கும் ஒருவனின் அறிவு, நாளடைவில் துருப்பிடித்து எதற்கும் பயன்படாமல் போய்விடும்.
53
‘கண்டதைப் படித்தவன் பண்டிதன் ஆவான்’ என்னும் முதுமொழியை மாணவர்கள் உணர்ந்து நல்ல
நூல்களை நாள்தோறும் தொடர்ந்து படித்து வந்தால் அவர்கள் எதிர்காலத்தில் நாடு போற்றும் நல்லறிஞர்களாக,
பண்பாடு மிக்க சான்றோர்களாக உருவெடுப்பார்கள் என்பது திண்ணம். அறிவுடை ஒருவனைத்தான் அரசும்
விரும்பும். அந்த அகன்ற அறிவை ஒருவருக்குத் தருவது நூல்கள். எனவே, இந்தப் பருவத்திலேயே நல்ல நூல்களைத்
தேர்ந்தெடுத்து வாசித்து அவர்களின் அறிவைப் பெருக்கிக்கொள்வது இன்றயமையாமையாகும்.

அருஞ்சொற்பொருள்
பெட்டகங்கள் விலை உயர்ந்த காவியமாக மிக நீண்ட கதையைக்
பொருள்களைப் பாதுகாக்கும் கவிதைவடிவில், சொல்லும் நூலாக
பெட்டிகள்

தெளிவும் விளக்கமும் அருகிவிட்டது குறைந்து விட்டது

ஒழியேல் விட்டு விடேல் பாடை பிணத்தைத் தூக்கிச் செல்ல உதவும்


மூங்கில் படுக்கை

சிதைத்து அழித்து துறக்கலாகாது விட்டு விடக் கூடாது

அமுதசுரபியாக புராணத்தில் சொல்லப் பண்டிதன் புலவன்


படுகின்ற, எடுக்க எடுக்கக்
குறையாத உணவு தரக்கூடிய
பாத்திரம்

வையத்துள் உலகத்துள் திண்ணம் உறுதி

54
பயிற்சி வினா 20 மற்றும் 21
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

20. உமது ஆசிரியர் உம்மீது வைத்த நம்பிக்கையால் உம்மிடமிருந்த திறமை வெளிப்பட ஒரு
சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது நம்பிக்கையைப் பொய்யாக்காமல் உம்மை நிரூபித்துக் கொண்ட
அனுபவத்தை விளக்கி எழுதுக.

முன்னுரை விளக்கம்

● நம்பிக்கையே வாழ்க்கை
● நம்பிக்கை குலைந்துவிட்டால் யாரும் நம்பமாட்டார்கள்
● பிறரது நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்வது
முக்கியம்
● நம்பிக்கை நம்மை யாரென்று உலகிற்குக் காட்டும்

கருத்து 1 விரிவாக்கம்

நான் முன்பு எவ்வாறு ● எல்லாப் பாடங்களிலும் தோல்வி


இருந்தேன்? ● முயற்சி செய்வதில்லை
● வகுப்பில் அரட்டை அடித்துக்கொண்டே இருப்பது
● கவனம் செலுத்துவதில்லை
● சொன்னதைச் செய்வதில்லை
● தீய நண்பர்கள் சேர்க்கை

கருத்து 2 விரிவாக்கம்

மற்றவர்கள் என்மீது ● மற்ற ஆசிரியர்கள் கைகழுவிவிட்டனர்


கொண்டிருந்த எண்ணம்/என் ● தமிழாசிரியர் மட்டும் என்மீது நம்பிக்கை வைத்திருந்தார்
போக்கு
● பெற்றோர்களாலும் என்னை அடக்க முடியவில்லை
● கட்டொழுங்கு ஆசிரியர் பலமுறை எச்சரித்துவிட்டார்
● யாரிடமும் பயமில்லை
● என்ன செய்துவிடுவார்கள் என்ற இறுமாப்பு
● எதிர்காலத்தைப் பற்றிய கவலை இல்லை

கருத்து 3 விரிவாக்கம்

55
தமிழாசிரியர் என்மீது ● என்மீது நம்பிக்கையை இழக்கவில்லை
கொண்டிருந்த நம்பிக்கை ● என்னால் படிக்க முடியும் என்று கூறினார்
● என்னை நம்பிப் பொறுப்புகளைக் கொடுத்தார்
● நான் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்ட மாட்டார்
● நான் செய்த சிறுசிறு நல்ல விஷயங்களைப் பெரிதுபடுத்திப்
பேசுவார்
● எதிர்காலத்தின் சவால்களை எனக்கு அன்பாக
எடுத்துரைத்தார்
● அவர்மட்டுமே எனக்கு ஊக்கப்பரிசுகள் கொடுப்பார்

கருத்து 4 விரிவாக்கம்

விபரீதத்தைச் சமாளித்த ● என்மீது எனக்கே நம்பிக்கை பிறந்தது


விதம் தொடர்ச்சி ● என் தமிழாசிரியர் என்மீது வைத்திருந்த நம்பிக்கையைப்
புறக்கணிக்க விரும்பவில்லை
● கடுமையாக உழைத்தேன்
● ஆசிரியரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக
நடந்துகொண்டேன்
● மற்றவர்கள் என்மீது கொண்டிருந்த எண்ணத்தை
மாற்றினேன்
● தேர்வில் நன்றாகச் செய்தேன்
● எல்லாருக்கும் ஆச்சரியம்
● ஆசிரியருக்கு மகிழ்ச்சி
● என் திறமையை உணர்ந்தேன்

முடிவுரை ● நம்பிக்கை ஒருவரை இமயத்தின் உச்சிக்கே கொண்டு


செல்லும்
● முடியும் என்று நம்ப வேண்டும்
● நமது திறமைகள் அப்போதுதான் வெளிப்படும்

கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:

● வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

56
துணைவலியும் தூக்கிச் செயல்

● யானையின் பலம் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில்


● நம்பிக்கை என்பது ஆணிவேர் போன்றது
● கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்
● கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்
● நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தான்
● ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
● ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
● தன் பலம் கொண்டு அம்பலம் ஏற வேண்டும்
● விளையும் பயிர் முளையிலே தெரியும்
● நல்லவன் என்று பெயர் எடுக்க நாள் செல்லும்

அருஞ்சொற்பொருள்

பாத்திரமாக உகந்தவராக

அரட்டை வீண் பேச்சு

இறுமாப்பு செருக்கு, கர்வம்

இமயத்தின் உச்சி மிக உயர்ந்த நிலை

ஆணிவேர் உறுதியான

பதம் பயன்படுத்துவதற்கு ஏற்ற

அம்பலம் சபை

முளை பிஞ்சு

57
21. நல்ல நண்பர்களின் அவசியத்தையும், அவர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளும்
வழிவகைகளையும் விவரித்து எழுதுக.

முன்னுரை

➢ இக்கால இளையர்களிடையே நண்பர்களின் ஆதிக்கம்


➢ குடும்ப உறுப்பினர்களைவிட நண்பர்களிடமே அதிக நெருக்கம்
➢ நம் வாழ்வில் பலவிதமான நண்பர்களைச் சந்திப்போம்
➢ நண்பர்களைப் புறக்கணிக்க முடியாது
➢ அவர்கள் நம் வாழ்வின் ஓர் அங்கம்
➢ நல்ல நண்பர்களை அடையாளம் காண வேண்டும்

இடையுரை

➢ நண்பர்கள் நமது வயதினர்


➢ விருப்பு வெறுப்புகள் ஒன்றுபட்டிருக்கலாம்
➢ நமது சிந்தனைகளையும் பிரச்சினைகளையும் எளிதில் புரிந்துகொள்வார்கள்
➢ நண்பர்களிடம் பகிர்தல் என்பது எளிதாக இருக்கிறது
➢ பெற்றோர் நம் மூத்த தலைமுறையினர்
➢ அவர்களுடன் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது கடினம்
➢ புரிந்துகொள்ளும் தன்மை இருக்காது, வேறு நோக்கில் பார்ப்பார்கள்
➢ நல்ல நண்பர்கள் நமக்கு ஊக்க மூட்டுவார்கள்
➢ பள்ளிப் பாடங்களில் துணையாக இருப்பார்கள்
➢ தோல்வியில் தோள்கொடுப்பார்கள்
➢ நண்பர்களுடன் சேர்ந்து பயன்தரும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்

58
 (எ.கா – காற்பந்து,மீன் பிடித்தல், புகைப்படம் எடுத்தல்)
➢ கற்றல் குழுவை அமைத்துக்கொண்டு படிக்கலாம்
➢ நூலகத்திற்கு நண்பர்களுடன் சென்றுவரலாம்
➢ நண்பர்களைத் தீபாவளி, கிறிஸ்துமஸ், நோன்புப் பெருநாள், பிறந்தநாள் விழா போன்ற விசேஷ நாட்களுக்கு
அழைக்கலாம்
➢ பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கலாம்
➢ பிறந்த நாளின் போது சிறு பரிசுப்பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம்
➢ இரண்டு குடும்பத்தாரும் இணைந்து உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளலாம்
➢ இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் வரும்போது அதை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும்

முடிவுரை

➢ நண்பர்கள் நமது வாழ்க்கையில் வந்துபோவார்கள்


➢ அவர்கள் நிரந்தரமற்றவர்கள்
➢ ஆனால் அவர்கள் வாழ்க்கைக்கு அவசியம்
➢ நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்துத் தக்க வைத்துக்கொள்ளுதல் வேண்டும்
➢ தீய நண்பர்களை அடையாளங் கண்டு கைகழுவிவிடுவது நன்று

இனிய தொடர்கள்

➢ உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு


➢ முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு


➢ ஒரே சிந்தனையில் இருக்கும் இரண்டு உடல்கள் தான் நட்பு
➢ ஒரு நண்பனுக்காக எதையும் விட்டுக்கொடு, ஆனால் நண்பனை மட்டும் விட்டுக்கொடுக்காதே

59
➢ கூடா நட்பு பாடாய் முடியும்
➢ நல்ல நண்பன் என்பவன் உடன்பிறவா சகோதரன்
➢ நண்பர்கள் இல்லாத வாழ்க்கை பூக்கள் இல்லாத பூந்தோட்டம்
➢ புத்தகங்களும் நண்பர்களும் குறைவாக இருந்தாலும் சிறந்ததாக இருக்க வேண்டும்
➢ தோள்கொடுப்பான் தோழன்
➢ தோளுக்குமேல் வளர்ந்துவிட்டால் அவன் தோழன்
➢ நட்புக் கொள்வதில் நிதானம் தேவை, கிடைத்தபின் உறுதி தேவை
➢ விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்
➢ இளமையில் கல்வி சிலையில் எழுத்து
➢ கற்காமல் இருப்பதைவிட, பிறக்காமல் இருப்பதே நன்று
➢ கற்காதவர் கண்ணில்லாதவருக்குச் சமம்
➢ கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு

அருஞ்சொற்பொருள்

ஆதிக்கம் செல்வாக்கு

அங்கம் ஒரு பகுதி

நிரந்தரமற்றவர்கள் நிலையற்றவர்கள்

கைகழுவி ஒதுக்கி

உடுக்கை உடை

இடுக்கண் துன்பம்

கூடா வேண்டாத

கேடாய் துன்பத்தில்

நிதானம் அமைதி

துரோகி நம்ப வைத்து ஏமாற்றுபவன்

கற்பில்லா ஒழுங்குமுறை இல்லாத

60
தொகுதி 8

Model Compo - மாதிரிக் கட்டுரை

22. நீவிர் போற்றும் ஒருவருடைய நற்பண்புகளையும், அவர்செய்த நற்செயல்களையும் விளக்கி


எழுதுக.

‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? சொல் எல்லாம் தூய தமிழ்ச் சொல்லாகுமா?’ என்பார் கவியரசர்
கண்ணதாசன். அதனைப் போல், உலகில் எவ்வளவோ மாந்தர்கள் பிறக்கிறார்கள்; வாழ்கிறார்கள்; இறக்கிறார்கள்.
ஆனால், அவர்களுள் ஒரு சிலரே ‘உள்ளத்தால் பொய்யாது ஒழுகி உலகத்தார் உள்ளத்துள் எல்லாம்’ என்றும்
மறையாது வாழ்கிறார்கள். அத்தகைய மனிதருள் மாணிக்கம், நான் போற்றும் டாக்டர் அப்துல் கலாம் ஆவார்.
அண்மையில் அவர் மறைந்தபோது கற்றவர், கல்லாதவர், வறியவர், செல்வந்தர், இளையோர், முதியோர் என்னும்
வேறுபாடு சிறிதும் இன்றி அனைவரும் ஒருசேர வருந்தித் துடித்தனர். வரலாறு காணா அளவு அவரது இறுதி
ஊர்வலத்தில் கூடி அழுதனர்.
இதற்குக் காரணம் அவர் வகித்த உயர்பதவியோ, அவரது பணபலமோ, ஆள் பலமோ அல்ல! கடமை,
கண்ணியம், கட்டுப்பாடு மிகுந்த மனிதராக ஆடம்பரம் இல்லாத எளிய மனிதராக, இனம், மொழி, மதம் இவற்றைத்
தாண்டி அனைவரையும் நேசிக்கும் மனிதராக, கடும் உழைப்பாளியாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த
காரணத்தால் தான் இன்று அவர் எல்லாராலும் போற்றப்படுகின்றார்.
‘வறுமையிலும் செம்மை’ என்னும் பழமொழிக்கு இலக்கணமாகத் தமது வாழ்க்கையை வகுத்தவர் டாக்டர்
கலாம். இந்தியாவில், இராமேஸ்வரம் என்னும் சிறிய ஊரில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், குடும்பச்
சூழலால் எந்த நிலையிலும் அவர் தளர்ந்து போகவில்லை. பள்ளிக்கு ஒழுங்காகச் சென்று பாடங்களைப்

61
படித்ததோடு, குடும்பத் தொழிலான மீன் பிடிக்கும் தொழிலிலும் தந்தைக்கு உதவினார். அதிகாலையில் வீடுகளுக்குச்
சென்று செய்தித்தாள்கள் விநியோகம் செய்து தமது சொந்தக் காலில் நிற்கக் கற்றுக்கொண்டார்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா னுழை
தளர்வு இல்லாத முயற்சி உடையவனிடம் உயர்வு தானே வந்து சேரும் என்னும் குறளுக்கு இலக்கணமாய்
அமைந்த டாக்டர் கலாம், உயர்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என்று தமது கல்வியைத் தடையின்றித்
தொடர்ந்தார். ராக்கெட் விஞ்ஞானியாகப் பணியைத் தொடங்கிய அவர், பாரத நாட்டில் ஜனாதிபதியாக உயர்ந்தார்.
அவர் பதவிகளுக்காகப் பிறரைத் தேடிச் செல்லவில்லை; பதவிகள் அவரைத் தேடி வந்தன. பட்டங்களுக்காக அவர்
ஆலாய்ப் பறக்கவில்லை, பட்டங்கள் அவரிடம் வந்து தம்மைப் பெருமைப்படுத்திக் கொண்டன.
அவர், இந்திய ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோதும் மிக எளிய வாழ்க்கையே மேற்கொண்டார். பகட்டான
ஆடைகள் அணிவதையும் அரசாங்கச் செலவில் பல நாடுகளில் சுற்றுப்பயணங்கள் அடிக்கடி மேற்கொள்வதையும்
தவிர்த்தார். அலுவலக வேலைகளில் சுணக்கம் காட்டாது தயவு தாட்சண்யம் இன்றி உரிய முடிவுகளை நேரிய
வழியில் உடனுக்குடன் எடுத்தார். அவரைக் குடிமக்கள் முதல் உயர் பதவி வகிப்பவர்வரை எவரும் தடையின்றிச்
சந்திக்கும் வகையில் அவர் காட்சிக்கு எளியவராக வாழ்ந்தார். அவரது இறுதிக்காலம் வரை அவரது பூர்வீக வீடு
மிகச் சிறிய வீடாக இருந்தது என்பதும், அவர் விட்டுச் சென்றவை சில உடைகளும் சில புத்தகங்களும் தாம்
என்பதும் அவரது பற்றற்ற தூய வாழ்வினை நமக்குக் காட்டும் சான்றுகளாகும்.
போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மாற்றுத்திறனாளிகளும் நடப்பதற்கு உதவும் செயற்கைக்
கால்கள், இந்தியாவில் அப்போது 4.5 கிலோ எடையில் இருந்தன. இத்தகைய அதிக எடை கொண்ட கால்களை
மாட்டிக்கொண்டு அவர்கள் நடக்க மிகவும் சிரமப்பட்டனர். டாக்டர் கலாம் தமது ஆய்வின் மூலம் இதனை மாற்றி,
வெறும் 400 கிராம் எடை கொண்ட செயற்கைக் கால்களைத் தயாரிக்க வைத்து அவர்களைச் சிரமம் இல்லாமல்
நடக்க வைத்து மாபெரும் சாதனை புரிந்தார். அணுகுண்டு சோதனை செய்ததைவிட, ராக்கெட்டுகளை விண்ணில்
ஏவியதைவிட இச்செயலே தமக்கு மிகவும் மனநிறைவான ஒன்று என்று அவர் கூறியதிலிருந்து, மானுடத்தை
நேசிக்கும் மகத்தான அவரது உள்ளம் நமக்குப் புரிகின்றது.
அவருக்கு வயது என்றும் தடையாக இருந்ததில்லை. குழந்தைகளையும் இளையர்களையும் மிகவும் நேசித்த
அவர், தமது பதவிக்காலம் முடிந்தவுடன் வாளா இருந்துவிடவில்லை. இளைஞர்களின் ‘கனவு நாயகனாக’ அவர்
இளையர்கள் மத்தியில் வலம் வந்தார்.
‘கனவு காணுங்கள்’ அவற்றை நனவாக்கக் கடுமையாக உழையுங்கள்! என்னால் எதனையும் செய்ய முடியும்
என்று நம்புங்கள்!’ என்பன அவர் இளையர்களுக்குக் கூறிய முக்கிய அறிவுரைகள் ஆகும். மாணவர்கள்
தொடர்பான பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றுவதோடு நின்றுவிடாமல், அவர்களோடு உள்ளன்போடு
உரையாடியும் ஊக்கப்படுத்தினார். தன் மனைவி, தன் மக்கள், தன் குடும்பம் என்று வாழ்கின்ற சுயநலப்போக்கு
மிகுந்த இக்காலத்தில் திருமணம் கூடச் செய்து கொள்ளாமல் ஊருக்கே உழைத்த உத்தமர் டாக்டர் கலாம் ஆவார்.
மனிதர்களை மட்டுமன்றி, மரங்களையும் செடிகொடிகளையும் நேசித்த இம்மாமனிதர், இந்தியா முழுவதும் பல
லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் பெரும் இயக்கம் ஒன்றினை வெற்றிகரமாக

62
நடத்தினார். பிறப்பு என்பது ஒரு மனிதனுக்குச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால், அவனது இறப்பு ஒரு
சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்த இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்
கலாம் நான் போற்றும் ஒருவராக இருக்கின்றார்; நற்பண்புகளின் நாயகராக எனது இதயத்தில் வாழ்கின்றார்.

அருஞ்சொற்பொருள்

மாணிக்கக் கல்லாகுமா இரத்தினக் கல்லாகுமா

பொய்யாது ஒழுகி கபடு இல்லாமல் வாழ்ந்து

இலக்கணமாக விளக்கமாக

வகுத்தவர் அமைத்தவர்

சுணக்கம் தாமதம்

தயவு தாட்சண்யம் இரக்கம்

பூர்வீக வீடு மூதாதையர் வழியில் வந்த இல்லம்

பயிற்சி வினா 23 மற்றும் 24


கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

23. நீ இனிமேல் சந்திக்கவே கூடாது என்று முடிவெடுத்திருந்த நண்பர் ஒருவரைப் பல


வருடங்களுக்குப்பின் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அவரை ஏன் சந்திக்கக் கூடாது
என்று நினைத்தாய் என்பதையும், அவரை மீண்டும் சந்தித்த போது உனக்கு ஏற்பட்ட
மனநிலையையும், பாதிப்புகளையும் விளக்கி எழுதுக.

முன்னுரை விளக்கம்

● நண்பர்களைத் தவிர்க்க முடியாது


● சிலர் நமக்கு வாழ்க்கையில் ஆறாத தழும்புகளை ஏற்படுத்தி
விடுவார்கள்
63
● மறந்தாலும் மன்னிப்பது கடினம்
● நம் வாழ்க்கையில் குறுக்கிடுவது உண்டு
● பல உணர்வுகளால் நாம் பாதிக்கப்படுவோம்

கருத்து 1 விரிவாக்கம்

சந்திக்கக் கூடாது என்று ● உயிர்த்தோழன்


முடிவெடுக்கக் காரணம் ● எல்லாவற்றையும் பகிர்தல்
● இக்கட்டான நிலைகளில் பலமுறை உதவிக்கரம் நீட்டுதல்
● நீ இல்லையென்றால் அவனும் இல்லை
● மற்றவர்கள் பொறாமைப்படுதல்

கருத்து 2 விரிவாக்கம்

சந்திக்கக் கூடாது என்று ● நண்பனுக்குக் கெட்ட பழக்கம் இருந்தது


முடிவெடுக்கக் காரணம் - ● தேர்வுக்குப் படிக்காமல் ஏமாற்றுதல்
தொடர்ச்சி
● திருந்துவதாக வாக்களித்தல்
● ஆனால் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை
● வகுப்புத் தேர்வுகளில் பலமுறை ஏமாற்றி உள்ளான்
● இதுவரையில் மாட்டிக்கொள்ளவில்லை

கருத்து 3 விரிவாக்கம்

சந்திக்கக் கூடாது என்று ● தேசியக் கணிதத் தேர்வு


முடிவெடுக்கக் காரணம் - ● நண்பன் தேர்வுக்குத் தயார்ப்படுத்தவில்லை
உச்சக்கட்டம் ● துண்டுக் காகிதங்களை மறைத்து வைத்திருந்தான்
● ஆசிரியர் தேர்வு மண்டபத்தைச் சுற்றிக்கொண்டிருந்ததைக்
கண்டான்
● யாருக்கும் தெரியாமல் துண்டுக் காகிதத்தை உன் மேசையின்
கீழ் தள்ளிவிட்டான்
● ஆசிரியர் நீதான் ஏமாற்றுவதாக நினைத்தார்
● தேசியத் தேர்வு என்பதால் உடனே கடுமையான நடவடிக்கை
எடுக்கப்பட்டது
● தேர்வைத் தொடர்ந்து எழுத முடியாமை

கருத்து 4 விரிவாக்கம்

64
நண்பனை மீண்டும் ● பத்து ஆண்டுகள் சென்றன
சந்திக்கும் சந்தர்ப்பம் ● மீண்டும் நண்பனைக் காணல்
● பழைய நினைவுகள் திரும்புதல்
● நண்பன் மன்னிப்புக் கேட்டல், செய்த தவறுக்காக வருந்துதல்
● வேறொரு சமயத்தில் தவறுக்கான தண்டனையை
அனுபவித்துவிட்டதாகக் கூறல்
● மன்னித்தல்

முடிவுரை ● நண்பன் செய்த துரோகத்தை மறக்க முடியவில்லை


● மீண்டும் முன்புபோல் இருக்க முடியவில்லை
● இருந்தாலும் முயற்சி செய்கிறேன்
● காயம் ஆறினாலும் வடு மறையாது

கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:

● இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண


நன்னயம் செய்து விடல்

● கெடுவான் கேடு நினைப்பான்


● நல்லவன் வாழ்வான் தீயவன் வீழ்வான்
● எலிக்கு மரணவலியாம் பூனைக்குக் கொண்டாட்டமாம்
● நகமும் சதையும்போல்
● உடலும் உயிரும்போல்
● ஒன்றுக்குள் ஒன்றாக
● இரண்டுபடல்
● மூக்கின்மேல் விரலை வைக்கும் அளவு
● கனவிலும் நினைக்கவில்லை
● துடுப்பு இல்லாத படகுபோல்
● உலகமே இடிந்து என் தலையில் விழுந்தது
● எதிர்காலமே இருண்டுபோனது

65
● துளியளவும் கலங்கவில்லை
● நினைவலைகள் பின்நோக்கி
● மனத்திரைமுன் நிழலாடியது
● மன்னிப்புக் கேட்டு மன்றாடினான்
● மன்னிப்போம் மறப்போம்

அருஞ்சொற்பொருள்

தழும்பு வடு

குறுக்கிடுகிறது இடையில் வருவது

வாக்களித்தல் சத்தியம் செய்தல்

மரண இறப்பு

துடுப்பு படகை ஓட்டுவதற்குப் பயன்படும் கருவி (oars)

துளி சிறிதளவு

மன்றாடி கெஞ்சிக் கேட்டு

24. நீ பெருவிரைவுப் போக்குவரத்து இரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது நடந்த ஒரு


சம்பவம் உன்னை வருத்தமடையச் செய்தது. அது என்ன சம்பவம் என்றும், அது உன்னை
வருத்தமடையச் செய்ததற்கான காரணங்களையும் விவரித்து எழுதுக.

முன்னுரை

➢ அந்தச் சம்பவத்தை நினைத்தாலே மனம் வருந்துகிறது


➢ ஆறு மாதங்களுக்கு முன்னால் நடந்தது
➢ இளையர்களின் போக்கு மனவருத்தத்தைத் தருகிறது
➢ சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்

இடையுரை
66
➢ பள்ளி முடிந்து வீடு திரும்பும் வேளை
➢ எப்போதும் பேருந்தை எடுப்பதே வழக்கம்
➢ ஆனால் அன்று பெருவிரைவுப் போக்குவரத்து இரயிலில் செல்ல நேரிட்டது
➢ எறும்புகூடச் செல்ல முடியாத அளவு கூட்ட நெரிசல்
➢ கூட்டம் குறைந்தது
➢ சற்று நேரம் சென்று இடம் கிடைத்தது
➢ சில இளையர்கள் ஏறினார்கள்
➢ ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தார்கள்
➢ இசையைக் கேட்டுக்கொண்டு கொட்டமடித்தார்கள்
➢ ஒரு முதியவர் ஏறினார்
➢ இடம் இல்லை
➢ தள்ளாடி நின்றுகொண்டிருந்தார்
➢ ஒதுக்கப்பட்ட இடமும் காலி இல்லை
➢ இளையர் தூங்குவது போல் பாவனை செய்தார்
➢ பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஆடவர் எழுப்பி இடம் அளிக்கச் சொன்னார்
➢ இளையர் அவருடன் சண்டையிட்டார்
➢ பிரச்சினை பெரிதானது
➢ முதியவர் கீழே தள்ளிவிடப்பட்டார்
➢ அவரைத் தூக்கினேன்
➢ என் இருக்கையில் அமர செய்தேன்
➢ காயங்கள் இல்லை
➢ இளையர் கூட்டம் வெறுப்புடன் அடுத்த நிலையத்தில் இறங்கியது

முடிவுரை

➢ சம்பவம் மனவருத்தத்தை அளித்தது


➢ இளையர்கள் படித்திருந்தும் பண்பற்றவர்களாக நடக்கிறார்கள்
➢ பிறர் நலன் கருதுவதில்லை
➢ இவர்கள் போன்றவர்களைப் பெருவிரைவுப் போக்குவரத்து நிறுவனம் கண்டித்துத் தக்க தண்டனை
வழங்க வேண்டும்
➢ இரயிலில் முதியோர்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்த நினைவே வருகிறது

இனிய தொடர்கள்

67
➢ நினைவலைகள் பின்நோக்கிச் சென்றன
➢ பசுமரத்தாணி போல் பதிந்திருந்தது
➢ கூட்ட நெரிசலாக இருந்தது
➢ மூச்சு விடக்கூட முடியவில்லை
➢ ஆட்டமும் பாட்டமும்
➢ கூச்சலும் கும்மாளமும்
➢ மற்றவர்களைக் கண்டும் காணாததைப்போல்
➢ தள்ளாடித் தள்ளாடி
➢ தூங்குபவனை எழுப்பலாம், தூங்குவதைப்போல் நடிப்பவனை எழுப்ப முடியாது
➢ கோபம் தலைக்குமேல் ஏறியது
➢ கைகளை முறுக்கிக்கொண்டு
➢ அடிபட்ட பூனைபோல் துவண்டு விழுந்தார்
➢ எகிறிக்கொண்டு வந்தார்கள்
➢ கைத்தாங்கலாகத் தூக்கி
➢ நெஞ்சம் குமுறியது
➢ புண் ஆறினாலும் வடு மறையாது

அருஞ்சொற்பொருள்

ஒதுக்கப்பட்ட தனியாக வைக்கப்பட்ட (reserved)

கொட்டமடித்தார்கள் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்

பாவனை நடிப்பு

தக்க சரியான

முறுக்கிக்கொண்டு மடக்கிக்கொண்டு

எகிறிக்கொண்டு சண்டைபோடுவதற்குத் தயாராகிக்கொண்டு

கைத்தாங்கலாக கையைப் பிடித்து

குமுறியது வேதனை அடைந்தது

வடு தழும்பு

68
தொகுதி 9

Model Compo - மாதிரிக் கட்டுரை

25. ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியத்தைப் பற்றியும், அவற்றைக்


கடைப்பிடிப்பதற்கான வழிமுறைகளையும் எழுதுக.

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது காலங் காலமாகக் கூறப்பட்டு வரும் ஒரு பழமொழி.
ஆரோக்கியம் என்பது வெறும் உடல் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல, மனமும் அதில் அடங்கியிருக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் சராசரி ஆயுள் 20,000 நாட்கள் மட்டுமே என்று கூறுவர். நாம் வாழும் நாளில்
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் இறுதி மூச்சு வரை உறுதியான உடலோடும் மகிழ்ச்சியான
மனத்தோடும் வாழலாம். இக்கட்டுரையின் வழி ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியத்தைப் பற்றியும்,
அவற்றைக் கடைப்பிடிப்பதற்கான சில வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதவி செய்யக்கூடியவை எவை என ஒவ்வொருவரும் தெரிந்து


வைத்திருத்தல் நல்லது. நல்ல உணவுப் பழக்க வழக்கங்களும் உடலைக் கட்டாக வைத்திருக்கக்கூடிய முறையான
உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதலும், தீயபழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருத்தலும், உடலையும் மனத்தையும்
அமைதியாக வைத்திருத்தலும் நம்மை வாழுங்காலம் வரை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

வாழ்க்கை என்பது நமக்குக் கடவுள் அளித்த வரம். அந்த வாழ்க்கையைச் செம்மாந்து வாழ நமக்கு உடல்
மிகவும் அவசியம். அல்லவா? ‘சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்!’ ‘உடல் நன்றாக இருந்தால் தானே
நம்மால் வாழ்க்கை இலக்குகளை எட்ட முடியும்?’ பத்து அகவைக்குள் கண்ணாடியும், இருபதிற்குள் இருமல் நோயும்,
முப்பதில் மூச்சு முட்டுதலும், நாற்பதுக்குள் நரம்பு தளர்வதும், ஐம்பது வயதிற்குள் வாழ்க்கையே முடிந்து போவதும்
எதனால்? ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றாமல் இருப்பதால்தான். நல்ல உணவுப் பழக்க
வழக்கங்களை நாம் மேற்கொள்ள வேண்டுமானால், நாம் அதிகமான காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும்.
நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உண்ணும்போது நம் உடலில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவு குறைகிறது.
அரிசியின் அளவைக் குறைத்து உண்ணுவதோடு, விரைவு உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். ‘அமிர்தமே
ஆனாலும் அளவோடு உண்’ என்ற பெரியோரின் மொழிப்படி எவ்வளவு விருப்பமான உணவு என்றாலும் அதனை
அளவோடு உண்ண வேண்டும். நம் உழைப்புக்குத் தகுந்த கலோரிகள் தரும் உணவை உண்டு, அளவுக்கு அதிகமான
இனிப்பையும், எண்ணெயில் பொரித்த உணவுகளையும் தவிர்த்துச் சரிவிகித உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள
வேண்டும்.

நம் உடல் சீராக இயங்குவதற்கும், மூப்பு சீக்கிரம் வராமல் இருப்பதற்கும் மூன்று முறையாவது உடற்பயிற்சி
செய்ய வேண்டும். உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்ல முடியாதோர் மிதிவண்டி ஓட்டலாம், நடைப்பயிற்சி
மேற்கொள்ளலாம், நீச்சலில் ஈடுபடலாம். யோகாசனம் போன்றவை நம்மை இளமையாக வைத்துக் கொள்ள
உதவுவதோடு, உடலுறுப்புகள் சீராக இயங்குவதற்கும் துணை செய்யும். இரவு நேரத்தில் அதிகமாகக் கண்விழித்துத்
தொலைக்காட்சி பார்ப்பதோ, கணினித் திரையின் முன் அமர்ந்திருப்பதோ நம் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த

69
வகையிலும் உதவி செய்யாது. நம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிகமான தூக்கம் எவ்வாறு இடும்பை தருகிறதோ
அது போல மிகக் குறைவான தூக்கமும் துன்பத்தைத் தந்துவிடும். அதனால், உள்ளத்துக்கும் உடலுக்கும் மிதமான
ஓய்வைக் கொடுக்க வேண்டும்.

சிங்கப்பூர் போன்ற பரபரப்பான சூழலில் வாழுவோர் இயந்திர வாழ்க்கையில் சிக்குண்டு எதற்கெடுத்தாலும்


நேரமில்லை நேரமில்லை என்று புலம்புகின்றனர். குடும்பத்தையும் மறந்து, தூக்கத்தையும் துறந்து, பொழுது
போக்கையும் புறக்கணித்துப் பணம் ஈட்டுவதை மட்டுமே இலக்காக வைத்திருக்கின்றனர். மனத்திற்கு மகிழ்வூட்டும்
எந்த நடவடிக்கைகளிலும் இவர்களால் ஈடுபட முடியாததால் மனஉளைச்சல் இவர்களைச் சூழ்ந்துகொள்கிறது.
இதனால் சலிப்பு, வெறுப்பு, கோபம் மட்டுமே இவர்களுக்கு மிஞ்சி, உயர்இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு நோய்
என்று பல உயிர்க்கொல்லிகள் இவர்களைத் தாக்கி, உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும்
சீர்குலைக்கின்றன.

இத்தகையோர் நல்ல பொழுது போக்குகளை மேற்கொண்டு மன உளைச்சலைப் போக்கும் நடவடிக்கைகளில்


ஈடுபடவேண்டும். நல்ல இசையைக் கேட்டு மனத்தை அமைதியாக வைத்துக் கொண்டாலே நம் உடலின்
ஆரோக்கியம் மேம்படும். தேவைக்கு அதிகமான உழைப்பை விட்டுவிட்டு அந்தப் பொன்னான நேரத்தை நல்ல
நண்பர்களுடனோ, குடும்ப உறுப்பினர்களுடனோ கழிக்கலாம். அல்லது மற்றவர்களுக்குச் சேவையாற்றும் சமூகத்
தொண்டுகள் புரியலாம். இவ்வாறு செய்யவது மனத்திற்குத் திருப்தியைக் கொடுப்பதோடு, நம் உடலையும்
ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

இயற்கை வளம் இல்லாது மனித வளத்தை மட்டுமே நம்பியுள்ள நம்நாட்டில் ஒவ்வொரு மனிதனின்
ஆரோக்கியமும் நாட்டுக்கு வளம் சேர்க்கும் மூலப்பொருள் என்பதை உணர்தல் வேண்டும். இதுவே நம் சிங்கப்பூரின்
உயிர்மூச்சாக இருப்பதனால் தம் மக்களை இளம் வயதிலில் இருந்தே காத்திட அது திட்டம் தீட்டி, செயற்பட்டும்
விட்டது. பாலர்பள்ளி முதல் உயர்கல்வி நிலையங்கள் வரை இருக்கும் சிற்றுண்டிச்சாலைகளில் ஆரோக்கியமான
உணவு வகைகளே விற்கிறார்கள். கொழுப்பு நிறைந்த உணவு, இனிப்புப் பலகாரங்கள், இனிப்புப் பானங்கள், பொரித்த
உணவுகள் போன்றவை விற்பதில்லை. அதனோடு மட்டுமில்லாமல், மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகள்
கட்டாயமாக நடத்தப்படுகின்றன. இதற்கும் மேலாக, ஆண்டுதோறும் மாணவர்களின் உடற்சோதனையும், பல்
சோதனைகளும் மருத்துவர்களால் நடத்தப்படுகின்றன. சுத்தமாகவும் சுகாதாரமாகவும் எவ்வாறு இருப்பது என்பதை
ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் பாடங்களோடு சேர்த்து மாணவர்களுக்கு ஊட்டுகிறார்கள்.

மாணவர்களுக்கு மட்டும் அல்லாது, பெரியவர்களுக்கும் நமது அரசாங்கம் ஆரோக்கிய விழிப்புணர்வை


அவ்வப்போது ஊடகங்கள் மூலமும், அறிவிப்புச் சுவரொட்டிகள் மூலமும் ஏற்படுத்துகின்றன. இப்பழக்க
வழக்கங்களை நாம் வாழ்க்கை முறையாக்கிக்கொண்டால் புகைமூட்டம், தொற்று நோய்கள் போன்ற இடர்களை நம்
நாடு எதிர்கொள்ளும்போது நம் ஆரோக்கியம் எவ்வித நிலையிலும் பாதிக்காது. எனவே, நாம் வீட்டிலும் சரி,
வெளியிலும் சரி, சுகாதாரமான பழக்கங்களை மேற்கொண்டு எப்போதுமே சுகமாக இருப்போம்.

இளமையிலேயே புகை பிடித்தலும், மது அருந்துதலும் நம்மை இருபுறமும் கை பிடித்துக் கல்லறைக்கு


அழைத்துச் சென்று விடும் பழக்கங்கள் ஆகும். பிறந்தவர் ஒருநாள் சாகத்தானே வேண்டும் போன்ற தத்துவங்களைப்
பேசாமல், ‘புகை நமக்குப் பகை’ என்று வாழவேண்டும். மது அருந்தினால் உடல் தள்ளாடுவதைப் போல நம்
ஆயுளும் தள்ளாடிவிடும் என்பதை உணர்ந்து மது இல்லாத வாழ்க்கை வாழவேண்டும்.

70
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு

உடலுக்குத் தேவையில்லாத உணவை உண்ண மறுத்து வாழ்ந்தால் உயிருக்குத் துன்பமில்லை என்று


வள்ளுவர் கூறியதை நினைவில் கொண்டு அருமையாகக் கிடைத்த மனிதப் பிறவியைப் போற்றிப் பெருமையான
வாழ்க்கை வாழ்தல் வேண்டும்.

‘பணம் போனால் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் உடல் போனால் சம்பாதிக்க முடியாது’ என்று
கூறுவார் உண்டு. உண்மைதான். உடல்தான் பணம் சம்பாதிக்க மூலதனம். எனவே, அதைப் பத்திரமாகப்
பார்த்துக்கொள்ளுதல் நம் கடமையாகும். வந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்னும் மனப்பான்மையிலிருந்து
வெளியேறி, வருமுன் காப்போம் என்னும் கொள்கையுடன் ஒவ்வொருவரும் இருந்து, நம் உடலையும், மனத்தையும்
ஆரோக்கியமாக வைத்துக்கொள்வோமாக.

அருஞ்சொற்பொருள்

இறுதி மூச்சு மரணம்

கட்டாக உறுதியாக

செம்மாந்து பெருமையுடன்

அகவைக்குள் வயதிற்குள்

அமிர்தமே (புராணத்தில்) தேவர் உலகத்தில் உள்ள


சாவா மருந்தே

மூப்பு முதுமை

இடும்பை துன்பம்

ஊறுபாடு துன்பம்

71
பயிற்சி வினா 26 மற்றும் 27
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

26. உனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தையும், அதன்மூலம் நீ கற்றுக்கொண்ட படிப்பினையையும்


விளக்கி எழுதுக.

முன்னுரை விளக்கம்

● அனுபவங்கள் பலவிதம்
● சில இனிப்பானவை, சில கசப்பானவை
● எல்லாம் நமக்குப் பாடம் கற்பிக்கத் தவறுவதில்லை
● அனுபவங்கள் நமது அறிவை ஆழமாக்குகின்றன

கருத்து 1 விரிவாக்கம்

கசப்பான அனுபவம் ஏற்படக் ● கல்விச் சுற்றுலா


காரணம் ● அயல்நாட்டுக்குப் பயணம்
● பதினைந்து மாணவர்கள் சென்றோம்
● மிகவும் உற்சாகமாக இருந்தது
● ஆசிரியர் போகப் போகும் இடங்களைப் பற்றிக் கூறினார்
● ஆவலுடன் இருந்தோம்

கருத்து 2 விரிவாக்கம்

கசப்பான அனுபவம் ● வரலாற்றுச் சமய வழிபாட்டு இடம் ஒன்றிற்குச் செல்லுதல்


ஏற்படக்காரணம் ● அங்கே முறையான உடைகள் அணிந்து செல்லுதல்
(தொடர்ச்சி) வேண்டும்
● அலட்சியப்போக்கு
● அரைக்கால் சட்டையும், டீ சர்ட்டையும் அணிந்திருத்தல்
● அதிகாரிகள் உள்ளே விடத் தடை விதித்தல்

கருத்து 3 விரிவாக்கம்

கசப்பான அனுபவம் ஏற்படக் ● ஆசிரியர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்


காரணம் ● பலனில்லை
(தொடர்ச்சி) ● வெளியே நிற்கும்படி கூறினர்
● அவமானம்
● வெளியில் நிற்கும் நிலை
● போகிற வருகிற மக்கள் வேடிக்கை பார்த்தல்

72
● சிலர் சிரித்தனர்
● சிலர் அவதூறாகப் பேசுதல்

கருத்து 4 விரிவாக்கம்

பிரச்சினையின்மூலம் ● ஆசிரியரின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்


கற்றுக்கொண்ட பாடம் ● அலட்சியப் போக்குக் கூடாது
● விதிமுறைகளையும் நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும்
● பள்ளிக்கு நற்பெயர் வாங்கித்தர வேண்டும்

முடிவுரை ● தொடக்கத்தில் கோபம் வந்தது


● சிந்தித்துப் பார்த்தல்
● படிப்பினையாக இருந்தது
● மற்றவர்களுக்கும் நல்ல பாடமாக அமைந்தது

கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:

● வாழ்க்கை என்பது ஒரு புத்தகம் அதில்


ஒவ்வொரு ஏடும் ஓர் அனுபவம்
● அனுபவம் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
● வானில் சிறகடித்துப் பறந்தோம்
● கண்கொள்ளாக் காட்சியாக
● முகத்தில் கரிபூசினாற்போல்
● அனுமதி நிராகரிக்கப்பட்டது
● காலில் விழாத குறையாக
● கையைக் காலாக நினைத்துக்கொண்டு
● ஊர்மக்களின் கண் எல்லாம் என்மீது
● முகத்தில் எப்படி விழிப்பது
● இம்மியும் அசையவில்லை
● நடப்பதெல்லாம் நன்மைக்கே

அருஞ்சொற்பொருள்

சமய வழிபாடு இன / மத அடிப்படையில் நடத்தப்படும் பூஜைகள், நடவடிக்கைகள்


தடைவிதித்தல் மறுத்தல்
அவதூறாக கேவலமாக

73
கரிபூசினாற்போல் அவமானப்படுத்தியதுபோல்
நிராகரிக்கப்பட்டது ஏற்றுக்கொள்ளப்படவில்லை

27. உன் நீண்ட நாள் பழக்கமொன்று மாறுவதற்குக் காரணமாக அமைந்த சம்பவத்தையும்,


அதன்மூலம் நீ கண்ட மாற்றத்தையும் விவரித்து எழுதுக.

