You are on page 1of 5

வக்ரதுண்ட மஹாகாய

சூர்யகோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ
சர்வ கார்யேஷு சர்வதா

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை


இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

குரு பிரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர:


குரு சாக்ஷாத் பரப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:

காஞ்சி மஹாபெரியவா சரணம்.

எனக்கு ஜோதிடம் கற்றுத்தந்த குரு திரு. பாஸ்கர் ஐயா அவர்களுக்கும், நமது நிறுவனர் மற்றும்
தலைமை குருஜி உயர்திரு. மீ னம் பட்டாச்சார்யர் அவர்களுக்கும், மற்றும் இங்குள்ள நமது
வித்யாலய மூத்த வித்யாபதிகளான குருமார்களுக்கும் எனது பணிவான நமஸ்காரங்கள்.மற்றும்
இந்த வாய்ஸ்சாட் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருக்கும் இளைய வித்யாபதிகளுக்கும், மாணவ
மணிகளுக்கும் வாழ்த்துக்கள்.

இன்று ராம நாம மஹிமை என்னும் தலைப்பில் சொற்ப்பொழிவு ஆற்ற நமது நிறுவனர்
எனக்கு ஒரு நல் வாய்ப்பை தந்துள்ளதற்கு மிகுந்த நன்றி. ராம நாமத்தின் பெருமையை
பற்றி பேசி முடிப்பதற்கு இந்த ஒரு ஜன்மம் போதாது. அது ஒரு மஹா சமுத்திரம். அவர்
பெருமை சொல்லவும் அரிதே என்று மஹரிஷிகளும், வைஷ்ணவ ஆச்சாரியர்களும்
கூறியுள்ளார்கள். எனவே எளியோனாகிய அடியேன் அந்த அமிர்தக் கடலில் ஒரு சில
துளிகளையேனும் உங்களுக்கு பிரசாதமாக அளிக்க வேண்டும் என்ற பிரயத்தனமே இந்த
முயற்சி.

இறைவனைவழிபட, முக்தியைப் பெற பல வழிகளை நமது சனாதன தர்மம் தந்துள்ளது. சதுர்


யுகம் எனப்படும் கிருத, திரேதா, த்வாபரா, கலி யுக காலங்களில் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு
விதமான வழிபாட்டு முறை பின்பற்றப் பட்டு வந்துள்ளது.

கிருத யுகத்தில் ஞானநிலை வழிபாடும், த்ரேதா யுகத்தில் யோக நிலை வழிபாடும், துவாபரா
யுகத்தில் கிரியை நிலை வழிபாடும்,கலியுகத்தில் சரியை நிலை மற்றும் பக்தி நிலை வழிபாடும்
பின்பற்றப் படுகிறது. இதனாலேயே கலியுகத்தில் பல உயர்ந்த, சங்கரர், ராமானுஜர், மத்வச்சாரியார்,
தியாகய்யர், ராமதாசர் போன்ற ஆச்சாரியர்களும், குருமார்களும், ஆழ்வார்கள், நாயன்மார்களும்
தோன்றி முக்திக்கு பக்தி மார்க்கத்தை பிரதானமாக வலியுறுத்தினார்கள்.

இந்த பக்தி மார்க்கத்திலும், மிக எளிதாக எல்லொரும் பாவ விமோசனம் பெற ராம நாம
பஜனையை அனேக ஆச்சாரியர்கள் பிராதனமாகச் சொல்லியுள்ளார்கள். முக்திக்கு வழிகாட்டி ராம
நாமம் ஒன்றுக்கே “தாரக மந்திரம்” என்கிற சிறப்பு பெயர் உண்டு. தாரக என்ற சொல்லுக்கு
படகு(ஸம்சார சாகரத்தை கடக்க உதவுவதால் ) அல்லது மோட்சம் அளிக்க வல்லது என்று
பொருள். ராம நாமத்தின் துணையுடனே இந்த சம்சார சாகரத்தை கடந்து கரை சேர முடியும்
என்பதால் இது தாரக மந்திரம் என்று அழைக்கப் படுகிறது.

