You are on page 1of 45

அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் குறைபாடு (PTSD)

அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு (PTSD) என்றால் என்ன?

அதிர்ச்சிகரமான நிகழ்வுகளைப் பார்த்த சிலர் அவ்வப்போது அந்த நிகழ்வுகளை


நினைவுக்குக் கொண்டு வந்து அதைப் பற்றிப் பதற்றமும் பயமும் கொள்வார்கள்.
உதாரணமாக ஒருவரை அடித்தல், பாலியல் ரீதியிலான தாக்குதல், தீவிர
விபத்துகள், ராணுவத் தாக்குதல் அல்லது தீவிர நிலநடுக்கம் மற்றும் சுனாமிகள்
போன்ற இயற்கைப் பேரழிவுகள். இந்த அதிர்ச்சிகளைச் சந்திக்கிறவர்களில்
பெரும்பாலானோர் சில நாள்களில் முறையான அக்கறை காரணமாக
தேறிவிடுகிறார்கள். பதற்றம் மற்றும் பயம் குறைந்து தினசரி வாழ்க்கைக்குத்
திரும்பிவிடுகிறார்கள். ஆனால் சிலருக்கு இந்த நினைவுகள் மோசமாகிக்
கொண்டே செல்கின்றன. இவர்கள் அந்த அதிர்ச்சிகரமான நிகழ்வைப் பற்றி
தங்களையும் அறியாமல் சிந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள், அந்தச்
சிந்தனைகளை அவர்களால் கட்டுப்படுத்த இயலுவதில்லை, அதனால் தீவிர
பதற்றம், பயம் உண்டாகிறது. இவர்களால் தினசரி நடவடிக்கைகளைக் கூட
ஒழுங்காகச் செய்ய இயலுவதில்லை. அப்படிப்பட்ட மக்கள் அதிர்ச்சிக்குப் பிந்தைய
அழுத்தக் குறைபாடு (PTSD) என்ற பிரச்னையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உதாரணமாக ஒருவர் சாலை விபத்து ஒன்றைச் சந்தித்து அதில் உயிர்
பிழைத்திருக்கிறார் என்றால் அவ்வப்போது அந்த விபத்தின் நினைவுகள்
அவர்களுக்கு வந்துக் கொண்டே இருக்கும். இந்த நினைவுகள் மிகவும்
நிஜமானவையாக இருக்கும், அந்த விபத்து மீண்டும் ஒரு முறை இப்போது
நடைபெறுவதைப் போல அவர்கள் உணர்வார்கள். இந்த நினைவுகள் தீவிர
பயத்தையும் பதற்றத்தையும் உண்டாக்குகின்றன.

PTSD யின் அறிகுறிகள் என்ன?


PTSD பிரச்னைக் கொண்டவர்கள் தீவிர பதற்றம் மற்றும் பயத்தை
அனுபவிக்கிறார்கள். PTSD யின் மிக பொதுவான அறிகுறிகள்:
அந்த நிகழ்வு மீண்டும் நடைபெறுவது போல் உணர்தல்: அதிர்ச்சியான நிகழ்வைச்
சந்தித்தவர்கள் இரவில் கெட்ட கனவுகளைக் காண்கிறார்கள், அந்த
அதிர்ச்சிகரமான நிகழ்வு அவர்களுடைய நினைவில் மீண்டும் மீண்டும்
தோன்றுகிறது, இதனால் அந்த அதிர்ச்சியைத் திரும்பத் திரும்பச் சந்திக்கிறார்கள்.
இதனால் உடல் ரீதியிலும் தீவிரமான மாற்றங்கள் நிகழக்கூடும், உதாரணமாக
வியர்த்தல், இதயத் துடிப்பு அதிகரித்தல், குமட்டல் மற்றும் நடுக்கம்.
தவிர்த்தல்: பாதிக்கப்பட்ட நபர் அந்தத் துயர நிகழ்வுடன் தொடர்புடைய பேச்சுகள்,
இடங்கள் மற்றும் நிகழ்வுகளைத் தவிர்க்க முயற்சி செய்வார், இதன் மூலம்
தன்னைத் துன்புறத்தக் கூடிய நினைவுகள் தூண்டப்பட்டு விடுமோ என்று அவர்
பயப்படுவார்.
எப்போதும் பரபரப்பாக இருத்தல்: பாதிக்கப்பட்டவர் எப்போதும் எச்சரிக்கையுடன்
காணப்படுவார், மிகவும் பாதுகாப்பான சூழ்நிலைகளில் கூட ஏதாவது ஆபத்து
ஏற்பட்டுவிடுமோ என்று பயந்து கொண்டே இருப்பார். அவர்களுக்குத் தூக்கம்
நன்றாக வராது, எளிதில் அதிர்ச்சியடைவார்கள்.
உணர்வு ரீதியில் விலகியிருத்தல்: பாதிக்கப்பட்ட நபர் தன்னுடைய நண்பர்கள்
மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து விலகத் தொடங்குவார், முன்பு அவர்
விரும்பிச் செய்த வேலைகளில் கூட இப்போது அவருக்கு ஆர்வம் இருக்காது.
PTSD பிரச்னை கொண்டவர்களுக்கு மனச் சோர்வு, தீவிர பதற்றம், தவறான
பொருள்களை அதிகமாகப் பயன்படுத்துதல்போன்ற பிற மன நலப் பிரச்னைகளும்
வரக் கூடும், சில நேரங்களில் இவர்களுக்குத் தற்கொலை எண்ணங்கள்கூட
வரலாம்.
உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது இந்த அறிகுறிகள் இருப்பதை நீங்கள்
கவனித்தால் அவர்களிடம் இந்தக் குறைப்பாட்டைப் பற்றி நீங்கள் பேசலாம்,
அவர்கள் ஒரு நிபுணரின் உதவியை நாடலாம் என்று ஆலோசனை சொல்லலாம்.
PTSD எதனால் ஏற்படுகிறது?
உயிருக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய நிகழ்வுகள், உடல் ரீதியிலான அல்லது
பாலியல் ரீதியிலான வன்முறை போன்ற நிகழ்வுகளை அனுபவித்தவர்கள்
அல்லது பார்த்தவர்களுக்கு PTSD வரலாம்.
பதற்றம் அல்லது மன அழுத்த ஆபத்து பிறவியிலேயே அதிகமாக
உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஒருவர்
சந்தித்துள்ள அதிர்ச்சி எந்த அளவு தீவிரமானது, எவ்வளவு நேரம் நீடித்தது
என்பதும் ஒரு முக்கியமான காரணியாக இருக்கலாம். சில நேரங்களில்
அழுத்தத்தை ஒருவருடைய மூளை எப்படிக் கையாள்கிறது என்பதைப்
பொருத்தும் இந்தப் பிரச்சனை வரலாம், வராமலும் இருக்கலாம்.
PTSD யை உருவாக்கும் ஒரே ஒரு காரணி என்று எதுவுமில்லை, பொதுவாக பல
சிக்கலான காரணங்களின் கூட்டணியாய் இது நிகழ்கிறது.
PTSD க்கு சிகிச்சைப் பெறுதல்
ஓர் அதிர்ச்சிகரமான நிகழ்வுக்குப் பிறகு உடனடியாக PTSD யின் அறிகுறிகள்
தென்படுவது இயல்புதான். பெரும்பாலானோர் இந்த அதிர்ச்சியைத் தங்களுடைய
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் கடந்துவந்து விடுகிறார்கள்,
வாழ்க்கையை இயல்பாக வாழத் தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் இந்த நிகழ்வு
நடைபெற்று பல நாட்களுக்கு பிறகும் அதற்கான அறிகுறிகள் தொடர்ந்தால்
நீங்கள் ஒரு மனநல நிபுணரைச் சந்திக்க வேண்டும். PTSD யைக்
குணப்படுத்துவதற்கு முதன்மையாகச் சில சிகிச்சைகள் தரப் படுகின்றன,
குறிப்பாக அறிவாற்றல் செயல்பாட்டுச் சிகிச்சை (CBT), வெளிப்பாட்டுச் சிகிச்சை
ஆகியவை இதற்கு நல்ல பலன் தருகின்றன. இந்தச் சிகிச்சைகளில் சம்பந்தப்பட்ட
நபர் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றிய எண்ணங்களைச் சந்திக்குமாறு
செய்யப்படுகிறார்; இந்த எண்ணங்கள் மிகவும் துயரத்தை உண்டாக்குவதால் அந்த
நபர் இவற்றைத் தொடர்ச்சியாகத் தவிர்த்து வந்திருப்பார். ஆனால் இப்போது
அவற்றை அவர் சந்திக்க வேண்டும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைச்
சமாளிப்பதற்காகவும், தூக்கம் வராமல் சிரமப்படுகிறவர்களுக்கும் மருந்துகள்
சிபாரிசு செய்யப்படுகின்றன.
PTSD கொண்ட ஒருவரைக் கவனித்துக் கொள்ளுதல்
PTSD பிரச்னைக் கொண்டவர்களுக்கு நிறைய ஆதரவு தேவை, அவர்களைக்
கவனித்துக் கொள்கிறவர்களுக்கு நிறைய பொறுமை தேவை. உணர்வு ரீதியில்
விலகியிருப்பது PTSD யின் ஒரு பகுதி என்பதை நீங்கள் புரிந்து
கொள்ளவேண்டியது முக்கியம். இந்த குறைபாட்டைப் பற்றி நீங்கள் நிறைய
தெரிந்து கொண்டால் அதனால் பாதிக்கப்பட்டவர் என்ன பிரச்னையை
அனுபவிக்கிறார் என்பதை உங்களால் புரிந்து கொள்ள இயலும். அவர்கள் மனநல
நிபுணரைச் சந்திக்கச் செல்லும் போது நீங்களும் கூட வருவதாகச் சொல்லுங்கள்;
இதன் மூலம் அவர்களுக்கு ஆதரவும் கிடைக்கும், நீங்களும் இந்த குறைபாட்டைப்
பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். இத்துடன் அவர்கள் ஒரு
நிபுணருடைய உதவியை நாட வேண்டும் என்று நீங்கள் ஊக்கம் தர வேண்டும்,
அதே சமயம் நீங்கள் மிகவும் வற்புறுத்தக் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக
உணரச் செய்வது முக்கியம்.
PTSD யைச் சமாளித்தல்
PTSD அறிகுறிகள் இருப்போர் ஒரு மனநல நிபுணரை உடனே சந்திக்க வேண்டும்.
இதற்கான சிகிச்சைகள் மிகவும் செயல்திறன் வாய்ந்தவை, ஒருவர் எவ்வளவு
விரைவாகச் சிகிச்சையைத் தொடங்குகிறாரோ அவ்வளவு விரைவாகக்
குணமடைவார். இது பற்றி அவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன்
பேசலாம், இதே பிரச்னை கொண்டவர்களுடனும் பேசலாம், இதன் மூலம் அந்த
அதிர்ச்சி குறைவதற்கு உதவி கிடைக்கும். ஆரோக்கியமான தினசரி வாழ்க்கையை
வாழ்வதும் போதுமான அளவு ஓய்வெடுத்து, உடற்பயிற்சி செய்து,
ஆரோக்கியமான உணவுகளை உண்பதும் பதற்றத்தைக் குறைக்க உதவும்.
புகைபிடிப்பதை நிறுத்துவது எப்படி?