முன்னுரை

➢ எல்லாருக்கும் தனிப்பட்ட வழக்கங்கள் உண்டு


➢ வீட்டிலோ, நண்பர்களிடமோ, திரைப்படத்தைப் பார்த்தோ கற்றுக்கொள்கிறோம்
➢ சில நல்ல பழக்கங்கள், சில கெட்ட பழக்கங்கள்
➢ கெட்ட பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்
➢ நமக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்

இடையுரை

➢ எந்தப் பொருளையும் எடுத்த இடத்தில் திரும்பவும் வைக்க மாட்டேன்


➢ பயன்படுத்திய பிறகு வேறு எங்காவது வைத்துவிடுவேன்
➢ சோம்பல் மிகுதியால் அவ்வாறு செய்யும் பழக்கம்
➢ சிறுவயது முதல் இருந்தது
➢ பெற்றோர்கள் பலமுறை கண்டித்தும் தண்டித்தும் விட்டனர்
➢ அவர்களின் அறிவுரைகளுக்குச் செவிசாய்க்கவில்லை
➢ ஆசிரியரும் பலமுறை என் பொறுப்பின்மையைக் கண்டித்துள்ளார்
➢ அவரின் அறிவுரையையும் பொருட்படுத்தவில்லை
➢ அன்று ஒரு நாள் கடைக்குச் செல்ல வீட்டுச் சாவியைப் பயன்படுத்திக் கதவைத் திறந்தேன்
➢ மறுபடியும் வீட்டிற்கு வந்தவுடன் சாவியை அதன் இருப்பிடத்தில் மாட்டி வைக்கவில்லை
➢ எப்போதும்போல் மாற்றிடத்தில் வைத்துவிட்டேன்
➢ திடீரென என் பாட்டிக்கு இருமல் ஏற்பட்டது - அளவுக்கு அதிகமாக இருமினார்
➢ நெஞ்சு வலிக்கிறது என்று கூறினார்
➢ வீட்டில் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை
➢ தாயாரின் பணியிடத்திற்குத் தொலைபேசிமூலம் அழைத்தேன்

74
➢ அவர் அருகில் உள்ள மருந்தகத்திற்குப் பாட்டியை என்னை அழைத்துப்போகச் சொன்னார்
➢ பாட்டியை மருந்தகத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் புறப்பட்டேன்
➢ பாட்டியும் தயாராக இருந்தார்
➢ கதவைத் திறப்பதற்குச் சாவியை எடுக்கச் சென்றேன் – ஆனால், அதை வைக்கும் இடத்தில் அது இல்லை
➢ வீடெங்கும் தேடினேன் - காணவில்லை - கதிகலங்கிப் போனேன்
➢ பாட்டியின் நெஞ்சு வலி அதிகமாகிக்கொண்டே சென்றது
➢ பதற்றம் என்னை ஆட்டிப் படைத்தது
➢ தாயாரை அழைத்தேன் - அவர் உடனடியாக விரைந்துவந்தார்
➢ அவரிடம் இருந்த மற்றொரு வீட்டுச் சாவியைப் பயன்படுத்தி வீட்டைத் திறந்தார்

முடிவுரை
➢ தாயார் என்னைத் திட்டினார்
➢ என் தவற்றை நான் உணர்ந்தேன்
➢ என் கெட்ட பழக்கத்தை அன்றிலிருந்து மாற்றிக்கொண்டேன்
➢ இனிமேலும் எடுத்த பொருளைப் பயன்படுத்திய பிறகு அதன் இருப்பிடத்திலேயே வைப்பதென
உறுதிபூண்டேன்

இனிய தொடர்கள்

➢ அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும்


➢ அட்டை போல் ஒட்டிக்கொண்டது
➢ செவிடன் காதில் ஊதிய சங்குபோல்
➢ மாற்றம் ஒன்றே மாறாதது
➢ தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
➢ இளம்கன்று பயம் அறியாது
➢ சுட்டால்தான் தெரியும் நெருப்புச் சுடும் என்று
➢ பயத்தில் நா தழுதழுத்தது
➢ செய்வதறியாது திகைத்து நின்றேன்

75
➢ மூலைமுடுக்குகளில் எல்லாம் தேடினேன்
➢ பட்டால்தான் தெரியும் கெட்டால்தான் புரியும்

அருஞ்சொற்பொருள்

பொறுப்பின்மை பொறுப்பு இல்லை

பொருட்படுத்தவில்லை முக்கியத்துவம் தரவில்லை

மாற்றிடத்தில் வேறு இடத்தில்

அருகில் இருக்கும் சிறிய


மருந்தகத்திற்கு
மருத்துவமனை (clinic)

கதிகலங்கி ஒரு நிலையில் இல்லை

தழுதழுத்தது திக்கியது

தொகுதி 10

Model Compo - மாதிரிக் கட்டுரை

28. நண்பர்களின் செல்வாக்கு ஒருவரது வாழ்வில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்னும்


கருத்தை நீ ஏற்றுக் கொள்கிறாயா? ஏன்?

நண்பர்களின் செல்வாக்கு ஒருவரது வாழ்வில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்னும் கருத்தை


நான் முழுவதும் ஏற்றுக் கொள்கிறேன். காரணம், மனிதர்கள் பணமின்றிக்கூட வாழ்ந்துவிடுவர். ஆனால், அவர்கள்
நண்பர்களின்றி வாழ்ந்துவிட முடியாது. நண்பர்களே பல சமயங்களில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும்
பெரும்பங்கு வகிக்கிறார்கள். எனவே, அப்படிப்பட்ட நண்பர்களை நாம் மிகவும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்து நட்புக்
கொள்ள வேண்டும் என்பதால்தான் நட்பிற்கு மட்டுமே ஆறு அதிகாரங்களை ஒதுக்கியுள்ளார் திருவள்ளுவர்.

“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து


அகநக நட்பது நட்பு”

76
என்று நண்பர்களுக்கான இலக்கணத்தைத் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளது திருக்குறள்.
வெளித்தோற்றத்தில் மட்டுமே சிரிக்காமல் அன்பால் அகமும் முகமும் மலரப் பழகுவதே சிறந்த நட்பு என்பது இதன்
பொருள். ‘உறவு தோற்கும்; பகைமை காட்டும்; நட்பு மட்டுமே பசுமை காட்டும்; ஏணிப்படியாய் என்றும் இருக்கும்’
என்றெல்லாம் புகழப்படுகின்ற நட்பு, ‘கூடா நட்பாக’ அமைந்துவிட்டால் கேடும் செய்துவிடும்.

ஒருவருடைய வாழ்வில் நண்பர்களுக்கு உள்ள இடம் மகத்தானது. ஏனென்றால், பெற்றோர்கள் தங்கள்


பிள்ளைகளின் வாழ்வில் சாதிக்காததைக்கூட, நண்பர்கள் சாதித்து விடுகிறார்கள். பேசினால் எல்லாருக்கும் புரியும்.
ஆனால் நம்முடைய மௌனங்கள் பேசும் மொழி நண்பனுக்கு மட்டும் தான் புரியும். ஆனால், நண்பர்களால் நலமும்
ஏற்படும், கேடும் ஏற்படும். அதனால் தான், ‘தேர்ந்தெடுத்து நண்பனைத் தேர்வு செய். தேர்வு செய்தபின் அவன் மேல்
ஐயப்படாதே’ என்று திருவள்ளுவர் கூறுகிறார். தீயவனைக்கூட நல்லவனாக மாற்றக்கூடிய ஆற்றல் நண்பர்க்கு
உண்டு.

“அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்


அல்லல் உழப்பதாம் நட்பு”

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து ஒருவனை விலக்கி நல்ல வழியில் நடக்கச்செய்து, அழிவு வந்த
காலத்தில் உடனிருந்து துன்பப்படுவது சிறந்த நட்பு என்பது இக்குறளின் பொருள்.

கல்வியில் மிகச் சிறந்து விளங்கும் ஒரு நல்ல மாணவனை மோசமான நட்பு வீண் பொழுது போக்கிலும்,
திரைப்படத்திலும் ஈர்ப்புக் கொள்ள வைக்கிறது. நம் பலவீனத்தைப் புரிந்துகொண்டு பாதாளத்தைப் பஞ்சு
மெத்தைபோல் அலங்காரம் செய்து அதில் நம்மைத் தள்ளிவிடும். கொதிக்கும் எண்ணெயில் விழுந்ததுபோல் நாம்
சொல்லொண்ணாத் துன்பத்தில் பரிதவிக்கும்போது கைகொடுக்காமல் கைதட்டிச் சிரிக்கும். அப்போதுதான் தீய
நண்பர்களின் சுயரூபம் நமக்குத் தெரியும். உண்மையான நண்பன் நம்மை ஒருபோதும் அழிவுப்பாதைக்குச்
செல்லவிடமாட்டான். அப்படி அழைத்துச் செல்பவன் உண்மையான நண்பனாக இருக்க மாட்டான். ஒருவனை
மனம்போன பாதையில் போகவிட்டு மது, புகை இவற்றுக்கு அடிமைப்படுத்தும் ஒருவன் உங்களின்
அழிவுப்பாதையின் வழிகாட்டி ஆவான்.

‘அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்’ என்பது மூத்தோர் வாக்கு. நமக்குத் துன்பம் வரும்போதுதான்
பொய்யான நண்பர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம் என்று கிரேக்கத் தத்துவ ஞானியான
அரிஸ்டாட்டிலும் கூறியுள்ளார். நண்பனுக்குத் துன்பம் வரும்போது ‘உடுக்கை இழந்த கையைப்போல்’ விரைந்து
சென்று அவனுக்கு உதவ வேண்டும் என்று பொய்யாமொழியார் பகர்கிறார்.

மாறாக, நண்பனின் பிரச்சினைகளைக் கண்டு ‘துண்டைக் காணோம், துணியைக் காணோம்’ என்று ஓடுபவன்
எப்படி நம் வாழ்நாள் முழுவதும் நம்முடன் துணையிருப்பான்? நல்ல நண்பர்கள் யாரென்று தொடக்கத்திலேயே
தெரிந்துகொள்வது சிரமம்தான். ஆனால், அவர்களுடன் பழகும்போது நாம் எச்சரிக்கையாக இருந்து அவர்களின்
பழக்க வழக்கங்கள், நடத்தை ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டும். பொருத்தமில்லாத நண்பர்களைக்
கைகழுவிவிட்டு, உண்மையான நண்பர்களை மட்டுமே நம்முடன் இணைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில்,
அவர்களின் ஆதிக்கம் எல்லை மீறிவிட்டால் அதிலிருந்து விடுபடுவது முள்ளில் விழுந்த சேலையாகிவிடும்.

77
‘ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல’, நல்ல நட்பினால் வாழ்வில் முன்னேற்றம்
கண்டவர்களும் இப்பாரில் உண்டு. நட்பினால் முன்னேறியவர்களில் முக்கியமான ஒருவரைக் குறிப்பிட
வேண்டுமானால், நம் எல்லோருக்கும் தெரிந்த, கணினி உலகை ஆட்டிப் படைக்கும் பில்கேட்ஸ் அவர்களைக்
கூறலாம். விண்டோஸ் என்னும் செயலியை உருவாக்கிய பில்கேட்ஸ், உலகின் தலை சிறந்த முன்னணி நிறுவனத்தைத்
தாம் நிறுவியதற்குத் தம்முடைய நண்பனான பால் ஆலென் தொடக்கக் காலத்தில் செய்த உதவிகளே காரணம் எனக்
கூறியுள்ளார். இவ்வாறு, சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் தங்களின் நண்பனின் உதவியால் தான்
இந்த நிலையை அடைந்துள்ளோம் என்று நினைவு கூரும் போது நட்பின் வலிமையை நாம் நன்கு உணரலாம்.

‘உன் நண்பனைப் பற்றிக் கூறு. உன்னைப் பற்றி நான் கூறுகிறேன்’ என்னும் பொன்மொழி, நம்முடைய
குணநலன்கள், நடத்தை போன்றவற்றை நிர்ணயிப்பதே நாம் தேர்ந்தெடுக்கும் நட்புதான் என்பதை உள்ளங்கை
நெல்லிக்கனியாக விளக்குகின்றது. பெற்றோர்களைவிட நம்மோடு அதிக நேரம் செலவு செய்பவர்கள் நம் நண்பர்கள்
தாம். உளவியல்படி, நாம் யாருடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறோமோ, அவர்களின் பழக்க வழக்கங்களையும்,
போக்கையும் நாமும் நம்மை அறியாமல் உள்வாங்கிக் கொள்கிறோம். ஒரு திரைப்படத்தைப் பலமுறை
பார்க்கும்போது அதிலுள்ள வசனங்களை நாமும் பேச ஆரம்பித்துவிடுகிறோம். அதுபோல, நம் நண்பர்கள் செய்யும்
செயல்களைச் சில நாட்கள் கழித்து நாமும் செய்யத் தொடங்கிவிடுகிறோம். நற்செயல்களாக இருந்தால் பரவாயில்லை.
நம்மை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் செயல்களாக இருந்தால்? நினைத்துப் பார்த்தாலே குலை நடுங்குகிறது
அன்றோ?

கார்களை உற்பத்தி செய்த ஹென்றி போர்டு, ‘எவன் என்னுள் உள்ள சிறந்தவற்றை வெளியில் கொண்டு
வருகிறானோ அவனே என் சிறந்த நண்பன்’ என்று கூறினார் (My Best friend is the one who brings out the best in
me) ஏனென்றால், நம்மிடம் அத்தகைய பெரும் செல்வாக்கு நண்பனுக்கு இருக்கிறது. மகாபாரதத்தில் கூட கொடுஞ்
செயல்களைப் புரியும் துரியோதனனையும் நல்லவனாகக் காட்டியது அவன் கர்ணன் மீது கொண்ட உண்மையான
நட்புதான்.

வெட்டவெளியில் கிடக்கும் பாறாங்கல்லை அழகுமிகு சிற்பமாகச் செதுக்கும் வல்லமை நட்புக்கு


இருக்கின்ற காரணத்தால் நண்பர்களும், அவர்கள்மேல் கொண்ட நட்பும் பெருஞ்செல்வாக்குப் பெற்றதாக உள்ளது.
அது இணையம்மூலம் ஏற்படும் ஊர்பேர் தெரியாத நட்பாக இருந்தாலும் சரி, பத்து வருடங்கள் நீடித்திருக்கும்
நட்பாக இருந்தாலும் சரி, அதன் செல்வாக்கு ஒருவருக்குப் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது
வெள்ளிடைமலை.

அருஞ்சொற்பொருள்

அகமும் உள்ளமும்

கேடும் தீங்கும்

மகத்தானது மிகப் பெரியது

ஈர்ப்பு கவர்ச்சி

78
நினைவுகூரும்போது ஞாபகப்படுத்தும்போது

சொல்லொண்ணா சொல்ல முடியாத

சுயரூபம் உண்மையான தோற்றம்

ஆதிக்கம் செல்வாக்கு

வெட்டவெளியில் வெளிப்புறத்தில்

79
பயிற்சி வினா 29 மற்றும் 30
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

29. நீ செய்யாத ஒரு குற்றத்திற்காக உன் மீது பழி சுமத்தப்பட்டது. அது எவ்வாறு நடந்தது என்றும்,
அதன் மூலம் நீ எவ்வாறு பாதிக்கப்பட்டாய் என்றும் விவரித்து எழுதுக.

முன்னுரை விளக்கம்

● அந்தச் சம்பவம் இன்னும் என் நினைவை விட்டு அகலாது


● அன்று தீர விசாரித்திருக்க வேண்டும்
● எனக்கு ஏற்பட்டதுபோல் மற்றவர்க்கு ஏற்படக்கூடாது
● அதனால் ஏற்படும் பாதிப்புகள் நம் எதிர்காலத்தையே
பாதித்துவிடும்

கருத்து 1 விரிவாக்கம்

சம்பவம் எவ்வாறு நடந்தது? ● தீய நண்பர்களின் சகவாசம்


● தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல்
● இளைய மாணவர்களைப் பள்ளியில் கேலி செய்தல்
(bullying)
● பள்ளியில் எல்லாரும் உன்னைக் கண்டால் பயப்படுதல்
● கட்டுப்படுத்த ஆளில்லாமல் பயமின்றித் திரிதல்

கருத்து 2 விரிவாக்கம்

சம்பவம் எவ்வாறு நடந்தது ● பள்ளி உணவகத்தில் கலவரம்


(தொடர்ச்சி) ● நீ உணவகத்தில் இல்லை
● நண்பர்கள் மற்றொரு மாணவனைக் கிண்டல் செய்தனர்
● பிரச்சினை பெரிதானது
● கைகலப்பு
● தலைமையாசிரியரால் கட்டுப்படுத்த இயலவில்லை
● காவலர்கள் வருகை

கருத்து 3 விரிவாக்கம்
80
நீ எவ்வாறு பிடிபட்டாய்? ● விஷயம் கேள்விப்பட்டு நீ விரைந்தாய்
● தீய நண்பர்கள் உன்னையும் இழுத்துவிட்டனர்
● காவலர்கள் உன்னையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்
சென்றார்கள்
● எவ்வளவோ எடுத்துக்கூறியும் விடவில்லை
● யாரும் உனக்காகப் பேசவில்லை

கருத்து 4 விரிவாக்கம்

ஏற்பட்ட பாதிப்பு ● இளையர் சீர்த்திருத்தப் பள்ளி


● செய்யாத குற்றத்திற்காகத் தண்டனை அனுபவித்தல்
● நல்ல பாடம் கற்றல்
● தீய நண்பர்களின் நட்பைத் துறந்துவிடல்

முடிவுரை ● படிப்பு பாதிக்கப்பட்டது


● மனஉளைச்சல் ஏற்பட்டது
● சமுதாயம் வேறுபார்வையில் நோக்கியது

கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:

● சமன்செய்து சீர்தூக்குங்கோல்போல் அமைந்து ஒருபால்


கோடாமை சான்றோர்க் கணி
● பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்
● பட்டப்பகல் திருடனைப் பட்டாடை மறைக்குது, ஒன்றுமில்லா பஞ்சினைத் திருடனென்று உதைக்குது
● நொங்கு தின்னவன் ஓடிப்போயிட்டான் அதை நோண்டித் தின்னவன் அகப்பட்டுட்டான்
● நானே ராஜா நானே மந்திரி
● குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
● தீதும் நன்றும் பிறர் தர வாரா
● நட்டாற்றில் விட்டுவிட்டனர்
● நம்பிக்கை மோசம் செய்துவிட்டனர்
● அழுகிய பழங்களுடன் வைத்தால் நல்ல கனியும் அழுகித்தான் போகும்
● எய்தவன் இருக்க அம்பை நோவது அறிவுடைமையா?
81
● கெஞ்சிக் கதறினேன்
● அழுது புரண்டேன்
● காதுகள் அடைத்துவிட்டன
● இருட்டறைக்குள் என் எதிர்காலமே இருண்டுபோனது
● கெடுவான் கேடு நினைப்பான்
● புதிய இலையாகத் திரும்பினேன்

அருஞ்சொற்பொருள்

அகலாது நீங்காது

தீர முழுமையாக

கலவரம் குழப்பம்

கைகலப்பு கைச்சண்டை

சீர்திருத்தப் பள்ளி ஒழுங்கினைக் கற்பிக்கும் பள்ளி

துறந்துவிடல் விட்டுவிடுவது

சமுதாயம் மக்கள்

பட்டப்பகல் நடுப்பகல்

சுற்றம் சுற்றத்தார்

வாரா வராது

நட்டாற்றில் நடு வழியில்

எய்தவன் விட்டவன்

நோவது துன்பம் விளைவிப்பது

82
30. ‘’தோல்வியே வெற்றிக்கு முதல் படி’’ என்பதை உணர்ந்து நீ வாழ்வில் வெற்றி கண்ட
சம்பவத்தையும், அதன்மூலம் நீ பெற்ற அனுபவத்தையும் விளக்கி எழுதுக.

முன்னுரை

➢ வாழ்க்கை மேடு பள்ளம் நிறைந்தது


➢ எல்லோருக்கும் வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் வரும்
➢ தோல்வி நிரந்தரம் அல்ல - அதுவே வெற்றியின் முதல் படி என்பதை உணர வேண்டும்
➢ முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்
➢ தோல்வியைச் சந்தித்தே நிறைய பேர் வாழ்க்கையில் சாதித்துள்ளார்கள்

இடையுரை

➢ தமிழில் பேசுவதற்கே சிரமப்படுவேன்


➢ வீட்டில் ஆங்கிலத்தில்தான் அதிகம் உரையாடுவேன்
➢ நண்பர்களிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவேன்
➢ தமிழ் பேசுவதில் ஆர்வமும், விருப்பமும் இல்லை
➢ உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றேன்
➢ தமிழ்ப்பாடத்தின் முக்கியத்துவத்தை அறிந்தேன்
➢ ஆனால் தமிழ்ப்பாடத்தில் எப்போதுமே தோல்வி அடைந்தேன்
➢ ஓர் ஆண்டுகூட வெற்றியடையவில்லை
➢ உயர்நிலை நான்கு சாதாரணநிலைத் தேர்வு நெருங்கியது
➢ என் ஆசிரியர் எனக்கு உதவினார்
➢ எனக்கு நிறைய ஊக்கத்தையும், தமிழ்மொழியை மேம்படுத்தும் வழிமுறைகளையும்
தனிப்பட்ட முறையில் கற்றுக்கொடுத்தார்
➢ தோல்வியைக் கண்டு மனம் துவளவேண்டாம் என்றார்
➢ அவர் கூறிய அறிவுரை, ஆலோசனைகளைக் கேட்கத் தொடங்கினேன்
➢ மெல்ல மெல்ல தன்னம்பிக்கை பிறந்தது
➢ வகுப்புத் தேர்வுகளில் சிறிதளவு வெற்றி கிடைத்தது
➢ என்னால் முடியும் என்ற குரல் எனக்குள் கேட்டது

83
➢ முயற்சியைத் தொடர்ந்தேன்
➢ தோல்வி ஏற்படும்போதெல்லாம் காரணத்தை ஆராய்ந்து மீண்டும் முயன்றேன்
➢ தோல்வி படிப்படியாக என்னிடமிருந்து விலகிச் சென்றது
➢ தேசியத் தேர்வு வந்தது
➢ நான் நல்ல மதிப்பெண்களைப் பெற்றேன்
➢ ஆசிரியருக்கு நன்றி கூறினேன்

முடிவுரை

➢ தோல்வியைக் கண்டு மனம் தளரக்கூடாது


➢ அது வெற்றிக்கான வாசல்
➢ அதனைச் சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்
➢ காரணத்தை ஆராய்ந்து செயல்பட்டோமானால் மலையையும் மடுவாக்கலாம்
➢ முயற்சியே தோல்வியைப் போக்கும் அருமருந்து என்பதை உணர்ந்தேன்

இனிய தொடர்கள்

➢ தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்மெய்


வருத்தக் கூலி தரும்
➢ முயற்சி திருவினையாக்கும்
➢ தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா
➢ அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்
➢ வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
➢ முயற்சி திருவினையாக்கும்
➢ வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்
➢ நான் ஆயிரம் முறை தோல்வி அடையவில்லை – வெற்றிக்கான ஆயிரம் வழிகளைக் கண்டுகொண்டேன்
➢ முயலும் வெற்றிபெறும், ஆமையும் வெற்றிபெறும்

ஆனால் முயலாமை என்றுமே வெற்றி பெறாது


84
அருஞ்சொற்பொருள்

துவளவேண்டாம் மனமுடைய வேண்டாம்

மடு தரைமட்டம்

அருமருந்து கிடைப்பதற்குக் கடினமான மருந்து

அல்லல் துன்பம்

முயலாமை முயற்சி செய்யாமை

85
தொகுதி 11

Model Compo - மாதிரிக் கட்டுரை

31. மாணவர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பத்தின் பாரத்தை எவ்வாறு குறைக்கலாம்?

மனிதன் இயந்திரம் அல்ல. அவனுக்கென்று ஓர் எல்லையுண்டு. எவ்வளவுதான் உழைத்தாலும் அது அவனின்
சக்தியை மீறும்போது அவனுக்குப் பாரமாகிவிடுகிறது. பாரம் என்பது அதிகமான சுமையைக் குறிக்கிறது. புத்தகப்பை
முதுகுக்குப் பாரமாக இருந்தால் சற்று நேரம் கீழே இறக்கி வைத்துவிடலாம். கழுத்திற்குச் சங்கிலி பாரமாக இருந்தால்
அதனைக் கழற்றி வைத்துவிடலாம். ஆனால் குடும்பத்திற்குப் பாரம் ஏற்படும்போது அதை எவ்வாறு இறக்கி
வைப்பது? குடும்பத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் பகிர்ந்துகொண்டு ஆளுக்கொரு வேலையைச்
செய்தால் அதனைக் குறைத்துவிடலாம். இக்கட்டுரையில் குடும்பப் பாரத்தைக் குறைப்பதில் மாணவர்களாகிய நமது
பங்கு என்ன? அதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதனைப் பற்றி அலசி ஆராயப் போகிறோம்.

‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்பது பொன்மொழி. இப்பொன்மொழி, குடும்பம் என்பது


பல்கலைக் கழகம் போன்றது என்று எடுத்துரைக்கிறது. பல்கலைக் கழகத்தில் மருத்துவம், அறிவியல், நுண்கலைகள்
எனப் பலவிதமான துறைகள் ஒரே கூரையின் கீழ் இருக்கின்றன. அதுபோன்று ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மை, புரிந்துணர்வு, அன்பு, பாசம், மூத்தோரை மதித்தல், சிக்கனம் போன்ற பலவிதப் பண்புகளைக் குடும்பம்
என்ற பாடசாலையில் கற்றுக்கொள்கிறோம்.

இத்தகைய அரிய பாடசாலையின் ஆசான்களான அன்னையும் பிதாவும் நமக்கு வாழ்க்கையின் எல்லாச்


சௌகரியங்களையும் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அல்லும் பகலும் ஓய்வின்றி உழைக்கிறார்கள்.
இரத்தத்தை வியர்வையாக்கிப் பணத்தை நம் நல்வாழ்விற்காக ஈட்டுகிறார்கள். இப்பணத்தை நாம் அனாவசியமாகச்
செலவிடக் கூடாது. நமக்கு மிகவும் அவசரமாகத் தேவைப்படும் பொருட்களை மட்டும் வாங்க வேண்டும்.
இம்மாதிரியான நேரத்தில் நம்முடைய பெற்றோர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். நம் பெற்றோர்கள்
நாள்தோறும் கடினமாக வேலைசெய்து உழைக்கும் பணத்தை நாம் கரியாக்கக்கூடாது.

சேவல் எழும் முன்பே மாணவர்களாகிய நாம் வைகறையில் எழுந்து பள்ளிக்குப் புறப்படுகிறோம். பின்
பாடங்கள், இணைப்பாட நடவடிக்கைகள் என்று அனைத்தையும் முடித்துவிட்டு மாலையில் கதிரவன் மறைந்த பிறகே
நொந்து நூலாகி வீடு திரும்புகிறோம். பள்ளிக்குச் சென்றுவரும் நமக்கே இந்தக் கதி என்றால் அலுவலகத்திற்குச்
சென்று ஏறியிறங்கி வேலை பார்த்து, முதலாளியிடம் திட்டுகள் வாங்கி, மாலை இரயிலிலும், பேருந்திலும் இருக்கும்
கூட்டத்தில் நசுங்கிப் பிழியப்பட்டு வரும் பெற்றோர்களுக்குக் களைப்பு எந்த அளவு இருக்கும் என்று சற்று
யோசித்துப் பாருங்கள். அதனுடன் அவர்களின் பணி ஓய்ந்துவிடாது. வீட்டுப்பணிகள் வேறு. சமைப்பது, வீட்டைச்
சுத்தம் செய்வது, துணி துவைப்பது, அவற்றை மடிப்பது என்று நீண்டுகொண்டே போகும். இத்தகைய வேளைகளில்
மாணவர்களாகிய நாம் வீட்டுப்பணிகளில் நம் பெற்றோர்களுக்கு உதவிக்கரம் நீட்டலாம். வீட்டைச் சுத்தப்படுத்துவது,
நமக்குத் தேவையானதை நாமே செய்துகொள்வது போன்றவற்றை நாமே கவனித்துக்கொண்டால் பெற்றோர்களுக்கு
ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்கும். வீட்டுப் பொறுப்புகளை நாம் திட்டமிட்டுச் செய்தால் ‘பணிப்பெண்’ என்ற

86
அனாவசிய செலவிற்கு இடமே இருக்காது. பணிப்பெண்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தை மிச்சப்படுத்திச்
சேமித்தோமானால் அவசரக் காலங்களில் அது நமக்கு உதவும்.

‘அன்பினால் ஆகாததும் ஆகும்’ என்னும் பழமொழியின் மூலம் அன்பின் வலிமையை நாம்


ஒவ்வொருவரும் உணர்ந்திருப்போம். வேலையிடத்திலிருந்து மனஉளைச்சலுடன் திரும்பும் நம்முடைய
பெற்றோர்களுடன் பாசமாகவும் அன்பாகவும் பேசவேண்டும். சில வேளைகளில் அவர்களுடைய பிரச்சினைகளை
நம்முடன் பகிர்ந்துகொள்ள இயலாது. இதனைப் புரிந்துகொண்டு அவர்களின் மனப்பாரத்தைக் குறைக்க, “அப்பா!
இன்று அலுவலகத்தில் உங்கள் நாள் எப்படி இருந்தது?” என்று கேட்கலாம் அல்லது அவர்களுக்குத் தேநீர்
தயாரித்து அன்புடன் வழங்கலாம். பெற்றோர்கள் தான் பிள்ளைகளுக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும் என்று
கட்டாயம் இல்லை. பிள்ளைகளும் அவ்வப்போது பணிவிடைகள் செய்யும்போது எந்த பெற்றோரின் மனப்பாரமும்
சூரியனைக் கண்ட பனிபோல் கரைந்துவிடும்.

“ஈன்ற பொழுதிற் பெருதுவக்கும் தன்மகனைச்


சான்றோன் எனக்கேட்ட தாய்”

என்ற குறளுக்கொப்ப, ஒவ்வொரு பெற்றோரின் கனவாக இருப்பது தன் பிள்ளை கற்றோர் போற்றும் சிறந்த
அறிஞனாக வேண்டும் என்பதே ஆகும். இக்கனவினை நிறைவேற்ற இரவுபகல் பாராது உழைத்துப் பிள்ளைகள்
படிப்பதற்கான எல்லா வசதிகளையும் செய்துகொடுக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தேர்வு முடிவுகள் வரும்போது
எந்தப் பாடத்தில் மதிப்பெண்கள் குறைந்திருக்கிறதோ அந்தப் பாடத்திற்கு உடனே துணைப்பாடம் ஏற்பாடு
செய்கிறார்கள். பணம் நம்முடைய படிப்புக்கு எந்த விதமான தடையாகவும் இருக்கக் கூடாது என்பதற்காகவே
இவ்வளவும் செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது, நாமும் நன்றாகப் படிக்க வேண்டும் அல்லவா?. நம்மால்
எவ்வளவு முயற்சி செய்ய முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள் கற்பிக்கும் பொழுது
கவனமாகக் கேட்க வேண்டும். படிக்கும் பருவத்தில் படிப்பு ஒன்றையே இலக்காக வைத்துப் பெற்றோர்களின்
மனப்பாரத்தைக் குறைத்து, நல்லதொரு வேலைக்குச் சென்று குடும்பப் பாரத்தையும் குறைக்க வேண்டும்.

நமக்குத் தம்பி தங்கையர்கள் இருந்தால் அவர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும் பணியை நாம்


எடுத்துக்கொண்டு பெற்றோர்களின் பாரத்தை ஒரு பங்கு குறைக்கலாம். தற்போது துணைப்பாட வகுப்புகளுக்காகக்
கட்டும் தொகை வானத்தைத் தொடுகிறது. இதனைச் சரிகட்ட நாம் நம் நேரத்தை வகுத்துக்கொண்டு நம் தம்பி
தங்கையருக்குப் பாடம் கற்றுக்கொடுக்கலாம், வீட்டுப்பாடங்களில் அவர்களுக்கு உதவலாம். இது பெற்றோர்களின்
பாரத்தை மட்டும் போக்காது, நமக்கும் நம் தம்பி தங்கையருக்கும் இருக்கும் சகோதரத்துவமும் அதிகரிக்கும்.

குடும்பம் என்பது அன்னையும் பிதாவும் மட்டும் கொண்டது அல்ல. அக்கா, அண்ணன், தம்பி, தங்கை என்று
அனைவரையும் கொண்டது. எனவே, அது மகிழ்வுடன் திளைத்திருக்க எல்லாரும் தங்கள் பங்கினை ஆற்ற
வேண்டும். ஒவ்வோர் உறுப்பினரும் தோள்கொடுத்துக் குடும்பத்தினைத் தாங்கும்போது, அது எந்நாளும் பூமியை
நோக்கி விழாது.

அருஞ்சொற்பொருள்

87
பாரமாகிவிடும் சுமையாகிவிடும்

ஆசான் ஆசிரியர்

சௌகரியங்களையும் சுகங்களையும்

கரியாக்கக்கூடாது வீணாக்கக்கூடாது

வைகறையில் அதிகாலையில்

நொந்து நூலாகி மிகவும் களைத்து

ஓய்ந்துவிடாது நின்றுவிடாது

88
பயிற்சி வினா 32 மற்றும் 33
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

32. காலத்தின் அருமையைப் பற்றி உனக்கு உணர்த்திய ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதன்மூலம் நீ
கற்றுக்கொண்ட பாடத்தைப் பற்றியும் விவரித்து எழுதுக.

முன்னுரை விளக்கம்

● காலம் போனால் திரும்பாது


● காலத்தை அறிந்து நாம் செயல்பட வேண்டும்
● இழப்பு / பாதிப்பு அதிகமாக இருக்கும்
● மீண்டும் சரிசெய்வது எளிமையானதல்ல
● காலம் கற்றுக் கொடுக்கும் பாடத்தை நினைவில் கொள்ள
வேண்டும்

கருத்து 1 விரிவாக்கம்

காலம் கற்றுக்கொடுத்த ● எதிலுமே கால தாமதம் செய்யும் பழக்கம்


பாடம் - சம்பவம் ● பெற்றோரும் மற்றோரும் எடுத்துரைத்தனர்
● செவிசாய்க்கவில்லை
● நண்பர்களும் அறிவுறுத்தினர்
● வரும்போது பார்த்துக்கொள்ளலாம் எனும் போக்கு

கருத்து 2 விரிவாக்கம்

காலம் கற்றுக்கொடுத்த ● அனைத்துப்பள்ளிப் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு


பாடம் - சம்பவம் ● அகமகிழ்ந்தாய்
● அதிபர் சிறப்பு விருந்தினராக வரப்போகிறார்
(தொடர்ச்சி)
● பரிசுகளை அவரே வழங்கப் போகிறார்
● இப்படியொரு வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது
● மிகவும் பெருமைகொண்டாய்
● தலைமையாசிரியர் மற்றவர் முன்னிலையில் உன்னைப்
பெருமையாகப் பேசினார்
● பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி

89
கருத்து 3 விரிவாக்கம்

காலம் கற்றுக்கொடுத்த பாடம் ● ஆசிரியர் என்னை விரைவாக வந்துவிடும்படி கூறினார்


- சம்பவம் ● என் உற்சாகத்திற்கு எல்லையே இல்லை
(தொடர்ச்சி) ● என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டேன்
● வழக்கம்போல் தாமதமாகக் கிளம்பினேன்
● சாலை நெருக்கடி
● பள்ளியிக்கு காலதாமதமாகச் சென்றேன்
● நிகழ்ச்சி தொடங்கிவிட்டது
● அதிபர் வந்துவிட்டார்
● என்னைப் பள்ளி மண்டபத்தில் அனுமதிக்க மறுப்பு
● வெளியில் நின்றேன்

கருத்து 4 விரிவாக்கம்

ஏற்பட்ட பாதிப்பு ● என் பெயர் அறிவிக்கப்பட்டது


● என் நண்பன் என் சார்பில் பரிசு வாங்கினான்
● நான் கண்கலங்கினேன்
● என் பழக்கத்திற்காக வருந்தினேன்
● அரிய வாய்ப்பை நழுவ விட்டுவிட்டேன்
● என் கனவு உடைந்தது

முடிவுரை ● காலம் பொன் போன்றது


● சரியான பாடம் கற்றுக்கொண்டேன்
● எனக்கு ஏற்பட்ட இழப்பு என்னைப் பாதித்தது
● அன்றுடன் நேரத்தைப் போற்றினேன்

90
கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:

● ஞாலம் கருதினும் கைகூடும் காலம்


கருதி இடத்தாற் செயின்
● பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு
● காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்
● பருவத்தே பயிர் செய்
● காலம் பொன் போன்றது
● காலம் போகும் வார்த்தை நிற்கும்
● காலமும் அலையும் எவருக்காகவும் காத்திருக்காது
● காலம் நமக்குத் தோழன் - காற்றும் மழையும் நண்பன்
● காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
● ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்

அருஞ்சொற்பொருள்

சார்பில் பதிலாக

ஞாலம் உலகம்

பருவம் காலம்

நிற்கும் மறையாது

91
33. இன்றைய இளையர்கள் எதிர்நோக்கும் சவால்களையும், அவற்றை எவ்வாறு அவர்கள்
சமாளிக்கலாம் என்பதனையும் விளக்கி எழுதுக.

முன்னுரை

➢ உலகம் சவால்களும், போட்டித்தன்மையும் மிக்கது


➢ சவால்கள் நம்மை உறுதிமிக்கவர்களாக மாற்றுகிறது
➢ சவால்களைச் சமாளிப்பதன்மூலம் ஒருவர் பற்பல திறன்களைக் கற்றுக்கொள்கிறார்
➢ சவால்கள் இல்லாத வாழ்க்கை கசந்துவிடும்
➢ சவால்களைச் சமாளித்ததாலேயே சாதனைகள் உருவாயின

இடையுரை

➢ பாடச்சுமை இக்கால இளையர்களுக்கு அதிகமாக இருக்கிறது


➢ கால அட்டவணை வைத்துக்கொண்டு, திட்டமிட்டுப் பாடங்களைப் படிக்கலாம்
➢ கூடுதல் உதவி தேவைப்படும் பாடங்களுக்குத் துணைப்பாட ஏற்பாடு செய்யலாம்
➢ ஆசிரியர்கள், பெற்றோர்கள், அண்ணன், உறவினர் ஆகியோரிடம் உதவி நாடலாம்
➢ நேரக் கட்டுப்பாடு அவசியம்
➢ இடையூறுகளாக இருப்பவற்றைத் தவிர்த்துவிடலாம்
(எ. கா - கணினி, கையடக்கத் தொலைபேசி, நண்பர்கள், தொலைக்காட்சி)
➢ ஆண்பெண் உறவு
➢ படிக்கும் பருவத்தில் இத்தகைய உறவுகளைத் தவிர்ப்பது நல்லது
➢ இது அதிக மனஉளைச்சலை ஏற்படுத்தும்
➢ இப்பிரச்சினைகளைப் பற்றி ஆசிரியர், பெற்றோர் அல்லது பள்ளி ஆலோசகரிடம் பேசலாம்
➢ எது அதிக முக்கியம் என்ற பட்டியலைத் தயாரிக்கலாம்
➢ மனம் விட்டுப் பேச வேண்டும்
➢ குடும்ப உறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்
➢ சொந்தமாக முடிவு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்
➢ திரைப்படங்களைப் பார்த்து நிஜம் என்று நினைக்கக்கூடாது
➢ சக மாணவர்கள் தாக்கம் (Peer Pressure)
➢ தேவைப்படும் நேரத்தில் ‘வேண்டாம்’, ‘தேவையில்லை’ என்று சொல்லக் கற்றுக்கொள்ள வேண்டும்
➢ எதையும் சிந்தித்துச் செயல்பட வேண்டும்

92
➢ தேவையானால் நண்பர் வட்டத்தை மாற்றிக்கொள்ளலாம்
➢ தன்னம்பிக்கையையும் மனஉறுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்
➢ படிப்பில் கவனத்தை அதிகரித்தால் சிந்தனைச் சிதறல் ஏற்படாது

முடிவுரை

➢ சவால்களை எண்ணி மனம் தளரக்கூடாது


➢ இன்றைய இளையர்கள் நாளைய தலைவர்கள் என்பதை உணரவேண்டும்
➢ சவால்கள் தற்காலிகமானவை
➢ கடக்கும்வரைதான் அவை சவால், கடந்துவிட்டால் அவை சாதாரண செயல்தான்
➢ நம்மால் முடியும் என்று நம்ப வேண்டும்

இனிய தொடர்கள்

➢ வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற


➢ இன்றைய இளையர்கள் நாளைய தலைவர்கள்
➢ மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் - பாரதியார்
➢ கடக்கும்வரைதான் மலை, கடந்துவிட்டால் வெறும் மடு
➢ வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
➢ இளம் கன்று பயமறியாது
➢ அச்சம் என்பது மடமையடா
➢ உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை - பாரதியார்
➢ மனம் உண்டானால் வழி உண்டு
➢ ஊக்கமது கைவிடேல்
➢ நிறைகுடம் நீர் தளும்பாது
➢ விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல
➢ உன்மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை – விவேகானந்தர்
➢ நெஞ்சே உன் ஆசை என்ன, நீ நினைத்தால் ஆகாதது என்ன?

அருஞ்சொற்பொருள்

93
கசந்துவிடும் வெறுப்படைந்துவிடும்

திட்பம் உறுதி

பிற மற்றவை

வாக்கினிலே சொல்லிலே

மடமையடா முட்டாள்தனமடா

தளும்பாது சிந்தாது

94
தொகுதி 12

Model Compo - மாதிரிக் கட்டுரை

34. இளைஞர்கள் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மதிப்பதில்லை என்ற கருத்தை விவரித்து


எழுதவும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய மூத்தோர் அரும்பாடுபட்டும், அயராத


உழைப்புடனும் கட்டிக் காத்த பண்பாடும் கலாச்சாரமுமே இன்றைய இளைஞர்களால் அலட்சியப்படுத்தப்படுகின்றன.
இது எனக்குக் கோபத்தையும் கவலையையும் மட்டும் அளிக்கவில்லை. இவர்களுடைய விரக்தி மனப்பான்மையைக்
கண்டால் எரிச்சலாகவும் இருக்கிறது. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டுக்கு முன் கோலமிடும் காலம்
எல்லாம் எங்கே சென்றுவிட்டது?. இவ்வளவு காலமாக நீடித்து உலக மக்களால் பாராட்டிச் சீராட்டப்பட்ட தமிழ்ப்
பண்பாடும், கலாச்சாரமும் ஏன் நம்முடைய சொந்தத் தமிழ் இளைஞர்களால் மதிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு
எனக்குப் பதில் இன்னும் கிடைக்கவில்லை; கிடைக்கப்போவதுமில்லை. இன்றைய பதின்ம வயதினர்கள் எவ்வாறு
நம்முடைய தமிழ்க் கலாச்சாரத்தை மதிக்கத் தவறுகிறார்கள் என்று நான் இக்கட்டுரையில் பட்டியலிட இருக்கிறேன்.

நமது பண்பாட்டில் மிக இன்றியமையாத ஒன்று, மற்றவர்களை மதித்தும் அவர்களுடைய வயதிற்கு மரியாதை
செலுத்தியும் நடந்துகொள்வதே ஆகும். ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்பது தெய்வ வாக்கு. நம்மைப் பத்து மாதம்
வயிற்றில் சுமந்து எல்லையில்லா அன்பை அளித்து வளர்த்து வரும் நம்முடைய தாய்க்கு மரியாதை செலுத்துவது
முக்கியம் மட்டுமல்ல, அது நம்முடைய கடமை என்றே கூறலாம். ஆனால் அண்மையில் செய்தித்தாளில் வெளிவந்த
‘தாயைக் கொடுமைப்படுத்திய மகன்’, ‘அன்னையை அறைந்த மகள்’ போன்ற நெஞ்சை உலுக்கும் செய்திகளைப்
படித்தபொழுது என் மனம் கொதித்தெழுந்தது.

‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்று பெற்றோர்கள் தீயவனாக இருந்தாலும் என்றும் அவன்
மகன் தான் என்று நினைக்கிறார்கள். ஆனால் நன்றிகெட்ட சில பிள்ளைகளோ, தாயைக் காக்க வேண்டும் என்ற
பண்பாட்டினை மறந்து, பிள்ளையைச் சித்திரமாய் வளர்க்கும் தாயையே சிதைக்கிறார்கள்! ‘தாயிற் சிறந்ததொரு
கோவிலும் இல்லை என்றால், தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என்று நம் சான்றோர் தந்தை புகழ்
பாடியுள்ளனர். நம்மைப் பாராட்டிச் சீராட்டி வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நம்மை ஆளாக்குபவர்
நம் தந்தையே. அவருக்கு நாம் கண்டிப்பாக மரியாதை செலுத்திப் பணிவாக நடந்துகொள்ள வேண்டும். ஆனால்,
இக்கால இளையர்களோ, சூரியனும் சந்திரனும் போல் நமது வாழ்க்கைக்கு ஒளியூட்டிய தாயையும் தந்தையையும்
புறக்கணித்து, வயதான காலத்தில் அவர்களை முதியோர் இல்லத்தில் தள்ளிவிடுவதை நாம் கண்கூடாகப்
பார்க்கிறோம்.

‘எழுத்தறிவித்தவன் இறைவனாகும்’ என்று ஆசிரியருக்கு இறைவன் ஸ்தானத்தை வழங்கியுள்ளனர் நம்


சான்றோர்கள். கல்வி எனும் பாலை ஊட்டி, நமது வாழ்க்கையில் வெற்றி பெற சுயநலமில்லாமல் எல்லா வகையிலும்
உதவிக்கரம் நீட்டும் நம் குருவுக்கு மரியாதை செலுத்தினால் மட்டும் போதாது. அவருக்கு வாழ்க்கை முழுவதும்
நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்றோ மாணவர்கள் தவறு செய்தால் அவர்களை அடித்துத் திருத்தும்
உரிமை கூட ஆசிரியருக்கு இல்லாமல் போய்விட்டது. இதற்கெல்லாம் காரணம், மாணவர்கள் அவர்களை
95
மதிக்காமையே ஆகும். ஆசிரியர்களைக் கூலிக்கு வேலை செய்யும் பட்டியலில் இக்கால இளையர்கள்
சேர்த்துவிட்டார்கள்.

உடை என்பது மேனியை மறைக்கவே தவிர, அதைக் காட்டுவதற்கு அல்ல. சேலை என்பது எந்தக்
கலாச்சாரத்திலும் இல்லாத ஓர் அற்புத உடையாகும். அது பெண்களின் முழு உடலையும் மறைத்து அவர்களுக்குப்
பூரண லட்சணத்தைக் கொடுக்கும். ஆனால், இக்கால இளம் பெண்களோ புடைவை என்ற பெயரில் மெல்லிய துணி
ஒன்றினைப் பாதி உடம்பு தெரியும்படி உடம்பில் சுற்றிக்கொள்கிறார்கள். தெய்வத்தைத் தரிசிக்கக் கோவிலுக்குச்
செல்லும்போதும் ‘ஜீன்ஸ், டீ-சர்ட்’ என்று மேற்கத்திய ஆடைகளை அணிந்து வருகிறார்கள். இதைக் காண்பதற்கு
மிகவும் வருத்தமாக இருக்கிறது.

