You are on page 1of 23

ஆராய்ச்சிக் கருவிகள் (Research

Tools)

Dr. R. PERIASAMY
ASSISTANT PROFESSOR,
DEPARTMENT OF EDUCATION,
TAMIL UNIVERSITY,
THANJAVUR – 613010

periarenga@gmail.com
Cell: 9443994931
ஆராய்ச்சிக் கருவிகள் (Tools of Research)
எந்தவித ஆராய்ச்சி முறையிலும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு
கருதுகோள்கள், எடுகோள்கள் ஆகியவை சோதிக்கப்படுகின்றன.

எக் கருவியின் எடுகோள்களைச் சோதிக்கத் தேவையான


விவரங்களைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படுகின்றனவோ
அவற்றிற்கு ‘ஆராய்ச்சிக் கருவிகள்’ என்று பெயர்.

இக் கருவிகள் பலவகைப்பட்டவை.

அவை விவரங்களை அளவுபடுத்தவும் விவரிக்கவும் தனிப்பட்ட


வழிகளைப் பின்பற்றும் ஒவ்வொரு கருவியும் குறிப்பிட்ட
மூலத்திலிருந்து விவரங்களைச் சேகரிக்கச் சிறப்பாகப் பொருந்தும்.
ஆராய்ச்சிக் கருவிகள் (Tools of Research)
• ஆராய்ச்சிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் முக்கியமான சில கருவிகள்

• (1) வினாவரிசைகள் - Questionnaire

• (2) கருத்து வரிசை / மனப்பான்மை அளவுகோல் - Opinionnaire / attitude scale

• (3) உற்றுநோக்கல் - Observation

• (4) குறிப்பிடு பட்டியல் - Check list

• (5) தர அளவுகோல் - Rating scale

• (6) மதிப்பெண் அட்டைகள் - Score cards

• (7) பேட்டி முறை - Interviews

• (8) உளவியல் சோதனைகளும் பட்டியல்களும் - Psychological test and inventories

• (9) சமூக அளவியல் முறை - Sociometry

• (10) ‘யாரென ஊகி’ நுணுக்கமுறை - Guess who technique

• (11) தனியாள் ஆராய்ச்சிகளும் திறள்பதிவுகளும் - Case study and cumulative records


வினாவரிசை
• இதில் எக் கருத்துப் பற்றி ஆராய்ச்சி நடத்த
வேண்டுமோ அது சம்பந்தப்பட்ட சில
விவரங்களை அல்லது கருத்துகளைச் சேகரிக்கத்
திட்டமான வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
எழுத்து மூலம் இவற்றிற்கான பதிலைச்
சோதனைக்கு உட்பட்டவர் அளிக்க வேண்டும்.
•  
• மூடிய அமைப்பு (closed form)
• திறந்த அமைப்பு (open form)
• உட்வொர்த் என்பவர் தயாரித்த பிரபலமான ஒரு வினா
வரிசையிலிருந்து ஆளுமையைப் புலப்படுத்த உதவும் இவ்
வினாக்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

• (1) உன் சகமாணவர்களுடன் நீ கூச்சமின்றிப் பழகுகிறாயா?

• (2) பிறர் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று நீ


கவலைப்படுவதுண்டா?

• (3) தாழ்வுணர்ச்சியால் நீ பாதிக்கப்படுவதுண்டா?

• (4) உனது கருத்துகளை நீ பிறருக்காக மாற்றிக்கொள்கிறாயா?

• (5) அடிக்கடி பகற்கனாக்கள் காண்பதுண்டா?

• (6) உன்னைப் பற்றிப் பிறர் புகழ்வதை நீ விரும்புகிறாயா?


கருத்துவரிசை அல்லது மனப்பான்மை அளவுகோல் (Opinionnaire
or Attitude Scale)

• ஒருவருடைய மனப்பன்மையையோ அல்லது ஒரு


பொருள் பற்றி அவரது கொள்கையையோ
அல்லது கருத்தையோ அளக்க விரும்பும் ஒரு
தகவல் அமைப்பிற்குக் கருத்து வரிசை அல்லது
மனப்பான்மை அளவுகோல் எனலாம்.

• ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுவோரின்
கருத்துகளை அறியப் பல முறைகள்
கையாளப்படுகின்றன.
தர்ஸ்டனின் மதிப்பளவு நுண்முறை
(Thurstone Technique of Scaled Values)
• ஒரு குழுவைப்பற்றி அல்லது நிறுவனம் பற்றி
ஒருவர் கொண்டுள்ள கருத்து, சில பழக்கங்கள்,
கருத்துகள் ஆகியவை பற்றி ஒருவருடைய
மனப்பான்மை இவற்றை அளக்க இம் முறை
பயன்படுகிறது.
லிக்கர்ட் என்பவரின் தொகுத்துத தரப்படுத்தும் முறை
(Lickert method of summated rating)
• தர்ஸ்டன் அளவுகோலுக்கு ஒரு நடுவர் குழுப்பட்டி
தேவை. லிக்கர்டின் முறைகொண்டு அளக்க
நடுவர்கள் தேவையில்லை.

• ஆனால், தர்ஸ்டன் அளவுகோல் மூலம் பெறப்பட்ட


மதிப்புகளுக்கும் இதற்கும் அதிக
வித்தியாசமில்லை, இவ்விரு முறைகளுக்குமுள்ள
தொடர்புக் கொழு அதிக மதிப்புடைய
மிகைக்கெழு (சுமார் + 0.92) எனக் கூறப்படுகிறது.
 
கூற்றுக்கான விடைகள் சாதகமான கூற்று சாதகமற்ற கூற்று
அளவுகோல் அளவுகோல்
மதிப்பு மதிப்பு

1
திடமாக 5 1
ஒத்துக்கொள்வ
து
2
ஒத்துக்கொள்வ 4 2
து
3
தீர்மானமில் 3 3
லாமலிருப்பது
4
ஒத்துக்கொள் 2 4
ளாமலிருப்பது
5
திடமாக 1 5
ஒத்துக்கொள்
ளாமலிருப்பது
உற்றுநோக்கல் (Observation)

• கூர்ந்து கவனித்தறிதலே உற்றுநோக்கலாகும்.


• ஆராய்ச்சியாளர்கள் சோதிக்கப்படுவோரின் நடத்தைகளைப்
பல சூழ்நிலைகளில் அடிக்கடி உற்றுநோக்கி, கிடைக்கும்
விவரங்களைச் சேகரித்துக் குறிப்பார்கள்.
• ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் சில குறிப்டத்தக்க
நிகழ்ச்சிகள் நடைடெபறுகின்றன. அவை அவரது மன
இயல்புகளையும் ஆற்றல்களையும் தெளிவாக
எடுத்துக்காட்டுவனவாம். அவ் வாற்றல்களை
உற்றுநோக்கியும், அவற்றிற்கு அடிகோலிய நிகழ்ச்சிகளைப்
பதிவுசெய்வதற்கும் வாழ்க்கைத் துணுக்குக் குறிப்புகள்
(anecdotal records) பயன்படும். மாணவர்கள் பெற்றுள்ள
வாழ்க்கைப் பொருத்தப்பாட்டின் தன்மையை அறிய
இக்குறிப்பு சிரியருக்குப் பெரிதும் உதவுவதாகும்.
• உற்றுநோக்கல் மூலமாக முறையாக விவரங்களைச்
சேகரிக்க அடிக்கடி பயன்படும் பதிவு செய்யும்
கருவிகளாவன
• (அ) குறிப்பிடும் பட்டியல் (check list),
• (ஆ) தர அளவுகோல்கள் (rating scales),
• (இ) மதிப்பெண் அட்டை (score card).
குறிப்பிடு பட்டியல் (Check list)
• இது ஆராய்ச்சியின் தலைப்புக்கேற்றவாறு திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட பல
விவரங்களைக் கொண்ட பட்டியல்.
• ஆராய்ச்சி நடத்துபவர் ஒரு குறிப்பிட்ட நபரிடமோ அல்லது இடத்திலோ பட்டியலில்
காணப்படும் விவரங்கள் உள்ளனவா அல்லது இல்லையா என்பதை உற்றுநோக்கி
‘உண்டு அல்லது இல்லை’ என்ற வார்தைகளால் அந்நிலையைக் குறிக்கலாம்.
• உண்டென்றால் ‘எந்த அளவு’ போன்ற விவரங்களைப் பொருத்தமான வார்த்தை
கொண்டோ அல்லது எண்ணிக்கையாலோ குறிப்பிடலாம்.