சரியான நிபுணர் உதவியும் ஆதரவும் இருந்தால் போதும், புகையிலைப்


பழக்கமுள்ளோர் அதிலிருந்து விடுபடுவது சாத்தியமே!
புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாதல் என்றால் என்ன?
புகையிலை என்பது, பலவடிவங்களில் கிடைக்கிறது, அதன்மூலம் இந்தியாவில்
பலரை அடிமையாக்கியுள்ளது. உலகம்முழுவதும் நிகோடின் புகையிலையின்
மிகப் பிரபலமான வடிவம், சிகரெட்தான். ஆனால் இந்தியாவில் சிகரெட்கள்,
பீடிகள், மூக்குப்பொடி, ஹூக்கா, மெல்லும் புகையிலை என்று பலவடிவங்களில்
இது பயன்படுத்தப்படுகிறது.
புகையிலை என்பது, ஒருவரை எளிதில் அடிமையாக்கிவிடக்கூடிய ஒரு பொருள்,
இதற்கு அடிமையான பலர், இதிலிருந்து விடுபட விரும்பினாலும், அவர்களால்
அது இயலுவதில்லை. இதில் நச்சுத்தன்மையும் அதிகம், உலகம்முழுக்க
ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஐம்பது லட்சம் பேர் புகையிலைப் பழக்கத்தால்
இறக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும்
சுமார் பத்து லட்சம் பேர் புகையிலைப் பழக்கத்தால் உயிரிழக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும், சுமார் 2500 இந்தியர்கள் புகையிலை சார்ந்த நோய்களால்
இறக்கிறார்கள். உலக அளவில், புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் மரணங்கள்
ஏராளம், கொக்கெய்ன் அல்லது ஹெராயின் பயன்பாடு, மதுப் பழக்கம், தீவிபத்து,
மற்ற விபத்துகள், கொலை, தற்கொலை, AIDS என்று அனைத்தையும்
சேர்த்தால்கூட இதற்கு இணையாகாது.
புகையிலை என்பது என்ன?
புகையிலை என்பது, நிகோடியானா டொபாக்கம் என்ற புகையிலைச்
செடியிலிருந்து உருவாக்கப்படும் ஒரு பொருள். இந்தச் செடியின் இலைகளை
உலர்த்தி, வேறு சில பொருள்களுடன் சேர்த்து பீடிகள், சிகரெட்கள், மூக்குப்பொடி,
ஹூக்கா, கட்டுபீடி, ஜர்தா போன்ற பல பொருள்களைத் தயாரிக்கிறார்கள்,
பயன்படுத்துகிறார்கள். புகையிலை பலவிதங்களில் பயன்படுத்தப்படுகிறது: சுபாரி
மெல்லுதல், மூக்குப்பொடியை உள்ளிழுத்தல், சிகரெட், பீடி புகைத்தல்.
புகையிலைச் செடியின் இலைகளில், நிகோடின் என்ற தூண்டும் ரசாயனம்
உள்ளது. புகையிலையைப் புகைத்தால், அல்லது மென்றால் நிகோடின்
வெளிப்படுகிறது, இன்னும் சுமார் 4000 மற்ற வேதிப்பொருள்கள் வெளிப்படுகின்றன,
இதில் கார்பன் மோனாக்ஸைட், தார் போன்றவையும் உண்டு.
ஒருவர் எப்படிப் புகையிலைக்கு அடிமையாகிறார்?
ஒருவர் புகையிலையைப் பயன்படுத்தும்போது, மூளையில் டோபமின்
வெளிவிடப்படுகிறது. டோபமின் என்பது, மகிழ்ச்சி உணர்வுகளுடன் தொடர்புடைய
ஒரு நரம்புக்கடத்தி ஆகும். ஆகவே, மூளை இதனை ஒரு மகிழ்ச்சியான
செயல்பாடாக எண்ணிக்கொள்கிறது, இதனால், அவர் மீண்டும் புகையிலையைப்
பயன்படுத்த விரும்புகிறார். படிப்படியாக, அந்தக் கடத்திகளின்
நுண்ணுணர்வுத்திறன் குறைகிறது, ஆகவே, ஒருவர் அதே மகிழ்ச்சியைப்
பெறவேண்டுமென்றால் புகையிலையை அதிகம் பயன்படுத்தவேண்டியிருக்கும்.
அதாவது, முன்பு ஒரு குறிப்பிட்ட அளவு புகையிலையால் மகிழ்ந்த அவர்,
இப்போது அதைவிட இருமடங்கு, மும்மடங்கு பயன்படுத்தினால்தான் அதே
மகிழ்ச்சியை அடைவார்.
ஒருவர் நிகோடினை உட்கொள்ளும்போது, வேதிப்பொருள்கள் தோல், வாய்,
மூக்கின் ம்யூகல் அகத்திரை, நுரையீரல் ஆகியவற்றின்மூலம் மூளையை
எட்டுகின்றன. நிகோடினைப் புகைத்தால், ஒருவர் உடனடியாகச் சுறுசுறுப்பைப்
பெறுவார், தன் ஆற்றல் பெருகிவிட்டதுபோல் உணர்வார். ஆனால், சில
நிமிடங்களில் அந்தச் சுறுசுறுப்பு குறைந்துவிடும், அவர் மீண்டும் களைப்பாக,
ஆற்றலின்றிக் காணப்படுவார். புகைப்பழக்கம் கொண்ட பலருக்கும் இந்தத் தாக்கம்
இருக்கும், இதனால், அவர்கள் மீண்டும் புகைபிடிக்க விரும்புவார்கள்.
சிறுவர்களும் பதின்பருவத்தினரும் புகையிலைப் பொருள்களுக்கு அடிமையாகும்
வாய்ப்பு அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் எந்த அளவு
சீக்கிரமாகப் புகையிலையைப் பயன்படுத்தத் தொடங்குகிறாரோ, அந்த அளவுக்கு
அவர் அதற்கு அடிமையாகக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஒருவர் புகையிலைக்கு அடிமையாகும்போது, அதனால் அவருடைய மூளையில்
ஏற்படக்கூடிய மாற்றங்கள், கொக்கெயின் அல்லது ஹெராயின் பழக்கத்தால்
ஏற்படும் மாற்றங்களுக்கு இணையானவை. பல ஆண்டுகளாக ஒருவர்
புகையிலையைப் பயன்படுத்திவந்தால், சில குறிப்பிட்ட சூழல்களில் புகைபிடித்தே
தீரவேண்டும் (அல்லது, புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தியே
தீரவேண்டும்) என்று அவர் உணரக்கூடும். உதாரணமாக, தூங்கி எழுந்தவுடன்,
அல்லது, அலுவலகத்தில் காஃபி குடிக்கும்போது, மதிய உணவு
இடைவேளையின்போது அவர்கள் புகைபிடித்தேஆகவேண்டும் என்று அவர்கள்
எண்ணலாம். சிலர், வாகனம் ஓட்டும்போது, குடிக்கும்போது, அல்லது, அழுத்தம்
அதிகமான ஒரு பணியைச் செய்யும்போது புகைபிடிக்கவேண்டும் என்று
எண்ணுவார்கள்.
புகையிலைக்கு அடிமையாவதன் தாக்கம் என்ன?
புகையிலை அல்லது நிகோடினைப் பயன்படுத்துவதால், உடலின் ஒவ்வோர்
உறுப்பும் பாதிக்கப்படுகிறது. புகையிலையைப் பயன்படுத்தும்போது, அட்ரீனலின்
வெளிவிடப்படுகிறது, இதனால் உடலின் வெப்பநிலை, இதயத்துடிப்பு, ரத்த
அழுத்தம் அதிகரிக்கிறது.
புகைபிடிக்கிறவர்களுக்கு நுரையீரல், வாய், மார்பகம், கர்ப்பப்பை, கணையம்,
நுரையீரல் அல்லது வயிற்றில் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம். புகையில்லாத
புகையிலையைப் பயன்படுத்துகிறவர்களுக்கு வாய், உணவுக்குழாய், குரல்வளை,
வயிறு மற்றும் கணையத்தில் புற்றுநோய் வரலாம்.
புகையிலையை நெடுநாள் தொடர்ந்து பயன்படுத்தினால், வேறு பல ஆரோக்கியப்
பிரச்னைகளும் வரலாம்: தோல், பற்கள் முன்கூட்டியே வயதான நிலைக்குச்
செல்லுதல், கேடராக்ட், உயர் அல்லது தாழ் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்,
சுவாசப் பிரச்னைகள், இதய நோய் மற்றும் பக்கவாதத்துக்கான ஆபத்து
அதிகரித்தல், கருவுக்குச் சேதம் (கர்ப்பிணிப்பெண் புகைபிடித்தால்),
மலட்டுத்தன்மை. புகையிலையைப் பயன்படுத்துவதால் டயாபடிஸ்,
முடக்குவாதம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை வரும் ஆபத்தும்
அதிகரிக்கிறது.
புகைபிடிக்கும் ஒருவருடைய வாழ்நாள், புகைபிடிக்காத ஒருவருடைய
வாழ்நாளைவிட 15 ஆண்டுகள் குறைவு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம்நிலைப் புகைபிடித்தல், அதாவது புகைபிடிக்கிற இன்னொருவர்
வெளிவிடும் புகையை உள்ளிழுத்தல்கூட தீவிரமான உடல்நலப்பிரச்னைகளைக்
கொண்டுவருகிறது, இவற்றாலும் பல ஆபத்துகள் நேரலாம். ஒருவர் தொடர்ந்து
இரண்டாம்நிலைப் புகைபிடித்தலை மேற்கொண்டுவந்தால், அவருக்கு நுரையீரல்,
மார்பகம் மற்றும் கல்லீரலில் புற்றுநோய் ஏற்படக்கூடும். இதனால் பக்கவாதம்,
இதய அதிர்ச்சிகூட ஏற்படலாம். இரண்டாம்நிலைப் புகைபிடித்தல் ஓரளவு
இருந்தால் 'பாதுகாப்பு'தான் என்று பலர் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல,
சிறிதளவு இரண்டாம்நிலைப் புகைபிடித்தல்கூட ஆபத்தானதுதான்.
பீடி, மூக்குப்பொடி மற்றும் சிகரெட் அல்லாத பிற புகையிலை வடிவங்கள்
'பாதுகாப்பானவை' என்று பலர் நினைக்கிறார்கள். இது உண்மையல்ல. இவையும்
சிகரெட்களைப்போலவே தீங்கு விளைவிப்பவைதான், இவற்றைப்
பயன்படுத்துகிறவர், அவரைச் சுற்றியிருப்பவர்கள் என எல்லாருக்கும் இவை தீவிர
விளைவுகளைக் கொண்டுவரக்கூடும்.
யாரெல்லாம் புகையிலைக்கு அடிமையாகக்கூடும்?
நெடுநாளாகப் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துகிறவர்கள் அதற்கு
அடிமையாகிற ஆபத்து உள்ளது. புகையிலைக்கு அடிமையானவர்களுடைய
நெருங்கிய உறவினர்கள், சிறுவயதில் அல்லது வளர்இளம்பருவத்திலேயே
புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள், பிற
பொருள்களுக்கு (மது மற்றும்/அல்லது போதைப்பொருள்கள்) ஏற்கெனவே
அடிமையானவர்கள், முன்பு மனநலப் பிரச்னைகளைக் கொண்டிருந்தவர்கள்:
இவர்களெல்லாம் புகையிலைக்கு அடிமையாகும் ஆபத்து அதிகம்.
ஒருவர் புகையிலைக்கு அடிமையாகியுள்ளார் என்பதை எப்படிக் கண்டறிவது?
ஒருவர் தினமும் சில சிகரெட்களைப் புகைக்கிறார், அல்லது புகையிலையை
மெல்லுகிறார் என்றால், அந்தப் பழக்கத்துக்கு அவர் அடிமையாகும் வாய்ப்பு
உள்ளது. சிகரெட் புகைக்கும் பழக்கமுள்ள ஒருவர் நிகோடினைச்
சார்ந்துவாழ்கிறார்/ அதற்கு அடிமையாகியிருக்கிறார் என்பதைக் காட்டும் சில
அறிகுறிகள்:
புகைபிடிப்பது தவறு என்று அவருக்குத் தெரியும், பலமுறை அதை விடுவதற்கு
முயன்றிருக்கிறார், ஆனால், அவரால் அது இயலவில்லை.
ஆரம்பத்தில் அவர் தினமும் எத்தனை சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தாரோ,
அதைவிட அதிக சிகரெட்களை இப்போது பிடிக்கிறார்.
சில மாதங்களுக்குமுன்னால் ஓரிரு சிகரெட்களில் அவருக்குக் கிடைத்த அந்த
'மகிழ்ச்சியுணர்வு', இப்போது உடனடியாகக் கிடைப்பதில்லை, அதற்குப் பல
சிகரெட்கள் தேவைப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும், அவர் எத்தனை சிகரெட்கள் குடிக்கவேண்டும் என்று
எண்ணுகிறாரோ, அதைவிட அதிக எண்ணிக்கையிலான சிகரெட்களைக்
குடிக்கிறார்.
கைவசம் சிகரெட் இல்லையென்றால், அவர் அழுத்தமாக உணர்கிறார்.
அவர் புகை பிடிப்பதை நிறுத்த முயற்சி செய்யும்போது, அவருடைய
உடல்நிலையும் மனநிலையும் பாதிக்கப்படுகிறது, இதனால் அவரால் தன்னுடைய
தினசரி வேலைகளை ஒழுங்காகச் செய்ய இயலுவதில்லை.
ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அவர் சிகரெட் பிடிக்கவில்லையென்றால், அவரது
எண்ணங்கள் பெரும்பாலும் 'அடுத்த சிகரெட் எங்கே? எப்போது?' என்பதில்தான்
குவிந்திருக்கின்றன.
எங்கெல்லாம் தன்னுடைய புகைப்பழக்கத்துக்குத் தடை இருக்காதோ
அங்கெல்லாம்தான் அவர் சென்றுவருகிறார், அவைசார்ந்த வேலைகளைதான்
அதிகம் செய்கிறார், உதாரணமாக, புகைபிடிப்பதை அனுமதிக்கும்
உணவகங்களுக்குமட்டுமே செல்லுதல், சிகரெட் வாங்கும் இடங்களுக்கு அடிக்கடி
செல்லுதல் போன்றவை.
எங்கெல்லாம் புகைபிடிக்க அனுமதி இல்லையோ, அங்கெல்லாம் அவர் மிகவும்
சிரமமாக உணர்கிறார்.
அவருக்கு உடல்நலம் சரியில்லை, அவரால் இயல்பாகப் பணியாற்ற
இயலவில்லை என்றாலும், அவர் புகைபிடிக்கிறார்.
மேற்கண்ட அறிகுறிகளில் சில ஒருவரிடம் காணப்பட்டால், அவர் புகைபிடிக்கும்
பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கக்கூடும், அவருக்கு உதவி தேவைப்படலாம்.
*மூக்குப்பொடி, மெல்லும் புகையிலை, மற்ற புகையிலைப் பொருள்களுக்கு
அடிமையானவர்களைக் கண்டறிவதற்கும் இதேபோன்ற அறிகுறிகளைப்
பரிசோதிக்கலாம். "புகைபிடித்தல்" அல்லது "சிகரெட்கள்" என்பதற்குப்பதிலாக,
அவர்கள் பயன்படுத்துகிற பொருளின் பெயரைப் பொருத்திக்கொண்டால் போதும்.
புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்த நேர்ந்தால், அவர்களுக்கு
நடுக்கம், பதற்றம், மனச்சோர்வான நிலை, தூக்கமின்மை, தலை கனமற்று
இருப்பதுபோன்ற உணர்வு, இதயத்துடிப்பு குறைதல், பசி அதிகரித்தல், எரிச்சல்
பெருகுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
கண்டறிதல் மற்றும் சிகிச்சை
அமர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தினமும் பல சிகரெட்களைப் புகைப்பவர். அவர்
எப்போதும் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் சென்று வேலைசெய்துகொண்டிருப்பவர்.
ஆகவே, அவ்வப்போது சிகரெட் பிடிப்பார். அவர் சிகரெட்டுக்கு அடிமையாகத்
தொடங்கியதும், அவரால் வேலையிலோ மற்ற நடவடிக்கைகளிலோ நெடுநேரம்
கவனம் செலுத்த இயலவில்லை. அவர் தன்னுடைய பாக்கெட்களில் சிகரெட்களை
ஒளித்துவைக்கத்தொடங்கினார், கூட்டங்களிலிருந்து விரைவில் வெளியேறி
புகைபிடிக்க ஆரம்பித்தார், விமானங்களில் புகைபிடிக்க அனுமதி இல்லை
என்பதால், விமானங்களில் செல்வதையே தவிர்க்கத்தொடங்கினார்.
இதற்காக, அமர் சில மனநல நிபுணர்களைச் சந்தித்தார், அவர்களுடைய
ஆதரவுடன் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டார். அவரது ஒட்டுமொத்தச்
செயல்திறனும் வாழ்க்கைத்தரமும் மேம்பட்டது. 'இப்போதெல்லாம், அவ்வப்போது
சிகரெட் பிடிக்கவேண்டும் என்ற உணர்வே எனக்கு ஏற்படுவதில்லை' என்கிறார்
அமர், 'நான் அழுத்தமில்லாமல் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கிவிட்டேன்.'
இது ஒரு கற்பனைக்கதை, இந்தப் பிரச்னை நிஜவாழ்வில் எப்படி இருக்கும்
என்பதைப் புரியவைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
புகைபிடிக்கும் பழக்கமுள்ள பலர், திடீரென்று அதை நிறுத்திவிடுகிறார்கள். இந்த
முறையை மனநல நிபுணர்கள் சிபாரிசு செய்வதில்லை என்றாலும், சிலருக்கு இது
வேலை செய்கிறது. அவர்கள் நிகோடின் அடிமைத்தனத்திலிருந்து
விடுபட்டுவிடுகிறார்கள். ஆனால் மற்ற பலரால் இது இயலுவதில்லை,
அவர்களுக்கு ஒரு மருத்துவ நிபுணரின் உதவி தேவைப்படுகிறது. புகைபிடிப்பதை
நிறுத்த முயற்சி செய்து தோற்றவர்கள் வருந்தவேண்டியதில்லை. நிபுணர்களின்
உதவியுடன் அவர்கள் இதிலிருந்து விடுபடலாம். இதற்காக, அவர்கள் ஒரு மனநல
நிபுணரைச் சந்திக்கவேண்டும்.
புகைபிடிப்பவர்களில் 3% பேர்தான் தாங்களே அதிலிருந்து விடுபடுகிறார்கள்
என்கின்றன புள்ளிவிவரங்கள். மற்ற 97% பேருக்கு, நிபுணர்களின் உதவி தேவை.
புகையிலைக்கு அடிமையான ஒருவர் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவது
எளிதல்ல, ஆகவே, அதற்காக ஒரு நிபுணரிடம் உதவி கோருவதில் எந்தத் தவறும்
இல்லை.
பல நேரங்களில், புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்களுடைய குடும்ப
உறுப்பினர்களோ நண்பர்களோ அவர்களை ஒரு மருத்துவர் அல்லது மனநல
நிபுணரிடம் அனுப்புகிறார்கள். அந்த மருத்துவர் அல்லது மனநல நிபுணர் அவரிடம்
பேசி, அவரது பழக்கம் எந்த அளவு தீவிரமாக உள்ளது என்பதைத்
தெரிந்துகொள்கிறார்கள். ஃபாகெர்ஸ்ட்ராம் பரிசோதனை போன்ற மதிப்பீடுகள்,
பாதிக்கப்பட்டவர், அவரது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் நிகழ்த்தப்படும்
நேர்காணல்களில் தெரியவரும் விவரங்கள் போன்றவற்றின் அடிப்படையில்
அவருக்கு என்ன சிகிச்சை வழங்கலாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது.
போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்களை மருத்துவமனையில்
சேர்த்துச் சிகிச்சை வழங்கப்படும். ஆனால், புகைபிடிக்கும் பழக்கத்துக்கு
அடிமையான ஒருவர் வெளிநோயாளியாக அவ்வப்போது வந்து சிகிச்சை பெற்றுத்
திரும்பலாம். சிகிச்சையின் நோக்கம், இனி எப்போதும் புகைபிடிக்கக்கூடாது என்று
அவரை எண்ணச்செய்வது. இதற்காக, புகைபிடிக்காதபோது அவர் எப்படி இருப்பார்
என்கிற தோற்றம் அவர்களுக்குள் உருவாக்கப்படுகிறது, இதன்மூலம் அவர்கள்
சந்திக்கக்கூடிய சவால்கள், சபலங்களை அவர்களால் சமாளிக்க இயலும்.
இதற்காக, பாதிக்கப்பட்டவர் ஒரு "விடும் நாளை"த் தீர்மானிக்கவேண்டியிருக்கும்.
அவர்கள் படிப்படியாகப் புகையிலையை விடுவதற்காக, அவர்களுக்கு நிகோடின்
பட்டைகள் வழங்கப்படுகின்றன. புகைபிடிப்பதை நிறுத்தும்போது ஏற்படக்கூடிய
உடல், மனப் பிரச்னைகளைச் சரிசெய்வதற்காக, அவர்களுக்குச் சில மருந்துகளும்
வழங்கப்படலாம்.
புகைபிடிப்பதை நிறுத்தியவர்களுக்கு ஆதரவளிக்கும் குழுக்கள் நிறைய உண்டு.
இவற்றில் அவர்கள் சேரவேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. இதன்மூலம்,
தங்களுக்கு வரக்கூடிய பிரச்னைகளைச் சமாளிக்க அவர்களால் இயலும்.
இத்துடன், நிகோடின் பயன்பாடு, சமாளிக்கும் திறன்களைப்பற்றிய விவரங்களும்
அவர்களுக்குத் தரப்படுகின்றன. ஒருவர் புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து
விடுபட்டு, புகையிலை இல்லாமல் வாழவேண்டுமென்றால், அவருடைய
நணர்கள், குடும்பத்தினர், ஆதரவுக் குழு உறுப்பினர்கள் என எல்லாரும்
அவர்களுக்கு உதவவேண்டும்.

போதைப்பொருளுக்கு அடிமையாதல்: இது ஒருவருடைய விருப்பத்தைப்பொறுத்த


விஷயமா?

ஒருவர் போதைப்பொருள்களுக்கு அடிமையாவதென்பது ஒரு சிக்கலான விஷயம்,


அதில் உயிரியல், சமூகவியல் மற்றும் உளவியல் காரணிகள் உள்ளன .
ரோஹித் கல்லூரியில் சேர்ந்தபோது, புகைபிடிக்கத் தொடங்கினான். அவனுடைய
நண்பர்களெல்லாம் பதின்பருவத்தைச்சேர்ந்தவர்கள்தாம், அவர்கள் எல்லாரும்
புகைபிடித்தார்கள். ரோஹித் அவர்களைப்போலவே இருக்க விரும்பினான். ஆகவே,
தயங்கித்தயங்கித் தினமும் ஒன்று அல்லது இரண்டு சிகரெட்களைப் புகைக்க
ஆரம்பித்தான். ஆறு மாதங்கள் கழித்து, ரோஹித் தினமும் ஒரு பாக்கெட் சிகரெட்
பிடித்துக்கொண்டிருந்தான். இப்போது அவனுக்கு வகுப்புகள், பாடங்கள்,
மதிப்பெண்கள், எதிலும் ஆர்வம் இல்லை. விடுமுறைக்கு அவன் வீட்டுக்குச்
சென்றான், அங்கே அவனால் அதிகம் புகைபிடிக்க இயலவில்லை. ஆகவே, அவன்
அடிக்கடி எரிச்சலடைந்தான், அவனுக்குக் குமட்டல் வந்தது, நிலைகொள்ளாமல்
திரிந்தான். எப்போதும் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தான், அவனால் சிறிய
வேலைகளில்கூடக் கவனம் செலுத்த இயலவில்லை. அடிக்கடி வீட்டிலிருந்து
வெளியே சென்று புகைபிடித்தான். அப்போதுதான் அவனால் இயல்பாக உணர
இயன்றது. அவனால் தன்னுடைய விடுமுறையை அனுபவிக்க இயலவில்லை,
வீட்டிலுள்ளவர்களுடன் நேரம் செலவிட இயலவில்லை, எப்போது வீட்டிலிருந்து
வெளியே சென்று புகைபிடிக்கலாம், வீட்டுக்குள்ளேயே யாருக்கும் தெரியாமல்
புகைபிடிப்பது எப்படி, சீக்கிரம் கல்லூரிக்குத் திரும்பச்சென்றுவிட்டால், எந்தத்
தடைகளும் இல்லாமல் இஷ்டம்போல் புகைபிடிக்கலாமே... இப்படிதான்
அவனுடைய சிந்தனைகள் இருந்தன. ரோஹித் புகைப்பழக்கத்துக்கு
அடிமையாகிவிட்டான் என்று அவனுடைய பெற்றோருக்குத் தெரிந்திருக்கவில்லை.
அந்த ஆண்டின் நிறைவில், கல்லூரி நிர்வாகம் அவர்களை அழைத்து, 'உங்கள்
மகன் வகுப்புக்கே வரவில்லை, ஆகவே, அவன் இன்னொருவருடம் இதே
பாடங்களைப் படிக்கவேண்டும்' என்று சொன்னபோதுதான் அவர்களுக்கு விஷயம்
தெரியவந்தது.