‘குடும்பம் ஒரு கோயில், அதில் அன்னையும் தந்தையும் தெய்வங்கள்’ என்று பாடினார் ஒரு கவிஞர். இது
நமது பண்பாடு. குடும்பத்தை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். ஆனால், இக்கால இளைஞர்களுக்கோ
நண்பர்கள்தாம் முக்கியமாக இருக்கிறார்கள்.

‘தோள் கொடுப்பவன் தோழன்’

என்ற பொன்மொழி பொய் என்று நான் கூறவில்லை. ஆனால், நண்பர்களால் எப்போதுமே நம் அருகில்
இருக்க முடியாது. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆனால், நம் குடும்ப
உறுப்பினர்கள் என்றுமே நம்முடன் இருப்பவர்கள். சிக்கலான தருணங்களிலும் நம்மைக்கைவிட மாட்டார்கள்.
அப்பொழுதும் ஒன்றாகக் கைகோர்த்தே நடப்பார்கள். ஆனால், இதைப் புரிந்துகொள்ளாத இளைஞர்கள்
தங்களுடைய பெற்றோர்களின் மதிப்பை அறியாமல் அவர்களை மதித்து நடந்துகொள்ள மறுக்கிறார்கள்.
முற்காலத்தில் பெற்றோர்களைக் கடவுள் போல் மதித்து மரியாதையுடன் பேசிய காலம் எல்லாம் மண்ணுக்கு அடியில்
புதைக்கப்பட்டுவிட்டது, நமது கலாச்சாரமும் பண்பாடும் அதே சமயத்தில் விரைவாக மறைந்துகொண்டே
செல்கின்றன.

சங்க காலத்தில் வீரமும் துணிச்சலும் நமது மறத்தமிழர்களின் இரு கண்களாக இருந்தன. ஆனால், அது
இப்போது மெதுவாக மறைந்துகொண்டே போகிறது. நம்முடைய மூத்தவர்கள் போரிலும் பூசலிலும் கலந்து
அவர்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதற்கு எழுந்து நின்றார்கள். ஆனால், இக்கால இளைஞர்களோ சமுதாயம்
நம்மைத் தவறாக எடைபோட்டு விடுமே, என் நண்பர்கள் என்னைத் தவறாக நினைப்பார்களே என்று
அவர்களுடைய கருத்தைப் பகிர்ந்து கொள்ளாமலே எல்லாவற்றிலும் விட்டுக் கொடுத்து அடங்கி
நடந்துகொள்கிறார்கள். அடங்கி ஒழுக்கமாக நடந்துகொள்வது தவறு என்று நான் கூறவில்லை. ஆனால்
துணிச்சலாகவும் தைரியத்துடனும் நடந்துகொள்ளாமல் போனால் நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரும் நம்மைத்
தலையாட்டும் பொம்மைகளாகக் கருதிக் கீழே தள்ள முயற்சி செய்வார்கள். அதனால் இளைஞர்கள்
இப்பண்பாட்டையும் பழக்கத்தையும் மறந்துவிடாமல் துணிச்சலுடன் வேலையைச் செய்ய வேண்டும்.

‘காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும்’ என்று பாடிச் சென்றார் ஒரு கவிஞர். இந்தக்
காலத்திற்கேற்ற கோலம் எதைக் குறிக்கிறது என்றால், மாறிவரும் தொழில்நுட்பம், நாடு கண்டுவரும் முன்னேற்றம்
இவற்றுக்கேற்ப நாமும் மாற வேண்டும் என்பதுதான். ஆனால், பண்பாடு, கலாச்சாரம் என்பது ஒரு மொழியின்
அடையாளம். அது எக்காலமும் மாறாது. ஆனால், இக்கால இளைஞர்கள் நமது பண்பாடு, கலாச்சாரம்
96
ஆகியவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகத் துறப்பதைப் பார்க்கும்போது அது அடியோடு மறைந்துவிடுமோ என்று
அச்சமாக இருக்கிறது.

தற்போது இளையர்கள் தமிழில் உரையாடக்கூட மறுக்கிறார்கள். பூ அணிவது, விதவிதமான சேலையை


அணிவது, மரியாதையுடன் நடந்துகொள்வது, கைகூப்பி வணக்கம் சொல்வது, துணிச்சலுடன் செயல்படுவது,
கோலமிடுவது, பொட்டு வைப்பது போன்ற முக்கியப் பழக்க வழக்கங்களை மறந்துவிட்டோமா? அல்லது மறக்க
முயற்சி செய்கிறோமா? இளைஞர்கள் தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காத்து வந்து கொண்டிருக்கும்
கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மதிக்காமல் நடந்துகொண்டால் அது முற்றிலும் இவ்வுலகிலிருந்து மறைந்துவிடும்.

அருஞ்சொற்பொருள்

விரக்தி ஈடுபாடற்ற கூலிக்கு சம்பளத்திற்கு

உலுக்கும் ஆட்டும் மேனியை உடலை

ஆளாக்குபவர் வளர்ப்பவர் பூரண லட்சணத்தை முழுமையான அழகை

கண்கூடாக நேரில் மறத்தமிழர்கள் வீரத்தமிழர்கள்

ஸ்தானத்தை இடத்தை எடைபோட்டு மதிப்பிட்டு

97
பயிற்சி வினா 35 மற்றும் 36
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

35. இப்படித்தான் முடியும் என்று நீ நினைத்திருந்த ஒரு சம்பவம் நீ எதிர்பாராத விதத்தில்


முடிந்தது. அது என்ன சம்பவம் என்றும், அது நீ எதிர்பார்த்த விதத்தில் முடியாத காரணத்தையும்
விவரித்து எழுதுக.

முன்னுரை விளக்கம்

● எதிர்பார்ப்புகள் பொய்யாகலாம்
● அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு
● நியாயமான எதிர்பார்ப்பு நடக்கக்கூடும்
● உழைப்புக்கு ஏற்ற எதிர்பார்ப்பு இருத்தல் அவசியம்
● அப்போது நாம் ஏமாற்றமடையமாட்டோம்

கருத்து 1 விரிவாக்கம்

சம்பவம் ● நண்பனுக்குப் பிறந்த நாள்


● அதைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டீர்கள்
● அவன் குடும்பத்தினருடன் இணைந்து அவனுக்குத் தெரியாமல்
ஏற்பாடுகள்
● எல்லாரும் ஆவலுடன் இருந்தனர்

கருத்து 2 விரிவாக்கம்

சம்பவம் ● நண்பனுக்குப் பரிசு வாங்க நினைத்தாய்


● விலை உயர்ந்த பரிசு அவனை மதி மயங்கச் செய்யும் என்று
எண்ணினாய்
● பெற்றோரிடம் அடம்பிடித்துப் பணம் பெறுதல்
● நண்பனுக்கு விலையுயர்ந்த கையடக்கத் தொலைபேசி
வாங்கினாய்
● அவனுக்குக் கட்டாயம் பிடிக்கும்
● அதை அழகான தாளில் மடித்தாய்

98
கருத்து 3 விரிவாக்கம்

சம்பவம் ● நண்பன் எல்லாரின் முன்னிலையிலும் பரிசுப் பொட்டலத்தைப்


பிரிப்பான்
● உற்றார் உறவினர் ஆர்வத்துடன் பார்ப்பார்கள்
● நண்பன் உன்னைப் பற்றிப் பெருமையாக நினைப்பான்
● எல்லாரின் முன்னிலையிலும் உன்னைப் புகழ்ந்து பேசுவான்
● அதை நினைக்கும்போதே உனக்குப் புல்லரித்தது

கருத்து 4 விரிவாக்கம்

எதிர்பார்த்த விதத்தில் ● பிறந்தநாள் வந்தது


முடியவில்லை ● ஆர்வத்துடன் பரிசைக் கொடுத்தாய்
● நண்பன் மிகவும் மகிழ்ந்தான்
● பொட்டலத்தைப் பிரித்தான்
● ஒன்றும் சொல்லாமல் ஓரத்தில் வைத்துவிட்டான்
● வேறொரு நண்பன் கணிப்பானைப் பரிசாகக் கொடுத்தல்
● அது நண்பனுக்கு மிகவும் பிடித்திருந்தது
● தன்னிடம் இல்லாத பொருளைக் கொடுத்ததற்காக
மற்றொரு நண்பனைப் புகழ்ந்து பேசினான்

முடிவுரை ● எதிர்பார்ப்பு ஏமாற்றமடைந்தது


● தேவைப்படும் பொருளைக் கொடுக்கவில்லை
● விலை முக்கியமல்ல
● தேவை அறிந்து செயல்படுவதே முக்கியம்

99
கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:
● நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும்
● நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
● நினைப்பது ஒன்று நடந்தது ஒன்று
● எதிர்பார்ப்புகள் என்பது எதிர்பாராமலும் வரும்
● பிடிக்காத கஞ்சி பழங்கஞ்சி
● நினைத்தாலே இனித்தது
● தலைகால் புரியாத மகிழ்ச்சி
● பார்த்துப் பார்த்து வாங்கினேன்
● என் முகத்தில் இனம்புரியாத பரவசம்
● ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்தது
● வெட்கத்தால் முகம் சுருங்கியது
● தொட்டுக்கூடப் பாரக்கவில்லை
● எதிர்பார்ப்பு எரிமலையாய் வெடித்தது
● குழந்தைக்குப் பொம்மையை வாங்காமல் தங்கச் சங்கிலியை வாங்கியதுபோல்

அருஞ்சொற்பொருள்

நியாயமான எல்லோருக்கும் சமமான

மதி அறிவு

அடம்பிடித்து பிடிவாதம் பிடித்து

புல்லரித்தது மேனி சிலிர்த்தது

கணிப்பான் கணக்கிடும் கருவி (calculator)

தலைகால் புரியாத கட்டுப்படுத்த முடியாத

பரவசம் மகிழ்ச்சி

100
36. ‘சிங்கப்பூர் வாழ்வதற்கேற்ற வளமிக்க நாடு’ இக்கருத்தினை நீ ஏற்றுக்கொள்கிறாயா? ஏன்?
(ஏற்றுக்கொள்கிறேன் என்ற அடிப்படையில் அமைந்த கருத்துகள்)

முன்னுரை

➢ சிங்கப்பூர் மீன்பிடிக் கிராமமாக இருந்தது


➢ மக்கள் அயராத உழைப்பால் முன்னேற்றம் கண்டது
➢ வளர்ச்சி அடைந்த நாடுகள் வரிசையில் முதல் தரம்
➢ மற்றவர்கள் வியக்கும் வண்ணம் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி
➢ மக்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கு உகந்த நாடு

இடையுரை

➢ திடமான கல்வி முறை


➢ மக்களுக்குக் கட்டாயக் கல்வி
➢ முழுமைக் கல்வித்திட்டம்
➢ எல்லாத் தர மாணவர்களுக்கும் ஏற்ற கல்விப்பாதை
➢ கல்வி நிதி உதவித்திட்டங்கள்
(உபகாரச் சம்பளங்கள், வசதி குறைந்தோருக்கான திட்டம், மாணவர் கல்வி நிதி உதவித்திட்டம் (edusave)
➢ உலக அங்கீகாரம் பெற்ற கல்விச்சான்றிதழ்
➢ பல்கலைக்கழங்கள், பலதுறைத் தொழில்நுட்பக் கழகங்கள், தொடக்கக் கல்லூரிகள்
➢ நிலையான அரசாங்கம்
➢ மக்களுக்குத் தகுந்த பாதுகாப்பு
➢ வசதியான வீடுகள்
➢ வீடமைப்பு வட்டார வசதிகள்
➢ வேலையின்மை இல்லாமை
➢ திறனுக்கேற்ற ஊதியம்
➢ உணவு விடுதிகள்
➢ இனநல்லிணக்கம்
➢ தொலைநோக்குச் சிந்தனை
➢ மக்களுக்குப் பொது உரிமைகள்
➢ நெருக்கடியான தருணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
➢ முன்னோடிகள்/ஊனமுற்றோர்கள் தனி உரிமைகள்
101
➢ முதியோர்/ஊனமுற்றோர் பொதுப்போக்குவரத்தில் தனிச்சலுகைகள்
➢ உதவிக்காலத் திட்டங்கள் (காப்புறுதித் திட்டங்கள்)
➢ வேலைவாய்ப்புகள்
➢ மாற்றுத்திறன் பயிற்சிகள்
➢ நன்கொடை/நிதி திரட்டும் திட்டங்கள்
➢ ஊனமுற்றோருக்கான சிறப்புக் கல்வி (special education)

முடிவுரை

➢ மக்கள் நாடு
➢ குடிமகனாக இருப்பதற்குப் பெருமைப்பட வேண்டும்
➢ நாட்டின் முன்னேற்றத்திற்கு நமது பங்கை ஆற்ற வேண்டும்
➢ மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கட்டிக்காக்க வேண்டியது நமது கடமை

இனிய தொடர்கள்

➢ பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிற்குஇவ் வைந்து

➢ உறுபசியும் ஓவாப்பிணியும் செருபகையும்

சேரா தியல்வது நாடு

➢ நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு

➢ நாடென்ன செய்தது என்று கேட்காதே, நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேள்


➢ நாடு அதை நாடு, நாடாவிட்டால் ஏது வீடு
➢ சிங்கை நாடு என் வீடு
➢ தாய்நாட்டை மதிக்காதவன் தாயை மிதிப்பவனுக்குச் சமம்
➢ அக்கரைச் சீமை அழகினிலே மனமாடக் கண்டேனே – திரைப்படப் பாடல்

அருஞ்சொற்பொருள்

தர பிரிவு

102
அங்கீகாரம் அடையாளம்

ஊதியம் சம்பளம்

நடக்கப் போவதை ஊகிக்கும்


தொலைநோக்கு
பார்வை

நெருக்கடியான இக்கட்டான

தருணத்தில் நேரத்தில்

சலுகைகள் உரிமைகள்

நிதிப்பாதுகாப்புத் திட்டம்
காப்புறுதி
(insurance)

பிணி நோய்

103
தொகுதி 13

Model Compo - மாதிரிக் கட்டுரை

37. சாதிக்க இயலாதது எதுவுமில்லை என்று உம்முடைய நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில்


அமைந்த சம்பவம் ஒன்றினை விளக்கி எழுதுக.

வியர்வைத் துளிகள் என்னுடைய முகத்தில் பளபள என்று மின்னின. “நான் இன்னும் வேகமாக ஓட
வேண்டும்” என்று என் மனது சொல்லச் சொல்ல என் கால்கள் அதற்கு ஈடுகொடுக்காமல் நகர மறுத்தன. தோல்வி
மீண்டும் என்னுடைய கண்களுக்கு எட்டிவிட்டது. இந்த முறையாவது நான் இதில் தேர்ச்சி பெறுவேன் என்று
எனக்கு அடி மனத்தில் உள்ளங் கையளவு ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்த நம்பிக்கையும் நீர்க்குமிழிபோல்
மறைந்து விட்டது.

நான் இந்த முறையும் வெற்றிக் கிண்ணத்தை என்னுடைய விழிகளால் காண இயலாது என்று
எண்ணும்பொழுது என்னுடைய மனம் சோகத்தில் மூழ்கியது. என்னால் மட்டும் ஏன் மற்றவர்களைப்போல்
ஓடமுடியவில்லை? வாழ்க்கை முழுவதும் நான் இவ்வாறு மற்றவர்கள் பின்னாடியே நிற்க வேண்டியதுதானா? நான்
இவ்வாறான கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்கும் தேடலில் செல்லும்போது தான் என்னுடைய பயிற்சியாளர்
திரு. ராமுவைச் சந்தித்தேன்.

“வணக்கம் மாணவர்களே! இன்று உங்களுக்கு நான் பள்ளியில் ஒரு மிக முக்கியமான நபரை
அறிமுகப்படுத்தப் போகிறேன். அவர் வேறு யாரும் இல்லை! நம் பள்ளியில் புதிதாகச் சேர்ந்த ஆசிரியர் ராமுவே
ஆவார்! வாருங்கள், அவரை நாம் அனைவரும் கைதட்டி வரவேற்கலாம்!” என்று எங்களுடைய தலைமையாசிரியர்
பூரிப்புடன் செப்பினார். அவர் கண்களில் தெரிந்த வெளிச்சம் மற்றும் முகத்தில் இருந்த தன்னம்பிக்கையும் என்
கவனத்தை அவர் மேல் சாய்த்தது. இவர் நமக்கு ஏதேனும் பாடத்தைக் கற்பிக்க மாட்டாரா என்று என் எண்ண
அலைகள் கரைமோதித் திரும்புவதற்குள் திரு.ராமு தான் எங்கள் வகுப்பின் விளையாட்டு ஆசிரியர் என்னும் செய்தி
என் காதுகளுக்கு எட்டியது. விசையைத் தட்டியவுடன் மின்னி மறையும் மின்விளக்குப்போல் அப்போது என்
மனத்தில் ஒரு வெளிச்சம் தோன்றி மறைந்தது.

என் மனம் ‘பக் பக்’ என்று இவ்வளவு விரைவாக அடித்ததிலிருந்து என் உடலால் அந்த ஓட்டப் பயிற்சியை
எடுத்துக்கொள்ள முடியவில்லை என்பது எனக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. நான் அருகில் இருந்த ஒரு
நீண்ட ‘பெஞ்சின்மீது’ அமர்ந்து இளைப்பாறினேன். என் நண்பர்களைத் தேடினேன். அவர்கள் அனைவரும்
இன்பத்துடன் ஓடி முடித்த பிறகு தங்கள் நேரத்தைப் பூப்பந்து விளையாட்டில் கழித்துக்கொண்டிருந்தனர்.
அவர்களைக் கண்டு நான் பொறாமைப்படவில்லை. ஆனால், அவர்களைப் போல என்னால் ஏன் விரைவாக ஓட
முடியவில்லை என்ற ஏக்கம் மட்டும் என் மனத்தில் ஒலித்துக்கொண்டே இருந்தது. நான் அப்படியொன்றும் உடல்
பருமனானவள் இல்லை. என்னைவிடப் பருமனான என் நண்பன் நவீன்கூட என்னை முந்திவிட்டானே!

104
திரு. ராமு என்னைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டேயிருந்தார். அவர் என் அருகில் வந்தார்.
“கவலைப்படாதே மாலா! கவலைப்படாதே! உன் நிலைமை எனக்கு நன்கு புரிகிறது. நான் திண்ணமாக உன்னால் ஓட
முடியாது என்று நீ வைத்திருக்கும் சிந்தனையை மாற்றப் போகிறேன். நாம் இருவரும் இன்றிலிருந்து சேர்ந்து
உழைப்போம் மாலா, கண்டிப்பாக வெற்றி நம்கையில்,” என்று கண்களில் நம்பிக்கையுடன் கூறினார். அவர்
வார்த்தையில் உண்மை இருப்பதை என்னால் உணர முடிந்தது. மங்கிய ஒளி என்முன் தென்பட்டது. அது பிரகாசமாக
ஒருநாள் எரியும் என்ற நம்பிக்கை தீபம் என்னுள் சுடர்விட்டது.

திரு.ராமுவும் நானும் அடுத்த நாளில் இருந்தே பள்ளியில் அதிகாலை நேரத்தில் சந்தித்தோம். என்னுடைய
கனவுகளுக்ககாக இவ்வளவு உழைப்பும் ஆர்வமும் இன்று வரை அவரைப் போல் யாரும் என்னிடம்
காட்டியதில்லை. அல்லும் பகலும் என் கால்கள் சோர்ந்து போகும் வரை நாங்கள் இருவரும் பயிற்சி செய்தோம்.
நான் இப்பயிற்சி நேரங்களின் போது என் உடல் பலத்தை மட்டும் வளர்க்கவில்லை. அதனுடன் சேர்ந்து என் மேல்
எனக்கு இருந்த நம்பிக்கையையும், விடாமுயற்சியுடன் இருந்தால் எதையுமே சாதிக்க முடியும் என்ற எண்ணத்தையும்
வளர்த்துக்கொண்டேன். பயிற்சியின் கடுமை தாங்க முடியாமல் துவண்டு விழும் போதெல்லாம் திரு.ராமு,

‘வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா,


தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா’

என்ற பாடல் வரிகளைப் பாடுவார். எனக்குச் சிரிப்பு வரும். நான் என் கனவுகளை விட்டுக் கொடுக்காமல்
மீண்டும் தொடர்வேன். இவ்வாறு திரு. ராமு ஒவ்வொரு முறையும் என்னைத் தூக்கிவிட்டு நான் உடைந்து போகாமல்
என்னைப் பாதுகாத்தார்.

என் வாழ்க்கையைத் திசை திருப்பிய அந்த நாள் வந்தது. ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்ற
பழமொழிக்கு உண்மைப் பரீட்சையாக அமைந்தது இந்நாள். என் வாழ்க்கையில் இதை மட்டும் சாதிக்க முடியாது
என்று நினைத்த அச்செயலையே நான் செய்து உலகத்துக்குக் கடின உழைப்பாளியான மாலாவைக் காட்ட
எண்ணினேன். ஆரம்ப வரியில் நின்றுகொண்டிருக்கும் பொழுது எனக்கு மனத்தில் இருந்த வெறி இன்றுவரை
அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இது தான் எனக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு. இந்த ஓட்டப்பந்தயமே
அனைத்தையும் தீர்மானிக்கும். துப்பாக்கி ஒலிச் சத்தம் ‘கணீர்’ என்று கேட்டது. என் கால்கள் தானாகவே ஓட
ஆரம்பித்தன. இல்லை இல்லை, பறந்து நான் ஓடினேன் ஓடினேன் ஓடினேன் மெதுவாக என் கனவை நோக்கி மெல்ல
மெல்ல ஓடினேன். ஓட்டப் பந்தயத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்க நெருங்க என் இதயம் இன்னும் விரைவாக
அடித்துக்கொண்டே இருந்தது. நான் ஓட்டப் பந்தயத்தை முடித்து வென்றேன். வெற்றி என் கையில்.

வாழ்க்கையில் நம்பிக்கையே இல்லாத என்னையும், என்னால் சாதிக்க இயலாது என்று எனக்கு இருந்த
எண்ணத்தையும் நான் மூட்டைக் கட்டிப் புதைத்து விட்டேன். திரு.ராமு என்னை மேலும் சிறந்த மனிதனாக
மாற்றியிருக்கிறார்.

‘யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில்’ என்று எனக்குப் புரிய வைத்த
அவருக்கு நான் வாழ்க்கை முழுவதும் கடமைப்பட்டுள்ளேன்.

105
அருஞ்சொற்பொருள்

நீர்க்குமிழி நீரால் உண்டாகும் பந்து (bubbles)

நபரை மனிதரை

செப்பினார் சொன்னார்

விசையை பொத்தானை (switch)

பருமனானவள் உடல் எடை கூடியவள்

முந்திவிட்டானே முன்னால் சென்றுவிட்டானே

திண்ணமாக உறுதியாக

மங்கிய பிரகாசம் இல்லாத ஒளி

சுடர்விட்டது எரிந்தது

106
பயிற்சி வினா 38 மற்றும் 39
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

38. உனக்கு விருப்பமில்லாத செயல் ஒன்றினைச் செய்யும் கட்டாயத்திற்கு நீ ஆளாக்கப்படுகிறாய்.


அச்சம்பவம் எவ்வாறு நடந்தது என்றும், அது உன்னை எவ்வகையில் பாதித்தது என்றும்
விரித்து எழுதுக.

முன்னுரை விளக்கம்

● எல்லோரும் எல்லாவற்றையும் செய்ய விரும்புவதில்லை


● சிலருக்குச் சிலவற்றைச் செய்ய மட்டுமே பிடிக்கும்
● நாம் விரும்பியதைச் செய்யும்போது நன்றாகச் செய்வோம்
● வற்புறுத்திச் செய்யும்போது செயலில் தரம் இருக்காது
● சில வேளைகளில் சில செயல்களைத் தவிர்க்க முடியாது

கருத்து 1 விரிவாக்கம்

சம்பவம் ● பாரம்பரிய நடனம் கற்றுக்கொள்வதில் உனக்கு ஈடுபாடில்லை


● உன் தாயாருக்கு அதில் அதிக ஆர்வம், ஈடுபாடு
● நடனம் ஆடுவது உடற்பயிற்சி
● படிப்பிலும் கவனம் செலுத்த முடியும்
● இருந்தாலும் உனக்கு விருப்பமில்லை

கருத்து 2 விரிவாக்கம்

சம்பவம் ● தாயார் கட்டாயப்படுத்துதல்


● நடன வகுப்பில் வேண்டா வெறுப்புடன் சேர்தல்
● ஆடுவதற்கு மிகவும் சிரமப்படுதல்
● பாரம்பரிய நடன அசைவுகள் கற்றுக்கொள்ளக் கடினம், வெகு
தூரம் செல்ல வேண்டும்
● வாரம் இருமுறை

107
கருத்து 3 விரிவாக்கம்

சம்பவம் ● மன உளைச்சல் ஏற்பட்டது


● விளைவு பாடத்தில் கவனம் மங்கியது
● யாரிடமும் சொல்ல முடியவில்லை
● தாயார் திட்டுவார்
● ஆசிரியர் கவனித்தார்
● ஆசிரியரிடம் மனம்விட்டுப் பேசுதல்
● ஆசிரியர் உதவுவதாகக் கூறுதல்

கருத்து 4 விரிவாக்கம்

தீர்வு ● ஆசிரியர் பெற்றோரிடம் பேசுதல்


● பிடித்த நடவடிக்கையில் சேர்ந்துவிட ஆலோசனை
● நவீன நடன வகுப்பில் சேர்தல்
● பிடித்த நடவடிக்கை
● படிப்பிலும் சிறப்பாகச் செய்தல்

முடிவுரை ● நமது விருப்பத்தையும் கேட்க வேண்டும்


● பிடித்ததைச் செய்யும்போது ஆர்வம் மேலிடும்
● நம் விருப்பத்தைப் பிறர்மீது திணிக்கக்கூடாது
● கலந்துபேசி முடிவெடுப்பதே சிறந்தது

108
கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:
● பிடித்தது கிடைக்காவிட்டால் கிடைத்ததைப் பிடித்ததாக மாற்றிக்கொள்
● செய்வன திருந்தச் செய்
● விரலுக்கேற்ற வீக்கம்
● மலையைத் தூக்கி என் முதுகில் வைத்ததுபோல்
● ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால்
● சொல்ல வந்தது தொண்டைக்குழிக்குள் நின்றது
● கால் நகரமாட்டேன் என்கிறது
● ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா?
● கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
● தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்
● சொல்வது எளிது செய்வது கடினம்
● யானையின் பாரத்தை எலி தாங்குமா?
● எதற்கும் ஓர் எல்லை உண்டு
● அளவுக்கு மீறிய ஆசை
● மனச்சுமையை இறக்கி வைத்தேன்
● நீண்ட பெருமூச்சு விட்டேன்

அருஞ்சொற்பொருள்

வற்புறுத்தி கட்டாயப்படுத்தி

வேண்டா வெறுப்புடன் விருப்பமில்லாமல்

மங்கியது இருளடைந்தது

திணிக்க குறிப்பிட்டஅளவை விட அதிகமாகச் செலுத்துவது


109
கூழ் பழைய கஞ்சி

பாரத்தை கனத்தை

110
39. சிங்கப்பூரர் பெரும்பாலோர் வெளிநாடுகளில் குடியேற விரும்புவதில்லை - கருத்துரைக்க.

முன்னுரை

➢ தாய்நாடு என்றால் என்ன?


➢ அதன் தன்மைகள் (எப்படி வேறு நாட்டிலிருந்து வேறுபடுகிறது)
➢ தாய்நாட்டிற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்
➢ சிங்கப்பூரர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்

இடையுரை

➢ பிறந்து வளர்ந்த நாடு


➢ கல்வி கற்ற நாடு
➢ நண்பர்களை நாம் இங்குதான் அமைத்துக்கொள்கிறோம்
➢ உறவுகள் அனைத்தும் இங்குதான் இருக்கின்றன
➢ இங்கிருக்கும் இடங்கள் எல்லாம் நமக்கு நன்கு தெரிந்தவை
➢ இரவு நேரத்திலும் பாதுகாப்பாக, பயமில்லாமல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்
➢ நல்ல கல்வித்திட்டம்
➢ வாழ்வதற்குத் தேவையான எல்லா வசதிகளும் இங்கு உண்டு
➢ ஊழல் இல்லாத நாடு
➢ சிங்கப்பூரர்களுக்கு முதலிடம்
➢ மற்ற நாடுகளில் முதலிடத்தை எதிர்பார்க்க முடியாது
➢ குடும்பத்தைப் பிரிந்து இருக்க முடியாது
➢ வசதி வாய்ப்புகள் இங்கு அதிகமாக இருக்கின்றன
➢ மற்ற நாடுகளில் மொழிப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு
➢ சில நாடுகளில் செலவை அதிகம் எதிர்பார்க்கலாம்
➢ சொந்த நாட்டில் கிடைக்கும் சலுகைகள் மற்ற நாட்டில் கிடைக்காது
➢ நாட்டுப் பற்று
➢ நாட்டுக்குத் திரும்பச் செய்யவேண்டும் என்ற மனப்பான்மை

111
முடிவுரை

➢ பிறந்த நாட்டை விட்டுப் பிரிய மனமில்லை


➢ உற்றார் உறவினர், நண்பர்கள் சுற்றியிருக்கிறார்கள்
➢ அவர்களின் உதவி அருகில் இருக்கும்
➢ தாய்நாட்டுக்குச் செய்யும் கடமை

இனிய தொடர்கள்

➢ பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிற்குஇவ் வைந்து

➢ உறுபசியும் ஓவாப் பிணியும் செரு பகையும்

சேரா தியல்வது நாடு

➢ நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரும் நாடு

➢ தாய்நாடு என்பது தாய்க்குச் சமம்


➢ நாடு அதை நாடு – நாடாவிட்டால் ஏது வீடு
➢ சிங்கை நாடு என் வீடு
➢ தாய்நாட்டை மதிக்காதவன் தாயை மிதிப்பவனுக்குச் சமம்
➢ அக்கரைச் சீமை அழகினிலே மனமாடக் கண்டேனே - திரைப்படப் பாடல்

அருஞ்சொற்பொருள்

நன்றிக்கடன் நன்றி உணர்வு

ஊழல் இலஞ்சம்

பிணி நோய்
112
உறுபசியும் கடும் பசியும்

செரு பகை அழிக்கும் பகை

தொகுதி 14

Model Compo - மாதிரிக் கட்டுரை

40. நீ மிகவும் விரும்பும் ஒரு தலைவர் பற்றியும் அவர் உன்னைக் கவர்ந்த காரணத்தையும்
விவரித்து எழுதுக. (லீ குவான் இயூ)

‘வானமும் தொட்டுவிடும் தூரம்தான்’ என்றார் மகாகவி பாரதி, ஆம்! ‘நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும்’
மிகக்கொண்ட பாரதி ஒருவரால்தான் இப்படிப்பட்ட வைரவரிகளை வாரிக்கொட்ட முடியும். ‘நொந்தே போயினும்
வெந்தே மாயினும் எனது தேச விடுதலைக்குப் போராடுவேன்; எவர் தடுத்தாலும் அஞ்சாது வாதாடுவேன்’ என்று
அன்று அந்த அமரகவி முழங்கியமைக்கு அவரது உள்ளம் முழுவதும் குடி கொண்டிருந்த தன்னம்பிக்கையே
காரணம். இவ்வாறு, ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாக’ நின்று நிலைபெற்ற மாமனிதர்கள்
உலகில் பலர். அந்த வரிசையில் எனது தாய்நாடாம் சிங்கையை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்ற உன்னதத்
தலைவர் அமரர் லீ குவான் இயூ அவர்கள். இதை உணரும்போது உள்ளம் பூரிக்கின்றது; உடல் சிலிர்க்கின்றது;
கண்ணீர் துளிக்கின்றது; கரம் குவிகின்றது. உலகமே கண்டு வியந்த அந்த விந்தை மனிதர் எவ்வாறு எனது
உள்ளத்தைக் கொள்ளை கொண்டார் என்பதையும், ஓய்வறியா அந்த உத்தமர் மீன்பிடிக் கிராமமாக இருந்த
சிங்கையை எவ்வாறு மின் அணுச்சாதன முதல்தர தேசமாக மாற்றிக் காட்டினார் என்பதையும் விவரிக்க என்
உள்ளம் மிகவும் விழைகின்றது.

திரு லீ அவர்கள் எளிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்தான் என்றாலும் தமது இடைவிடா முயற்சியாலும்
தளராத உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்து பாரினில் தலை நிமிர்ந்தார்.

113
“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவில்லா
ஊக்கம் உடையான் உழை”

தளராத ஊக்கம் உடையவனிடம் செல்வம் தானே சென்று சேரும் என்று திருவள்ளுவர் சொன்னதைப்போல
அயராது உழைத்த திரு லீயிடம் எல்லாச் சிறப்பும் தானே வந்து சேர்ந்தன. திரு லீ அவர்கள், லண்டனில் சட்டம்
பயின்று சிங்கை வந்து வழக்கறிஞராகத் தமது வாழ்க்கைத் தொழிலைத் தொடர்ந்தார். அத்தொழிலையே தொடர்ந்து
செய்து அவர் ஒரு பெரும் பணக்காரராக ஆகியிருக்கக்கூடும். ஆனால், அவர் அவ்வாறு தமது தொழிலைத்
தொடரவில்லை. இயல்பிலேயே அவர் ஒரு போராளி என்பதனால் ஜப்பானியர், பிரிட்டிஷார் என எவருக்கும் தமது
நாட்டை ஆட்டிப் படைக்கும் அதிகாரம் இல்லை என்னும் உறுதி அவர் மனத்தினுள் ஆழமாகப் படிந்தது.
மாற்றாரின் ஆதிக்கக் காலத்தில் அவருக்குக் கிடைத்த வாழ்க்கை அனுபவங்கள் அவரது மனத்தில் மாறா
வடுக்களை ஏற்படுத்தின.

மலாயாவுடன் இணைந்து மலேசியக் கூட்டரசு உருவாவதன் வழி, சிங்கப்பூருக்குக் கிடைக்கும்


சுதந்திரத்திற்காகத் திரு லீ போராடினார். அக்கனவு மெய்ப்பட அயராது முயன்று வெற்றி கண்டார். ஆனால்,
சிங்கப்பூர் மலாயாவிலிருந்து பிரிந்து வந்த தருணம் அவருக்குத் துயர் மிகுந்த மிகப்பெரிய சவாலாக இருந்தது.
“இன்னும் பத்து ஆண்டுகளில் உயர்ந்த உலக நாடுகளில் ஒன்றாகச் சிங்கப்பூரை உயர்த்திக் காட்டுவேன்” என திரு
லீ சூளுரைத்தார். பிரிவினை உண்டாக்கிய சிதைவுகளைக் கண்டு அஞ்சாது ஒரு புதிய தேசத்தை உருவாக்கினார்.
எந்தவொரு தனிப்பட்ட இனம், மொழி, மதம் ஆகியனவற்றின் அடிப்படையில் அமைக்காமல் பல இன, பல சமய
நாடாகச் சிங்கப்பூரை நிலைபெறச் செய்தார்; ‘யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனார் கூற்றை
உண்மையாக்கினார். எல்லையில்லாச் செயல் திறனும், எடுத்த முடிவில் உறுதியும் கொண்டு சிங்கப்பூரின்
தலைவிதியையே புரட்டிச் சாதனை படைக்கும் நாடாக மாற்றிச் சரித்திரம் படைத்தார்.

திரு லீ அவர்கள் இளம் தலைமுறையினருக்கு உலகத்தரம் வாய்ந்த உயர் கல்வி, மோதல்களும் வேலை
நிறுத்தங்களும் இல்லாத் தொழில் துறைகள், தடையில்லா வேலை வாய்ப்பு, அடுக்கு மாடிக் குடியிருப்புகள், மிக
நவீனப் போக்குவரத்து வசதிகள், புதிய தகவல் தொடர்புக் கருவிகள் என யாவும் அனைவருக்கும் கிடைக்கச்
செய்தார். ஊழலற்ற தூய்மையான அரசு நிர்வாகம், மக்களைப் பாதுகாக்கும் கடுமையான சட்ட திட்டங்கள்,
குற்றங்களுக்குப் பாரபட்சமற்ற தண்டனைகள், தூய்மையான சுற்றுப்புறங்கள் எனச் சிங்கப்பூர் மக்கள்
அனைவரையும் முதல்தரக் குடிமக்களாக நிலைபெறச் செய்தார்.

திரு லீ அவர்கள், ஆட்சித் திறமையும் அரசியல் நுணுக்கமும் மட்டுமே பெற்றவர் அல்லர்; தனிப்பட்ட
வாழ்க்கையில் மிக எளிமையானவர்; ஆடம்பரம் அற்றவர்; காட்சிக்கு எளியவர்; காலம் தவறாதவர்; பழைமையை
மதிப்பவர்; புதுமையை வரவேற்பவர். இவ்வாறு, எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். அதற்கு ஏடுகள் பல
தேவை. அவர், சிங்கைக்கு ஆற்றியது அரும் பெரும் சேவை.

‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடினார். அதைப் போல இன்றைய
நவீன சிங்கப்பூரின் ஒவ்வொரு சாதனையிலும், முன்னேற்றத்திலும், புகழிலும் சரித்திரத்திலும் அடிப்படையாய்ப்
பின்புலமாய் அமைந்து அவரே சிங்கை முழுதும் காட்சி தருகின்றார். சிங்கப்பூரைத் தமது நாடி, நரம்பு, குருதி,உயிர்
என எல்லாவற்றாலும் நேசித்த அப்பெருமகனாரே எனது உள்ளத்தை விட்டு அகலாத அரும் பெரும் மனிதராவார்.
வாராது வந்த மாமணியாம் அப்பெருமகனார் மீண்டும் பிறந்து சிங்கையின் தலைமையை ஏற்க வேண்டும்; அவரை
முன்னுதாரணமாகக் கொண்டு உலகம் மேலும் உயர வேண்டும்.

அருஞ்சொற்பொருள்
114
நொந்தே வருந்தியே கேளிர் உறவினர்

மாயினும் இறந்தாலும் புரட்டி மாற்றி

உன்னத மிக உயர்ந்த நவீன புதுமையான

பூரிக்கின்றது மகிழ்கின்றது பாரபட்சமற்ற நடுநிலையான

விந்தை அதிசயம் நுணுக்கமும் நுட்பமும்

விழைகின்றது விரும்புகின்றது அற்றவர் இல்லாதவர்

போராளி போர்க்குணத்தவர் பின்புலமாய் பின்னணியாய்

வடுக்களை தழும்புகளை அகலாத நீங்காத

தருணம் நேரம்

சிதைவுகளை அழிவுகளை

பயிற்சி வினா 41 மற்றும் 42


கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

41. விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தால் உன் மனம் வருத்தமடைந்தது. அது
என்ன சம்பவம் என்றும், அது உன்னை வருத்தமடையச் செய்ததற்கான காரணத்தையும்
விவரித்து எழுதுக.

முன்னுரை விளக்கம்

● தவறு என்பது தவறிச் செய்வது


● செய்த தவற்றுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்
● மன்னிப்புக் கேட்கத் தெரியாதவன் மனிதனல்ல
● செய்த தவற்றை மீண்டும் செய்தல் கூடாது

115
● தவறுமேல் தவறு செய்வது மன்னிக்க முடியாத தவறு

கருத்து 1 விரிவாக்கம்

சம்பவம் ● அனைத்துப் பள்ளிக் காற்பந்து விளையாட்டுப் போட்டி


● அதற்கான பயிற்சி
● இறுதிப் போட்டி - நிச்சயம் வெல்ல வேண்டும்
● பள்ளி முடிந்து பயிற்சி
● ஆசிரியர் கண்காணிப்பு இல்லை
● காற்பந்துக் குழுவில் இருக்கும் மாணவர்கள் மட்டும்

கருத்து 2 விரிவாக்கம்

சம்பவம் ● மாணவர்கள் கடும் பயிற்சியில் ஈடுபடல்


● எதிர்க் குழு அதிகக் கோல் போட்டது
● எதிர்க் குழு வெற்றி அடையும் தருணம்
● உன் நண்பன் வேண்டுமென்றே தப்பாட்டம் ஆட முயற்சி
● எதிர்க் குழுவின் ஆட்டக்காரனின் காலை வேண்டுமென்றே
மிதித்தல்

கருத்து 3 விரிவாக்கம்

சம்பவம் ● அதை நீ கண்டுவிட்டாய்


● எதிர்க்குழுவில் உள்ள நண்பன் கால் வலியால் கீழே விழுதல்
● உன் நண்பன் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துதல்
● உனக்கு அதில் உடன்பாடில்லை
● அடிபட்ட நண்பனுக்கு உதவுதல்
● நடுவர் விளையாட்டை நிறுத்தும்படி கட்டளை விதித்தல்

கருத்து 4 விரிவாக்கம்

மனம் வருந்தியதற்கான ● நண்பனின் செயல் மனவருத்தத்தை அளித்தது


காரணம் ● அவனை மன்னிப்புக் கேட்கச் சொல்லுதல்
● நண்பன் மறுத்தல்
● விளையாட்டில் போட்டி இருக்கலாம், பொறாமை
116
இருக்கக்கூடாது என்று அறிவுரை கூறுதல்
● உண்மையாக விளையாடி வெற்றி பெறுவதே உண்மையான
வெற்றியின் அடையாளம் என்றுரைத்தல்
● நண்பன் செவிசாய்க்கவில்லை
● மனம் வருந்தினாய்

முடிவுரை ● தவறுகள் செய்வது இயற்கை


● ஆனால் அவற்றை உணர்ந்து நடப்பதே மனித குணம்
● திருந்தாதவனுக்குத் தக்க தண்டனை உண்டு
● திருந்தும்போது பாதிப்புப் பெரிதாக அமையக்கூடும்

117
கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:
● தவறு என்பது தவறிச் செய்வது - தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் - தப்புச் செய்தவன் வருந்தியாகணும்
● தவறுகள் மனிதனின் பழக்கம் - அதை உணர்ந்தால் மன்னிப்புக் கிடைக்கும்
● உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் - தப்பைச் செய்தவன் தண்டனை பெறுவான்
● அலறல் சத்தம் எங்கும் எதிரொலித்தது
● சுருண்டு கீழே விழுந்தான்
● கல்மனம் படைத்தவன்
● நண்பன் என்று கூறிக்கொள்ளவே வெட்கப்பட்டேன்
● அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கேட்கும்
● தவறுகள் வருந்துவதற்காக அல்ல - திருந்துவதற்காக
● அடுத்தவர் சொல்லித் தெளிவது அறிவு
● அறிவுரை என்பது முட்டாளுக்குப் பயனற்றது
● குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்
● மனச்சாட்சியே சிறந்த நீதிபதி
● விரோதம் என்பது மறைந்திருக்கும் வியாதி

அருஞ்சொற்பொருள்

தப்பாட்டம் தவறாக விளையாடுவது

உடன்பாடில்லை ஒத்துக்கொள்ளவில்லை

கல்மனம் அன்பில்லாத மனம்

குறுகுறுக்கும் அலைபாயும்

விரோதம் பகை

118
42. உதவும் மனப்பான்மையை எவ்வாறு சிங்கப்பூரர்களிடையே வளர்க்கலாம் என்பதற்கான
ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் விளக்கி எழுதுக.

முன்னுரை

➢ உதவும் மனப்பான்மை - என்றால் என்ன?


