You are on page 1of 3

அகஸ்தியா அகாடமி

திறனறி தேர்வு- 4
இயல்-4
தமிழ். மதிப்பெண்கள்-40

பத்தாம் வகுப்பு. நேரம் -2 மணி

I. கொடுக்கப்பட்டுள்ள இலக்கண வினாக்களில் எவையேனும் நான்கனுக்கு


சரியான விடை அளிக்கவும். 4×2=8

1. வழாநிலை என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.


2. கால வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக
3.அஃறிணைக்குரிய பால் பகுப்புகளை விவரி.
4. வழுவமைதி விளக்குக எடுத்துக்காட்டு தருக.
5. திணை வழுவமைதி எடுத்துக்காட்டுடன் விளக்குக.
6. இருதிணை எடுத்துக்காட்டு தந்து விளக்குக.
7. பால் வழுவமைதி எடுத்துக்காட்டு தந்து விளக்குக.

II. பின்வரும் செய்யுள் வினாக்களில் மூன்றனுக்கு விடை அளிக்கவும்.


3×3=9
8. குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மாவிடம் வேண்டுவது யாது?
9. உலகத் தோற்றம் குறித்து பரிபாடல் வழி விளக்குக.
10. நாலாயிர திவ்ய பிரபந்தம் -குலசேகர ஆழ்வார் -சிறுகுறிப்பு வரைக.

III. பின்வரும் உரைநடை வினாக்களில் எவையேனும் இரண்டனுக்கு


விடையளி. 2×2=4

11. செயற்கை நுண்ணறிவின் பொதுவான கூறுகள் யாவை?


12. பெப்பர் -விளக்குக.
13. வாட்சன்- விளக்குக.
14. கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு விளக்குக.
IV. பின்வரும் உரைநடை வினாக்களில் ஏதேனும் ஒன்றிற்கு விரிவான விடை
அளிக்கவும். 1×5=5

15. மெய்நிகர் உதவியாளர் -விளக்குக.


16. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன் எவ்வாறு இருக்கும்?

V. பின்வரும் துணைப்பாடக் கதையை சுருக்கி கட்டுரையாக எழுதுக.


1×5=5

17. விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை -ஸ்டீபன் ஹாக்கிங்

VI. பின்வரும் உரைநடைப் பகுதியை மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி எழுதுக.


.
‌ 1×4=4

18. கம்பர் ராமனது வரலாற்றை தமிழில் வழங்கி இராமாவதாரம் எனப்


பெயரிட்டார்.இது ஆறு காண்டங்களை உடையது .கம்பராமாயணப் பாடல்கள்
சந்த நயம் மிக்கவை. அவற்றுள் அழகுணர்ச்சி மிக்க சில கவிதைகள்
அமைந்துள்ளன. "கல்வியில் பெரியர் கம்பர் "."கம்பன் வட்டுக்
ீ கட்டுத்தறியும்
கவிபாடும்." போன்ற மொழிகளுக்கு உரியவர் கம்பர் .சோழ நாட்டு
திருவழுந்தூரைச் சார்ந்தவர். திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால்
ஆதரிக்கப்பட்டவர்."விருத்தம் என்னும் அளவிற்கு உயர் கம்பன்' என்று புகழ்
பெற்றவர் .சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம்,
ஏரெழுபது ,சிலையெழுபது முதலிய நூல்களை இயற்றியவர்.உள்ளது
உணர்ந்தபடி கூறுவது கவிதை. கவிஞனின் உலகம் இட எல்லையற்றது.
கால எல்லையற்றது. கவிஞனின் சிந்தைக்குள் உருவாகும் காட்சியை
சொல்லைக்கொண்டு எழுப்புகிறான். கலையின் உச்சம் பெறுவது தான் அவன்
எல்லையாகிறது. கம்பன் அப்படிப்பட்ட கவிஞன். அதனால்தான் "கம்பன்
இசைத்த கவியெல்லாம் நான் "என்று பாரதி பெருமைப்படுகிறார்.

VII. பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்று பற்றி கடிதம் வரைக.


1×5=5
19.மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனை
பாராட்டி ஒரு கடிதம் வரைக.
( அல்லது)
20.நீ வாழும் பகுதியில் மாசுபாட்டை உருவாக்கும் தொழிற்சாலையை
அகற்றக் கோரி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவருக்கு கடிதம் ஒன்று
வரைக.

You might also like