இது ஒரு கற்பனை விவரிப்பு. நிஜவாழ்க்கைச் சூழலில் இந்தப் பிரச்னை எப்படி


அமையும் என்று புரியவைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
போதைப்பழக்கத்துக்கு அடிமையாதல் என்றால் என்ன?
அடிமையாதல் என்பது, ஒருவர் தனக்கு இன்பம் தரும் ஒரு பொருளைச் (மது,
சிகரெட்கள், போதைமருந்துகள் போன்றவை) சார்ந்து வாழத்தொடங்கும்
நிலையாகும். ஒருவர் ஒரு குறிப்பிட்ட பொருளைச் சார்ந்து
வாழத்தொடங்கும்போது, அவரால் தன்னுடைய வாழ்க்கையின் பிற
விஷயங்களில் கவனம் செலுத்த இயலுவதில்லை, குடும்பத்தினர், நண்பர்களைக்
கவனிக்க இயலாமல் தடுமாறுகிறார், வேலையில் தனக்கு வழங்கப்படும்
கடமைகளைச் சரிவர நிறைவேற்ற இயலாமல் திணறுகிறார். இதனால்,
அவருக்கும் பிரச்னை, சுற்றியிருக்கிற மற்றவர்களுக்கும் பிரச்னை.
ஒருவர் ஒரு பழக்கத்துக்கு அடிமையாகிறார் என்றால், அது வலுவான உயிரியல்
அடிப்படையைக்கொண்ட ஒரு மூளை நோய் ஆகும், இது சமூக மற்றும்
உளவியல் காரணிகளால் பாதிக்கப்படுகிறது.
குறிப்பு: போதைப்பழக்கத்துக்கு அரிமையானவர்களைப்பற்றிப் பல தவறான
நம்பிக்கைகள் உள்ளன. உதாரணமாக, அவர்கள் மனத்தளவில் பலவீனமானவர்கள்,
ஒழுக்கமற்றவர்கள்... இப்படி. இங்கே அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு
விஷயம், ஒருவர் ஒரு விஷயத்துக்கு அடிமையாகிறார் என்றால், அவரே விரும்பி
அப்படி நடந்துகொள்வதில்லை, அதற்குப் பல மரபியல் மற்றும் சுற்றுச்சூழல்
காரணிகள் உள்ளன.
ஒருவர் ஒரு பொருளுக்கு எப்படி அடிமையாகிறார்?
அடிமைப்படுத்தக்கூடிய எல்லாப் பொருள்களிலும் (மது, நிக்கோடின்
அடிப்படையிலான சிகரெட்கள், போதைமருந்துகள்) உள்ள வேதிப்பொருள்கள்,
அவற்றைப் பயன்படுத்துவோரின் உடலில் உயிரியல் மாற்றங்களை
உண்டாக்கக்கூடியவை. ஒருவர் இந்தப் பொருள்களில் எதைப் பயன்படுத்தினாலும்
சரி, அவருடைய மூளையில் டோபமைன் வெளிவிடப்படுகிறது, இது
மகிழ்ச்சியுணர்வைத் தூண்டுகிறது. இதனால், அவர் அந்தப் பொருளை மீண்டும்
தேடுகிறார். அதைப் பயன்படுத்தினால் தனக்கு உடனே மகிழ்ச்சி கிடைக்கும் என்று
எண்ணுகிறார். அவர் அந்தப் பொருளைப் பயன்படுத்தாமல் நிறுத்திவிட்டால், அவர்
அதற்காக ஏங்குகிறார், மீண்டும் அதே பழைய இன்பத்தை உருவாக்கவேண்டும்
என்று துடிக்கிறார்.
அவர் அந்தப் பொருளைப் பயன்படுத்தப் பயன்படுத்த, அவரது உடலில் அந்தப்
பொருளுக்கான சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது, இதனால், அவர்கள் அதைப்
பயன்படுத்தாமல் நிறுத்தினால், பல விலகல் அறிகுறிகள் வருகின்றன, அவர்கள்
அந்தப் பொருளைத் தேடி ஓடுகிறார்கள். அந்தப் பொருள் இல்லாமல் தங்களால்
வாழவே இயலாது என்று அவர்கள் எண்ணக்கூடும், உணவு, தண்ணீர், அல்லது
ஆக்ஸிஜன்போல் இதுவும் தங்களுக்கு முக்கியம் என்று நினைக்கக்கூடும். இப்படி
இவர்கள் இந்தப் பொருளிலேயே தொடர்ந்து கவனம் செலுத்துவதால், அவர்கள்
தங்கள் வேலையை, கடமைகளை, குடும்பத்தினரை, நண்பர்களைக்
கவனிப்பதில்லை.
WHO அறிகுறிகளின்படி, ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையானார் என்றால்,
அவரிடம் இந்த அறிகுறிகள் காணப்படும்:
· அந்தப் பொருளைப் பயன்படுத்தியே தீரவேண்டும் என்று எண்ணுவார்
· அவர்களாக அதனை நிறுத்தவோ குறைக்கவோ இயலாது
· அடுத்தமுறை எப்போது அந்தப் பொருளைப் பயன்படுத்தலாம்
என்பதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்
அடிமையாதல் தொடர்பான குறைபாடுகளைப்பற்றிப் பேசும்போது WHO
பயன்படுத்தும் கண்டறிதல் சொற்களின் பட்டியல் இதோ.
ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையாகிறார் என்றால், அது பல நாள்களுக்கு
நீடிக்கக்கூடிய, மீண்டும் வரக்கூடிய நிலையாகும், இந்தப் பிரச்னை, நீரிழிவு
போன்ற பலநாள் நீடிக்கக்கூடிய நோய்களைப்போலவே அமையும்.
பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை தேவை, அந்தச் சிகிச்சை குறுக்கீடு,
கட்டுப்பாடு ஆகிய வடிவங்களில் அமையவேண்டும். ஒருவர் சிகிச்சைக்குச்
செல்கிறார் என்றால், அவர் மீண்டும் அந்த போதைப்பொருளுக்கு
அடிமையாகமாட்டார் என்று எந்த உத்தரவாதமும் இல்லை; அவர் மறுபடி அந்தப்
பொருளைத்தேடிச்செல்ல வாய்ப்புகள் உள்ளன. அப்படி அவர் அந்தப் பொருளைத்
தேடிச்சென்றால், அவர் தோற்றுவிட்டார் என்று பொருளில்லை. அந்தப்
பொருளுக்கு அடிமையாவதிலிருந்து அவர் முழுமையாக விடுபட அவருக்கு
இன்னும் ஆதரவு தேவை என்றுதான் பொருள்.
பொதுவாக அடிமைப்படுத்தும் பொருள்கள்
இந்தியாவில் மக்கள் அடிமையாகக்கூடிய பொருள்களை மூன்று வகைகளாகப்
பிரிக்கலாம்:
சட்டபூர்வமான போதைப்பொருள்கள், உதாரணமாக, மது, புகையிலை/சிகரெட்கள்
சட்டவிரோதமான போதைப்பொருள்கள், பொழுதுபோக்குப் போதைமருந்துகள்
மருந்தியல்துறையினால் உருவாக்கப்படும் மருந்துகள் அல்லது, மருத்துவர்களால்
எழுதித்தரப்படும் மருந்துகள்
பழக்கம், அடிமைநிலை: என்ன வித்தியாசம்?
போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர், முன்பு ஒருமடங்கு
போதைப்பொருளால் பெற்ற அதே இன்பத்தைப் பெறுவதற்கு, இப்போது அவர்
இரண்டு அல்லது மூன்றுமடங்கு போதைப்பொருளை
உட்கொள்ளவேண்டியிருக்கும். இதனை மனவியல் நிபுணர்கள் 'சார்ந்திருத்தல்'
என்கிறார்கள். உதாரணமாக, முன்பு ஒருவர் ஒரு கோப்பை மது அருந்தியவுடன்
போதையை அடைந்திருப்பார், ஆனால், சில மாதங்கள் கழித்து, அதே போதையை
அடைவதற்கு அவருக்குக் குறைந்தபட்சம் மூன்று கோப்பை மது
தேவைப்படுகிறது. சார்ந்திருத்தல் அல்லது அதிகமான சகிப்புத்தன்மை என்பது,
ஒருவருடைய பழக்கம் இப்போது அடிமைநிலையாக மாறிவிட்டது என்பதைக்
காட்டும் எச்சரிக்கைச் சின்னங்களில் ஒன்றாகும்.
ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையாகிவிட்டார் என்பதைக் காட்டும் வேறு சில
அடையாளங்கள்:
· அந்தப் பொருள் அவருடைய நேரத்தை, சிந்தனையைப் பெருமளவு
ஆக்கிரமித்துக்கொள்ளும் (நான் அடுத்து எப்போது புகைப்பது/மது அருந்துவது?
அதற்குப்பதிலாக நான் எதைப் புகைக்கலாம்/அருந்தலாம்? நான் மதுவை
எங்கிருந்து பெறுவது? எப்படிப் பெறுவது?)
· அவர் அந்தப் பொருளை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப்
பயன்படுத்தவில்லை என்றால், விலகல் அறிகுறிகள் தோன்றும்: நடுக்கம், எரிச்சல்,
தீவிர ஏக்கம் மற்றும் பிற உளவியல், உணர்வுத் தாக்கங்கள்
· ஒருநாள்முழுக்க அந்தப் பொருள் இல்லாமல் வாழ முயன்றால்,
கட்டுப்பாடில்லாத உணர்வு ஏற்படும், ஆகவே, அவர் அப்படிச் செயவே
விரும்பமாட்டார்
· ஏக்கம்: ஒரு பொருளை உட்கொள்ளவேண்டும் என்று ஏற்படுகிற
வலுவான துடிப்பு
· ஒரு பொருள் தனக்கு உடல்ரீதியிலும் உணர்வுரீதியிலும் துன்பம்
தருகிறது, தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கஷ்டம் விளைவிக்கிறது என்று
தெரிந்தும் அதனைத் தொடர்ந்து பயன்படுத்துதல்
ஒரு பொருளை மிகையாகப் பயன்படுத்துவதற்கும் அடிமையாதலுக்கும் என்ன
வித்தியாசம்?
தினசரிப் பயன்பாட்டில், 'ஒரு பொருளை மிகையாகப் பயன்படுத்துதல்' என்றால்,
ஒருவர் ஒரு பொருளைத் தொடர்ந்து நிறைய பயன்படுத்திவருகிற பாணி ஆகும்.
அவர் அந்தப் பொருளை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தக்கூடும், அல்லது,
பொருந்தாத நேரங்களில், இடங்களில் பயன்படுத்தக்கூடும். ஒரு பொருளை
மிகையாகப் பயன்படுத்துகிற ஒருவர், அதற்கு அடிமையாக இருக்கலாம்,
இல்லாமலும் போகலாம். அந்தப் பொருளை எவ்வளவு பயன்படுத்துவது, எப்போது
நிறுத்துவது என்பதை இவர்களால் தீர்மானிக்க இயலும், அந்தப் பொருள்
இல்லாமல்கூட நெடுங்காலம் இயல்பாக வாழ்வார்கள். அதேசமயம், இந்தப்
பொருளை இவர்கள் பயன்படுத்துவதால் இவர்களுடைய உடலில், உறவுகளில்,
சமூகத்தில் பிரச்னைகள் ஏற்படவில்லை என்று அர்த்தமாகாது.
மருத்துவரீதியில் சொல்வதென்றால், ஒருவர் ஒரு பொருளுக்கு
அடிமையாகிவிட்டார் என்றால், அவர் அதைச் சார்ந்து வாழ்கிறார் என்றூ பொருள்.
அடிமையாதல் என்பது நீண்டநாள் நீடிக்கக்கூடிய, திரும்ப வரக்கூடிய ஒரு
குறைபாடு. அந்தப் பொருளைப் பயன்படுத்துவதால் அவர்களுடைய மூளையில்
மாற்றங்கள் ஏற்படுகின்றன, அதனால், அவர்களால் அந்தப் பொருளை விட
இயலுவதில்லை.
மிகையாகப் பயன்படுத்துதல், அடிமையாதல் என்ற இரண்டுமே ஒருவருக்குத்
துன்பத்தைத் தரக்கூடும்.
அடிமையாதல் என்பது ஒரு மனநோயாகக் கருதப்படுவது ஏன்?
ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையாகும்போது, அவர் அதைத் திரும்பத்திரும்பப்
பயன்படுத்துகிறார், அதனால் அவருடைய மூளை இயங்கும்விதத்தில் மாற்றங்கள்
ஏற்பட்டுவிடுகின்றன. ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையாக இருக்கிறார்
என்றால், இந்த விஷயத்தில் தான் மாறவேண்டும் என்பதுகூட அவர்களுக்குத்
தெரிந்திருக்காது; அந்தப் பொருள்தான் மிக முக்கியம் என்று அவர்கள்
எண்ணுவார்கள். அவர்களால் தங்களுடைய அனிச்சைசெயல்களைக்
கட்டுப்படுத்திக்கொள்ள இயலாது, சரியாகத் தீர்மானமெடுக்க இயலாது, ஆகவே,
அவர்கள் தொடர்ந்து அந்தப் பொருளை விரும்புவார்கள், அவர்களே
விரும்பினாலும் அதைவிட்டு அவர்களால் விலகியிருக்க இயலாது. எப்படியாவது
போதைமருந்தை வாங்கிவிடவேண்டும், மது அருந்திவிடவேண்டும், சிகரெட்
புகைத்துவிடவேண்டும் என்பதுபோல்தான் அவர்களுடைய சிந்தனைகள் இருக்கும்,
அதையே முக்கியமாகக் கருதுவார்கள், வேலை, குடும்பம், நண்பர்கள் அல்லது
பிற கடமைகளில் அவர்களால் கவனம் செலுத்த இயலாது. இதனால், அவர்களது
தினசரிச் செயல்பாடுகள், உறவுகள் பாதிக்கப்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு அடிமையாகியுள்ள ஒருவருடைய மூளையில்
எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று பார்த்தால், மனச்சோர்வு, தீவிர
பதற்றம் மற்றும் ஸ்கிஜோஃப்ரெனியா ஆகிய மனநலக் குறைபாடுகளுடன்
தொடர்புடைய மூளைப்பகுதிகள்தான் பாதிக்கப்படுகின்றன. இதனால், ஒரு
குறிப்பிட்ட பொருளுக்கு அடிமையாகியுள்ள ஒருவருக்கு இந்தத் தீவிர மனநலக்
குறைபாடுகள் வருகிற வாய்ப்பு அதிகம்.
ஒருவர் தானே விரும்பி ஒரு பொருளுக்கு அடிமையாகிறாரா?
ஒருவர் ஒரு பொருளுக்கு அடிமையாகிறார் என்றால், அவர் முதன்முறையாக
எதற்காக அந்தப் பொருளைப் பயன்படுத்தினார் என்று யோசிக்கவேண்டும்,
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்: குறுகுறுப்பு, சக நண்பர்களின் அழுத்தம்,
எல்லாரோடும் பொருந்திப்போகவேண்டும் என்ற எண்ணம், வீட்டில் நடப்பவற்றைக்
கவனித்து, அதை அப்படியே திரும்பச்செய்தல், பிறருக்கு எதிராகப் புரட்சிசெய்யும்
ஆர்வம் போன்றவை. ஆனால், இப்படி ஒரு பொருளைப் பயன்படுத்தத்
தொடங்குகிறவர்களில் எல்லாரும் அதற்கு அடிமையாவதில்லை, சிலர்தான்
அடிமையாகிறார்கள், மற்ற பலர் எப்போதாவது ஒரு சிகரெட், ஒன்றிரண்டு
கோப்பை மது என்று இயல்பாக இருந்துவிடுகிறார்கள். இது ஏன்?
இதுபற்றி மருத்துவர்களிடம் கேட்டால், 'போதைப்பொருள்களுக்கு அடிமையாகும்
அபாயம் சிலருக்கு அதிகமாக உள்ளது' என்கிறார்கள். 'மிகவும் அனிச்சையாகச்
செயல்படுகிறவர்கள், எளிதில் கோபப்படுகிறவர்கள், பிறரை எதிர்த்து அல்லது
புரட்சிகரமாகச் செயல்படுகிறவர்கள், அல்லது, இதற்கு நேரெதிராக, மிகவும்
பதற்றத்தோடு, குறைந்த சுய மதிப்போடு உள்ளவர்களெல்லாம்
போதைப்பொருள்களுக்கு அடிமையாக வாய்ப்புகள் அதிகம்' என்கிறார் NIMHANS
அடிமையாதல் மருத்துவ மையத்தில் மனநல நிபுணராகப் பணியாற்றும் டாக்டர்
பிரதிமா மூர்த்தி. இன்னும் சிலருக்கு, மரபுக்காரணங்களும் இருக்கலாம். அதாவது,
இவர்களுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் போதைப்பொருள்களுக்கு
அடிமையாகியிருப்பார், அப்போது இவர்களும் அவ்வாறு அடிமையாகக்கூடிய
அபாயம் அதிகம்.
இந்த விஷயத்தில் சுற்றுச்சூழலும் ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகிறது. அதை
வைத்து ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாவாரா மாட்டாரா என்று
சொல்லலாம். ஒருவருக்குப் போதைப்பொருள்கள் எளிதில் கிடைக்கின்றனவா,
அவற்றை அவரால் எளிதில் அணுக இயலுகிறதா, அவற்றை வாங்கும் அளவுக்கு
அவரிடம் பணம் இருக்கிறதா, அவர் வாழும் சமூகம் அந்தப்
போதைப்பொருளைப்பற்றி என்ன பேசுகிறது... இவற்றைப் பொறுத்துதான் ஒருவர்
அந்தப் பொருளுக்கு அடிமையாவாரா மாட்டாரா என்பது தீர்மானிக்கப்படுகிறது.
ஒருவர் குறுகுறுப்பினால், சக நண்பர்களின் அழுத்தத்தால், சுற்றுச்சூழல்
தாக்கங்களால் ஒரு குறிப்பிட்ட பொருளைப் பயன்படுத்தத் தொடங்கலாம், தான்
அதற்கு அடிமையாகும் ஆபத்து அதிகம் என்பதுகூட அவருக்கு அப்போது
தெரிந்திருக்காது. இந்த ஆபத்தில் உள்ளவர்களுக்கு, 'பாதுகாப்பான' எல்லை எது
என்பதும் தெரியாது. குடித்தது போதும் என்று சொல்கிற வலுவான பாதுகாப்பு
அமைப்புகள் அவர்களுக்கு இருக்காது, அதிகம் குடித்துவிட்டாய் என்று அவர்களை
எச்சரிக்கை செய்கிற உளறுதல், தள்ளாடுதல் போன்ற அறிகுறிகளும் இருக்காது.
இதனால், அவர்கள் அந்தப் பொருளை மேலும் மேலும் பயன்படுத்துவார்கள்,
தங்களுக்குத் தாங்களே தீங்கு விளைவித்துக்கொள்வார்கள்.
போதைப்பழக்கத்திலிருந்து விடுபடுதல்: மருந்துகள், தெரபிகளின் பலன்