➢ உதவி தேவைப்படுபவர்கள் யாவர்?
➢ சிங்கப்பூரர்கள் ஏன் உதவும் எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்?
➢ பிறருக்கு உதவுவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

இடையுரை

➢ உதவி தேவைப்படுவோர் - முதியோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோர்


➢ எப்படிப்பட்ட உதவி - நிதி உதவி, மனநல உதவி, உணவு, உடை வழங்கும் உதவி, கல்வியில் உதவி
➢ உதவி தேவைப்படும் இடங்கள் – முதியோர் இல்லம், ஆதரவற்ற குழந்தை இல்லங்கள், ஊனமுற்றோர்
இல்லங்கள்)
➢ பெற்றோர் முன்னுதாரணமாக இருத்தல்
➢ பிள்ளைகளைச் சமூகச் சேவைகள் செய்ய ஊக்குவித்தல்
➢ வீட்டில் பெற்றோருக்கு உதவுதல், தம்பி தங்கையருக்கு உதவுதல்
➢ பொது இடங்களில் உதவி தேவைப்படுவோருக்கு மனமுவந்து உதவுதல்
➢ முதியோர் இல்லங்களுக்குச் சென்று முதியோருக்கு உணவு பரிமாறுதல், நிகழ்ச்சிகள் படைத்தல், உரையாடி
மகிழ்தல்
➢ பள்ளிகள் மாணவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும்
➢ கல்விச் சுற்றுலா, கல்வி முகாம் போன்ற நடவடிக்கைகளில் உதவும் நோக்கத்தைக் கொண்டு வரலாம்
➢ நிதி திரட்டும் திட்டம், கொடிதினம் போன்ற நடவடிக்கைகளை நடத்தலாம்
➢ அண்டைவீட்டாருக்கு உதவி செய்யலாம் (எ.கா - அவர்கள் இல்லாத சமயம் வீட்டைப் பார்த்துக்கொள்வது,
கடைகளுக்குச் சென்று பொருள் வாங்கிக்கொடுப்பது)
➢ பொதுப் போக்குவரத்துகளில் முதியோருக்கு இடம்கொடுத்து உதவுதல்

119
➢ அரசாங்கம் உதவும் மனப்பான்மையை மையமாகக்கொண்டு சாலைக்காட்சிகள் போன்றவற்றை நடத்தி
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்
➢ பேரிடர்களில் சிக்கித் தவிக்கும் அயல் நாடுகளைப் பற்றி எடுத்துரைத்து அதற்காக நிதிதிரட்டும்
நடவடிக்கைகளை அறிமுகம் செய்யலாம்
➢ பயன்படுத்திய புத்தகங்கள், பொம்மைகள், உடைகள் போன்றவற்றைக் குப்பையில் போடாமல் அதை
இல்லாதவருக்குக் கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கலாம்
➢ விரைவு உணவகங்களில் பணிபுரியும் முதியோருக்குச் சாப்பிட்டு முடித்த தட்டுகளைத் தானே அகற்றி,
உதவலாம்

முடிவுரை

➢ நாம் பிறருக்கு உதவினால்தான் மற்றவர்கள் நமக்கு உதவுவார்கள்


➢ உதவி என்பது பிரதிபலன் எதிர்பார்க்காமல் வர வேண்டும்
➢ உதவி செய்யும் மனப்பான்மை மனிதப் பண்புகளுள் ஒன்று
➢ பிறருக்கு உதவுவதால் நமக்கு மனத்திருப்தி, மனநிம்மதி ஏற்படும்

இனிய தொடர்கள்

➢ இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்

➢ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்


➢ செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது

➢ காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

➢ நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

➢ எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

120
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

➢ முன்கை நீண்டால்தான் முழங்கை நீளும்


➢ செய்த உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது
➢ தர்மம் தலைகாக்கும்
➢ உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாதே

அருஞ்சொற்பொருள்

மையமாக நோக்கமாக

பேரிடர்களில் பெருந்துன்பங்களில்

ஒறுத்தல் தண்டித்தல்

வையகமும் பூலோகமும்

ஞாலத்தின் உலகத்தின்

உய்வு வாழ்வு

உபத்திரம் தொல்லை

தொகுதி 15

Model Compo - மாதிரிக் கட்டுரை


43. நட்பின் சிறப்பை உனக்கு உணர வைத்த ஒரு சம்பவம் பற்றி விளக்கி எழுதவும்

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே


இடுக்கண் களைவதாம் நட்பு”

என்று நட்பிற்கு இலக்கணம் வகுத்தவர் வள்ளுவப் பெருந்தகை. நாம் பலருடன் பழகினாலும் அனைவருமே
நமக்கு உற்ற நண்பர்களாகி விடுவதில்லை. நண்பர்கள் இல்லாத வாழ்க்கை பூக்கள் இல்லாச் சோலை போன்றது. என்
தோட்டத்திலும் அப்படியொரு நண்பன் பூத்திருந்தான். பாலைவனமாக இருந்த என் வாழ்க்கையைப் பூத்துக்
குலுங்கும் சோலைவனமாக மாற்றினான்.

121
‘உன் நண்பனைப் பற்றிச் சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்றார் விவேகானந்தர். ஏனென்றால் நம்
வாழ்வில் பெரும் பங்கு வகிப்பவர்கள் நண்பர்களே. நான் என் பெற்றோருக்கு ஒற்றைப் பிள்ளை. என் பெயர்
பிரவீன். என் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் பள்ளி முடிந்ததும் நான் என்றுமே வீட்டிற்குச்
சென்றதில்லை. பல மணி நேரம் நண்பர்களுடன் செலவழித்த பின்னர் தான் வீட்டிற்குச் செல்வேன். நான் நன்றாகப்
படிக்கும் மாணவன் என்றாலும், புதிய நண்பர்களின் சேர்க்கையால் முதலில் படிப்பில் என் கவனம் சிதறத்
தொடங்கியது. வரிசையாகத் தீயபழக்கங்கள் என்னிடம் வந்துசேர்ந்தன. என் பெற்றோரின் அறிவுரைகளைச் சிறிதும்
மதிக்காமல் கண்மூடித்தனமாகத் திரிந்தேன். என் நண்பர்களில்லா வாழ்க்கை நரகம் என நினைத்து அவர்களுடன்
மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தேன். ‘கூடாநட்புக் கேடாய் முடியும்’ என்ற பழமொழியைக் கற்றறிந்தும் அதைப்
பற்றித் துச்சமும் எண்ணாமல் என் வாழ்க்கையைத் தீய நண்பர்களுடன் உல்லாசமாகக் கழித்திருந்தேன்.

அப்போதுதான் நவீன் என்னும் ஞான ஒளி என் வகுப்பறைக்குள் வீசியது. புன்முறுவல் நிறைந்த முகம்,
செந்நிற மேனி, கருஞ்சுருட்டைக் கேசம், அளவான உடற்கட்டு, அனைவரிடமும் கலகலப்பாகப் பழகும் இயல்பு
இவற்றுடன் எங்கள் வகுப்பில் புதிதாக வந்து சேர்ந்தான் நவீன். ஆனால், அதற்கும் மேலாக, “நேற்று நடந்த வகுப்புத்
தேர்வில் நவீன்தான் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறான்,’’ என்று ஆசிரியர் அறிவித்ததும், படிப்பிலும் அவன்
புலி என்பதை நான் அறிந்துகொண்டேன்.

எனக்கென்று ஒரு நண்பர் வட்டம் இருந்ததால் நவீனை நான் அதிகமாகக் கண்டுகொள்வதில்லை. ‘இலை
மேல் உள்ள பனித் துளி போலத்’ தான் அவனுடன் நான் பழகினேன். அவனும் அப்படித்தான். என்னுடன் அதிகம்
பேசுவதில்லை. ஆனால், என்னைக் கண்டபோதெல்லாம் அவனின் முகத்தில் புன்முறுவல் மலர்ந்திருக்கும். நாட்கள்
செல்லச் செல்லப் புன்முறுவல் இதழ்விட்டு எங்கள் நட்பும் விரிந்தது.

‘பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்’ என்பது போல நவீனுடன் நான் நெருக்கமடைய நெருக்கமடைய
என்னுடைய பாதையிலும் மணம் வீசத் தொடங்கியது. தீய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்துப் படிப்பில் கவனம்
செலுத்துமாறு நவீன் என்னைத் தொடர்ந்து வலியுறுத்த ஆரம்பித்தான். அது தொடக்கத்தில் எனக்குக் கோபத்தை
விளைவித்தாலும் ‘வாழைப் பழத்திற்குள் ஊசியை ஏற்றுவதுபோல’ நவீன் என் நல்லதுக்குத்தான் சொல்கிறான்
என்பதை உணர்ந்தேன். ‘உனக்கென்ன எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறாய், என்னைப் பார்! என் பெற்றோர்
என்னைக் கவனிப்பதே இல்லை, எனக்கு வீட்டிற்குச் செல்லவே பிடிக்கவில்லை. அதனால்தான் நண்பர்களுடன்
சுற்றுகிறேன்’ என்று ஒருமுறை நவீனுடன் சண்டை பிடித்தேன். அதற்கு அவன் கூறிய பதில் இன்றும் என் மனத்தில்
‘பசுமரத்தாணி போல’ உள்ளது.

“பிரவின், உனக்குத் தெரியுமா? எனக்கு அப்பா கிடையாது. என் அம்மா கஷ்டப்பட்டு இரண்டு வேலை
பார்த்து என்னைப் படிக்க வைக்கிறார். அவரும் நான் பள்ளி முடிந்து வரும்போது வீட்டில் இருப்பதில்லை,
வேலைக்குச் சென்றுவிடுவார். அவர் எனக்காகத்தான் உழைக்கிறார் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். என்
கடமை என்ன என்பதை நான் புரிந்துகொண்டேன். அவருக்கு நான் செய்யும் ஒரே கைம்மாறு நன்றாகப் படிப்பது
மட்டும்தான். மாறி வரும் நவீன காலத்தில் ஒருவருக்குக் கல்வி மிக அவசியம்.

“கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு


மாடல்ல மற்றை யவை”

122
என்பது வள்ளுவர் வாக்கு. இவ்வயதில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் நம்மைச் செதுக்கி நல்ல
பாதையில் இட்டுச் செல்ல வேண்டும். உன் பெற்றோர்கள் உன் வளமான எதிர்காலத்திற்குப் பொருள் ஈட்டுகிறார்கள்.
அதை முதலில் உணர்ந்துகொள். ஆனால், இறுதி வரை நம்முடன் வருவது கல்வி மட்டுமே. நீ நன்றாகப் படிக்கும்
மாணவன். உன் கவனத்தைச் சிதற விடாமல் படிப்பில் கவனம் செலுத்தி உன் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்,”
என்று அக்கறையுடன் கூறினான்.

அன்று நவீன் எனக்குள் விதைத்த சிறு பொறி என் வாழ்க்கைப் போக்கையே மாற்றியது. ‘எரிகின்ற
விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்’ என்பது போல நான் நன்றாகப் படிக்கத் தொடங்கினேன். ஆனால்
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. எனக்குக் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் கலந்து
கொள்ள ஆர்வம் இருந்தாலும் தயக்கத்தினால் இதுவரை கலந்துகொண்டதே இல்லை.

ஆனால், நவீன் இதற்கு முன் உள்ள பள்ளியில் பலமுறை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள்
வாங்கியதைப் பற்றி என்னிடம் கூறியிருக்கிறான். அன்று பல பள்ளிகள் பங்கு பெறும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
நடைபெறப் போவதாகவும் மாணவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறும் ஆசிரியர் கூறியவுடன்,
முதல் மாணவனாக நவீன் தன் பெயரைக் கொடுத்தான். பின்னர் நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது
போட்டிகளில் ஆர்வம் இருந்தும் தயக்கம் காரணமாக நான் கலந்து கொள்ளாததைப் பற்றிக் கூறினேன். ஒவ்வொரு
வகுப்பிலும் ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதால், நவீன் தன் பெயரை எடுத்துவிட்டு என் பெயரைக்
கொடுத்துவிட்டான். அதை அறிந்து முதலில் நான் அவன் மீது கோபப்பட்டாலும், அவன் கூறிய சொற்கள் என்னை
நெகிழ வைத்தன. “பிரவீன் உன் திறமையை நிரூபிக்கும் நாள் வந்து விட்டது. அனைவருக்கும் அதை நீ உணரச்
செய்ய வேண்டும். இதன் மூலம் உன் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைக்கலாம்” என்று எனக்கு
நம்பிக்கையூட்டினான்.

என் திறமையை மெருகேற்றி, என்னிடம் நம்பிக்கை விதையை ஊன்றினான். பேச்சுப்போட்டியில் முதல்


பரிசு எனக்கே கிடைத்தது. அவன் பங்கேற்றிருந்தால் நிச்சயமாக முதல் பரிசு அவனுக்கே கிடைத்திருக்கும். ‘விட்டுக்
கொடுத்தல்’ நட்பின் உயரிய குணங்களில் ஒன்று. அதை எனக்காக நவீன் செய்தான். என் திறமைகள் மெருகேறத்
தொடங்கின. இன்று நாங்கள் வெவ்வேறு துறைகளில் படித்துக் கொண்டிருந்தாலும் இணை பிரியா நண்பர்களாகவே
இருக்கிறோம். சிறந்த பண்பு, நல்லொழுக்கம், சீரிய குணம் படைத்த ஒருவனை நண்பனாக அடைந்ததை எண்ணி
நான் பெருமைப்படுகிறேன்.

ஒருவரின் முன்னேற்றத்திற்கு நட்பு உதவ வேண்டுமே ஒழிய, வீழ்ச்சிக்குக் காரணமாக அமையக் கூடாது.
ஔவையார் அதியமான் நட்பைப் பற்றி இவ்வுலகம் அறிந்ததே. ‘அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்’
என்பதற்கேற்ப, நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது நம் கைகளில்தாம் உள்ளது. ஒருவனுக்கு நல்ல நண்பர்கள்
அமைந்தால் அவன் வாழ்க்கை என்றுமே ‘குன்றின் மேலிட்ட விளக்கு’ போலப் பிரகாசமாக அமையும் என்பதில்
ஐயமில்லை.

அருஞ்சொற்பொருள்
கண்மூடித்தனமாக முட்டாள்தனமாக
துச்சமும் சிறிதும்

123
கேசம் தலைமுடி
கைம்மாறு உதவி
செதுக்கி செய்து
பொறி துகள் (spark)
நெகிழ உருக
மெருகேற்றி மேம்பட

124
பயிற்சி வினா 44 மற்றும் 45
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

44. வாய்ப்புக் கிடைத்தபோது நீ அதைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறியதால், உன் முன்னேற்றம்


தடைபட்டுப் போனது. அது எவ்வாறு நடந்தது என்பதையும், அதன் மூலம் நீ தெரிந்துகொண்ட
உண்மைகளையும் விவரித்து எழுதுக.

முன்னுரை விளக்கம்

● வாய்ப்பு எப்போது எப்படி வரும் என்று தெரியாது


● எல்லாருக்கும் வரும்
● அடையாளங் காண வேண்டும்
● புறக்கணிக்கக்கூடாது
● மறுபடியும் வருமா என்று தெரியாது
● வாய்ப்பை நழுவவிடக்கூடாது

கருத்து 1 விரிவாக்கம்

சம்பவம் ● பொது அறிவில் நீ மிகவும் திறமைசாலி


● புத்தகங்கள், செய்தித்தாள்கள், இணையம்மூலம் நிறையத் தகவல்
சேர்ப்பாய்
● சந்தேகம் ஏற்பட்டால் உன்னைத் தேடி வருவார்கள்
● பொது அறிவுக் கேள்விகளில் புலி எனப் புகழ்பெற்றாய்

கருத்து 2 விரிவாக்கம்

சம்பவம் ● அனைத்து உலகப் பள்ளிகளுக்கான புதிர்ப் போட்டி


● கம்போடியாவில் நடைபெறவிருந்தது
● ஆசிரியர் உன்னைப் பங்கெடுக்கும்படி கூறினாய்
● ஒரு வாரம் அங்குத் தங்க வேண்டும்
● உனக்குக் கம்போடியா பிடிக்காத ஒரு நாடு
● அது அசுத்தமான நாடு என்பது உன் எண்ணம்

125
கருத்து 3 விரிவாக்கம்

சம்பவம் ● பெற்றோர் விடவில்லை என்று சாக்குப்போக்குக் கூறினாய்


● ஆசிரியர் இந்தப் போட்டியில் பங்கெடுப்பதால்
கிடைக்கப்போகும் மதிப்புகளையும் பரிசுகளையும் பற்றிக்
கூறினார்
● முதல் பரிசு அமெரிக்காவிற்குச் சென்று வரும் வாய்ப்பு, மேல்
படிப்புப் படிப்பதற்கான உபகாரச் சம்பளம்
● அனைத்துலகப் போட்டி என்பதால் நாட்டுக்கும் பெருமை

கருத்து 4 விரிவாக்கம்

ஏற்பட்ட பாதிப்பு ● அப்போதும் நீ செல்லவில்லை


● மற்ற நண்பர்கள் சென்றார்கள்
● நேரடி நிகழ்ச்சியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது
● வீட்டிலிருந்து கண்டாய் எல்லா வினாக்களுக்கும் உனக்கு விடை
தெரிந்திருந்தது
● வாய்ப்பைப் பயன்படுத்தாததற்காக வருந்தினாய்
● கம்போடியா நாட்டைப் பற்றியும் உன் நண்பர்கள் கூறினார்கள்
● உன் அறியாமை நீங்கியது

முடிவுரை ● வாய்ப்புகள் நம்மை மேம்படுத்தும் தன்மை கொண்டவை


● நாம் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் மற்றவர்க்குச் சென்றுவிடும்
● எதையும் அலட்சியமாக எண்ணக்கூடாது
● சிறு வாய்ப்புகள்தாம் மனிதனின் பெறும் முன்னேற்றத்திற்கு
வித்து

126
கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:
● வாய்ப்பு ஒருமுறைதான் கதவைத் தட்டும்
● தேடும்போது வராது போகும்போது சொல்லாது
● பொது அறிவின் பெட்டகமாக
● மாணவர்கூட்டம் சூழ்ந்திருக்கும்
● தட்டுங்கள் திறக்கப்படும்
● நாட்டைப் பிரதிநிதிக்கும் உன்னத வாய்ப்பு
● சேறும் சகதியுமான
● கழிவறை வசதிகூட இல்லாத குடிசைகள்
● விரல் நுனியில் பதில்கள் இருந்தன
● கைநழுவிப் போனது
● எடுத்துவைத்திருந்தாலும் கொடுத்துவைத்திருக்க வேண்டும்
● வலிய வந்த சீதேவியை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டோமே
● மீண்டும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ?

அருஞ்சொற்பொருள்

நழுவ விட விட்டுவிட

சாக்குப்போக்கு வலுவற்ற காரணங்கள்

உபகாரச் சம்பளம் படிப்புக்குத் தேவையான உதவி

அறியாமை தவறான எண்ணம்

வித்து விதை (தொடக்கம்)

பெட்டகமாக களஞ்சியமாக

உன்னத மிகச் சிறப்பு வாய்ந்த

127
45. சிங்கப்பூரர்கள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் - கருத்துரைக்க.

முன்னுரை

➢ பணம் வாழ்வதற்கு மிகவும் முக்கியம்


➢ பணம் ஈட்டவே அனைவரும் வேலை செய்கிறோம்
➢ வாழ்க்கைக்குப் பணம் தேவை, ஆனால் பணமே வாழ்க்கை இல்லை
➢ பணத்தைவிட அன்பு, பாசம், குடும்பப் பிணைப்பு போன்றவை மிகவும் முக்கியம்

இடையுரை

➢ போட்டித்தன்மை மிக்க நாடு


➢ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்ததையே கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்
➢ குடும்பத்திற்கு ஒரு பிள்ளையோ இரண்டு பிள்ளைகளோ தான் இருக்கிறார்கள்
➢ சிங்கப்பூரில் விலைவாசி அதிகம்
➢ வீட்டின் விலை மிகவும் உயர்வு
➢ பணம் இருந்தால்தான் மதிப்பு
➢ வாகனம் இல்லை என்றால் மற்றவர்கள் மதிக்கமாட்டார்கள் என்ற மனப்போக்கு
➢ பட்டயக் கல்விக்கு அதிகச் செலவாகும்
➢ உயர்தர உணவகங்களில் உணவு உண்ணுதல்
➢ திருமணங்கள், பிறந்த நாள் விழாக்களை ஆடம்பரமாகக் கொண்டாடுதல்
➢ மருத்துவச் செலவுகள் அதிகம்
➢ துணைப்பாட வகுப்புகளைப் பெற்றோர் அதிகம் நம்பியிருக்கிறார்கள்
➢ விடுமுறைகளை அதிகம் வெளிநாடுகளுக்குச் சென்று கழித்தல்
➢ மேற்கத்திய ஆடம்பரப் போக்கு
➢ நகை வாங்குவதில் அதிக ஆர்வம்
➢ வெளிநாட்டில் படிப்பதைப் பெருமையாக எண்ணுதல்
➢ முத்திரையிட்ட (branded) பொருள்களை வாங்குவதில் அதிக ஆர்வம்
➢ பணிப்பெண் வைத்துக்கொள்ளும் வாழ்க்கைச் சூழல்

128
➢ வீட்டைப் புதுப்பித்து அலங்கரிப்பதில் (renovation) அதிக ஆர்வம்
➢ கடன் அட்டை (credit card) பயன்படுத்திப் பொருள்கள் வாங்குதல்
➢ கடன் வாங்குதல்
➢ குறைந்த வருமானம்
➢ ஏட்டிக்குப் போட்டியான வாழ்க்கை முறை

முடிவுரை

➢ போதுமான அளவு மட்டுமே பணம் ஈட்ட வேண்டும்


➢ வெறும் பகட்டுக்காகப் பணம் செலவழிக்கக் கூடாது
➢ பணம் போனால் சம்பாதிக்கலாம்
➢ உறவுகள் பிரிந்துவிட்டால் இணைவது எளிதல்ல
➢ குடும்ப நேரத்தின் இன்றியமையாமை

இனிய தொடர்கள்

➢ அருளில்லாருக்கு அவ்வுலகம் இல்லை – பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை


➢ பணம் பத்தும் செய்யும்
➢ பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்
➢ இல்லாரை எல்லாரும் எள்ளுவர், செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு
➢ பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது

பணம் இல்லை என்றால் யாருக்கும் உன்னைத் தெரியாது


➢ காசேதான் கடவுளப்பா அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா
➢ பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும்
➢ அளவுக்கு மீறிப் பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும்
➢ பணத்தின் உண்மையான மதிப்பு, பிறரிடம் கடன் கேட்கும்போது தான் தெரியும்
➢ கடன் நட்பை முறிக்கும்
➢ பொருளுக்கு மனிதன் அடிமை, ஆனால் பொருள் யாருக்கும் அடிமையில்லை
➢ பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
➢ பணம் நல்ல பணியாள், ஆனால் மோசமான எஜமான்

129
அருஞ்சொற்பொருள்

விலைவாசி பொருள் விற்கும் விலை


பட்டயக் கல்வி உயர்கல்வி
பகட்டு மற்றவர்கள் பெருமை பேசுவதற்காக
எள்ளுவர் கேலி செய்வர்

பந்தி உணவு பரிமாறும் இடம் (திருமணத்தில் பந்தி இருக்கும்)

130
தொகுதி 16

Model Compo - மாதிரிக் கட்டுரை

46. விளையாட்டுத்தனமான ஒரு செயல் விபரீதத்தில் முடிந்தது. அந்தச் சம்பவத்தை விவரித்து


எழுதுக.

மனிதனுக்குப் பள்ளியில் ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தைவிட வாழ்க்கை என்னும் பள்ளியில் அனுபவங்கள்


கற்பிக்கும் பாடமே மிகச் சிறந்தது. அனுபவங்கள் இல்லாத மனிதன், படிப்பறிவே இல்லாத பாமரனுக்குச் சமம்.
எவ்வளவுக்கு எவ்வளவு அனுபவங்கள் கசப்பாக இருக்கின்றனவோ, அவ்வளவிற்கு அனுபவசாலி என அர்த்தம்.
எனக்கு நடந்த கசப்பான அனுபவம், இவ்வுடலும் உயிரும் தனியாய் வெவ்வேறு பாதைகளில் செல்லும் வரை
மறவாது.

மார்ச் பதினான்காம் தேதி, மற்றவர்களுக்கு இது இரண்டிலக்க எண்கள் கொண்ட ஒரு சாதாரணமான தினம்.
எனக்கோ, இன்று நான் இருபது வருடமாய்ச் சிறைத் தண்டனை அனுபவிக்கக் காரணமாய் இருந்த ஒரு தினம்.
அப்போது நான் ஓர் இளம் வயதுப் பெண்மணி. வாழ்க்கை என்னும் வாகனத்தில் உல்லாசப் பறவையாக நான்
வட்டமிட்டுக் கொண்டிருந்தேன். பிரச்சினை என்று கூறினால் கிலோ என்ன விலை என்று கேட்கும் வயது. எனக்குத்
தெரிந்த வார்த்தைகளெல்லாம் உல்லாசமும் நண்பர்களும்தான். ஆனால் அந்த இரண்டு வார்த்தைகள்தான் அன்று
என்னைச் சிறையில் தள்ளியது.

அன்று நானும் என் நண்பர்களும் உல்லாசப்பயணமாக ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரைக்குச் சென்றிருந்தோம்.


அங்கு உல்லாசம் என்னும் சொல்லிற்கு ஒரு புதிய வடிவத்தைத் தந்தோம். விடியற்காலை இரண்டு மணியாயிற்று.
நாங்கள் ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையை விட்டுக் கிளம்பினோம். எல்லோரும் தூக்கத்தில் தள்ளாடியவாறே
கடற்கரையிலிருந்து வெளியேறினோம். நாங்கள் கொண்டு வந்த வாகனத்தை ஓட்ட எல்லோருக்கும் கிலி. அதற்குக்
காரணம், தூக்கக் கலக்கத்தில் எங்கே விபத்து நடந்திடுமோ என்னும் அச்சம். அந்த வாகனத்தை ஓட்ட ஒரு
தைரியமானவள் முன் வந்தாள். அவள்தான் நான். என் மேல் எனக்கே உள்ள குருட்டு நம்பிக்கையில் வாகனத்தின்
சாவியை எடுத்து அதை ஓட்டத் தொடங்கினேன். “நீ வாகனத்தை ஓட்டுகிறாயா அல்லது மாட்டு வண்டியை
ஓட்டுகிறாயா” என்று என் நண்பன் கோபி கேட்டான். இதற்கு என் மற்ற நண்பர்களும் சேர்ந்து தாளம் போட்டனர்.
இதைக் கேட்ட எனக்குக் கோபம் எரிமலை போல் பொங்கியது.

வாகனத்தின் வேகத்தை நான் கூட்டக் கூட்ட எனக்கு மகிழ்ச்சியும் கூடியது. எனக்குப் பின்னால் என்
நண்பர்களின் கைத்தட்லோசை முழங்க, வாகனத்தின் வேகம் கூட, தூக்கம் என் கண்ணை மறைத்தது. அப்போது என்
முன் ஓர் உருவம் தோன்றியது. வினாடிகள் அதிகரிக்க, அந்த உருவம் இன்னும் தெளிவாகத் தெரிந்தது. வாகனத்தை
நான் நிறுத்துவதற்கு முன், அது அந்த உருவத்தின் மீது மோதியது.

வாகனத்திலிருந்து இறங்கிய நாங்கள் உயிரில்லா அவ்வுடலைப் பார்த்தோம். நான் கொன்ற அந்த நபர்
யாரெனப் பார்த்தபோது, என் உயிர் நாடி ஒரு வினாடி நின்றது. அந்த நபர் என் உயிர்த் தோழி மாலா. எனக்காக
அவள் உயிரையும் கொடுப்பாள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அதற்கு அர்த்தம் இதுதான் என்று
131
நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அப்போது காவலர்களின் வாகன ஒலி எங்கள் செவிகளுக்கு எட்டியது. என்
மற்ற நண்பர்கள் அனைவரும் பயந்து ஓடத் தொடங்கினர். அதிர்ச்சியும் துக்கமும் என் கால்களைக் கட்டிப்
போட்டன. மறு நிமிடம் நான் சிறைச்சாலையில் இருந்தேன்.

நீதிமன்றத்தில் நீதிபதி எனக்குத் தூக்குத் தண்டனையை விதித்தார். மாலாவின் நினைவில் அணு அணுவாய்
இறப்பதைவிட, ஒரேயடியாய்த் தூக்கிலிட்டு இறப்பது எனக்குப் பெரும் பாக்கியமாய் இருந்தது. ஆனால், திடீரென
நீதிபதி என் தண்டனைக் காலத்தைக் குறைத்து எனக்கு இருபது வருடம் சிறைத் தண்டனையை விதித்துவிட்டார்.
நான் எவ்வளவு கெஞ்சியும் அவர் செவி சாய்க்கவில்லை.

சிறையில் இருந்த நான்கு சுவர்களும் என்னைக் கைகாட்டி அனுதினமும் குற்றம் சாட்டின. “பாதகி,
உனக்காக உயிரை விடுவேன் என்று கூறிய உயிர்த்தோழியின் உயிரைப் பறித்துவிட்டாயே. சுயலக்காரி. உன்
அத்துமீறிய சந்தோஷத்திற்காக உன் தோழியின் உயிரை அறுத்துவிட்டாயே! உன் தோழியின் குடும்பத்தாரைத் தீராத
துன்பத்தில் தள்ளிவிட்டுவிட்டாயே! இவற்றுக்கெல்லாம் நீ நிச்சயம் அனுபவிப்பாய். தூக்கில் போட்டுவிட்டால் ஒரே
நொடியில் இறந்துவிடலாம் என்று எண்ணுகிறாயா? கடவுள் உன்னை அணுஅணுவாகச் சித்திரவதை
செய்வதற்காகத்தான் தண்டனைக் காலத்தை நீட்டித்திருக்கிறான். அனுபவி!,” என்று என்னைக் கொல்லாமல்
கொன்றன.

என் மனச்சாட்சி என்னை உறுத்தியது. சிறையிலிருக்கும் சுவர்கள்மீது முட்டிமோதிப் பலமுறை உயிரை


மாய்த்துக்கொள்ள முயன்றேன். ஆனால், விதி அதற்கும் வழிவிடவில்லை. கண்களை மூடும் போதெல்லாம்
மாலாவின் முகம்தான் தோன்றியது. இந்த இருபது ஆண்டுகள் சிறையில் நான் பட்ட இன்னல்களுக்கு அளவே
இல்லை. என் ஜென்ம விரோதியும் இப்படிப்பட்ட துன்பத்தை அனுபவிக்கக்கூடாது என்று கடவுளை
வேண்டிக்கொண்டேன்.

‘சிறைக்கதவு திறந்து என்னை வெளியில் விட்டது. ஆனால், என் மனக்கதவு திறந்து என்னைக் குற்றமற்றவள்
என்று ஏற்க மறுத்தது.’ மாலாவின் இல்லம் நோக்கிச் சென்றேன். அவர்கள் இருந்த சுவடே அங்கில்லை. ஏதோ ஒரு
சீனக்குடும்பத்தினர் இப்போது அங்கிருக்கிறார்கள். அக்கம் பக்கம் விசாரித்துப் பார்த்ததில் மாலாவின் குடும்பத்தார்
எங்கு சென்றார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. அவளின் குடும்பத்திற்குச் சேவை செய்து நான் செய்த
பாவத்தைக் கழுவிக்கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால், அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது.

‘காலம்தான் எந்தத் துன்பத்திற்கும் தக்க மருந்து’ என்று யாரோ ஒரு தத்துவ மேதை கூறியதைப்
படித்திருக்கிறேன். மாலாவின் பிரிவில் என் மனம் சற்று ஆறியிருந்தாலும், அது ‘நீறு பூத்த நெருப்பாகத்தான்’
இருந்தது. நான் மாலாவின் குடும்பத்தை இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்களிடம் மண்டியிட்டு
மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறேன். நான் அன்று சிந்தியாமல் வேடிக்கைக்காகச் செய்த
செயல் இன்று என்னையே, கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்கிறது.

132
அருஞ்சொற்பொருள்
பாமரனுக்கு படிக்காதவனுக்கு
குருட்டு நம்பிக்கை முட்டாள்தனமான நம்பிக்கை
நாடி துடிப்பு
அணுஅணுவாய் சிறிது சிறிதாய்
பாக்கியமாய் வாய்ப்பாய்
அத்துமீறிய அளவுக்குமீறிய
சித்திரவதை கொடுமை
மாய்த்துக்கொள்ள முடித்துக்கொள்ள
இன்னல் துன்பம்
ஜென்மம் பிறப்பு
சுவடே அடையாளமே

133
பயிற்சி வினா 47 மற்றும் 48
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

47. இக்கால இளைஞர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது, நண்பர்களின் தகாத


சேர்க்கையும் ஆடம்பர வாழ்க்கைமுறையுமே என்ற கருத்தை நீ ஏற்றுக்கொள்வாயா? ஏன்?
(ஏற்றுக்கொள்கிறேன் என்ற அடிப்படையில் அமைந்த கருத்துகள்)

முன்னுரை விளக்கம்

● வாழ்வில் முன்னேற்றம் என்பது இன்றியமையாதது


● அதற்குக் கடின உழைப்பு அவசியம்
● முன்னேறுவதற்குப் பல வழிகள் உண்டு
● இக்கால இளையர்கள் அவற்றை உணர்ந்திருக்கவில்லை
● பொழுதை வீணாகக் கழிக்கிறார்கள்
● காலம் கடந்தபின் வருந்துகிறார்கள்

கருத்து 1 விரிவாக்கம்

தகாத சேர்க்கை ● தீய நண்பர்களின் சேர்க்கை


● கெட்ட பழக்கங்கள்
● புகைபிடித்தல், மது அருந்துதல், அடிதடியில் ஈடுபடுதல்,
போதைப்பழக்கம்
● பள்ளிக்கு ஒழுங்காகப் போகாமை, பள்ளி விதிகளை மதிக்காமை

கருத்து 2 விரிவாக்கம்

தகாத சேர்க்கையின் ● படிப்பு பாதிக்கப்படும்


விளைவுகள் ● ஒழுக்கக்கேடு, சீர்கேடு
● புகைபிடித்தல், மது அருந்துதல் உடற்கேடுகள்
● குடும்பத்தினர் புறக்கணிப்பு

134
● சமுதாயம் ஏற்றுக்கொள்ளாமை
● வேலை இன்மை
● தற்கொலை முயற்சிகள்

கருத்து 3 விரிவாக்கம்

ஆடம்பர வாழ்க்கை ● பகட்டுக்காக வாழ்தல்


● பணத்தை விரயமாக்குதல்
● பணத்தின் மதிப்புத் தெரியாது
● சேமிப்பு இல்லை
● ஆடம்பர உடை, விலையுயர்ந்த பொருள்கள் பயன்பாடு
● கடன் வாங்கிச் செலவு செய்தல்
● சோம்பேறித்தனம்

கருத்து 4 விரிவாக்கம்

ஆடம்பர வாழ்க்கையின் ● பணப் பற்றாக்குறை


விளைவுகள் ● கடன் தொல்லை
● கடன் முதலைகள்
● படிப்புக்குப் போதிய பணம் இல்லாமை – பாதிப்பு
● தேவையான பொருளை வாங்க இயலாமை
● நிம்மதியற்ற வாழ்வு

முடிவுரை ● விடாமுயற்சியே முன்னேற்றத்திற்கு வழி


● ஆடம்பரம் நம்மைக் கடனாளியாக்கிவிடும்
● வேண்டாத நட்பு வாழ்க்கையைப் பாழ்படுத்திவிடும்

கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:

● ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா


ஊக்கம் உடையான் உழை
● உழைப்பு உயர்வுக்கு அழைப்பு - ஊக்கத்தின் விழிப்பு
● ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

135
● ஊக்கமது கைவிடேல்
● உயர்வுக்குவழி உழைப்பு மட்டுமே
● குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
● கூடா நட்பு, கேடாய் முடியும்
● குடிக்கிறது கூழாம் கொப்புளிக்கிறது பன்னீராம்
● ஆடம்பரம் ஆபத்தின் அடையாளம்
● ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
● கடன் வாங்க வாங்க கஷ்டம்தான்
● எண்ணிச் செய்கிறவன் செட்டி - எண்ணாமல் செய்கிறவன் மட்டி
● ஆடம்பரம் அழிவைத் தரும்

அருஞ்சொற்பொருள்

கடன் முதலைகள் கடன் கொடுப்பவர்கள் (loanshark)

கைவிடேல் விட்டுவிடாதே

குறுக்கு வழி தவறான வழி

கொப்புளிக்கிறது துப்புவது

மட்டி முட்டாள்

136
48. துணைப்பாட வகுப்புகளினால் ஏற்படும் நன்மைத் தீமைகளைப் பற்றி விளக்கி எழுதுக.

முன்னுரை

➢ சிங்கப்பூரில் மாறிவரும் கல்வித்திட்டங்கள்


➢ சிங்கப்பூரில் துணைப்பாடத்தின் ஆதிக்கம்
➢ பெற்றோரின் எதிர்பார்ப்புகள்
➢ துணைப்பாடம் இல்லாமல் பிள்ளைகள் சிறப்புத் தேர்ச்சி அடைவதில்லை என்ற மனப்போக்கு
➢ இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல்

இடையுரை

 நன்மைகள்
➢ பாடங்களில் அதிக உதவி கிடைக்கிறது
➢ ஒவ்வொரு பாடத்திற்கும் தனிப்பட்ட கவனம் கிடைக்கிறது
➢ மாணவர்களுக்குப் பாடத்தில் ஏற்படும் ஐயங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ளலாம்
➢ வகுப்பறையில் ஐயங்களை ஆசிரியரிடம் கேட்கக் கூச்சப்படும் மாணவர்கள் துணைப்பாட ஆசிரியரிடம்
கேட்டுக்கொள்ளலாம்
➢ மாணவர்கள் வீட்டுக்கே துணைப்பாட ஆசிரியர்கள் வருவார்கள்
➢ எந்த நேரத்தில் பாடங்களில் ஐயங்கள் ஏற்பட்டாலும் துணைப்பாட ஆசிரியரைத் தொடர்புகொண்டு
கேட்கலாம்
➢ பெற்றோர்களின் தேவைக்கேற்பத் துணைப்பாட ஆசிரியர்கள் நடந்துகொள்வார்கள்
 தீமைகள்
➢ அதிகமான பணம் செலவாகும்
➢ துணைப்பாட ஆசிரியர்கள் கொடுக்கும் பாடத்தையும் பள்ளிப்பாடத்தையும் சமாளிக்க முடியாமை
➢ எல்லாத் துணைப்பாட ஆசிரியர்களும் ஆசிரியர் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லர்
➢ பாட நேரம் மாணவர்களுக்கு ஓய்வின்மையை ஏற்படுத்தும் வாய்ப்பு

137
➢ சில துணைப்பாட ஆசிரியர்கள் பணத்தையே நோக்கமாகக் கொண்டிருப்பார்கள்
➢ பெற்றோர்கள் துணைப்பாட ஆசிரியர்களைக் கண்காணிக்க இயலாது
➢ பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியைப் பற்றித் துணைப்பாட ஆசிரியர்கள் முறையாகப் பெற்றோரிடம்
தெரிவிக்கமாட்டார்கள்
➢ சில துணைப்பாட ஆசிரியர்கள் பிள்ளைகளிடம் தவறாக நடந்துகொள்ள முற்படுவார்கள்
➢ துணைப்பாடம் கற்பித்தல் முறைக்கும், பள்ளியில் பயிலும் முறைக்கும் வேறுபாடு இருக்கும்
➢ சிலர் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை, அடிக்கடி நேரத்தில் மாற்றம் செய்வார்கள்

முடிவுரை

➢ துணைப்பாடம் கட்டாயம் இல்லை


➢ உதவி தேவைப்பட்டால் பள்ளி ஆசிரியர்களை நாடலாம்
➢ அல்லது தேவையான பாடங்களுக்கு மட்டும் துணைப்பாடம் வைக்கலாம்
➢ அதிகக் கட்டணத்தை எதிர்பார்க்கும் துணைப்பாட ஆசிரியர்கள்தான் நன்றாகக் கற்பிப்பார்கள் என்பது
தவறான மனப்போக்கு
➢ பெற்றோர்கள் நன்கு ஆராய்ந்து பிள்ளைகளைத் துணைப்பாடத்தில் சேர்க்க வேண்டும்

இனிய தொடர்கள்

➢ அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு


➢ தன்கையே தனக்குதவி
➢ ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும்
➢ ஏட்டிக்குப் போட்டியாக
➢ வெள்ளம் வரும் முன்னே அணைகோல வேண்டும்
➢ முதலில் உன்னை நம்பு – பிறகு அடுத்தவரை நம்பு
➢ மின்னுவதெல்லாம் பொன்னல்ல
➢ அகல உழுவதைவிட ஆழ உழு
➢ இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை
➢ இருப்பதைவிட்டுப் பறப்பதற்கு விரும்புவதைப் போல
➢ காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
138
அருஞ்சொற்பொருள்

ஓய்வின்மை ஓய்வு இல்லாமல்

கண்காணிக்க நோட்டம் பார்க்க

முற்படுவார்கள் முயற்சிசெய்வார்கள்

நஞ்சு விஷம்

அகல விரிந்து

139
தொகுதி 17

Model Compo - மாதிரிக் கட்டுரை

49. மாணவர்களிடையே சமூக சேவையை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பதை விவரித்து எழுதுக.

‘மனிதன் என்பவன் ஒரு சமூக விலங்கு.’ அவன் தன் குடும்பம், நண்பர்கள், உற்றார் உறவினர்கள்,
அண்டைவீட்டார் ஆகியோரைச் சார்ந்தே வாழ்கிறான். இந்தச் சமூகத்தில் ஓர் உறுப்பினராக இருக்கும் மனிதர்களான
நாம் அதற்காக நம் சேவையை ஆற்றுவதில் கடமைப்பட்டிருக்கிறோம். இத்தகைய சேவையே சமூக சேவை
எனப்படுகிறது. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று தமது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் திருநாவுக்கரசர்.
பிரதிபலன் எதிர்பாராது, சுயநலம் கருதாது பொதுநலம் ஒன்றை மட்டுமே மனத்தில் நிறுத்தி மற்றவர்களுக்காகச்
செய்யும் இந்த அரிய சேவையை மாணவர்களுக்குச் சிறுவயதிலிருந்தே ஊட்டி வளர்க்க வேண்டும். ‘இன்றைய
இளையர்கள் நாளைய தலைவர்களாக’ முன்னேற்றம் காணும்போது அவர்களிடம் சமூக சேவை என்னும் மக்கட்
பண்பு நிறைந்திருக்க வேண்டும்.

‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.’ பல்கலைக்கழகத்தில் எவ்வாறு பல துறைகளைக்


கற்றுணர்கிறோமோ, அதுபோல் வாழ்க்கைக்குத் தேவையான பண்புகளைக் குடும்பத்தில் கற்றுக்கொள்கிறோம்.
குடும்பத்தில் நமக்கு ஆசான்களாக இருப்பவர்கள் நம் தாயும் தந்தையுமே ஆவர். எனவே, பெற்றோர்கள் நல்ல
முன்னுதாரணமாக இருந்து சமூக சேவையில் ஈடுபடும்போது பிள்ளைகளும் அவற்றைக் கண்டு எதிர்காலத்தில்
அவ்வாறே செய்வார்கள். எடுத்துக்காட்டாக, ஏழை எளியவர்களுக்கு நன்கொடை வழங்குதல், இரத்த தானம்
வழங்குதல் போன்ற அருஞ் சேவைகளைப் பெற்றோர்கள் ஆற்றும்போது தங்கள் பிள்ளைகளையும் உடன்
அழைத்துச் செல்வது அவர்களின் மனத்தில் உந்துதலை ஏற்படுத்தும். இந்த உந்துதலே பிள்ளைகளின் மனத்தில்
செயலாற்றும் மனப்பான்மையை வளர்த்து அவர்களைச் சமூக சேவைகளில் ஈடுபட வைக்கும்.

நமது சிங்கப்பூர்க் கல்வியமைச்சு, மாணவனை ஏட்டுக் கல்வியில் மட்டும் சாதனையாளனாக்காமல்


இருபத்தொன்றாம் நூற்றாண்டுத்திறன்கள் அத்தனையும் பெற்று முழுமைக் கல்வியில் சாதனையாளனாக்க அவனைத்
தயார்ப்படுத்துகிறது. இம்முழுமைக் கல்வியின் ஒரு கூறே பிறர் நலன் கருதுதல் என்னும் பண்பாகும். மாணவர்கள்
தங்கள் வீட்டில் இருப்பதைவிட, பள்ளியிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். அதனால், சமூக சேவையை
மாணவர்களிடம் ஊக்குவிப்பதில் பெரும்பங்கு பள்ளிகளையே சார்கிறது.

பள்ளியில் மாணவர்களை முதியோர் இல்லம், ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் போன்ற அமைப்புகளுக்கு


அழைத்துச் சென்று அங்குள்ள முதியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யச்
சொல்லலாம். கலந்துரையாடும் மாணவர்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தை
வளர்த்துக்கொள்வார்கள். முதியோரின் கண்ணீர்க் கதைகள், சிறுவர்களின் சோகக் கதைகள் என மாணவர்கள்
செவியுறும்போது அவர்களுள் ஒரு உந்துதல் தோன்றிப் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் துளிர்விடும்.
முதியோர்க்காகக் கலைப்படைப்பு, உணவுவகைகள், பரிசுப்பொருள்கள் போன்றவற்றைத் தயாரித்துப் படைக்கும்போது
மாணவர்கள் தங்கள் வாழ்வில் இருக்கும் அர்த்தத்தை உணர்வார்கள். கல்வி என்பது வெறும் ஏடும், எழுதுகோலும்
கொண்டதல்ல என்பதைப் பூரணமாகத் தெரிந்துகொள்வார்கள்.
140
இல்லங்களுக்கு அழைத்துச் செல்வதோடு, பள்ளிகள் சமூக சேவை செய்து அதன்மூலம் விருதுகள் பெற்ற
மாணவர்களை மற்ற மாணவர்கள் முன்னிலையில் மேடை உரையாற்றச் சொல்லலாம். அவர்களின் வாழ்க்கை
அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லலாம். உண்மைச் சம்பவங்களை எடுத்துரைக்கும்போது மாணவர்களுக்கு
முழு நம்பிக்கை பிறக்கும். அண்மையில், டாக்டர் குமரன் அவர்கள் இமயமலைவாழ் ஏழை மக்களுக்குத்
தொண்டாற்றுவதற்காக இமய மலை உச்சிக்கே சென்று நிதி திரட்டினார் என்ற செய்தியைச் செய்தித்தாளில்
படித்தபோது மெய்சிலிர்த்தேன், நானும் சமூகத்திற்காக ஏதாவது ஒரு வழியில் உதவ வேண்டுமென்று உறுதிபூண்டேன்!