இந்த ராம நாமம் எப்படி சிறந்தது என்பதற்கு ஒரு சிறிய விளக்கம் அளிக்கலாம் என்றுள்ளேன்.
செம்மொழியாம் தமிழ் போலவே சமஸ்கிருதமும் உயரிய ஒரு மொழி என்பதை நாம் அறிவொம்..
நம் தமிழ் மொழியில் ஓரெழுத்து சொல் என்பது ஒரு சிறப்பு. அதாவது பொதுவாக ஒரு பொருளைக்
குறிக்கும் சொல் என்பது சில எழுதுக்களின் கூட்டே. ஆனால் நம் மொழியில் ஒரே ஒரு எழுத்தே
கூட சொல் போல செயல்பட்டு பொருள் தரும்..உதாரணமாக கோ என்ற ஒற்றை எழுத்து,
அரசன்,பசு,நீர்,திசை,மலை என்ற பல பொருளில் வரும். கா என்பது காட்டை குறிக்கும்.ஆ என்பது
பசுவைக் குறிக்கும்..இது போல் இன்னும் பல சொற்கள் உண்டு. இதைப் போல் சமஸ்கிருதத்திலும்
ஒரு எழுத்தெ பல பொருளைத் தரும் சொல்லாக வரும்.. இப்படி வரும் ஓரெழுத்து சொற்கள்
இணைந்து(fusion) ஒரு புதிய சொல்லாக வரும். அந்த இரு எழுத்துக்களின் பொருளை இன்னும்
விரிவாக்கி ஒரு பொருளைத் தரும்.

உதாரணமாக ரிஷி வியாசரின் குரு கிரந்தம் என்னும் நூலில் வரும் ஸ்லோகம் குரு என்ற
சொல்லின் பொருளை விளக்கும்..

கு = குகாரக்ஷ அந்தகாரோ ருகாரஷ்ச=தேஜ உச்சதே

கு என்பது அந்தகாரம்(இருட்டு, அறியாமை) ரு=ஒளி, நெருப்பு, அறிவு(ஞானம்)

குரு என்பது அறியாமையை அகற்றி அறிவு என்னும் ஒளியை கொடுப்பவர் என்ற பொருளைத்
தரும்.

வியாச மஹரிஷி யாத்த அக்னிபுராணம் என்னும் நூலில் அத்தியாயம் 348 ல் இந்த ஓற்றைச்
சொற்கள் பற்றீ மிக விரிவாக விளக்கியுள்ளார்.அதில் 10 &11 ஆம் ஸ்லோகங்களில் ராம என்ற
சொல்லின் ஆழமான அர்த்தத்தை சொல்லியுள்ளார்..

ரா என்ற எழுத்து நெருப்பு,(முடிவு, இறப்பு), ஞானம்,, வலிமை மற்றும் இந்திரன் என்ற பொருளைத்
தரும்.

மா என்ற எழுத்து லக்ஷ்மி, வளமை, மற்றும் மாதா(தாய்), (பிறப்பு) என்ற பொருளைத் தரும்..

இந்த வேர் சொற்கள் இணைந்து ராமா என்று வரும் போது ராம என்பது பிறப்பு, இறப்பு என்னும்
சுழலில் இருந்து விடுதலை தரும் தாரக மந்திரம் ஆகும். அதேபோல் ஸ்ரீ என்பது மாதா
லக்ஷ்மியைக் குறிக்கும். ஸ்ரீ ராம என்னும் போது, இங்கு சீதா மாதாவையும் ராமபிரானையும்
குறிக்கும்..

“நாராயணா” என்பதில் “ரா” என்பது முக்கியமான எழுத்து.அதை நீக்கி விட்டால் பொருள் வராது.
அதே போல் “நமசிவாய” என்பதில் “ம” என்பது முக்கியமான எழுத்து.அதை நீக்கி விட்டால் பொருள்
மாறிவிடும். இந்த இரண்டு உயிரான அக்ஷ்ரங்களும் சேர்ந்த சொல்லே “ராம” என்பதால் இதன்
மேன்மையை அறிந்து கொள்ளலாம்.

இதே போல் ர என்பது இடயினத்தில் 2 ம் எழுத்து. ம என்பது மெல்லினத்தில் 5 ம் எழுத்து. ஆக ராம


என்றால்

2x5=10. ராம, ராம, ராம என்றால் 10x10x10=1000.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில், ராம நாமத்தை மூன்று முறை சொன்னாலே விஷ்ணுவின் 1000


நாமங்களைச் சொன்ன பலன் கிடைக்கும், என்று அந்த பரமேஸ்வரனே சொல்லியதாக வருகிறது

ஸ்ரீ பார்வத்யுவாச-
கேனோபாயேன லகுனா
விஷ்ணோர்‌நாம ஸஹஸ்ரகம்‌/
பட்யதே பண்டிதைர்‌நித்யம்|
ச்’ரோதுமிச்சாம்யஹம்‌ப்ரபோ ||26

“பிரபுவே,பண்டிதர்கள் தினமும் எளிதில் விஷ்ணுவின் இந்த ஆயிரம் திருநாமங்களையும் சொல்லி


வழிபட ஏதெனும் எளிதான உபாயம் இருந்தால் சொல்ல வேண்டுகிறேன்”, என பார்வதி தேவி
சர்வேஸ்வரனான சிவ பெருமானிடம் கேட்கிறர்.

