You are on page 1of 6

பிரிவு : A

கேள்வி : 1

தகுதி வழக்கு எனப்படுவது அவையில் பயன்படுத்தப்படும் சொல்லோ தொடர்களோ பிறர்முன்


சொல்லத் தகாத முறையில் இருக்கும் பொருட்டில், அதற்கு மாற்றாக வேறு சொற்களையோ,
தொடர்களையோ பயன்படுத்துவதாகும். அவ்வாறு பயன்படுத்தப்படும் வேறு சொற்கள்,
காரணங்களைத் தகுதியாகக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தகுதி வழக்கு மூன்று
வகைப்படும். அவை, இடக்கர் அடக்கல், மங்கல வழக்கு, குழூஉக்குறி என்பவனவாகும்.

பொது இடங்களில் நாகரிகம் கருதி கேட்பவர்களுக்கு அருவறுப்பாக இருக்கும் சொற்களைப்


பயன்படுத்த முடியாத நிலையில், அவற்றுக்குப் பதிலாக வேறு நாகரிகமான சொல்லைப்
பயன்படுத்துவதே இடக்கர் அடக்கல் எனப்படும். கேட்போரின் மனதில் ஏற்பாடும்
இடர்ப்பாட்டைத் தவிர்ப்பதற்கான முறையாக இடக்கர் அடக்கல் கருதப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, “அறுவை சிகிச்சையின் போது பிறந்தமேனியாத் தான் இருக்க வேண்டுமென
மருத்துவர் கூறியதால் படபடத்துப் போனான் அகிலன்”. இந்த வாக்கியத்தில் ‘நிர்வாணம்,
அம்மணம்’ போன்ற கேட்போரை முகம் சுழிக்க வைக்கும் சொற்களைப் பயன்படுத்தாமல்,
அதற்கு மாற்றாக ‘பிறந்தமேனி’ எனும் நாகரிகமான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக, மங்கல வழக்கு. அமங்கலமான சொற்கள், அதாவது ஒருவருக்கு


மனவருத்தத்தைத் தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக வேறு சொற்களைப்
பயன்படுத்துவதே மங்கல வழக்காகும். எடுத்துக்காட்டாக,”கைம்பெண்ணான பைங்கிழி தன்
இரு குழந்தைகளையும் எவ்வித குறையும் இல்லாமல் வளர்ப்பதற்காக அயராது உழைக்கிறார்”.
இவ்வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள ‘கைம்பெண்’ எனும் சொல் ‘விதவை, தாலியறுத்தவள்’
போன்ற அமங்கலமான சொற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,
‘வாழாவெட்டி, விவகாரத்தானவள்’ போன்ற ஒருவரின் மனதைப் புண்படுத்தும் சொற்களுக்கு
மாற்றாக ‘ மணமுறிந்த பெண்’ என்றும், அதே சூழ்நிலையில் குழந்தைகள் உள்ள பொருட்டில்
‘தனித்து வாழும் தாயார்’ என்றும் அழைக்கும் வழக்கம் தற்போதைய காலத்தில் உள்ளது.

இறுதியாக குழூஉக் குறி. ஒரு குறிப்பிட்ட குழுவினர் அல்லது துறையினர்களுக்கு மட்டுமே


விளங்குமாறு அடையாளச் சொற்களைப் பயன்படுத்தப்படுவதே குழூஉக் குறியாகும்.
எடுத்துக்காட்டாக, “ஐயோ, ஆந்தை வருகிறான்! என பாலன் கூச்சலிட்டவுடன்
சிற்றுண்டிச்சாலையில் வெட்டிக்கதைப் பேசிக்கொண்டிருந்த அவனது நண்பர்கள் அனைவரும்
அங்கிருந்து ஓடினர்.” இவ்வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆந்தை’ எனும் சொல்
அப்பள்ளியில் பயிலும் மூத்த மாணவனைக் குறிப்பிடலாம், போதிக்கும் ஆசிரியரைக்
குறிக்கலாம், கட்டொழுங்கு ஆசிரியரைக் குறிக்கலாம், தலைமையாசிரியரையும் குறிக்கலாம்.
இவர்களில் யாரை உண்மையிலே குறிக்கிறது என்பது பாலனுக்கும் அவனது நண்பர்களுக்கும்
மட்டுமே தெரியும் ; வேறு எவருக்கும் தெரியாது.

பிரிவு : A

கேள்வி : 3
திணை, பால், இடம் ஆகிய கூறுகளில் இலக்கண விதியின்படி தவறு எனக் கருதினாலும் சில
காரணங்களினால் அந்த தவறுகளை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு
ஏற்றுக்கொள்ளப்பட்ட வழுக்களையே வழுவமைதி என்றழைக்கிறோம்.

