You are on page 1of 18

இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நோக்கத்தோடுதான் பழகுகின்றனர்.

எதிர்பார்ப்புகள் என்னவோ ஏமாற்றத்தை தரவல்லது. ஆனால் எதிர்பார்ப்பே


இல்லையென்றால் அது மனவிரிசல்களை ஏற்படுத்தும். ஆகவே எதிர்ப்பாருங்கள்.
நீங்கள் எதிர்பார்த்ததுதான் நடக்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்.
எதிர்பார்த்தது நடக்காமலும் போகலாம் என்ற விழிப்புணர்வுடன் இருங்கள்.

உங்களுக்கு யாரையாவது ரொம்ப பிடிச்சுதுன்னா அவங்களோட குறைகள் உங்கள்


கண்ணுக்கு தெரியாது. யார் அவங்களை பற்றி சொன்னாலும் அது காதுலயும்
ஏறாது. அவங்க ரொம்ப பர்பெக்டா தெரியுவாங்க.

உங்களுக்கு யாரை ரொம்ப பிடிக்குமோ, அவர்கள்தான் உங்களை அதிகம்


காயப்படுத்துவார்கள்.

தவறு செய்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்தாலும் அவர்களைத் திருத்த


முயற்சிக்க வேண்டாம். அனைவரையும் சரியானவர்களாக மாற்றுவதற்கான
பொறுப்பு நம்மீது இல்லை. திருத்துவதைவிட உங்கள் மனஅமைதி மிகவும்
விலைமதிப்பற்றது.

உறவை முறிப்பதை விட ஈகோவை கைவிடுவது நல்லது. மரியாதையும்,


சுயகௌரவமும் அவசியம் தான் இருந்தாலும் நட்பையும் உறவையும் நிலை
நாட்ட ஒரு படி கீழ் இறங்கி செல்ல தயங்காதீர்கள்.

பெண்கள் மிகுந்த எதிர்பார்ப்பு கொள்வது கணவனிடத்தில் மட்டும்தான் என்பதை


மறவாதீர்கள். அதனாலேயே கணவர் மீது அதிருப்தி அதிகம் தோன்றுவது சகஜம்.
லவ் - எதிர்பார்ப்பு - உடமை ஆக்குதல் அட்டாச்மண்ட் - ஏமாற்றங்கள் - இதனால்
அதிருப்தி. உறவுக்கோ ,நட்புக்கோ ஏதோ ஒரு சிறிய உபகாரம் செய்து விட்டு
அவர்கள் உங்கள் விருப்பப்படி நடக்கவில்லை என கட்டாயபடுத்தி மரியாதையை
பெறாதீர்கள் .
மனிதர்கள் எப்போதும் மாறுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் தாங்கள் யார்
என்பதை வெளிப்படுத்தி கொள்கின்றனர். அவ்வளவுதான். பீட்ஸா சதுரமாக
இருக்கும், திறந்தால் வட்டமாக இருக்கும். எடுத்தால் முக்கோணமாக இருக்கும்.
மனிதர்களும் அப்படித்தான். பார்த்தால் ஒருமாதிரி, பழகினால் ஒருமாதிரி,
உண்மையில் ஒருமாதிரி.
உங்களால் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்ய முடியாது, அப்படி
முயற்சித்தால், உங்களை நீங்களே இழக்க வேண்டிவரும்.

வாழ்க்கையில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், சிகரெட் நிறுவனங்கள்


தங்கள் சிறந்த வாடிக்கையாளர்களைக் கொன்று குவிக்கின்றனர் மற்றும் ஆணுறை
நிறுவனங்கள் தங்கள் எதிர்கால வாடிக்கையாளர்களைக் கொல்கின்றனர்.

ஒருவரிடம் அதிகத் திறமை இருந்தாலும் அவருக்கு தன்னம்பிக்கையில்லை


என்றால் வெற்றிபெற முடியாது.

குழந்தைகள் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 300 கேள்விகள் கேட்கின்றனர்.

குறட்டை விடுவதையும் கனவு காண்பதையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது.

மூக்கை முடிக்கொண்டவாறே வாய்க்குள்ளால் பாட (humming) முடியாது.


ஒருவருடன் உரையாடும் போது ஒரு வார்த்தை பதில்களை மட்டுமே அவர்
கொடுக்கும் பட்சத்தில், அவர்களுடனான உரையாடலை நிறுத்துவது சிறந்தது.

நம்பிக்கை என்பது எந்த ஒரு விஷயத்திலும், அந்த 'விஷயம் நடந்து விடும்" என்று
நினைப்பது அல்ல. அந்த "விஷயம் நடக்காமல் போனாலும் எனக்கு பெரிய
பிரச்சனை இல்லை, வேறு பார்த்துக் கொள்ள முடியும்" என்று நினைப்பது தான்.