அதற்கு அவர் சொல்கிறார்:

ஸ்ரீ ஈ’ச்வர உவாச-

ஸ்ரீ ராம ராம ராமேதி


ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத்துல்யம்‌
ராமநாம வரானனே ||27

இதன் சுருக்கமான பொருள்:

“ராம,ராம,ராம” என்று மூன்று முறை சொன்னாலே ஆயிரம்


திருநாமங்களை சொல்லிய பலன் கிட்டும்”

மேலும் “காசியில் இறந்தால் மோக்ஷம்” என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதற்கு


காரணம் காசியில் இறக்கும் உயிர்களுக்கு, உயிர் பிரியும் தருணத்தில் காசி
விஸ்வநாதரே சுயமாக அவர்கள் காதில் “ராம” நாமத்தை ஓதி அவர்களுக்கு மோக்ஷ
கதியை ப்ராப்திப்பதாக ஐதீகம்.

இந்த நாமத்தின் விசேஷம் என்னவென்றால் தவறான உச்சரிப்பினால் கூட பலன்


குறையாது.
கானகத்தில் வழிப்பறியிலும்,,வேட்டையிலும் ஈடுபட்ட ரத்னாகரன், ரிஷி நாரதரின்
உபதேசத்தின் மூலம் வால்மீ கி முனிவராக மாறி ஆதிகாவியமான இராமாயணத்தை
எழுதினார். தனது பாபச்சுமையால் ராம நாமத்தை சொல்ல முடியாததால் நாரதர்
அவருக்கு அங்கிருக்கும் மரா மரத்தை காட்டி (‘மரா மரா’) என்று உபதேசித்து அதனைச்
தொடர்ந்து சொல்லுமாறு கட்டளை இட்டார். ராம நாமத்தைத் தவறாக உச்சரித்தும் கூட
ரத்னாகரன் வால்மீ கி முனிவராக மாற முடிந்தது என்பது புராண உண்மை.

அனைத்து உயிர்களின் நண்பன்

தன்னுடைய வாழ்நாளில் ராமன் அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டினான். குகன்


(படகோட்டி), ஜடாயு (பறவை), சுக்ரீவன் (வானர அரசன்), சபரி (மூதாட்டி), விபீஷணன்
(அசுரர் குலம்) போன்ற பலரைத் தன் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும்
ஏற்றுக்கொண்டான். இதில் ஒரு அணிலும் அடங்கும். ராமன் தன்னிடம் சரணம் என்று
வருபவர் யாராக இருந்தாலும் அவருக்கு அபயம் அளிக்கும் சபதத்தை ஏற்றிருந்தான்.
இத்தகைய நன்னடத்தையால் தான் அவன் புருஷோத்தமன் என்று போற்றப்படுகிறான்.
ராம நாமம் ராமனை விடச் சிறந்தது

இலங்கை செல்ல வானர சேனை ஹனுமானின் தலைமையில் பாலம் அமைத்த போது,


வானர சேனையினர் கடலில் போட்ட பாறைகள் எல்லாம் பாலம் அமைக்க ஏதுவாக
தண்ண ீரில் மூழ்காமல் மிதந்தன. அதைக் கண்ட ராமன், இந்த பணியில் பங்கேற்க
வேண்டும் என நினைத்து தானும் ஒரு பாறையை சுமந்து வந்து கடலில் போட்டார்.
ஆனால் அது உடனே கடலில் சென்று மூழ்கியது. ஆச்சர்யம் அடைந்த ராமன்
மாருதியிடம் “என்ன இது, உன் வானரர்கள் போடும் கற்கள் மூழ்காமல் இருக்க நான்
போட்ட கல் மாத்திரம் மூழ்கிவிட்டதே” என்று கேட்டார். அதற்கு ஹனுமான் “பிரபுவே,
நாங்கள் போடும் கற்களில் எல்லாம் ‘ராம்’ என்று தங்கள் திருநாமத்தை எழுதி அதன்
பிறகே கடலில் போடுகிறோம். ஆனால் தாங்கள் அவ்வாறு செய்ய வில்லையே.
அதுதான் காரணம். தங்கள் திருநாமத்தின் சக்தி அது.” என்றார். எனவே ராமனை விட
ராம நாமம் மிகச் சிறந்தது. இந்த காரணத்தால் தான் ராமபக்த ஹனுமான் ராமன்
வைகுண்டம் சென்ற பிறகு அவரைப் பின்தொடர்ந்து செல்லாமல் இப்பூவுலகில் தங்கி
அவன் நாமத்தைப் பாடிக் கொண்டு இங்கேயே சிரஞ்ஜீவியாக வசிக்கிறார்.