• எ.கா. மாணவனின் நடத்தையை உற்றுநோக்கி அவன் நடத்தைக்குப் பொருத்தமான


விவரத்தைக் டிக் ( ) குறியிட்டுக் காட்டு.

• ஒரு மாணவன் பிறரிடம் தன்னைப் பற்றி எத்தகைய எண்ணத்தை ஏற்படுத்துகிறான்.


• அ) மகிழ்ச்சியுடன் இருப்பவன்
• ஆ) அமைதியாக நடப்பவன்
• இ) பிடிவாதமுள்ளவன்
• ஈ) கட்டுப்பாட்டுடன் நடப்பவன்
• உ) கனவுலகில் வாழ்பவன்
தர அளவுகோல்கள் (Rating Scales)
• உற்றுநோக்கல் மூலமாகச் சேகரிக்கப்படும்
தீர்மானங்களையும் முடிவுகளையும் ஓர் அளவுகோலில்
அவற்றின் த்ரத்திற்கேற்பக் குறிப்பது தர அளவுகோலாகும்.
• எ.கா. ஒருவரது நடத்தையைக் கூர்ந்து கவனித்தோ
அவரைப் பேட்டி கண்டோ அவரிடம் காணப்படும்
ஆளுமைப் பண்புக் கூறுகளை அறிந்த பின்னர் அவற்றின்
அளவைத் திட்டமாகத் தெரிவிப்பது இம் முறையாகும்.
•  
• ஒருவரின் குணநலன்களையோ, பண்புகளையோ
தரப்படுத்திக் குறிக்க ஏதுவாக அவற்றின் பலதரங்களைக்
குறிக்கும் சொற்றொடர்களை அமைக்கிறோம். இவை
சாதாரணமாக 5 புள்ளி கொண்ட ஓர் அளவுகோலில்
குறிக்கப்படும்.
1 2 3 4 5
மிகச்சி சிறந்த சராசரிக் சராச சுமாரான
ற ந்த கு மேல் ரி
எப்பொழு அடிக் எப்பொழுதாவ அரிதா ஒருபோது
தும் கடி து க ம் இல்லை
1 2 3 4 5
         
மிகவும் நல்லது சராசரி சராசரிக் மோசமாக
நல்லது குக் கீழ்

இவற்றை ‘வருணனை தர அளவுகோல்’ (Descriptive rating


scale) என்கிறோம். ஒரு செயல் எப்படி உள்ளது
என்பதன் தரங்களை ஒரு நேர்க்கோட்டில்
மிகக் குறைந்த அளவிலிருந்து மிக அதிக அளவு வரை
வரிசைப்படி குறிக்கலாம். இதற்கு வரைபடத் தர அளவுகோல்
(graphic rating scale) எனப்பெயர். பொருள் தர அளவுகோல்
(product rating scale), எண்தர அளவுகோல் (numerical rating
scale) என்ற வகைகளுமுண்டு.
மதிப்பெண் அட்டை (Score Card)
• இது சிலவிடங்களில் குறிப்பிடு பட்டியலையும் தர
அளவுகோலையும் ஒத்திருக்கும்.
• இது பள்ளிகளையும் புத்தகங்களையும், ஒரு குடும்பத்தின்
சமூகப் பொருளாதார நிலையை மதிப்பிடப்
பயன்படுத்தப்படுகிறது.
• ஒவ்வொரு தர அளவிற்கும் என்ன குறிப்பிட்ட
மதிப்பெண் அளிக்கப்பட வேண்டுமென முன்கூட்டியே
தீர்மானிக்கப்பட்டிருக்கும்.
• உற்றுநோக்கலில் ஒரு குறிப்பிட்ட பண்பு காணப்பட்டதும்,
அதன் தரமறிந்து மதிப்பெண் இடப்படுகிறது.
• இதை எண்தர அளவுகோல் (Numerical rating scale)
என்றும் வழங்குகிறோம்.
பேட்டி முறை (Interview)
• பேட்டி முறை என்பது ஒரு வாய்மொழி
வினாவரிசைதான்.
• பதில்களை எழுதுவதற்குப் பதிலாகப் பேட்டி
காண்பவர் நேர்த்தொடர்பின் மூலம் வாய்மொழியாகத்
தேவையான தகவல்களைப் பெறுவார்.
• மற்ற எல்லா விவரம் சேகரிக்கும் முறையை விட இது
ஒரு சிறந்த முறையாகும்.
• பேட்டி காணப்படுவோரிடுன் நல்ல சிநேக
மனப்பான்மையுடன் பழகி ஒரு மன இணைப்பினை
(rapport) ஏற்படுத்திக்கொண்டு வேறு எந்த முறை
மூலமும் பெற முடியாத இரகசியத் தகவல்களைக்கூட
இம் முறை மூலம் பெறலாம்.
உளவியல் சோதனைகளும் பட்டியல்களும்
(Psychological Tests and Inventories)
• கல்விசார் ஆராய்ச்சிகளில் அதிகமாகப் பயன்படும் வகைகள் இவை.
• மாணவர்களின் நடத்தைகளை அல்லது உட்புறப் பண்புகளை (inner
qualities) விளக்கவும் அளக்கவும் உளவியல் சோதனைகள்
உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானவை.
• அடைவுச் சோதனை (achievement test),
• நுண்ணறிவுச் சோதனை (Intelligence test),
• இயற்கைத் திறன் சோதனை (Aptitude test),
• கவர்ச்சிப் பட்டியல்கள் (Interest inventories),
• ஆளுமைச் சோதனைகள் (personality tests),
• செயற் சோதனை (persormance tests),
• ஆற்றல் சோதனை (power test),
• துரிதமாகச் செய்யப்படும் திறனறி சோதனை (speed test) ஆகியவை.
புறத்தேற்று ஆளுமைச் சோதனை நுண்முறைகள்
(Projective tests / techniques / devices)
• இது சில ஆளுமைப் பண்புகளைக் கணித்றியப் பயன்படுகிறது.  