உளவியல் என்பது மனதின் செயற்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல்


முறையில் ஆய்வு செய்வதாகும். இந்த உளவியலின் அடிப்படையில் மனித
மனதினை ஆய்வு செய்து உளவியலாளர்கள் சில கருத்துக்களை
முன்வைத்துள்ளார்கள். அதனடிப்படையில்;

ஒருவரை நீங்கள் சந்திக்கச் செல்லும் போது உங்களை சந்திக்கும் அந்த நபர்


முதலில் நீங்கள் அணிந்திருக்கும் காலணிகளையே பார்ப்பார். இதனை வைத்தே
உங்களை அவர் மதிப்பிட்டுக் கொள்வார் என உளவியல் கூறுகின்றது.
அலுவலகக் கூட்டங்களின் போது உங்கள் மேலாளரின் கண்டிப்பிலிருந்து நீங்கள்
தப்பித்துக் கொள்ள வேண்டுமாயின் அவரது ஆசனத்திற்கு அருகில் நீங்கள் அமர
வேண்டும். ஏனெனில் நமது மனமானது எமக்கு எதிரில் இருப்பவர் மேலேயே
அதிக கவனத்தைச் செலுத்துவதாக அமையும்.
உளவியல் உண்மையின் படி சிகப்பு நிற ஆடைகள் அணியும் பெண்களும், நீல நிற
ஆடைகள் அணிகின்ற ஆண்களுமே அதிகமாக எதிர்பாலினத்தவரை ஈர்ப்பதாக
அமைகின்றது.
தொடர்ச்சியாக 66 முறைகள் ஒரே பழக்கத்தினைச் செய்யும் போது அதுவே உங்கள்
பழக்கமாக மாறிவிடுகின்றது. பழக்கவழக்கங்களே நமது வாழ்க்கையினைத்
தீர்மானிக்கின்றன.
ஒரு முக்கிய பணியில் நீங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அதனுடன்
தொடர்பற்ற சிந்தனைகள் நம்மை வந்து சூழும். சான்றாக பரீட்சை எழுதிக்
கொண்டிருக்கும் சில வேளைகளில் சினிமாப் பாடல் வரிகள் நமது நினைவிற்கு
வருகின்றன. அந்த நேரத்தில் அந்தப் பாடலின் இறுதி வரிகளைப் பற்றி சிந்திக்கும்
போது இயல்பாகவே அந்தப் பாடல் நமது சிந்தனையிலிருந்து விலகிவிடும்.
நீங்கள் இரசிக்கும் இசையானது உலகத்தின் மீதான உங்கள் பார்வையை
மாற்றுகின்ற சக்தி மிக்கது.
நீங்கள் 8 வாரங்கள் தொடர்ச்சியாக தியானம் செய்யும் போது மூளையின் கற்றல்
தொடர்பிலான பகுதி (Grey Matter) அதிக வளர்ச்சியடைகின்றது.
தகுந்த நேரத்திற்கு தூக்கத்திற்குச் செல்லாமை, ஒழுங்காக உணவு வேளைகளைப்
பின்பற்றாமை ஆகிய இரண்டுமே கோபத்திற்கான மிக முக்கிய இரு காரணிகளாகக்
காணப்படுகின்றன.
நாம் அணிகின்ற ஆடைகளே எமது நடத்தைகளைத் தீர்மானிக்கின்றன.
பற்களுக்கு இடையில் பேனாவினை வைப்பதன் மூலம் மூளைக்கு மகிழ்ச்சியான
உணர்வினைக் கொடுக்க முடியும்.
நறுமணம் தரும் வாசனைத் திரவியங்களை உபயோகிப்பவர்களை நுகருகின்ற
போது எம்மை அறியாமலேயே அவர்களின் மீது ஈர்ப்பு உருவாகிவிடும்.
ஒரு ஆண் அவரது அம்மாவின் உடல் எலும்பு அமைப்பினையொத்த
பெண்களினால் அதிகமாக கவரப்படுகின்றார்.
மனதில் அதிகமான சிந்தனைகளை வைத்துக்கொண்டு உறக்கத்திற்குச் செல்லும்
போது நமது மூளை நாம் விழித்திருப்பதாகவே எண்ணுகின்றது. இதனாலேயே
நாம் உறக்கத்திலிருந்து விழித்தெழும் போது சோர்வுடன் இருப்பதாகக்
உணர்கின்றோம்.
ஆண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 12,500 சொற்களையும், பெண்கள் 22,000
சொற்களையும் பேசுகின்றனர்.
ஒருவர் உணவருந்துகின்ற நேரத்தில் எதாவது ஒரு பொருளோ அல்லது நபரோ
அறிமுகமாகினால் அதன் மீது சிறப்பு அபிப்பிராயம் உருவாகின்றது.
மஞ்சள், செம்மஞ்சள் மற்றும் சிவப்பு நிற வண்ணங்கள் பசியினைத் தூண்டக்கூடிய
ஆற்றலுடையவை. ஆகையினாலேயே பெரும்பாலான உணவகங்கள் இந்த
நிறங்களில் அமைகின்றன.
ஒரே விடயத்தில் 20 நிமிடங்களுக்கு மேலதிகமாக கவனத்தினைச் செலுத்திக்
கொண்டிருக்க முடியாது.
குழுவாக இணைந்து மனிதர்கள் பேசும் போது 80% ஆனவை குறைகளுடன்
தொடர்புடையதாகவே காணப்படும்.
உங்களுக்கு ஒரு நபரை பிடித்திருக்கும் சந்தர்ப்பத்தில் அவர் ஏதும் தவறிழைத்து
அவர் மேல் நீங்கள் கோபம் கொள்ளும் போது அந்த கோபம் மூன்று நாட்களுக்கு
மேலாக நீடிக்காது. அவ்வாறு அந்த கோபம் நீடித்தால் அவர் மீது உங்களுக்கு அன்பு
இல்லை என்றே கூற வேண்டும்.
உங்களை யாராவது கவனித்துக்கொண்டிருக்கின்றார்களா என்பதை நீங்கள்
இலகுவாகத் தெரிந்து கொள்வதற்கு கொட்டாவி விடுங்கள். ஏனெனில் யாரும்
கொட்டாவி விடுவதைப் பார்க்கும் போது அல்லது நினைக்கும் போது நிச்சயமாக
அந்த நபருக்கும் கொட்டாவி வந்துவிடும்.
நீங்கள் கோபமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் எண்களை இறங்கு வரிசையில்
எண்ணும் போது (10,9,8,7…) கோபத்தின் வீரியம் குறைவதற்கு அதிக வாய்ப்புக்கள்
உள்ளன.
1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமிருதசரசு நகரிலுள்ள சீக்கியர்களின் முக்கிய
கோயிலான பொற்கோயிலை இந்திய இராணுவத்தினர் தாக்கிய புளூஸ்டார்
நடவடிக்கையால் பொற்கோயில் பெரிதும் சேதமடைந்தது. இந்நடவடிக்கையின்
எதிர்விளைவே இவரது படுகொலையாகும்.