திணைவழுவமைதியானது ஒரே தொடரில் சில நேரங்களில் இரு திணைகள் கலந்து


வரும்பொழுது சில மரபுகளைக் கையாளுவதின் வழி ஏற்படுகிறது. இவை திணை மட்டுமின்றி
பால் வழுவமைதியிலும் அடங்கும். எடுத்துக்காட்டாக, “தவளையும் தற்பெருமை பேசுபவனும்
தன் வாயாலே வாழ்வில் உருப்படமாட்டா”. இவ்வரியினில் தற்பெருமை பேசுபவனின்
இழிகுணம் கருதி அஃறிணை வினச்சொல் ஆளப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒரு தொடரில்
கலந்து வரும் பெயர்களில் மிகுதியானவற்றுக்கு ஏற்ப வினைச்சொல் ஆளப்படும் என்பதும்
திணைவழுவில் கையாளப்படும் மரபே. எடுத்துக்காட்டாக “முகநூலில் கவிதா பதிவேற்றம்
செய்த புகைப்படத்தில் தன் தாய், தந்தை, அண்ணன், அண்ணி, வளர்ப்பு நாய் என
அனைவரும் காணப்பட்டனர்”. இவ்வாக்கியத்தில் அஃறிணைப் பெயரைக் காட்டிலும்
உயர்திணைப் பெயர்கள் மிகுதியாக உள்ளதால் உயர்திணை வினைச் சொல் ஆளப்பட்டுள்ளது.

அடுத்ததாக பால்வழு அமைதி. சிலவேளை, ஒரு சில தொடர்களில் ஆண்பால், பெண்பால்


பெயர்கள் ஒன்றோடொன்று இயைபின்றித் தொடர்ந்து வரும். அதேபோல ஒருமை, பன்மை
இயைபின்றி வருவதலும் உண்டு. இம்மாதிரியான வேளைகளில் பொருள்வலிமை கருதி, பால்
இயைபின்றி ஆளப்படலாம் எனும் மரபு உள்ளது. எடுத்துக்காட்டாக, “ஏழை மாணவர்களை
இலவசமாக சிறப்பு வகுப்புகளில் சேர்த்துக்கொண்ட ஆசிரியர், சரசுவதி தேவிக்கு சமமானவர்”.
ஆசிரியரது நற்குணச் சிறப்புக் கருதி அவருக்கு சரசுவதி தேவி எனும் பெண்பால்
ஆளப்பட்டது. மேலும், ஒருவரின் மீதான மதிப்புக் கருதி ஒருமைக்கு பன்மை வினச்சொல்லை
ஆளுவதையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, “அப்பா தீபாவளியை
முன்னிட்டு வீட்டிலுள்ள அனைவருக்கும் புத்தாடை வாங்கி கொடுத்தார்”. இவ்வாக்கியத்தில்
அப்பா ஒருவர் எனினும் மதிப்புக் கருதி வினைச்சொல்லில் ‘ஆர்’ என்ற பலர்பால் ஒட்டு
பயன்படுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக இடவழு அமைதி. இடவழு அமைதியானது இரண்டு வேறு இடம் குறித்த சொற்கள்
கலந்துவரும்போது சில காரணங்களுக்காக இயைபில்லாத வினைச்சொல்
பயன்படுத்தப்படுவதாகும். முதல் காரணமானது பொருள் அழுத்தம் கருதி தன்னைப்
படர்க்கையில் குறியிடுவதாகும். எடுத்துக்காட்டாக, “உன்மகன் அப்படி நடந்துக்கொள்வேனா
அம்மா?”. உன்மகன் என்பது படர்க்கையில் இருந்தாலும் அச்சொல் தன்னையே (தன்மை)
குறிப்பதால் நடந்துக்கொள்வேனா என்ற தன்மை வினைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு இருவேறு இடங்களுக்கு உரிய எழுவாய் கலந்த நிலையில் பொருத்தமான


ஒன்றைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, “ போட்டியில் வென்றவள் நீயா? நானா?”.
இவ்வாக்கியத்தில் வென்றவள் படர்க்கையையும், நீயா முன்னிலையையும், நானா
தன்மையையும் என மூன்று இடங்களும் மயங்கியுள்ளது.

