You are on page 1of 9

நிழலின் அருமை

வெயிலில் தெரியும்.

ஒரு பொருளின் அல்லது ஒருவரின்


அருமை, அதுவோ அவரோ இல்லாத
போதுதான் வெளிப்படும்.
இமைக் குற்றம்
கண்ணுக்குத் தெரியாது.

நமக்கு வேண்டியவர்கள்,நண்பர்கள்
செய்யும் குற்றங்கள் நமக்குக்
குற்றமாகத் தெரியாது.
நிறைகுடம் தளும்பாது.

நிரம்பக் கற்றவர்கள் அதனை


வெளிப்படுத்தாமல் அமைதியாகவும்
ஆரவாரமின்றியும் நடந்து கொள்வர்.
வருந்தினால் வாராதது
இல்லை.

அக்கறையெடுத்துக் கொண்டால்
நாம் அடைய முடியாதது ஒன்றுமே
இல்லை.
சூழலுக்கு ஏற்ற பழமொழியை எழுதுக.

கம்பர் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களின் வளர்ச்சிக்காக

அரும்பாடுபட்ட ஆசிரியை திருமதி பார்வதியின் மறைவு

அனைவரையும் கலங்கச் செய்தது. அவர் இல்லாத போதும்

பள்ளி நிகழ்வுகளில் அவரின் சேவையைப் பற்றி அப்பள்ளி

ஆசிரியர்கள் பேசுவது வழக்கமாகும்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.


சூழலுக்கு ஏற்ற பழமொழியை எழுதுக.

பள்ளியில் தனது நண்பர்கள் பல முறை திருடியதை

அறிந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் இருந்த

மாணவர்த் தலைவன் சரண் அக்குற்றத்தைப் பற்றி

ஆசிரியரிடம் தெரிவிக்கவே இல்லை.தனது நண்பர்களின்

அச்செயல் கண்ணுக்குத் தெரியாதது போல்

இமைக்
இருந்தான். குற்றம் கண்ணுக்குத்
தெரியாது.
சூழலுக்கு ஏற்ற பழமொழியை எழுதுக.

புகழ்பெற்ற பாடகர் மறைந்த திரு.பாலா கலைத் துறையில்

மிகவும் சிறந்தவர் என்பதை அனைவரும் அறிந்ததே.பல

ஆயிரம் பாடல்களைப் பாடியும் புகழைப்

பெற்றியிருந்தாலும் எப்பொழுதும் தன்னடக்கமாகவே

நடந்துக் கொள்ளும் குணம் கொண்டவர் என்றால்

மிகையாகாது.
நிறைகுடம் தளும்பாது.
சூழலுக்கு ஏற்ற பழமொழியை எழுதுக.

பிக் பாஸ் போட்டியில் மிகவும் சிறந்த முறையில்

தனது திறமையை வெளிப்படுத்திய திரு.முகேன்

மக்களிடத்தில் பெரும் புகழைப் பெற்றுப் போட்டியில்

முதல் நிலையை அடைந்தார்.அயராத முயற்சி அவரின்

வெற்றிக்குக் கனியாக இருந்தது.

வருந்தினால் வாராதது இல்லை.


நன்றி

You might also like