பராக்கிரமசாலியான ஸ்ரீ ஆஞ்சனேயர், ஒரு சமயம் ஓர் அரசனுக்கு அடைக்கலம்


கொடுத்தார். அவனை எந்த சக்தியிடமிருந்தும் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி
கொடுத்தார். இராமபிரானே அந்த அரசனை ஆஞ்சனேயரிடமிருந்து மீ ட்க யுத்தம்
மேற்கொண்டார். அது இராம ஆஞ்சனேய யுத்தமாக உருவெடுத்தது. ஆஞ்சனேயர் தன்
வாலை சுருட்டியுள்ள கோட்டையில் அந்த அரசனை பத்திரப்படுத்தி, அந்த வாலின்
அரியணையில் அமர்ந்து “ராம ராம” என்று தியானம் செய்து கொண்டிருந்தார். ராமர்
ஹனுமானிடம் “நான் ஆயுதம் ஏந்தாத எதிரிகளிடம் போர் செய்ய மாட்டேன் என்பது
உனக்குத் தெரியாதா” எனக் கேட்டார். அதற்கு ஹனுமான் “ப்ரபுவே, தங்கள் திருநாமமே
என் ஆயுதம். அதை எதிர்த்து தாங்கள் போர் செய்யலாம்” என்றார். உடனே
ராமபாணங்கள் எகிறின. ஆனால் அவை ஆஞ்சனேயரை ஒன்றும் செய்யாது,
பூமாலைகளாக விழுந்தன. இராமரே முன்னின்று போர் நடத்தியும், ‘ராம நாம ஜபம்’
செய்த ஆஞ்சனேயர் தான் வெற்றியடைந்தார். அதை இராமரே ஒப்புக்கொள்கிறார்.

ராம நாமம் எழுத எளிது

மற்ற நாமங்களை காட்டிலும் ராம நாமம் சொல்லவும் எழுதவும் மிக எளிது. பக்தர்களில்
சிலர், ஜெபிப்பதை விட நாமத்தை எழுத விரும்புவார்கள். அவர்களுக்கு ராம நாமம்
அனைத்து மொழிகளிலும் எழுத லகுவாக இருக்கிறது. மேலும் குழந்தைகள் நாமங்களை
எழுதும் போது அவர்களின் கையெழுத்து மேம்பட்டு பிற குழந்தைகளுடன் ஒரு
ஆரோக்கியமான போட்டியும் உருவாகிறது.

பூஜ்ய காஞ்சி மஹாபெரியவா ராம நாம மஹிமையை பற்றி சொல்லிய சில


வாக்கியங்களை சொல்லி இக் கட்டுரையை முடிப்பது சிலாக்கியம் என்று நினைக்கிறேன்.

1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை' இடைவிடாமல் கூறவேண்டும்.


நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.*

*2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே*


*மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் ,*
*தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு
அடியும் 'ராம் ' என்றே நடக்கவேண்டும் .*

*3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.' கிழக்கு நோக்கி
செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய கரைய
துக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.*

*4. ' ராம நாம' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல்
கூடாது. ஏனெனில் 'ராம நாமமே ' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே
பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.*

*5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.' எழுந்து


கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் 'ராம நாமம்.' அந்த நாள் நமக்கு
'ராம நாம' நாளாக இருக்கவேண்டும்.*
*6. ' ராம நாம ' ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும்
துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு
அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும்,
அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்,*
*7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம். எங்கும் உணவு
உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லிச் சாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும்
ஒன்றே!*

*8. 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'ராம
நாமா' சொல்ல மனம் மட்டும் போதும்.*
*இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள் .*

*9. ஒரு வட்டில்


ீ உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம்,
கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு
சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வட்டினில்
ீ தெய்வகம்
ீ நிறைந்துவிடும். அதுவே
கோவிலாகும் .*
*10. எல்லாவித சாஸ்திர அறிவும் 'ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும்
'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு.*

*11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜெபத்தால் பெற முடியும். 'ராம
நாமாவினால் வினைகள் எரிந்து, நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி
ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும்.*

*12. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ ,* *ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும்


'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.*
காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது (சப்தரிஷி பூஜையின் போது )
ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை
விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராமா. ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராமா. ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராமா.

You might also like