பிரிவு : A

கேள்வி : 4
செய்வினை என்பது ஒருவர் ஒரு செயலைத் தானே செய்வதைக் குறிப்பது. செய்வினையில்
வாக்கியத்தில் துணைவினைச் சொல் கிடையாது. எந்தவொரு வாக்கியத்தையும்
செய்வினையா, செயப்பாட்டுவினையா என்பதைத் தெரிந்துக்கொள்ள வேண்டுமெனில்
அவ்வாக்கியத்தின் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை போன்றவற்றை முதலில்
சரியாகத் தொகுத்து வைத்துக்கொள்ள வேண்டும். செய்வினைத்தொடராயின் எழுவாய்,
செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமைந்திருக்கும். எடுத்துக்காட்டாக,
“மாணவன் புத்தகம் படித்தான்”. இவ்வாக்கியத்தில் துணைவினைச் சொல் இடம்பெறாமல்
இருப்பதோடு எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம்
அமைந்திருக்கிறது. மேலும், செய்வினைத்தொடரில் இடம்பெறும் செயப்படுபொருளோடு ‘ஐ’
என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாகவோ, மறைந்தோ வரும்.
எடுத்துக்காட்டாக, “உமா பழத்தை உண்டாள்”, இத்தொடரில் செயப்படுபொருளோடு ‘ஐ’
என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்துள்ளது. இதே தொடரில்
“உமா பழம் உண்டாள்”, எனச் செயப்படுபொருளோடு ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை
உருபு மறைந்து வரலாம்.

அடுத்ததாக செயப்பாட்டுவினை. செயப்பாட்டுவினை என்பது தானாகவே ஏதும்


செய்யாமல், மற்றொருவர் செய்த செயலுக்குத் தான் உட்படுவதைக் குறிப்பதாகும்.
செயப்பாட்டுவினைத்தொடரில் ‘படு’ அல்லது ‘பட்டது’ எனும் துணைவினைச் சொல்
சேர்க்கப்பட்டிருக்கும். செயப்பாட்டுவினைத்தொடரின் அமைப்பானது முதலில்
செயப்படுபொருள், அதனைத்தொடர்ந்து எழுவாய், பயனிலை எனும் வரிசையில் வரும்.
மேலும், எழுவாயோடு ‘ஆல்’ எனும் மூன்றாம் வேற்றுமை உருபு சேர்க்கப்பட்டிருக்கும்.
எடுத்துக்காட்டாக, “ புத்தகம் மாணவனால் படிக்கப்பட்டது”. இத்தொடரில் ‘பட்டது’ எனும்
துணைவினைச் சொல் இருப்பதோடு, செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற
வரிசையில் வாக்கியம் அமைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி ‘மாணவன்’ எனும் எழுவாயோடு
‘ஆல்’ எனும் வேற்றுமை உருபும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

செய்வினைத்தொடருக்கும் செயப்பாட்டுவினத்தொடருக்கும் உள்ள வேறுபாடுகளானது


அத்தொடர்கள் அமைந்திருக்கும் அமைப்பு, ஏற்றுவரும் துணைவினைச்சொல், வேற்றுமை
உருபு போன்றவையே ஆகும்.

பிரிவு : B

கேள்வி : 1

நமது நாட்டின் இலக்கியத் திறனாய்வுகளும் பார்வைகளும் ஒரு பக்கச் சார்பாகப்


போய்க்கொண்டிருக்கும் நிலை எல்லோருக்கும் தெளிவாகத் தெரிகிறது. மலேசிய நாட்டுப்
பெண் படைப்பாளர்கள் குடும்பக் கடமைகளொடு தமிழ்மொழிக்கும் பணியாற்றி கண்ணியம்
கெடாமல் தமிழ்மரபினையும் பண்பாடையும் எழுத்தில் கொணர்வது ஒரு குற்றமா? அதற்காக
இவர்களின் படைப்புகளை நகைப்பதா? இவர்கள் என்ன, பணத்தைக் குறி வைத்தா
எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எழுத்திற்காகத் தம் கைப்பணத்தையும் அல்லவா இழந்து
கொண்டிருக்கிறார்கள்!

பிரிவு : B

கேள்வி : 2

‘நானும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்று பாரதி பாடியதன் உட்பொருள்


தெளியாமலேயே அதைச் சொல்லிச் சொல்லி, இயற்கை பெண்கள் ஈந்துள்ள தற்காப்புக்
கருவிகளை மழுங்கடிக்கிறது ஒரு கூட்டம். பெண்ணுரிமை என்ற பெயரில் போலி வெளிச்சம்
காட்டி அதில் விரைந்து மோதி மடியும் விட்டில்களாகப் பெண்களை மாற்றுகிறது மற்றொரு
கூட்டம். இலக்கியம் படைக்கிறோம் என்று மெழுகி, எழுத்தாலேயே பெண்ணின் துகிலுரிந்து,
கொச்சைத் தொடர்களால் இச்சையை வளர்க்கின்றன இன்னொரு கூட்டம். கலைவளர்க்கிறோம்
என்று புளுகி, விலைமாதர்கூட வெளியில் அணியத் துணியாத அரைகுறைத் துணிகளால்
நடிகையரைக் குதிக்கவிட்டுப் படச்சுருளாக்கி வீடுதொறும் காமக்கலையை வளர்க்கிறது
வேறொரு கூட்டம்.

