You are on page 1of 5

Pentaksiran Setara Standard / 2021

Bahasa Tamil / தமிழ்மொழி


Tahun 6 /ஆண்டு 6
அ. கருத்துணர்தல் கேள்விகளுக்கான சரியான விடையைத் தெரிவு செய்க. (12 பு)

ஹாக்கி

ஹாக்கி ஒரு குழு விளையாட்டாகும். ஒரு குழுவில் மொத்தம் 11 விளையாட்டாளர்களும் 5


மாற்று விளையாட்டாளர்களும் இருப்பார்கள். ஹாக்கி பந்து கடினமானது. அதனை வளைதடியால்
நகர்த்திச் சென்று கோல் புகுத்த வேண்டும். ஹாக்கி விளையாட்டு இயற்கை, செயற்கை திடல்களில்
விளையாடப்படும்.

1. ஹாக்கி ஒரு குழு ____________________.


அ. விளையாட்டாகும் ஆ. தனியாளாட்டமாகும்

2. ஒரு குழுவில் மொத்தம் எத்தனை விளையாட்டாளர்கள் இடம் பெறுவர்?


அ. 11 ஆ. 5

3. மாற்று விளையாட்டாளர்களின் எண்ணிக்கை எத்தனை ?


அ. 5 ஆ. 11

4. ஹாக்கி பந்து ______________________.


அ. மென்மையானது ஆ. கடினமானது.

5. ஹாக்கி எதனை கொண்டு நகர்த்திச் சென்று கோல் புகுத்துவார்கள்?


அ. வளைதடி ஆ. வளையம்

6. ஹாக்கி எங்கு விளையாடப்படும்?

I இயற்கை திடல் II செயற்கை திடல் III மண் தரை


அ. I,II ஆ. I,II,II

ஆ. கொடுக்கப்பட்ட சொற்களைக் கொண்டு பாடலை நிறைவுச் செய்க. (12 பு)

விளையாடு பாப்பா - நீ

ஓய்ந்திருக்கலாகாது பாப்பா! கூடி

விளையாடு பாப்பா! - ஒரு


ஓடி
குழந்தையை பாப்பா!
வையாதே

சிறு குருவி போலே – நீ மனதில்

திரிந்து பறந்து வா !
பாப்பா
பறவைகளைக் கண்டு – நீ
வண்ணப்
1
மகிழ்ச்சி கொள்ளு பாப்பா!

சின்னஞ்

எழுந்தவுடன் படிப்பு- பின்பு மாலை

கனிவு கொடுக்கும் நல்ல


பாட்டு
முழுவதும் விளையாட்டு - என்று
காலை
படுத்திக் கொள்ளு பாப்பா!

வழக்கப்

இ. (i) உலகநீதியை முறைப்படுத்தி எழுதுக. (2 பு)

போக வேண்டாம் போகாத விடந்தனிலே

______________________________________________________________

(ii) உலகநீதியின் பொருளை முறைப்படுத்தி எழுதுக. (2 பு)

செல்லக்கூடாது செல்லத்தகாத இடங்களுக்குச்

________________________________________________________________

(iii) உலகநீதிக்குப் பொருத்தமான சூழலைத் தெரிவுச் செய்க. (4 பு)

1. நாதன் கடலுக்குக் குளிக்கச் சென்றான். அங்கு அபாயக் கொடி இருப்பதை அவன்


சிறிதும் பொருட்படுத்தவில்லை.

2. அமீரா மெது ஓட்டப் பயிற்சியின் போது கல் தடுக்கிக் கீழே விழுந்தாள்; காலில்
காயம் ஏற்பட்டது.

ஈ. (i) சரியான வல்லெழுத்துகளைக் கொண்டு சேர்த்தெழுதுக. (20 பு)

எ.கா : (0) எப்படி + செய்தாய் = எப்படிச் செய்தாய்

1. அப்படி + செய் =_______________________

2. இப்படி + கேள் =_______________________

3. எப்படி + திறந்தது =_______________________

2
4. இப்படி + படி =_______________________

5. அப்படி + கூறு =_______________________

6. எப்படி + சரிந்தது =_______________________

7. எப்படி + கொடுத்தாள் =_______________________

8. இப்படி + செய் =_______________________

9. அப்படி + சிரித்தாள் =_______________________

10. எப்படி + புதைத்தாள் =_______________________

ஈ. (ii) வலிமிகும் இடங்களை அறிந்து எழுதுக. (10 பு)

1. பூட்டிய கதவைக் கோபு எப்படி திறந்தான்?

