You are on page 1of 4

பகவத் கீதை உண்மையுருவில் கையேடு

அத்தியாயம் மூன்று - கர்ம யோகம்

1. அர்ஜுனர் என்பது நம்மை குறிக்கும். பகவான் என்பது கிருஷ்ணரை


குறிக்கும். தன்னுடைய குருவான கிருஷ்ணரிடம், அர்ஜுனர், "கொல்வது
தவறு என்று அறிந்தும், ஏன் என்னை போரிடும்படி கூறுகிறீர்கள்?" என்று
கேட்கிறார். (பதம் 3.1 – 3.2 )

2. கர்மா (பலன் நோக்கு செயல்கள்) என்றால் என்ன;அகர்மா (பலனற்ற


செயல்கள்) என்றால் என்ன - ஆகியவை விளக்கப்படுகிறது. தன்னுடைய
புலன்களின் திருப்திக்காக செயல்படுவது "கர்மா" எனப்படும். பகவானின்
திருப்திக்காக செயல்படுவது "அகர்மா" எனப்படும். (பதம் 3.3 – 3.9)

3. தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு விளக்கப்படுகிறது.


இது கர்மத்தை உருவாக்கும். (பதம் 3.10 – 3.12)

4. முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணருக்கும் மனிதர்களுக்கும்


உள்ள தொடர்பு விளக்கப்படுகிறது. எவ்வாறு ஒருவருடைய
செயல்களை முறைப்படுத்துவதன் மூலம், பகவானை திருப்தி படுத்தி
அதேசமயம் தானும் அதன் மூலம் மகிழ்ச்சியடைய முடியும் என்று
விளக்கப்படுகிறது. (பதம் 3.13 – 3.16)

5. "தன்னையறிதல்" என்பதை புரிந்துகொள்ளுதல். (பதம் 3.17 – 3.19)

6. எவ்வாறு தன்னையறிந்த ஒருவன், பற்றில்லாமல் தன்னுடைய


கடமைகளை செய்ய முடியும் என்று விளக்கப்படுகிறது. அதேசமயம்,
பௌதிக வாழ்வில் மூழ்கி இருக்கும் ஒருவன், எவ்வாறு தன்னுடைய
கடமைகளை பற்றோடு செய்யும்போது பாவங்களை சேர்க்கிறான்
என்றும் விளக்கப்படுகிறது. (பதம் 3.20 – 3.29)

7. ஆன்மீக வாழ்வில் இருக்கும் ஒருவர் தனக்கு என்ன செயல்கள்


நன்மையளிக்கும் என்பதை உணரவேண்டும். அதேபோல், பௌதிக
வாழ்வில் இருக்கும் ஒருவன் இவ்வுலகில் இருக்கும் அபாயங்களை
உணரவேண்டும். (பதம் 3.30 – 3.35)

8. ஏன் ஒருவன் பாவங்கள் புரிய வேண்டும்? (பதம் 3.36 – 3.40)

9. ஒருவரை பாவ செயல்கள் புரிவதிலிருந்து எவ்வாறு தடுப்பது? (பதம் 3.41


– 3.43)
பகவத் கீதை உண்மையுருவில் கையேடு

அத்தியாயம் நான்கு - ஞான யோகம்

1. இப்போது நாம் இன்னும் உயர்வான ஞானத்தை பெற போகிறோம்.


நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்கள் பற்றி அத்தியாயம்
மூன்றில் அறிந்துகொண்டோம். இப்போது, ஆன்மீக ஞானம் மற்றும்
ஆன்மீக செயல்கள் பற்றி அறிந்துகொள்வோம்.

2. பகவான் கிருஷ்ணர், பகவத் கீதை ஏற்கனவே சிருஷ்டியின் போது


தன்னால் உபதேசிக்கப்பட்டது என்றும், காலப்போக்கில் அது அழிந்து
விட்டது என்றும் கூறுகிறார். ஆகையால் அர்ஜுனரின்
நன்மைக்காகவும் நமது நன்மைக்காகவும் மீண்டும் பகவத் கீதையை
உபதேசிக்கிறார். (பதம் 4.1 – 4.4)

3. பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள வேறுபாடுகள்


விளக்கப்படுகின்றன. (பதம் 4.5)

4. எதற்காக பகவான் இவ்வுலகில் அவதாரங்கள் எடுக்கிறார்? (பதம் 4.6 –


4.8)

5. இந்த பதம் பகவத் கீதையின் மிக முக்கியமான பதங்களில்


ஒன்றாகும். எவ்வாறு பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு
ஆன்மீக லோகத்தை நிரந்தரமாக அடைய முடியும் என்று
விளக்குகிறது. (பதம் 4.9)
6. படிப்படியாக பகவான் மீது கொண்டுள்ள பக்தியையும் அன்பையும்
தூயிமையாக்குவது எவ்வாறு சாத்தியம் என்று விளக்கப்பட்டுள்ளது.
(பதம் 4.10 – 4.11)

7. முழுமுதற் கடவுளின் பண்புகள் விளக்கப்பட்டுள்ளது. (பதம் 4.12 –


4.14)

8. பாவ காரியங்கள் மற்றும் புண்ணிய காரியங்கள் விளக்கப்பட்டுள்ளது.


மேலும் பற்றற்ற செயல்களும் செயல்களில் பற்றின்மையும்
விளக்கப்பட்டுள்ளன. (பதம் 4.15 – 4.20)

9. செயல்களை முறையாக செய்வது எப்படி (செயலின் பலன்களின்


மீது பற்றில்லாமல் இருப்பது) என்று விளக்கப்பட்டுள்ளது. (பதம் 4.21 –
4.24)

10. சத்வ குணத்தில் பலவிதமான தியாகங்கள் கூறப்பட்டுள்ளது. (பதம்


4.25 – 4.33)

11. முழுமுதற்கடவுளை பற்றிய ஞானமும், முழுமுதற் கடவுள்


எவ்வாறு நாம் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் -
என்பதே ஆன்மீக வாழ்வின் ஆரம்பமாகும். (பதம் 4.34 – 4.42)

You might also like