போதைப்பழக்கம் உள்ளவர்கள் 'வேண்டாம்' என்று சொன்னால் போதும்,


அதிலிருந்து விடுபட்டுவிடலாம் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில்,
போதைப்பழக்கத்துக்கு அடிமையான ஒருவருக்கு நிறைய சிகிச்சையும் ஆதரவும்
தேவைப்படும் .
போதைப்பழக்கத்துக்கு அடிமையாதல் என்றால் என்ன?
ஒருவர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிறார் அல்லது போதைப்பொருள்களை
மிகையாகப் பயன்படுத்துகிறார் என்றால், அவர் ஒரு குறிப்பிட்ட
போதைப்பொருளைத் தொடர்ந்து ஆரோக்கியமற்றமுறையில் பயன்படுத்துகிறார்,
இயல்பாக இயங்குவதற்கு அதைச் சார்ந்திருக்கிறார் என்று பொருள். ஒருவர் ஒரு
போதைப்பொருளைத் தொடர்ந்து பயன்படுத்தினால், அவர் எப்போதும் அதற்காக
ஏங்குகிறார், அது இல்லாமல் தன்னால் வாழ இயலாது என எண்ணுகிறார்.
ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகும்போது, அவருக்குத் தீவிர உணர்வு,
உடல் மற்றும் உறவுப் பிரச்னைகள் வரக்கூடும். இந்தப் பழக்கம் கொண்டவர்கள்
விரும்பினாலும், அதனை எளிதில் உதறிவிட இயலாது.
போதைமருந்துகள் என்பவை வலுவான, மனோநிலையை மாற்றக்கூடிய
பொருள்கள் என்றுதான் நம்மில் பலர் எண்ணுகிறோம். மனித மூளை
இயங்கும்விதத்தில் மாற்றத்தை உண்டாக்கக்கூடிய எந்தவொரு
வேதிப்பொருளையும் போதைப்பொருள் என அழைக்கலாம். போதைப்பொருள்கள்
அவற்றை உட்கொண்டவரின் மூளைக்குச் செல்கின்றன, அங்கே அவருடைய
மூளை இயற்கையாக உற்பத்தி செய்யக்கூடிய வேதிப்பொருள்களைப்போல்
நடந்துகொள்கின்றன, அல்லது, அவற்றை மங்கச்செய்கின்றன. இந்த
வரையறையின்படி, காஃபி, மது, புகையிலை, மருத்துவர் எழுதித்தரும் மருந்துகள்,
பொழுதுபோக்குக்காக உட்கொள்ளப்படும் பொருள்கள் எல்லாமே
போதைப்பொருள்கள்தான்.
ஒருவர் எப்படி போதைப்பொருள்களுக்கு அடிமையாகிறார்?
இந்தப் பழக்கமும் மதுப்பழக்கத்தைப்போலவேதான் வருகிறது. ஆர்வத்தால், கூட
இருப்பவர்கள் தரும் அழுத்தத்தால், கல்வி/ விளையாட்டில் சிறந்துவிளங்கும்
ஆசையால், அல்லது, அழுத்தத்தை/ பிரச்னைகளை மறக்கவிரும்புவதால்தான்
ஒருவர் போதைப்பொருள்களை உட்கொள்ளத்தொடங்குகிறார். அந்தப்
போதைப்பொருள்கள் அவருடைய மூளையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன,
அவர் படிப்படியாக அந்த போதைப்பொருளுக்காக ஏங்கத்தொடங்குகிறார், தான்
எவ்வளவு போதைப்பொருளை உட்கொள்கிறோம் என்றே அவருக்குத்
தெரிவதில்லை. அவருடைய மன உறுதி குலைந்துவிடுகிறது, அவரே
விரும்பினாலும், அந்தப் போதைப்பொருளைப் பயன்படுத்தாமல் அவரால் நிறுத்த
இயலுவதில்லை.
போதைப்பொருள்களுக்கு அடிமையான ஒருவர் பலவீனமானவர், மனவுறுதி
இல்லாதவர் என்று பலர் எண்ணுகிறார்கள். அவர்கள் தங்கள் பழக்கத்தை
மாற்றிக்கொள்ளாமலிருக்கக் காரணம், அவர்களுடைய சோம்பேறித்தனம்தான்
என்று பொதுவாக நம்பப்படுகிறது. அவர்கள் 'எனக்குப் போதைப்பொருள்
வேண்டாம்' என்று சொன்னால், இந்தப் பழக்கத்தை உடனே நிறுத்திவிடலாம்
என்று பலரும் நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால், ஒருவர் ஒரு
பொருளுக்கு அடிமையாவது அவருடைய சொந்த விருப்பத்தால்மட்டுமல்ல,
மரபணுக்கள், சுற்றுச்சூழலும் இதனைத் தீர்மானிக்கிறது. 'வேண்டாம்' என்று
சொல்வது, போதைப்பழக்கத்தை நிறுத்துவதில் ஒரு பகுதிதான், அதற்குமேல்
அவருக்குச் சிகிச்சையும் நிறைய ஆதரவும் தரப்படவேண்டும், அப்போதுதான்
அவரால் அந்தப் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட இயலும்.
ஒருவர் போதைப்பொருள்களைப் பலவிதங்களில் உட்கொள்ளலாம்: புகைக்கலாம்,
மூக்கில் உள்ளிழுக்கலாம், ஊசியாகப் போட்டுக்கொள்ளலாம், மெல்லலாம்,
குடிக்கலாம். இந்தியாவில் போதைப்பழக்கமுள்ள பலர் இந்த வழிமுறைகளைதான்
அதிகம் பயன்படுத்துகிறார்கள்: மரிஜுவானா, உள்ளிழுக்கும் பொருள்கள்,
புகையிலை, கடையில் வாங்கும் மருந்துகள் போன்றவை.
போதைப்பொருள்கள் எப்படி மனித மூளையைப் பாதிக்கின்றன?
மனிதமூளையில் போதைப்பொருள்கள் உண்டாக்கும் தாக்கங்களில் மிகவும் நன்கு
தெரியக்கூடியது, டோபமைன் என்ற நரம்புக்கடத்தியை வெளிவிடுவதுதான்.
ஒருவர் போதைப்பொருளை உட்கொள்ளும்போது, மூளையின் செய்தியனுப்பும்
சேவையின் தாக்கத்தை அது பிரதியெடுக்கிறது. இதனால், டோபமைன்
வெளிவிடப்படுகிறது, இதனை மூளை மகிழ்ச்சியுணர்வாகக் கருதுகிறது. மூளைக்கு
இந்த உணர்வு இன்னும் இன்னும் தேவை. ஆகவே, அது அந்த போதைப்பொருளை
விரும்பி அதற்காக ஏங்கத்தொடங்குகிறது. ஒருவர் ஒரு குறிப்பிட்ட
போதைப்பொருளை அதிகம் பயன்படுத்தப் பயன்படுத்த, மூளைக்கு அதன்
நுண்ணுணர்வு குறைகிறது. இதனால், ஆரம்பத்தில் அந்தப் போதைப்பொருளால்
மூளைக்கு ஏற்பட்ட அதே தாக்கத்தைப் பெறுவதற்கு, இப்போது அவர் அதிக
போதைப்பொருளைப் பயன்படுத்தவேண்டியிருக்கும். உதாரணமாக, ஓர் ஊசியில்
வந்த போதை இப்போது இரண்டு ஊசிகளில்தான் வரும். அதாவது,
போதைப்பொருள்கள் ஒருவருடைய மூளையைக் குழப்பிவிடுகின்றன, அந்தப்
போதைப்பொருளால் அவருக்கு எந்தப் பலனும் இல்லை என்றாலும், அது
இன்னும் தேவை என்று அவரை நினைக்கச்செய்துவிடுகின்றன.
போதைப்பொருள்களை நெடுநாள் தொடர்ந்து பயன்படுத்தினால், மூளையின்
அறிவாற்றல் செயல்பாடுகளும் சேதமடையக்கூடும். நீண்டநாளாக
போதைமருந்துகளைப் பயன்படுத்துகிறவர்களுடைய மூளையின் சில குறிப்பிட்ட
பாகங்கள் பாதிப்புக்குள்ளாவதை ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தப் பகுதிகளில்தான்
கற்றல், தீர்ப்பு வழங்குதல், தீர்மானமெடுத்தல் மற்றும் நடத்தைக் கட்டுப்பாடு
ஆகிய முக்கியப் பணிகள் நடைபெறூகின்றன. அத்துடன், அவருக்கு மனச்சோர்வு,
பிற மனநலக் குறைபாடுகள் வருகிற வாய்ப்பும் அதிகமாகிறது.
போதைமருந்துப் பழக்கத்தால் வரக்கூடிய பிற பிரச்னைகள்:
· உடல் நடுங்குதல்
· பசியின்மை, தூக்கமின்மை
· வலிப்பு
· எடை ஏற்ற இறக்கம்
· சமூகத்தில் யாருடனும் பழகாதிருத்தல்
· மிகைச்செயல்பாடு
· நரம்புத்தளர்ச்சி அல்லது எழுச்சி
· பதற்றம் மற்றும் சார்ந்திருத்தல்
ஒருவர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதை எப்படிக் கண்டறிவது?
ஒருவருடைய போதைப்பழக்கம் அடிமைநிலைக்குச் சென்றுவிட்டதைக்
கண்டறியச் சில வழிகள் உண்டு:
· தான் உட்கொள்ள விரும்பிய அளவைவிட அதிக அளவில்
போதைப்பொருள்களை உட்கொள்வார்
· முதன்முறை போதைப்பொருளை உட்கொள்வதற்குமுன்னால், உடல்
நடுங்குதல், ஆடுதல் அல்லது எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும்
· போதைப்பொருள்கள் இல்லாத ஒருநாளை அவரால் கற்பனைகூடச்
செய்ய இயலாது
· போதைப்பொருளை உட்கொள்வதற்கு ஏதாவது ஒரு சாக்குப்போக்கைக்
கண்டறிந்துகொண்டே இருப்பார்
· போதைப்பொருளை உட்கொண்டபிறகுதான் எந்தவொரு வேலையையும்
நன்றாகச் செய்ய இயலுகிறது என்று எண்ணுவார்
· அவரால் தனது குடும்பத்தினர், நண்பர்களைக் கவனிக்க இயலாது,
வீட்டில், அலுவலகத்தில் தன் கடமைகளைச் சரியாகச் செய்ய இயலாமல்
சிரமப்படுவார்
· தன்னுடைய போதைப்பழக்கத்தைப் பிறரிடமிருந்து மறைக்கவேண்டும்
என்று எண்ணுவார்; தனக்கு அந்தப் பழக்கமே இல்லை என்று சொல்வார், அல்லது,
தான் வழக்கமாக உட்கொள்ளும் அளவைக் குறைத்துச்சொல்வார்
· போதைப்பொருள் பழக்கத்தை எண்ணிக் குற்றவுணர்ச்சிகொள்வார்,
அல்லது, வெட்கப்படுவார்
· என்றைக்காவது இந்தப் பழக்கத்தை விட்டுவிடவேண்டும் என்று
எண்ணுவார், ஆனால், அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்
மேற்கண்ட வாக்கியங்களையெல்லாம் ஒருவர் அனுபவித்திருந்தால், அவருக்கு
உதவி தேவை.
ஒருவர் போதைப்பொருள்களுக்கு அடிமையாகியிருக்கிறாரா என்று காண்பதற்கு,
CAGE பரிசோதனையின் மாறுபட்ட ஒரு வடிவத்தைப் பயன்படுத்தலாம்:
· உங்களுடைய குடி அல்லது போதைப்பொருள் பயன்பாட்டைக்
குறைக்கவேண்டும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா?
· உங்களுடைய குடி அல்லது போதைப்பொருள் பழக்கத்தை யாராவது
விமர்சித்தால் அவர்கள்மீது எரிச்சல் வந்ததுண்டா?
· உங்களுடைய குடி அல்லது போதைப்பொருள் பழக்கத்தை எண்ணி
எப்போதாவது மோசமாக அல்லது குற்றவுணர்வாக எண்ணியதுண்டா?
· என்றைக்காவது, காலை எழுந்தவுடன் நரம்புகள் நிலையாக இல்லை
என்று உணர்ந்ததுண்டா? முந்தைய போதைப்பொருள் பயன்பாட்டின்
தாக்கத்திலிருந்து விடுபட இயலாமல் தவித்ததுண்டா? அதற்காக, காலையில்
முதல்வேலையாகக் குடித்ததுண்டா, அல்லது போதைப்பொருளை
உட்கொண்டதுண்டா?
இந்தக் கேள்விகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவற்றுக்கு ஒருவர் 'ஆம்'
என்று பதில்சொல்லியிருந்தால், அவர் ஒரு போதைப்பழக்கத்துக்கு
அடிமையாகியிருக்கக்கூடும், அவருக்கு உதவி தேவைப்படலாம்.
போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுடைய உடலில் மற்றும்
பழக்கவழக்கங்களில் காணப்படும் அறிகுறிகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.
தங்கள் அன்புக்குரிய யாருக்காவது இந்தப் பிரச்னை இருக்கிறது என்று ஒருவர்
கருதினால், இந்தப் பட்டியலைப் பார்வையிடலாம்.
ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருத்தலைக் கண்டறிதல்
ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருக்கிறாரா, இல்லையா என்பதைக்
கண்டறியப் பல மதிப்பீடுகள் உள்ளன. மருத்துவ நிபுணர்கள் இவற்றைப்
பயன்படுத்திப் பிரச்னையைக் கண்டறிகிறார்கள். யாருக்காவது இந்தப் பிரச்னை
இருந்தால், அல்லது, தங்கள் அன்புக்குரிய ஒருவருக்கு இந்தப் பிரச்னை
இருப்பதை அவர்கள் கவனித்தால், ஒரு மனநல நிபுணர் அல்லது ஆலோசகரைச்
சந்திக்கலாம். அவர் பிரச்னையை மதிப்பிட்டு, அடுத்து என்ன செய்யவேண்டும்,
எந்த நிபுணரைச் சந்திக்கவேண்டும் என்று தெரிவிப்பார். இந்தச் சிறப்பு நிபுணர் சில
குறிப்பிட்ட மதிப்பீடுகளைப் பயன்படுத்திப் பிரச்னையின் தீவிரத்தைக் கண்டறிவார்,
அதேநேரம், பாதிக்கப்பட்டவருக்கு இருக்கக்கூடிய மற்ற சிக்கல்களைக்
கண்டறிவதற்காக அவரை மருத்துவரீதியில் முழுமையாகப் பரிசோதிப்பார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கு நான்கு
முக்கியமான இலக்குகள் உண்டு:
· போதைப்பொருளின் நச்சுத்தன்மையை அவரது உடலிலிருந்து நீக்குதல்
· போதைப்பொருள் வேண்டும் என்று அவர் ஏங்குவதையும்,
போதைப்பொருள் இல்லாததால் அவருக்கு ஏற்படக்கூடிய விலகல்
அறிகுறிகளையும் கையாள உதவுதல்
· இந்தப் பழக்கத்தால் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய உளவியல் மற்றும்
உணர்வுப் பிரச்னைகளைக் கையாள உதவுதல்
· இந்தப் போதைப்பொருள் இல்லாத ஒரு வாழ்க்கைமுறையை
அமைத்துக்கொள்ள அவருக்கு உதவுதல்
போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவருக்கு வழங்கப்படும் சிகிச்சையானது,
மருந்துகள், தனிப்பட்ட தெரபி மற்றும் குழு தெரபி ஆகியவற்றின் தொகுப்பாக
அமைகிறது. பாதிக்கப்பட்டவருடைய மருத்துவ வரலாறு, அவர் பயன்படுத்தும்
மருந்துகளின் வகை, அவருக்கு இருக்கக்கூடிய பிற சிக்கல்களைக்
கருத்தில்கொண்டு, சிகிச்சைத் திட்டத்தின் ஒவ்வோர் அம்சமும் அவருடைய
தேவைகளுக்குப் பொருந்தும்வகையில் உருவாக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையின்
நோக்கம், அவர் அந்தப் போதைப்பொருளிலிருந்து விலகி வாழவேண்டும், மீண்டும்
அந்தப் பழக்கத்துக்குத் திரும்பிவிடக்கூடாது, இதற்குத் தேவையான சமாளிக்கும்
திறன்களை அவருக்குக் கற்றுத்தரவேண்டும். பெரும்பாலானவர்கள் சிறிதுகாலம்
மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறவேண்டியிருக்கும். அதன்பிறகு,
புனர்வாழ்வளிக்கும் செயல்பாடுகளின்மூலம் போதைப்பழக்கம் இல்லாத ஒரு
வாழ்க்கையை அவர்கள் பழகிக்கொள்வார்கள்.
அவர்கள் மீண்டும் அதே பழக்கத்துக்குத் திரும்பிவிடாதபடி தடுப்பது அவசியம்.
இது சிகிச்சைச் செயல்முறையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகத் திகழ்கிறது.
போதைப்பழக்கம் உள்ள ஒருவர், சிகிச்சைக்கு உட்படுகிறார் என்று
வைத்துக்கொள்வோம், சிகிச்சைக்குப்பிறகு, அவர் ஒரு குறிப்பிட்ட காலம்
போதைப்பொருள்கள் இல்லாமல் வாழ்கிறார், அதன்பிறகு அவர் மறுபடி
போதைப்பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிடக்கூடிய வாய்ப்பு உள்ளது.
ஆகவே, ஒரு சிறந்த சிகிச்சையானது, இதைப்பற்றி முன்கூட்டியே
யோசிக்கவேண்டும், அவர் இந்தப் பழக்கத்துக்குத் திரும்பாதபடி தடுக்கவேண்டும்.
குறிப்பு: போதைப்பழக்கம் உள்ளவர்கள் 'வேண்டாம்' என்று சொன்னால் போதும்,
அதிலிருந்து விடுபட்டுவிடலாம் என்று பலர் நம்புகிறார்கள். இது வெறுமனே
மனவுறுதி சம்பந்தப்பட்ட விஷயமில்லை. ஒருவர் போதைப்பொருளுக்கு
அடிமையாகும்போது, அந்த போதைப்பொருள் அவருடைய மூளையின்
தீர்மானமெடுக்கும் பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது, அவரால் அந்தப்
போதைப்பொருளைத் துறந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்ற நிலை
உண்டாகிவிடுகிறது. சும்மா பேச்சுக்கு அவர்கள் 'வேண்டாம்' என்று சொல்லலாம்.
ஆனால், நிறுத்தியபிறகு அதை எண்ணி ஏற்படும் ஏக்கங்களும், விலகல்
அறிகுறிகளும் தாங்கமுடியாதபடி இருக்கும், அதனால் அவர்கள் மீண்டும் அந்தப்
போதைப்பொருளைப் பயன்படுத்தத் தொடங்கிவிடக்கூடும். அவர் அந்தப்
பழக்கத்தை நிறுத்தவேண்டுமானால், அவருக்கு நிறைய ஆதரவு தேவை.
அதனால்தான், போதைப்பொருளுக்கு அடிமையானோருக்கு வழங்கப்படும் சிறந்த
சிகிச்சைகள் மருந்துகளையும் தெரபியையும் கலந்து தருகின்றன.
மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுதல்

