You are on page 1of 2

எதிர்காலத்தில் நான் உருவாக்க விரும்பும் அதிசய மிதிவண்டி

உலகில் மனிதனாய் பிறந்த அனவருக்கும் ஓர் ஆசை உண்டு.அதுப் போல


எனக்கும் ஓர் ஆசை இருக்கிறது.அது என்னவென்றால் நான் விரும்பும் அதிசய
மிதிவண்டியை உருவாக்குவது.நான் உருவாக்கும் மிதிவண்டியில் நிறைய
கண்டுப்பிடிப்புகள் இருக்கும்.

நான் உருவாக்கும் மிதிவண்டிக்குப் பறக்கும் ஆற்றல் இருக்கும்.அந்த


மிதிவண்டியில் உள்ள பறக்கும் விசையை அழுத்தினால் இரு இறக்கைகளையும்
வெளியாக்கி சுயமாகவே பறக்கும்.இதனால் நாம் நெடுந்தூரம் பயனிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் நாம் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் காரணம் நாம்
செல்ல வேண்டிய இடத்திற்கு இந்த மிதிவண்டியிலேயே பறந்து செல்லாம்.

பிறகு என்னுடைய மிதிவண்டியை கேட்கும் தன்மையுடையதாகவும் பேசும்


தன்மையுடையதாகவும் உருவாக்குவேன்.சிலருக்கு ‘ஜிபிஎஸ்’ எனும் கருவியைப்
பயன்படுத்த தெரியாது.அதனால் நாம் செல்ல வேண்டிய இடத்தை கூறினால்
போதும் அதனை கிரகித்துக் கொண்டு சுலபமாக சேர்த்துவிடும்.அது நம்மை
கூட்டிச் செல்லும் வழிகளை நம்மிடம் கூறும்.இதனால் நாம் அவ்விடத்தின்
பெயர்களை அறிந்துக் கொள்ளலாம்.

அதிசயங்கள் நிறைந்திருக்கும் இம்மிதிவண்டிக்கு உருமாறும் சக்தியும்


இருக்கிறது.அம்மிதிவண்டி செல்லக்கூடிய இடத்திற்கேற்ப தன்னை உருமாற்றிக்
கொள்ளும்.உதாரணத்திற்கு கடலினுள் செல்லும் போது கண்ணாடிப் பேழையாக
உருமாற்றிக் கொள்ளும்.இதனால் நாம் கடல் கண்காட்சிகளை இரசிக்க முடியும்.

இம்மிதிவண்டி மறையும் தன்மையுடையதாகவும் அமைந்திருக்கும்.இக்காலக்


கட்டத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணமாகவே
இருக்கின்றது.ஆதலால் இத்தன்மை உடைய இம்மிதிவண்டி தன்னை மறைத்து
தற்காத்துக் கொள்ளும்.பிறகு காவல் அதிகாரியிடம் பிடித்துக் கொடுக்கும்.

இத்தகைய மிதிவண்டியை உருவாக்க நான் சிறந்துப்


படிப்பேன்.அறிவியல் பாடத்தில் கவனம் செலுத்தி ஒரு விஞ்ஞானியாவேன்.அதன்
பிறகு கண்டிப்பாக இம்மிதிவண்டியை உருவாக்குவேன்.

R. SARMILA
SJKT LDG KIRBY,
BATU 9, 71900 LABU.
067912646

You might also like