அயர்லாந்து நாட்டுத் தொலைக்காட்சிக்காக ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்த


பிரித்தானிய நடிகர் பீட்டர் உஸ்தொனோவிற்குப் பேட்டியளிப்பதற்காக 1984 ஆம்
ஆண்டு, அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் காலை 09:20 மணிக்கு இந்திராகாந்தி
புதுதில்லி, சப்தர்ஜங் தெருவிலமைந்துள்ள அவரது வீட்டுத் தோட்டத்திலிருந்து
அடுத்தமைந்துள்ள அக்பர் வீதியிலுள்ள அலுவலகத்திற்குச் சென்று
கொண்டிருந்தார்.

அங்கிருந்த சிறுவாயிலை அவர் கடக்கும்போது அவ்வாயிலைக் காத்துநின்ற


அவரது பாதுகாவலர்கள் சத்வந்த் சிங், பீண்ட் சிங் இருவரும் அவரைச் சுடத்
தொடங்கினர். பீண்ட்சிங் இந்திராகாந்தியின் அடிவயிற்றில் மூன்றுமுறையும், கீழே
விழுந்துவிட்ட இந்திராகாந்தியை சத்வந்த் சிங் இயந்திரத் துப்பாக்கியால் 30
முறையும் சுட்டனர்.

சுட்டபின்பு இருவரும் தமது ஆயுதங்களைக் கீழெறிந்து விட்டனர். பீண்ட் சிங்


"நான் செய்யவேண்டியதை செய்து விட்டேன். நீங்கள் செய்ய விரும்புவதைச்
செய்து கொள்ளலாம்." எனக் கூறினார்.

ஒருவரின் மீது 3 நாட்களுக்கு மேல் நம் கோபம் நீடிக்காது. அப்படி நீடித்தால்


அவர்களிடம் நமக்கு எந்தவித அன்பும் இல்லையென்றே அர்த்தம்.

* ஓட்டல்களில் மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணத்தை அதிகம்


உபயோகிப்பதை கவனித்திருக்கலாம். காரணம், இந்த வண்ணங்கள் அதிக பசி
உணர்வைத் தூண்டக்கூடிய ஆற்றல் பெற்றவை.

* பெண்கள் ஒரு முடிவை எடுக்க ஆண்களைவிட அதிகநேரம் எடுத்துக்


கொள்கிறார்கள். முடிவுகளில் விட்டுக்கொடுக்காதவர்களாகவும் பெண்கள்
இருக்கிறார்கள்.
* சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றித்தானே பெருமையாக செய்தி
வெளியிடும்போது கிடைக்கும் சந்தோஷம், போதைப்பொருட்களைப்
பயன்படுத்தும்போது கிடைக்கும் மயக்கத்துக்கு இணையானது.

* மற்றவர்களை கவனிக்காவிட்டாலும், மற்றவர் நம்மைப் பார்ப்பதை


உணரக்கூடிய உள்ளுணர்வு ஒவ்வொரு வருக்கும் உண்டு.

* தன் பணத்தைத் தனக்காக செலவிடும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட,


மற்றவர்களுக்காக பணத்தை செலவழிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அதிகம்.

* ‘உன்கிட்ட தனியா பேசணும்’ என்று யாரேனும் சொல்லும்போது, சமீபத்தில்


செய்த தவறுகளையெல்லாம் மனது பட்டியலிட ஆரம்பித்துவிடுகிறது.

* உடலில் ஏதேனும் காயம் உண்டாகும்போது மூளையில் ஏற்படும் ரசாயன


மாற்றங்களே, ஒருவர் நம்மை புறக்கணிக்கும்போதும் மூளையில் ஏற்படுகிறது.

* நீங்கள் யாரை அதிகம் விரும்புகிறீர்களோ அல்லது யாரை அதிகம்


வெறுக்கிறீர்களோ அவர்களே உங்கள் கனவில் அதிகம் வருகிறார்கள்.

