You are on page 1of 1

தொடர் வாக்கியம்

எழுவாய் : செயலைச் செய்பவர்

பயனிலை : செய்கின்ற செயல் (வினைச் சொல்)

தனி வாக்கியம் : ஒரு பயனிலையைக் கொண்டிருக்கும்

உதாரணம்:
(எழுவாய்) (பயனிலை)
முரளி கடைக்குச் சென்றான்.

குதிரை வேகமாக ஓடியது.

தொடர் வாக்கியம்:

ஒன்றுக்கும் மேற்பட்ட பயனிலையைக் கொண்டிருக்கும்

முரளி கடைக்குச் சென்று முகக்கவசம் வாங்கினான்.

குதிரை வேகமாக ஓடி ஆற்றில் விழுந்தது

இடைச்சொற்கள் பயன்படுத்தலாம்.

மாறனுக்கு உடல் நலம் சரியில்லை. இருப்பினும், அவன் பள்ளிக்குச் சென்றான்.

அரைப்புள்ளி பயன்படுத்தலாம்.

மாலதி சிறப்பாகக் கற்றாள்; தேர்வில் வென்றாள்; வாழ்வில் சிறந்தாள்.

You might also like