ஒருவர் மதுவைச் சார்ந்து வாழத்தொடங்குவது ஏன்? அப்படி மதுவுக்கு


அடிமையான ஒருவர், ஒரு புதிய, சுத்தமான வாழ்க்கைமுறையை
உருவாக்கிக்கொள்ளவேண்டுமென்றால், அவர் என்ன செய்யவேண்டும்?
'மதுவால் தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ளுதல்' என்றால் என்ன?
மதுப்பழக்கம் கொண்ட ஒருவர், அதனால் பல எதிர்மறையான விளைவுகளைச்
சந்திக்கிறார். உதாரணமாக, உடல்சார்ந்த பிரச்னைகள், பிறருடன் பழகுவதில்
பிரச்னைகள், சமூகப் பிரச்னைகள் போன்றவை. இப்படிப் பல பிரச்னைகள்
வந்தபோதும், அவர் தொடர்ந்து மது அருந்திக்கொண்டிருக்கிறார் என்றால், அந்த
நிலையை, 'மதுவால் தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ளுதல்' என்கிறோம். தான்
எவ்வளவு குடிக்கிறோம் என்பதை ஒருவரால் கட்டுப்படுத்த இயலவில்லை
என்றால், அதாவது, குடிக்க ஆரம்பித்தபிறகு அவரால் நிறுத்த இயலவில்லை
என்றால், அவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
இந்தியாவில் குறைந்தபட்சம் 30% ஆண்கள், 5% பெண்கள் தொடர்ந்து மது
அருந்துவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பெரும்பாலான இளைஞர்கள்
ஆர்வத்தினால் அல்லது, சக நண்பர்களின் வற்புறுத்தலால்தான் மது அருந்தத்
தொடங்குகிறார்கள், பிறகு அது ஒரு பழக்கமாகவே மாறிவிடுகிறது. 1980 களில்,
இந்தியாவில் ஒருவர் முதன்முதலாக மது அருந்திய சராசரி வயது, 28. இப்போது,
இந்த எண்ணிக்கை 17 ஆகக் குறைந்துவிட்டது. அதாவது, சராசரியாகப் பதினேழு
வயதிலேயே ஒருவர் முதன்முறையாக மது அருந்திவிடுகிறார்.1
பியர், ஒயின், மற்ற மது ரகங்கள் பெரும்பாலும் நகரங்களில் பிரபலமாக உள்ளன,
கிராமப்புறங்களில் சாராயம் அதிகம் அருந்தப்படுகிறது. இந்த பானங்கள்
அனைத்திலும் எத்தில் ஆல்கஹால் உள்ளது. இது ஒருவருடைய மனோநிலையை
மாற்றும், அவரது உடலைப் பலவிதமாகப் பாதிக்கும். எல்லா மது வகைகளிலும்
எத்தில் ஆல்கஹால் உண்டு, அதன் சதவிகிதம்தான் மாறும்.
ஒருவர் மது அருந்தும்போது, அது அவரது ரத்தத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது,
பின்னர் உடல்முழுவதும் பரவுகிறது. ஒருவர் ஒரே ஒருமுறை மது அருந்தினால்
போதும், அவரது உடல் சில மணிநேரங்களுக்குப் பாதிக்கப்படுகிறது. அப்போது,
மது அருந்தியவருடைய மனம் இறுக்கமின்றித் தளர்வடைகிறது, அவர்
மகிழ்ச்சியாக உணர்கிறார். படிப்படியாக, மதுவின் தாக்கம் குறைகிறது. மது
அருந்தியவர் குழப்பமாகவும் மயக்கமாகவும் உணர்கிறார். மது அருந்தியதும்,
ஒருவருடைய மனத்தடைகள் விலகுகின்றன, அவரது அசைவுகளில் ஒழுங்கு
குறைகிறது, அவரது பாலியல் விருப்பம் அதிகரிக்கிறது, ஆனால், பாலியல்
செயல்திறன் குறைந்துவிடுகிறது.
ஒருவர் மதுவுக்கு அடிமையாகிறார் என்றால், அவரது மூளை நீண்டநாள்
பாதிப்புக்கு உள்ளாகிறது, அது திரும்பத்திரும்பப் பலமுறை ஏற்படக்கூடியது,
இதனால் அவருக்கு உளவியல்ரீதியிலும் சமூகரீதியிலும் பல பாதிப்புகள்
ஏற்படக்கூடும்.
'போதை ஏறுதல்' என்றால் என்ன?
மனித உடலால் ஒரு மணிநேரத்துக்கு ஒரு பானத்தை ஜீரணிக்க இயலும்.
ஒருவேளை, யாராவது ஒரு மணி நேரத்தில் ஒரு பானத்துக்குமேல்
உட்கொண்டால், அவரது உடலால் அதனை ஜீரணிக்க இயலாது, அவர்
உட்கொண்ட மது அவரது உடல்முழுவதும் சுற்றிவருகிறது. ஆகவே, அவர்
சோம்பேறித்தனமாக உணர்கிறார், ஒழுங்கற்றமுறையில் நடந்துகொளிறார்,
அவரது உடலையே அவரால் கட்டுப்படுத்த இயலுவதில்லை.
மது எப்படி மனித மூளையைப் பாதிக்கிறது?
மனித மூளையில் பேச்சு, செயல்பாடுகள், தீர்மானமெடுத்தல் ஆகியவற்றை
நிகழ்த்துகிற பகுதிகள் மதுவால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர்
எப்போதாவதுதான் குடிக்கிறார் என்றால், அவருடைய மூளை மதுவின்
தாக்கத்திலிருந்து விடுபட்டு இயல்பாக இயங்கத்தொடங்குகிறது. ஆனால், அவர்
மதுவைச்சார்ந்து வாழ்கிறார், அடிக்கடி குடித்துக்கொண்டே இருக்கிறார் என்றால்,
மூளையால் அந்தத் தாக்கத்திலிருந்து விடுபட இயலுவதில்லை. சிறிதுநேரத்தில்
அவரது உடல் தெளிவாகிவிடலாம், ஆனால், மூளை இன்னும் பாதிப்பிலேயே
இருக்கிறது.
மதுவின் நீண்டநாள் பாதிப்புகள் சில:
ஞாபகசக்தி இழப்பு
மனச்சோர்வு
எரிச்சல் அல்லது மனநிலை மாற்றங்கள்
உயர் ரத்த அழுத்தம்
கருவுக்குப் பாதிப்பு
புற்றுநோய் அபாயம் அதிகரித்தல்
டிமென்சியா அபாயம் அதிகரித்தல்
கல்லீரல் பாதிப்பு
மூளைத் திசு சுருங்குதல்
இதயத் தசைகள் பலவீனமடைதல், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, பக்கவாதம்
செரிமானப் பிரச்னைகள்
பாலியல் செயலின்மை
இளம்வயதிலேயே முதியவர்போன்ற தோற்றம், செயல்பாடுகள்
புத்திசாலித்தனம் குறைதல்
உயிரியல் மாற்றங்கள் ஒருபுறமிருக்க, மது அருந்தும் ஒருவர் பிறருடன்
பழகுவதும் மாறிவிடுகிறது, அவரது உறவுகள் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில்
பெரும்பாலான குடும்ப வன்முறை நிகழ்வுகளும் சாலை விபத்துகளும் மதுவுடன்
தொடர்புடையவை.
மதுவுக்கு அடிமையாதல்: சில உண்மைகள்
இரண்டு பேர் மது அருந்துகிறார்கள் என்றால், அவர்களில் ஒருவர் தீவிர
மதுப்பழக்கத்துக்கு ஆளாகும் வாய்ப்புகள் உள்ளன என்கிறது உலகச் சுகாதார
அமைப்பு (WHO).
மது அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, மது அருந்துகிறவர்களுக்குக்
குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்னைகள் வருகிற வாய்ப்புகள் மூன்று மடங்கு
அதிகம்.
இந்தியாவில் உடல்நலம் கெட்டுப்போய் மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்படுகிறவர்களில் ஐந்தில் ஒருவர் மதுப்பழக்கத்தால்தான் அந்த
நிலைக்கு ஆளாகியுள்ளார்.
காயம் காரணமாக மருத்துவமனைக்கு வருகிறவர்களைக் கவனித்தால்,
அவர்களில் மூன்றில் இரண்டு பேருக்குக் காயம் ஏற்பட்ட காரணம் மதுவாகவே
உள்ளது, அதேபோல், மூளை அதிர்ச்சிக் காயத்தால் மருத்துவமனைக்கு
வருகிறவர்களில் ஐந்தில் ஒருவர் மதுப் பிரச்னையாலேயே அந்த நிலைக்கு
ஆளாகியுள்ளார்கள்.
மது அருந்துவோர் வன்முறையில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம், குறிப்பாக, அவர்கள்
தங்களுடைய துணைவர்களிடம் வன்முறையாக நடந்துகொள்ளக்கூடும். இங்கே
வன்முறை என்பது, உடல்சார்ந்த, பாலியல்சார்ந்த, உணர்வுசார்ந்த,
பொருளாதாரம்சார்ந்த வன்முறையாக இருக்கலாம்.
மது அருந்துவோர் தற்கொலை செய்துகொள்கிற வாய்ப்பு அதிகம், அவர்கள்
ஆபத்தான பாலியல் பழக்கங்களில் ஈடுபடுகிற வாய்ப்பு அதிகம், அவர்களுக்கு HIV
நோய்த்தொற்று, TB, உணவுக்குழாய்ப் புற்றுநோய், கல்லீரல் நோய் மற்றும்
சிறுகுடல் புண் ஆகியவை வருகிற வாய்ப்பு அதிகம்.
கண்மண் தெரியாமல் குடித்தல் என்றால் என்ன?
தொடர்ந்து நீண்டநாள் மது அருந்தினால்தான் நலப்பிரச்னைகள் வரும் என்று
பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால், ஒருவர் ஒரே ஒருநாள் கண்மண்
தெரியாமல் குடித்தால்கூட, அவருக்கு ஞாபகசக்தி இழப்பு ஏற்படக்கூடும், அவர்
உடலில் நச்சு சேர்ந்து, மதுவே அவருக்கு விஷமாகிவிடலாம், மரணம்கூட
ஏற்படலாம்.
ஆண்கள் ஒரே நேரத்தில் (இரண்டு மணி நேரத்துக்குள்) ஐந்துமுறை மது
அருந்தினால் (அல்லது, ஐந்து சிறு கோப்பைகளில் ஒயின் அருந்தினால்) அதனைக்
'கண்மண் தெரியாமல் குடித்தல்' என்று அழைக்கலாம். பெண்களுக்கும் இதே
வரையறைதான், ஆனால் மதுவின் அளவு ஐந்து அல்ல, நான்கு. கண்மண்
தெரியாமல் குடிப்பவர்கள் பொதுவாக அதிவேகமாகக் குடிப்பார்கள், போதை
விரைவாக ஏறவேண்டும் என்று எண்ணுவார்கள். அவர்கள் மதுவுக்கு
அடிமையானவர்கள் இல்லை, மதுவைச் சார்ந்து வாழ்கிறவர்கள் இல்லை,
அவர்களால் மது இல்லாமல் வாழ இயலும்.
ஒருவர் கண்மண் தெரியாமல் குடிக்கும்போது, அவர் அருந்துகிற ஒவ்வொரு
குவளையும் ஆபத்தை அதிகரிக்கிறது. கண்மண் தெரியாமல் குடிக்கிற ஒருவருக்கு,
தன்னால் எந்த அளவு மதுவைச் சமாளித்துக்கொள்ள இயலும் என்பதே தெரியாது.
அவர் அதைத்தாண்டிக் குடிப்பார், அவரது வாந்தியே அவரை
மூச்சுத்திணறவைத்துவிடும். அதேபோல், கண்மண் தெரியாமல் குடிக்கிற
ஒருவருடைய மூளையால் சரியாகத் தீர்மானமெடுக்க இயலாது. ஆகவே, அவர்
பாதுகாப்பற்ற பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடும், ஆபத்தான செயல்களில்
இறங்கக்கூடும்.
இப்படி ஒருவர் அடிக்கடி கண்மண் தெரியாமல் குடித்துக்கொண்டிருந்தால்,
அவருக்குப் புற்றுநோய், மனச்சோர்வு அல்லது பதற்றம் போன்ற மனநலக்
குறைபாடுகள், நிரந்தர மூளைச் சேதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கலாம்.
மதுவுக்கு அடிமையாதலை அடையாளம் காணுதல்
பெரும்பாலானோர் சமூகச் சூழலுக்கேற்பக் கொஞ்சம் மது அருந்துவார்கள், அதைச்
சார்ந்து வாழமாட்டார்கள். ஆனால், சிலர், மதுவுக்கு அடிமையாகிவிடுவார்கள்,
தாங்கள் அதைச் சார்ந்து வாழ்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாது.
அதுபோன்ற சூழ்நிலைகளில், ஒரு பழக்கம் எப்போது அடிமைத்தனமாக மாறுகிறது
என்பதைக் கண்டறியச் சில அடையாளங்கள் உண்டு. அதை வைத்துச்
சம்பந்தப்பட்டவரோ அவரது அன்புக்குரியவர்களோ இதனைத்
தெரிந்துகொள்ளலாம்.
மதுவுக்கு அடிமையான ஒருவரிடம் மதுச் சகிப்புத்தன்மை காணப்படும். அதாவது,
ஒருவர் முன்பு இரண்டு கோப்பை மது அருந்தியவுடன் அவருக்குப் போதை
ஏறியது என்றால், இப்போது அவருக்கு ஐந்து அல்லது ஆறு கோப்பைகள்
தேவைப்படும், இல்லாவிட்டால் போதை ஏறாது.
மது இல்லாவிட்டால் ஒருவரால் இயல்பாக இருக்க இயலவில்லை என்றால்,
அவர் மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார் என்று ஊகிக்கலாம். ஒருவர் குடிப்பதை
நிறுத்தும்போது, அவருக்குத் தீவிர உணர்வு மற்றும் உடல் பிரச்னைகள்
வரக்கூடும், உதாரணமாக, நடுக்கம், பதற்றம், வியர்வை, குமட்டல் அல்லது
எரிச்சல் போன்றவை வரலாம். இந்த அறிகுறிகள் ஒருவரிடம் காணப்பட்டால்,
அவர் உடனே ஒரு மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.
ஒருவர் மதுவுக்கு அடிமையாகியிருப்பதைக் கண்டறிதல்
ஒருவர் மதுவுக்கு அடிமையாகியிருக்கிறாரா, இல்லையா என்பதைக் கண்டறியப்
பல பரிசோதனைகள் உள்ளன. இவற்றில் சில பரிசோதனைகளை ஒருவர்
தனக்குத்தானே செய்துகொள்ளலாம், ஆனால் மற்ற சில பரிசோதனைகளைப்
பயிற்சி பெற்ற ஒரு மனநல நிபுணர்தான் செய்யவேண்டும்.
ஒருவர் தனக்குத்தானே செய்துகொள்ளக்கூடிய பரிசோதனைகளில் மிக
எளிமையானது, மது அடிமையாதலைக் கண்டறியும் CAGE பரிசோதனை. இதில்
நான்கு கேள்விகள் உள்ளன:
நீங்கள் குடிக்கும் மது அளவைக் குறைக்கவேண்டும் என்று எப்போதாவது
எண்ணியிருக்கிறீர்களா?
உங்களுடைய மதுப்பழக்கத்தை யாராவது விமர்சித்தால் உங்களுக்கு எரிச்சல்
வருகிறதா?
குடிப்பதை எண்ணி எப்போதாவது மோசமாக உணர்ந்துள்ளீர்களா, அல்லது,
குற்றவுணர்ச்சி அடைந்துள்ளீர்களா?
எப்போதாவது, காலை எழுந்தவுடன் மது அருந்தி, அதன்மூலம் உங்களுடைய
நரம்புகளை நிலைப்படுத்திக்கொண்டுள்ளீர்களா? அல்லது, முந்தைய நாள்
குடித்ததன் பின்விளைவைச் சரிசெய்வதற்காக மறுநாள் காலையில்
குடித்துள்ளீர்களா?
இந்தக் கேள்விகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ஒருவர்
“ஆம்” என்று பதில் சொல்லியிருந்தால், அநேகமாக அவர் மதுவுக்கு
அடிமையாகியிருக்கிறார் என்று பொருள். அவருக்கு நிபுணரின் உதவி
தேவைப்படலாம்.
மதுப் பிரச்னைகளைக் கண்டறிவதற்கு, 'மதுவுக்கு அடிமையாதலைக் கண்டறியும்
தணிக்கைப் பரிசோதனை'யையும் பயன்படுத்தலாம்.
சிகிச்சை
ஒருவர் மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார் என்றால், அதிலிருந்து மீள்வதன்
முதல் படி, தனக்குப் பிரச்னை உள்ளதை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும், அதைச்
சரிசெய்யப் பிறரிடம் உதவி பெறவேண்டும். இதற்காக, அவர் ஒரு மருத்துவரை
அணுகலாம், அல்லது, மதுவின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்குத் தனக்கு
உதவக்கூடிய ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரிடம் பேசலாம். மருத்துவர்
முதலில் அவருடன் விரிவாகப் பேசுவார், அவரது நிலையைப்பற்றி நன்கு
தெரிந்துகொள்வார், பிரச்னை எந்த அளவு தீவிரமாக உள்ளது என்று மதிப்பிடுவார்.
மருத்துவர் அவருடைய நண்பர்கள், குடும்பத்தினருடனும் பேசக்கூடும். இந்த
விவரங்களைக்கொண்டு, அவர் ஒரு சரியான சிகிச்சைத் திட்டத்தை
உருவாக்குவார்.
ஆல்கஹாலுக்கு அடிமையான ஒருவர் அதிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை
இரண்டு இலக்குகளைக் கொண்டிருக்கிறது: ஒன்று, பாதிக்கப்பட்டவர் மீண்டும் மது
அருந்தாதபடி செய்வது, இரண்டு, மது அருந்தாமல் வாழவேண்டும் என்கிற
அவருடைய விருப்பத்துக்கேற்ற ஒரு வாழ்க்கைமுறையை உருவாக்கித்தருவது.
பொதுவாக, இந்தச் சிகிச்சை 'நச்சு நீக்கும் செயல்முறை'யில் தொடங்குகிறது.
இதற்குச் சுமார் ஒரு வாரம் அல்லது அதற்குமேல் ஆகலாம். இந்தக்
காலகட்டத்தில், பாதிக்கப்பட்டவர் குடிப்பதை நிறுத்திவிடுகிறார், அதனால்
அவரிடம் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கையாள்வதற்கு அவருக்கு மருந்துகள்
தரப்படுகின்றன. இப்படி அவர் மது அருந்தாமல் வாழ்வதால், முன்பு அவர்
மதுவுக்கு அடிமையாகியிருந்த பாணியிலிருந்து அவரது உடல் மாறுகிறது.
அடுத்து, ஆலோசனை அல்லது தெரபி தொடங்குகிறது. மதுவுக்கு அடிமையாவது
என்றால் என்ன, அதில் என்னென்ன ஆபத்துகள் உள்ளன என்று அவருக்குச்
சொல்லித்தரப்படுகிறது, அதிலிருந்து அவர் எப்படி மீளலாம் என்பதும்
பேசப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ளவர் ஏன் மதுவைச்
சார்ந்திருக்கிறார் என்று ஆலோசகர் அல்லது மனநல நிபுணர் ஆராய்வார்.
ஒருவேளை, ஏதேனும் உணர்வுப் பிரச்னைகளால் இது ஏற்பட்டிருக்கிறது என்றால்,
அவற்றைச் சரி செய்ய முனைவார். பாதிக்கப்பட்டவர் ஆதரவுக் குழுக்
கூட்டங்களிலும் கலந்துகொள்வார். இதுபோன்ற பலருக்கு ஒரே நேரத்தில் குழுச்
சிகிச்சையும் அளிக்கப்படலாம். இதன்மூலம் அவர்கள் தங்களுடைய
மறுப்புநிலையிலிருந்து வெளியே வருவார்கள், தாங்கள் மதுவுக்கு அடிமையாக
இருப்பதால் ஏற்பட்டிருக்கக்கூடிய மனநலப் பிரச்னைகளைப்பற்றிப் பேசுவார்கள்,
தங்களைப்போலவே மதுவின் தாக்கத்திலிருந்து விடுபட முயன்றுகொண்டிருக்கும்
பிறரிடம் ஆதரவு பெறுவார்கள், இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்
என்று ஊக்கம் பெறுவார்கள். இந்த நிலையின் நிறைவில், எந்தெந்தச்
சூழ்நிலைகளில் அவர் மீண்டும் பழையபடி மதுப் பழக்கத்துக்கு ஆளாகக்கூடும்
என்று அடையாளம் காண்பதற்குச் சொல்லித்தருவார்கள், அந்தச் சூழ்நிலைகளை
எப்படித் தவிர்ப்பது என்று கற்றுத்தருவார்கள்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவருடைய குடும்பத்தினர், நண்பர்களுக்கும் இந்தப்
பிரச்னைபற்றிச் சொல்லித்தரப்படுகிறது, இதைச் சரிசெய்ய அவர்கள் எப்படி
உதவலாம் என்று விளக்குவதற்காக, அவர்களுக்கும் உதவிக் குழுக் கூட்டங்கள்
நடத்தப்படுகின்றன.
சிகிச்சையின் மூன்றாவது மற்றும் நிறைவு நிலையில், பாதிக்கப்பட்டவர்
தன்னுடைய வழக்கமான வாழ்க்கைமுறைக்குத் திரும்புகிறார், அதில் அவர் மது
இல்லாமல் வாழ்வதற்கான ஆதரவு அளிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் கூடுதல்
உதவி பெறுவதற்காக, அவர் 'ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்' போன்றவற்றால்
நடத்தப்படும் வழக்கமான ஆதரவுக் குழுக் கூட்டங்களிலும் கலந்துகொள்ளலாம்.
1. அனைத்துப் புள்ளிவிவரங்களும் இங்கிருந்து எடுக்கப்பட்டவை: குருராஜ் G,
ப்ரதிமா மூர்த்தி, கிரீஷ் N & பெனெகல் V. மது தொடர்பான தீங்கு:
இந்தியாவில் பொது ஆரோக்கியம் மற்றும் கொள்கைக்கான தாக்கங்கள்,
பதிப்பு எண். 73, NIMHANS, பெங்களூர், இந்தியா 2011

