You are on page 1of 4

ஒளித்தொகுப்புக்கு அவசியமான காரணிகள்

சகல அங்கிகளையும் அவற்றின் போசனை தொடர்பான அறிவைப்


பயன்படுத்தி பின்வருமாறு வகைப்படுத்தலாம்

1. தற்போசனிகள் :- தமக்குத்தேவையான உணவை தாமே உற்பத்தி


செய்து கொள்பவை ஆகும்.
Eg:- பச்சைத் தாவரங்கள்

2. பிறபோசனிகள் :- உணவுக்காக வேறு அங்கிகளின் மீது


தங்கியுள்ளவை ஆகும்.
Eg:- விலங்குகள்

ஒளித்தொகுப்பு (Photosynthesis)

பச்சையத்தைக் கொண்ட தாவரங்கள் ஒளி உள்ளபோது நீர்,


காபனீரொட்சைட்டைப் பயன்படுத்தி சேதன உணவைத்தொகுக்கும் அனுசேபச்
செயன்முறை ஒளித்தொகுப்பு எனப்படும்.

ஒளித்தொகுப்பின் மீது செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்

இவை இரு வகைப்படும்


1. அகக் காரணிகள்
2. புறக்காரணிகள்

ஒளித்தொகுப்புக்கு அவசியமான அகக் காரணிகள்


1. பச்சையவுருமணியில் உள்ள குளோரோபில்
ஒளித்தொகுப்புக்கு அவசியமான புறக்காரணிகள்
1. சூரியஒளி
2. நீர்
3. காபனீரொட்சைட்டு

ஒளித்தொகுப்பின் விளைபொருட்கள்
1. ஒட்சிசன்
2. குளுக்கோசு

ஒளித்தொகுப்பின் விளைவுகள்

ஒளித்தொகுப்பில் உருவாகும் குளுக்கோசு தற்காலிகமாக மாப்பொருளாக


மாற்றப்பட்டலாலும் அதன் ஒரு பகுதி மீள சுக்குரோசு வடிவில் மாற்றப்பட்டு
உரிய இழையத்தினூடாக தாவர உடலெங்கும் எடுத்துச்செல்லப்பட்டு பின்னர்
தாவரத்தின் சேமிப்பு இழையங்களான கிழங்குகள், காய்கள், கனிகள்
போன்றவற்றில் மாப்பொருளாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுகிறது.
ஒளித்தொகுப்பில் பக்கவிளைவாகத் தோன்றும் ஒட்சிசன் வாயு தாவரத்தின்
இலைவாயினூடாக வளிமண்டலத்திற்கு பரவல் மூலம் கொண்டு
செல்லப்படுகிறது.

Note:-
1. ஒளித்தொகுப்பு செயன்முறைக்காக சூரியஒளியில் உள்ள சிவப்பு, நீல
நிற ஒளி அலைகளே அதிகளவில் அகத்துறிஞ்சப்படுகின்றன.

2. பச்சைத் தாவரங்கள் ஒளித்தொகுப்பின் போது ஒட்சிசன் வாயுவை


வெளியேற்றுவதை இலாவோசியர் எனும் விஞ்ஞானி முதன் முதலில்
கண்டறிந்தார்.

ஒளித்தொகுப்பின் போது உற்பத்தி செய்யப்படும் மாப்பொருளை


இனங்காணல்

நன்றாக சூரிய ஒளிபடும் இடத்திலுள்ள அத் தாவரத்திலிருந்து சில இலைகள்


பறிக்கப்பட்டு பச்சையத்தை நீக்கும் படிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
(கொதிநீரில் அவித்து பின் மதுசாரத்தில் அவித்தல்)

பின் மாப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இலையில்


பகுதிகள் I2 கரைசலுடன் கருநீல நிறத்தைக் காட்டின. எனவே
ஒளித்தொகுப்பின் மூலம் மாப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது என்ற
முடிவுக்கு வரலாம்.

You might also like