You are on page 1of 4

கீழே கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்திற்க்கேற்ப சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.மேலே கொடுக்கப்பட்டுள்ள விளம்பரம் எதனைக் குறிக்கின்றது?

A.தீபாவளி பண்டிகை

B.பொங்கல் விழா

C.தமிழ்ப் புத்தாண்டு

2. எப்போது இவ்விழா நடைபெறவிருக்கின்றது?

A.20 ஜனவரி 2012

B.20 ஜனவரி 2013

C.10 ஜனவரி 2015

3.இவ்விழா எவ்விடத்தில் நடைபெறவிருக்கின்றது?

A.அமாக் பூங்கா, பென்டில் ஹில்

B.தமிழ்ப் பள்ளியில்

C.சிவிக் பூங்கா, பென்டில் ஹில்


4.இவ்விளம்பரத்தைப் பற்றி தவறான கூற்று யாது?

A.3 விதமான பயற்சிகள் இவ்விழாவன்று நடைபெறவிருக்கின்றது.

B.இவ்விழா காலை 7.30 முதல் 3.00 மணி வரை நடைபெறவிருக்கின்றது.

C.6 விதமான நிகழ்ச்சிகள் இவ்விழாவன்று நடைபெறவிருக்கின்றது.

5. இவ்விழாவன்று நடன நிகழ்வுகள், நாட்டுப்புற நடனம், ____________,_____________, மற்றும் ____________


போன்ற நிகழ்ச்சிகள் நடைப்பெறவிருக்கின்றது.

A.மெல்லிசை கானங்கள், தண்ணீர்ப் பந்தல், சிறுவர்களுக்கான நிகழ்வுகள்

B.தண்ணீர்ப் பந்தல், சிறுவர்களுக்கான நிகழ்வுகள், பூமாலை கட்டுதல்

C.மெல்லிசை கானங்கள், பட்டம் கட்டுதல், கோலம் போடுதல்

6. காலியான இடத்தை புநிரப்க.

"நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்" என்ற உலகநீதியின் பொருள் என்ன?

________________________________________________________________________________

7. "நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது" என்ற பொருளுக்கு சரியான உலகநீதியை
எழுதுக?

_________________________________________________________________________________

் டுக்கவும்.
வேற்றுமை உருபுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்நதெ

8.இவற்றுள் எது முதல் வேற்றுமை உருபினைப் பற்றிய சரியான கூற்று?

A.ஐ முதல் வேற்றுமை உருபு.

B.முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை.

C.ஆல், ஆன், ஒடு,ஓடு மற்றும் உடன் முதல் வேற்றுமையை குறிக்கிறது

9. வேற்றுமை என்ற சொல்லின் பொருள் யாது?

A.இடைச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையாகும்.

B.வினைச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையாகும்.

C.பெயர்சச
் ொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையாகும்.
10. இவற்றுள் எது இரண்டாம் வேற்றுமை உருபினைப் பற்றிய சரியான கூற்று?

A.இரண்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.

B.ஆல், ஆன், ஒடு,ஓடு மற்றும் உடன் இரண்டாம் வேற்றுமையை குறிக்கிறது.

C.ஐ இரண்டாம் வேற்றுமை உருபு.

11. வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?

A.2

B.8

C.7

சரியான கூற்றுக்குச் சரி என்றும் பிழையான கூற்றுக்குப் பிழை என்றும் குறிப்பிடுக.

12."அணில் துள்ளி ஓடியது".

முதல் வேற்றுமையைக் குறிக்கின்றது.

A.பிழை

B.சரி

13. " ஆசிரியர் பாடம் போதித்தார்".

முதல் வேற்றுமையைக் குறிக்கின்றது.

A.சரி

B.பிழை

14. "தலைமை ஆசிரியர் தம்பியைப் பாராட்டி பரிசளித்தார்".

இரண்டாம் வேற்றுமையைக் குறிக்கின்றது.

A. பிழை

B. சரி

15. "தங்கைப் புத்தகப் பையை எடுத்தாள்".

இரண்டாம் வேற்றுமையைக் குறிக்கின்றது.

A.சரி

B.பிழை

16. "அப்பா கண்ணகியை அடித்தார்".


முதல் வேற்றுமையைக் குறிக்கின்றது.

A.பிழை

B.சரி

17. "அமுதன் புத்தகம் படித்தான்".

முதல் வேற்றுமையைக் குறிக்கின்றது.

A.சரி

B.பிழை

18. "அக்காள் வீட்டில் வெளியே உள்ள மலர்களைப் பறித்தாள்".

முதல் வேற்றுமையைக் குறிக்கின்றது.

A. சரி

B.பிழை

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

19. இவற்றுள் எது சரியான இரண்டாம் வேற்றுமை உருபினைக் கொண்ட வாக்கியத்தைக் குறிக்கின்றது?

A.காவியா செடிகளை வெட்டினாள்.

B.ரவி புத்தகம் படித்தான்.

C.அப்பா நாளிதழ் வாசித்தார்.

20. இவற்றுள் எது சரியான முதலாம் வேற்றுமை உருபினைக் கொண்ட வாக்கியத்தைக் குறிக்கின்றது?

A.தங்கை குடையை விரித்தாள்.

B.தம்பி மரங்களை வெட்டினான்.

C.அமலா வேகமாக ஓடினாள்.

You might also like