மதுவுக்கு அடிமையாதல்: உண்மை அறிவோம்


தவறான நம்பிக்கை: ஒருவர் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார் என்றால், அவர்
விரும்பிதான் அவ்வாறு செய்கிறார்.
உண்மை: ஒருவர் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார் என்றால், அவராக
விரும்பிதான் அவ்வாறு இருக்கிறார் என்று பொருளில்லை. அவர் தானே
விரும்பிதான் மதுவைக் குடிக்கத் தொடங்குகிறார். ஆனால், அதன்பிறகு, பல
சிக்கலான காரணிகள்தான் அவரை மதுவுக்கு அடிமையாக்குகின்றன. பல
சுற்றுச்சூழல் மற்றும் மரபுசார்ந்த காரணிகளால்தான் ஒருவர் மதுவைச் சார்ந்து
வாழத் தொடங்குகிறார், அல்லது, அதற்கு அடிமையாகிறார். இதில் அவரது
விருப்பம் என்பது குறைவுதான்.
தவறான நம்பிக்கை: நான் விரும்பிய அளவு மதுவைக் குடிப்பேன், ஆனால்,
ஒருபோதும் கட்டுப்பாட்டை இழக்கமாட்டேன்.
உண்மை: மது என்பது, மூளை செயல்படுத்தும்விதத்தில் மாற்றங்களை
உண்டாக்கி, மனித உடலைப் பாதிக்கிறது. ஒருவர் கட்டுப்பாட்டை இழக்காமல்
எந்த அளவு மதுவை அருந்த இயலும் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
அவரது உயரம், எடை, பாலினம் மற்றும் மரபியல் அம்சங்களைப்பொறுத்து இது
அமையும். அதேசமயம், ஒருவர் குறிப்பிட்ட அளவு மதுவை அருந்தியவுடன்
போதை ஏறியதாக உணர்கிறார், அந்த அளவு படிப்படியாக அதிகரித்துக்கொண்டே
இருக்கிறது என்றால், அதாவது, முன்பைவிட அதிக அளவு மது அருந்தினால்தான்
அவருக்குப் போதை ஏறுகிறது என்றால், அவருக்கு மது சகிப்புத்தன்மை
ஏற்பட்டிருக்கலாம். மது சகிப்புத்தன்மை என்பது, ஒருவர் மதுவுக்கு
அடிமையாகியிருக்கிறார் என்பதைக் காட்டும் அடையாளங்களில் ஒன்று,
அப்படிப்பட்டவர்களுக்கு உதவி தேவைப்படலாம்.
தவறான நம்பிக்கை: நான் எவ்வளவு குடித்தாலும் சரி, ஒரே ஒரு காஃபி
குடித்தால் உடனே போதை தெளிந்துவிடும்.
உண்மை: சராசரியாக மனித உடல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பானத்தைச்
செயல்முறைப்படுத்தும். ஒருவர் ஒரு மணி நேரத்தில் ஒரே ஒருமுறைதான் மது
அருந்தியிருக்கிறார் என்றால், அவருடைய கல்லீரல் அந்த மதுவைப் பகுத்து
நச்சுப்பொருள்களை அகற்றிவிடுகிறது. ஆனால், அவர் மேலும் மேலும்
குடித்துக்கொண்டே இருந்தால், அந்தக் கூடுதல் பளுவை அவருடைய கல்லீரலால்
தாங்க இயலுவதில்லை, அதனால், மது அவருடைய உடலிலேயே
தங்கிவிடுகிறது. அந்த நேரத்தில், அவர் ஒரு காஃபி குடித்தால், போதை
தெளிந்துவிட்டதுபோன்ற உணர்வு ஏற்படலாம், ஆனால், மது இன்னும் அவரது
உடலிலேயேதான் தங்கியிருக்கிறது, அது முழுவதுமாக வெளியேறுவதற்கு
நேரமாகும்.
தவறான நம்பிக்கை: நான் விரும்பினால், இப்போதுகூடக் குடிப்பழக்கத்தை
விட்டுவிடுவேன். அப்படி நிறுத்தவேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை,
என்றைக்குத் தோன்றுகிறதோ அன்றைக்குக் குடிப்பதை நிறுத்திவிடுவேன்.
உண்மை: ஒருவர் நெடுங்காலமாகக் குடித்துக்கொண்டிருக்கிறார், மதுவைச் சார்ந்து
வாழ்கிறார் என்றால், அநேகமாக அவரால் தன்னுடைய அடிமைத்தனத்தைக்
கட்டுப்படுத்திக்கொள்ள இயலாது. மதுவுக்கு அடிமையான ஒருவர், அதிலிருந்து
வெளியேறவேண்டுமென்றால், "மது வேண்டாம்" என்று சொன்னால்மட்டும்
போதாது. அதில் இன்னும் பல பிரச்னைகள் இருக்கின்றன. ஆகவே, மதுப்பழக்கம்
தனக்குப் பிரச்னையைத் தருகிறது என்று ஒருவர் எண்ணினால், அவர் உரிய
நிபுணரிடம் உதவி பெறவேண்டும்.
தவறான நம்பிக்கை: நான் புனர்வாழ்வு, சிகிச்சை பெற்றுவிட்டேன், மதுவை
எப்படித் தவிர்ப்பது என்று தெரிந்துகொண்டுவிட்டேன். ஆகவே, இனிமேல் நான்
அவ்வப்போது கொஞ்சம்போல் மது அருந்தலாம், அதனால் எந்தப் பிரச்னையும்
வராது.
உண்மை: மதுவுக்கு அடிமையான ஒருவர் அதிலிருந்து மீளவேண்டுமென்றால்,
அது அவருடைய வாழ்நாள்முழுவதும் தொடருகிற ஒரு பயணமாகும். அவர்
புனர்வாழ்வு, சிகிச்சை பெற்றபின்னர், மீண்டும் மதுவுக்கு அடிமையாகிவிடக்கூடிய
சூழ்நிலைகளைக் கவனித்துத் தவிர்க்கவேண்டும். ஒருவர் மது அருந்தாமல் பல
வாரங்கள், பல மாதங்கள் இருந்திருக்கலாம், ஆனால், அதன்பிறகு ஒரே
ஒருமுறை மது அருந்தினால் போதும், அவர் பழையபடி அந்தப் பழக்கத்துக்குள்
சென்றுவிடக்கூடிய அபாயம் உள்ளது. அப்படி ஒருவர் மதுவுக்கு மீண்டும்
அடிமையாகக்கூடிய சூழ்நிலை வந்தால், அவர் உடனே தனது மருத்துவர் அல்லது
சிகிச்சையாளரைச் சந்திக்கவேண்டும்
எந்தவொரு செயல்பாடாக இருந்தாலும் சரி, ஒரு பழக்கத்தை
மாற்றிக்கொள்வதென்றாலும் சரி, ஊக்கம் என்பது அதற்கு ஒரு முக்கியமான முதல்
படிநிலை. ”ஒரு குதிரையைத் தண்ணீர்த்தொட்டிவரை அழைத்துவந்துவிடலாம்,
ஆனால், அதைக் குடிக்கவைக்க இயலாது” என்று ஒரு வாசகம் உண்டு. இதன் பொருள்,
ஒருவர் ஏதோ ஒரு விஷயத்தைச் செய்யவேண்டும் என்றால், மற்றவர்கள் அவரை
எவ்வளவு வற்புறுத்தினாலும் வேலை நடக்காது, அவர் தன்னைத் தானே
ஊக்கப்படுத்திக்கொண்டால்தான் அந்த விஷயத்தைச் செய்வார். குறிப்பாக, ஒருவர்
ஏதோ ஒரு பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார், போதைப்பொருள்களை
அளவுக்கதிகமாகப் பயன்படுத்துகிறார் என்றால், அதிலிருந்து வெளியே வரவேண்டும்
என்று அவரே எண்ணினாலன்றி, அவரை மற்றவர்களால் திருத்த இயலாது.
ஏதோ ஒரு போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர், அதைச்சார்ந்தே வாழ்கிறவர்,
அத்தனை சீக்கிரத்தில் சிகிச்சையை நாடமாட்டார், பிறரிடம் உதவி கேட்கமாட்டார்,
சிகிச்சைக்கு ஒத்துழைக்கமாட்டார். ஒருவழியாக, அவர்கள் சிகிச்சைக்கு
ஒப்புக்கொண்டுவிட்டாலும், அவர்களுடைய ஊக்கம் ஏறி இறங்கலாம், மாறவேண்டும்
என்று உறுதியாக எண்ணாமல் அலைபாயலாம். போதைப்பொருளுக்கு
அடிமையானவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது, அதில் ஊக்கத்தை மேம்படுத்தும்
அணுகுமுறை என ஒன்று உண்டு. இந்த அணுகுமுறை, பாதிக்கப்பட்டவர்களுக்குத்
தங்கள் பழக்கத்தைத் தொடர்வது, அல்லது மாற்றிக்கொள்வது என்கிற தெரிவுகள்
உள்ளன என்ற அடிப்படையில் அமைகிறது. ஊக்கம் தரும் அணுகுமுறையானது,
சிகிச்சையின்போது அவரைச் செயலற்று இருக்கவிடுவதில்லை, அவரைச் செயல்பட
அனுமதிக்கிறது, தங்களுக்கான சிகிச்சையைத் தாங்களே தேர்ந்தெடுக்கவேண்டும்,
தங்களை மாற்றுவதற்கான பொறுப்பைத் தாங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் என
வலியுறுத்துகிறது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்ன செய்வது எனத்
தாங்களே தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க இயலும் என்றால், தங்களது குடும்ப
உறுப்பினர்கள் அல்லது ஒரு சிகிச்சையாளர் சொல்கிறவற்றைத் தடுக்கவேண்டும்
அல்லது மறுக்கவேண்டும் என்று அவர்கள் அவ்வளவாக உணர்வதில்லை.
தன்னுடைய மாற்றச் செயல்முறைக்குத் தானே பொறுப்பு என்று ஒருவர்
உணரும்போது, அந்த மாற்றத்தைக் கொண்டுவருகிற ஆற்றல் தனக்கு உள்ளதாக அவர்
எண்ணுகிறார், தனது சிகிச்சையில் அதிக ஆர்வம் காட்டுகிறார், இதனால்,
சிகிச்சையின் பலன்கள் சிறப்பாக அமைகின்றன.
ஒருவர் தனது பழக்கமொன்றை மாற்றிக்கொள்ளும்போது எந்தெந்தக் கட்டங்களைக்
கடந்துசெல்கிறார் என்று ஆய்வாளர்கள் வரையறுத்துள்ளார்கள்.
போதைப்பொருள்களுக்கு அடிமையானோர் அதற்குச் சிகிச்சை பெறும்போது,
அவர்களும் இந்தக் கட்டங்களைக் கடந்துவருகிறார்கள்.
சிந்திப்பதற்குமுன்: இந்த நிலையில் உள்ள ஒருவர் தனது பழக்கவழக்கத்தின்
எதிர்மறை விளைவுகளைப்பற்றிக் கொஞ்சம் அறிந்திருப்பார், ஆனால், அதை
மாற்றிக்கொள்ளவேண்டும் என்று அவர் எண்ணுவதில்லை, அதற்கான எந்த
நடவடிக்கையையும் அவர் உடனே எடுக்கப்போவதில்லை. ஆகவே, தொடக்க
நிகழ்வுகளில், சிகிச்சை வழங்குபவர் சிகிச்சை பெறுபவருடன் நல்ல உறவை
வளர்த்துக்கொள்ளவேண்டும், அவர் ஏன் சிகிச்சைக்கு வந்திருக்கிறார் என்று
கண்டறியவேண்டும், அவர் சிகிச்சைக்கு வரத் தீர்மானித்ததைப் பாராட்டவேண்டும்,
அவருடைய சிகிச்சை எந்தத் திசையில் செல்லலாம் என்பதைத் தீர்மானிக்கவேண்டும்.
பொதுவாக இந்தக் காலகட்டத்தில் ஒரு சிறு குறுக்கீட்டு அணுகுமுறை
பின்பற்றப்படுகிறது, சிகிச்சைக்கு வந்திருப்பவர் மாற்றத்துக்கு எந்த அளவு தயாராக
இருக்கிறார் என்பது மதிப்பிடப்படுகிறது. போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதன்
எதிர்மறை விளைவுகளைப்பற்றி அவர்களுக்குச் சொல்லித்தரப்படுகிறது.
உதாரணமாக, ஒருவர் மனச்சோர்வுடன் இருக்கிறார் என்றால், ஒருவர்
அளவுக்கதிகமாக மது அருந்துவதால் அவருக்கு மனச்சோர்வு ஏற்படலாம், அல்லது
ஏற்கெனவே உள்ள மனச்சோர்வு அதிகமாகலாம் என்று அவருக்குச் சொல்லப்படலாம்.
பாதிக்கப்பட்டவர் எந்தவிதமாகப் போதைப்பொருள்களைப் பயன்படுத்துகிறார்
என்பதை அறிவதற்கும், அதனால் அவரது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள செயல்பாட்டுப்
பிரச்னைகளைத் தெரிந்துகொள்வதற்கும், அவரது குடும்ப வரலாற்றை அறிவதற்கும்,
சிகிச்சையாளர் பாதிக்கப்பட்டவரிடம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம்
உதவி பெறலாம்.
சிந்தனை: இந்த நிலையில், தான் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதால்
உண்டாகும் நன்மை, தீமைகளைப் பாதிக்கப்பட்டவர் அறிந்திருக்கிறார், ஆனால் மாறத்
தயங்குகிறார், இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறார், இன்னும் அவர்
மாற்றத்துக்கு முழுமையாகத் தயாராகவில்லை. சில மருத்துவ நிபுணர்கள்,
பாதிக்கப்பட்டவரிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்து, 'நீங்கள் போதைப்பொருள்
பயன்படுத்துவதை நிறுத்தினால் என்ன நன்மை, என்ன தீமை என்று இதில் எழுதுங்கள்'
என்று கேட்கிறார்கள். இது நல்ல பலன் தருவதாக அவர்கள் சொல்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர் இதை ஒரு வீட்டுப்பாடமாகச் செய்யலாம், இதைப்பற்றி நன்றாகச்
சிந்தித்து நன்மை, தீமைகளை எழுதிவரலாம், அடுத்தமுறை அவர்கள்
சந்திக்கும்போது, அதை அவர்கள் விவாதிக்கலாம். அல்லது, அவர்
சிகிச்சையின்போதே அதை எழுதவேண்டும் என்று மருத்துவ நிபுணர் சொல்லலாம்.
ஒருவருடைய புறவயமான ஊக்கத்தை அகவயமான ஊக்கமாக மாற்ற உதவினால்,
அவர் மாற்றத்தைப்பற்றிச் சிந்திக்கும் நிலையிலிருந்து முன்னேறி, தான் என்ன
செய்யவேண்டும் என்பதுபற்றிய ஓர் உறுதியான தீர்மானத்துக்கு வருவார்.
இங்கே, பாதிக்கப்பட்டவர் ஊக்கம் பெறுவதற்கு மருத்துவ நிபுணர் உதவலாம்.
உதாரணமாக, பாதிக்கப்பட்டவர் விறுப்புவெறுப்பற்றநிலையில் தனது உணர்வுகளை
ஆராய அவர்கள் உதவலாம், அவர் தன்னுடைய போதைப்பொருள் பழக்கத்துக்கும்
தன்னுடைய தனிப்பட்ட மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள முரண்களை
அலசச்செய்யலாம். இதனால், தான் தொடர்ந்து போதைப்பொருள்களைப்
பயன்படுத்திவந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும், அந்தப் பழக்கத்தைக்
குறைத்தால் அல்லது நிறுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் அவர்
இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வார்.
தயாராதல்: ஒருவர் மாறத் தயாரானதும், குணமாதலை நோக்கித் திட்டமிடுகிறார்,
அதற்கான படிநிலைகளைத் தொடங்குகிறார். ஒருவர் சிகிச்சைக்கு வருகிறார்
என்றால், அவருக்குச் சிகிச்சையளிப்பவரும் அவருடைய குடும்பமும் அவரைத்
தொடர்ந்து ஊக்கப்படுத்தவேண்டும், தான் திருந்தப்போகிறோம் என்ற விஷயத்தை
அவர் தனக்குச் சிகிச்சையளிப்பவரிடம்மட்டும் சொன்னால் போதாது, குறைந்தபட்சம்
இன்னும் ஒருவரிடமாவது அந்த விருப்பத்தை அவர் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று
தூண்டவேண்டும். இது ஒரு சிறிய விஷயமாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில்
இப்படி இன்னொருவரிடம் சொல்வதன்மூலம் அவருக்குப் பொறுப்புணர்ச்சி
அதிகரிக்கும், அவருக்குள் ஏதாவது எதிர்ப்புணர்ச்சி தோன்றினாலும், அதைப்
புரிந்துகொண்டு தன்னுடைய எண்ணத்தில் உறுதியாக இருப்பார். சிகிச்சை பெற
வருகிறவருக்கு என்னென்ன சிகிச்சைத் தெரிவுகள் உள்ளன என்பதை அவருக்குச்
சுருக்கமாகச் சொல்லவேண்டும். தனக்கு எந்தச் சிகிச்சை சிறப்பானது என்று அவர்
தீர்மானிக்கலாம், அதற்கேற்பத் திட்டமிடலாம்.
இந்த நிலையில் மிகவும் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய விஷயங்கள்: அவர்
சிகிச்சை எடுக்கத் தீர்மானித்ததன் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுதல், அவர்
தானே பலன் பெறுவதற்கு ஆதரவு வழங்குதல், அவரால் வெற்றிகரமாகச் சிகிச்சையை
முடித்துக் குணமாக இயலும் என்று அடிக்கடி சொல்லி நம்பிக்கை தருதல், அவர்
தனக்குப் பொருத்தமான, தன்னால் எட்டக்கூடிய செயல்பாடுகளைத் தீர்மானிக்க
உதவுதல், ஒருவேளை பழைய பழக்கம் அவருக்கு மீண்டும் வந்துவிட்டால், அதனால்
அவர் சிகிச்சையாளருடன் கொண்டிருக்கிற உறவு பாதிக்கப்படக்கூடாது என்று
விளக்குதல். சுருக்கமாகச் சொல்வதென்றால், தயாராதல் நிலையில்
உள்ளவர்களுக்குச் சாத்தியமுள்ள மாற்ற வியூகங்களை அடையாளம் காணவும்
தங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒரு வியூகத்தைத் தேர்ந்தெடுக்கவும் உதவி
தேவை.
செயல்: இந்த நிலையில்தான் மிகவும் முறையான சிகிச்சை தொடங்குகிறது. இங்கே,
பாதிக்கப்பட்டுள்ளவர் சில புதிய பழக்கங்களை முயன்றுபார்க்கிறார். ஆனால், அவை
இன்னும் திடமாகவில்லை. இந்த நிலையில்தான், பாதிக்கப்பட்டவர் மாற்றத்தை
நோக்கிய முதல் செயல்பாடுகளை நிகழ்த்தத் தொடங்குகிறார், மாற்ற வியூகங்களை
அமல்படுத்தவும், அவற்றைத் தொடர்ந்து பின்பற்றவும் அவருக்கு உதவி
தேவைப்படலாம். தன்னுடைய செயல்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அவருக்கு
உதவி தேவைப்படலாம், தொடர்ந்து நெடுநேரம் போதைப்பொருள்களைப்
பயன்படுத்தாமல் சமாளிப்பதற்கான திறன்களை அவர்
வளர்த்துக்கொள்ளவேண்டியிருக்கலாம். இந்த நிலையில், அவருக்குச்
சிகிச்சையளிப்பவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் அவரது உணர்வுகளை,
அனுபவங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும், ஒருவர் குணமாகிக்கொண்டிருக்கும்போது
இதெல்லாம் சகஜம்தான் என்பதை உணரவேண்டும். சிகிச்சையைத்
தொடரவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அவர்களுக்கு ஊக்கமும்
ஆதரவும் தரவேண்டும்.
பராமரிப்பு: பாதிக்கப்பட்டவர் இதுவரை வந்துவிட்டார் என்றால், அவரால் தனது புதிய
பழக்கங்களை நீண்டகாலத்துக்குத் தொடர இயன்றுள்ளது என்று பொருள். இந்த
நிலையில் அவருக்கு உதவி தேவை, குறிப்பாக, அவர் பழைய பழக்கத்துக்குத் திரும்பச்
சென்றுவிடாமலிருக்கப் பிறர் உதவவேண்டும். இந்த நிலையில் அவரது இப்போதைய
செயல்பாடுகளை ஆராய்ந்து, அவை சரியானபடி உள்ளனவா என்பதை மதிப்பிட்டு
உறுதிசெய்யலாம், தொலைநோக்கில் சிந்தித்து, அவர் தொடர்ந்து
போதைப்பொருள்களைப் பயன்படுத்தாமல் வாழ்வதற்கான திட்டங்களை
வரையறுக்கலாம். போதைப்பொருள்களைப் பயன்படுத்தாமலிருக்க அவர் தொடர்ந்து
முயற்சி செய்தாலும், அவரது ஊக்கம் ஏறி, இறங்குவது சகஜமே, அவர்
பழையநிலைக்குச் சென்றுவிடவும் வாய்ப்புண்டு.
பழைய நிலைக்குத் திரும்புதல்: இந்த நிலையில், தனக்குப் பழைய அறிகுறிகள்
திரும்பிவிட்டதாகப் பாதிக்கப்பட்டவர் உணர்வார். அவர்கள் இப்போது விளைவுகளைச்
சமாளிக்கவேண்டும், அடுத்து என்ன செய்வது என்று தீர்மானிக்கவேண்டும். இந்த
நிலையில், பாதிக்கப்பட்டவருக்குக் குடும்பத்தினரின் ஆதரவு தேவை, அவர்
நிலைமையைச் சமாளிப்பதற்கான மாற்று வியூகங்களைக் கண்டறிய அவர்கள்
உதவவேண்டும். அதேநேரம் சிகிச்சையளிப்பவர் வேறு சில முக்கியமான பணிகளைச்
செய்வார்: பாதிக்கப்பட்டவர் மாற்றச் சுழலில் மீண்டும் நுழைவதற்கு உதவுவார், அவர்
நேர்விதமான மாற்றத்துக்கு மீண்டும் முயல விரும்புகிறார் என்றால், அதைப்
பாராட்டுவார், பழைய நிலைமை திரும்ப வந்தது ஏன் என்கிற எதார்த்தத்தை ஆராய்ந்து,
அதை ஒரு கற்றல் வாய்ப்பாக முன்வைப்பார்.
ஒருவர் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து வெளிவர
முயன்றுகொண்டிருக்கும்போது, அவருக்குப் பிடித்த ஒருவர், உதாரணமாக, அவரது
துணைவர், கூட்டாளி அல்லது அவருக்கு நெருக்கமான ஒரு குடும்ப உறுப்பினரும்
அதில் பங்கேற்றால், அந்தச் சிகிச்சைக்கு நல்ல பலன்கள் கிடைப்பதாக ஓர் ஆய்வு
நிரூபித்துள்ளது. அவர் போதைப்பொருள் பயன்படுத்தாத ஒரு வாழ்க்கைமுறையை
அமைத்துக்கொள்ள உதவுகிற செயல்முறைகளை உருவாக்கவும் அமல்படுத்தவும்
தக்கவைத்துக்கொள்ளவும் அவருடைய மன உறுதியை இவர்கள் தூண்டுகிறார்கள்.
மாற்றத்துக்கான தீர்வுகளை அவர்களே உருவாக்குவதற்கு இவர்கள் உதவுகிறார்கள்.
அதேசமயம், மாற்றத்துக்கான முழுப்பொறுப்பும் சம்பந்தப்பட்ட நபருக்குள்தான்
இருக்கிறது என்பதை நினைவில்கொள்ளவேண்டும்.
சிகிச்சை பெறுகிறவருடைய அன்புக்குரிய ஒருவர் அவருக்குப் பலவிதங்களில்
உதவலாம் என்றாலும், அவர்கள் வெறுமனே ஆலோசனை நிகழ்வுகளில்மட்டும்
பங்கேற்றால் போதாது. பாதிக்கப்பட்டவர் போதைப்பொருள் இல்லாமல் வாழ்வதை
அவரது அன்புக்குரிய ஒருவர் ஆதரிக்கிறார், அவருடைய ஆதரவைப் பாதிக்கப்பட்டவர்
மிகவும் மதிக்கிறார் என்றால், அவரைச் சிகிச்சையில் பங்கேற்கச்செய்யலாம்.

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு அறிவுரை

மாணவர்களுக்கு நான் ஏதாவது அறிவுரை சொல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள்.


