You are on page 1of 2

இப்புவியில் உயிர்ப்பித்த ஒவ்வொரு உயிரினமும் தங்களின் கூட்டத்துடன்

தொடர்பு கொள்ள அதற்கு உரிதான சத்தத்தை வைத்திருக்கும். அதேபோல


மனிதன் பரிணாம வளர்ச்சி என்ற பெயரில், தனக்கு உரிதான சத்தத்தை
மொழியாகப் பயன்படுத்தத் தொடங்கினான். மொழி என்பது ஓர் இணைப்புக்
கருவியாகும். மனிதன் ஒருவனோடு ஒருவன் தொடர்புக் கொள்ளவும்
கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் மொழியைப் பயன்படுத்தத்
தொடங்கினான்.அதுவே அவனுடைய இடத்திற்கு ஏற்ப தன்னுடைய
மொழியைப் பேசவும் தொடங்கினான். இப்படிதான் மொழி உருவானது.

இருப்பினும் கால ஓட்டத்திற்கு ஏற்ப பல மொழிகள் தோன்றியும்


அழிந்தும் விட்டன. அவ்வரிசையில் கி.மு 450 களுக்கு முன்னறே
உருவாகியும் இன்னும் பலரினால் பயன்பாட்டிலும், முறையான
கட்டமைப்பிலும் இருக்கும் மொழியாக விளங்குவது தமிழ்மொழியே.
இதையே நாம் செம்மொழி என்கிறோம். பல மொழிகள் தோன்றியும்
அழிந்தும் இருக்கும் இவ்விடத்தில் தமிழ்மொழி மட்டும் தன்னுடைய
ராஜியத்தை நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே செல்கிறது. இதற்குக்
காரணம் தமிழ்மொழியின் வழையு சுழிவுகளே என்றால் அது
மிகையாகாது.

கால மாற்றத்திற்கு ஏற்ப தமிழ்த்தாயும் தன்னை மாற்றிக் கொண்டாள்


என்பதே முற்றிலும் உண்மை. ஓலைச்சுவடியில் தொடங்கி, இன்று 5G
உலகத்திலும் தன்னுடைய ஆட்சியை நடத்துகிறாள். இதையே கவிஞர்
சீனி. நைனா முகம்மது அவர்கள்

பொங்கிவளர் அறிவியலின்

புத்தாக்கம் அத்தனைக்கும்

பொருந்தியின்று மின்னுலகில்

புரட்சிவலம் வருபவளே!

என்று தமிழ் வாழ்த்துப் பாடலில் கூறுகின்றார்.

https://ta.vikaspedia.in/education/baabafba9bc1bb3bcdbb3-
ba4bc6bbeb9fbb0bcdbaabc1b95bb3bcd/b87ba3bc8bafba4bcd-ba4baebbfbb4bcd-
b87ba4bb4bcdb95bb3bcd/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF
%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF
%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE
%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE
%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF
%81%E0%AE%AE%E0%AF%8D

https://www.vallamai.com/?p=54840

https://kprakashtamil.blogspot.com/2016/02/blog-post_16.html

You might also like