You are on page 1of 12

ஒரு மனிதனின் உடல்மொழி என்றால் என்ன?

அது வேறு ஒன்றும் இல்லை, நீங்கள் வேறு ஒருவருடன் பேசும் பொழுது, உங்கள் உடலின் நிலை,
சைகைகள் மற்றும் கண்ணின் அசைவுகள் அனைத்தையும் குறிப்பதே உடல் மொழி ஆகும்.

உடல்மொழி குறித்து விஞ்ஞானம் என்ன கூறுகின்றதென்றால், ஒருவரது உடல் மொழி, அவர் தன்னைப்
பற்றி எப்படி உணர்ந்து வைத்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகின்றது என்பது தான்.

ஒரு மனிதரின் உடல் மொழியிலிருந்தே அவரைப் பற்றி அறிந்து விடலாம்!

 தங்கள் அதிகாரத்தில் நம்பிக்கை உடைய மக்கள் தங்களது உடலை விறைப்பாக வைத்திருப்பர்.


மேலும் அவர்கள் பெரிய கையசைவுகளைக் கொண்டே தங்கள் உணர்வை வெளிப்படுத்துவர்.

 இவர்களுக்கு நேர் மாறாக, தன்மேல் நம்பிக்கை இல்லாத மக்கள் உடலைக் குறுக்கி


வைத்திருப்பர். சிறு கையசைவுகளையே உபயோகிப்பர்.

 வேதியியல் ரீதியாக, உயர் சக்தியுள்ள மக்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவு


அதிகமாக இருக்கும்; மேலும் கார்டிசோல் (cortisol) அளவு குறைந்திருக்கும்.

 இதில் வியப்பூட்டும் விடயம் என்னவென்றால், உயர்- அல்லது குறைந்த சக்தி உடையவர்


போல நடிப்பதால் கூட நமது உடலில் மாற்றம் ஏற்படுகிறது என்பது தான். (நீங்கள் வெறும்
இரண்டு நிமிடங்கள் அதிகாரம் உடையவர் போல் நடித்தாலும் கூட, உங்களது
டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் உயரும் என்றும் கார்டிசோல் அளவு குறைகிறது. இதுவே,
அதிகாரமற்ற மனிதர்களின் உடல் மொழிகளைப் பயன்படுத்தும் பொழுது விளைவு எதிரானதாக
உள்ளது).
நமது நட்பு வட்டாரத்தில் நண்பரிடம் காணப்படும் உடல்மொழி மாற்றத்தை வைத்தே அவர் எந்த
மனநிலையில் இருக்கிறார் என நாம் கண்டறிய முடியும். நமது மனதின் பிரதிபலிப்பு தான் நமது உடல்
மொழி.
சில குறிப்புகள் உங்களுக்காக:

1. நாம் தைரியமாக இருக்கும்போது நமது தோள்கள் நிமிர்ந்து இருக்கும்.

2. நாம் ஏதாவது தவறு செய்திருந்தால் தோள்கள் தானாக இறங்கிக் காணப்படும்.

3. ஒரு நபருடன் பேசும் போது உங்கள் கால்கள் அகண்டு அல்லது கோணலாக இல்லாமல் நேராக
இருக்கிறது எனில், அவர் உங்களுக்கு பிடித்த நபராக இருப்பார்.

4. உங்களுடன் பேசும் போது யாரேனும் அப்படி இருந்தால், அவர்களுக்கு உங்களைப் பிடித்து


இருக்கும், அல்லது உங்கள் மீது மரியாதை வைத்திருப்பர் என்பதை அறியலாம்.

5. ஒரு நபருடன் பேசும் போது உங்கள் கால்கள் வேறு திசையில், எதிர் திசையில் திரும்பிக்
கொள்கிறது எனில், அவர்கள் மீது உங்களுக்கு கோபம் இருக்கும் அல்லது பிடிக்காத நபராக
இருப்பார்கள்.

6. மிகவும் வேகமாக பேசுவோர் அல்லது கைகளை வேகமாக ஆட்டி, ஆட்டி பேசுவோர், மாறி,
மாறி செய்கைகள் செய்துக் கொண்டே இருப்பவர்கள் பொறுமை இல்லாத நபர்களாக
இருப்பார்கள்.

