You are on page 1of 1

8ல் நன்மைகள்

1) திடீர் அதிர்ஷ்டம்
2) 3,6,12 பாவ தொடர்பு 8ல் இருந்தால் தீமை
3) 5,7,9,10,11 பாவ தொடர்பு 8ல் நன்மை
4) திடீர் சொத்து சேரும் அமைப்பு
5) 3+8 தொடர்பு யோகத்தை தந்து பின் விபத்தையும் சேர்த்து தருகிறது.
6) குறுகிய காலத்தில் வளர்ச்சி தரும்.
7) நீண்ட கால தொழிலை குறுகிய காலத்தில்
முடித்து விடும்.
8) (3+8) (4+8) (6+8) (8+12) தொடர்பு செய்து கொண்டிருக்கும் தொழிலில் திடீர்
சரிவைத் தருகிறது.
9) (5+8) (9+8) (10+8) (11+8) தொடர்பு தொழிலில்
லாபம் தரும்.
10) 8ம் பாவம் தரும் யோகம் இறப்பு வரை கூடவே இருக்கும்.
11) 8ம் பாவத்தின் தொடர்பே மந்திர மாந்திரீக சக்திகளை சித்திக்க உதவுகிறது.
8ம் பாவத்தின் தசா புத்தி காலங்களில் சித்திக்கும்.
12) 8ம் பாவத்தின் நன்மைகளால் மந்திர மாந்திரீக சக்திகள் கிடைக்கிறது.
8ம் பாவத்தின் தீமையால் மந்திரம் மாந்திரீகத்தை நம்பி பணத்தை
இழக்கின்றனர்.
13) 8ம் பாவத்தின் தொடர்பினால் வெளிமாநிலத்தில், வெளிநாடுகளில் நல்ல
முறையில் வாழ்பவர்கள் அதிகம்.
14) ஒரு கூலி தொழிலாளி தொழிலைக் கற்று, திடீரென்று முதலாளியாக
மாறுவது 8ம் பாவம்.
15) ஒருவர் சேர்த்து வைக்கும் புண்ணியங்களால் 8ம் பாவம் நன்மை
தருகிறது.
16) ஒரு புண்ணிய ஆத்மாவை வழிபடவும், அவர்களை உணரவும், 8ம் பாவம்
அனுமதித்தால் மட்டுமே முடியும்.
17) புண்ணிய தலங்களில் சேவை செய்ய 6,8ம் பாவத்தின் தொடர்பே
முக்கியமானதாக அமைகிறது.
18) ( 5+8) தொடர்பு தத்துக்குழந்தை
19) ஒரு பாவாகாதிபதியை விட, பாவகத்தில் நின்ற கிரகமே வலிமையானது.
20) 8ம் அதிபதியை விட 8ம் பாவத்தில் நின்ற கிரகமே வலிமையானது. 8ம்
பாவத்தில் கிரகம் இருந்தால், அந்த கிரகமே 8ம் பாவத்தின் வேலையைச்
செய்யும். 8ல் கிரகம் இல்லை என்றால் தான், 8ம் அதிபதி 8ம் பாவகத்தின்
வேலையை செய்வார்.
21) 8ல் நின்ற கிரகமே ஷேர் மார்க்கெட் மந்திரம் மாந்திரீகம் திடீர் அதிர்ஷ்டம்
லாட்டரி சீட்டு இவற்றை நோக்கிய சிந்தனைகளைத் தூண்டுகிறது. 8ம்
அதிபதியின் நட்சத்திரத்தில் நின்ற கிரகம், திடீர் அதிர்ஷ்டம் லாட்டரி ஷேர்
மார்க்கெட் மந்திரம் மாந்திரீகத்தில் ஈடுபடும் நபர்கள் உடன் இருப்பதைக்
குறிக்கும்.
22) மாரக ஸ்தானத்தோடு தொடர்புடைய 8ம் பாவகமே கொல்லும்.

You might also like