You are on page 1of 4

தமிழ் மொழி ஆண்டு 6 புதன் 30,6,21

4.8.2 வல்லினம் மிகா இடங்கள்


1. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது

தாய் + தந்தை - தாய் தந்தை

இரவு + பகல் - இரவு பகல்

2. வினைத்தொகையில் வல்லினம் மிகாது

பாய் + புலி - பாய் புலி

சுடு + சோறு - சுடு சோறு.

3. இரட்டைக்கிளவி, அடுக்குத் தொடர்களில் வல்லினம் மிகாது

சல + சல - சலசல பாம்பு + பாம்பு - பாம்பு பாம்பு!

கல +
- கலகல பார் + பார் - பார் பார்!
கல

4. விளித்தொடரில் வல்லினம் மிகாது.

கண்ணா + பார் - கண்ணா பார்!

நண்பா + கேள் - நண்பா கேள்!

5. வியங்கோள் வினைமுற்றுக்குப் பின் வல்லினம் மிகாது

வீழ்க + தண்புனல் - வீழ்க தண்புனல்

வாழ்க + பல்லாண்டு - வாழ்க பல்லாண்டு


6. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

கதை + சொன்னார் - கதை சென்னார்

தமிழ் + கற்றேன் - தமிழ் கற்றேன்.

7. அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களுக்குப் பின்


வல்லினம் மிகாது.

அத்தனை + பழங்கள் - அத்தனை பழங்கள்

இத்தனை + கடைகள் - இத்தனை கடைகள்

எத்தனை + பெண்டிர் - எத்தனை பெண்டிர்

8. எட்டு, பத்து ஆகிய இரண்டு எண்ணுப் பெயர்கள் தவிர பிற


எண்ணுப் பெயர்கள் பின் வல்லினம் மிகாது.

ஐந்து + படங்கள் - ஐந்து படங்கள்

இரண்டு + பேர் - இரண்டு பேர்

மூன்று + பள்ளி - மூன்று பள்ளி

9. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.

வண்டு + பறந்தது - வண்டு பறந்தது

மலர் + பூத்தது - மலர் பூத்தது.

10. அவை, இவை - என்னும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம்


மிகாது.

அவை + பறந்தன - அவை பறந்தன


இவை + சென்றன - இவை சென்றன

11. அது, இது என்னும் சுட்டுகளின் பின்னும் எது, எவை என்னும்


வினாச் சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.

அது + போனது - அது போனது

இது + சென்றது - இது சென்றது

எது + கேட்டது - எது கேட்டது?

எவை + பார்த்தன - எவை பார்த்தன?

12. ஆ, ஏ, ஓ, என்னும் வினா எழுத்துகளின் பின் வல்லினம் மிகாது.

அவளா + சொன்னாள் - அவளா சொன்னாள்?

அவனோ + போனான் - அவனோ போனாள்?

அவனே + கேட்டான் - அவனே கேட்டான்?

13. மூன்றாம் வேற்றுமை உருபுகளின் பின் (ஒடு, ஓடு) வல்லினம் மிகாது.

பூ வொடு + சேர்ந்த - பூ வொடு சேர்ந்த

கபிலரோடு + பரணர் - கபிலரோடு பரணர்

14. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிற பெயரெச்சங்களின்


பின் வல்லினம் மிகாது.

படித்த + பெண் - படித்த பெண்

நடித்த + கலைஞர் - நடித்த கலைஞர்

15. ‘படி’ என்னும் சொல்லுக்குப் பின் வல்லினம் மிகாது.


சொன்னபடி + சொன்னபடி
-
செய்தார் செய்தார்

பாடியபடி + பாடியபடி
-
தொடர்ந்தார் தொடர்ந்தார்

ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! மேலே கண்டனவற்றை நினைவிற்


கொண்டு எழுதுவது, சந்திப்பிழை அன்றி எழுதுதலாகும். இவற்றை
மனத்திற் கொண்டு சந்திப் பிழையின்றி எழுதுக.

You might also like