• புறத்தேயுள்ள திட்டமான அமைப்பற்ற (unstructured) ஒரு பொருளுக்கு விளக்கம்


காணும்போது ஒரு நபர் தம்முன்னமைந்த மனவெழுச்சிகளையும்
மனப்பான்மைகளையும், தேவைகளையும், பற்றுகளையும் அதன்மீது ஏற்றி அச்
சூழ்நிலையில் ஏற்படும் பிரதிச் செயல்களினால் (reactions) தம்மையறியாமல்
தம்மையும், தம் ஆளுமையையும் வெளிக்காட்டிக் கொள்கிறார்.

• புறத்தேற்று கருவி என்பது ஒரு விவரம் சேகரிக்கும் கருவியாகும். அது


சோதனையின் நோக்கத்தை மறைத்து ஒரவன் தன்னையறியாமல் தன் உண்மைப்
பண்புகளை வெளிப்படுத்தும் இயல்பினைப் பெற்றுள்ளது.

• இம் முறைகளில் ரார்ஷ்காக் (Rorschach) என்ற உளவியலறிஞரால்


பயன்படுத்தப்பட்ட
• மைத்தட சோதனையும் (ink blot test),
• பொருளறிவோடு இணைத்தறி சோதனையும் (Thematic Apperception Test)
முக்கியமானவைகளாகும்.
சமூக அளவியல் முறை (Sociometry)
• ஒரு குழுவிற்குள் காணப்படும் சமூகத் தொடர்பின்
தன்மை, பரவியுள்ள விருப்பு, வெறுப்புகள்
ஆகியவற்றைத் தெளிவுபடுத்த இம் முறை பயன்படும்.
இம் முறைகொண்டு வகுப்பு பல சமூகத்தினர் வாழும்
ஒரு சிறு சமுதாயத்திலுள்ள பல்வேறு
குழுக்களிடையேயும் நிலவிவரும் தொடர்பு, மனப்போக்கு
ஆகியவற்றின் விவரங்களைச் சேகரிக்கலாம்.
• எ.கா.
• ஒரு மாணவன் மற்ற மாணவர்களுடன் கொண்டுள்ள
சமூகத்தொடர்பினை அறிய வேண்டுமானால் அவற்றைப்
பின்வரும் தர அளவுகோலின் உதவிகொண்டு
மதிப்பிடலாம்.
1 2 3 4 5
       