* சந்தோஷத்தால் ஒரு மனிதன் அழும்பொழுது முதல் கண்ணீர் துளி வலது


கண்ணிலும், கவலையான தருணங்களில் அழும்போது முதல் கண்ணீர் துளி இடது
கண்ணிலும் வரத் தொடங்கும்.

சிலர் உறங்கும் போது அதிக தலையணைகள் தலைக்கும் தன்னைச் சுற்றியும்


வைத்துக்கொண்டு உறங்குவார்கள். அவ்வாறு அதிக தலையணைகள்
வைத்துக்கொண்டு உறங்குபவர்கள் பெரும்பாலும் தனிமையிலும் ‌ மன
அழுத்தத்திலும்‌இருப்பவர்கள்.

உங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களின் ‌ குறுஞ்செய்திகளை வாசிக்கும்பொழுது


உங்கள் மனம் அந்தக் குறுஞ்செய்திகளை அவர்களின் குரலில் வாசிப்பதை
உணரலாம்.

உங்கள் தலையை வலதுபக்கமாக சற்று மேல் நோக்கி சாய்த்துப் பார்க்கும்போது


வழக்கத்தை விட வசீகரமானவராக தெரிவீர்கள். ஃபோட்டோக்கு போஸ் குடுக்கும்
போது இத ட்ரை பண்ணிப் பாருங்க...
நாம் இவ்வளவு அழகானவர்கள் என்று நாம் எண்ணிக்கொண்டிருப்போம்
அல்லவா! உண்மையிலேயே அதைக்காட்டிலும் நாம் 20% அதிக வசீகரத்துடன் பிறர்
பார்வைக்குத் தெரிவோமாம்.

நீங்கள் கடும் ‌ கோபக்காரராகக் கூட ‌ இருக்கலாம். ஆனால் உங்கள் மனதுக்குப்


பிடித்தவர்‌‌எனில் உடனே‌மன்னித்து விடுவீர்கள்.

நீங்கள் கண்ணாடியின் முன் நின்று அடிக்கடி பேசிக் கொள்வீர்களா, கண்ணாடியில்


உங்கள் முகத்தைப் பார்த்து அடிக்கடி ஊக்கப்படுத்திக் கொள்பவரா?!! ஆம்‌ எனில்
நீங்கள் மற்றவரைக் காட்டிலும் மனபலம்‌வாய்ந்தவர்!!

பொதுவாக மனிதர்கள் ஏதாவது ஒன்றை நினைத்து அழும்போது இதற்கு முன்


நடந்த வேறு சில கசப்பான ‌ அனுபவங்களையும் நினைத்து ‌ அதிகமாக
அழுகிறார்கள். அதாவது அழுகையை அதிகப்படுத்த வேறு சில சம்பவங்களையும்
துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள்.

பெரும்பான்மையான மக்கள் வலது கையை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.


சிலர் இடது கையை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். நீங்கள் எந்தக் கையை
குறைவாகப் பயன்படுத்துகிறீர்களா அந்தக்‌கையைக் கொண்டு சில இயல்பான‌
வேலைகளைச் (பொருள்களை எடுத்தல், பல் துலக்குதல், கதவு, சன்னல்கள்
திறத்தல்/மூடுதல், இது போல நிறைய...) ‌செய்ய முயலுங்கள். இவ்வாறு இரண்டு
வாரங்களுக்குத் தொடர்ந்து செய்து வந்தால் உங்களின் சுயக்கட்டுப்பாட்டு உணர்வு
அதிகமாகுமாம்.

அதிக IQ திறன் கொண்டவர்கள் பெரும்பாலும் Insomnia எனப்படும் தூக்கமின்மை


நோயால் பாதிக்கப்படுகிறார்களாம்.

99% மக்கள் தங்களைப் பார்த்து யாரேனும் ‌" நான் உங்களிடம் ஒரு கேள்வி
கேட்கவா? " என்று கேட்டால் பீதி அடைவார்களாம்.

ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணைப் பிடித்து விட்டால் மற்றவர்களைக் காட்டிலும்


அவரிடத்தில் மட்டும் அதிக சத்தமாகவும் உற்சாகமாகவும் பேசுவாளாம்.

பெரும்பாலும் தன் காதலை முதன்முதலில் வெளிப்படுத்துவது பெண்களே‌.


ஒருவர் உங்களிடத்தில் மற்றவர்களைப் ‌ பற்றி பேசும் விதத்தைக் கூர்ந்து
கவனியுங்கள். ஏனெனில் உங்களைப் ‌ பற்றியும் மற்றவர்களிடத்தில் இதே
போலத்தான் பேசுவார்கள்.

ஏழு வருடத்திற்கும் மேலே ஒரு நட்பு தொடர்கிறது என்றால் அது வாழ்நாள் காலம்
முழுவதும் தொடர்ந்து நீடிக்கும்.

மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை


பலவீனமானவராக காட்டும்..மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது
உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!

மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள். நீங்கள்


பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்.

நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர்


உங்களை சோம்பேறி என நினைக்கக்கூடும். பேசும்போது முடியை கோதிக்
கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப்படுத்துவதையோ
தவிர்க்கவும்… அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.

நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது


உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..