மனித வளம் ஒன்றை மட்டுமே நம்பியிருக்கும் நமது சிங்கப்பூர், அந்த மனிதர்களுக்கு வளமூட்ட என்றுமே
தவறுவதில்லை. சமூக சேவை ஒன்றே மக்களின் கண்களைத் திறந்து அவர்களை ‘மனிதர்களில் மாணிக்கத்தை’
உருவாக்கும். சமூக சேவை என்பது எல்லாவற்றிலும் உகந்த சிறந்த சேவை என்று அரசாங்கம் மாணவர்களுக்குப்
பற்பல வகைகளில் உணர வைக்கிறது. நிதி திரட்டும் நிகழ்ச்சி, இரத்த நன்கொடை போன்ற நடவடிக்கைகள் மூலம்
சமூக சேவை பற்றிய விழிப்புணர்வை அரசாங்கம் மாணவர்களுக்கு அளிக்கிறது. அதுமட்டுமன்றி, சமூக சேவையின்
பயன்களையும் விளைவுகளையும் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, வானொலி மூலம் அறிவிக்கும்போது
மாணவர்கள் செவிசாய்ப்பார்கள். சிண்டா என்னும் இந்திய மேம்பாட்டுச் சங்கம் பல இளம் தொண்டூழியர்களை
உருவாக்கிறது. வசதி குறைந்த பிள்ளைகளுக்குத் துணைப்பாடத் திட்டம், வாசிப்புத் திட்டம் போன்ற பற்பல சமூக
சேவைகளை இக்கழகங்கள் தொடங்கி, அதில் நூற்றுக்கணக்கான இளம் சமூக ஊழியர்களை உருவாக்கியுள்ளது.
இத்திட்டங்கள் மாணவர்களை மேன்மேலும் சமூக சேவை செய்யத் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.

அதுமட்டுமில்லாமல், சமூக சேவையொட்டிச் சில குடியிருப்பு வட்டாரங்கள் போட்டிகளை நடத்தலாம்.


எடுத்துக்காட்டுக்கு, மிகச் சுத்தமான வீடமைப்பு வளர்ச்சிக் கட்டிடத்திற்குப் பரிசுகள் வழங்கலாம். குடும்பத்தோடு
‘கடற்கரையைச் சுத்தம் செய்தல்’, ‘பூங்காவை அழகுபடுத்துதல்’ போன்ற போட்டிகளை ஏற்பாடு செய்யலாம்.
இத்தகைய போட்டிகள் மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களைச் சமூக சேவையில் ஈடுபடுத்தும் என்பது
திண்ணம். ‘நாடென்ன செய்தது நமக்கு என்று கேட்காதே, நீ என்ன நாட்டிற்குச் செய்தாய் என்று கேள்’ என்றார்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் திரு கென்னடி.

இந்த நாடு நமக்கு உண்ண உணவு, இருக்க இடம், குடிக்கத் தண்ணீர் என்று எல்லாவற்றையும்
கொடுக்கும்போது, நாம் ஏன் இந்த நாட்டுக்குச் சமூக சேவை செய்து நம்மால் ஆனதைத் திருப்பிக்
கொடுக்கக்கூடாது? ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும்’ என்றார் ஒரு கவிஞர். இந்த உலகை விட்டுச்
செல்லும்போது நாம் எதையும் உடன் எடுத்துச் செல்வதில்லை. இருக்கும்போதாவது ஏன் மற்றவர்களின் வாழ்வில்
மகிழ்வினை உண்டாக்கக் கூடாது? பணம், பொருள், வாகனம், வீடு இவையாவும் நமக்குத் தற்காலிக மகிழ்ச்சியை
மட்டுமே கொடுக்கும். ஆனால், மன திருப்தி ஒன்றினைக் கொடுப்பது சமூக சேவை மட்டுமே ஆகும்.

அருஞ்சொற்பொருள்
ஆற்றுவதில் செய்வதில்
அர்ப்பணித்தார் முழுமையாகக் கொடுப்பது
பிரதிபலன் கைம்மாறு
141
உந்துதலை தூண்டுதல்
கூறே பகுதியே
துளிர்விடும் தொடங்கும்
எழுதுகோல் பேனா, பென்சில்
தொண்டாற்றுவதற்காக சேவை செய்வதற்காக
திரட்டினார் சேர்த்தார்

142
பயிற்சி வினா 50 மற்றும் 51
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

50. தண்ணீர் சேமிப்பின் அவசியத்தையும், அதைப் பற்றிச் சிங்கப்பூரர்களுக்கு வலியுறுத்த நீ கூறும்


வழிவகைகளையும் விளக்கி எழுதுக.

முன்னுரை விளக்கம்
● அத்தியாவசியப் பொருள்களுள் ஒன்று
● உயிர்வாழ முடியாது
● முக்கியத்துவத்தை அறிவதில்லை
● அதிகம் வீணாக்குகிறார்கள்
கருத்து 1 விரிவாக்கம்

தண்ணீர் சேமிப்பின் ● அவசரக் காலம் எப்போது வரும் என்று தெரியாது


அவசியம் ● நம்மிடம் இயற்கையான தண்ணீர் வசதி இல்லை
● நீர்த்தேக்கங்கள் குறைவு
● பெருகிவரும் மக்களுக்குப் போதாது
● வானிலை மாற்றங்கள் ஏற்படலாம்
கருத்து 2 விரிவாக்கம்

தண்ணீர் சேமிப்பின் ● பெரும்பாலான நீர் மலேசியாலிருந்து கிடைக்கிறது


அவசியம் ● எப்போது வேண்டுமானாலும் தடைபட்டுப் போகலாம்
● தண்ணீர்க் கட்டணத்தைச் சேமிக்கலாம்
● இதனால் பணத்தை மிச்சப்படுத்தலாம்
● சில நாடுகளில் குடிக்கும் தண்ணீர் கிடைப்பது அரிது
கருத்து 3 விரிவாக்கம்

தண்ணீரைச் சேமிக்கும் ● குடிக்கும் நீரைப் பாத்திரத்தில் நிரப்பி வைத்துக் கொள்ளலாம்


வழிமுறைகள் ● அடிக்கடி குழாயைத் திறப்பதைக் குறைக்கலாம்
● நீண்ட நேரம் குளிப்பதைத் தவிர்க்கலாம்
● பாத்திரங்களை ஓடும் தண்ணீரில் கழுவக்கூடாது
● நீர்க்குழாய்களைப் பயன்படுத்திய பிறகு இறுக அடைத்துவிடல்
வேண்டும்
கருத்து 4 விரிவாக்கம்

தண்ணீரைச் சேமிக்கும் ● அரிசி கழுவிய தண்ணீரைச் செடிகொடிகளுக்கு ஊற்றலாம்


வழிமுறைகள் ● துணிதுவைக்கும் இயந்திரத்திலிருந்து வெளிவரும் தண்ணீரைக்

143
கழிவறையைக் கழுவிவிடப் பயன்படுத்தலாம்
● மழைத் தண்ணீரைப் பிடித்துவைத்து வாகனத்தைக் கழுவலாம்
● செடிகொடிகளுக்கு நீர்பாய்ச்சுவதைத் தவிர்த்து, நீரைப் பிடித்து
ஊற்றலாம்
முடிவுரை ● தண்ணீர் சிங்கப்பூரில் கிடைக்கிறது என்பதற்காக அதை
வீணாக்கக்கூடாது
● முடிந்தவரை அதைச் சேமிக்க வேண்டும்
● சில ஊர்களில் குடிப்பதற்குத் தூய்மையான நீர் கிடைப்பதில்லை
● இருப்பதைப் போற்றிக் காக்க வேண்டும்

கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:

● தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே


● ஆரோக்கியமான உடலுக்குத் தூய்மையான தண்ணீர்
● சிறு துளி பெரு வெள்ளம்
● தண்ணீர் நமக்கு உயிர்நாடி போன்றது
● வெள்ளம் வரும்முன் அணைகோல வேண்டும்
● நீரடித்து நீர் விலகாது
● ஒவ்வொரு சொட்டும் ஒவ்வொரு காசு
● தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அணைக்கும்
● கடல் தண்ணீர் சமையலுக்கு ஆகாது
● தவித்த வாய்க்குத் தண்ணீர் வேண்டும்
● கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகாது

அருஞ்சொற்பொருள்

அத்தியாவசிய முக்கியமான
நீர்த்தேக்கம் குடிநீரைத் தேக்கிவைக்கும் இடம் (reservoir)
தடைபட்டு நிறுத்தப்பட்டு
பழித்தாலும் குறை சொன்னாலும்
அணை தடுப்பு

144
தவித்த தண்ணீர் இல்லாமல் வறண்டுபோன

51. உன்னுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வழி செய்த ஒரு சம்பவத்தை விளக்கி


எழுதுக

முன்னுரை

➢ தன்னம்பிக்கை என்பது - உள்ளுக்குள் இருக்கும் ஆற்றல், உன்னால் முடியும் என்று நம்புவது


➢ தன்னம்பிக்கை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்
➢ தன்னம்பிக்கை நமது ஆற்றலை மேம்படுத்தும், தைரியத்தை வளர்க்கும்
➢ தன்னம்பிக்கை இல்லாதவர்கள் மற்றவர்களையே நம்பியிருப்பார்கள்
➢ இது மற்றவர்களுக்கு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தாது

இடையுரை

➢ சிறுவயதிலிருந்து எனக்குத் தேவையான எல்லாவற்றையும் என் பெற்றோர் செய்வார்கள்


➢ தன்னம்பிக்கை இல்லாதவனாக வளர்ந்தேன்
➢ பள்ளியில் நன்றாகப் பேசும், எழுதும் மாணவர்கள் வட்டத்துடன் சேர்ந்துகொள்வேன்
➢ இதனால் குழு வேலைகளின் போது எனக்கு அதிக வேலை இருக்காது
➢ எப்போதும் என் நண்பர்களையே நம்பி இருப்பேன்
➢ என்னால் முடியும் என்று சிந்தித்துக்கூடப் பார்த்தது இல்லை
➢ ஆசிரியர் விவாதப் போட்டி ஒன்றைப் பற்றி அறிவித்தார் - அனைத்துப் பள்ளிப் போட்டி
➢ நால்வர் கொண்ட குழுவை ஆசிரியர் அமைத்தார்
➢ நான் தேவை ஏற்படின் பங்கெடுக்கும் (reserved) போட்டியாளர் - இருந்தாலும் எல்லாப் பயிற்சி
வகுப்புகளுக்கும் செல்ல வேண்டும்
➢ ஆனால் நான் போட்டியில் கலந்துகொள்ளத் தேவையில்லை என்ற மிதப்பில் இருந்தேன்
➢ போட்டி நாள் அன்று முதல் பேச்சாளருக்குக் காய்ச்சல்
➢ ஆசிரியர் அவனுக்குப் பதில் நான் போகவேண்டும் என்றார்
➢ பதற்றம், பயம், நடுக்கம், முடியாது என்ற போக்கு
➢ என் நண்பர்களின் முயற்சியும் பயற்சியும் விரயமாகக்கூடாது
➢ போட்டியில் பங்கெடுத்தேன்

145
➢ நன்றாகப் பேசினேன் - என் ஆற்றலை நானே உணர்ந்தேன்
➢ என் பள்ளி அடுத்த சுற்றுக்குத் தேர்ச்சி பெற்றது
➢ எல்லாரும் என்னைப் பாராட்டினார்கள்
➢ தன்னம்பிக்கை பிறந்தது
➢ அடுத்த சுற்றில் நானும் பேசப் போவதாக உறுதியளித்தேன்

முடிவுரை

➢ வைரம் மண்ணுக்குள் இருக்கும்போது அதன் மதிப்பு அதற்கே தெரியாது


➢ பட்டை தீட்டும்போது தான் வெளிப்படும்
➢ தன்னம்பிக்கையை வளர்த்தால்தான் நமது ஆற்றல் நமக்கே தெரியும்
➢ வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை நாமே சமாளிக்கலாம்
➢ இது எனக்கு ஒரு நல்ல அனுபவம்

இனிய தொடர்கள்

➢ உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்


➢ புடம் போட்ட தங்கம் போல
➢ குடத்துக்குள் எரியும் தீபமாய்
➢ மலைமேல் எரியும் விளக்காய்
➢ யானையின் பலம் தும்பிக்கையில் – மனிதனின் பலம் நம்பிக்கையில்
➢ முயற்சி செய்யும்வரை தன் திறன் தனக்கே தெரியாது
➢ எறும்பு ஊரக் கல்லும் தேயும்
➢ மாணவர் மனது வைத்தால் முடியாதென்பது ஒன்றுமில்லை
➢ காற்றைப்போல் மலையைப்போல் பூமியைப்போல் பெருமை சேரடா
➢ சோம்பேறிக்கு எல்லாம் கடுமையாய்த் தோன்றும், ஊக்கமுள்ளவனுக்கு எதுவும் எளிமையாய்த் தோன்றும்
➢ முடியாது என்பது மூடத்தனம், முடியுமா என்பது அவநம்பிக்கை, முடியும் என்பது தன்னம்பிக்கை
➢ முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறை பிடிக்கும், எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி
கொடுக்கும்
➢ கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது
146
அருஞ்சொற்பொருள்

அபிப்பிராயத்தை விருப்பத்தை

மிதப்பில் அலட்சியப்போக்கில்

விரயமாக வீணாக

பட்டை தீட்டும்போது பளபளக்கச் செய்யும்போது (polish)

புடம் போட்ட மெருகற்றிய

மூடத்தனம் முட்டாள்தனம்

அவநம்பிக்கை நம்பிக்கை இல்லாமை

தொகுதி 18

Model Compo - மாதிரிக் கட்டுரை


52. உன் குடும்பத்தார் நட்புணர்வோடு பழகுவதில்லை என்றும், தம்முடைய உணர்வுகளை மதித்து
நடப்பதில்லை என்றும் உன் அண்டைவீட்டார் கருதினார். ஆனால் நீயும் உன் குடும்பத்தினரும்
செய்த செயல் ஒன்று அவருடைய எண்ணத்தை மாற்றியது. நீயும் உன் குடும்பத்தாரும் என்ன
செய்தீர்கள் என்பதனையும், அதிலிருந்து நீ பெற்ற படிப்பினையையும் விவரித்து எழுதவும்.

“உலகத்தோடு ஒட்ட ஒழுகற் பலகற்றும்


கல்லார் அறிவிலா தார்”

என்பது திருவள்ளுவர் வாக்கு. மற்றவர்களுடன் ஒன்றிணைந்து வாழத் தெரியாதவன் கற்றோனாக


இருந்தாலும் கல்லாதவனுக்குச் சமம் என்பதே இதன் பொருளாகும்.

147
இக்காலக் கட்டத்தில் குடும்பப் பிணைப்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம், அண்டை
வீட்டாருடனும் பிணைப்புடன் இருப்பது. சிங்கப்பூர் ஒரு பல இனச் சமுதாயம் கொண்ட நாடு. அதனால், நாம் நம்
அண்டைவீட்டாருடன் நட்புடனும் ஒற்றுமையுடனும் பழகுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்தப் படிப்பினையை
எனக்கு உணர்த்தியது என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். அச்சம்பவத்தைப் பற்றி இக்கட்டுரையில் நான்
விளக்கப் போகிறேன்.

நாங்கள் அங் மோகியோ வட்டாரத்திலிருந்து பீஷான் நகருக்குப் புதிதாகக் குடி வந்தோம். புதிய வீடு, புதிய
வட்டாரம், புதிய கடைகள், புதிய அண்டை வீட்டார் என எல்லாமே புதிதாக இருந்தது. எங்கள் உற்றார்
உறவினர்களும் வெகு தூரத்தில் குடியிருந்தனர். அதனால் அவசரத்திற்குக்கூட எங்களுக்கு உதவிக்கு யாரும்
இல்லை. நாங்கள் எங்கள் பொருள்களை எடுத்து அடுக்கி வைத்துக்கொண்டிருக்கும்போது திடீரென கதவின் மணி
ஒலித்தது. ‘’நான் தான் அகமது. உங்கள் பக்கத்துவீட்டில் குடியிருக்கிறேன்,’’ என்று ஓர் உயரமான மலாய் ஆடவர்
தன்னை எங்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் பார்ப்பதற்கு நல்ல பண்புடையவராகத் தெரிந்தார்.
“உங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தயங்காமல் எங்களைக் கேட்கலாம். எங்கள் குடும்பத்தில் நான்,
என் மனைவி சலீமா, இரண்டு பிள்ளைகள், பணிப்பெண் ஆகியோர்தான் இருக்கிறோம்,’’ என்றார். என் அப்பாவும்
எங்கள் குடும்பத்தைப் பற்றி கூறினார். சில வினாடிகளில் இருவரும் நல்ல நண்பர்களைப்போல் நாற்காலியில்
அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! நான், என் தம்பி இருவரும், அகமதுவின் இரு பிள்ளைகளுடன்
அடிக்கடி ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவோம், படிப்போம், நூலகத்திற்கும் செல்வோம். என் தாயாரும் அகமதுவின்
மனைவி சலீமாவும் நல்ல நண்பர்களானார்கள். நாளடைவில் எங்கள் குடும்பமும் திரு அகமதுவின் குடும்பமும்
நகமும் சதையுமானோம்.

அன்று திரு அகமதுவின் மகன் பாஷாவிற்குப் பிறந்தநாள். அதற்காக எங்களை அழைக்க திரு அகமதுவும்
அவரின் மனைவியும் வந்திருந்தனர். பிறந்த நாளன்று என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் வேறொரு முக்கியமான
வேலை இருந்ததால் அவர்களால் வர முடியாதென்றும், என்னையும் என் தம்பியையும் மட்டும் அனுப்பி வைப்பதாகக்
கூறினர். “மறவாதீர்கள், என் மகன், நித்யாவும் தீபனும் வந்தால்தான் கேக்கையே வெட்டுவான்,’’ என்று புன்னகை
பூத்த முகத்துடன் எச்சரிக்கை விடுத்துச் சென்றனர் திரு அகமதுவும் திருமதி சலீமாவும்.

பிறந்தநாளும் வந்தது. ஆனால் என் தம்பிக்கும் எனக்கும் கடுமையான காய்ச்சல், எங்களால் போக
இயலவில்லை. எங்கள் பெற்றோரும் எங்கள் அண்டைவீட்டார் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற
நினைப்பில் அவர்களிடம் காரணத்தைக் கூறவில்லை. ஆனால் அன்றுமுதல் எங்களின் நட்பு இரண்டுபட்டுவிடும்
என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை!

உங்களை நாங்கள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள்போல் நினைத்தோம். உள்ளங்கையில் வைத்துத்


தாங்கினோம். ஆனால், நீங்களோ சிறிதும் என் மகனின் உணர்வைப் புரிந்துகொள்ளவேயில்லை. படித்துப் படித்துச்
சொல்லியும் உங்கள் பிள்ளைகளை அனுப்ப மறுத்துவிட்டீர்கள் அல்லவா? எங்கள் நட்பு உங்களுக்குத்
தேவைப்படாது இல்லையா?,’’ என்று சீறிப் பாய்ந்தார் திரு சலீம். என் அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ எடுத்துக்
கூறியும், மன்றாடியும் பார்த்தனர். ஆனால் அவர்கள் தங்கள் வாதத்தில் கெடுபிடியாக இருந்தார்கள். நாங்கள்
நட்புணர்வோடு பழகாதவர்கள், உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்கள் என்று எங்களுக்குப் ‘பட்டம்’
கொடுத்துவிட்டார்கள். அவர்களின் எண்ணத்தை மாற்ற என் தாயார் ஒரு வழி சொன்னார்.

148
நாங்கள் அனைவரும் அகமதுவின் வீட்டிற்குச் சென்றோம். எங்களைப் பார்த்தவுடன் அவர் ‘விடுக்கென்று’
முகத்தைத் திருப்பிக்கொண்டார். பிறகு என் தாயார், “அண்ணா, எங்களை மன்னித்துவிடுங்கள். உண்மையிலேயே
நித்யாவிற்கும், தீபனுக்கும் அன்று கடுமையான காய்ச்சல். அதனால்தான் வர முடியவில்லை. இதோ பாருங்கள். இன்று
அவர்கள் குணமாகிவிட்டார்கள். இது பாஷாவிற்காக நாங்களே செய்த கேக்,’’ என்று கூறி, ஒரு பெரிய கேக்கை என்
தாயார் நீட்டினார். நாங்களும் பாஷாவிற்காகச் செய்த பெரிய வாழ்த்து அட்டையை அவரிடம் நீட்டினோம். இதைக்
கண்ட பாஷா ஓடிவந்து எங்களை அணைத்துக்கொண்டார். திரு.அகமதுவும் கண்கலங்கிவிட்டார். தன்
அவசரப்புத்திக்காக வருந்தினார். நாங்கள் மீண்டும் இன்னும் நெருக்கமான அண்டைவீட்டுக்காரர்களானோம்!

திருடன் வீட்டிற்குள் புகுந்துவிட்டால் நாம் அன்றிலிருந்து அதிகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை


எடுப்போம், சாலையில் விபத்து நேரிட்டால் நாம் அன்றிலிருந்து சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிப்போம். நம்
கவனக் குறைவால் தவறு நேரிடும்போதுதான் நான் அதிகக் கவனமாக இருப்போம். அதுபோல் எங்கள் அண்டை
வீட்டாருடன் ஏற்பட்ட இந்தச் சிறிய ஊடல் எங்களை ‘ஒன்றுக்குள் ஒன்றாக, நெல்லுக்குள் அரிசியாக’
ஆக்கிவிட்டது. அண்டைவீட்டுக்காரர்களும் மனிதர்கள்தான்! அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை நான்
அறிந்துகொண்டேன். அன்றுமுதல் அவர்களை அலட்சியப்படுத்தாமல் அவர்களை மதித்து நடக்க வேண்டும்
என்பதைக் கற்றுக்கொண்டேன்.

அருஞ்சொற்பொருள்
சமுதாயம் நாடு

கெடுபிடி விட்டுக்கொடுக்காமல் இருப்பது

அவசரப்புத்தி யோசிக்காமல் செயல்படுவது

ஊடல் மனக்கசப்பு

பயிற்சி வினா 53 மற்றும் 54


கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

53. இனநல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதைச் சிங்கப்பூரர்களிடம் வளர்ப்பதற்கு நீ கூறும்


சில ஆலோசனைகளையும் விளக்கி எழுதுக.

முன்னுரை விளக்கம்

● ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டும்

149
● வேற்றுமையில் ஒற்றுமை
● மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு
● சண்டை சச்சரவுகள், போர் பூசல்கள் ஏற்படாது

கருத்து 1 விரிவாக்கம்

பல இனச் சமுதாயம் ● சீனர், தமிழர், மலாய்க்காரர் வாழ்கிறார்கள்


● பல இன வெளிநாட்டு ஊழியர்கள் வருகை
● வெவ்வேறு நம்பிக்கைகள்
● மதித்தல் அவசியம்
● மனக்கசப்புக்கு ஆளாகிவிடுவோம்

கருத்து 2 விரிவாக்கம்

நற்பண்புகள் வளரும் ● வாழ்க்கைக்குத் தேவையான பண்புகளைக் கற்றல்


● புரிந்துணர்வு, ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை,
சகிப்புத்தன்மை
● அறியாமை நீங்குகிறது
● மற்ற சமயங்களைப் பற்றி அதிக அறிவு பெறல்

கருத்து 3 விரிவாக்கம்

இனநல்லிணக்கத்தை வளர்க்க ● அண்டைவீட்டாருடன் தொடக்கம்


வழிமுறைகள் ● அவர்களுடன் நட்புறவு வளர்த்தல்
● பகிர்தல்
● உதவி செய்தல்
● பண்டிகைக் காலங்களில் விருந்துபசரிப்பு
● பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் போதித்தல்

கருத்து 4 விரிவாக்கம்

இனநல்லிணக்கதை ● இனநல்லிணக்க நாள் ஆண்டுதோறும் கொண்டாடுதல்


வளர்க்கவழிமுறைகள் ● பொது விடுமுறையாக அனுசரித்தல்
● சிங்கப்பூர் அரசாங்கத்தின் முழு ஈடுபாட்டுடன் விமரிசையாகக்
கொண்டாடுதல்
● பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
● வீடமைப்புப் பேட்டைகளில் இன விளையாட்டுகள், போட்டிகள்

150
ஏற்பாடு செய்தல்
● அனைவரும் சிங்கப்பூரர் என்ற உணர்வை ஏற்படுத்தும்
நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல்

முடிவுரை ● இன நல்லிணக்கம் சிறு வயதிலிருந்தே சிங்கப்பூரர்களுக்கு


இருப்பது அவசியம்
● கல்வி அமைச்சு அதைச் செய்து வருகிறது
● மக்கள் பலமே சிங்கப்பூர்
● அதைக் கட்டிக்காக்க இனநல்லிணக்கம் அவசியம்

கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:

● உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்


● ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
● ஒற்றுமையே பலம்
● ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
● நல்லிணக்கம் அல்லது அல்லற்படுத்தும்
● அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழியே
● கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
● ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
● ஒருவர் பொறை இருவர் நட்பு
● ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகாது
● தனிமரம் தோப்பாகாது
● ஊர் கூடினால்தான் தேர் இழுக்க முடியும்
● ஒரு காம்பில் முளைத்த பூக்கள்போல்
● வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம்
● கூடிப் பிரியேல்
● தேசத்தோடு ஒத்து வாழ்

151
● நாடு ஒப்பன செய்
● சீனர் தமிழர் மலாயர் முதலானோர் உறவினர் போல அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்

அருஞ்சொற்பொருள்

விமரிசை கோலாகலமாக

பேட்டை வட்டாரம்

அல்லற்படுத்தும் துன்பப்படுத்தும்

குடிகள் குடிமக்கள்

பிரியேல் பிரியாதே

ஒப்பன ஏற்றுக்கொண்டதை

54. விடாமுயற்சியே வெற்றிக்கு வழி என்பதை உனக்கு உணர்த்திய அறிஞர் ஒருவருடைய


வாழ்க்கையைப் பற்றியும், அது உனக்குக் கற்றுக் கொடுத்த பாடத்தையும் விளக்கி எழுதுக.

முன்னுரை

➢ விடாமுயற்சி என்பது என்ன - முயற்சியைக் கைவிடாமல் உழைப்பது


➢ விடாமுயற்சி தொடக்கத்தில் பல சவால்களைக் கொடுக்கும்
➢ இறுதியில் பெரும் வெற்றியே அளிக்கும்
➢ விடாமுயற்சியால் சாதித்துச் சாதனை படைத்த பல அறிஞர்கள் உண்டு
➢ அவர்களின் பட்டியலில் என்னைக் கவர்ந்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்

இடையுரை

➢ சிறுவயதிலிருந்து எனக்கு அறிஞர்களின் வரலாற்றுப் புத்தகங்களைப் படிப்பதில் விருப்பம்


➢ தாமஸ் ஆல்வா எடிசன் என்னை மிகவும் கவர்ந்தார்
152
➢ மின் விளக்கைக் கண்டுபிடித்தார் - மேலும் நிறைய சாதனங்களைக் கண்டுபிடித்துள்ளார்
➢ சிறு வயதில் காதுகேட்கும் திறன் பாதித்து இருந்தது
➢ இது அவரின் மற்ற நடவடிக்கைகளைப் பாதித்தது
➢ சிறு வயதில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எட்டு வயதில்தான் பள்ளி வாழ்க்கை தொடங்கியது
➢ மூளைக் கோளாறு உள்ளவன் என்று கருதப்பட்டுப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்
➢ தாயார் வீட்டிலேயே பாடம் கற்பித்தார்
➢ ஒன்பதாவது வயதிலேயே இயற்கைச் சோதனைகள் மீது ஆர்வம் கொண்டார்
➢ முறையான ஆராய்ச்சிக் கல்வி பயிலவில்லை - இருந்தும் தாமே முயற்சியைக் கைவிடாமல் பல
சோதனைகளைச் செய்து பார்த்தார்
➢ இடையில் வேலை பறிபோனது, இரயிலில் நொறுக்குத் தீனி விற்றார் - சோதனைகளைக் கைவிடவில்லை
➢ ஒருமுறை சோதனைக்கூடம் தீப்பற்றிக்கொண்டது
➢ மனம் தளரவில்லை, நண்பர்களிடம் கடன்பெற்று மீண்டும் சோதனைக்கூடம் திறந்தார்
➢ மின்விளக்கைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கினார்
➢ பல தடவை மேல் தோல்விகள் ஏற்பட்டன
➢ இறுதியில் அவரின் விடாமுயற்சி பலனளித்தது
➢ உலகிற்கு மின் வெளிச்சம் கிடைத்தது

முடிவுரை

➢ முயற்சியை ஒருமுறை செய்துவிட்டுப் பலனளிக்கவில்லை என்று கைவிடக்கூடாது


➢ மனதில் உறுதி வேண்டும்
➢ விடாமல் முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்
➢ தோல்விகளைக் கண்டு மனம் துவண்டுபோகக்கூடாது
➢ இலக்கில் மட்டுமே குறியாக இருக்க வேண்டும்

இனிய தொடர்கள்

➢ படைப்புக்கு வேண்டியது உள்எழுச்சி ஒரு சதவிகிதம், உழைப்பு 99 சதவிகிதம்


➢ நான் ஆயிரம் முறை தோற்கவில்லை - வெற்றிக்கான ஆயிரம் வழிகளைக் கண்டுபிடித்துள்ளேன்

153
➢ ஒட்டடைக்குச்சி ஓய்வு எடுத்துக்கொண்டால் சிலந்திப்பூச்சி சிம்மாசனம் ஏறிவிடும்
➢ அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது, அளந்து பேசுபவனை மதிக்கிறது, அதிகம் செயல்படுபவனைக்
கைகூப்பி வணங்குகிறது - Confucious
➢ கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காமல் உழைத்ததால்தான் என்னால் புதிய பொருள்களைக் கண்டுபிடிக்க
முடிந்தது - Thomas Alva Edison
➢ ஒருவனின் கருத்துகளைக் கேட்பதற்கு உலகம் தயாராக இருப்பதில்லை - உழைப்பைக் காண்பதற்கே
காத்திருக்கிறது –Mahatma Gandhi
➢ எதிர்ப்பும் தடையும் இருந்தால்தான் மனிதன் விரைந்து முன்னேறுவான் - Buddha
➢ வாழ்க்கை என்றால் அது துணிச்சல்மிகுந்த விடாமுயற்சி என்றுதான் பொருள்
➢ ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான், அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக்
காட்டினான், மற்றுமொருவன் மண்ணில் இறங்கிப் பொன்னைத் தேடினான்
➢ பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீனில் படகினைக் கண்டான் எதிரொலி கேட்டான்
வானொலி படைத்தான்

அருஞ்சொற்பொருள்

பறிபோனது இழப்பு ஏற்பட்டது

உள்எழுச்சி மனத்தில் தோன்றும் உந்துதல்

ஒட்டடைக்குச்சி தூசியைத் அப்புறப்படுத்தும் கம்பு

சிம்மாசனம் அரசரின் இருக்கை

தொகுதி 19

Model Compo - மாதிரிக் கட்டுரை

55. நீ உன் பெற்றோருக்குப் பெருமை சேர்த்த ஒரு செயலை எழுது.

“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை


என்னோற்றான் கொல்எனும் சொல்”
154
என்பது தெய்வப்புலவரின் வாக்கு. நம்மைப் பெற்றெடுத்து, ஆளாக்கி, அமுதூட்டி, படிக்க வைத்து,
நல்லொழுக்கங்களைக் கற்பித்து, தீங்கிழைத்தால் கண்டித்து, ‘கண்ணைக் காக்கும் இமையாய்’ இருந்து நம்மைக்
காப்பவர்கள் நமது பெற்றோர்கள். இந்த நன்றிக்கடனை நாம் எத்தனை கோடி கொடுத்தாலும் அடைக்க முடியாது.
அது விலைமதிப்பற்றது. அவர்களுக்காக நாம் செய்ய வேண்டிய ஒரே செயல், அவர்களைப்
பெருமைப்படுத்துவதாகும். ‘அன்னை சிந்தும் கண்ணீரைப் பன்னீராக்கி, அவரின் கனவுகளை நனவாக்குவதே
ஒவ்வொரு பிள்ளையின் தலையாய கடமையாகும்’ என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

அன்று எங்கள் பள்ளி மண்டபம். வண்ண வண்ணத் தோரணங்களாலும், மணம் கமழ் மலர்களாலும்
அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆண் ஆசிரியர்கள் மிடுக்காகக் கழுத்துச் சுருக்குகளை மாட்டிக்கொண்டு அமர்ந்திருக்க,
அவர்களுக்குச் சளைத்தவர் அல்லர் என்று பெண் ஆசிரியர்கள் அழகான உடைகளில் அமர்ந்திருந்தார்கள். மாணவ
மணிகள் வெளீரெனச் சீருடைகளில் காட்சியளித்தார்கள். பெற்றோர்களோ வைத்த கண் வாங்காமல் பரிசு பெறக்
காத்திருக்கும் தங்கள் பிள்ளைகளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த வரிசையில் என் பெற்றோர்களும்
அமர்ந்திருந்தார்கள். என்னைப் பார்த்துப் புன்முறுவலிட்டபடி இருந்தார்கள். ஈன்ற பொழுதிலும் இல்லாத மகிழ்ச்சி
என் தாயின் முகத்தில் தெரிந்தது. என்னைத் தோளில் சுமந்த பாரமே என் தந்தையின் முகத்தில் இல்லை.

நான் மேடையில் என் தலைமையாசிரியரின் அருகில் நின்றுகொண்டிருந்தேன். ‘’இப்போது இந்த வெற்றிக்


கோப்பையை நான் முரளிக்கு வழங்கப் போகிறேன்,’’ என்று அறிவித்தபடியே வெற்றிக் கோப்பையை அவர்
என்னிடம் நீட்டினார். மேடையே கரவொலியால் முழங்கியது. என் பெற்றோர் கண்ணில் ஆனந்த மழை. இருவரும்
எழுந்து நின்று தங்களால் முடிந்தமட்டும் கைகளைத் தட்டினார்கள். என் பெற்றோருக்குப் பெருமை சேர்த்ததை
எண்ணி நான் பெருமிதம் கொண்டேன். என் நினைவலைகள் சற்றுப் பின்நோக்கிச் சென்றன.

‘ஒரு மாற்றத்தை நீ பார்க்க வேண்டுமானால் , நீ முதலில் அந்த மாற்றமாக இருக்க வேண்டும்’ என்று என்
தமிழாசிரியர் அடிக்கடி கூறுவார். ஆனால் என்னால் என்னை மாற்றிக்கொள்ளவே முடியவில்லை. எதற்கெடுத்தாலும்
பயம், தயக்கம். ஆசிரியரிடம் சந்தேகம் கேட்கப் பயம், மேடையில் ஏறிப் பேசப் பயம், குழுவேலைகளின்போது
கருத்துகள், போட்டிகளில் பங்கெடுக்க விருப்பம் இருந்தாலும் ஆசிரியரிடம் சொல்லுவதற்குத் தயக்கம். இப்படி
எதற்கெடுத்தாலும் நான் பயந்தேன். தன்னம்பிக்கையே இல்லாமல் எப்போதும் ஒரு மூலையிலேயே முடங்கிக்
கிடந்தேன். என் வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்கள் ஆசிரியரிடம் சகஜமாகப் பேசுவார்கள். அவர்கள்போல்
நானும் இருக்க வேண்டும் என்று ஆசைகொண்டேன். ஆனால் அப்போதும் இந்தத் தீராத பயம் தொற்றுவியாதி
போல் என்னைக் கௌவிக்கொள்ளும். ‘அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே, உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு
மகாகவி பாரதியாரின் பாடலை முழங்குவேன். ஆனால், அது என் தனி அறையில் மட்டும்தான் நடக்கும். அதைத்
தாண்டி வெளியில் வராது. மனத்தில் கனவுகள் பல இருந்தும் அதை நிறைவேற்றுவதற்குப் பயம் எனக்கு ஒரு
நிரந்தரத் தடையாகிவிட்டது என்பதை நான் உணர்ந்தேன்.

போட்டிகள் நிறைந்த இந்த நாட்டிலே தன் மகன் மட்டும் ‘பெட்டிப் பாம்பாய்’ இருக்கிறானே என்று எண்ணி
என் பெற்றோர்கள் வருந்தாத நாளே இல்லை. “முரளி, உன்னைத் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகுப்புகளுக்கு
அனுப்பட்டுமா?’’ என்று என் தாயார் கேட்டார். அதற்கும் போனேன். ஆனால் அங்கும் அச்சமே என்னை ஆட்சி
செய்தது. அந்தப் பயிற்றுவிப்பாளர் எவ்வளவோ முயன்றும் என்னால் முடியவில்லை. அவரைப் பார்த்தாலே நான்
நடுங்கினேன். அவரும் என்னுடன் அன்பாகத்தான் பேசினார்.
155
ஆனால், என்னால் எழுந்து நின்று மற்ற மாணவர்களைப்போல் தைரியமாகப் பேச முடியவில்லையே! இந்த
பாழாய்ப்போன பயம் ஏன் என்னைப் பயமுறுத்துகிறது என்று யாருக்கும் கேட்காமல் புலம்பினேன். “என்னை
மன்னித்துவிடுங்கள், உங்கள் மகன் மனது வைத்தால்தான் மாற முடியும்,’’ என்று பயிற்றுவிப்பாளர் கைவிரித்து
விட்டார். இனி தனது வகுப்புக்கு வரவேண்டாம் என்றும் கூறிவிட்டார். என் தாயாரின் மனக்கோட்டை சுக்கு நூறாக
உடைந்ததை என்னால் உணர முடிந்தது. அவர் கண்கள் குளமாகின. அப்போது, “மாலா, மாலா, என் மகள் பேச்சுப்
போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறாள்,’’ என்று என் அண்டைவீட்டார் ஒரு வெற்றிக்கோப்பையுடன் என்
வீட்டிற்குள் நுழைந்தார். என் அன்னையின் துன்பம் இரட்டிப்பானது!

என்னை நினைத்தால் எனக்கே வெறுப்பாக இருந்தது. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்று என்னையே
பலமுறை கேட்டிருக்கிறேன். சீராட்டிப் பாராட்டி வளர்த்த பெற்றோரைப் பெருமைப்படுத்த முடியவில்லையே.
நானெல்லாம் என்ன பிள்ளை? என்று என்னையே தனியாகத் திட்டிக்கொள்வதும் உண்டு. என் தாயின் கண்ணீரைத்
துடைக்க என்னால் முடியாதா? என்ற ஆதங்கத்துடன் கணினித் திரைமுன் அமர்ந்தேன். பிறர்முன் நேரடியாகப்
பேசத் தயங்கும் என்னைப் போன்றவர்களுக்கு இந்தச் சமூக வலைத்தளங்கள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூற
வேண்டும்.

ஒருநாள், முகப் புத்தகத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். சில நாட்கள் அவருடன் இணையத்தில்
பேசியபோது அவரின் போக்கு எனக்குப் பிடித்திருந்தது. அவர் மிகவும் தன்னம்பிக்கையுடன் பேசினார்.
தன்னம்பிக்கையை வளர்க்கும் பல வழிமுறைகளை என்னுடன் பகிர்ந்துகொண்டார். என்னை நிறைய ஊக்கமூட்டும்
புத்தகங்களைப் படிக்கச் சொன்னார். அவர் எழுதிப் பரிசுபெற்ற கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை என்னுடன்
பகிர்ந்துகொண்டார். அவரின் செயல்கள் என்னை மெல்ல மெல்லக் கவர்ந்தன, ஏன் மாற்றின என்றுகூடத்
தைரியமாகச் சொல்லலாம். அவர் எங்கள் பள்ளி நடத்தும் அனைத்துப் பள்ளிப் பேச்சுப்போட்டிகளிலும் என்னைக்
கலந்து கொள்ளும்படி கூறினார். நான் பதில் கூறுவதற்குமுன் என் பயம் ‘வேண்டாம்’ என்று பதிலளித்துவிட்டது.
ஆனால், அவர் தன்னை வந்து பார்க்கும்படி என்னிடம் கூறினார். என்னைப் பார்க்க விரும்புவதாகவும் கூறினார்.

நான் என் முகநூல் நண்பரின் இல்லம் தேடிச் சென்றேன். அங்கு எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. கதவு
திறக்கப்பட்டது. அங்கே என் நண்பர் இருந்தார். என்னைப்போல் அவரும் ஒரு மாணவர்தாம். ஆனால் அவர் சக்கர
நாற்காலியில் அமர்ந்திருந்தார்! அதைக் கண்டு நான் வியப்புற்றேன். “இரண்டு கால்களும் இல்லாத என்னால் சாதிக்க
முடியும் என்றால் ஆரோக்கியமாக இருக்கும் உன்னால் இருமடங்கு சாதிக்க முடியும்,” என்று கூறி என்னைத்
தட்டிக்கொடுத்தார். எனக்குள் ஓர் உத்வேகம் பிறந்தது. என்னைச் சுற்றியிருந்த பயம் எனும் போர்வையைக்
கிழித்தெறிந்தேன். என் பெற்றோருக்குப் பெருமை சேர்த்தேன்.

அருஞ்சொற்பொருள்

அமுதூட்டி உணவூட்டி

தலையாய முக்கியமான

கமழ் வீசும்

156
சளைத்தவர் தோற்றவர்

வெளீரென பிரகாசமாக

ஈன்ற பெற்ற

சகஜமாக சாதாரணமாக

கைவிரித்து கைவிட்டு
சுக்குநூறாக பல துண்டுகளாக
இரட்டிப்பானது இரு மடங்கானது
ஆதங்கத்துடன் பயத்துடன்
வரப்பிரசாதம் வரம்
உத்வேகம் மனத்திலிருந்து தோன்றும் ஒர்
உணர்வு

பயிற்சி வினா 2 மற்றும் 3


கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

56. சிங்கப்பூரில் குற்றச்செயல்கள் ஏற்படுவதற்கான காரணங்களையும், அவற்றைக் குறைப்பதற்கான


ஆலோசனைகளையும் விளக்கி எழுதுக.

முன்னுரை விளக்கம்

● பாதுகாப்பிற்குப் பெயர் பெற்ற நாடு


● குறைந்த குற்றச்செயல்கள்
● குற்றச் செயல்கள் அடியோடு ஒழியவில்லை
● துடிப்பான காவல்படை
● மக்களின் ஒத்துழைப்பு

கருத்து 1 விரிவாக்கம்

157
குற்றச்செயல்கள் நடக்கக் ● கவனக்குறைவு
காரணங்கள் ● சிங்கப்பூரில் குற்றங்கள் நடக்காது என்ற மனப்போக்கு
● அலட்சியப் போக்கு
● சரியாகப் பூட்டாத வீடுகள்

கருத்து 2 விரிவாக்கம்

குற்றச்செயல்கள் நடக்கக் ● தனியே இருக்கும் முதியோர்கள்


காரணங்கள் ● பெண்களின் அத்துமீறிய உடையலங்காரம்
● பாதுகாப்பில்லாத இடங்களுக்குச் செல்லுதல்
● இரவு நேரத்தில் தனியாகச் செல்லுதல்
● நள்ளிரவு நடவடிக்கைகளில் ஈடுபடுதல்
● எளிதில் நம்புதல்

கருத்து 3 விரிவாக்கம்

குற்றச் செயல்களைக் ● பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்


குறைப்பதற்கான ஆலோசனை ● தூங்குவதற்கு முன் கதவையும் சன்னல்களையும் பூட்டுதல்
● சாவி தொலைந்துவிட்டால் சாவியை உடனே மாற்றுதல்
● வீட்டில் திருடர் அலாரத்தைப் (burglar alarm) பொருத்துதல்
● வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டால் அண்டைவீட்டாரின்
உதவி நாடுதல்
● அந்நியர்களை வீட்டிற்குள் விடாமல் இருத்தல்

கருத்து 4 விரிவாக்கம்

குற்றச் செயல்களைக் ● முதியோர்களைத் தனியாக வெளியே அனுப்பாமை


குறைப்பதற்கான ஆலோசனை ● மின்தூக்கிகளில் தெரியாத ஆடவர்களுடன் செல்லாமை
● பெண்கள் துணையோடு இரவில் சென்றுவருதல்
● இரவு நேரங்களில் மதுபானக்கூடங்களுக்குப் போவதைத்
தவிர்த்தல்
● இணைய உரையாடல்களில் அதிகக் கவனம்
● யாரையும் எளிதில் நம்பக்கூடாது

முடிவுரை ● குறைவான குற்றம் என்பது குற்றமே இல்லை என்று


பொருளல்ல

158
● அக்கம் பக்கக் காவலர் நிலையங்களை உதவிக்கு நாடுதல்
● வருமுன் காத்தல்
● எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:

● எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்


கள்ளாமை காக்கதன் நெஞ்சு
● உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்
● பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்
● திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
● திருட்டு மாங்காய்தான் ருசி அதிகம்
● ருசிகண்ட பூனை
● கள்ளனுக்கு ஊரெல்லாம் விள்ளாப் பகை
● கள்ள மாடு சந்தை ஏறாது
● கள்ளன் அச்சம் காடு கொள்ளாது
● பாலுக்குப் பூனை காவலா?
● இருட்டு வீட்டுக்குப் போனாலும் திருட்டுக்கை நிற்காது
● சிந்தித்துப் பார்த்துச் செய்கையை மாத்து
தவறு சிறிதாய் இருக்கையில் திருத்திக்கோ

அருஞ்சொற்பொருள்

துடிப்பான சுறுசுறுப்பான

அந்நியர் தெரியாதவர்

எள்ளாமை கேலி செய்யாமை

கள்ளாமை திருடாமை

விள்ளா முழுதும்

சந்தை காய்கறி, மாமிசம் விற்கும் இடம் (market)

159
57. உன் வகுப்பில் அயல் நாட்டு மாணவன் ஒருவன் புதிதாக வந்து சேர்கிறான். வகுப்பில்
இருக்கும் மற்ற மாணவர்கள் அவன் பேசுவதைக் கிண்டல் செய்து அவனை மனவருத்தம்
அடையச் செய்கின்றனர். இதனைக் கண்ட நீ, அயல்நாட்டு மாணவனுக்கு ஆறுதல் கூறுவதோடு,
மற்ற மாணவர்கள் தங்கள் தவற்றை உணரும்படி செய்கிறாய். இச்சம்பவத்தை விவரித்து
எழுதுவதோடு, அதன்மூலம் நீ மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்த படிப்பினையையும் எழுதுக.