பிரிவு : C

கீழ்க்காணும் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

1. தக்க இடத்தில் ஒடு உருபு வெர்க்கவும்

அ) அமைச்சர் அரசன் சென்றார்.

விடை : அமைச்சர் அரசனொடு சென்றார்.

விதி : ‘ஒடு’ உருபு உயர்ந்த நிலையில் இருப்பவர்களுடன் மட்டுமே சேரும். அமைச்சரை


விடவும் அரசன் உயர்ந்தவன் என்பதால் ‘அரசனொடு’ என்றானது.

2. வேற்றுமை உருபைப் பிாித்துக் காட்டி எழுதுக

அ) தலைத்தூக்கி

விடை : தலை + ஐ + தூக்கி

ஆ) குடிப்பிறப்பு

விடை : குடி + இன் + பிறப்பு


3. புணர்ச்சி முறையைப் பிாித்துக் காட்டுக

அ) இகழ்வார் பொறுத்தல் தலை

விடை : (இகழ் + ஆர்) + (பொறு + அத்து + அல்) + தலை

ஆ) பன்னூறாண்டுகள்

விடை : பன்மை + நூறு + ஆண்டு + கள்

இ) கையறியாமாக்கட்கன்றி

விடை : கை + அறியா + மாக்கட் + கு + அன்றி

4. வினையடியைக் கண்டறிக

அ) செய்வித்தான

விடை : செய்

5. தொழிற்பெயரைக் கண்டறிக

அ) கற்றாரைப் பேணுதல் அரசனது கடன்

விடை : பேணுதல்

விதி : தொழில், வினை, செயல் என இம்மூன்றில் எதைக் குறிப்பதும் தொழிற்பெயரே.


அவ்வகையில் மேற்கண்ட வாக்கியத்தில் ‘பேணுதல்’ என்பது தொழிற்பெயராகும்.

6. மரபு பிழையைக் கண்டறிக

அ) இவ்வெருது அக்கன்றினது தாய்

விடை : பசுவே கன்றினது தாயாகும் ; எருது அல்ல. ஒரு கன்றினது தாயாக எப்பொழுதும்
பசுவை அழைப்பதே மரபு.

7. ஆகுபெயரைக் கண்டறிக

அ) உலகம் இக்கொள்கையை ஏற்காது

விடை : இடவாகுபெயர்

விதி : மேற்கண்ட வாக்கியத்தில் உலகம் என்பது பூமியைக் குறிக்காமல் உலகத்தில் வாழும்


மக்களுக்கு ஆகிவந்துள்ளது. ஆகையால் இது இடவாகுபெயராகும்.
8. இலக்கண வழுவைக் கண்டறிந்து எழுதுக

அ) நான் கூறியது பிழையன்று

9. வியங்கோள் வினைமுற்றைக் கண்டறிக

அ) கெடுக நின் வாழ்நாள்.

விடை : கெடுக

விதி : கெடு எனும் ஏவல்வினையோடு வியங்கோள் பின்னொட்டான ‘க’ சேர்ந்தமையால்


‘கெடுக’ என்பதே வியங்கோள் வினைமுற்று ஆகும்.

10. வழுவைக் கண்டறிந்து எழுதுக

அ) மகிழனோ அல்லது இனியனோ நிகழ்ச்சிக்கு வரலாம்.

விடை : மகிழனோ இனியனோ நிகழ்ச்சிக்கு வரலாம்.

விதி : ஓகாரம் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அல்லது பயன்படுத்தக்கூடாது.


இரண்டும் ஒரே பொருளைத் தருவதால் ஏதேனும் ஒன்றை மட்டுமே பயன்படுத்த
வேண்டும்.

11. தனி வாக்கியமாக மாற்றுக

அ) நாம் ஊண் உண்ணவேண்டும்; அன்றெனில் வாழ மாட்டோம்.

விடை : நாம் ஊண் உண்ணவேண்டும்.

: ஊண் உண்ணவில்லையெனில் நாம் வாழ மாட்டோம்.

விதி : தனி வாக்கியத்தில் எழுவாய் ஒன்றாகவோ பலவாகவோ இருக்கலாம். பயனிலை


ஒன்று மட்டுமே இடம்பெற முடியும்.

12. சரியான சொல்லைக் கண்டறிக

அ) சினத்தை ஒரு (கனம், கணம்) தானுங் காத்தல் அாிது.

விடை : கணம்

விதி : கனம் என்றால் பாரம் எனப்பொருள்படும். கணம் என்பதே நொடி அல்லது பொழுது
என நேரத்தைச் சார்ந்து கூற்றுக்கு ஏற்ப பொருள் தருகிறது.

You might also like