நம்பிக்கையோடு கூடிய புன்னகை , நீங்கள் சொல்வதைகேட்க விரும்பாதவரையும்


கேட்கவைக்கும்..

குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும். உங்கள்


பேச்சை விளக்குவதற்கு , உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள்
சொல்வதை மேலும் விவரிக்கும்.

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்.

நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும்


சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.
உங்களை நீங்களே ரசியுங்கள்.. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை
என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய்
எதிர்த்துத் சொல்லுங்கள். இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப்
பேசத் தெரியாதென்று..

உங்களால் எது முடியாது… உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும்


சொன்னாலும்.., அதை விரைவில் கற்றுக்கொண்டு முடித்துக்காட்ட வெறித்
தனமாய் முயற்சி செய்யுங்கள்.

என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய்


இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

உங்களுக்கு எதுவும் தெரியாது, எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு


போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை
சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..

கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம்


என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட
நிறைய பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த
வார்த்தைகளைக்கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

அழும் போது தனியாக அழுங்கள்… நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு


யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை
கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்…
உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,.
நிராகரித்தவருக்கே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

1.நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.


2. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே
இருக்காதீர்கள்.

3. எந்த விஷயங்களையும் பிரட்சனைகளையும் நாசூக்காக கையாளுங்கள்.

4. விட்டுக் கொடுங்கள்.

5. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று


உணருங்கள்.

6. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.

7. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

8. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே


சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

9. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்துக்


கர்வப்படாதீர்கள்.

10. அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

11. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம்


உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

12. கேள்விப்படுகிற எல்லா செய்திகளையும் நம்பி விடாதீர்கள்.

13. அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.

14. உங்கள் கருத்துக்களில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்


கொள்ளுங்கள்.
15. மற்றவர் கருத்துக்களைச் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக
புரிந்து கொள்ளாதீர்கள்.

16. மற்றவர்களுக்கு உரிய மரியாதை காட்டவும் இனிய இதமான சொற்களைப்


பயன்படுத்தவும் தவறாதீர்கள்.

17. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட


நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

18. பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத


மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

19. சொந்தங்களையும், நண்பர்களையும் அவ்வப் போது நேரில் சந்தித்து மனம்


திறந்து பேசுங்கள்.

20. பிரட்சனை ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று


காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.
விவாகரத்து அதிகரிக்கக் காரணங்கள்

திருமணமான புதிதில் கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும்


உயிரைக் கூட விடத் தயாராக இருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள்தாம்
இப்படி மாறிவிட்டார்கள். இதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.

திருமண் உறவில் இணையும் தம்பதியர் கூட்டுக்குடும்பத்தை அறியாதவர்கள்.


ஆணும் பெண்ணும் பெரும்பாலும் அவர்கள் பெற்றோர்களுக்கு ஒரே
ஓருபிள்ளையாக இருப்பதையும் பார்க்கலாம். ஒரே பிள்ளையாக வளர்க்கப்படும
குழந்தைகளுக்கு விட்டுக்கொடுப்பதும் அடுத்தவருடன் ஒத்துப்போவதும
அவ்வளவு எளிதில் வருவதில்லை.

அதிகமான விவாகரத்துகளுக்கு வலுவான காரணங்கள் இருக்கிறதா என்பதை


ஆராயும் போது அதிர்ச்சிகரமாக சில காரணங்கள் தெரியவருகின்றன.

சில சமயங்களில் கணவன், மனைவியின் தாய், தந்தையாரே விவாகரத்துக்கு மிக


முக்கியக் காரணகர்த்தாவாக இருக்கின்றனர். சிறு, சிறு பிரச்சனைகளைக் கூடப்
பெரிய பிரச்சனைகளாக மாற்றி விவாகரத்துக்கு உட்படுத்துகின்றனர்.

"கணவன் - மனைவிக்கு இடையேயான உரசல்களின் உச்ச கட்டம்தான்


விவாகரத்து.

மற்ற தீர்வுகள் எதுவுமே கை கொடுக்காத நிலையில், இது ஒரு தீர்வாக மாறுகிறது.

விவாகரத்துக்கு மிக முக்கியக் காரணம், எதிர்பார்ப்பு.

1) அதீதமான எதிர் பார்ப்பு ! கணவனிடம் மனைவிககும், மனைவியிடம்


கணவனுக்கும் இருப்பதனால்,

2)கணவன், மனைவியின் ஆசைகளை, தேவைகளைப் புரிந்து கொள்ளமாட்டார்.


அதுபோல மனைவி, கணவனுடைய ஆசைகளைத் தேவைகளைப் புரிந்து கொள்ள
மாட்டார். இதனால் குடும்பத்தில் நிறையப் பிரச்னைகள் வருகின்றன.

3) கணவனும், மனைவியும் திருமணம் ஆவதற்கு முன்பு, பிறந்து வளர்ந்து வாழ்ந்த


சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கும். கணவன், மனைவி இருவருக்கும்
வெவ்வேறான தேவைகள் இருக்கும். ஆனால் என் ஆசைக்கும், தேவைக்கும் ஏற்ற
மாதிரி நீ மாற வேண்டும் என்று கணவனோ, மனைவியோ ஒருவரையொருவர்
எதிர்பார்ப்பார்கள்; கட்டாயப்படுத்துவார்கள். தன்னுடைய ஆசைகளை,
தேவைகளைப் பிறர் மீது திணிப்பார்கள்.

