You are on page 1of 5

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’.

‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும் ‘திணை’


என்னும் பெயரும் சேர்ந்து ‘நற்றிணை’ என்னும் பெயரால் இந்நூல்
வழங்கப்படுகிறது.

இந்நூல் 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடி பேரெல்லையும் உடையது. 175


புலவர்களால் பாடப்பெற்றது. தற்போது 192 புலவர்கள் பெயர்கள்
காணப்படுகின்றன.

இதைத் தொகுத்தவர் யார் என தெரியவில்லை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த


பாண்டியன் மாறன் வழுதி ஆவார். இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்.

நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறிய பெரிதும் துணைபுரிகின்றன.


மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்தன்மை, கல்வியாளர்களின் சிறப்பு,
மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை
இவை உணர்த்துகின்றன. பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும்
வழக்கத்தையும், பெண்கள் விளையாடும் விளையாட்டுகளில் கால்பந்து
இடம்பெற்றிருந்தது போன்ற செய்திகளையும் நற்றிணையில் அறியலாம்.

20. ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,………………………….. இணர்குழைந்த கோதை,

கொடி முயங்கலளே.

புதியவளைப் புல்லிக்கிடந்த பின்னர் அவன் இல்லம் மீ ண்டான். மனைவி


பிணக்கிக்கொள்கிறாள். அவன் தன்னை அப்பாவி எனக் காட்டிக்கொள்கிறான்.
அவனது புதியவள் தன் வட்டுப்பக்கமாக
ீ உலாத்திக்கொண்டு வந்ததை மனைவி
சொல்லிக்காட்டி ஊடல் கொள்வதைக் கூறும் பாடல் இது.
ஐய,

நீயா ஒன்றும் தெரியாதவர்?

அவளா ஒன்றும் தெரியாத மடந்தை?

அவளை நான் என் கண்ணால் பார்த்தேனே.

அவளிடம் மகிழ்ச்சி கண்டவனின் மார்பிலே அவள் படுத்துக்கிடந்தாள். அதனால்


அவன் மார்பில் அணிந்திருந்த மராம் பூ மாலையின் மணம் அவள் கூந்தலில்
கமழ்ந்தது.

அந்தக் கூந்தலை அவள் உலர்த்திக்கொண்டு வந்தாள்.

உடுத்தியிருந்த ஆடையையும் ஆட்டிக்கொண்டு வந்தாள்.

வளையல் ஓசை கேட்கும்படி கையை வசிக்கொண்டு


ீ வந்தாள்.

தெருவில் நடந்துவந்தாள்.

கண்களை விரித்து அங்குமிங்கும் (உன்னைத்) தேடிக்கொண்டு வந்தாள்.


போனாள்.

வாழிய அந்த ஒன்றுமறியாத மடந்தை. (நீதானே அவளிடம் சென்றாய், அதனால்


அவள் ஒன்றுமறியாத மடந்தை)

அவள் உடம்பிலே சுணங்கு. நுண்ணிய பல சுணங்கு. சுணங்கு – அதுதான் நெளிவு


சுழிவுகள்.

அந்த நெளிவு-சுழிவுகளைக் காட்டும் அணிகலன்கள். பூண்-அணிகள்.

உன் மார்பைத் தழுவிக் கிடந்த காதுக் குழைகள்.

பழைய தழுவல்-பிணிப்பு தெரியும் தோள்.

மார்போடு இணைந்து குழைந்துபோன பூமாலை.

அவள் ஒரு கொடி. (ஆமாம். அவள் உன்னைத் தழுவவே இல்லை?


(தழுவியவள் என்னும் ஏளனக் குறிப்பு).
ஐயனே! நின் காதற் பரத்தை நேற்றைப் பொழுதில் அவள் மகிழ்நனாகிய
நின்னிடத்துத் தங்கி நின் மார்பிற் கிடந்து உறங்கி; வண்டுகள் பாயப்பெற்ற
வெண்கடப்ப மரத்தின்¢விரிந்த பூங்கொத்துக் கமழும் கூந்தல் துளங்கிய
துவட்சியோடு சிறுபுறத்து வழ்ந்து
ீ அசையா நிற்ப; இடையிற் கட்டிய உடை சரிந்து
அசையாநிற்ப; நெருங்கிய வளைகள் ஒலிக்கும்படி கைகளை வசிக்கொண்டு;