7. தோள்களை தொங்கவிட்டு அமர்ந்திருப்பது நீங்கள் ஆர்வமின்றி இருக்கிறீர்கள் என்று


வெளிகாட்டும் உடல் மொழியாகும். மேலும், மன அழுத்தத்துடன் இருக்கும் போது தானாகவே
தோள்கள் இறங்கி காணப்படும்.
8. பேசும் போது அடிக்கடி இதயத்தை தொட்டு, தொட்டு பேசும் உடல் மொழி கொண்ட நபர்கள்
கருணையுடன் இருப்பவர்கள்.

9. பேசும் போது அதிகமாக மூக்கின் அருகே கைகளை கொண்டு போய் பேசும் உடல்மொழி
நீங்கள் பொய் கூறுகிறீர்கள் என்று வெளிப்படுத்தும் அறிகுறி ஆகும்.

10. பேசும் போது அடிக்கடி புருவங்களை உயர்த்தி, தலையை ஆட்டிக் கொண்டே பேசுவது, நீங்கள்
எதையோ கூற வந்து தடுமாறுகிறீர்கள் அல்லது கூற வரும் செய்தியை சரியாக கூற
தயங்குகிறீர்கள் என்று வெளிப்படுத்தும் உடல் மொழியாக இருக்கிறது.

11. கைகளை மேசை மீது ஊனி அமர்ந்து இருப்பது நீங்கள் தன்னம்பிக்கை இன்றி / பதட்டத்துடன்
இருப்பதை வெளிப்படுத்தும் உடல்மொழி.

இவை தவிர நாம் அன்றாடம் செய்யும் சில செயல்களிலும் 2–3 அர்த்தங்கள் உள்ளன. உதாரணமாக,
கைக்குலுக்குவதில் தொடங்கி, சிரித்தல், உள்ளங்கை மற்றும் விரல் போன்றவற்றின் அசைவுகளிலும்
உள்ள சில கருத்துக்களையும் பார்ப்போம்.

கை குலுக்குதல்:

பார்த்ததும் கை குலுக்குவது மேல் நாட்டு பழக்கம் என்றாலும், எங்கும் பரவி இருக்கும் பழக்கம். மனித
உளவியலை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் கை குலுக்கும் உடல் மொழியை மூன்று மூன்று வகையாக
சொல்கிறார்கள்

1. ஒருவர் உள்ளங்கை தெரிய கை கொடுத்தால் அவர் எளிமையை கடைபிடிக்கறார்.

2. கையை மேலே உயர்த்தி கொடுப்பது மனிதரின் ஆதிக்க மனப்பாங்கை காட்டுகிறது. (அமெரிக்க


அதிபர் ட்ரம்ப் பெரும்பாலும் இந்த முறையைத்தான் பயன்படுத்துகிறார்)

3. அதுவே கையைச் சமமாக கொடுத்து குலுக்குவது மனிதரின் சமத்துவ மனநிலையைக்


காட்டுகிறது .

சிரித்தல்:

 சிரிப்பு மனிதனுக்கு மட்டுமே தெரிந்த மொழி.

 ஒருவர் உண்மையாக மனதார மகிழ்கிறார்கள் என்றால் முகம் முழுக்க சுருக்கம் விழும்,


கண்களுக்கு கீழ் இருக்கும் தசைகள் சுருங்கும்

 சூழலுக்கு ஏற்றாற்போல் சிரிக்கிறார்கள் என்றால் வெறும் உதடு விரியும்.

 மனதில் மகிழ்ச்சி இல்லாமல் சிரித்தால் சின்னதாக உதடு விரிதலாக மட்டும்தான் இருக்கும்.


 காதலில் இருக்கும் பெண் தன் சிரிப்பை அடக்கிக் கொள்வாள். அப்படியும் அவள் ஆசையை
உணரவேண்டுமானால் அவள் கையைக் கவனியுங்கள் அது எதையாவது இறுக்கி பற்றியிருக்கும்.