4) கணவன் மனைவியை, மனைவி கணவனை அடக்கி ஆழ வேண்டுமென


நினைப்பதனாலும், திருமணம் ஆன நாளில் இருந்து ஒருவரை ஒருவர்
கட்டுப்படுத்த ஆரம்பிப்பார்கள். இதனால் சுதந்திரம் பறிபோகிறது என்ற எண்ணம்
வரும். அவர்கள் யாராக இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுகொள்ளாமல் நமக்கு
ஏற்ற மாதிரியான ஆளாக மாற்ற முயற்சிப்போம். இந்தப் போராட்டம் நான்கு
ஆண்டுகள் தொடரும். இதைத் தாண்டி வருபவர்களுக்கு ஒருவித புரிதல்
உண்டாகிறது. ‘ஓ.கே! இது இப்படித்தான் இருக்கும்’ என நினைத்து ஒருவருக்கு
ஒருவர் விட்டுக்கொடுத்து ஏற்றுக்கொள்கின்றனர்.

5) என்னடா வாழ்க்கை இது? இவளைப் போய் கல்யாணம் பண்ணிக்


கொண்டோமே என்று ஆண்களும் இவரைப் போய் கட்டி வைத்துவிட்டார்களே
என்று பெண்களும் புலம்புவார்கள். வீட்டுக்கு வந்தால் நிம்மதியாக இருக்க
முடியவில்லை என்று சொல்வார்கள். அப்பா, அம்மா கட்டி வைத்துவிட்டார்கள்,
அவர்களுக்காகப் பார்க்கிறேன். இல்லையென்றால் பிரிந்துவிடுவேன் என்பார்கள்.
குழந்தைகளுக்காகச் சேர்ந்து வாழ்கிறேன் என்பார்கள். இவையெல்லாம் இந்த
"கமிட்மென்ட் ஃபோபியா'வின் அறிகுறிகள்.

6) புரிந்து நடந்து கொள்ளும் தன்மை இன்மை:

ஒருவருடைய மனதுக்குப் பிடித்த ஒரு விஷயம், உலகத்தில் உள்ளவர்களுக்கு


எல்லாம் முட்டாள்தனமாகத் தெரியலாம். ஆனால் அவருக்கு அது பெரிது. இதை
முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவருக்குப்
பிடித்த ஒரு விஷயத்தை இகழக் கூடாது.

7)கணவனும், மனைவியும் நேர் எதிரான எண்ணங்கள், பழக்க, வழக்கங்கள்


உடையவர்களாக இருப்பார்கள்.

எடுத்துக்காட்டாக, கணவன் மிகவும் கஞ்சனாக இருப்பார்.மனைவி தாராளமாகச்


செலவு செய்வார்.

வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பார். மனைவி


வீட்டைச் சுத்தம் செய்யமாட்டார். போட்டது போட்டபடியே கிடக்கும்.
கணவன் குழந்தைகளுக்கு மிகவும் செல்லம் கொடுப்பார். அவர்களை அடிக்கக்
கூடாது என்று நினைப்பார். மனைவி குழந்தைகளுக்குச் செல்லம்
கொடுக்கமாட்டார். அடித்து, கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்.

மனைவி எப்போது பார்த்தாலும் கோயில், குளம் என்று வெளியே சுற்றி வருவதில்


ஆர்வமுடையவராக இருப்பார். கணவனோ அலுவலகம், வீடு தவிர வேறு எங்கும்
போக விரும்பமாட்டார்.

மாமனார் வீட்டில் தான் விரும்பிய அளவுக்கு மரியாதை தரவில்லை என்று


கணவனுக்கு மனக்குறை இருக்கும். அதனால் மனைவியை அவருடைய அம்மா
வீட்டுக்குப் போக கணவன் அனுமதிக்க மாட்டார். மனைவிக்கோ தனது அப்பா,
அம்மாவைப் பார்க்க அதிக விருப்பம் இருக்கும்.

இப்படி நேர் எதிரான எண்ணங்கள், பழக்கவழக்கங்கள் பல குடும்பங்களில்


இருக்கின்றன.

இதனால் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்படுகின்றன. பின்னர் அவை


வெறுப்பாக வளர்கின்றன. பிரிந்துவிடும் அளவுக்கு இட்டுச் செல்கின்றன.

விவாகரத்து நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

திருமணம்பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தவழ்கிறோம்,


நடக்கிறோம், பேச ஆரம்பிக்கிறோம். அதுபோல திருமணம் என்பது இன்னும் ஒரு
நிலை. அந்த நிலையில் பொறுப்புகள் வர வேண்டும். இருவரும் அடுத்தவரின்
விருப்பம், அபிப்ராயம், ரசனை, வேலைப்பளு போன்றவற்றை புரிந்து நடக்க
வேண்டும்.

இரு பாலரும் ஒருவருக்கொருவர், விட்டுக் கொடுத்தால் விவாகரத்து


தேவையில்லை!