நான் மெத்தப்படித்தவனோ அறிவாளியோ அல்ல. அதனால் நானாக எந்த
அறிவுரையும் கூறமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் ஒன்றும்
மட்டும் சொல்வேன். மகாத்மா காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு
மாணவரும் திரும்பத்திரும்ப படிக்க வேண்டும். ஒவ்வொருமுறை படிக்கும்போதும்
ஒவ்வொரு விதமான புத்திமதி கிடைக்கும்.

எதையுமே காந்தி அடிமைப்பட்டு கிடந்த நமது தேசத்துக்கு சுதந்திரத்தை


வாங்கிக்கொடுத்தார். இவ்வாறு தாம் சுதந்திரம் வாங்கிகொடுத்த சாதனைக்காக நமது
தேசத்திடம் மக்களிடம் கைமாறு எதிர்பார்த்தாரா? இல்லை.

அவர் நினைத்திருந்தா சுதந்திர பாரத்த்தில் பெரிய பதவிகளை வகித்திர முடியும் அதை


அவர் விரும்பவில்லை.

அவ்வளவு ஏன்? சுதந்திர பாரத்த்தில் அவர் உயிர் வாழ்த்துகூட சுகம் பாரத்த்தில் அவர்
உயிர் வாழ்ந்து கூட சுகம் அனுபவிக்க நினைக்கவில்லை.

பாராட்ட வேண்டாம்- பின்பற்ற வேண்டாம்

மகாத்மா காந்தி பிறந்த நாள் திருவிழாவில் மகாத்மா காந்தியின் சேவைகளைப் பற்றிப்


பலர் பாராட்டிப் பேசினார்கள். மகாத்மா காந்தியின் சேவைகளைப் பாராட்ட
வேண்டியதுதான். புகழ வேண்டியதுத்தான். ஆனால் வற்றை யெல்லாம் விட
முக்கியமான கடமை மகாத்மா காண்பித்த வழியில் நம்மை நாமே கொண்டு
செலுத்துவதுதான். நமது சுதந்திர பூமிக்கு நாம் ஆற்றக்கூடிய கடமை ஏதாவது
இருக்கிறது என்றால் மகாத்மா காந்தியையம், அவருடைய பொன்மொழிகளையும்,
அவருடைய வழிகாட்டுதலையும் மறக்காமல் இருப்பதுதான்.

பகட்டு வேண்டாம்- பண்பு வேண்டும்.

இந்தக் காலத்தில் கொஞ்சம் படித்துவிட்டாலும் சிலர் பகட்டாக – படோடோபமாக


இருப்பதுதான் படிப்புக்கு அழகு என்று நினைப்பதாகத் தோன்றுகிறது.
மகாத்மா காந்தி படிக்காத படிப்பா? அவர் எப்படி வாழ்த்தார்? ஒரு ஏழை விவசாயி
போல உடம்பிலே சட்டைடகூடப் போட்டுக்கொள்ளாமல் தமது வாழ்நாள்
முழுவதையும் கழித்தார். அந்த அவருடைய எளிய தோற்றம் தான் பாமர ஏழை
மக்களுக்கு அவர்மீது ஆழ்ந்த நம்பிக்கையைத் தோற்றுவித்தது.

காந்திஜியின் பேச்சு

மகாத்மா காந்திஜியின் பேச்சு எல்லோராலும் விளங்கிக் கொள்ள முடிவதாக இருந்தது.


அவருடைய பேச்சை இந்தி மொழி தெரிந்த ஒரு படிக்காத விவசாயி கூட முழு
அளவுக்கு அர்த்தத்தோடு தெரிந்து கொண்டான். மகாத்மாவின் பேச்சை
யார்வேண்டுமானாலும் வேறு மொழியில் மொழி பெயர்த்துக் கூறிவிடலாம்.
அவ்வளவு எளிய மொழியாக அது இருந்தது இந்தி அலது ஆங்கில மொழி
தெரியதவர்கள் கூட அவர முகபாவத்தை வைத்து அவர் பேசும் மொழியைப்
புரிந்துகொள்ள முடிகிறது. அவ்வளவு எளிய மொழியில் – சாமானிய மொழியில் –
பாமர மக்களின் மொழியில் அவர் பேசி வந்தார்.

என்ன மொழியில் பேசினேன்?

காந்திஜியை சந்திக்கும்போதெல்லாம் நான் அவருடன் என்ன மொழியில் பேசினேன்


என்று பலர் கேட்பதுண்டு.

மகாத்மாவுடன் பேசுவதற்கு மொழி தெரிந்தாக வேண்டும் என்று அவசியமில்லை.


அவர் பேசுவதை நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

கடவுளும் காந்திஜியும்
கடவுளை மனத்தில் நினைத்துக் கொண்டு எந்தச் செயலைச் செய்தாலும் அது
இடையூறு இன்றி நிறைவேறிவிடும் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அதைப்
பற்றி எனக்குச் சரியாகத் தெரியாது. ஆனால் அரசியலில் காந்திஜியை மனத்திலே
நினைத்துக் கொண்டே செயற்பட்டால் அதன் விளைவுகள் சரியாகவும் ஒழுங்காவும்
இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக நான் உணர்ந்ததுண்டு.

கலையும் சோறும்

ஒரு நாட்டில் கலையும், இலக்கியமும் அதிகமாக வளர்ந்தால் தான் அங்கே


முன்னேற்றம் நிலவும் என்று சிலர் சொல்லுகிறார்கள். அதனை இல்லை என்று நான்
கூறவில்லை. ஆனால் நமது நாட்டின் கதையே வேறு என்றுதான் கூறுகிறேன்.
நமதுநாட்டில் லட்சக்கணக்கான மக்களுக்கு இன்னும் வயிறார சோறு
கிடைக்கவில்லை. வயிறு நிறைய எல்லோருக்கும் சோறு கிடைப்பதற்கு ஏற்பாடு
செய்வது தான் ஓர் அரசாட்சியின் முக்கியமான கடமை என்று எனக்குத்
தோன்றுகிறது.

பண்பும் ஒழுக்கமும்

ஏழை மக்களிடம் பண்பும் ஒழுக்கமும் சரியாக இல்லை என்று சிலர் பேசுகிறார்கள்.


அந்த மக்களுக்கு வயிறு நிறைய சோறு கிடைக்க வழி செய்து விட்டு அதற்குப்
பிறகுதான் அவர்களிடம் பண்பும் ஒழுக்கமும் அமைகிறதா என்று கவனிக்க வேண்டும்.
லட்சக்கணக்கான மக்கள் பட்டினியாக்க்கிடக்கும்போது அவர்களிடம் உயர்ந்த்
குணங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?

உழைப்பாளிக்கு வேலை

நமது நாட்டில் ஏராளமான ஏழை மக்கள் உழைக்கத் தயாராக இருக்கிறார்கள்.


கண்ணியமான எந்த வேலையைக் கொடுத்தாலும் அவர்கள் கடுமையாக உழைக்கத்
தயாராக இருக்கிறார்கள். என்றாலும் வேலை கிடைக்கவில்லை என்பதற்காக
அவர்கள் ஒரு வித கூக்குரலும் போடுவதில்லை. ஆனால் உழைக்கத் தயாராக
இல்லாதவர்கள் தான் அதிகமாக வேலையில்லாத் திண்டாடம் பற்றி கூச்சல்
போடுகிறார்கள். உழைக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ஏதாவது வேலை கொடுத்து
அவர்கள் நிம்மதியாக வாழ வழி செய்தாக வேண்டும்.

கற்றுக்கொள்ளவேண்டும்

கஷ்டப்படுகிற ஏழை ஜனங்கள் தாங்கள் படுகிற கஷ்டங்கள் பற்றி அரசாங்கத்துக்கு


நேரடியாகத் தெரிவிக்க ஏதாவது வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
அரசாங்கத்திலிருப்பவர்களும் கஷ்டப்படுகிற ஜனங்களின் குறைகளை வலியச்சென்று
தெரிந்து கொண்டு அவைகளை நீக்க முயலவேண்டும். இந்த மாதிரியான ஏழை
ஜனங்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையே நெருக்கமான தொடர்பு இல்லாத
காரணத்தால் தான் சந்தர்ப்ப வாதிகளின் பொய்ப்பிரசாரங்களுக்கு ஏழை மக்கள்
இரையாகி அனாவசியமான கிளர்ச்சிகளில் ஈடுபடும் நிலை உருவாகி விடுகிறது.

சாதி, மத சச்சரவு!

சாதியின் பெயராலும் மத்ததின் பெயராலும் சில சமயம் சச்சரவுகள நிகழ்வைத்ப்


பார்க்கிறேன். இந்த மாதிரி சச்சரவில் ஈடுபடுவோர் சுதந்திரப் போராட்டைத் பற்றி
நினைத்துப் பார்க்கவேண்டும். சாதி, மதங்களின் பெயரால் சகோதர்ர்களான
நமக்குள்ளே சண்டை போட்டுக் கொண்டிருந்ததனால் தேசம் வெள்ளைக்கார்ர்களுக்கு
அடிமையானது. மகாத்மா காந்தி சாதி, மத வேறுபாடுகளை அகற்றி எல்லோருமே
இந்திய மக்கள் என்ற உணர்வை உண்டாக்கியதால் தான் தேசம் சுதந்திரம் பெற்றது.
மறுபடியும் நமக்குள்ளே சண்டை சச்சரவுகளை உண்டாக்கிக் கொண்டோமானால்
நமக்கு கிடைத்த சுதந்திரமும் பறிபோய்விடும்.

ஏரிநீரும் குவியும் செல்வமும்

ஏரியில் ஏராளமான நீரை மழைக்காலத்தில் சேர்த்து வைக்கிறோம். மழை பெய்யாத


விவசாயம் செய்கிறோம். இவ்வாறு செய்யாமல் தேக்கி வைத்த நிரைப்
பயன்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டால், என்ன ஆகும்? நீர் பாசிபிடித்து
நாற்றமெடுத்து, அழுகி சாதாரண ஆடுமாடுகள் குடிக்கக்கூட லாயக்கற்றதாக
ஆகிவிடும் இதுபோல பெரும் செல்வத்தைச் சேர்த்து வைப்பவர்களை தங்கள்
செல்வத்தின் ஒரு பகுதியை ஏழை மக்கள் நல்வாழ்வுக்காகப் பயன்படுத்த வேண்டும்.
தனக்கும் பிரயோசன்புடாமல், பிறருக்கும் உதவாமல் செல்வம் குவிந்து
கிடக்கும்போது நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.ஒரு குறிப்பிட்ட
காலத்திற்குப்பிறகு அந்தச் செல்வமும் மதிப்பிழந்து விடுகிறது.

வரி போடுவதன் நோக்கம்.

அரசாங்கம் வரி போடுகிறதே என்று வசதி படைத்தவர்கள் பலர் குரல் எழுப்புகிறார்கள்.

வரிவிதிப்பு என்பது நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப் பாசன வயல்களுக்குக் கொண்டு


செல்ல வாய்க்கால் அமைப்பது போன்றதாகும்.

வசதி படைத்தவர்களுக்கு வரி விதிப்பது என்பது நீர்த்தேக்கத்திலிருந்து நீர்


வயல்களுக்குச் சென்று பாய்வதுபோல எல்லாப் பொதுமக்களுக்கும் பொதுவான
நன்மை கிடைபதற்குத்தான்.

ஏழைவீட்டுப் பிள்ளையும் பணக்கார வீட்டுப்பிள்ளையும்

ஏழைவீட்டுப்பிள்ளைகள் முட்டாள்களாக இருக்கிறார்கள். பணக்கார


வீட்டுப்பிள்ளைகளை புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.

மூளையை கடவுள் எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் அமைத்திருக்கிறார். ஏழைக்கு


ஒரு மூளை- பணக்காரர்களுக்கு வேறு மூளை என்று அமைக்கவில்லை.

விஷயம் இதுதான். ஏழைகளை வீட்டுப்பிள்ளைகளுக்கு வயிற்றுப் பாட்டை நிரப்புவதே


கஷ்டமாக இருக்கிறது. வேளா வேளைக்கு சோறுகிடைக்கும் என்று நிச்சயமில்லை.
சின்ன வயதிலேயே இவர்கள் ஏதாவது வேலைசெய்து வருமானம் தேட
வேண்டியிருக்கிறது.
இந்த நிலையில் அவர்கள் படிப்பைப் பற்றி சிந்திக்க எங்கே நேரம் இருக்கிறது?

ஏழைப் பிள்ளைகளுக்கும் வேளா வேளைக்கு சோறு போட்டு ஒழுங்காகப்


பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினால் அவர்களுந்தான் படித்துப் பெரிய அறிவாளியாக
ஆவார்கள்.

அரசாங்கம் நன்மை செய்யவில்லை.

அரசாங்கம் அப்படியொன்றும் நன்மை செய்யவில்லை என்று சிலரிடமிருந்து கூச்சல்


எழுவதை நான் கவனிக்கிறேன். நிச்சயமாக ஒருவேளை சோற்றுகு வழியில்லாமல்
கஷ்டப்படுவோர் வட்டாரத்திலிருந்து இந்த மாதிரி கூச்சல் எழுந்தால் அதனை
என்னால் விளங்கிக்கொள்ள முடியும். அரசாங்கம் கொடுக்கும்
சலுகைகளையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு நல்ல லாபமடைந்து வசதி
வாய்ப்புடன் வாழ்பவர்களிடமிருந்து இந்த மாதிரி கூக்குரல் எழுவதுதான் எனக்கு
விளங்கவில்லை. இது ஓர் அதிசயந்தான்.

பள்ளிகளும் பயன்களும்

கிராம்ப்புறங்களில் ஏராளமான பள்ளிகளை மிகவும் சிரம்ப்பட்டு அமைக்கிறோம்.


ஆனால் அமைக்கப்பட்ட பள்ளிகளுக்கு மாணவர்கள் வரமாட்டேன் என்கிறார்கள்
என்பதாக குறைசொல்லுகிறார்கள்.

பள்ளிக்குப்பிள்ளைகள் வரவில்லை. என்பதை வைத்து அவர்களுக்குக் கல்வியில்


ஆர்வம் இல்லை என்று எண்ணிவிடக்கூடாது. வீட்டில் வேளாவேளைக்குச் சாப்பிட
சோறு இல்லை. சாப்பாட்டுக்காகச் சின்ன வயிதிலேயே வேலை செய்ய
வண்டியிருக்கிறது. அவர்களுக்குப்பள்ளிக்கூடம் வர எங்கே நேரமிருக்கிறது.?

அதனால்தான் பள்ளிகளிலேயே மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த


வசதியை கிராமத்து மக்கள் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள்
குழந்தைகளைப் பள்ளிக்கு படிக்க அனுப்பத் தறக் கூடாது. சின்னப்பிள்ளைகளை
வேலைக்கு அனுப்பக்கடாது. குழந்தைப் பருவம் என்பது படிப்பதற்கான ஒரு பருவமே
தவர வேலை செய்வதற்கான பருவம் அல்ல.

கல்வியும் செல்வமும்

குழந்தைகளுக்கு ஏதாவது செல்வம் சொத்துக்கள் சேர்த்து வைக்க வேண்டும் என்று


ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகிறார்கள்.
இது நியாயமான ஆசைதான். ஆனால் கிராம்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்கள்
தங்கள் குழந்தைகளுக்குப் பணம் காசு சேர்த்து வைக்க வேண்டும் என்று
ஆசைப்படக்கூடாது. பணம் காசு, ஒரு குறிப்பிட்ட காலதில் செலவாகிவிடக்கூடும்.
தங்கள் மக்களுக்குக் கல்வி என்ற செல்வத்தைத்தான் சேர்த்து வைக்க முயல
வேண்டும். பெற்றோர் மிகவும் சிரம்ப்பட்டு தங்கள் மக்களை நன்றாகப்படிக்க
வைத்துவிட்டால் எதிர்காலத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே
காப்பாற்றிக்கொள்வார்கள்.
வெறும்பணத்தை சேர்த்து வைத்து கல்வியறிவை அளிக்காவிட்டால் நீங்கள் சேர்த்து
வைத்த பணத்தைத்தவறான வழிகளில் செலவிட்டு விட்டு பிற்காலத்தில்
திண்டாடிக்கொண்டிருப்பார்கள்.

கல்விக்கு அதிக வசதி

ஏழை மக்களின் குழந்தைகள் ஒரு சங்கடமும் இல்லாமல் கல்விப்பயிற்சி பெறுவதற்கு


அரசாங்கம் எல்லா வசதிகளையும் செய்தளித்திருக்கிறது. ஒரு காசு கூட
செலவிடாமல் உயர்கல்வி வரைகூடப் பெறமுடியும். இந்த உண்மை பல கிராமத்துப்
பெற்றோர்களுக்குச் சரியாகத் தெரியாது. இதனால் குழந்தையைப் படிக்க
வைக்கவில்லையா என்று யாராவது கேட்டல் என்னால் எபடிப்ப பிள்ளையைய்ப
படிக்க வைக்கமுடியும்? எனக்கு வசதியேது? பணம் ஏது? என்று கூறுகிறார்கள்.
இத்தகைய பெற்றோருக்க்உ உண்மை நிலையைச் சரியாக எடுத்துக்கூறி விளக்க
வேண்டியது அரசாங்க அதிகாரிகளின் கடமையாகும்..

கடவுள் நம்பிக்கை

ஜனங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டியது முக்கியம்தான். அது கூடாது


என்று நான் கூறவில்லை. ஆனல் உழைக்காமல் கையைக் கட்டிக் கொண்டு
உட்கார்ந்திருந்தால் கடவுள் சோறுபோட்டு விடுவாரா? ஏழைகளுக்குஉழைப்புதான்
தெய்வம். எந்த அளவுக்கு நாம் வயிறார உண்ணமுடியும். நல்ல துணிமணிகள் உடுத்த
முடியும். குழந்தைகளுக்கு அணிமணிகளை வாங்கிக் கொடுக்க முடியும்.
சந்தோஷமாக நிம்மதியாக வாழ முடியும்.

ஒற்றுமையாக இருக்க முடியாதா?

சுதந்திரப் போராட்ட காலத்தில் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் ரே குரலில்


பேசியதால் தான் மிகுந்து பலசாலியான வெள்ளைக்கார அரசாங்கத்தை நம்மால்
விரட்டியடிக்க முடிந்தது. சுதந்திரப் போராட்டத்தின்போது நம்மால் ஒற்றுமையாக
இருக்க முடிந்திருக்கின்றபோது சுதந்திர பாரத்த்திலும் ஏன் நம்மால் ஒற்றமையாக
இருக்க முடியாது?
ஜனநாயம் என்றால் என்ன?

ஜனநாயகம் என்றால் ஜனங்கள் தங்கள் இஷ்டம்போல் எப்படி வேண்டுமானாலும்


நடந்துகொள்ளலாம் என்று அர்த்திமில்லை. ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு
நாகரிகமாக தங்கள் கருத்துக்களை வெளியிடுவதும் செயற்படுவதும்தான்
ஜனநாயகம். நான் எது வேண்டுமானாலும் செய்வேன். நீ கேட்க்க் கூடாது. இதுதான்
ஜனநாயகம் என்று ஒருவன் சொன்னால் அவன்தான் ஜனநாயகத்தின் விரோதி.

எல்லோருக்கும் வாழ்வு வேண்டும்

அரசாங்கத்திடம் போராட்டம் நடத்தும் சிலர் எங்களுக்கு மட்டும் உயர்வும் வாழ்வும்


தரவேண்டும் என்று கேட்கிறார்கள். மக்கள் எல்லோரும் சுகமாக வாழ வேண்டும்.
என்று யாரும் கேட்கக்காணோம். இது தவறு. மக்களில் சிலர் வாட்டமுற்று கிடக்க
சிலர் மட்டும் சுகபோக வாழ்வு நடத்தினால் சமுதாயத்தில் குழப்பம்தான் ஏற்படும்.

ஊருக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயியைப் பற்றி அதிகமாகப் பேசுவோர் யாரும்


இல்லை. விவசாயியின் நலன்குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. ஒரு வேளை
சோறு கிடைக்காவிட்டால் மனிதன் என்ன பாடுபட வேண்டியிருக்கிறது! ஊதிய
உயர்வு, உரிமைகள் தேவை என்றெல்லாம் கிளர்ச்சி செய்பவர்களின் கோரிக்கைகளில்
நியாயமிருக்கத்தான் செய்கிறது. ஆனால் விவசாயிகள் முன்னேற்றம் குறித்தும் நாம்
கவலைப்பட வேண்டும் என்ற எண்ணம வர வேண்டும்.