(அனுபவம் அல்ல) 😜

(பெண்களால் வெட்கத்ததையும் சிரிப்பையும் கட்டப்படுத்தவே முடியாது. இது பெண்களைப் பற்றிய

முக்கியமான உண்மை, வேண்டுமானால் உங்களை நீங்களே சோதித்துப்பாருங்கள்) 😜 😍

பொதுவான செய்கைகள் சில…

 கட்டை விரலை உயர்த்திக் காட்டுவது, கட்டை விரலையும் முதல் விரலையும் சேர்த்து


அருமை(சூப்பர்) எனக் காட்டுவது, பார்த்ததும் கைகளைத் தூக்கிக் காட்டுவது, முதல் இரண்டு
விரல்களை விரித்து வெற்றியெனக் கட்டுவது இவையல்லாம் பொதுவான குறியீட்டுச்
செய்கைகள். இப்படியான செய்கைகள் செய்யும்போது அவர்களின் முக பாவனையைக்
கவனியுங்கள்.
கைகளைக் கவனியுங்கள் …

 மூடிய கைகள் மோசமான மனநிலையைக் காட்டும்.

 கைகளை இறுக்கி மூடிக்கொள்வது, இரண்டு கைகளை சேர்த்து கோர்த்துக்கொள்வது ஒருவர்


அந்த சுற்றத்தை தவிர்க்க முடியாமல் அங்கே இருக்கிறார் என்பதைக் காட்டும்.
 வகுப்பறையில் முன்னே வரச் சொன்னால் இருக்கையில் இருந்து எழும் மாணவன், எழுந்ததும்
கைகளை இறுக்கி மூடுவான். பிடிக்காத ஒன்றை வற்புறுத்தும்போது உணர்வை உடல்
அப்படித்தான் வெளிக்காட்டும்.

 ஒருவர் தன் இரண்டு கைகளை கோர்த்துக்கொண்டு நிற்கிறார் என்றால் டென்ஷனில் நிற்கிறார்


என்று அர்த்தம்.

உள்ளங்கையும் விரல்களும் சொல்லும் செய்தி …

விழாக்களில் பிரபலங்களைக் கவனித்திருப்பீர்கள், எவ்வளவு மோசமான கிசுகிசு பரவியிருந்தாலும்


அவர்கள் முகத்தில் எந்தப் பாவனையும் இல்லாமல் விழாவில் சிரித்த முகமாக அமர்ந்திருப்பார்கள்.
அப்படியான ’கூல்’ ஆன ஆளுமைகளின் கை பேசும் மொழியை கவனிக்கத் தவறாதீர்கள்.

 கைகளை இறுக்கி கோர்த்துக்கொள்வது டென்ஷனை காட்டும் என்பது புரிந்தவர்களாக


இருப்பார்கள்.
 முழங்கையை இன்னோரு கையால் பிடித்துக் கொண்டு நிற்கிறார் என்றால் சுற்றத்தைச்,
சூழலைச் சமாளிக்க தனுக்குள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு எதிர்கொள்கிறார் என்று
அர்த்தம்.

 அப்படியான இறுக்க நிலையிலும் கட்டை விரலை உயர்த்தி இருக்கிறார் என்றால் மனதிடம்


நிறைந்து இருக்கிறார்.

 அதுவே கட்டைவிரலைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார் என்றால் டென்ஷனாக இருக்கிறார்


என்று அர்த்தம்.

உங்கள் முன்னால் அமர்ந்திருப்பவரைக் கவனியுங்கள்…


 சிலர் இருக்கை (சீட்) நுனியில் அமர்வார்கள். அது அவர்கள் அந்த இடத்தை விட்டு எப்போ
கிளம்பலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் என்று காட்டும்.

 அதுவே இருக்கையில் பின் சாய்ந்து உட்காருகிறார்கள் என்றால் சூழலை தனக்கு சாதகமாக


எடுத்துக்கொள்ளும் நம்பிக்கையில் இருக்கிறார் என்று அர்த்தம்.

கை நிலைகளை மாற்றிக்கொள்வதைக் கவனியுங்கள்…

 எல்லாருக்கும் தெரிந்த உடல் நம்பிக்கை நிறைந்த உடல் மொழி கைகளைப் பின்னால்


கட்டிக்கொள்வது.

 ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்டு அவர் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு பேசத்


தொடங்கினால், கேள்விக்கான பதிலில் சகலமும் தெரிந்தவராக இருக்கிறார் என்று அர்த்தம்.
 அதுவே அதே செய்கையுடன் எதிர்கேள்வி கேட்கிறார் என்றால் அவர் பதிலுக்கு உங்களை தயார்
செய்கிறார் என்று அர்த்தம்.