முதலில் ஆணின் இயல்பும் பெண்ணின் இயல்பும் வேறு. ஆணுக்கு பெண்ணின்


உடல் பெரிதாகத் தோன்றும். பெண்ணுக்கு ஆணின் அன்புதான் பெரிதாகத்
தோன்றும். இந்த இயல்பை இருவரும் புரிந்து கொண்டு நடந்தால் நிறையப்
பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம்.
தன் கருத்தைப் பிறர் மீது திணிக்க எப்போதும் முயற்சிக்கக் கூடாது. அடுத்தவரின்
தேவையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் அடிக்கடி
அன்பாகப் பேசிக் கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ள
வேண்டும். அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் சிலர், ஓரிரு ஆண்டுகளுக்குள்ளேயே


மண விலக்கு கேட்கும் அளவுக்கு வந்துவிடுகிறார்கள். இதற்குக் காரணம்,
காதலிக்கும்போது ஆண், பெண் இருவருக்கும் ஈர்ப்பும், அன்பும்தான் இருக்கும்.
புரிதல் இருக்காது. நல்ல திருமண வாழ்க்கைக்குப் புரிதல் அவசியம்.

இவற்றை இல்வாழ்க்கையில் சிக்கல் உள்ளவர்களிடம் சொன்னால் ஏற்றுக்


கொள்வார்கள். ஆனால் தங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். மாற்றிக்
கொள்ளவும் அவர்களால் முடியாது. இதற்குக் காரணம், விருப்போ, வெறுப்போ,
ஒருவிஷயம் பிடிப்பதோ, பிடிக்காமல் இருப்பதோ இவை எல்லாமும்
அவர்களுடைய ஆழ்மனதில் பதிந்து போய் இருக்கும்.

திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்காக வருகிறவர்களுக்கு,


அவர்களுடைய ஆழ்மனதில் பதிந்து போயிருக்கும எண்ணங்களை மாற்றினால்.
அதற்குப் பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ முடியும். .

நம்மைத் தாழ்த்திப் பேசும்போது அடக்கமாய் இருத்தல் பெரிய காரியமன்று,


நம்மைப் புகழ்ந்துரைக்கும் போது அடக்கமாய் இருத்தலே மிகப் பெரிய
வெற்றியாகும்.

ஒரு பிரச்னை என்று வந்தால், அதை யாரிடமும் அதிகம் பகிர்ந்துகொள்ளாமல்


சரிசெய்ய விரும்புவது ஆணின் உளவியல். ஆனால், அனைவரிடமும் அந்தப்
பிரச்னையைப் பற்றிப் பேசித் தீர்வு காண நினைப்பது பெண்ணின் உளவியல்.
வேறுபட்ட உளவியல் கொண்ட இருவர் சேர்ந்து ஒரு பிரச்னையை
எதிர்கொள்ளும்போது, அவர்களிடத்தே மேலும் ஒரு பிரச்னை தோன்றுவது
இயல்பு.

நம்மில் பலரின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் பெக்கின் வழிமுறைகள் பெரிதும்


உதவும்.

சிந்தனையின் திரிபுகள் நம் எல்லோருக்கும் உண்டு. பிரச்சினைகளின்போது வந்து


போகும். சிலருக்கு அது உறைந்து போய் மிகவும் சகஜமாக எதிர்மறையாக
யோசிக்க வைக்கும். அவை, தவறான முடிவுகளையும் உறவுச் சிக்கல்களயும்
ஏற்படுத்தும்.
கறுப்பு-வெள்ளை சிந்தனை

தர்க்கரீதியில் பிழையானவை எனச் சற்று யோசித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கே


தெரியும். இருந்தும் அதற்குள் அது உணர்வுகளில் கலந்து உறவுகளைப்
பாதித்திருக்கும்.

நம் வீடுகளில் நடக்கும் சிறு சிறு சண்டைகளில் எழும் உரையாடல்களை வைத்தே


அனைத்துவிதமான சிந்தனைத் திரிபுகளையும் கண்டு கொள்ளலாம்.

“ஒண்ணு அவங்க அம்மா சொல்றதைக் கேக்கணும். இல்ல நான் சொல்றதை


கேக்கணும். ரெண்டுல ஒண்ணு முடிவு பண்ணச்சொல்லுங்க..!”

இதை Dichotomous Reasoning என்று சொல்கிறார் பெக். அதாவது கறுப்பு, வெள்ளை


வாதம். “ஒண்ணு அது. இல்லாட்டி இது” என்று ஏதாவது ஒரு துருவத்தைத் தேர்வு
செய்ய யோசிப்பது. நிஜ வாழ்க்கையில் இப்படிக் கறுப்பு - வெள்ளை சிந்தனை
உதவாது. பழுப்பு வண்ணச் சிந்தனைகள் நிறைய தேவைப்படுகின்றன. அம்மாவும்
வேண்டும். மனைவியும் வேண்டும். முதலீடும் செய்யணும். சிக்கனமாகவும்
இருக்கணும் சுதந்திரமும் கொடுக்கணும் பிள்ளைகளுக்கு. பொறுப்பும்
கட்டுப்பாடும் வளர்க்கணும். இப்படியாக, இரண்டும் கலந்த வாழ்வுதான்
நம்முடையது. ஏதாவது ஒன்றுதான் என்று தட்டையாக முடிவு எடுக்க வைக்கும்
சிந்தனை தான் மிக மிக ஆபத்தானது.