மிகநெருங் சிறந்த ஓரளவு நட்பில பிடிக்கா
கிய நண்பன் நண்பன் நட்புண்டு ்
் லை து

இவ்வாறு ஒரு மாணவன் தன் வகுப்புத்


தோழர்களில் யாரை மிக
விரும்புகிறான், யாரை
வெறுக்கிறான், யாரைவகு ப்
பு
ச்செயலில்தன்
கூட்
டாளியாகப்பெறவி ரும்
பு
கிறா ன்என ் பன போன ்ற
விவரங்
களை எழு தச்சொ ல் லிஅ வ் வாறுஎல் லா
மாணவர்களிடமிருந்தும் பெறப்பட்ட பதில்களைக் கூர்ந்து
கவனித்தால் அம் மாணவர்களுக்கு இடையேயுள்ள சமூகத்
தொடர்பினை நன்கு அறியலாம்.
யாரென ஊகி நுணுக்க முறை
(Guess who technique)
• இது ஹ்யூ ஹார்ஷோன், மே (Hugh Harshorne, May) என்பவர்களால் உருவாக்கப்பட்ட
ஒரு முறையாகும்.
• இது சமூக அளவியல் முறையுடன் மிக நெருங்கிய தொடர்புடையது.
• ஒருவர் மற்றவற்றைப் பற்றி என்ன கருத்துக் கொண்டுள்ளார் என அறிய இம் முறை
பயன்படுகிறது.
• இதில் பலரைப் பற்றிய வருணனை கொடுக்கப்பட்டிருக்கும்.
• ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டவர் அவ் வருணனையைக் கொண்டுள்ள ஒருவரோ
பலரோ தம் குழுவில் உள்ளனரா எனக் குறிப்பிட வேண்டும். இல்லையென்றால்
அதனையும் குறிப்பிடலாம்.

• எ.கா. புத்தகப் புழு, எல்லோருடனும் ஒத்துழைப்பவன், எப்போதும்


உயர்ச்சிவசப்படாதவன் என்பன போன்ற வருணனையைக் கொடுத்து இவை வகுப்பில்
எவரைக் குறிக்கும் என ஒவ்வொரு மாணவனையும் கேட்டு, பதில்களைத் தொகுத்து,
அதனின்று மற்றவர்களைப் பற்றி ஒரு மாணவனின் மனப்பான்மை என்ன என்று
ஆசிரியர் அறிய முடியும்.

• யார், யாரை எந்த அளவிற்கு விரும்புகின்றனர் என்பதை இது போன்ற


கருவிகளைக்கொண்டு அறிய முடியாது.
தனியாள் வரலாற்று ஆராய்ச்சி (Case Study)
• இது ஒரு தனி நபர் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி முறையாகும்.

• ஒருவரது நடத்தைக்கான காரணிக்கூறுகளான உடற்பண்புகள்,


குடும்ப வரலாறு, இளம்பருவ நிகழ்ச்சிகள், அனுபவங்கள்,
ஆளுமைப் பண்புகள், அறிவுநிலை போன்றவற்றைக் கண்டு
பெறப்படும் விவரங்களைத் தொகுத்து முடிவெடுக்கும் முறைக்கு
தனியாள் வரலாற்று ஆராய்ச்சி என்று பெயர்.

• இம் முறை ஆசிரியர்களுக்கு இன்றியமையாததாகும்.

• இம் முறையின் பொது நோக்கம் ஆராய்ச்சிக்கு


உட்படுத்தப்பட்டவர்களின் நலன்களைப் பெருகச் செய்வதேயாகும்.
•  
திறள் பதிவுகள் (cumulative records)
• வெவ்வேறு சமயங்களில் சேகரிக்கப்படும்
விவரங்களைக் கொண்டு தனி நபரிடம் காணப்படும்
மாறுதல்கள், முன்னேற்றங்கள் ஆகியவற்றை
ஆராய்ச்சி நோக்குடன் பதிவு செய்வது திறள்
பதிவுகள் (cumulative records) ஆகும்.
• இது சாதாரணமாக மாணவர்களுடைய கல்வி
வளர்ச்சி பற்றிய முழுமையான விவரங்களைக்
கொண்டிருக்கும்.
• இக் குறிப்புகளைக் கொண்டு நல்லாசிரியர் தம்
மாணவர்களுக்குத் தகுந்த வழியைக் காட்ட முடியும்.

You might also like