You are on page 1of 1

விவாதக் கட்டுரை 

விளம்பரங்களினால் ஏற்படும் விளைவுகள்

இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் விளம்பரங்களின் ஆதிக்கம்


அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சந்தைக்கு வந்த ஒரு பொருளை அறிமுகம் செய்து
விற்பனை செய்வதற்கு விளம்பரம் அதிகம் துணைபுரிகின்றன. விளம்பரங்களினால்
நன்மைகளும் தீமைகளும் உள்ளன. 

    விளம்பரங்களினால் மக்கள் சந்தைக்கு வந்த பொருள்களைப் பற்றி அறிந்துக் கொள்ள


முடிகின்றது. மக்கள் தரமான ஒரு பொருளைத் தேர்வு செய்து வாங்க விளம்பரம் உதவுகின்றது.
அதோடுமட்டுமல்லாமல், விளம்பரங்களினால் மக்கள் புதிய சாதனங்களை அறிந்து கொண்டு
அதை வாங்குகின்றனர்.  இதனால், பொருட்களின் விற்பனை அதிகரித்து நாட்டின் வருமானமும்
அதிகரிக்கின்றன.

    அடுத்து, விளம்பரங்களில் காண்பிக்கும் கல்விக்கூடங்கள் மற்றும் பொது அறிவிப்புப்


போன்றவை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. உடல்  ஆரோக்கியம்,
நோய்கள், தற்கால நடப்புச் செய்திகள் போன்றவற்றை ஒளிபருப்புவதால் மக்கள்
எச்சரிக்கையோடு நடந்து கொள்ள முடிகின்றது. அரசாங்கத்தின் கோட்பாடுகளையும் முக்கிய
அறிவிப்புகளையும் மக்களுக்கு  உடனுக்குடன் தெரியப்படுத்த விளம்பரம்
பெரும்பங்காற்றுகிறது.

     இருப்பினும், விளம்பரங்களைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் காட்டும் பொழுது


மக்கள் அதிகம் ஈர்கப்படுகின்றனர். இதனால், தேவையில்லாத பொருள்களையும் பொய்யான
தகவல்களையும் நம்பி .பணத்தை இழக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், உடல் எடை குறைப்பு
மருந்து, துரித உணவு, அழகு பொருட்கள் போன்றவை நம்பி வாங்கிப் பயன்படுத்தும் மக்கள்
உடல் ஆரோக்கியம் குறைந்து நோய் நொடியுடன் வாழ்கின்றனர்.

     மேலும், விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் பேச்சு வழக்குச் சொற்களையும் வேறு


மொழிக்கலப்புச் சொற்களையும் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், மொழிச் சிதைவு
ஏற்பட்டு அம்மொழியின் தரம் குறைந்து நாளடைவில் அழிந்துவிடவும் வாய்ப்பு உண்டு.
தொடர்ந்து, விளம்பரங்களில் காண்பிக்கும் ஒழுக்கக் குறைவான காட்சிகள் சிறுவர்களின்
மனநிலையும் பாதிப்படையச் செய்கின்றது.

    இறுதியாக, விளம்பரத்தினால் நன்மையை விட அதிகம் தீமையே விளைகின்றன என்பதில்


சிறிதளவும் ஐயமில்லை. நம் வாழ்க்கையில் விளம்பரம் அவசியம் என்றாலும் அதிலுள்ள
நன்மையை நன்கு ஆராய்ந்து பின்னரே அப்பொருளை வாங்குவது சிறப்பாகும்.

You might also like