முன்னுரை

➢ சிங்கப்பூரில் கூடி வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை


➢ பள்ளிகளிலும் வெளிநாட்டவர்களின் சேர்க்கை
➢ அவர்களின் எண்ணங்களையும் நட்பையும் மதிக்க வேண்டும்
➢ புறக்கணிக்கக் கூடாது
➢ நம்மைவிடப் பல திறன்களைப் பெற்றிருப்பார்கள்

இடையுரை

➢ வகுப்பில் புதிய மாணவனின் வருகை


➢ ஆசிரியர் வரவேற்றார்- தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறான்
➢ தமிழகத்தில் வெவ்வேறு மாநிலங்களில் தமிழ்மொழி வெவ்வேறு விதமாகப் பேசப்படும்
➢ மாணவனின் தமிழ்மொழிப் புழக்கம் மாறுபட்டிருந்தது
➢ மற்ற மாணவர்கள் அவன் தமிழ் பேசுவதைக் கண்டு சிரித்தார்கள்
➢ ஆங்கிலமும் சிங்கப்பூரர்கள் பேசும் தோரணையில் இல்லை
➢ தமிழ்கலந்த ஆங்கிலமாக இருந்தது
➢ மாணவர்கள் அவனைக் கிண்டல் செய்து மனத்தைத் துன்பப்படுத்தினார்கள்
➢ நான் அவனுடன் அன்பாகப் பழகினேன்
➢ அவன் தன் மனக்குறைகளை என்னிடம் கூறினான்
➢ மொழி வேறுபட்டிருந்தாலும் கணக்கில் அவன் மற்ற மாணவர்களை விடப் புலி

160
➢ கணக்குப் பாடத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு அவன் கணக்குக் கற்பிக்க ஏற்பாடு செய்தேன்
➢ மற்ற மாணவர்கள் முதலில் தயங்கினர்
➢ பிறகு படிப்படியாக அவனை அணுகினர்
➢ அவன் செய்த உதவியைப் பாராட்டினர்
➢ தங்கள் தவற்றை உணர்ந்து அவனை நண்பனாக ஏற்றுக்கொண்டனர்
➢ முறையாக ஆங்கிலம், தமிழ் பேசுவதற்கு அவனுக்குக் கற்பித்தனர்
➢ அயல்நாட்டு மாணவன் மனமகிழ்ந்தான்

முடிவுரை

➢ மற்றவர்களை மதிக்க வேண்டும்


➢ மனத்தைப் புண்படுத்தக்கூடாது
➢ இனநல்லிணக்கத்தைப் போற்றும் நாடு
➢ எல்லாருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும்
➢ ஒற்றுமையே பலம்

இனிய தொடர்கள்

➢ உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

➢ தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே


நாவினாற் சுட்ட வடு
➢ வேற்றுமையில் ஒற்றுமை
➢ ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும் இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தைப் பாருங்க அதுக்குக் கத்துக்கொடுத்தது யாருங்க
➢ தன் முதுகு தனக்குத் தெரியாது
➢ நல்லிணக்கம் அல்லது அல்லற்படுத்தும்

161
➢ கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
➢ கொட்டிய பாலையும் சிந்திய வார்த்தையையும் அள்ள முடியாது

அருஞ்சொற்பொருள்

சேர்க்கை இணைதல்

மாநிலங்கள் ஒரு நாட்டின் உட்பிரிவு

புழக்கம் பயன்பாடு

தோரணையில் பாணியில்

பின்தங்கி பின்னால் இருக்கும்

அணுகினர் நெருங்கினர்

162
தொகுதி 20

Model Compo - மாதிரிக் கட்டுரை


58. நம் நாட்டில் கொண்டாடப்படும் விழாக்கள் சிங்கப்பூரர்களிடம் ஒற்றுமையையும்
பிணைப்பையும் ஏற்படுத்துகின்றன - கருத்துரைக்க.

‘சிங்கப்பூர்க் குடிமக்களாகிய நாம் இனம், மொழி, மதம் ஆகிய வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு
ஜனநாயகச் சமுதாயத்தை உருவாக்குவோம்’ என்ற வரியினை நாம் அனுதினமும் நம் உறுதிமொழியில்
கூறுகின்றோம். இவ்வரிகள் நமது இதழ்களிலிருந்து பிறப்பவை அல்ல, நெஞ்சினிலிருந்து தோன்றுபவை என்பதை
ஒவ்வொரு சிங்கப்பூரரும் அறிகின்றனர். நம் முன்னோர்கள் ஒன்றுபட்டுத் தங்கள் வியர்வைத் துளிகளைச்
சிந்தியதால்தான் இன்று நாம் பிற நாடுகள் ‘மூக்கின் மேல் விரலை வைக்கும்’ அளவிற்கு உயர்ந்திருக்கிறோம்.
தூய்மை என்றால் சிங்கப்பூர், பாதுகாப்பு என்றால் சிங்கப்பூர், நிலை குலையா அரசு என்றால் சிங்கப்பூர், கல்வி
என்றால் சிங்கப்பூர், இன நல்லிணக்கம் என்றால் சிங்கப்பூர் இப்படி அடுக்கடுக்காகப் பலவற்றிலும் முத்திரை
பதித்துள்ளோம். இவற்றுக்கெல்லாம் காரணம் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்னும் எளிய, ஆனால் வைரம்
பாய்ந்த பழமொழியை நம் அரசாங்கம் வலியுறுத்தியதே ஆகும்.

பல இனச் சமுதாயமான சிங்கப்பூரின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பது என்பது, ஆழ்கடலில் முத்தை


எடுப்பதுபோன்றது. அது எளிமையான செயலன்று. ஒரே குடும்பத்தில் இருக்கும் சகோதர சகோதரிகளே
எண்ணங்களாலும், செயல்களாலும் ஒன்றிணைய முடியாமல் குடும்பங்கள் பிளவுபடுகின்றன. அப்படியிருக்கையில்
வெவ்வேறு சமயங்கள், நம்பிக்கைகள், வழிபாடுகள் என்று இனத்தாலும் மதத்தாலும் வேறுபட்டு வாழும்
மக்களுக்கிடையில் ஒற்றுமையை எவ்வாறு உடையாமல் காப்பது? அதற்கு நம் அரசாங்கத்தையே நாம் இருகரம்
கூப்பி நன்றி சொல்ல வேண்டும். இன ஒற்றுமையை அது கட்டிக்காக்கும் வழிகளில் ஒன்று ‘விழாக்கள்’ ஆகும்.

‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பது பழமொழி. அதிலும் பல இன மக்கள் கூடி வாழ்ந்தால் நன்மை
பல கோடி. இங்கு வாழும் சீனர், மலாய்க்காரர், தமிழர், ஆங்கிலேயர்கள் முறையே சீனப்புத்தாண்டு, நோன்புப்
பெருநாள், தீபாவளி, கிறிஸ்துமஸ் எனக் கொண்டாடுகிறார்கள். இப்பண்டிகைகளை நாம் கொண்டாடும்போது நாம்
அக்கம் பக்கத்திலுள்ள நம் அண்டைவீட்டார்களை அழைக்க மறப்பதில்லை. மற்றவர்களின் பண்டிகைகளை
அவர்களுடன் சேர்ந்து நாம் கொண்டாடும்போது, நாம் அவர்களின் கலாச்சாரம், பண்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி
மேலும் தெரிந்துகொள்கிறோம்.

இவ்விழாக் காலங்களில் சாலை அலங்காரக் காட்சிகளைக் காண்பதற்கு இரண்டு கண்கள் போதா. சீனப்
புத்தாண்டுக் காலத்தில் சைனா டவுன் வண்ண விளக்கொளியில் மூழ்க, நோன்புப் பெருநாள் சமயத்தில் கேலாங்
செராய் மின்னும் ஒளியில் பளிச்சிட, தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே சிராங்கூன் சாலையை வானவில்லின்
ஒளிகள் கீழ் இறங்கிவந்து சாலையையே வண்ணமயமாக்க, அப்பப்பா! இப்படியொரு விழாக்காலப் பிரமாண்டத்தை
நாம் வேறு எந்த நாட்டிலும் பார்த்திருக்க முடியாது.

163
ஒவ்வொரு தோரணமும் வெறும் அலங்காரமாக மட்டும் இல்லாமல், அந்தந்த விழாவின் பாரம்பரியத்தை
எடுத்துரைக்கும் பெட்டகமாக அமைந்துள்ளன. இவற்றைக் காணும்பொழுது, நாம் வேற்றுப் பாரம்பரியங்களை
மதிக்கக் கற்றுக்கொள்கிறோம். அவ்வாறு செய்யும்போது நம் அறியாமைகள் நீங்கிச் சிங்கப்பூரர்களாக நாம் இன்னும்
நெருக்கமடைகிறோம். மகிழ்ச்சி, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு மேலோங்கிப் பிறருடன் இணைந்து வாழக்
கற்றுக்கொள்கிறோம்.

அடுத்தபடியாக ‘Racial Harmony Day’ எனப்படும் இனநல்லிணக்க நாள். இந்த விழாவை நாம் ஏன்
கொண்டாடுகிறோம் என்று சிங்கப்பூர் வரலாற்றினைச் சற்றுத் திரும்பிப் பார்த்தோம் என்றால், அது நம் நான்கின
மக்களையும் ஒற்றுமையாக வாழ வைப்பதற்கே என்பதைச் சுட்டிக்காட்டும். இன நல்லிணக்க நாள் நம் இனம் மதம்
ஆகிய வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு ஒரு காம்பில் முளைத்த பூக்கள்போல் ஒன்றிணைந்து மணம் வீச
வேண்டும் என்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் நம் பள்ளிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

அந்நாளின்போது நம் வேற்றுக் கலாச்சாரத்தின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து உளப்பூர்வமாக


அவர்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் உணர்கிறோம். அன்று மாணவர்களான நாம் அடையும்
மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. நம்மிடம் மற்றப் பாரம்பரிய உடைகள் இல்லையென்றாலும் மற்றவர்களிடமிருந்து
இரவல் பெற்றாவது அணிந்து மகிழ்கிறோம். இந்த நாள் ஒவ்வொரு மாணவனையும் அவனின் வேற்றின நண்பனோடு
இன்னும் ஒன்றிணைய வைக்கிறது. மாணவர் பருவத்திலேயே ஒற்றுமையை விதைக்கும் இந்த விழா நிச்சயமாக
நம்முள் ஒற்றுமையையும் பிணக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையாகாது!

அடுத்தபடியாக நம் தேசியத் தினம். உலக நாடுகளை எடுத்துக்கொண்டோமானால் எந்த நாடும் இவ்வளவு
கோலாகலமாகவும் நாட்டுப்பற்றுடனும் தனது தேசிய நாளைக் கொண்டாடுவதில்லை என்று துணிச்சலுடன் கூறலாம்.
அவ்வளவு பிரமாண்டமாக நாம் நம் தேசிய தினத்தை இங்குக் கொண்டாடுகிறோம். இனம், மொழி, மதம் மறந்து
அனைத்துச் சிங்கப்பூரர்களும் ஒன்றிணைந்து நம் தேசத்திற்காகக் கரவொலி எழுப்பி இனிய பண் பாடுகிறோம். இது
எதைக் காட்டுகிறது? நமது ஒற்றுமை உணர்வைத்தானே! தேசிய தினம் ஒவ்வொரு சிங்கப்பூரர் மத்தியிலும் ஓர்
இணக்கத்தை உருவாக்கி, நான் என்ற சொல்லை நாம் என்று மாற்றுகிறது!

“உறுபசியும் ஓவாப்பிணியும் செரு பகையும்


சேராது இயல்வது நாடு”

என்றார் வள்ளுவப் பெருந்தகை. நாடென்பது பசி, பிணி, போர் பகை, இவையனைத்தும் இல்லாமல் தம்
மக்களின் நல்வாழ்வு ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்க வேண்டும். இவை அனைத்தையும் பெற
வேண்டுமென்றால், அந்நாட்டில் ஒற்றுமை இழையோட வேண்டும். அந்த ஒற்றுமையை விழாக்கள் மூலம்
கட்டிக்காத்து, தம் மக்களுக்கு நல்வாழ்வு அளித்து வருகிறது நமது தேசம். இனத்தால், மொழியால், கலாச்சாரத்தால்
நாம் வேறுபட்டிருந்தாலும் உணர்வால் நாம் அனைவரும் சிங்கப்பூரர்கள் என்ற ஒற்றுமை உணர்வை நம் விழாக்கள்
நமக்கு அறிவுறுத்துகின்றன என்று கூறிக்கொள்வதிலும் எனக்கும் அதில் ஒரு பங்குண்டு என்று சொல்வதிலும் நான்
பெருமிதம் அடைகிறேன்.

164
அருஞ்சொற்பொருள்

ஜனநாயக மக்களாட்சி

முத்திரை தனித்துவத்தை உருவாக்குதல்

வைரம் பாய்ந்த உறுதியான

கூப்பி இணைத்து

பெட்டகமாக களஞ்சியமாக

தேசத்திற்காக நாட்டிற்காக

பண் பாட்டு

இழையோட கலந்திருக்க

165
பயிற்சி வினா 59 மற்றும் 60
கீழே உள்ள மனவரைபட குறிப்புக்கட்டுரையையும் (Mindmap Compo), உதவிக் குறிப்புக்கட்டுரையையும்
(Hint’s Compo) உதவியாக பயன்படுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விக்கு நீ கட்டுரை எழுதவும்.

59. பணிப்பெண்கள் சிங்கப்பூரர்களுக்குச் சுகமா, சுமையா? - கருத்துரைக்க.

முன்னுரை விளக்கம்

● பரபரப்பான சூழ்நிலை
● இரு பெற்றோரும் வேலை செய்யும் கட்டாயம்
● வாழ்க்கைச் சூழல்
● போட்டித்தன்மை
● தனிக்குடித்தனங்கள்

கருத்து 1 விரிவாக்கம்

வீட்டு வேலை குறைகிறது ● வீட்டைச் சுத்தம் செய்கிறார்கள்


● துணி துவைக்கிறார்கள்
● சமையல் வேலையைக் கவனித்தல்
● வேலைவிட்டு அசதியாக வரும்போது நிம்மதி
● இல்லாத நேரத்தில் வீட்டைப் பார்த்துக்கொள்கிறார்கள்
● வாகனத்தைக் கழுவுகிறார்கள்
● விழாக்காலங்களில் பேருதவியாக இருக்கிறார்கள்

கருத்து 2 விரிவாக்கம்

பிள்ளைகளைப் பார்த்துக் ● இளம் பிள்ளைகளைப் பொறுப்புடன் கவனித்தல்


கொள்ளுதல் ● பள்ளிக்கு அனுப்புதல்
● உணவு தயாரித்துக் கொடுத்தல்
● பெற்றோர் இல்லாத நேரம் கண்காணித்தல்
● சில நேரம் பாடம் சொல்லிக்கொடுத்தல்
● தூங்க வைத்தல்
● பெற்றோர் ஓய்வெடுக்க முடிகிறது

166
கருத்து 3 விரிவாக்கம்

நம்பிக்கைக்குப் பாத்திரமாக ● வேண்டாத உறவுகள்


நடப்பதில்லை ● வீட்டிற்குள் தங்கள் உறவினர்களை அனுமதித்தல்
● திருடுதல்
● முதலாளி இல்லாத நேரத்தில் சொகுசாக இருத்தல்
● பொய் சொல்லுதல்
● பிள்ளைகளைக் கொடுமைப்படுத்துதல்

கருத்து 4 விரிவாக்கம்

சிங்கப்பூர் சூழலை ஏற்க ● அடிக்கடி மனஉளைச்சலுக்கு ஆளாதல்


முடியாமை ● மின்சார இயந்திரங்களைப் பயன்படுத்தத் தெரியாமை
● மொழி தெரியாமை
● ஊருக்குப் போகிறேன் என்று அடிக்கடி கூறுதல்
● அழுதல்

முடிவுரை ● பணிப்பெண்கள் சிங்கப்பூரர்களுக்கு அவசியம்


● அவர்களின் வாழ்க்கைச்சூழல் வேறு
● கற்றுக்கொடுத்தல் அவசியம்
● முதலாளிகள் எதிர்பார்ப்புகளைக் குறைத்தல் வேண்டும்
● பணிப்பெண்களும் சூழலுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும்
● இருபுறமும் நம்பிக்கை இருக்க வேண்டும்

167
கட்டுரை சிறக்க உதவும் வரிகள்:
● ஏழை எளிய குடும்பத்தினர்
● பணிப்பெண் முகவர்கள் (Maid Agents)
● வேலையின்மைப் பிரச்சினைகள்
● வாரம் ஒருமுறை விடுப்பு
● அயல்நாடுகளிலிருந்து வருகை
● மனிதநேயம் இருக்க வேண்டும்
● உயர்ந்தவன் என்ன தாழ்ந்தவன் என்ன
உடல் மட்டுமே கறுப்பு அவன் உதிரம் என்றும் சிவப்பு
● மனிதரை மனிதராய் மதிப்பதே மனிதப்பண்பு
● வேண்டாத மருமகள் கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம்
● மனிதவள அமைச்சு (Ministry of Manpower)
● சட்ட திட்டங்கள்
● மருத்துவ வசதிகள்

அருஞ்சொற்பொருள்

பரபரப்பான விரைவாகச் சுழலும்

தனிக்குடித்தனம் திருமணம் முடிந்து பெற்றோருடன் இல்லாமல் தனியாக வாழ்வது

அசதியாக களைப்பாக

சொகுசாக உல்லாசமாக

விடுப்பு விடுமுறை

உதிரம் இரத்தம்

168
60. தொழில்நுட்பம் இக்கால இளையர்களை அதிகச் சோம்பேறிகளாக்கி விட்டது - கருத்துரைக்க.

முன்னுரை

➢ தொழில்நுட்பம் இல்லாத வாழ்க்கைமுறை


➢ தொழில்நுட்பத்தின் தோற்றம்
➢ அதன் அதிநவீன முன்னேற்றம்
➢ வீட்டில் இருக்கும் தொழில்நுட்பச் சாதனங்கள்
➢ அவற்றால் ஏற்படும் பாதிப்புகள்

இடையுரை

➢ உட்கார்ந்த இடத்திலிருந்தே வேலை செய்கிறார்கள் - மின்னஞ்சல்


➢ உடல் உழைப்பு என்பது வேலையில் இல்லை
➢ துணிதுவைக்கும் இயந்திரம், மாவரைக்கும் இயந்திரம், தூசி இயந்திரம்.
➢ கணினி முன்னே 24 மணி நேரமும் அமர்ந்திருக்கின்றனர்
➢ உடல் உழைப்பு இல்லை
➢ தொலைக்காட்சியை அமர்ந்த இடத்திலேயே பார்ப்பது (remote control)
➢ இணையம் மூலம் பொருள்கள் வாங்கும் வசதி
➢ சமையல் பொருள்கள், பரிசுப்பொருள்கள், ஆடைகள் மற்றும் பல
➢ நடந்து, அலைந்து சென்று வாங்கத் தேவையில்லை
➢ திடீர் சாம்பார், திடீர் இட்லி, திடீர் தோசை - சமைப்பதற்கும் வேலை இல்லை
➢ இணையம் மூலம் உணவு வாங்கி உண்ணுதல்
➢ வெளிவிளையாட்டுகளில் அதிகம் ஈடுபடாமல் இணைய விளையாட்டுகளில் ஈடுபடுதல்
➢ இணையக்கல்வி - பள்ளிக்குப் போகத் தேவையில்லை
➢ இணையம்வழி உரையாடல் - நண்பர்களைச் சென்று பார்க்கக்கூடத் தேவையில்லை
➢ யூ டியுப் (youtube) - படங்கள் பார்க்கும் வசதி
➢ குடும்பத்துடன் வெளியில் சென்றுவரும் நிலை குறைகிறது
➢ குறுஞ்செய்திகள் - வீட்டில் உள்ளவர்களிடம்கூடப் பேசுவதில்லை, செய்தி அனுப்புகிறார்கள்

169
➢ விமான நுழைவுச்சீட்டு - இணையம் மூலம் கிடைக்கிறது
➢ சில நாடுகளில் இயந்திர மனிதன் வந்துவிட்டான் (எ.கா - ஜப்பான்)
➢ வீட்டு வேலைகள் செய்யக்கூடத் தேவையில்லை
➢ தொழில்நுட்பத்தால் உடல் எடையைக் குறைக்கும் இயந்திரங்கள் - உடற்பயிற்சிக்கு அவசியமில்லை
➢ பொது இடங்களில் இருக்கும் மின்படிகள், மின்தூக்கிகள்

முடிவுரை

➢ தொழில்நுட்பம் ஓர் அவசியத்திற்காக உருவாக்கப்பட்டது


➢ அதைச் சாதகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது
➢ சோம்பேறித்தனம் உடல் ஆரோக்கியத்திற்குக் கெடுதல் விளைவிக்கும்
➢ முடிந்தவரை உடல் உழைப்பிற்கு வாய்ப்பளிக்க வேண்டும்
➢ தொழில்நுட்பத்தைத் தேவை இல்லையென்றால் பயன்படுத்தாமல் இருப்பது உகந்தது

இனிய தொடர்கள்

➢ காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும்


➢ தூங்காதே தம்பி தூங்காதே
➢ அறிவியல் என்பது ஒரு கத்திபோன்றது - அதைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்
➢ கணினி என்பது சாதனமே தவிர ஆசிரியர் அல்ல
➢ தொழில்நுட்பம் நம் வாழ்க்கையைச் சுலபமாக்க, குழப்பமாக்க இல்லை
➢ சோம்பித் திரியேல்
➢ சோம்பேறியாக இருந்துவிட்டால் சோறு கிடைக்காது

சுறுசுறுப்பாக இல்லாவிட்டால் துணியும் இருக்காது

➢ இயந்திரங்களை இயக்குவதற்கு மனிதன் தேவை


➢ மனிதனை நம்பி இயந்திரங்கள் - இயந்திரங்களை நம்பி மனிதன் இல்லை
➢ இளமையில் சோம்பல் முதுமையில் வறுமை

அருஞ்சொற்பொருள்

170
அதிநவீன மிகவும் நாகரிகமான

மாவரைக்கும் இயந்திரம் grinder

சாதகமாக தனக்குச் செயல்படும்படி

சாதனமாக கருவியாக

திரியேல் திரியாதே

மின்னஞ்சல் பகுதி

171
மின்னஞ்சல் - வினாக்கள்
தொகுதி 1
1a. அலுவலக மின்னஞ்சல் - புகார் செய்தல்

வினா:

பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல்வழி எழுதுக.

நீ வசிக்கும் அடுக்குமாடி வீட்டின் கீழ்த்தளத்தில் இளைஞர்கள் சிலர் இரவு நேரங்களில்


மற்றவர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் அளவுக்கு அதிகமாக ஆரவாரம் செய்து
கொட்டமடிக்கிறார்கள். அக்கம் பக்கத்தார் பலமுறை எடுத்துச் சொல்லியும், அவர்கள் தொடர்ந்து
இச்செயல்களைச் செய்கின்றனர். இது மற்றவர்களின் தூக்கத்தை மட்டும் கெடுக்காமல், படிக்கும்
மாணவர்களுக்கும் மிகத் தொந்தரவாக இருக்கிறது. இப்பிரச்சினையைப் பற்றியும், இதுபோன்ற செயல்கள்
மீண்டும் நடக்காமலும் இருக்க சில ஆலோனைகளைக் கூறியும் அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்கு
ஒரு மின்னஞ்சல் எழுதவும்.

அனுப்புநர்: hari@outlook.com

பெறுநர்: npp@gov.sg

1b. உறவுமுறை மின்னஞ்சல் - அறிவுரை கேட்டல்

172
balu@outlook.com

mani@outlook.com

அறிவுரை தேவை

04/01/2016

வினா:

பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல்வழி எழுதுக.

அன்புள்ள அண்ணனுக்கு,

உங்கள் அன்புத் தம்பி பாலுவின் வணக்கம். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? அங்கு நம் அம்மா,
அப்பாவிற்கு என் அன்பு வணக்கத்தைத் தெரிவிக்கவும். இங்கு ஆஸ்திரேலியாவில் இப்போது வெயில்
காலம். அதனால் மிகவும் சூடாக இருக்கிறது. சிங்கப்பூரின் வானிலை எப்படி இருக்கிறது?

அண்ணா, இங்குள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் நான், நன்றாகப் படித்து வருகிறேன். கடந்தமுறை
நடைபெற்ற தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். ஆனால், ஒருமுறை என் நண்பர்களின்
வற்புறுத்தலுக்கு இணங்கி கணினி விளையாடச் சென்றேன். அன்றிலிருந்து என் மனம் அதிகநேரம் கணினி
விளையாட்டில் ஈடுபடுவதையே விரும்புகின்றது. என்னால் இப்பழக்கத்தை விட முடியவில்லை. படிக்கும்
நேரம் குறைந்து இப்போது கணினியில் விளையாடும் நேரம்தான் கூடியிருக்கிறது. அதனால் வரும்தேர்வில்
தேர்ச்சியடைய முடியாமல் போய்விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. என்னால் இதிலிருந்து மீள
முடியுமா? நம் பெற்றோர்களுக்கு இது தெரிந்தால் மிகவும் வருத்தமடைவார்கள். எனவே, நான் இதிலிருந்து
மீண்டு, படிப்பில் மறுபடியும் கவனம் செலுத்த நீங்கள்தான் எனக்குத் தக்க அறிவுரையும்
ஆலோசனைகளையும் கூற வேண்டும்.

அன்புடன்

பாலு

தொகுதி 2
173
2a. அலுவலக மின்னஞ்சல் - விமர்சனம் செய்தல்
வினா:

பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல்வழி எழுதுக.

செய்தித்தாளின் இணைப்பாக வரும் ‘மாணவர் பக்கம்’ பகுதியில் ‘கதைக்கொத்து’ என்ற


தலைப்பில் நீ படித்த சிறுகதை ஒன்று குறித்து உன் எண்ணங்களை நிருபர் ஒருவருக்கு விமர்சனம்
எழுதுக.

மின்னஞ்சல் முகவரி

அனுப்புநர்: malar@outlook.com

பெறுநர்: news@outlook.com

2b. உறவுமுறை மின்னஞ்சல் - ஆலோசனை கேட்டல்

வினா:

பின்வரும் பகுதியை படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல்வழி எழுதுக.

murali@outlook.com

mukunth@outlook.com

ஆலோசனை தேவை

04/01/2016

174
அன்புள்ள முகுந்த்,

நான் இங்கு நலம். நீ நலமாக இருப்பாய் என எண்ணுகிறேன். உன் நாய்க்குட்டி டாமி எவ்வாறு உள்ளது?
இந்த முறையும் விலங்குகள் ஓட்டப்போட்டியில் அதுதான் வெற்றி பெற்றதா? டாமி இதுவரை உனக்கு எத்தனை
கேடயங்களைப் பெற்று உனக்குப் பெருமை சேர்த்துள்ளது! எனக்கு இதுபோல் ஒரு செல்லப்பிராணி இல்லையே
என்று நினைக்கும்போது பொறாமையாக உள்ளது.

நண்பா, எங்கள் வீடமைப்புப் பேட்டையில் உள்ளவர்களில் பலர் ஏதாவது ஒரு செல்லப் பிராணியை
வளர்க்கின்றனர். என் அண்டைவீட்டுக்காரர்கூட ஒரு முயலை வளர்க்கிறார். அதன் குறுகுறு பார்வையை
நாள்முழுதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எனக்கும் அவர்களைப் போல் ஏதேனும் ஒரு செல்லப் பிராணி
வளர்க்க மிகுந்த ஆவலாகத்தான் உள்ளது. ஆனால், ஒரு சிலர் அதெல்லாம் சிறிது கடினம் என்றும், அதற்காகத்
தனிப்பட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

எனவே, செல்லப்பிராணியை வளர்க்கும் உன்னிடம் ஆலோசனை கேட்பதுதான் சரி என்று நினைத்தேன்.


நான் எந்தச் செல்லப்பிராணியை வளர்க்கலாம் என்றும், அதன் வழிமுறைகளை பற்றியும் எனக்கு ஆலோசனை
கூறவும். நானும் ஏதேனும் ஒரு செல்லப்பிராணியை வளர்ப்பதற்கு மிகவும் ஆவலுடையவனாக இருக்கிறேன். இது
குறித்து உன் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் உன் அன்பு நண்பன்.

அன்புடன்

முரளி

தொகுதி 3
3a. அலுவலக மின்னஞ்சல் - அனுமதி கேட்டல்
வினா:

பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல் வழி எழுதுக.

நீ வசிக்கும் அடுக்குமாடிக் கீழ்த்தளத்தில் உன் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்காக,


சரியான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்து, நகர மண்டப அதிகாரியிடம் அனுமதி கேட்டு ஒரு
மின்னஞ்சல் எழுதுக.

மின்னஞ்சல் முகவரி:

அனுப்புநர்: jegan@outlook.com

பெறுநர்: towncouncil@gov.sg

3b. உறவுமுறை மின்னஞ்சல் - தகவல் கேட்டல்


175
வினா:

பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல் வழி எழுதுக.

அன்புள்ள சேகர்,

இங்கு நான் நலமாக உள்ளேன். உன் நலத்தினை அறிய ஆவல். உன்னுடன் இன்று நான் தொடர்பு
கொள்ள மகிழ்ச்சியாக உள்ளது.

சேகர், நான் உலக நாடுகள் பலவற்றில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் படித்தும், கேட்டும்
இருக்கிறேன். இதில் எனக்கு ஆர்வம் அதிகம் என்றுதான் உனக்குத் தெரியுமே. இருப்பினும், சிங்கப்பூரில் உள்ள
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தகவல்கள் கிடைக்கவில்லை. நீ சிங்கப்பூரிலேயே
பிறந்து வளர்ந்தவன் என்பதால் நிச்சயம் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பற்றிக் கரைத்துக்
குடித்திருப்பாய். எனவே, தயவுசெய்து அவற்றைப் பற்றி எனக்குத் தெரியப்படுத்தவேண்டும் என அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன். மேலும், அடுத்த மாதம் நான் அங்கு வர இருக்கிறேன். எனவே, அவற்றைப்பற்றிய தகவல்களை
முன்கூட்டியே தெரிவித்தால் நல்லது. உன்னையும் காண மிகுந்த ஆவலாக இருக்கிறேன்.

அன்புடன்

செல்வன்

176
தொகுதி 4
4a. அலுவலக மின்னஞ்சல் - விண்ணப்பித்தல்

வினா:

பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல் வழி எழுதுக.

ஆண்டிடைத் தேர்வு முடிந்து பள்ளி விடுமுறை தொடங்கவிருக்கிறது. விடுமுறையின்போது உனக்கு


வீட்டினுள்ளே சும்மா இருக்கவோ, நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்து நேரத்தை வீணாக்கவோ நீ
விரும்பவில்லை. உன் குடும்பச் சுமையைக் குறைக்க பகுதிநேர வேலை ஒன்றைச் செய்ய விரும்புகிறாய்.
உன் முன் அனுபவம், நீ செய்ய விரும்பும் பகுதிநேர வேலை குறித்து விளக்கம் அளித்து, நிறுவனம்
ஒன்றிற்கு விண்ணப்ப மின்னஞ்சல் எழுதுக.

அனுப்புநர்: meenal@outlook.com

பெறுநர்: unique@outlook.com

4b. உறவுமுறை மின்னஞ்சல் - பகிர்ந்துகொள்ளுதல்

வினா:

பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல் வழி எழுதுக.


அன்புள்ள மணிக்கு
நான் நலம், அங்கு உன் நலத்தைத் தெரியப்படுத்தவும்.

நண்பா, இதுவரை நான் எண்ணற்ற சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டுள்ளேன். அவை அனைத்தும்


எனக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. நான் அவ்வாறு சென்ற பயணங்களை எல்லாம் வெறும் உல்லாசப்
பயணமாகக் கருதியே பொழுதைக் கழித்திருக்கிறேன்.

அங்கு நானும் என் நண்பர்களும். ஆடியும் பாடியும், கடலில் நீந்திக் களித்து மட்டுமே பெரும்பான்மையான
பொழுதைக் கழித்தோம். அதோடன்றி, ஆங்காங்கே உள்ள அங்காடிச் சாலைகளில் இஷ்டம் போலச் சுற்றி,
வேண்டிய பொருள்களை மிகவும் மகிழ்வுடன் வாங்கிக் களிப்படைவதிலேயே பெரும்பான்மையான நேரத்தைச்
செலவிட்டு அவரவர் இல்லங்களுக்கு திரும்பியிருக்கிறோம்.

177
ஆனால், சுற்றுலாப் பயணம் ஒரு சிறந்த கற்றல் பயணம் என்றும் மிகப் பயனுடையது என்றும், அனைவரும்
கூறுகின்றனர். தயவு செய்து எனக்கு அதைப்பற்றி விளக்கிக் கூறவேண்டும் என அன்புடன் வேண்டிக்
கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

ரவி

தொகுதி 5
5a. அலுவலக மின்னஞ்சல் - மன்னிப்புக் கேட்டல்

வினா:

பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல் வழி எழுதுக.

பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தாமல், வகுப்பில் சக மாணவர்களுக்குத் தொல்லை கொடுத்து,


கேலியும் கிண்டலும் செய்யும் உன்னிடம், ஆசிரியர்கள் அறிவுரை கூறி எச்சரித்தும் நீ கேட்டுக்
கொள்ளவில்லை. ஒரு நாள் நீ வகுப்பில் நடந்துகொள்ளும் விதத்தை தலைமையாசிரியர் பார்க்க
நேரிடுகிறது. அவர் உன்னைக் கண்டித்து, நீ மாணவர்களுக்குக் கொடுத்த தொல்லைகளைத் தெரிவித்து,
மன்னிப்புக் கடிதம் ஒன்றை அவருக்கு எழுதக் கட்டளையிடுகிறார். நீ மற்ற மாணவர்களுக்குக் கொடுத்த
தொல்லைகளையும், இனி உன்னை எவ்வாறு மாற்றிக்கொள்ளப் போகிறாய் என்பதைக் குறித்தும்
தலைமையாசிரியருக்கு ஒரு மின்னஞ்சல் எழுதுக.

அனுப்புநர்: balaji@outlook.com

பெறுநர்: principal@vanavilsec.com

5b. உறவுமுறை மின்னஞ்சல் - பரிந்துரைத்தல்


வினா:

பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல் வழி எழுதுக.

அன்புள்ள தோழி உமாவிற்கு,


நான் நலம், நீ நலமாக இருப்பாய் என எண்ணுகிறேன். பல்வேறு சூழல் காரணமாக உன்னோடு
மின்னஞ்சலில் தொடர்புகொள்ள முடியவில்லை. உமா! தற்சமயம் பெருகிவரும் பொருளாதார நெருக்கடியினை ஈடு
செய்ய நான் பகுதிநேரப் பணிக்குச் செல்லலாம் என்று தீர்மானித்துள்ளேன். அப்பணியின் மூலமாக கிடைக்கும்
வருமானத்தைக் கொண்டு என் குடும்ப நிலையினை ஓரளவு சமாளிக்க இயலும் என்றும் கருதுகிறேன்.

நீ ஏற்கனவே பகுதிநேரப் பணிக்கு, சென்றுகொண்டிருப்பதால் உன்னால் எனக்கு உதவ இயலும் என்றுக்


கருதுகின்றேன். எனவே, எத்தகைய நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கலாம்; வருமான வாய்ப்பு; சென்றுவரும் தூரம்; மற்றும்
178
பணி பற்றிய தகவல்; அது குறித்த பிற செய்திகள் போன்றவற்றைத் தெரியப்படுத்தினால் எனக்குப் பேருதவியாக
இருக்கும்.

உன் பதிலை ஆவலுடன் விரைவில் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

உஷா

தொகுதி 6
6a. அலுவலக மின்னஞ்சல் - தகவல் கேட்டறிதல்

வினா:

பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல் வழி எழுதுக.

நீ வசிக்கும் தெக் வாய் சாலை 23-ல் தொடர் திருட்டுகள் நடந்துவருகின்றன. மாலை நேரம்
முடிந்து இரவு தொடங்கியதும், திருட்டுகள் நடக்கின்றன. இதனால் மக்கள் வெளியே வரப்
பயப்படுகிறார்கள். இந்த நிலையில் அண்மையில் உன் வீட்டருகே நடந்த திருட்டுச் சம்பவத்தைப்பற்றி
காவல் நிலையத்திற்குத் தெரிவித்து ஒரு மின்னஞ்சல் எழுதுக

அனுப்புநர்: vasanthi@outlook.com

பெறுநர்: npp.gov.sg

6b. உறவுமுறை மின்னஞ்சல் - தகவல் அறிவித்தல்

வினா:

பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல் வழி எழுதுக.

அன்புள்ள கோபுவிற்கு

இங்கு நான் நலம். அங்கு உன் நலத்தையும் உன் குடும்பத்தார் நலமும் அறிய ஆவல்.
179
பாபு! தற்சமயம் நான் தொடக்கக் கல்லூரியில் தேசிய அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
என்னுடைய மேற்படிப்பை அயல் நாட்டில் தொடர எண்ணுகிறேன். ஏனெனில் அங்கு பயின்றால் பிற்கால வசதி
வாய்ப்புகளுக்கு அது உறுதுணையாய் இருக்கும் என்று என் பெற்றோரும் ஆலோசனை கூறுகின்றனர். எனக்கும்
அவர்களின் ஆலோசனை ஏற்புடையதாய் இருந்தமையால் நான் அதற்குச் சம்மதித்துள்ளேன்.

நண்பா! நீ தற்சமயம் அயல்நாட்டில் தங்கியுள்ளபடியால் அந்நாட்டின் கல்வி நிலவரம் குறித்து நன்கு


அறிந்திருப்பாய் என எண்ணுகிறேன். எனவே அங்கு உள்ள கல்லூரிகளில், எந்தப் பாடத்தினைத் தேர்வுசெய்யலாம்
என்றும், அதன் பயன்கள் யாவை என்பதிலும் நீ அனுபவம் வாய்ந்தவன் என்பதனால், இது குறித்துக் கேட்கிறேன்.

மேலும், வயதிலும் அனுபவத்திலும் என்னைக் காட்டிலும் நீ மூத்தவன் என்பதனால் உன்னிடம் ஆலோசனை


பெறுவதன் மூலம் என்னால் ஐயமின்றி அங்கு துணிந்து தங்கி கல்வி பயில ஏதுவாய் இருக்கும் எனக் கருதுகிறேன்.

உன் விரைவான பதிலினை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கும் உன் அன்பு நண்பன்.

அன்புடன்

பாபு

தொகுதி 7
7a. அலுவலக மின்னஞ்சல் – பரிந்துரைத்தல்

வினா:

பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல் வழி எழுதுக.

நீ வசிக்கும் பீஷான் வட்டாரத்தில் பூங்கா, பல்பொருள் அங்காடி, உடற்பயிற்சிக் கூடம் போன்ற


பல வசதிகளை சமூக மன்றம் செய்து தந்திருக்கின்றது. ஆனால், மாணவர்களுக்கு நன்மை அளிக்கும்
வகையில் நூலகம் இல்லை. அந்தக் குறையும் நீங்கும்படி நீ வசிக்கும் பகுதியில் நூலகம் ஒன்று புதிதாகக்
கட்டப் போவதை செய்தித்தாளின் வாயிலாக அறிந்து, அந்த நூலகத்தில் என்னென்ன வசதிகள் இருப்பது
அவசியம் என்பதை விளக்கி, தேசிய நூலக வாரியத்தின் இயக்குநருக்கு நீ மின்னஞ்சல் ஒன்று எழுதுக.

அனுப்புநர்: lilly@outlook.com

பெறுநர்: nlb@gov.sg

7b. உறவுமுறை மின்னஞ்சல் - பாராட்டு தெரிவித்தல்

வினா:
180
பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல் வழி எழுதுக.

அன்புள்ள நண்பன் குமரேசனுக்கு,


நண்பா! நான் இங்கு நலம். உன் நலத்தை அறிய ஆவல்.

நண்பா குமரேசா, நீ இன்றைய செய்த்தித்தாளைக் கண்ணுற்றாயா? அதில் முகப்புப் பக்கத்திலேயே ‘சாதனை


வீரன்’ என்று நம் நண்பன் மாவீரனைப் பற்றிக் கொட்டை எழுத்தில் அச்சடித்திருக்கிறார்கள். அதைப் பார்த்த
உடனேயே முதலில் நம் நண்பன் மாவீரனுக்குப் பாராட்டைத் தெரிவித்துவிட்டேன்.

நீயும் உடனடியாக அதனைப் பார்த்துக் கண்ணுற்று நம் நண்பனைப் பாராட்டு. அதன் பிறகு நம் நண்பர்கள்
குழு சார்பாக மாவீரனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தலாம்.

மற்ற விவரங்களைப் பிறகு தெரிவிக்கிறேன்.

அன்புடன்

தமிழ்ச் செல்வன்

தொகுதி 8
8a. அலுவலக மின்னஞ்சல் - பாராட்டு தெரிவித்தல்

வினா:

பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல் வழி எழுதுக.

பெண்களைச் சிறப்பு செய்யும் நோக்கத்தில் ‘இன்றைய பெண்மணி’ என்னும் நிகழ்ச்சி


பெண்களுக்காக முதன்முறையாக வீராசாமி சாலையில் சிறப்பாக நடைபெற்றது. இச்சமூக நிகழ்ச்சிகள்
சிறப்பு குறித்த பாராட்டுதல்களைத் தெரிவித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு. மின்னஞ்சல் ஒன்று எழுதுக.

அனுப்புநர்: ganga@outlook.com

பெறுநர்: sss@outlook.com

8b. உறவுமுறை மின்னஞ்சல் - நன்றி தெரிவித்தல்


181
வினா:

பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல் வழி எழுதுக.

அன்பிற்குரிய தோழி குமுதாவிற்கு,


குமுதா, நீ மிகவும் பாக்கியசாலி. எவ்வாறெனின், நீ உன் தந்தையாரை இழந்து தவித்தபொழுது, எத்தனையோ
முறை உனக்கு உதவவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். ஆனால், என்னுடைய பல்வேறு சூழல் காரணமாக
என்னால் உனக்கு எதுவும் செய்ய இயலவில்லை. ஆனால், குணசீலன் ஐயாவைப் பார்த்தாயா? உன் தந்தையாரே
அவருள் குடிபுகுந்ததைப் போல், உனக்கு எவ்வாறெல்லாம் உதவி புரிந்துள்ளார். இதனை நீ ஒருபோதும் மறவாமல்
என்றென்றும் அவருக்கு நன்றி உடையவளாய் இருக்க வேண்டும்.

ஏனெனில்,

“காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்


ஞாலத்தின் மாணப் பெரிது”

என்று வள்ளுவர் கூறியுள்ளார். இதனை ஒருபோதும் மறவாதே.

அன்புடன்

கோமளா

தொகுதி 9
9a. அலுவலக மின்னஞ்சல் - ஆலோசனை கூறுதல்

வினா:

பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல் வழி எழுதுக.

எல்லாமே அவசரம். ஆற அமர ரசித்து ருசித்து, மென்று தின்று சுவைக்கக் கூட நேரம்
இல்லையென்று அவசர அவசரமாக நாலைந்து வாய் அள்ளிப் போட்டுக்கொண்டபடி ஓடுகின்ற இக்கால
மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவுபற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். அதுவும் தேர்வு
நெருங்கிவிட்டால் திடீர் உணவுகள்தான் அதிகம் உட்கொள்கின்றனர். எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை
முறையின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆலோசனைகளைப் பள்ளிகளுக்கு எவ்வாறு ஏற்படுத்தலாம்
என்பது குறித்த மின்னஞ்சல் ஒன்றை பள்ளி நிர்வாகத்திற்கு எழுதுக.

அனுப்புநர்: roja@outlook.com

பெறுநர்: schooladmin@outlook.com

182
9b. உறவுமுறை மின்னஞ்சல் - மன்னிப்புக் கேட்டல்

வினா:
பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல்வழி எழுதுக.
அன்புள்ள நண்பன் சபரிக்கு,

என்ன சபரி, நீயா இவ்வாறு செய்துவிட்டாய்? எனக்கு மிகுந்த வேதனையாக உள்ளது. நீயும், சந்தோஷும்
எப்படி இருப்பீர்கள். ஒரு சிறு விஷயத்திற்காக அவனிடம் உனக்கு இத்தனை கோபம் கூடாது தான். பாவம், அவன்
என்னிடம் சொல்லிச் சொல்லி எவ்வாறு கண்கலங்குகிறான் தெரியுமா?

தயவு செய்து நீ உடனடியாக அவனிடம் மன்னிப்புக் கேள். உங்கள் இருவரின் இடைவெளி என்னையே
கண்கலங்கச் செய்கிறது. இதற்காக என்னைத் தவறாகக் கருதிவிடாதே.

