You are on page 1of 2

8 ல் நன்மைகள்

1) திடீர் அதிர்ஷ்டம்
2) 3,6,12 பாவ தொடர்பு 8 ல் இருந்தால் தீமை
3) 5,7,9,10,11 பாவ தொடர்பு 8 ல் நன்மை
4) திடீர் சொத்து சேரும் அமைப்பு
5) 3+8 தொடர்பு யோகத்தை தந்து பின் விபத்தையும் சேர்த்து தருகிறது.
6) குறுகிய காலத்தில் வளர்ச்சி தரும்.
7) நீண்ட கால தொழிலை குறுகிய காலத்தில்
முடித்து விடும்.
8) (3+8) (4+8) (6+8) (8+12) தொடர்பு செய்து கொண்டிருக்கும் தொழிலில்
திடீர் சரிவைத் தருகிறது.
9) (5+8) (9+8) (10+8) (11+8) தொடர்பு தொழிலில்
லாபம் தரும்.
10) 8 ம் பாவம் தரும் யோகம் இறப்பு வரை கூடவே இருக்கும்.
11) 8 ம் பாவத்தின் தொடர்பே மந்திர மாந்திரீக சக்திகளை சித்திக்க
உதவுகிறது. 8 ம் பாவத்தின் தசா புத்தி காலங்களில் சித்திக்கும்.
12) 8 ம் பாவத்தின் நன்மைகளால் மந்திர மாந்திரீக சக்திகள் கிடைக்கிறது.
8 ம் பாவத்தின் தீமையால் மந்திரம் மாந்திரீகத்தை நம்பி பணத்தை
இழக்கின்றனர்.
13) 8 ம் பாவத்தின் தொடர்பினால் வெளிமாநிலத்தில், வெளிநாடுகளில்
நல்ல முறையில் வாழ்பவர்கள் அதிகம்.
14) ஒரு கூலி தொழிலாளி தொழிலைக் கற்று, திடீரென்று முதலாளியாக
மாறுவது 8 ம் பாவம்.
15) ஒருவர் சேர்த்து வைக்கும் புண்ணியங்களால் 8 ம் பாவம் நன்மை
தருகிறது.
16) ஒரு புண்ணிய ஆத்மாவை வழிபடவும், அவர்களை உணரவும், 8 ம்
பாவம் அனுமதித்தால் மட்டுமே முடியும்.
17) புண்ணிய தலங்களில் சேவை செய்ய 6,8 ம் பாவத்தின் தொடர்பே
முக்கியமானதாக அமைகிறது.
18) ( 5+8) தொடர்பு தத்துக்குழந்தை
19) ஒரு பாவாகாதிபதியை விட, பாவகத்தில் நின்ற கிரகமே
வலிமையானது.
20) 8 ம் அதிபதியை விட 8 ம் பாவத்தில் நின்ற கிரகமே வலிமையானது.
8 ம் பாவத்தில் கிரகம் இருந்தால், அந்த கிரகமே 8 ம் பாவத்தின்
வேலையைச் செய்யும். 8 ல் கிரகம் இல்லை என்றால் தான், 8 ம் அதிபதி
8 ம் பாவகத்தின் வேலையை செய்வார்.
21) 8 ல் நின்ற கிரகமே ஷேர் மார்க்கெட் மந்திரம் மாந்திரீகம் திடீர்
அதிர்ஷ்டம் லாட்டரி சீட்டு இவற்றை நோக்கிய சிந்தனைகளைத்
தூண்டுகிறது. 8 ம் அதிபதியின் நட்சத்திரத்தில் நின்ற கிரகம், திடீர்
அதிர்ஷ்டம் லாட்டரி ஷேர் மார்க்கெட் மந்திரம் மாந்திரீகத்தில் ஈடுபடும்
நபர்கள் உடன் இருப்பதைக் குறிக்கும்.
22) மாரக ஸ்தானத்தோடு தொடர்புடைய 8 ம் பாவகமே கொல்லும்.
23) ஷட்பலத்தில் பலவீனமான கிரகம், கோச்சாரத்தில் 8 ம் பாவத்தில்
வரும்போது கொல்லும்.

You might also like