கிராமங்கள் முன்னேற வேண்டும்

நகரங்களில் தொழிற்சாலைகளும், வியாபார நிலையங்களும் அரசாங்க


அலுவலகங்களும் சினிமா கொட்டகைகளும் அமைந்துவிடுவது தேச
முன்னேற்றமாகி விடாது. கிராமங்கள் முன்னேறியாக வேண்டும். கிராமத்து
குடியானவர்கள் முன்னேறியக வேண்டும். கிராமங்களின் அபிவிருத்தியை ஒட்டித்
தான் நமது தேசத்தின் முன்னேற்றம் சாத்தியமாகும்.

விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு என்பது ஒருதேசத்தின்பொருளாதார முன்னேற்றத்தின் அறிகுறி


என்பது சரிதான். ஆனால் வியாபராம் செய்யும் சகோதர்ர்கள் திட்டமிட்டு
செயற்கையாக விலைகள் உயர்த்துவதை அனுமதிக்க முடியாது. அதிக லாபம்
கிடைக்கவில்லை என்று வியாபாரிகள் விலைகளை உயர்த்தினால் சாமானிய மக்கள்
எவ்வளவு தூர்ம் நஷ்டம்மு கஷ்டம்மு பட வேண்டியிருக்கும் என்பது குறித்து
யோசித்துப் பார்க்கவேண்டாமா?
வேலை கிடைக்கவில்லையா?

வேலை கிடைக்கவில்லை என்று படித்தவர்கள் கூறுவதை என்னால் புரிந்துகொள்ள


முடிகிறது. உழைப்பை அடிப்படையாக்க் கொண்ட கிராமத்து மனிதர்கள்
வட்டாரத்தலிருந்துகூட வேலை கிடைக்கவில்லை என்ற பேச்சு இப்பொழுதெல்லாம்
எழத் தொடங்குகிறது. வேலை ஓரேயடியாக்க் கிடைக்கவில்லை என்பது சரியல்ல.
அதிகம் உடலுழைப்பில்லாத மெலுக்கான வேலை கிடைக்கவில்லை என்று
சொன்னால் ஒருவேளை அது சரியாக இருக்கும்.

கதர் – கிராமக் கைத்தொழில்

நூல் நூற்ப்பது, சாமானி கிராமக் கைத்தொழில்களைச் செய்வதன்மூலம் ஒரு குடும்பம்


பிழைக்க முடியும். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் நான்கு பேரும் சோம்பல்
இல்லாமல் நாள் முழுவதும் ராட்டை மூலம் நூல் நூற்றால் அவர்கள் வயிற்றுப்
பாட்டுக்க வருமானம் கிடைத்துவிடும். நூல் நூற்கும் அளவுக்கு நான்
கேவலமாகிவிட்டேனா என்று கேட்பதனால் தான் பிரச்சினையே உருவாகிறது.

குழந்தைகள் உருப்பட

குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் கல்வி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்வது மட்டும்


போதாது. அவர்களுக்கு உழைக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும். படித்து விட்டாலே
உடல்உழைப்பு தேவையில்லை. என்ற ஒரு தப்பான மனோபாவம் நமது
இளைஞர்களிடம் பரவியிருக்கிறது. இது சரியல்ல. நாம்பெறுகின்ற கல்வியாவது நமது
உழைப்பினைச் செம்மைப்படுத்துவதற்கு உதவுவதாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் கடமை

பெரிய படிப்பு படித்து கல்லூரிகளிலிருந்து வெளிவரும் மாணவர்கள் தங்கள்


பொறுப்பில் ஓர் ஐந்து கல்வியறிவு இல்லாத முதியவர்களுக்காவது கல்வி கற்றுத்தர
வேண்டும் என்ற ஒரு கடமையினை மேற்கொள்ள வேண்டும். வேலை கிடைக்காத
பட்டதாரி மாணவர்கள் முதியோர் கல்வியையே ஒரு முழு நேர வேலையாக
மேற்கொள்ள முனைந்தால் அரசாங்கம் கூட நிச்சயமாக உதவும்.

நேரு காண்பித்த பாதை.

நேருஜி நமது தேசம் மற்ற உலக தேசங்களுக்கு சம்மாக முன்னேறுவதற்கு பல


திட்டங்கள்தீட்டி செயற்பட்டிருக்கிறார்.இருந்தும் சுதந்திரம் பெற்று இத்தனைக்காலம்
ஆகியும் நாட்டில் சுபீட்சம் நிலவவில்லையே என்று சிலர் கேட்கிறார்கள்.
தேசம் கொஞ்சங் கொஞ்சமாக சுபீட் நிலையை நோக்கி முன்னேறித்தான் வருகிறது.
நாம் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை நம்மாலேயே புரிந்துகொள்ள முடிவதில்லை.
எப்போதுபார்த்தாலும் அதிருப்தி பட்டுக்கொண்டும் குறை கூறிக்கொண்டும்
இருப்பதுதான் அரசியல் என்று நினைப்பதால் நம்மை நானே ஏமாற்றிக் கொள்கிறோம்.
மற்றபடி நேருஜி வகுத்தளித்த பாதையில் நாடு முன்னேறுக்கொண்டுதான் வருகிறது.

மாணவர்களும் அரசியலும்

மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா என்று கேட்கிறார்கள். என்னைக் கேட்டால்


ஈடுபடலாம் என்று சொல்வேன். ஆனால் நான் சொல்லக்கூடிய அரசியல் வேறு.
அரசியல் என்றால் கட்சி, சண்டை என்று ஏன் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்?
அரசியல் என்றால் பொது நல சேவை என்று ஏன் நினைக்கக்கூடாது. மாணவர்கள்
படித்த நேரம் போக தங்களால் இயன்ற அளவு அக்கம்பக்கத்து ஏழை எளிய
ஜனங்களுக்கு உதவி செய்வதைக் கடமையாக்க் கொள்ள வேண்டும். மாணவர்கள்
எதைச் செய்வதாக இருந்தாலும் அவர்களுடைய கல்விக்கு அது ஊறுவிளைவிப்பதாக
இருக்கக் கூடாது.

அகிம்சை வழி

மகாத்மா காந்தி அடிக்கடி அகிம்சை என்று சொன்னார்.அகிம்சை என்றால் ஏதோ


புரிந்துகொள்ள முடியாத விஷயம் என்பது போல் எண்ணுகிறார்கள்.எந்த
விஷயத்தையும் சகிப்புத் தன்மையுடன் அணுக வேண்டும்.மனத்தாலும் பிறருக்கு
தீங்கு நினைக்கக் கூடாது.பிறர் நமக்கு இழைக்கும் தீங்குகளை மறந்து அவர்களுக்கு
நன்மையே செய்தால் தீங்கு இழைத்தவர்களும் திருந்தி விடுவார்கள்.நான் புரிந்து
கொண்ட அகிம்சை இதுதான்.ஆனால் அகிம்சையைப் பற்றி இதுதான் தீர்மானமான
அர்த்தம் என்று எண்ணிவிடக்கூடாது.

நட்பை வளர்க்கவும்

இளைஞர்கள் பிறருடம நட்பை வளர்த்துக் கொள்வதை ஒரு லட்சிய


நோக்காக்கொண்டு செயற்பட வேண்டும். ஒருவனை விரோதித்துக்கொள்வதை விட
அவனுடன் நட்புடன் பழகுவது மிகவும் சுலபமான செயல். காந்திஜி நமக்கு
எவ்வளவோ தொல்லை தொந்தரவுகளைச் செய்த வெள்ளையர்களை என்றுமே
விரோதியாக பாவித்ததில்லை. அவர்களை எப்போதுமே நண்பர்களாகத்தான்
கருதினார். அதனால்தான் பிரிட்டிஷ் ஆட்சியின்பிடிப்பிலிருந்து விலகிக்கொண்டு
விட்ட பிறகும் பிரிட்டிஷ் ஆட்சி நமக்கு பலவித்த்தில் உதவியும் ஒத்துழைப்பும் தந்து
கொண்டிருக்கிறது.
கிராமமும் நகரமும்

கிராமத்தில் வாழும் மக்கள் நகரங்களிங் நிலவும் பகட்டான வாழ்க்கை நிலையைப்


பார்த்துவிட்டு அது தான் உயர்ந்த வாழ்க்கை என்று எண்ணி அதைக் காப்பியடிக்கத்
தொடங்கியிருக்கிறார்கள். கிராமத்தின் வளங்களையெல்லாம் சுரண்டித்தான்
நகரங்கள் மினுக்குகின்றன என்ற உண்மை கிராமத்து மக்களுக்கு தெரியாது. கிராம்ம்
இல்லாவிட்டால் நகரங்களின் பகட்டே இல்லை. இதுதான் உண்மையான நிலை.

சோவியத் யூனியனில்.

அவரவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வேலையை அவரவர்கள், கவனத்துடனும்


செய்துகொண்டிருப்பதை சோவியத் யூனியனில் கண்டேன். நமது மக்கள்
கற்றக்கொள்ள வேண்டிய பண்புகளில் இதுவும் ஒன்று என்று எனக்குத் தோன்றுகிறது.

கட்சியும் ஆட்சியும்

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சி ஆட்சி செய்த நன்மைகளை முதலில்
மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு குறை இருந்தால் கூற வேண்டும்.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் யார் என்று தனிப்பட்ட நபர்களைக் கவனிக்காகமல்
அந்த அரசாங்கம் என்ன சாதித்திருக்கிறது என்பதைக் குறித்துத்தான் கணக்குப்போட
வேண்டும்.

நமது வலிமை

பாகிஸ்தான் இரண்டு முறை நம்மீது படையெடுத்தபோது அவர்கள் முயற்சியை


முறியடித்து நமது வல்லமையைக் காட்டினோம். சீனா படையெடுத்தப்போதும் நமது
பலத்தை நிரூபித்தோம். நமக்கு வலிமை இருக்கிறது. என்பதற்காக நமது தேசம்
எல்லோரிடமும் சண்டையிடும் என்று எண்ணக்கூடாது.

நம்முடம் வந்து மோதியவர்களே நமது நட்பினை நாடிப் பின்னால்


வந்ததைப்பார்த்தோம். வலிமை வாய்ந்த நாடான சீனாவும் நம்முடன் நட்புறவுடன்
வாழ விரும்புவதாக்க கூறுகிறது. இதற்குக் காரணம் நமக்கு யாரிடமும் பகைமை
உணர்ச்சி இல்லை. இதுதான் மகாத்மா நமக்குக் கற்றுத்தந்த பாடம்.

சுயமுயற்சி தேவை

இளைஞர்கள், எல்லவாவற்றுக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக்


கொண்டிருக்கக்கூடாது.
நமது தேசத்தில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை
பேரையும் அரசாங்கம் தனித் தனித்தனியாக கவனித்து உபசரிக்கும் என்று
இளைஞர்கள் எண்ணிவிடக்கூடாது. தங்களுக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்
கொள்ள ஒவ்வொரு இளைஞரும் திட்டமிட்டு முயற்சிக்க வேண்டும். தங்கள்
முனேற்றத்துக்கு ஆட்சியின் உதவியை இரண்டாம் பட்சமாகத்தான்
எதிர்பார்க்கவேண்டும்.

காந்திஜி கற்றுக்கொடுத்தது.

மகாத்மா காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார் என்ற ஒன்றை மட்டும்


தான் நமது இளைஞர்கள் தெரிந்து வைத்திர்க்கிறார்கள். காந்திஜி வாழ்க்கையின்
ஒவ்வொரு அம்சத்துக்கும் வழிகாட்டியிருக்கிறார் என்பது பலருக்கத் தெரியாது.
அதனால்தான் இளைஞர்கள் மாணவர்கள் ஒரு தடவையாவது மகாத்மாகாந்தியின்
சுயசரிதையைப் படிக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

பத்திரிக்கைகள் கடமை

சுதந்திரப்போராட்டம் நடந்த காலத்திலும் ஒரு சில பத்திரிகைகள் இருந்தன. ஆனால்


இக்காலத்தில் இருப்பது போல் அவ்வளவு அதிகமான பத்திரிகைகள் இல்லை.
இருந்தாலும் அந்த மிகவும் குறைவான அளவு பத்திரைகளை செய்த அடக்கமான
சேஐயை இந்தக் காலப் பத்திரிகைகள் செய்கின்றன என்று கூறமுடியாது.

இன்றைய பத்திரிகைகளைக் குறை கூறுவதற்காக இதனைக் கூறவில்லை. இன்றைய


சூழ்நிலை வேறு. அன்றைய சூழ்நிலை வேறு. இன்று வெறும் பொழுது
போக்குக்காகவே பத்திரிகைகள் சில உள்ளன.

அந்தக் காலத்தில் ஏதாவது லட்சிய நோக்குடன் தான் செயல்பட்டன. இன்றும்


பத்திரிகைகளால் எவ்வளவோ சாதிக்கமுடியும். பத்திரிக்கைகளை எந்த நோக்கத்துடன்
வெளியிட்டாலும் ஓரளவுக்காவது மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை இருக்க
வேண்டும். மிகவும் சிறந்த முறையில் தொண்டாற்றும் பல பத்திரிகைகள் இன்றும்
இருக்கின்றன. இந்தப் பட்டியலில் இன்னும் பல பத்திரிகளும் இடம் பெற வேண்டும்.

பெரியோரைப் பின்பற்றுக

வாழ்க்கையில் அரிய சாதனைகள் செய்து உயர்ந்திருக்கும் யாராவது ஒரு தலைவர்


மகான், விஞ்ஞானி போன்றவர்களை வழிகாட்டிகளாக்கொண்டு மாணவர்கள் தங்கள்
அறிவை – லட்சியத்தை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
அப்பொழுதுதான்ஒவ்வொரு இளைஞரும் ஏதாவது ஒரு வழியில் வாழ்க்கையில்
துரிதமாக முன்னேற முடியும்.

நினைப்பதையே பேச வேண்டும்.

நாம் நினைப்பது ஒன்று பேசுவது ஒன்று என்று இருப்பது நம்மை என்றோ ஒருநாள்
அபாயகரமான நிலைக்கு உள்ளாக்கிவிடும். நாம் மனதில் நினைப்பதையே
வாய்விட்டுப் பேசும்போது நமக்குச் சிரம்மாக இருப்பதில்லை. ஆனால் நினைப்பது
வேறு பேசுவது வேறு என்று பேசும்போது நமக்குச் சிரம்மாக இருக்கும்.

மந்திரிப் பதவியும் மக்களும்

மந்திரி பதவி போன்ற உயர் பதவியில் இருப்பவர்களைக் கண்டு சாமானிய மக்கள்


மிரண்டு விலகிச் செல்ல நினைக்கிறார்கள்.

மந்திரிகள் போன்றவர்களை மக்களின் சேவகர்கள் தான் என்பதையும், அவர்கள்


தாங்கள் செய்யும் பணி குறித்து பொது மக்களுக்கு விவரம் தெரிவிக்கக்
கடமைப்பட்டவர்கள் என்பதையும் சாமானிய மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள
வேண்டும்.

இளைஞர்களுக்கு அரசு உதவி

மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உதவுவதற்கு அரசாங்கம் எவ்வளவோ


திட்டங்களை வகுக்கிறது. செலவுக்கு பணத்தை ஒதுக்குகிறது. ஆனால் அந்தத்
திட்டங்களும் பணமும் நியாயமான முறையில் செலவிடப்பட முடியாமல்
போய்விடுகிறது. இதற்கு அரசாங்கத்தைக் குறை சொல்லிப் பயனில்லை.
மாணவர்களும் இளைஞர்களும் முன் வந்து முயற்சியெடுத்து அரசாங்க உதவிகளைப்
பயன்படுத்திக் கொள்வதில்லை. இந்தக் குறைபாட்டை இளைஞர்கள் மாற்றிக்கொள்ள
வேண்டும்.

உழைப்பும் பயனும்

உழைத்துப் பாடுபடுபவர்கள் தங்கள் உழைப்புக்கான பலனைப் பெற முடியாமல்


போனால் அதற்கு யார் காரணமாக இருக்கிறார்களோ அரவ்களைச் சமூகத் துரோகிகள்
என்று கருத வேண்டும்.

உழைப்பவர்கள் தங்கள் உரிமைகளையும் பயனையும் அடைய முடியாத நிலை ஓர்


அரசின் நிர்மவாகத்தில் இருக்கிறது என்றால், அந்த அரசு சரியாக செயற்படவில்லை
என்று கருதப்பட வேண்டும்.
சோம்பேறிப் பொழுதுபோக்கு

சோம்பேறித் தனமாகப் பொழுது போக்க யாருக்குமே உரிமை கிடையாது. முக்கியமாக


இளைஞர்களுக்கு உரிமை கிடையாது.

சோம்பேறிகளாக தான் வாழ்வோம் என்று யாராவது சொன்னால் உங்களுக்குச் சோறு


போட யாருக்கும் அக்கறை இருக்கவில்லை என்று திட்டவட்டமாக்க் கூறிவிட
வேண்டும்.

சோம்பேறித் தனமாகப் பொழுது போக்குவதை ஒரு குற்றம் என்று அறிவித்து அதற்குத்


தண்டனை கொடுப்பது கூட நியாயம் என்று எனக்குத் தோன்றுகிறது.

கலை, இலக்கியம்

கலைகள் குறித்தும் இலக்கியங்கள் குறித்தும் பலர் பேசுகிறார்கள். இவை பற்றி


நுணுக்கமாக என்னால் பேசமுடியாது. ஆனால் சிலர், கலைகளும் இலக்கியமும்
மக்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லாமல் வெறும் பொழுது போக்கிற்காக
மட்டுந்தான் பயன்படுத்த முடியும் என்று பேசுவதை என்னால்புரிந்துக் கொள்ள
முடியவில்லை.

மக்களுக்குப் பிரயோசனப்படாத ஒன்று உலகத்தில் இருந்து என்ன பயன்? கலைகளும்


இலக்கியங்களும் மக்களுக்கு ஏதாவது ஒரு வித்த்தில் புத்தி சொல்ல்லுவனாக இருக்க
வேண்டும். வழிகாட்டுவனவாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.

சுயநலம் கூடாது.

நீங்கள் உங்கள் வாழ்க்கைக்காக என்று எந்தத் தொழிலைச் செய்தாலும், அல்லது


எந்த்த் துறையில் ஈடுபட்டாலும் , சமுதாயத்தில் நான் மட்டும் தனியான மனிதர்கள்
அல்ல என்பதை மறந்து விடக்கூடாது. எனக்காக மட்டுமே வேலை செய்கிறேன். –
எனக்காக மட்டுமே சம்பாதிக்கிறேன் என்ற சுயநல நோகம் கூடாது.

நம்மால் முடிந்த அளவுக்குப் பிறருக்கு உதவு வேண்டும் என்ற மனிதாபிமான உணர்வு


நமக்கு இல்லாவிட்டால் வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லாது போய்விடும். சமூக
வாழ்க்கையில் சுய நலத்துக்கே இடமில்லை.

பிடிவாதம் கூடாது.
எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் சரி, அல்லது பெரிய பிரச்சினையாக
இருந்தாலும் சரி. தன்னுடைய கருத்தே முடிவான கருத்து என்று யாரும் பிடிவாதமாக
இருக்கக்கூடாது. சகிப்புத் தன்மையும் விட்டுக்கொடுத்து விவாதிக்கும் பண்பும் அமைய
வேண்டும்.

காந்தியிடம் அமைந்திருந்த மிகவும் உயர்ந்த குணங்களில் இம்மாதிரி


விட்டுக்கொடுத்துவிவாதிக்கும் முறை குறிப்பிடத்தக்கதாகும். காந்திஜியிடம் பலர்
பலவிதமான கருத்துக்கள் குறித்து விவாதிப்பதுண்டு. எல்லாவற்றையும் அவர்
ஏற்றுக்கொள்கிறார் என்பதல்ல, ஏற்க முடியாதவற்றையும் மரியாதையுடன்
தெரிவிப்பார். அளவற்ற சகிப்புத்தன்மை இருந்ததுதான் இதற்குக்காரணம்.

You might also like