You are on page 1of 7

SJKT JASIN / ஜாசின் தமிழ்ப்பள்ளி

PEPERIKSAAN AKHIR TAHUN 2020/ ஆண்டிறுதி தேர்வு 2020

PENDIDIKAN KESIHATAN / நலக்கல்வி
TAHUN 4_______________
MASA:1 JAM

NAMA: ____________________________ MARKAH: ______________

அ. சரியான விடைக்கு வட்டமிடுக.

1. பெண்கள் பருவம் அடையும் வயது எது?

A. 9 முதல் 12 வயது
B. 7 முதல் 10 வயது
C. 10 முதல் 12 வயது
D. 10 முதல் 13 வயது

2. இவற்றுள் எது பருவக் காலத்தில் ஆண்களுக்கு ஏற்படும் உடலியல் மாற்றம்?

A. உயரம் அதிகரிக்கும்
B. எடை கூடும்
C. அரும்பு மீ சை, தாடி வளரும்
D. அனைத்தும்

3. பருவமடைந்த ஆண்களும் பெண்களும் செய்யக்கூடாத நடவடிக்கை யாது?

A. பாலுறுப்புகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

B. உடல் தூய்மையினைப் பேண வேண்டும்.
C. தினமும் ஒரு முறை மட்டும் குளிக்க வேண்டும்.
D. சுத்தமான உள்ளாடைகளை அணிய வேண்டும்

4. இவற்றுள் எது மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய அறிகுறி அல்ல?

A. வயிற்றுவலி
B. குமட்டல்
C. மனச்சோர்வு
D. உற்சாகம்

5. உணவு கூம்பகத்தில் மொத்தம் ________________ அடுக்குகள் உள்ளன.

A. 3 B. 4 C. 5 D. 6

1
6. நாம் தினசரி வாழ்வில் __________________ கொண்ட உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

A. மாவுச்சத்து C. ஊட்டச்சத்து
B. புரதச்சத்து D. கொழுப்புச்சத்து

7. மீ ன், இறைச்சி, முட்டை, பால் ஆகிய உணவுகள் _________________ வகையைச் சார்ந்தது.

A. மாவுச்சத்து C. புரதச்சத்து
B. ஊட்டச்சத்து D. கொழுப்புச்சத்து

8. இவற்றுள் எது மது அருந்துவதால் ஏற்படக்கூடிய நீண்ட கால விளைவு அல்ல?

A. மூளை அணுக்கள் பாதிப்பு

B. தலைவலி
C. புற்றுநோய்
D. இருதய நோய்

9. மது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். மது அருந்துவதால்

A. நுறையீரல் பாதிப்படையும்
B. சிறுநீரகம் செழிப்படையும்
C. உடல் ஆரோக்கியமாக உருக்கும்
D. உடல் வலிமையடையும்

10. மது அருந்துவதால் இருவகை விளைவுகள் ஏற்படுகின்றன. ஒன்று, குறுகிய கால

விளைவு மற்றொன்று __________________________.

A. நீண்ட கால விளைவு

B. தற்கால விளைவு
C. பழங்கால விளைவு
D. இடைக்கால விளைவு

11. சிறுவர்கள் மதுவை வாங்குவதோ குடிப்பதோ மலேசியச் சட்டப்படி ____________ ஆகும்.

A. முறை B. சரி C. தவறு D.நன்மை

12. மனக்குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் கையாளும் வழி அல்ல?

A. இறை வழிபாடு B. தியானம்

C. உடற்பயிற்சி D.அமைதியாக இருத்தல்

2
13. குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கும்போது குடும்பத்தில் _________________
அதிகரித்து மகிழ்ச்சி பெருகும்.

A. கோபம் B. புரிந்துணர்வு C. மன கஷ்டம் D.சண்டை

14. நாம் நமது குடும்ப உறுப்பினர்களிடம் இவ்வாறு செய்தால் நல்லுறவு ஏற்படும்,

A. நன்றி கூறுதல்
B. வாழ்த்து தெரிவித்தல்
C. கோபம் கொள்ளுதல்
D. சிரித்து பேசுதல்

15. நோய்கள் பலவகை உள்ளன. தொற்றா நோய்களில் இதுவும் ஒன்று.

A. இருதய நோய் B. இருமல்

C. அம்மை நோய் D.காய்ச்சல்

16. நீரிழிவு நோயின் அறிகுறி என்ன ?

A. நெஞ்சு வலி ஏற்படுதல்

B. புண் விரைவில் ஆராதிருத்தல்
C. மூச்சுவிட சிரமப்படுதல்
D. கண் வலித்தல்

17. தொற்றா நோய்களைத் தவிர்க்கும் முறை எது ?

A. சரியான உணவு முறையைக் கடைப்பிடித்தல்

B. உடற்பயிற்சி செய்யாதிருத்தல்
C. அதிகளவில் குளிர்பானம் அருந்துதல்
D. அதிக உணவை உட்கொள்ளுதல்

18. இருதய நோயின் விளைவுகள் இவை, ஒன்றைத் தவிர

A. மாரடைப்பு B. பக்க வாதம் C. பசியின்மை D. நெஞ்சு வலி

19. நண்பர்களிடமிருந்து நாம் ______________________ கற்றுக்கொள்ள வேண்டும்.

