You are on page 1of 7

வரலாறு கற்பதன் பயன்

முன்னுரை
• வரலாறு என்றாலே நம் ஞாபகத்திற்கு வருவது
கடந்த காலம் முதல் நிகழ்காலம் வரை
நடந்துள்ள மாற்றங்கள் அல்லது
தகவல்கள்தான்.வரலாறு நம் வாழ்க்கையின்
அடித்தளமாக இருக்கிறது. இவ்வாறு வரலாறு
கற்பதால் நமக்கு நிறைய பயன்கள் உள்ளன.
கருத்து 1
• வரலாறு கற்பதானால் ஏற்படும் பயன்களுள்
ஒன்றானது கடந்த காலம் பற்றிய தகவல்களை அறிந்து
கொள்வதாகும். இத்தகவல்களை மாணவர்களாகிய
நாம் வரலாறு பாடப்புத்தகத்தின் மூலம் கற்றுக்
கொள்ளலாம். இதற்கு தக்கச்சான்று சுதந்திர வரலாறு
என்று கூறலாம். அதோடு மட்டுமின்றி, கடந்த
காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை நிகழ்காலத்துடன்
ஒப்பீடு செய்யலாம். எனவே, வரலாறு கற்பதன் மூலம்
மாணவர்கள் கடந்த கால தலைவர்களையும் அவர்கள்
செய்த தியாகத்தையும் நினைத்து அவர்களை மதிப்பர்.
கருத்து 2
• வரலாறு கற்பதன் பயனில் ஒன்று நமது பண்பாட்டின்
தொடக்கம், வேற்றுப் பண்பாடு பற்றிய தகவல்கள்,
அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை அறியலாம்.
பிற நாட்டவரின் சமூகவியல்
விவரங்களைஅறியலாம்.உதாரணத்திற்கு வாழை
இலையில் உணவு உண்பது , இஸ்லாமியர்கள் ஐந்து
வேளை தொழுவது , சீன பெருநாள் அன்று வீட்டை
சிவப்பு நிறத்தில் அலங்கரிப்பது போன்ற வேற்று
இன பண்பாட்டினை அறிந்து ஒற்றுமையே பலம்
என்பதனை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழலாம்.
கருத்து 3
வரலாறு கற்பதனால், கடந்த காலத்தில் ஏற்பட்ட
வெற்றி, தோல்வி அவற்றின் மூலம் நமது
நிகழ்காலத் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு, போர், சூதாடுதல் போன்ற
தவறானச் செயல்களை நிகழ்காலத்தில் நடக்காமல்
பார்த்து கொள்ளலாம். நாம் மாற்றுங்களைக்
கொண்டு நிகழ்கால நிலையைத் தெளிவுற
அறியலாம். இதன் மூலம் நாம் ஒரு சுபிட்சமான
வாழ்க்கையை வாழலாம்.
கருத்து 4
• வரலாறு கற்பதன் பயனில் ஒன்றானது நாம்
தலைமுறை த்லைமுறையாகத் தொடர்ந்து வாழ்ந்த
காலகட்டத்தை அறிந்து கொள்ளலாம். இதன் வழி
கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் பழக்க
வழக்கங்களையும் பொருளாதாரத்தையும் தகுந்த
ஆதாரங்களுடன் அறிந்து கொள்ளவும் முடியும்.
அதுமட்டுமல்லாமல் இவற்றை கற்பதனால் நமது
பொது அறிவை வளர்த்துக் கொள்ள இயலும்.
முடிவுரை
வரலாறு நமது முன்னோர்களின்
அடையாளம்.ஆகவே, நாம் இந்த வரலாற்றை
அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது சிறப்பு.
இனி வரும் காலங்களில் வரலாற்றை பிழையற
கற்று முன்னோறுவோமாக.

You might also like