____________________________________________________________________

2. மாணவர்கள் வரம்பு மீறி அப்படி பேசக்கூடாது.

____________________________________________________________________

3. குமரன் கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பதென யோசித்தான்.

____________________________________________________________________

4. ரவி நாயைக் கல்லால் அடித்தான். அவன் விலங்குகளை அப்படி


துன்புறுத்துவது நல்லது அல்ல.

___________________________________________________________________________________
____________________________________________________

5. சாலைக் கடக்கும்போது மேம்பலத்தைப் பயன்படுத்துவது சிறப்பாகும். இப்படி


செய்வதால் நாம் விபத்தைத் தவிர்க்கலாம்.

___________________________________________________________________________________
_____________________________________________________

உ. திருக்குறளை முறைப்படுத்தி எழுதுக.( 4 பு)

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்

___________________________________________________________________________________
_____________________________________________________

ஊ. திருக்குறளுக்கு ஏற்ற மிகச் சரியான பொருளைத் தேர்ந்தெடுத்து (√) எனவும்


தவறானவற்றுக்குப் (X) எனவும் அடையாளமிடுக. (4 பு)

1. தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல்,


தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை.
3
2. தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல்,
தம்மை இகழ்கின்றவரை கண்டு மனம் நெகிழ்தல் வேண்டும்.

எ. (i) கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுக. (10 பு)

காதணி

பெண்களின் காதுகளை அலங்கரிக்கும் ஆபரணம் தோடு. ஆண்களில் ஒரு சிலரும் இதனை


அணிகின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், ஆண்கள் காதில் அணிவதைக் கடுக்கன்
என்று கூறுவர். குழந்தைகளுக்குக் காது குத்துதல் என்பது தமிழ்ச் சமூகத்தில் நிகழும் ஒரு முக்கியச்
சடங்காகும். இதனைக் காதணி விழா என்பர். தாய்மாமன் மடியில் அமர்ந்து காது குத்திக் கொள்வது
இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

1. பெண்களின் காதுகளை அலங்கரிக்கும் ஆபரணம் ______________.

அ. வளையம் ஆ. தோடு

2. ஆண்களில் காதில் அணிவதை ___________ என்று கூறுவர்.

அ. கடுக்கன் ஆ. தோடு

3. தமிழ்ச் சமூகத்தில் நிகழும் ஒரு முக்கியச் சடங்குகளில்


___________ஒன்றாகும்.

அ. காது குத்துதல் ஆ. மொட்டை போடுதல்

4. ‘காது குத்துதல்’ விழாவை _______________ அழைப்பார்கள்.

அ. புதுமனை புகுவிழா ஆ. காதணி விழா

5. ___________ மடியில் அமர்ந்து காது குத்திக் கொள்வது இன்றளவும்


பின்பற்றப்படுகிறது.

அ. தாத்தா ஆ. தாய்மாமன்

எ. (ii) பனுவல் தொடர்பான தகவல்களுக்குச் சரியானவற்றிற்க்கு (√ )


எனவும், பிழையானவற்றிற்கு (X) எனவும் அடையாளமிடுக. ( 10 பு)

வளையல்

வளையல் இந்தியப் பாரம்பரிய அணிகலன்களுள் ஒன்று. இதனைப் பெண்கள் விரும்பி


அணிவர். தங்கம், கண்ணாடி, நெகிழி என வளையல்கள் பலவகையில் உள்ளன. பெண்களின் முதல்
பிரசவத்திற்கு முன்பு வளைகாப்புச் சடங்கு நடத்தப்படும். இச்சடங்கில் வளையல் முதன்மை இடத்தை
வகிக்கிறது.

1. வளையல் இந்தியப் பாரம்பரிய அணிகலன்களுள் ஒன்று.

2. இதனைப் பெண்களும் ஆண்களும் விரும்பி அணிவர்.

3. தங்கம், கண்ணாடி, நெகிழி என வளையல்கள் பலவகையில் உள்ளன.

4
4. பெண்களின் இரண்டாவது பிரசவத்திற்கு வளைகாப்புச் சடங்கு
நடத்தப்படும்.

5. வளைகாப்பு சடங்கில் வளையல் முதன்மை இடத்தை வகிக்கிறது.

எ. (iii) ஒரே பொருள் தரும் சொல்லை இணைத்திடுக.(10 பு)

இறைவன் சுமை

விலங்கு தூக்கம்

வாகை வெற்றி

துயில் மிருகம்

பாரம் கடவுள்

You might also like