நீலமலர் போன்ற மையுண்ட கண்கள் நிலைபெயர்ந்து சுழலும்படி நோக்கி எமது
மறுகின்கட் சென்றனள்; நின்னைப் பிரிதலாலே விளங்கிய பூண்களுடனே
நுண்ணிய பலவாய சுணங்கு அணியப் பெற்றவளாய்; முன்பு நின் மார்பினுற்ற
முயக்கத்தில் நெரிந்த சோர்கின்ற குழையையும்; நீட்டித்த பிணியுற்ற இரண்டு
தோள்களையும்; துவண்ட மாலையையுமுடைய கொடிபோன்று நின் முயக்கம்
நீங்கினவளாகி எமது மறுகின்கட் சென்றனள்; அத்தகைய இளம் பிராயத்தளாகிய
பரத்தையை யாம் கண்டேம்; அவள் நின்னோடு நீடூழி வாழ்வாளாக;

பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத்


தலைவி சொல்லியது; வாயிலாகப் புக்க தோழிதலைவிக்குச் சொல்லியதூஉம்
ஆம். - ஓரம்போகியார்

நீயும் யானும், நெருநல், பூவின்

நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி,

ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக்

கழி சூழ் கானல் ஆடியது அன்றி,

கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின், 5

பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே- நன்றும்

எவன் குறித்தனள் கொல், அன்னை?- கயந்தோறு


இற ஆர் இனக் குருகு ஒலிப்ப, சுறவம்

கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி,

கண் போல் பூத்தமை கண்டு, 'நுண் பல 10

சிறு பாசடைய நெய்தல்

குறுமோ, சென்று' எனக் கூறாதோளே.

தோழீ ! நேற்றைப் பொழுதில் நீயும் யானும் சென்று மலரின் நுண்ணிய தாதிற்


பாய்ந்து விழுகின்ற வண்டினங்களைப் போக்கி; ஒழிந்த திரை கொழித்த வெளிய
மணலடுத்த கழிக்கரை சூழ்ந்த சோலையிடத்து விளையாடியதன்றி; மறைத்து
நாம் செய்த செயல் பிறிதொன்றுமில்லை; அங்ஙனம் யாதேனும்
செய்ததுண்டென்றால் அது பரவா நிற்கும், நிற்க. அதனைப் பிறர் அறிந்து
வைத்தாருமிலர்; அப்படியாக, அன்னை நம்மை நோக்கிப் பொய்கைதோறும்
இறாமீ னைத் தின்னும் குருகினம் ஒலிப்பச் சுறாவேறு மிக்க கழிசேர்ந்த இடத்து,
கணைக்கால் நீடிக் கண்போல் பூத்தமை கண்டு திரண்ட தண்டு நீண்டு நம்முடைய
கண்களைப் போலப் பூத்தமை நோக்கியும்; நுண்ணிய பலவாகிய பசிய
இலைகளையுடைய சிறிய நெய்தன் மலரைப் (போய்ப்) பறித்துச் சூடிக்கொண்மின்
எனக் கூறினாள் அல்லள்; ஆதலின் அவள்தான் பெரிதும் என்ன கருதி
யிருக்கின்றனள் போலும்;

தன் தாய் தனக்குக் கட்டுக்காவல் போட்டிருப்பது காத்திருக்கும் காதலன் காதில்


விழும்படி தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

நீயும் (தலைவி, தலைவன் இருவரையும் குறிக்குமாறு இச்சொல் இங்குக்


கையாளப்பட்டுள்ளது) நானும் என்ன செய்தோம்.

பூவில் அமர்ந்திருக்கும் வண்டினங்களை ஓட்டிக்கொண்டு விளையாடினோம்.

கடலலை மோதும் மணலில் விளையாடினோம்.


இதைத்தானே மற்றவர்கள் பார்த்தனர்.

இவற்றைத் தவிர மறைவாக எதுவுமே செய்யவில்லையே.

அப்படி இருக்கும்போது நெய்தல் பூக்களைப் பறித்துக்கொண்டு விளையாடச் செல்


என்று கூறவில்லையே.

ஏன்?

குளமெல்லாம் பூத்துக் கிடக்கிறதே.

குருகுக் கூட்டம் அதில் உட்கார்ந்துகொண்டு மேய்கின்றனவே.

சுறா மீ ன் அப் பூவின் கால்களில் மோதிப் பாய்கின்றனவே.

நம் கண்களைப் போலப் பசுமையான இலைகளுக்கு [அடை] இடையே


பூத்துக்கிடக்கின்றனவே.

அவற்றைப் பறித்து விளையாடு என்று கூறவில்லையே.

சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது. - குடவாயிற் கீ ரத்தனார்

You might also like