இதுவும் அதுவும்

இந்தச் சிந்தனைக்கு இன்னொரு பெயரும் உண்டு. All or none thinking. “ நான்


சொன்னதைக் கேட்டா எல்லாம் கிடைக்கும். இல்லாவிட்டால் எதுவும்
கிடைக்காது!”

தலைமுறைகளாகப் பேசிக்கொள்ளாத குடும்பங்கள் நமக்கெல்லாம் தெரியும்.


அடிப்படையில் இது போன்ற ஒரு சின்னச் சிந்தனைத் திரிபுதான் இருந்திருக்கும்.
அது ஒரு தீவிரமான முடிவை எடுக்க வைத்திருக்கும். காரணம் கூடத் தெரியாமல்
பெரிய பகையைப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். “இது அல்லது அது என்பதற்குப்
பதில் இதுவும் அதுவும்” என்று யோசிக்க இடம் கொடுத்தால் பிரச்சினை அடுத்த
கட்டத் தீர்வை நோக்கி நகரும்!
“அவனை என்னால் நம்ப முடியாதுப்பா. கண்டிப்பா மறுபடியும் உன்னைக்
கழுத்தறுப்பான்!”

வைத்த நம்பிக்கைக்கு ஒரே ஒரு முறை குந்தகம் விளைவித்ததுக்குக் காலம் பூராவும்


‘கழுத்தறுப்பவன்’ என்று பட்டம் தருவது அதீதப் பொதுமைப்படுத்துதல். Over
Generalization. இது நம் மனதின் இயல்பு. கவனமாக இல்லாவிட்டால் இது மிக
இயல்பாக நம் எல்லோருக்கும் வந்துவிடும். ஒரு முறை ஒரு ஓட்டலில் காபி
சரியில்லை என்றால் அந்த ஓட்டல் சரியில்லை என்றுதான் முடிவு கட்டுவோம். 30
முறை போய்ப் புள்ளியியல் ரீதியாகத் தர்க்க ஆராய்ச்சி செய்து மனம் முடிவு
செய்யாது. உடனடியாக ஒரு பொது முடிவு எடுக்கத் துடிக்கும் மனம். ஒரே ஒரு
அனுபவத்தை வைத்துப் பெரிய அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். மனைவின்னாலே
இப்படித்தான். இந்த ஊர்க்காரரிடம் ஜாக்கிரதையாக இரு. அந்தச் சாதிக்காரர்
ரொம்ப கெட்டி. இந்தத் தொழில்னா இப்படித்தான் இருக்கும். ஃபாரின் போனா
இப்படித் தான் இருப்பாங்க. பணம் வந்தா இப்படித்தான் ஆவாங்க என்று பல
பொது முடிவுகள் நம்மிடம் உண்டு.

இந்த எண்ணங்கள் போதிய அனுபவத்தில் வந்தவையா என்று ஆராய வேண்டும்.


பல அபிப்பிராயங்கள் கால ஓட்டத்தில் மாறும். மாற்று எண்ணங்களும் மாற்று
அனுபவங்களும் ஏற்படும்போது பல பொதுமைப்படுத்தல்கள் காணாமல்
போகும். ஆனால், மனதின் ஓட்டத்தில் இப்படிப்பட்ட வேகமான முடிவுகளை
இந்தத் திரிபுகள் நம்மை எடுக்க வைக்கின்றன.

உணர்வுகளின் தாக்கம்

ஒரு பொதுமைப்படுத்தலில் உணர்வுகளின் பங்கு மிக அதிகம். மனம் காயம்


பட்டால் தர்க்கம் செய்யாமல் ஒரு அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்ளும்.
அதனால்தான் உணர்வுகளின் ஆதிக்கம் இல்லாமல் இந்தச் சிந்தனைகளை
ஆராய்தல் அவசியம். முதல் முறையாக, மும்பை செல்கையில் உங்களின் பெட்டி
காணாமல் போனால், மும்பை மீதோ, மும்பை எக்ஸ்பிரஸ் மீதோ தவறான
அபிப்பிராயம் கொள்ளத் தேவையில்லை. இது எந்த ரயிலிலும் நிகழலாம்.

நாம் பத்திரமாக பெட்டியைக் கொண்டு சென்றோமா என்பதுதான் கேள்வி. அதை


விட்டுவிட்டு மும்பை மீது வெறுப்பு கொள்ளுதல் பயன் தராது. ஆனால், மனதில்
உள்ள விரக்தி மும்பைக்காரர்கள் மேல் கோபமாகவும் அவர்களைத் திருடர்களாகப்
பார்க்கும் மனோபாவத்தையும் ஏற்படுத்தும்.

இன்னும் இதுபோன்ற நிறைய சிந்தனைத் திரிபுகள் உள்ளன, ஒவ்வொன்றாய் நம்


வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கலாம்.
யோசியுங்களேன்! நம்மிடம் உள்ள தவறான சிந்தனைகள் பெரும்பாலும் ஒரு சில
அனுபவங்களால் ஏற்பட்டவை தாம். அவற்றைக் காலம் தாழ்த்தி உணர்வுகளின்
தாக்கம் இல்லாமல் ஆராய்ந்தால் அவை காலாவதியான கருத்துகள் என நமக்கே
தெரியும்!

You might also like