A. நல்ல பழக்க வழக்கங்கங்களைக்

B. தீய பழக்க வழக்கங்கங்களைக்
C. பொய் பேசுவதைக்
D. திருடும் பழக்கத்தைக்

3
20. விபத்துகளும் நோய்களும் எதிர்ப்பாராமல் நடக்கும்போது உடனே நாம் செய்யும்
உதவி __________________________.

A. முதலுதவி B. கடைசி உதவி C. நடு உதவி D.அவசர உதவி

(20 புள்ளிகள்)

ஆ) சரியான கூற்றுக்கு (√) என்றும் தவறான கூற்றுக்கு (X) என்றும் குறியிடுக.

1. பருவக் காலத்தில் ஆண்களும் பெண்களும் பள்ளிக்குச் செல்லலாம். ( )

2. மது அருந்துவது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்காது. ( )

3. மன அழுத்தம் என்பது கவலை, அமைதியின்மை, பதற்றம் போன்ற நிலையைக் குறிப்பதாகும்.

( )

4. கொழுப்புச் சத்து அடங்கிய உணவுகளைக் குறைவாக உண்ண வேண்டும் ( )

5. பள்ளிக்கு மட்டம் போடுதல் சமூகச் சீர்கேடுகளில் ஒன்றல்ல. ( )

6. அறிமுகம் இல்லாதவருடன் வெளியில் செல்லக்கூடாது. ( )

7. மனத்தாலும் உடலாலும் ஏற்படும் பாதிப்புகளினால் மன அழுத்தம் ஏற்படுகிறது. ( )

8. மது அருந்துவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். ( )

(8 புள்ளிகள்)

4
இ) மதுவினால் ஏற்படும் விளைவுகளை வகைப்படுத்துக.

எண் குறுகிய கால விளைவுகள் நீண்ட கால விளைவுகள்

1.
2
3
4

இருதய நோய் நிதானமின்மை

தலைவலி புற்று நோய்
வாந்தி போதையில் தள்ளாடுதல்
பக்கவாதம் குடல் புண்

(8 புள்ளிகள்)

ஈ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பருவம் அடைந்த எல்லாப் பெண்களுக்கும் _________________________ வரும்.

2. நாம் உண்ணும் உணவை ____________________ பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

3. ________________________என்பது சிகிச்சையல்ல. அது பாதிப்படைந்தவர் முறையான

மருத்துவச் சிகிச்சை பெறுவதற்குமுன் வழங்கப்படும் ஓர் உடனடி உதவியாகும்.

4. மதுவின் குறுகிய கால விளைவுகளில் இதுவும் ஒன்று. ___________________

நிதானமின்மை மாதவிடாய் முதலுதவி நான்கு

(8 புள்ளிகள்)

உ. கேள்விகளுக்குப் பதில் எழுதுக.

5
1. பருவமடைந்த ஆண்களும் பெண்களும் தவறாமல் செய்ய வேண்டிய இரண்டு
நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.

அ. _____________________________________________________________________________________________.

ஆ. _____________________________________________________________________________________________.

2. பருவக் காலத்தில் பெண்களின் உடலியல் மாற்றங்களை இரண்டினைக் குறிப்பிடுக.

அ. _____________________________________________________________________________________________.

ஆ. _____________________________________________________________________________________________.

3. மருந்து அருந்துவதால் ஏற்படும் இரண்டு விளைவுகளை எழுதுக.

அ. _____________________________________________________________________________________________.

ஆ. _____________________________________________________________________________________________.

4. மனக்குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் கையாளும் நான்கு வழிகளை எழுதுக.

அ. _____________________________________. ஆ.__________________________________________.

இ. _____________________________________. ஈ. __________________________________________.

4. சமூகச் சீர்கேடுகளைப் பட்டியலிடுக.

அ. _____________________________________. ஆ.__________________________________________.

இ. _____________________________________. ஈ. __________________________________________.

5. நம்மை நாம் நேசிக்கும் முறைகளை எழுதுக.

அ. _____________________________________. ஆ.__________________________________________.

6. தொற்றா நோய்கள் யாவை?

6
அ. _____________________________________. ஆ.__________________________________________.

இ. _____________________________________. ஈ. __________________________________________.

7. நாம் உண்ணும் உணவில் இருக்க வேண்டிய சத்துகள் யாவை?

அ. _____________________________________. ஆ.__________________________________________.

இ. _____________________________________. ஈ. __________________________________________.

(24 புள்ளிகள்)

DISEDIAKAN OLEH, DI SEMAK OLEH, DISAHKAN ,

(PN.V.NIRMALA) (PN.S.VIJAYALETCHUMY)
GURU SUBJEK GURU PANITIA PK

You might also like