அன்புடன்

சரவணன்

தொகுதி 10
10a. அலுவலக மின்னஞ்சல் - முறையிடுதல்

வினா:

பின்வரும் பகுதியைப் படித்து, ஏற்ற விடையை மின்னஞ்சல் வழி எழுதுக.

மழை பெய்யும் போதெல்லாம் உங்கள் வட்டாரத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.


தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் அமிழ்ந்து கிடக்கும் பல பொருட்கள் வீணாகிவிடுகின்றன. பாதிப்புகள்
அத்துடன் நின்றுவிடவில்லை. கொசுக்களின் பெருக்கம் அதிகமாகின்றது. மழைக்கால நோய்களின்
பாதிப்புகள் தொடங்குகின்றன. இதைக்குறித்து நகர மண்டபத்திடம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு
நடவடிக்கைகளைப் பற்றி முறையிட்டு மின்னஞ்சல் ஒன்று எழுதுக.

அனுப்புநர்: sunil@outlook.com

பெறுநர்: towncouncil@gov.com

183
10b. உறவுமுறை மின்னஞ்சல் - விளக்கம் கேட்டல்

வினா:

அன்புள்ள நண்பன் மதிவாணனுக்கு,

என் அன்பு நண்பா, நான் நலம். நீ நலமாக இருப்பாய் என்று எண்ணுகிறேன்.

நண்பா, தற்சமயம் உயர்நிலை நான்கில் பயின்றுவரும் எனக்குப் பள்ளிப்பாடங்களேயன்றி பள்ளி


இணைப்பாடங்களும் வேறு உள்ளன.

அனைத்துப் பாடங்களையும் ஒருசேர எவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் பயில்வது என்று ஒரே


குழப்பமாக உள்ளது.

இத்தனைக்கும், தனிப்பயிற்சி வேறு எடுத்துக் கொள்கிறேன். கிட்டத்தட்ட 8 பாடங்கள் உள்ளன.

நீ இது போன்ற பாடங்களைப் பயின்று மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறியுள்ளதால், உன்னிடம்


விளக்கம் பெற்றால் பயனுடையதாய் இருக்கும் என எண்ணுகிறேன்.

என் பெற்றோர்களும் போதிய விளக்கம் தந்துள்ளனர். இருப்பினும், உன்னிடமும் கருத்தைப் பெற்றால்


நலமாக இருக்கும் என்றும் கூறினர்.

அன்பு நண்பா! நானும் உன் போன்று சிறப்படைய போதிய விளக்கம் தரும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

மனோகரன்

மின்னஞ்சல் விடைகள்
184
தொகுதி 1
1a. அலுவலக மின்னஞ்சல் - புகார் செய்தல்

ha@outlook.com

hari@outlook.com

npp@gov.sg

அக்கம் பக்கத்தாருக்குத் தொந்தரவு கொடுக்கும் இளையர்கள்

05/01/2016

மதிப்பிற்குரிய காவல் அதிகாரி அவர்களுக்கு,

வணக்கம்.

என் பெயர் ஹரி. நான் அங் மோ கியோ வட்டாரத்தில், கட்டிட எண் 214-ல் குடியிருக்கிறேன்.
எங்கள் அடுக்குமாடிக் கட்டடத்தின் கீழ் சில இளைஞர்கள், அனைவரும் அயர்ந்து உறங்கும் இரவின்
மடியில் தினமும் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் ஏற்படும் தொந்தரவுகளைப்
பொறுத்துக்கொண்டு இருக்க இயலவில்லை என்பதால் பெரியவர்கள் சிலர் அவர்களிடம் எடுத்துக்
கூறியும், இந்த இளைஞர்கள் பொருட்படுத்தவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்பொழுது திடீரென்று
இவர்களின் ஆரவாரத்தால் உறக்கம் கலைந்துபோகின்றது. குழந்தைகள் அழுகின்றன. மீண்டும் உறக்கம்வர
நெடுநேரம் ஆகின்றது. இதனால் கண் எரிச்சல், உடலில் சோர்வு, உணவு செரிமானம் இன்மை, தலைவலி
போன்றவற்றால் அவதிப்படுகிறோம்.

மேலும் இக்குடியிருப்பில் உடல்நலம் குறைந்தவர்கள், மாணவர்கள், முதியவர்கள், பள்ளிக்குச்


செல்பவர்கள் என்று அனைவரும் இருக்கிறார்கள். இவர்கள் இந்த இளைஞர்கள் செய்யும்
அட்டகாசங்களால் அனுதினமும் போதுமான அளவு தூக்கம் இல்லாமல் அல்லலுறுகின்றனர்.
நாள்முழுவதும் பலவிதமான பணிகளை முடித்துவிட்டு சோர்வுடன் வீடு திரும்புபவர்களுக்கு நல்ல
உறக்கம் அவசியம் தேவை. நன்றாக உறங்கினால்தான் அடுத்தநாள் பணிகளைச் செவ்வனே செய்ய

185
முடியும். உடலுக்கும், மனத்திற்கும், கண்களுக்கும் புத்துணர்ச்சி தருவது நல்ல உறக்கம்தான்.
அதுமட்டுமன்றி, உறக்கம் கெடுவது இளைஞர்களாகிய உங்களுக்கும் துன்பம்தானே என்றும் எடுத்துக்
கூறினேன். ஆனால் அவர்களோ ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம்’,
என்றிருக்கின்றனர்.

‘இப்படித்தான் வாழவேண்டும் என்று இல்லாமல் எப்படியும் வாழலாம்’ என்று மனம்போன


போக்கிலே ‘நானே ராஜா நானே மந்திரி’ என்னும் மனப்பான்மையுடன் தவறுசெய்யும் பலரை நீங்கள்
நல்வழிப் படுத்தியிருக்கிறீர்கள். மேலும், எனக்குத் தெரிந்த சில ஆலோசனைகளை உங்களிடம்
முன்வைக்கிறேன். இவர்களைப் போன்ற இளைஞர்களுக்கு நீங்கள் தக்க தண்டனை வழங்கலாம்.
அதிகப்படியான அபராதங்களை விதிக்கலாம் அல்லது அடுக்குமாடிக் கீழ்த்தளங்களில் உள்ள அறிவிப்புப்
பலகைகளில் இளைஞர்கள் கூடி அரட்டையடிக்கக் கூடாது என்று எழுதிப்போடலாம். மீறினால், அபராதம்
விதிக்கலாம்.

உறக்கமின்றித் தவிக்கும் எங்களுக்கு உதவுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். உங்களால்


நிம்மதி ஏற்படும். இரவில் அமைதியான சூழல் இங்கு நிலவும்.

நன்றி

இப்படிக்கு

ஹரி

1b. உறவுமுறை மின்னஞ்சல் -அறிவுரை கேட்டல்

mani@outlook.com
balu@outlook.com

அறிவுரை கூறல்

04/01/2016

186
அன்புள்ள பாலு,

நான் நலமாக இருக்கிறேன். இங்கு நம் அம்மா, அப்பா அனைவரும் நலம். தம்பி, நீ நன்றாகப்
படிப்பது குறித்து மகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் கணினி விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டதாக
எழுதி இருக்கிறாய். அது எனக்கே உன்மீது சிறிது கோபத்தை ஏற்படுத்துகிறது.
விளையாட்டு ஒவ்வொருவருக்கும் அவசியமானதுதான். அது நம் உடலுக்குப் புத்துணர்ச்சியையும்,
மனதிற்கு மகிழ்ச்சியையும் தரவல்லது. தொடர்ந்து படித்தலிலிருந்து சற்றுநேரம் கணினி விளையாட்டுகளில்
ஈடுபடுவது தவறில்லை. அதற்காக எப்பொழுதும் அதிலேயே மூழ்கியிருப்பதுதான் தவறு. இக்கால
இளையர்களின் வாழ்க்கைமுறையில் கணினி விளையாட்டு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
எனவே, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. நானும் சில ஆண்டுகளுக்கு முன் அவ்வாறுதான் இருந்தேன்.
ஆனால், காலப்போக்கில் என்னை மாற்றிக்கொண்டேன். நான் கடைப்பிடித்த சில வழிமுறைகளை
உன்னிடம் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தம்பி, நான் என் நண்பன் ஒருவனின் ஆலோசனைப்படி, ஒரு கால அட்டவணையைத் தயார்
செய்துகொண்டேன். அதில் கணினி விளையாட்டுகளுக்குச் சற்று நேரத்தை ஒதுக்கிக்கொண்டேன்.
தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கும் வேளைகளில் கணினி விளையாட்டுகளின் நினைப்பு வந்ததென்றால்,
கணினியில் சில பயனுள்ள இணையதளங்களுக்குச் சென்று அவற்றிலிருக்கும் தகவல்களைப் படிப்பேன்.
இது மறைமுகமாக நம் கற்றலுக்கும் வழிவகுக்கும். நூலகம்.காம் போன்ற இணையதளங்களில் உன்
போன்ற இளையர்களுக்கென பற்பல தகவல்கள் குவிந்துகிடக்கின்றன.
மேலும், வேறுசில நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதன்மூலமும் கணினி
விளையாட்டுகளிலிருந்து உன் திசை திருப்பப்படும்.
ஆமாம்... உன் நண்பன் ரவி மிகச்சிறப்பாக ஓவியம் வரையக் கூடியவன் என்று என்னிடம்
கூறியிருந்தாயே. நீ ஏன் ஓவியத்தில் உன் கவனத்தைச் செலுத்தக் கூடாது? நம் தமிழாசிரியர்கூட,
“சித்திரமும் கைப்பழக்கம்” என்று கூறியிருந்தாரே, நினைவிருக்கிறதா அதனால் நீ கணினி விளையாட்டின்
நினைவு வரும்போதெல்லாம் ஓவியத்திலும் கவனம் செலுத்தலாம், அல்லது உன் பள்ளி நண்பர்களுடன்
வார்த்தை விளையாட்டு, சொற்களஞ்சிய உருவாக்கம் போன்ற விளையாட்டுகளையும் விளையாடலாம்.
அல்லது சிறந்த உடற்பயிற்சிகளிலும் ஈடுபடலாம்.
தம்பி! இதற்கெல்லாம் மேலாக, “மனதில் உறுதி வேண்டும்” என்று நம் மகாகவி பாரதியார்
கூறியுள்ளார். எனவே, மன உறுதியுடன் நாம் இருந்தோமானால், நிச்சயம் படிப்பில் தேர்ச்சி பெற்று நம்
பெற்றோருக்குப் பெருமை சேர்க்கலாம். நான் எழுதிய இந்த ஆலோசனைகள் உனக்குப்
பயனளித்திருக்கும் என நம்புகிறேன். உன் அடுத்த மின்னஞ்சலில் உன் பழக்கத்தை மாற்றிக்கொண்ட நல்ல
செய்தியை எதிர்பார்க்கிறேன்.
மீண்டும் உன் மின்னஞ்சலுக்காக காத்திருக்கிறேன்.
அன்புடன் உன் அண்ணன்

187
மணி
தொகுத 2

தொகுதி 2
2a. அலுவலக மின்னஞ்சல் - விமர்சனம் செய்தல்
மதிப்பிற்குரிய நிருபர் அவர்களுக்கு,

malar@outlook.com

news@outlook.com

சிறுகதை விமர்சனம் தொடர்பாக

05/01/2016

வணக்கம்.

என் பெயர் மலர். நான் வானவில் உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறேன். தங்களின் ‘தமிழ் மலர்’
செய்தித்தாளில் வரும் ‘மாணவர் பக்கம்’ பகுதியை மிகவும் விரும்பிப் படிப்பேன். அப்பகுதியில் உள்ள
புதிர்கள், விடுகதைகள், மாணவர்கள் கைவண்ணத்தில் அமைந்த ஓவியங்கள், உங்களுக்குத் தெரியுமா?,
சிந்தனைத்துளிகள், சிறு சிறு கட்டுரைகள், கதைகள், கவிதைகள், அறிவியல் உண்மைகள், வரலாற்றுக்
குறிப்புகள், கொஞ்சம் சிரியுங்கள் என அனைத்துப் பகுதிகளையும் ஒன்றுவிடாமல் படிப்பேன். அதிலும்
குறிப்பாக சிறுகதையும், அக்கதை உணர்த்தும் நீதியும் என் மனம் கவர்ந்த பகுதியாகும். ‘கடுகு சிறுத்தாலும்
காரம் போகாது’ என்பதற்கு ஏற்ப இப்பகுதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டு பிறந்தநாளில், உங்கள் செய்தித்தாளில் நான் படித்த ‘மனிதாபிமானம்’ என்ற கதை என்
மனதுக்குள் ஆழப்பதிந்தது. சிந்தனையைத் தூண்டி ‘உண்மையின் உரைகல்லாக’ அமைந்துவிட்டது.
188
செல்வந்தர் ஒருவர் ஒரு கூடை நிறைய பழங்களைக் கோயிலில் செலுத்திவிடும்படி
வேலைக்காரனிடம் தந்து அனுப்பிவிட்டு, “இறைவா! இன்று ஒரு கூடைப் பழங்களை, நான்
வேண்டியபடியே அனுப்பிவைத்துவிட்டேன். நன்றி” என்று நினைத்தபடி உறங்கினார். ஆனால்
“செல்வந்தரே! நீ அனுப்பிய ஒரு பழம் எனக்குக் கிடைத்தது” என்று கனவில் கூறி இறைவன் மறைந்தார்.
மறுநாள் வேலைக்காரன் வந்ததும். “உண்மையைச் சொல்... இறைவனுக்குக் கூடைப் பழங்களைத் தந்தாயா
இல்லையா?” எனக் கேட்க, அவன் வழியில் ஏழை ஒருவன் ‘பசி’ என்றதால் மனம் இளகி ஒரே ஒரு பழம்
தந்துவிட்டு மற்றவை அனைத்தும் கோயிலுக்குத் தந்ததாகக் கூறினான். ‘ஏழை உண்ட பழமே இறைவன்
உண்ட பழம்’ என்று உணர்ந்தான் செல்வந்தன்.

‘ஏழையின் வயிறே ஒருவன் பொருள்சேர்த்து வைக்கும் இடம்’ என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.


இன்றைய உலகில் பகட்டுக்காக, பாராட்டுக்காக ஆடம்பரமாக விழாக்களில் பலவகை
உணவுகளைப் பரிமாறுகிறார்கள். நாகரீகமான முறையில் உண்பதாக நினைத்துக்கொண்டு பலர்
வீணாக்கும் உணவு ஏராளமாகும். என் தந்தையுடன் சென்ற திருமணவிழா ஒன்றில் இதனைக் கண்ணாரக்
கண்டேன். பசித்தவர்க்கு உணவு தருவதே அறம். பசியாறிய ஒருவர் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சிக்கு
ஈடு எதுவும் இல்லை. ‘ஏழையின் சிரிப்பில் அன்றோ இறைவன் வாழ்கிறான்.’
“ஏழையின் வயிறு அஞ்சல் பெட்டி. இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை இதில்
போட்டால் அவனுக்குப் போய் சேர்ந்துவிடும்.” என்பதை இக்கதை எத்தனை அழகாக உணர்த்திவிட்டது.
கதையைப் படிக்க ஒருசில நிமிடங்கள் போதும். ஆனால், அது உணர்த்தும் உண்மை காலம் முழுவதும்
பின்பற்றத் தக்கதாக இருப்பதுதான் உயர்வு.

பசுமரத்தாணி போல நல்ல கருத்துகள் மனதில் பதியச் செய்யும். இதுபோன்ற கதைகள் இன்னும்
மலரட்டும். இதுபோன்ற கதைகள் என்னைப் போன்ற இளையர்களுக்குக் கதைகள் படிக்கவும், எழுதவும்
மேலும் ஊக்குவிக்கும் என நம்புகிறேன். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். கதையாசிரியர் கவிக்கோவுக்கு
நன்றி. ‘மனிதனுக்கு மனிதன் உதவுவதே மனிதாபிமானம்.’ புத்தாண்டின் புதுமலரான கருத்துக்கு நன்றி.

இப்படிக்கு

மலர்

2b. உறவுமுறை மின்னஞ்சல் - ஆலோசனை கேட்டல்

 
189
mukunth@outlook.com

murali@outlook.com
ஆலோசனை கூறல்

04/01/2016
அன்புள்ள முரளி,

உன் மின்னஞ்சலைக் கண்டேன். இங்கு நானும் என் டாமியும் மிக்க நலமாக உள்ளோம்.

நீ கூறியது போல் இம்முறையும் பல்வேறு சாகசங்களைச் செய்துகாட்டியமைக்காக என் டாமிக்கு ‘சாதனைத்


தீரன்’ என்ற விருதும், மற்றும் ரொக்கப் பரிசாக ஆயிரம் வெள்ளியையும் வழங்கினார்கள். எனக்கு நீ கூறியதுபோல்
அளவற்ற மகிழ்ச்சி.

அது சரி. செல்லப் பிராணி வளர்ப்புபற்றிக் கேட்டிருந்தாய். வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல்
பெரியவர்கள்வரை செல்லப்பிராணிகளை வளர்க்கலாம். அவை பொதுவாக உதவும் தன்மை, அன்பு போன்ற
குணங்களைப் பெற்றிருக்கும். அதை வளர்ப்பது குறித்து பயப்படத் தேவையில்லை. ஆனால், அவற்றை
வளர்ப்பதற்குத் தேவையானவற்றை முறைப்படி செய்யத் தவறக்கூடாது. அதாவது, அவற்றுக்கு வேளா வேளை
உணவளித்தல், அனுதினமும் குளிப்பாட்டித் தூய்மை செய்தல், அவை நோய்வாய்ப்பட்டால் கால்நடை மருத்துவரிடம்
அழைத்துச் செல்லுதல் முதலியனவற்றில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

பொதுவாக ஒவ்வொருவர் வீட்டிலும் நாய் வளர்ப்பதையே விரும்புகிறார்கள். ஏனெனில், அது நம்


வீட்டிற்குப் பாதுகாவலனாக அமைவதோடு நன்றியுடனும் இருக்கும். இது என் அனுபவப்பூர்வமான கருத்து. நீயும்
ஒரு நாயை வளர்க்கலாம்.

புதிதாகப் பிறந்த நாய்களை வாங்கி வந்தால் அவற்றுக்கு ஒன்றரை மாதத்தில் தடுப்பு ஊசி போடவேண்டும்.
எலிக்காய்ச்சல் பாதிப்பு, ஹெபாடைட்டிஸ் போன்ற நோய்கள் வராமல் தவிர்ப்பதற்காகக் கலவை மருந்துகளின்
தடுப்பூசி போடவேண்டும். மேலும் மூன்றாவது மாதத்தில் ரேபீஸ் தடுப்பூசியும் போடவேண்டும். அதோடு
மட்டுமில்லாமல் அதற்கு வாந்தி, வயிற்றுப் போக்கு, மற்றும் அது சோர்ந்து படுத்திருத்தல் போன்ற அறிகுறிகள்
தென்பட்டால் உடனே மருத்துவரிடம் காட்ட வேண்டும்.

நாய்களைச் சின்ன சின்னக் கட்டளைக்கு உடன்பட வைப்பது முக்கியம். அதில் அவற்றுக்குப் பயிற்சியளிக்க
வேண்டும், அதற்குப் பிடித்தது எது? பிடிக்காதது எது என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இவற்றை இணையத்தின்
மூலமோ, நாயை வாங்கிய கடைக்காரரிடமோ கேட்டுத் தெரிந்துகொள்வது முக்கியம்.

நாய் தன் உணவை உண்ணும் போதோ அல்லது குரைக்கும் போதோ அதன் அருகே செல்லக் கூடாது.
நாய் நம்மைத் துரத்தினால் உடனே ஓடக்கூடாது. மேலும் கையில் ஏதேனும் உணவுப் பொருள்களை
வைத்துக்கொண்டு அதற்குத் தராமல் ஏமாற்றக் கூடாது. தற்சமயம் கடைகளில் நாய் வளர்ப்பிற்கென்றே தரமான
உணவுப்பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அவற்றைத் தேர்ந்தெடுத்து நாய்களுக்கு வழங்கலாம்.

நாய்களை மாலைப்பொழுதுகளில் உடற்பயிற்சிகளுக்குக் கூட்டிச் செல்ல வேண்டுவது அவசியம்.


மனிதர்களைப் போல் நாய்களும் உடற்பயிற்சி செய்வது அவசியம். பூங்காக்களில் அவற்றை ஓடவோ, நடக்கவோ
விடலாம். ஆனால், பொது இடங்களில் அவை மற்றவர்களை அச்சுறுத்தாதபடிப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமாக, நம் செல்லப்பிராணி எந்த நேரமும் நமது பார்வையின்கீழ் இருக்க வேண்டும்.

இவ்வாறெல்லாம் முன் எச்சரிக்கையுடன் இருந்து செயல்பட்டால், அது நாளடைவில் நம்மிடம் மிகவும்


அன்பாக இருக்கப் பழகிவிடும். அதோடுமட்டுமின்றி, அதனுடன் நேரத்தைச் செலவிடுவது முக்கியம். நம்மைப்போல்
விலங்குகளும் அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கும். பின்னர் அதனைக் கையாள்வது சுலபம்.

190
இவற்றுக்கும்மேல் உனக்குச் செல்லப்பிராணி வளர்ப்புபற்றித் தகவல் வேண்டுமென்றால் அவற்றையொட்டி
என்னிடம் நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. நேரம் இருந்தால் வீட்டிற்குவந்து பெற்றுக்கொள்ளவும். உன் அடுத்த
மின் மடலில் உன் செல்லப்பிராணியைப் பற்றி எழுத மறவாதே. சரி நண்பா! மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்

முகுந்த்

தொகுதி 3
3a. அலுவலக மின்னஞ்சல் - அனுமதி கேட்டல்

jegan@outlook.com

towncouncil@gov.sg
பிறந்தநாள் கொண்டாட அனுமதி கேட்டல்

07/01/2016

191
மதிப்பிற்குரிய நகர மண்டப அதிகாரி அவர்களுக்கு,

வணக்கம்.

என் பெயர் ஜெகன். நான் சிராங்கூன் வட்டாரத்தில் உள்ள அடுக்கு மாடிக் கட்டிட எண் 248 ல்
குடியிருக்கிறேன். இந்தக் கட்டிடத்தில் வசிப்பவர்கள் அவர்களின் திருமண நாள், பிறந்தநாள். திருமண
வரவேற்பு போன்ற குடும்ப விழாக்களையும், தீபாவளி, கிறிஸ்துமஸ், கிருஷ்ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி,
சீனப் பெருநாள் கொண்டாட்டம், ஹரி ராயா கொண்டாட்டங்கள் போன்ற கலாச்சார விழாக்களையும்
கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் கொண்டாட உரிய அனுமதி தங்களிடம் பெற்று, கொண்டாடி வருகின்றனர்.
உங்கள் அனுமதியில்லாமல் எந்த விழாக்களும் இங்கு நடத்தப்படுவதில்லை என்பதனைத்
தெரிவித்துக்கொள்கிறேன். இதன்வழி, என்னுடைய பிறந்தநாள் விழாவையும் என் கட்டிடத்தின் கீழ்
இருக்கும் வெற்றிடத்தில் கொண்டாட விழைகிறேன்.

பிறந்த நாள் கொண்டாட்டத்தை வரும் 20.04.2016 அன்று நடத்தவிருக்கிறோம். சுமார் 50 பேர்


இந்த விழாவில் பங்குபெறவிருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் பள்ளி நண்பர்கள், ஆசிரியர்கள்,
அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர், நண்பர்கள். நீங்கள் அனுமதிதந்தால் அடுக்குமாடிக் கீழ்த்தளத்தில்
வண்ண வண்ண விளக்குகள், தோரணங்கள், பலூன்கள் போன்றவற்றை வைத்து அலங்கரிக்கலாம் என்று
திட்டமிட்டுள்ளோம்.

விழாவில் பாட்டுக் கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யவிருக்கிறோம். இதன்மூலம் எழுப்பப்படும் சத்தம்


மற்றவர்களுக்கு இடையூறாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது எங்களது பொறுப்பு.
குழந்தைகளுக்கென விளையாட்டுகளையும், மந்திரக்காட்சிகளையும் ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்.
விழாவிற்கு வரும் குழந்தைகள் இவற்றின்மூலம் குதூகலம் அடைவார்கள். பெரியவர்கள்
பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்குத் தொந்தரவாக இல்லாமல்
இவ்விளையாட்டுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். உணவில்லாத பிறந்தநாள் விழாவா? எனவே, உணவு
ஏற்பாடும் உண்டு. விருந்தினர்கள் தாங்களே உணவுகளை எடுத்து உண்ணும் முறையைக் கையாளப்
போகிறோம். எனவே, அடுக்குமாடிக் கீழ்த்தளத்தில் இருக்கும் தண்ணீர் வசதியும் எங்களுக்குத்
தேவைப்படும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

விழா முடிந்ததும் இடத்தைத் தூய்மைப்படுத்திக்கொடுப்பது முழுக்க முழுக்க எங்கள்


பொறுப்பாகும். இரவு பத்துமணிக்கெல்லாம் நாங்கள் விழாவை முடித்துவிடுவோம். அதற்குமேல் நடத்துவது
அக்கம்பக்கத்தினரின் தூக்கத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். தாங்கள்
தயவுசெய்து எங்கள் கோரிக்கையைக் கருத்தில்கொண்டு இந்த இடத்தை நாங்கள் பயன்படுத்த அனுமதி
அளிப்பீர்கள் என நம்புகிறேன். முன்கூட்டியே அனுமதி கிடைத்தால் நாங்கள் விழாவிற்கான மற்ற
ஏற்பாடுகளைச் செய்ய வசதியாக இருக்கும்.

இந்த ஏற்பாடுகளைச் செய்ய கால அவகாசம் தேவை என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மேலும், விழாவில் கலந்துகொள்ளாத அக்கம்பக்கத்தாருக்கு எவ்விதத் தொல்லையும் இல்லாதவாறு
கொண்டாடுவேன் என்பதை மீண்டும் கூறி உறுதியளிக்கிறேன். விழாக்கள் பல இங்கு கொண்டாட
192
அனுமதி தந்திருக்கிறீர்கள். என் பிறந்த நாள் விழாவையும் கொண்டாட அனுமதி அளிப்பீர்கள் என
நம்புகிறேன்.

நன்றி

இப்படிக்கு

ஜெகன்

3b. உறவுமுறை மின்னஞ்சல் - தகவல் கேட்டல்

sekar@outlook.com

selvan@outlook.com
தகவல் தெரிவித்தல்

12/01/2016

அன்புள்ள செல்வன்

இங்கு நான் நலமாக உள்ளேன். உன் நலத்தினை அறிய ஆவல். என்னுடன் இன்று நீ புதியதாகத்
தொடங்கியுள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொண்டதற்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நண்பா! நீ சிங்கப்பூருக்கு
வருவதாகக் கூறியுள்ளாய். எனக்கு இப்பொழுதே மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்கள் ஊரைப்பற்றி உனக்கு சில தகவல்களைக் கூறுகின்றேன்.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடு சிங்கப்பூர். சிங்கப்பூர் ஒரு சிறிய தீவு என்ற போதிலும்
இங்கு நிறைய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. மற்ற நாடுகள்போல் இல்லாமல் சிங்கப்பூர் பல இன
சமுதாயத்தைக் கொண்டுள்ளது. இங்கு சீனர், தமிழர், மலாய்க்காரர், ஆங்கிலேயர் எனப் பல இனத்தைச் சேர்ந்தவர்கள்
வாழ்கிறார்கள். ஒவ்வொரு இனத்தின் சிறப்பைக் கூறும் வண்ணம் இங்கு இடங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி
விவரிக்கிறேன்.

193
முதலில் சைனா டவுன் எனப்படும் சீன நகரம். இங்குதான் சீனர்கள் சீனாவிலிருந்து வந்து இறங்கினார்கள்.
பெரும்பாலான சீனர்கள் அப்போது சிறு வியாபாரங்களை இங்குத் தொடங்கினார்கள். காலப்போக்கில் அவை
வளர்ச்சி கண்டபோது அவர்களின் குடும்பத்தினரையும் அழைத்து வந்தனர். சீனப் பெண்கள் கட்டிட வேலைகளில்
ஈடுபட்டார்கள். ஆடவர்கள் பெரும்பாலும் வியாபாரிகளாக இருந்தார்கள். சீன பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும்
வண்ணம் இங்கு தற்போது நிறையக் கடைகளைப் பார்க்கலாம். சீனப் புத்தாண்டு சமயத்தில் இவ்விடம் சிறு
சீனாவைப் போலவே காட்சியளிக்கும்.

கேலாங் செராய் எனப்படும் இடம் மலாய்க்காரர்களுக்கு உரியது. இவர்கள் அதிகமாக மீன்பிடிக்கும்


தொழிலில் ஈடுபட்டார்கள். அப்போது இங்கு அதிகமாக மீன் வியாபாரம் மற்றும் மலாய்ப் பாரம்பரிய
உணவுப்பொருள்களான ‘சாத்தே’, ‘குத்துபாட்’ போன்றவற்றை மலாய்க்காரர்கள் இச்சாலையில் விற்றுப் பிழைப்பு
நடத்தினார்கள். இச்சாலையில் தற்போதும் மலாய்க்காரர்களின் பாரம்பரியம் ஒளிவீசும். நோன்புப் பெருநாள்
சமயங்களில் விதவிதமான மலாய்ப் பலகாரங்களுடன், ஆடை அணிகள், அலங்காரப் பொருள்கள் போன்றவற்றை
வாங்கி மகிழலாம்.

தமிழ்நாட்டிலிருந்து அப்போது நிறையப் பேர் சிங்கப்பூருக்குப் பிழைப்புத் தேடி வந்தார்கள். அவர்கள் சிராங்கூன்
சாலையில் தங்கி சிறு வியாபாரங்கள், கூலி வேலைகள் போன்றவற்றில் ஈடுபட்டார்கள். சிலர் வட்டிக்குக் கொடுக்கும்
செட்டியார்களாகவும் இருந்தார்கள். சிராங்கூன் சாலை சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்களின் ‘வாழ்க்கைக் கண்ணாடி’
என்றால் அது மிகையாகாது. இப்போது அது “தேக்கா” என்று அழைக்கப்படுகிறது. தீபாவளிக்குக் தேக்கா சாலை
களைகட்டியிருப்பதைப் பார்க்க கண்கள் இரண்டு போதா!

சிங்கப்பூரில் சுற்றுலா மையங்களான ஜூராங் பறவைகள் பூங்கா, விலங்கியல் பூங்கா போன்றவைகளும்


உள்ளன. அங்கு அதிசயிக்கத்தக்க வகையில் விதவிதமான பறவைகள் கண்கவர் வண்ணங்களுடன்
காணப்படுகின்றன. அவை எழுப்பும் ஒலிகளுக்கு இன்னிசையும் ஈடாகாது என்றால் அது மிகையாகாது. அடேயப்பா!
அவற்றை ஒரு நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதோடு விலங்கியல் பூங்காவும் இங்கு உள்ளது.
அவற்றையெல்லாம் வருணிக்க வார்த்தைகள் போதாது. ஆனால், ஒரு குறிப்பிட்ட நேரமே அவற்றைக் காண
ஒதுக்கித் தருகிறார்கள். அதுதான் வருத்தம்.

அடுத்து, சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் சிங்கப்பூர் நாட்டின் முக்கியமான விமான நிலையம் ஆகும்.
இவ்விமான நிலையம் தென்கிழக்கு ஆசியாவின் முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாகும்.

அடுத்ததாக செயின்ட் ஜான்ஸ் தீவு திட்டுகள். இதற்கு படகு மூலம் செல்லலாம். நகரத்தின் மையத்தில்
இருந்து 15 நிமிடங்கள் ஆகும். இந்த இடம் பார்ப்பதற்கே மிகவும் கோலாகலமாக இருக்கும்.

இவ்வாறு மிகக் குறுகிய காலத்தில் மிகச்சிறப்பான வளர்ச்சிகண்ட நகரம் சிங்கப்பூர். இது ஒரு சிறிய தீவாக
இருப்பினும், இங்கு பார்ப்பதற்கு எண்ணற்ற இடங்கள் உள்ளன. தட்பவெப்ப நிலையிலும் இது இந்தியாவுடன்
பெரிதும் ஒத்துப் போவதால் இதனை அனைவரும் மிகவும் விரும்புகின்றனர்.

நீதான் நேரில் வர இருக்கிறாயே? நாம் இருவரும் இங்குள்ள இடங்களுக்குச் சென்று பார்த்து


மகிழ்ச்சியடையலாம்.

உன் வரவை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு

194
உன் அன்பு நண்பன்

சேகர்

195
தொகுதி 4
4a. அலுவலக மின்னஞ்சல் - விண்ணப்பித்தல்

meenal@outlook.com

unique@outlook.com
பகுதிநேர வேலைக்கு விண்ணப்பித்தல்

04/09/2016

மதிப்பிற்குரிய நிறுவன அதிகாரி அவர்களுக்கு,

வணக்கம்.

என் பெயர் மீனாள். எனக்குப் பள்ளி ஆண்டுத் தேர்வு முடிந்து பள்ளி விடுமுறை தொடங்க
இருக்கிறது. பெரும்பாலான மாணவர்கள் விடுமுறையை நண்பர்களுடன் சேர்ந்து வீண் அரட்டை
அடிப்பதிலும், கேளிக்கைக் கொண்டாட்டங்களிலும் பொன்னான நேரத்தைச் செலவழித்து வருகிறார்கள்.
ஆனால், நான் விடுமுறையைப் பயனுள்ள வகையில் செலவு செய்ய விருப்பப்படுகிறேன். ‘காலம் பொன்
போன்றது’ என்பதை நான் நன்கு அறிவேன்.

கல்விச் செலவுக்காக, என் தந்தை தான் பார்க்கும் வேலையோடு, பகுதிநேர இரவுவேலையும்


செய்து வருகிறார். இதுவரை எந்தக் குடும்பச் சுமையையும் அவர்கள் என்மீது சுமத்தியது இல்லை.
இப்படிப்பட்ட பெற்றோர்க்கு உறுதுணையாய் இருக்க பகுதிநேர வேலை ஒன்றினை உங்கள் நிறுவனத்தில்
செய்ய விரும்புகிறேன். மேலும் என் தந்தையின் நண்பர் ஒருவரின் மகன் தங்கள் நிறுவனத்தில்
பகுதிநேர வேலை செய்து படிப்படியாக உழைத்து வாழ்வில் உயர்ந்துள்ளார் என்பதையும் நான்
அறிந்தேன். இதற்கு முன் நான் பள்ளி விடுமுறைகளில் பகுதிநேரப் பணி செய்துள்ளேன். அந்த
அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
196
நான் ஒவ்வொரு வார விடுமுறை நாட்களிலும் வேலை செய்துவருகிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தகங்கள், எழுது பொருள்கள், உணவுப் பொட்டலங்கள் வாங்கித்தருதல்
போன்ற பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். மேலும், முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு
நடைபயிற்சிக்கு உதவுதல், படுக்கை விரிப்புகளைத் தூய்மை செய்தல், வார இதழ்கள் படித்துக்காட்டுதல்
போன்ற வேலைகளிலும் எனக்கு அனுபவம் உண்டு. நூலகப் பேழைகளைச் சுத்தம் செய்து, புத்தகங்களை
வரிசையாக ஒழுங்குபடுத்தி அடுக்குவதிலும் எனக்கு நல்ல அனுபவம் இருக்கின்றது. சிறுவர்களுக்குப்
புத்தகங்களை எடுத்துத் தருதல், அவர்கள் வாசித்தபின் உரிய இடத்தில் வைத்தல், இப்படி எனக்குக்
கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறிய சிறிய வேலைகளைச் செய்துவருகிறேன்.

உங்கள் நிறுவனத்தின் ‘வண்ணமீன்கள் வளர்ப்பு’ வளர்ந்து வரும் நல்ல தொழிலாகும்.


மாணவர்களும் இந்தத் தொழிலை பகுதிநேரமாகச் செய்து வருகிறார்கள் என்பதை நான் அறிவேன். மீன்
வளர்ப்பிலும் எனக்கு அனுபவம் இருக்கிறது. மீன்தொட்டிகளைச் சுத்தம் செய்வதிலும் நான்
கைதேர்ந்தவள். அதனால், நீங்கள் இந்தத் துறையில் எனக்கு வாய்ப்பு வழங்கினாலும் அதனை மனமார
ஏற்றுக்கொள்வேன்.

எத்துறையில் வெற்றிபெற வேண்டும் என்றாலும் உழைப்பு அவசியம் வேண்டும். தினையளவு


பகுதிநேர வேலை என்னைப் போன்றவர்களுக்குப் பனையளவு பயன்தரும். இப்பகுதிநேர வேலைமூலம்
கிடைக்கும் வருமானம் என் பெற்றோரின் சுமையைச் சிறிதளவாது குறைக்க உதவியாக இருக்கும்.
“காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” என்னும் பழமொழிக்கேற்ப, அடுத்த ஆண்டுக் கல்விப் பயணத்தைத்
தொடர இப்பணி உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி

இப்படிக்கு

மீனாள்

4b. உறவுமுறை மின்னஞ்சல் - பகிர்ந்துகொள்ளுதல்

mani@outlook.com
ravi@outlook.com
சுற்றுலா மற்றும் கற்றல் பயணம்
197
09/01/2016
அன்புள்ள நண்பன் ரவிக்கு,

நான் இங்கு நலமாக உள்ளேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உன் மின்னஞ்சலைக் கண்டதும் அளவற்ற
மகிழ்ச்சி அடைந்தேன். எங்கே என்னை மறந்துவிட்டாயோ எனக்கூட எண்ணினேன். ஆனால், அது பொய்யாயிற்று.
மிக்க மகிழ்ச்சி.

நண்பா! நீ சுற்றுலா சென்ற அனுபவத்தையும், அங்கு நீ எவ்வாறெல்லாம் பொழுதினைக் கழித்தாய் என்றும்


குறிப்பிட்டிருந்தாய். அதோடு சுற்றுலாப் பயணம் எவ்வாறு கற்றல் பயணமாகின்றது மற்றும் அதன் பயன்கள்
குறித்தும் கேட்டிருந்தாய். அதுகுறித்த சில செய்திகளை உன்னோடு பகிர்ந்துகொள்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் காலை முதல் இரவுவரை ஏதேனும் ஒரு பணியில் ஈடுபட்டுக்கொண்டுதான்


இருக்கிறோம். இந்த இடையறாத உழைப்பினால், மன உளைச்சல், சோர்வு எனப் பல உபாதைகள் ஏற்படுகின்றன.

இருப்பினும், ஆண்டிற்கு ஒரு முறையாவது சுற்றுலாப் பயணம் செல்வதன் மூலம் நம்முடைய மனம்
அளவற்ற மகிழ்ச்சியடைகின்றது.

சிறுவர் முதல் பெரியோர் வரைக்கும் இன்பச் சுற்றுலா செல்கிறோம் என்ற எண்ணம் வந்தவுடனேயே குஷி
ஏற்பட்டுவிடுகிறது. உடனே பயணத்திற்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை, அதாவது உடைகள், ஸ்வட்டர்,
தேவைக்கேற்ப மருந்துகள், போன்றவற்றை எடுத்துக்கொண்டு இன்பப் பயணம் மேற்கொள்கிறோம். அதுவே கற்றல்
பயணமாக அமைந்துவிட்டால் பேரானந்தத்திற்கு அளவே இல்லை.

அவ்வாறு செல்லும் பயணத்தில் எடுத்த எடுப்பிலேயே பல புது உறவுகளின் நட்புகள் கிடைக்கும்.


“குகனோடு ஐவரானோம்” என்ற இராமபிரான் கூற்றுப் போல இன்பப் பயணத்தில் இனிக்கும் உறவுகள் நமக்குக்
கிடைப்பதன் மூலம் அதுவரை சிறு குடும்பமாக இருந்த நாம், கூட்டுக் குடும்பத்தின் வலிமையை உணர
ஆரம்பிக்கிறோம்.

அடுத்து பல தரப்பட்ட மொழிகளை அறிய வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அதன் பயனாய் அருஞ்சொற்கள்


பலவற்றைக் கற்கிறோம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைக் காணும் போது அந்த இடங்கள் நம் சிந்தனையைத் தூண்டுவதாகவும்
அமைகின்றன. “சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள்; அது உங்கள் சக்தியின் பிறப்பிடம்” என்றார் ஒரு மாமேதை.

அதோடு புறநானூற்றுக் கருத்துப்படி “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயரிய மனப்பான்மை நம்
உள்ளத்தில் மலர்கின்றது. அதுவரையில் ‘கிணற்றுத் தவளையாக’ வாழ்ந்தவர்கள் கூட, இத்தகைய பயணங்களின்
மூலம், “தன்பிள்ளை தன்பெண்டு சோறு வீடு”என்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து மீண்டு, பொதுநல எண்ணம்
பெறுகின்றனர்.

மேலும் நாம் செல்லும் இடங்களில் தொல்பொருள் பாதுகாப்பு இடங்கள், அருங்காட்சியகங்கள்


போன்றவற்றைக் காணக்கூடிய வாய்ப்பு ஏற்படும் தருணத்தில், சில முக்கிய நிகழ்வுகளைக்

198
குறிப்பெடுத்துக்கொள்ளவேண்டும். அக்குறிப்புகள் நமக்கும், நம்மைச் சார்ந்தோர்க்கும் எக்காலங்களிலும் மிகவும்
பயனுடையதாய் விளங்கும்.

அதோடு ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பதற்கு ஏற்ப, நாம் சில அரிய பொருட்களை வாங்கி,
அவற்றினைப் பத்திரப்படுத்துவதன் மூலம், நாம் கண்டுகளித்த இடங்களின் நினைவுகள் ‘பசுமரத்தாணி போல’
என்றென்றும் நிலைத்து நிற்கும்.

அன்பு நண்பா! நான் உனக்குக் கூறியதைப் போல அடுத்த முறை நீ சுற்றுலா செல்லும் பொழுது
என்னென்ன தெரிந்துகொண்டாய் என்பது குறித்து எனக்கு விரிவாக எழுதவும்.

உன் மின்னஞ்சலை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பேன்.

அன்புடன்

மணி

தொகுதி 5
5a. அலுவலக மின்னஞ்சல் - மன்னிப்புக் கேட்டல்

 


ி
balaji@outlook.com ப

principal@vanavilsec.com ப
ி
தலைமை ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டல்

10/10/2016 ்



ிய தலைமை ஆசிரியருக்கு.

வணக்கம்.

என் பெயர் பாலாஜி. நான் இதுநாள்வரை பள்ளியில் செய்துவந்த தவறுகளை மன்னிக்கும்படிக்


கேட்டுக்கொள்கிறேன். ‘இளம் கன்று பயமறியாது’ என்ற நினைப்பில் மனம்போன போக்கில் நடந்து
கொண்டதை நினைத்து வருத்தப்படுகிறேன். என்மீது பாசமும் நம்பிக்கையும் வைத்த பெற்றோரையும்,
199
நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களையும். நண்பர்களையும் மதிக்காமல் இருந்துவிட்டேன். என் செயல்களை
நினைத்து வெட்கப்படுகிறேன். பள்ளியில் வகுப்பில் நான் செய்த செயல்களை உங்கள் முன் வைக்கிறேன்.

படிப்பில் நான் சுமார் மாணவன். ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கும் சமயங்களில் கவனிப்பது
இல்லை. அனைவரும் பாட ஏடுகளில் எழுதும்போது, நான் கேலிச்சித்திரங்கள் வரைந்து பக்கத்து
மாணவனுக்குக் காட்டி விளையாடுவேன். ஆசிரியர்கள் எச்சரித்தபோது அலட்சியம் செய்தேன். என்
வகுப்பு மாணவர்களின் தோற்றத்தையும் உருவத்தையும் பார்த்து அண்டங்காக்கா, எலும்புக் கூடு,
கத்தரிக்காய், ஆந்தைக் கண்ணன் என்று கேலி செய்தேன். வகுப்புத் தேர்வில் விடை தெரியாததால்
பக்கத்து மாணவனிடம் விடைகேட்டு தொல்லை கொடுத்தேன். அவன் கூற மறுத்ததால் அவனை
அடித்துவிட்டேன்.

அந்தச் சமயம் உங்கள் பார்வையில் சிக்கிக் கொண்டேன். அப்போதுதான் எனக்கு முதன்


முதலாக பயம் ஏற்பட்டது. தண்டனை என்ன கிடைக்குமோ என்று தவித்தேன். ஆனால், தாங்கள்
பெருந்தன்மையுடன் அழைத்துச் சென்று கூறிய அறிவுரைகள் என் கண்களைத் திறந்துவிட்டன. நான்
இதுபோன்ற தவறுகளை ஒருநாளும் இனி செய்யமாட்டேன். மாணவர்களுக்குத் தொல்லை
கொடுக்கமாட்டேன். என் தவறுகளை மன்னித்து, நான் தொடர்ந்து பள்ளியில் படிக்க வாய்ப்புத் தரும்படி
பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

“தவறு செய்வது மனித குணம் மன்னிப்பது தெய்வ குணம்” – என்பது தாங்கள் அறிந்ததே!
‘மறப்போம் மன்னிப்போம். உழைப்போம் உயர்வோம்’ என்பதுதானே நம் பள்ளியின் குறிக்கோள். என்னை
மன்னித்துவிடுங்கள். கவனத்துடன் படித்து உயர வழிகாட்டுங்கள்.

நன்றியுடன்

பாலாஜி

5b. உறவுமுறை மின்னஞ்சல் - பரிந்துரைத்தல்

uma@outlook.com
usha@outlook.com

பகுதிநேர பணி

09/01/2016

200
அன்புள்ள தோழி உஷாவிற்கு,

நான் நலமாக இருக்கிறேன். உன் மின்னஞ்சலைக் கண்டேன். அதில் என்னிடம் பகுதிநேர பணிகுறித்துக்
கேட்டிருந்தாய்.

