You are on page 1of 2

வட்டமான தட்டு

தட்டு நிறைய லட்டு

லட்டு மொத்தம் எட்டு

எட்டில் பாதி விட்டு

எடுத்தான் மீதம் கிட்டு

மாமரத்தில் ஏறலாம்

மாங்காயைப் பறிக்கலாம்

தென்னை மரத்தில் ஏறலாம்

தேங்காயைப் பறிக்கலாம்

புளிய மரத்தில் ஏறலாம்

புளியங்காயைப் பறிக்கலாம்

நெல்லி மரத்தில் ஏறலாம்

நெல்லிக்காயைப் பறிக்கலாம்

வாழை மரத்தில் ஏறலாம்

வழுக்கி வழுக்கி விழுகலாம்

பாட்டியம்மா கடையிலே

பருப்பு வடை சுடையிலே

காகம் வந்தது இடையிலே

கவ்விச் சென்றது வாயிலே


அம்மா சென்றார் சந்தை
அப்பா என்பவர் தந்தை
கிழிந்த சட்டை கந்தை
ஆட்டுக் கூட்டம் மந்தை

தம்பி விட்டான் பட்டம்


தங்கை வரைந்தாள் கட்டம்
தட்டின் வடிவம் வட்டம்
வட்டம் பாதி அரைவட்டம்

வாசிக்க ஏடு
வசித்திட வீடு
பாலுக்கு மாடு
பண்ணாதே கேடு

அன்னையின் அன்பைப் பெற்றிடு


தந்தையின் அறிவைச் சாற்றிடு
நன்மைகள் பலவும் கற்றிடு
தீமையைக் கண்டு விலகிடு
நன்மை தீமை மறந்தால்
அருமை வாழ்வு பாழாமே

You might also like