மன அழுத்தத்தையும் கவனிக்கலாம்…

 இன்டெர்வியூவில்,பொதுவில் கேட்ட கேள்வி தெரியவில்லை என்றால் உடனே பலரும்


செய்வது முகத்தைத் துடைப்பதும், தலைமயிரைத் தொடுவதும், பின்னங்கழுத்தை தேய்ப்பதும்,
ஆடையைச் சரி செய்வதும்தான்.

 தன்னம்பிக்கையற்ற விஷயத்தை எதிர்கொள்ளும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும்,


பயஉணர்வுகள் ரத்தத்தில் பாயும். அப்படியான நிலையை இந்த செய்கைகளின் மூலம் உடல்
சமன்படுத்தும்.
 ஒருவர் உங்களிடம் பேசும்போது அப்படி தன் உடலை, தானே அதிகமாகத் தொட்டுப்
பேசுகிறார் என்றால் உங்கள் அண்மை அவருக்கு பதட்டமாக இருக்கிறது என்று அர்த்தம்.
அப்படியானவரிடம் நீங்கள் சின்னதாக சிரித்தாலே அவர் சகஜ நிலைக்குத் திரும்புவார்.

கால்களைக் கவனிக்கவும்…

 கால் ஆட்டுவதும், பாதத்தை தரையில் தட்டுவதும் பொதுவாக எதிர்மறை சமிக்ஞை என்று


சொன்னாலும், ஒருவரை புகழும்போது அவர் மகிழ்ச்சியைக் காட்ட கால்களை அதிகமாக
ஆட்டுவார்.

 அதுவே இயல்பாக இருப்பவர்களின் கால்கள் திடிரென்று ஆட்ட ஆரம்பித்தால் அவர்


மனநிலையும் திடீரென்று மாறியிருக்கிறது என்று அர்த்தம்.

 ஒருவர் கால் மீது கால் போட்டு அமர்ந்து கொண்டு முட்டி மீது கைவைத்திருக்கிறார் என்றால்,
"ஆள விடு சாமி..! உன் கேள்விக்கு பதில் சொல்ல என்னால முடியலை..." என்று சொல்லாமல்
சொல்கிறார் என்று அர்த்தம்.

நிற்கும் போது உடல் மொழி என்ன சொல்கிறது என்பதை எளிதாக கவனிக்கலாம் …

 ஒருவர் கால்களை அகட்டி நிற்கிறார் என்றால் தன்னம்பிக்கையை இழுத்து பிடித்து நிற்கிறார்.


 அதுவே ஒருவர் மகிழ்ச்சியாக சாதித்த திருப்தியில் நிற்கிறார் என்றால் கால்களை குறுக்காக
வைத்து நிற்பார்.

 மகிழ்ச்சியை வெற்றியை கொண்டாடும்போது உடல் தன் ஆபத்தை எல்லாம் யோசிக்காது.


அப்படி ஒருவர் குறுக்காக கால்களை வைத்து நிற்கிறார் என்றால் எதைப் பற்றியும்
கவலையில்லை என்றும் அவர் எல்லையற்ற தன்னம்பிக்கையையும் முன் வைக்கிறார் என்று
அர்த்தம்.

 ஒரு பாதம் நேராகவும் இன்னொரு பின்னங்கால் தூக்கி விரலால் மட்டும் தரையில் தொட்டு
நின்று சிலர் புகைப்படம் எடுக்க நிற்பார்கள்.அது அவர்கள் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும்
இருப்பதை குறிக்கிறது.

 அதுவே கால்கள் மேலே தூக்கி நின்றால் அந்த நபர் ஆர்வமில்லாமல் இருக்கிறார் என்று
அர்த்தம்.

மிக மிக முக்கியமான குறிப்புகள்:

1. இதை நீங்கள் படிக்கும்போதே கண்கள் சுருங்கினால் எப்படா முடியும் என்று அர்த்தம்.

2. படித்து முடித்ததும் கண்கள் விரிந்தால் அப்பாடா முடிந்தது என்று அர்த்தம்.

3. அதிகளவில் புருவத்துடன் கருவிழி விரிந்தால் இதில் இவ்வளவு விடயங்கள் இருக்கிறதா


என ஆச்சரியப்படுவதாக அர்த்தம்.

4. இன்னமும் தங்கள் கண்கள் குறுகியே இருந்தால் இவன் சரிபட்டுவரமாட்டான்/ இப்போதைக்கு

நம்மள விடமாட்டான் போலன்னு அர்த்தம் 😜 😄

You might also like