இக்காலக் கட்டத்தில் நீ கூறியது போல் வளர்ந்துவரும் பொருளாதார நெருக்கடியைப் போக்க, குடும்பத்தில்


உள்ளோர் அனைவருமே பணிக்குச் சென்றாலும்கூட சில தருணங்களில் பண நெருக்கடி தவிர்க்க இயலாத
ஒன்றாகிவிடுகிறது.

நாம் ஏற்கனவே பார்க்கக்கூடிய பணியோ, காலை முதல் மாலை வரை கடினமாக உழைத்து, அதனால்
ஏற்பட்ட களைப்பும். சலிப்பும் கொண்டு வீடு திரும்புவதாகவே பெரும்பான்மையான இடங்களில்
அமைந்துவிடுகின்றன. மேலும் ஊதியமும் போதுமானதாக அமையாத காரணத்தாலேயே பெரும்பான்மையானவர்
பகுதிநேர பணியை நாடுகின்றனர். அவ்வாறு கிடைக்கும் பணி சுலபமானதாகவும், சுமையற்றதாகவும், மகிழ்ச்சியைத்
தரவல்லதாகவும், வருமான வளமும், சென்றுவரும் தொலைவும் ஏற்புடையதாக அமைந்துவிடுமேயானால் அது
இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்திவிடும்.

இது போன்ற ஒரு நிறுவனம்தான் “காந்தி பல்துறை வளாகம்.” இங்கு நம் போன்று பணியில்
இருந்துகொண்டே பகுதி நேரப் பணியை நாடுபவர்களுக்கு ஏற்ற தொழிலகள் இருக்கின்றன. ஓய்வு நேரத்தைப்
பயனுள்ள வகையில் கழிப்பதற்காகப் பணிக்கு வரவேண்டும் என்பவர்களுக்கும், பள்ளியில் பயிலும் மாணவகளுக்கும்
6 மணி முதல் 7 மணி வரை பகுதிநேர பணியாற்றி, அவர்கள் தத்தம் தேவைகளைப் (அதாவது பாடநூல்கள்
வாங்குவதற்கு, பேருந்து செலவிற்கு, சேமித்தலுக்கு மற்றும் சுய செலவுக்கு என்ற வகையில் எல்லாம்) பூர்த்தி செய்து
கொள்வதற்கு ஏற்ற தொழில்கள். மேலும், ஆதரவற்றோர், முதியோர் போன்றோர்களுக்கும் கூட ஏற்ற பல்வேறு
பணிகள் அந்நிறுவனத்தின் கீழ் அமைந்துள்ளன. அங்கு பணியாற்றக்கூடிய ஒவ்வொருவரும் பணிச்சுமை சிறிதும்
தெரியாதவாறு, தாங்கள் ஒரு கூட்டுக் குடும்பத்தில் உள்ளதைப் போன்ற உணர்வுடன் செயலாற்றுகின்றனர்.

குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு அதுவும் வாரம் இரண்டு நாட்கள் மட்டும் பணியாற்றினாலேயே மாதம்
ஐந்நூறு வெள்ளி வரை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. தனக்கும், பிறருக்கும் பயன் நல்கும் பல பணிகளை
அந்நிறுவனத்தார் தங்களை நாடிவரும் அனைவருக்கும் நல்கி வருகின்றனர். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை எட்டி
வெள்ளிவிழாக் காணக்கூடிய நிலையில் அந்நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

அதோடன்றி, நேரடியாக அங்குச் சென்று பணியாற்ற இயலாதவர்களுக்காக அவரவர் இல்லத்திலிருந்தே


செயல்படுவதற்கேற்ற பல பணிகளையும் அவர்களே ஏற்படுத்தித் தந்தும் ஊக்குவிக்கின்றனர். அவ்வாறு செய்யும்
பணிகளுக்கு ஏற்ற உயரிய ஊதியமும் நல்குகின்றனர். இத்தகைய உயர் நலங்களைத் தரவல்ல அந்த நிறுவனத்தில் நீ
சேர்ந்தால் உனக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். அதோடு உன்னை அணுகி, இதுபோன்ற பணிகுறித்து
வினவுபவர்களுக்கு, அந்நிறுவனத்தில் பணிபுரிய பரிந்துரை செய்தால் அவர்களும் பயனடைவார்கள்.

உன்னுடைய அடுத்த மின்னஞ்சலில் நான் குறிப்பிட்டிருந்த அந்த நிறுவனத்தின் பணிகள் உனக்கு


எவ்வாறெல்லாம் பயன் நல்கின என்பதனைப் பற்றி எனக்குத் தெரியப்படுத்துவாய் என நம்புகிறேன்.

அன்புடன்

201
உமா

தொகுதி 6
6a. அலுவலக மின்னஞ்சல் - தகவல் கேட்டறிதல்

 

தி
vasanthi@outlook.com ப்

npp.gov.sg ிற்

திருட்டுச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்தல்

ரி
01/01/2016

காவல் அதிகாரி அவர்களுக்கு,

வணக்கம்.

என் பெயர் வசந்தி. நான் தெக் வாய் வட்டாரத்தில் குடியிருக்கிறேன். இங்கிருக்கும் சாலை 23 ல்,
ஒதுக்குப்புறமான பகுதியில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த ஒரு மாதமாகவே
நடைபெறும் தொடர் திருட்டுச் சம்பவங்களால் தூக்கத்தைத் தொலைத்து வருகிறோம். என் வீட்டை
அடுத்து பத்து வீடுகள் தள்ளியிருக்கும் வீட்டில் சேலைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இரண்டு நாட்கள்
கழித்து, வேறொரு வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு விழித்த அந்த வீட்டுப் பெண்மணி கூச்சல்
போட்டதால் திருடர்கள் தப்பி ஓடிவிட்டனர். திருடர்களின் திருட்டு முயற்சி இப்படித் தொடர்கதையாக
இருக்கிறது.

புத்தாண்டின் வரவை ஒட்டி என் வீட்டருகே வசிப்பவர்கள் புத்தாண்டைக் கொண்டாட


தேவாலயத்திற்குச் சென்றுவிட்டனர். வீட்டின் முன்னால் கிறிஸ்துமஸ் ஸ்டார் விளக்குகளைக் கட்டித்
தொங்கவிட்டிருந்தனர். இதனால் வீட்டில் யாரும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட திருடர்கள்
பின்புற வாசல் வழியாக நுழைந்துள்ளனர். அலமாரியை உடைத்து, பட்டுப் புடவைகள், 20 பவுன்
202
நகைகளை ஒரு வீட்டிலும், அதற்கு அடுத்த வீட்டில் வெள்ளிப் பாத்திரங்கள், மடிக்கணினி, நகைகள்,
30,000 வெள்ளிப்பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். புத்தாண்டுப் பிறப்பில் நடந்த இந்தத்
திருட்டுச் சம்பவம், என் வீட்டருகே வசிக்கும் அனைவருக்கும் கவலையளிக்கிறது. மீண்டும் இதுபோல்
நடக்குமோ என அச்சமாகவும் இருக்கிறது. திருடர்களைப் பிடிக்க நீங்கள் தயவுசெய்து நடவடிக்கை
எடுக்கவேண்டும்.

தினமும் இரவில் ஊர்க்காவல் படையினர் அவ்வப்போது வலம்வந்தால் திருடர் பயமின்றி இருக்க


முடியும். மேலும், அந்த வட்டாரத்தின் மின்தூக்கிகளிலும், சாலை ஓரங்களிலும் கண்காணிப்புப் புகைப்படக்
கருவியைப் பொருத்தினால் திருடர்களை எளிமையாகப் பிடித்துவிடலாம் என்பதையும் தாழ்மையுடன்
தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி,

இப்படிக்கு

வசந்தி

6b. உறவுமுறை மின்னஞ்சல் - தகவல் அறிவித்தல்

gopu@outlook.com

babu@outlook.com

வெளிநாட்டுக் கல்வி
 
09/01/2016

அன்புள்ள பாபுவிற்கு,

நான் நலமாக இருக்கிறேன்.

203
நீ என்னிடம் அயலநாட்டுக் கல்விகுறித்துக் கேட்டிருந்தாய். பொதுவாக, வாய்ப்புகள் அதிகம் உள்ள
துறைகள் என்று சிந்திப்பவர்களுக்கு முதலில் நினைவிற்கு வருவது பொறியியல், மருத்துவம், மேலாண்மை, சட்டம்
போன்ற துறைகள்தான். ஆனால் அறியப்படாத துறைகள் சிலவும் அயல்நாடுகளில் உள்ளன.
அது, பெட்ரோலியம் இன்ஜினீயரிங்.
தொடக்கக் கல்லூரியில் கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களைப் படித்தவர்கள்,
பெட்ரோலியம் இன்ஜினீயரிங் படிக்கலாம். அதற்கான பணி வாய்ப்புகள் சிங்கப்பூரிலும், வெளிநாடுகளிலும் அதிகம்
உள்ளன. ஊதியமும் அதிகமாகவே வழங்கப்படுகிறது.
அடுத்து, உணவுத் தொழில்நுட்பம்!
தொடக்கக் கல்லூரியில் அறிவியலை ஒரு பாடமாக எடுத்துப் படித்தவர்கள், பி உணவுத் தொழில்நுட்பத்தை
ஒரு பாடமாக எடுத்துப் படிக்கலாம். இந்தத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு, உணவைப்
பதப்படுத்துவது, விநியோகம், தரம் ஆராய்வது, பேக்கிங் போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்புகள் உண்டு.
இதனைப் படிப்பதன் மூலம், தனியார், உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுடன் உணவுப்
பாதுகாப்புத் துறை, பால்வளத் துறை போன்ற அரசுத் துறைப் பணியும் பெறலாம். ஆராய்ச்சித் துறையிலும்
செல்லலாம். மாதம் குறைந்தது மூவாயிரம் வெள்ளிகள் முதல் சம்பாதிக்கலாம்.
அதையடுத்து. கம்பெனி செக்ரட்டரி (சி.எஸ்)!
உயர் பொறுப்புகளுக்கு தகுதிப்படுத்தும் படிப்பு, கம்பெனி செக்ரட்டரி படித்துக்கொண்டே எக்ஸிகியூடிவ்,
ப்ரொபஷனல் தேர்வுகள் எழுதலாம். தொடக்கக் கல்லூரி முடித்தவர்கள் கூட அடிப்படைத் தேர்வுகள் எழுத முடியும்.
இதனைப் படிப்பதன் மூலம் ஆரம்பித்திலேயே மூவாயிரம் வெள்ளிகள் முதல் சம்பளம் இருக்கும். சி.ஏ.
போல் தான் இந்தப் படிப்பும். இதற்கென இருக்கும் தனியார் நிறுவனங்களில் படிக்க முடியும்.
இவ்வாறு ஏராளமான கற்றல் வாய்ப்புகள் நம் நாட்டைப் போன்றே அயல்நாடுகளிலும் உள்ளன.
நான், கம்பெனி செக்ரட்டரி (சி.எஸ்) கோர்ஸ் தான் பயின்றுகொண்டிருக்கிறேன். எனக்கு அது மிகவும்
பயனுடையதாக இருக்கின்றது.
நண்பா, இதுவரை நான் இங்கு அறிந்துகொண்ட பல கருத்துக்களை உனக்கும் தெரியப்படுத்தியுள்ளேன்.
இதில் உனக்கு ஏற்புடைய கல்வியினைத் தேர்ந்தெடுத்துப் பயின்றால் நலம் பயக்கும் என எண்ணுகிறேன்.
உன்னுடைய அடுத்த மின்னஞ்சலில், நீ எந்தப் பிரிவினைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய் என்பது குறித்து
எனக்குத் தெரியப்படுத்தவும்.
அன்புடன்
கோபு

204
தொகுதி 7
7a. அலுவலக மின்னஞ்சல் – பரிந்துரைத்தல்

lilly@outlook.com

nlb@gov.sg
புதிய நூலகத்தில் தேவையான வசதிகள்

05/05/2016

மதிப்பிற்குரிய தேசிய நூலக வாரிய இயக்குநர் அவர்களுக்கு,

வணக்கம்.

என் பெயர் லில்லி. நான் வசிக்கும் பீஷான் வட்டாரத்தில் புதிதாக நூலகம் ஒன்று கட்டப்
போவதை தமிழ்முரசு செய்தித்தாளின் வாயிலாக அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு வசிப்பவர்கள்
அனைவரும் நடுத்தரப் பிரிவைச் சார்ந்தவர்கள். ஓரளவு படித்தவர்கள். அறிவை வளர்த்துக்கொள்ள
வேண்டும் என்ற எண்ணமும் எழுச்சியும் உடையவர்கள். சொந்தமாக, புத்தகங்களையும்,
செய்தித்தாள்களையும்கூட வாங்கிப் படிப்பதற்குரிய பொருளாதார வசதியற்றவர்கள். மாணவர்கள்
அறிவைவளர்த்துக் கொள்ள ‘பழுத்த மரத்தை நாடிச்செல்லும் பறவைகளைப் போல’ அடுத்த ஊரைத்
தேடிச்செல்ல வேண்டியிருக்கிறது. இந்த வட்டாரத்தில் நூலகம் அமைவதால், இக்குறை நீங்கும் என்று
நம்புகிறேன்.

நூலகத்தில் என்னென்ன வசதிகளை அமைக்கலாம் என்பது குறித்த என் எண்ணங்களை உங்கள்


முன் வைக்கிறேன்.

சிறுவர்கள், இளையர்கள், முதியவர்கள், சிறுதொழில் செய்பவர்கள், குடும்பப் பெண்கள் என


அனைவருக்கும் பயனளிக்கும் நூல்கள் இருக்கவேண்டும். வயது வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரும்
உறுப்பினராகி, நூல்களை எடுத்துச் சென்று படிக்க வழிவகுக்க வேண்டும். சிறுவர்களுக்கு
205
வண்ணப்படங்களுடன் நூல்கள் அமைந்தால் வாசிப்பை நேசிப்பார்கள். மாணவப் பருவம் கற்றலுக்கு
ஏற்றது. பல்வகைத் துறைகள் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் ‘இலக்கியம்’, இலக்கணம், திறனாய்வு,
தத்துவம், அறிவியல், வரலாறு, பொருளியல், வாணிகம், மருத்துவம், கலை, பொது அறிவு, மொழிபெயர்ப்பு
முதலிய பல்வகைத் தலைப்புகளிலான நூல்கள் இடம்பெற வேண்டும். மின்னணுக் காலம் இது.

அதனால் இணையதளம், குறுவட்டுகள். மின்னணு ஒளிவட்டு, நுண் சுருள் முதலிய வடிவங்களிலும்


நூல்கள் உருமாற்றம் பெற்று பயன்பாட்டில் இடம்பெறவேண்டும். இரவல் வசதியும் அவசியமாகும்.
நூல்களைப் பயன்படுத்தும் முறை பற்றிய தெளிவான அறிவிப்புப் பலகைகள் ஆங்காங்கே இடம்பெற
வேண்டும். நூல்களை சரியாகப் பயன்படுத்தாமல் எழுதுகோலால் கிறுக்குதல், தாள்களைக் கிழித்தல்
போன்ற தவறுகளைச் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கலாம். ‘நல்ல நூல் நல்ல நண்பன்’, ‘நூல் பல
கல்’, ‘இளமையில் கல்.’ ‘கற்கக் கற்க அறிவு வளரும்’ என்னும் பொன்மொழிகள் இடம் பெறவேண்டும்.

‘புத்தகம் இல்லாத வீடு ஜன்னல் இல்லாத வீடு’ போன்றது. நூல்கள் பொழுதைப் போக்க
மட்டுமல்ல; நம்மை நல்வழிப்படுத்தவும்தான். மலர்களைத் தேடி தேனீக்கள் வருவதைப் போல நூலகம்
தேடிவர ஆவலுடன் காத்திருக்கிறோம்.

நன்றி

இப்படிக்கு

லில்லி

7b. உறவுமுறை மின்னஞ்சல் - பாராட்டு தெரிவித்தல்

kumaresan@outlook.com

maaveeran@outlook.com
  பாராட்டு தெரிவித்தல்

12/01/2016

206
அன்புள்ள நண்பன் மாவீரனுக்கு,

இங்கு நான் நலம். அங்கு உனது நலனை அறிய மிகுந்த ஆவல்.

நண்பா, உன்னைப் பற்றிக் கேள்வியுற்றேன். நீ பெயரினில் மட்டுமல்ல, குணத்திலும் மாவீரன்தான். உன்


போன்ற தீரர்களை எண்ணித்தானோ திருவள்ளுவப் பெருந்தகையும்,

“ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன்


எனக் கேட்ட தாய்”

என்ற ஒரு திருக்குறளையே இயற்றியுள்ளார் போலும்.

ஆம். உன்னுடைய செயல் திறனை எண்ணி எண்ணி உன் அன்னை எத்தனை விதமாகப் பெருமிதம்
கொண்டிருப்பார் என்பதனை நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது. உன் போன்ற நண்பர்கள்
கிடைக்கப் பெற்றதால், ‘பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்’என்ற வகையில் எனக்கும் பேரும் புகழும் கிடைக்கத்தான்
செய்கின்றன.

நண்பா, நீ பள்ளிப் பருவத்தில் என்னோடு படிக்கும் போதே அரிய பல செயல்களைச் செய்து அதன்
மூலம் உன் வீட்டிற்கும், நம் பள்ளிக்கும். நம் ஊருக்கும் எத்தனை பெரும்புகழ் பெற்றுத் தந்திருக்கிறாய்.
விளையாட்டிலும் சரி, படிப்பிலும் சரி, பிற பண்புகளிலும் சரி.

சுருக்கமாகச் சொன்னால் என் போன்ற பல மாணவர்களையும் வெகுவாக ஊக்குவித்து. நாங்களும் இன்று


நல்ல நிலையில் வரக் காரணமாகவும் நீ விளங்கியிருக்கிறாய்.

ஆனால், அதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்ததைப் போன்று இன்றைய உன் செயல் விளங்கியதை நாங்கள்
செய்தித்தாளின் மூலம் அறிந்தோம்.

நீ தற்சமயம் பயின்றுவரும் கல்லூரியில் மேற்கொண்ட சுற்றுலாவின் போது, மலையில் ஏறிக்கொண்டிருந்த


தருணத்திலே, உன் நண்பர்கள் இருவர் கால் இடறிக் கீழே விழுந்த அத்தருணத்தில், அனைவரும் செய்வதறியாது
திகைத்து நின்றபோது சற்றும் யோசிக்காமல், நீ கற்ற முதல் உதவியினைப் பிரயோகித்து மிகவும் துணிச்சலாக, நீ
ஒருவனாகவே, உன் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் இருவரையும் காப்பாற்றிய செய்தியைக்
கண்ணுற்றபோது, என் கண்கள் மிகவும் பனித்தன. அதோடு உன் உடலில் ஏற்பட்ட காயங்களை ஆற்ற, நீ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதையும் செய்தித்தாளில் படித்தேன். அச்சமயத்தில்,

“மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்என்ப


தன்னுயிர் அஞ்சும் வினை”

என்ற பொய்யாமொழியின் பொன்னுரைதான் எங்கள் அனைவரின் உள்ளத்திலும் எழுந்தது.

அப்பப்பா! என் உடல் குலுங்குகின்றது. உள்ளம் பதைபதைக்கின்றது. நெஞ்சோ “திக் திக்” என்று
அடித்துக்கொள்கிறது. எத்தனை பெரிய சிகரம் அது. ஒரு பிடி நழுவியிருந்தால், அய்யஹோ! எண்ணவே
கதிகலங்குகிறது. என் ஆருயிர் நண்பனான உன்னையும் அல்லவா நாங்கள் இழந்திருப்போம்.

அந்தத் தெய்வம்தான் அச்சமயத்தில் உனக்கு உறுதுணையாய் இருந்திருக்கிறது.

207
நண்பா! உன் உடலில் ஏற்பட்ட காயங்கள் வடுக்களல்ல. விழுப்புண்கள். சாதனை படைக்கப் பிறந்தவனே!
சரித்திரம் படைக்கப் போகிறவனே! உன்னை வாழ்த்த எனக்குச் சொற்கள் எழவில்லை. என் நா தழுதழுக்கிறது.
உன்னை என் மனதாரப் பாராட்டுகிறேன். நான் மட்டுமல்ல, அனைவரும்தான்.

வாழ்க வளமுடன்! வாழ்க நீ பல்லாண்டு!

அன்புடன்

குமரேசன்

தொகுதி 8
8a. அலுவலக மின்னஞ்சல் - பாராட்டு தெரிவித்தல்
  

ganga@outlook.com

sss@outlook.com
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் பாராட்டு தெரிவித்தல்

11/02/2016

மதிப்பிற்குரிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அவர்களுக்கு,

வணக்கம்.

என் பெயர் கங்கா. பெண்களைச் சிறப்பு செய்யும் நோக்கத்தில் வீராசாமி வீடமைப்பு வட்டாரத்தில்
‘இன்றையபெண்மணி’ என்னும் நிகழ்ச்சி பெண்களுக்காக முதன்முறையாக நடத்தப்பட்டது. இதனை
ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விழாவிற்கு
ஏராளமான பெண்கள் தங்கள் குடும்ப விழாபோல உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

பெண்களுக்குப் பெருந்தடை வீட்டில் அவர்களை முடக்கிவைப்பதே. பெண்கள் முழு உரிமை


பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும்.

‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை’


208
‘பெண்கட்குக் கல்வி வேண்டும்’

‘கல்வி இல்லா வீடு இருண்ட வீடு’ - ஆகும்.

‘பெண்கள் வீட்டின் கண்கள் மட்டுமல்ல – அவர்கள் நாட்டின் கண்கள்’

என்பது குறித்து விரிவாகக் கூறப்பட்டது. மேலும், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள்,


பெண்களுக்கான மனநல ஆலோசனைகள். சமூக வலைத்தளங்களைப் பாதுகாப்புடன் பயன்படுத்துவது
தொடர்பான ஆலோசனைகள் ஆகியவற்றைப்பற்றி எண்ணிலடங்கா கருத்துகள் பரிமாறப்பட்டன.
அதோடு, பொது இடங்களில் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு, பாதுகாப்பு அவசியம்,

இளம் பெண்களுக்குப் பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வும் கொடுக்கப்பட்டது, இளையர்கள்,


குடும்பத்தினர் என அனைத்துத் தரப்பினர்களுக்கும் நல்ல ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன.

மேலும், அலுவலகத்தில் அதிகாரிகளிடம் நேரில் பேசும் விதம், நேர்முகத் தேர்வில்


கலந்துகொள்வது, குழுமனப்பான்மை, தனக்குக் கீழ் வேலை செய்பவர்களை எப்படி உற்சாகப்படுத்துவது
போன்றவற்றை மேடையில் செய்துகாட்டியது சிறப்பாக இருந்தது. சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்
குறித்த 30 நிமிடம் ஓடக் கூடிய குறும்படம் ஒன்று, ஒரு பிரமாண்டமான பெரிய திரையில்
காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் நடுவே பொது அறிவு வினாக்கள் கேட்டு. சரியான விடை சொன்ன
மாணவர்களுக்குப் பரிசுகள் தந்து ஊக்கப்படுத்தியது சிறப்பாகும்.

சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும், உணவு. குடிநீர்,


பாதுகாப்பு வசதிகளை முறையாகச் செய்த அமைப்பு ஏற்பாட்டாளருக்கு, மீண்டும் எங்களது நன்றி.
பெண்கள் தடைகளைத் தகர்த்தெறியவேண்டும், சோம்பலைச் சாம்பலாக்க வேண்டும், கவலைகளைக்
களைந்திடவேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் மைல்கல் ஆகும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடரட்டும்.

நன்றி

இப்படிக்கு

கங்கா

8b. உறவுமுறை மின்னஞ்சல் - நன்றி தெரிவித்தல்

 
209
kumutha@outlook.com

kunaseelan@outlook.com
நன்றி தெரிவித்தல்
12/01/2016

மதிப்பிற்குரிய குணசீலன் ஐயா அவர்களுக்கு,

குமுதாவின் பணிவான வணக்கங்கள் பல.

ஐயா, நான் இங்கு நலமாக இருக்கிறேன். தங்கள் நலத்தை அறிய ஆவலாக உள்ளேன். ஐயா! இன்று கூட
எங்கள் இல்லத்தில் உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். உங்களுக்குச் சிறிது உடல் நலக் குறைபாடு
ஏற்பட்டுள்ளதாக அம்மா கூறியிருந்தார்கள். தற்சமயம் எவ்வாறு உள்ளது?

ஐயா!

‘எந்தை நல்கூர்ந்தான் இரப்பார்க்கீந்து என்றவன்தன்


மைந்தர் தம் ஈகை மறுப்பரோ
நின்று பயனுதவி நில்லா அர்ம்பையின்க்கீழ்க்
கன்றும் உதவும் கனி’

என்ற பாடல் புகலும் கருத்திற்கிணங்க, தங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அன்றுமுதல் இன்று
வரை ‘ஒல்லும் வகையால் உதவி செயல்’ என்பது போல் இன்றைய காலக்கட்டத்திலும்கூட பயன் கருதாது உதவி
புரிந்துவருவது பெரிதும் வியக்கத்தக்க ஒன்றாகும்.

ஏழைக் குடும்பத்தாராகிய நாங்கள், எங்கள் தந்தையாரையும் இழந்து, பிழைக்க வழிதேடி உங்கள் ஊருக்கு
வந்தோம். பட்டப் படிப்பு படித்த நான் பணி தேடி அலைந்தபொழுது, தெரிந்தவர் வாயிலாக என்னைப் பணியில்
அமர்த்தினீர். பழகிய சில நாட்களுக்குள்ளாகவே எங்களைப் பற்றி அறிந்து, தாங்களும் தங்கள் துணைவியாரும்
எவ்வாறெல்லாம் எங்களுக்கு உறுதுணை புரிந்தீர் என்பது அளப்பற்கரியது.

உங்கள் சொந்தப் பிள்ளைகளைப் போல் எங்களைப் பாவித்தீர். அன்புகாட்டி ஆதரவு நல்கினீர்.


சொந்தபந்தங்கள் கூட வெறுத்து ஒதுக்கும் இக்கால கட்டத்தில், நீங்கள் எங்கள் மீது காட்டிய அன்புதான் எத்தனை!
எத்தனை!

இத்தனைக்கும் மேலாக, நான் அலுவல் நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தபொழுது, நாங்கள் வாடகை


கொடுக்க இயலாமல் இருந்த தருணத்தில் நாங்கள் குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரர் சிறிது கூட ஈவு இரக்கமின்றி
உடனடியாக எங்களை வீட்டைக் காலி செய்ய வற்புறுத்திய அத்தருணத்தில் வெளியூர் சென்றிருந்த தாங்கள், தங்கள்
210
துணைவியார் மூலம் செய்தி அறிந்து, நாங்கள் சிறிதும் எதிர்ப்பார்க்காதவாறு, அம்மா மூலம் (தங்கள் துணைவியார்
மூலம்) தங்கள் இல்லத்திலேயே இரு அறைகளை ஒதுக்கிக் கொடுத்து, உடனடியாக நாங்கள் அங்கு தங்க
அனுமதியளித்து உதவினீர்கள் என்று கேள்வியுற்றேன். என் கண்கள் ஆனந்தத்தால் மிகவும் பனிக்கின்றது.

இது போன்று வேறு யார் செய்வார்கள்? நீங்கள் அனாதைகள் அல்ல. உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்
என்று கூறி, காலம் முழுவதும் உங்களுக்கு நன்றிக்கடன் பட வைத்த பெருந்தகையே!

உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன். நன்றி என்று ஒற்றை வரியில் கூறுவதாகவா
செய்திருக்கிறீர்! என் கண்ணீரையே, எங்கள் அன்பையே, உங்களுக்கு நன்றிக் காணிக்கையாக்கி, காலம் முழுவதும்
உங்களுக்குப் பணிசெய்வோம் என்று கூறிக் கொள்கிறேன்.

பணிவுடன்

குமுதா

211
தொகுதி 9
9a. அலுவலக மின்னஞ்சல் - ஆலோசனை கூறுதல்

roja@outlook.com
schooladmin@outlook.com

ஆரோக்கியத்தின் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வழங்குதல்


14/01/2016

வணக்கம்.

என் பெயர் ரோஜா. இன்றைய அவசரமான உலகில் அனைத்துத் தரப்பினரும் சொல்லக்கூடியது


‘ஆற அமர ரசித்து ருசித்து மென்று தின்று சுவைக்கக்கூட நேரமில்லை’ என்பதாகும். அதிலும் குறிப்பாக
மாணவர்களுக்கு எல்லாமே ஓட்டமும் நடையும்தான். வீட்டுணவை மறந்து, உணவகங்களில் சேர்க்கப்படும்
சுவையூட்டிகளின் ருசிக்கு அடிமையாகி நாளடைவில் உடல் நலம் பாதிக்கப்படுகிறார்கள். உணவே மருந்து
என்ற நிலை மாறி, மருந்தே உணவாகி வருகின்றது. மாணவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை
முறையின் விழிப்புணர்வை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது குறித்து எனக்குத் தெரிந்த
ஆலோசனைகளை உங்கள் முன் வைக்கிறேன்.

‘‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’, ‘உடம்பான் அழியின் உயிரார் அழிவார்’ போன்ற


வாசகங்களைப் பள்ளி வளாகத்தில் எழுதி ஒட்டினால் அது மாணவர்களின் மனத்தில் பதியும். ஒன்றை
அடிக்கடி பார்க்கும்போது அதனை நாம் உள்வாங்குவோம் என்கிறது அறிவியல். எனவே, இதுபோன்ற
வாசகங்களைப் பார்க்கும் மாணவர்கள் தங்களை அறியாமலேயே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக்
கடைப்பிடிக்க ஆரம்பிப்பார்கள்.

ஒவ்வொரு மாதமும் மாணவரின் உயரம், எடை, இரத்த அழுத்தம் ஆகிய முக்கிய


பரிசோதனைகளைச் செய்து மாணவர்களின் பதிவேட்டில் குறித்துக்கொள்வது நல்லது. இது அவர்களின்

212
ஆரோக்கியத்தைக் கண்காணிக்க பேருதவியாக இருக்கும். மேலும், மருத்துவ முகாம் அமைத்து
கண்பார்வை சோதனை செய்தல். பல், காது, மூக்கு தொண்டை ஆய்வு போன்றவற்றையும் செய்தால்
ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் நோய்களைக் கண்டறிந்து மாணவர்களின் பெற்றோருக்குத் தெரிவித்து
அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

வெறும் வாய் வார்த்தையில் சொல்லும்போது அதைக் கேட்டு நினைவில் வைத்துக்கொள்ளும்


மாணவர்கள் மிகச் சிலரே இருப்பார்கள். அதுவே காட்சியாக இருக்கும்போது நினைவில் ஆழமாகத்
தங்கும். எனவே, ஆரோக்கிய வாழ்வை விளக்கும் குறும்படம் போட்டுக் காட்டலாம். பிறகு அதைப்பற்றி
வகுப்பறையில் கலந்துரையாடல்கள் வைக்கலாம். இது அவர்களின் விழிப்பு நிலையை அறியச்
செய்வதோடு, அவர்களுக்குத் தெரியாத தகவல்களைக் கூறுவதற்கும் உகந்ததாக இருக்கும்.

மழைக்காலங்களில் சூடான உணவு உண்ணல், காய்ச்சிய நீரைப் பருகுதல், கைகால்களைச் சுத்தம்


செய்தல் போன்ற சுவரொட்டிகளைப் பள்ளி உணவகத்தில் ஒட்டி வைக்கலாம். பசித்தபின் உணவை
நன்றாக மென்று கூழ்போல் ஆக்கி உண்ண வேண்டும் என்பதையும் அறிவுறுத்துதல் நன்று.

தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி, நீச்சல் போன்றவற்றை செய்வதன் மூலம்


உடலில் உப்பு தங்காமல் போய்விடும் என்பதை உடற்பயிற்சிப் பாடங்களில் ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு எடுத்துக் கூறலாம். உடற்பயிற்சி எதற்காகச் செய்கிறோம் என்பதும் மாணவர்களுக்குத்
தெரிந்திருக்க வேண்டும். வியர்வை வெளியேறும் வகையில் விளையாடுதல், தாகம் எடுத்தால் குடுவைகளில்
அடைக்கப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்த்து, நன்றாக சுத்தமான நீர் பருகுதல் போன்ற ஆரோக்கியத்
தகவல்களை மாணவர்களிடம் ஆசிரியர் எடுத்துரைப்பது நல்லது.

இரவில் அதிக நேரம் கண்விழிப்பதைத் தவிர்த்து, ஆழ்ந்த அமைதியான உறக்கம் எடுத்துக்


கொள்ள வேண்டும் என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்துதல் அவசியம். ஊட்டச்சத்து மிகுந்த பச்சைக்
காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற உணவு வகைகளை அதிகமாக பள்ளி உணவகத்தில் விற்க
வேண்டும்.

“காலை மாலை உலவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன்
ஓடிப் போவானே” என்ற திருமொழிக்கேற்ப, மாணவர்கள் ஆரோக்கிய வாழ்க்கையின் முக்கியத்துவத்தை
உணர்ந்து செயல்பட்டால் அவர்களின் எதிர்காலமும் ஒளிமயமாக இருக்கும் என்பதைத் தாழ்மையுடன்
கூறிக்கொண்டு என் மின் மடலை முடித்துக்கொள்கிறேன். என்னுடைய இந்த ஆலோசனைகளைக் கருத்தில்
கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். பள்ளி மாணவர்கள் இதனைப் பின்பற்றப் பழக்கிக் கொண்டால்,
வாழ்க்கை வசந்தமாகும்.

நன்றி

இப்படிக்கு

ரோஜா

213
9b. உறவுமுறை மின்னஞ்சல் - மன்னிப்புக் கேட்டல்

sabari@outlook.com

santhosh@outlook.com
மன்னிப்புக் கேட்டல்

12/01/2016
அன்புள்ள நண்பன் சந்தோஷிற்கு,

நண்பா! நான் எத்தனை பெரிய தவறு செய்திருக்கிறேன் என்பது எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது.
என்னுடைய அவசரப்புத்தியினால், ஒரு நொடிப்பொழுதில் உன்னுடைய உயரிய நட்பை இழக்க இருந்ததை எண்ணி
நான் மிகவும் வெட்கப்படுகிறேன்.

நீ என்னிடம் காட்டிய அன்பு எத்தகையது என்பதை எவ்வாறு என்னால் மறக்க முடிந்தது என்பதனை
நினைக்கும் பொழுது எனக்கு என்மீதே மிகவும் வெறுப்பாக உள்ளது.

பள்ளிப் பருவம் முதல், இன்று பணியாற்றும் இடம் வரை நம்மைப் போன்ற சிறந்த நண்பர்கள் இல்லை
என்று அனைவரும் பாராட்டினரே! ‘கபிலர் பரணரைப் போல’, ‘கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாரைப் போல’
என்று அனைவரும் நம்மை எப்படியெல்லாம் கேலி செய்திருக்கிறார்கள்.

உலகில் எதற்கு வேண்டுமானாலும் மருந்து இருக்கின்றதுச் சந்தேகத்தைத் தவிர. எத்தனையோ நற்செயல்


புரிந்தவர் எல்லாம், இச்சந்தேகத் தீயினால் மண்ணோடு மண்ணாகிப் போயிருக்கிறார் என்பதனைக் கேட்டும், கற்றும்
கூட நான் இவ்வாறு நடந்திருக்கக் கூடாதுதான்.

“குணம் நாடிக் குற்றமும்நாடி அவற்றுள்


மிகைநாடி மிக்கக் கொளல்”

என்ற பொய்யாமொழியின் பொன்மொழியையும் அல்லவா மறந்தேன் நான். இது தான் சிறுபிள்ளைத்தனம்


என்பார்கள்.

அன்று ஒரு நாள் நம் அலுவலகத்தில் உள்ள ஒரு முக்கியமான கோப்பை(file) நீ அவசர அலுவலக
விஷயமாய் எடுத்துச் சென்றதை அறியாத நம் முதலாளி, அந்தக் கோப்பை நான்தான் எடுத்துச் சென்றுவிட்டதாகக்
கருதி, என்னை பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தார். பிறகு உன் மூலம் விஷயம் அறிந்து உடனே என்னை
மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டார். நான்தான் என் அவசரப் புத்தியினால், உன்னால்தான் எனக்கு வேலை
214
போய்விட்டது என்று கருதி. உன் மனம் மிகவும் புண்படும்படியாக ஒரு நொடிப்பொழுதில் என்னவெல்லாம்
பேசிவிட்டேன்.

நீ எனக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை என்பதனை அறிந்தபொழுது என் மனம் எத்தனை


வேதனைப்படுகின்றது. அதனால் என்ன பயன்? நீ என்னைப் பார்க்கும்பொழுதோ, அன்றி நான் உன்னைப்
பார்க்கும்பொழுதோ நம் இருவருக்குமே நான் இழைத்த தவறு வருத்தத்தைத் தானே தொடர்ந்து கொடுக்கும்!

இதனை உன்னிடம் நேரில் கூறமுடியாத நிலையில், உன் முன் குற்றவாளி போல் இதனை மின்னஞ்சல் வழி
அனுப்புகிறேன்.

என் ஆருயிர் நண்பா, என்னை மன்னித்து விடு. நாம் பழையபடியே நட்புடன் இருக்கலாம்.

மீண்டும் ஒருமுறை உன்னிடம் மன்னிப்புக் கேட்கும் உன் நண்பன்.

அன்புடன்

சபரி

தொகுதி 10
10a. அலுவலக மின்னஞ்சல் - முறையிடுதல்

sunil@outlook.com

towncouncil@gov.com

சுகாதார நடவடிக்கை பற்றி முறையிடுதல்

13/01/2016

215
மதிப்பிற்குரிய நகர மண்டப சுகாதார அதிகாரி அவர்களுக்கு,

வணக்கம்.

என் பெயர் சுனில். நான் வசிக்கும் தெம்பனீஸ் வட்டாரத்தில் மழை பெய்யும் போதெல்லாம்
ஆங்காங்கே நீர் தேங்கியிருக்கின்றது. மழையின் வேகம் அதிகமாகும் சமயங்களில், எங்கள் பகுதி சிறிய
தீவுபோல் ஆகிவிடுகின்றது. இதனால் பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
நான்கு மரங்கள் சாய்ந்துகிடக்கின்றன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டடி ஆழத்திற்கு
நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் துர்நாற்றம் வீசுகின்றது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. அழையா
விருந்தாளியாகக் கொசுக்கள் பெருகிவிட்டன. மலேரியா, மஞ்சள் காய்ச்சல், டெங்கு, சிக்குன் குனியா
போன்ற நோய்கள் கொசுக்களின் மூலம்தான் பரவுகின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்
மருத்துவமனை சென்று சோதித்துப் பார்த்தபோது, அவர்கள் டெங்கு காய்ச்சலினால் தாக்கப்பட்டுள்ளனர்
என்று தெரியவந்துள்ளது. ‘∴ப்ளூ’ எனப்படும் வைரஸ் காய்ச்சல் மழைக்காலத்தின் நோயாகும். இதனால்
தலைவலி, உடல்வலி, காய்ச்சல், தும்மல், சளி, இருமல் தொல்லை ஏற்படுகிறது. மாசடைந்த நீரிலிருந்து
வரும் ஈக்களாலும், எறும்புகளாலும் உணவு, குடிநீர் மூலம் கிருமிகள் பரவுவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி,
காலரா ஏற்படுகின்றது. இந்த நோய்களைத் தடுக்க சோப்புப் போட்டுக் கைகளை நன்றாகக் கழுவ
வேண்டும். தண்ணீரைக் கொதிக்க வைத்து. ஆறவைத்துக் குடிக்க வேண்டும் என்று அக்கம்பக்கத்தார்க்கு
எடுத்துக்கூறி வருகிறோம்.

மக்கள் நோயின்றி வாழ, சுற்றுப்புறத் தூய்மை, உணவுத் தூய்மை, குடிநீர்த் தூய்மை ஆகியவை மிக
அவசியம். கொசு மருந்துத் தெளிப்பு, நீரில் நோய்த்தடுப்பு மருந்துத் தெளிப்பு போன்றவை தொடர்ந்து
மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அது முழுமையாக மேற்கொள்ளப்படாததால் கொசுக்களின்
உற்பத்தி அதிகமாகிவிட்டது. விஷப்பூச்சிகள்கூட நாளடைவில் பெருகலாம். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற
செல்வம்’

வரும்முன் காப்பது அதனினும் நல்லது. – என்பது தாங்கள் அறிந்ததே. தேங்கி நிற்கும் நீரில்
குழந்தைகள் விளையாடுகின்றனர். வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

எங்கள் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க ‘போர்க்கால’ நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.


கொசுக்களை முற்றிலும் ஒழிக்க இங்கிருக்கும் மேடுபள்ளங்களைச் சமப்படுத்தவேண்டும். மருத்துவ
முகாம்களை நடத்தி, தடுப்பு மருந்துகள் கொடுத்து, மழைக்கால நோய்களைக் கட்டுப்படுத்தும்
நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தாழ்மையுடனும், பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி

இப்படிக்கு

சுனில்

10b. உறவுமுறை மின்னஞ்சல் - விளக்கம் கேட்டல்


216
 

mathivaanan@outlook.com

manoharan@outlook.com
படிக்க நேரம் ஒதுக்குவது தொடர்பாக விளக்கம்

12/01/2016

அன்புள்ள நண்பன் மனோகரனுக்கு,

தற்காலக் கல்விமுறையில் பாடப் பகுதிகளுடன், இணைப்பாடப் பகுதிகளும் விரவிக் காணப்படுகின்றன.


எனவே நாம் அதற்கும் சரிசமமான அளவு நேரத்தை செலவிடுவதைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்.

ஆண்டுத் தொடக்கத்திலேயே, எவ்வாறு பயில வேண்டும் என்பதனைத் திட்டமிடுதல் மிக அவசியம். நாம்
ஒருபொழுதும் இழந்த காலத்தைத் திரும்பப் பெற இயலாது. எனவேதான், ‘காலம் பொன் போன்றது’என்ற
பொன்மொழிகூட நிலவி வருகின்றது.

திட்டமிட்டுச் செயல்படும் எச்செயலும் நிச்சயம் வெற்றிக் கனியை நல்கும் என்பதனை நாம் ஒருபோதும்
மறக்கக் கூடாது. இதனைத்தான் வள்ளுவப் பெருந்தகையும்,

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்


எண்ணுவம் என்பது இழுக்கு”

என்று மிக அழகாகக் கூறியிருக்கிறார்.

படிப்பதைச் சுமையாகக் கருதாமல், ஒரு படம் பார்ப்பதைப் போல சுவையான அனுபவமாக எடுத்துக்
கொண்டால், படித்ததெல்லாம் உடனே மனதில் பதிந்துவிடும். அது பள்ளிப் பாடமாயினும் சரி. இணைப் பாடமாயினும்
சரி.

217
தற்காலத்தில் அனைவரும் எல்லாத் துறையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதனைக் கருத்தில்
கொண்டே, பாடநூல்களுடன் பல இணைப் பாடங்களையும் இணைத்துள்ளனர் என்பதனை நாம் முதலில் தெளிவாகப்
புரிந்து கொள்ளவேண்டும்.

எத்தகைய பாடமாயினும். விருப்பத்தோடு படித்தால் விறுவிறு என நன்றாகப் புரிந்துவிடும். அதையே


ஆவலுடன் கேட்கும் பொழுது மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்துவிடும்.

ஒரு திரைப்படப் பாடல் காட்சிகள், படக் காட்சிகள் முதலியன எவ்வாறு நம் மனதில் உடனடியாக
பதிந்துவிடுகின்றது என்றால், முழுக் கவனமும் அதில் இருப்பதால்தான். அவ்வாறு நம் பாடத்திலும் கவனம்
இருக்குமேயானால், அதுவும் என்றும் நம் நெஞ்சினில் நீங்காமல் நிலைத்திருக்கும்.

தினமும் குறைந்தது மூன்றுமணி நேரமாவது கட்டாயம் படிக்க ஒதுக்கவேண்டும். மேலும் சற்றுக்


கடினமானவற்றை எழுதிப் பார்ப்பதாலும் அது உடனே மனதில் பதிந்துவிடும்.

ஒரு பகுதியைப் படிக்கும் பொழுது சிறிது சலிப்பு ஏற்பட்டால், சிறிது நேரம் வெளியில் நடந்து வரலாம்.
மேலும் படிக்கும் நேரத்தில் நம் கவனம் வேறு எதிலும் சிதறாதவாறு கட்டாயம் பார்த்துக்கொள்ளவேண்டும்.

குறிப்பாக எந்நேரமும் படித்துக் கொண்டிராமல், உடலுக்கும் மூளைக்கும் சற்று ஓய்வு தரவேண்டும். “சுவர்
இருந்தால் தானே சித்திரம் வரைய இயலும்”என்பதனை ஒருபோதும் மறக்கக் கூடாது.

இவ்வாறு நம் பாடப்பகுதிகளையும். இணைப்பாடங்களையும் படிக்க நேரத்தைத் திட்டமிட்ட வகையில்


செலவு செய்தால், வெற்றிக்கனி நிச்சயம்.

அன்புடன்

மதிவாணன்

218

You might also like