You are on page 1of 17

வேதிக் வித்யாஷ்ரம் நடுவண் மேல்நிலைப் பள்ளி

செயல்பாடு

தமிழ்

பெயர்:வெ.நிஷாந்
த்
வகுப்பு:பத்து
பிரிவு:`ஆ’
இரட்டுற மொழிதல்

தமிழ்----------
முத்தமி
ழ்
முச்சங்கம்

முதல் சங்கம் ஐம்பெரும் காப்பியங்கள் இடை சங்கம்

சங்கப் பலகை கடை சங்கம்


பலகையில் அமர்ந்திருக்கும் சங்கப் புலவர்

முச்சங்குகள்

வெண்சங்கு வணிக கப்பல் சலஞ்சலம்

பாஞ்சசன்யம்
சங்குகளை தடுத்து காக்கும் கடல் அலை
இயல்-ஒன்று
இரட்டுற மொழிதல்
தமிழ்:-
முத்தமிழ்:-
இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் தமிழ் மொழியின் இணையான கூறுகள்
என்பதை முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. இம் மூன்றுக்கும் தமிழர்கள் தந்த
முக்கியத்துவத்தையும் முத்தமிழ் வெளிப்படுத்தி நிற்கின்றது.
முச்சங்கம்:-
முதல் சங்கம்:-
*முதற்சங்கம் தோன்றிய இடம் தென் மதுரை. *முதற் சங்கத்தில் தோன்றிய நூல்கள் முதுநாரை,
முதுகுருகு, களரியாவிரை, பெரும் பரிபாடல் அகத்தியம். *புலவர்கள்:- அகத்தியர்,
திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்(சிவன்), குன்றெறிந்த வேள்(முருகர்), நிதியின் கிழவன்( குபேரர்).
*இடைச்சங்கம் இருந்த இடம் கபாடபுரம்.
இடை சங்கம்:-
இடைச்சங்கம் (கிமு 2387 - கிமு 306) ஏறைக்குறைய 3700ஆண்டுகள் சிறப்புற்று இருந்த தமிழ்ச்
சங்கம் என்று மரபு வழித் தமிழர் வரலாறு கூறுகிறது. இது கபாடபுரத்தில் இருந்தது. இச்சங்கத்தில்
அகத்தியர் ,தொல்காப்பியர், இருந்தையூர் கருங்கோழி , மோசி , வெள்ளூர் காப்பியன்,
சிறுபாண்டரங்கன் ,திரையர்மாறன், துவரைக்கோன் ,கீரந்தை என 59 பேர் இச்சங்கத்தில்
இருந்தவர்கள். ஏறக்குறைய 3700 புலவர்கள் சங்கத்தில்இருந்தனர்.
கடை சங்கம்:-
சங்க காலம் எனப் பொதுவாகவும் அழைக்கப் படுகிறது. "கடைச்சங்கம் மதுரையில் நடந்தது; கடைச்சங்க கால
மன்னர்கள் 49 பேர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்; மேலும் 449 புலவர்கள் இங்கு பங்களித்தனர்;
1850 ஆண்டுகள் கடைச்சங்க காலத்து அரசர்கள் 49 பேரும் ஆட்சி புரிந்தனர்" எனச் சிலம்பின் உரைப்பாயிரம்
கூறுகின்றது.
ஐம்பெரும் காப்பியங்கள்:-
முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக
சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள்
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்திலேயே தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில்
தோன்றியவையாகும்.
சங்கப் பலகை:-
இறைவனாரிடம் சங்கப் புலவர்கள் வைத்த வேண்டுகோள், இறைவனார் பாடல்களின்
தரத்தினை அளவீடு செய்ய சங்கப் பலகை அளித்தது ஆகியவற்றை இப்படலம் எடுத்துக்
கூறுகிறது. சங்கப் பலகை தந்த படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில்
ஐம்பத்து ஒன்றாவது படலமாக அமைந்துள்ளது.
பலகையில் அமர்ந்திருக்கும் சங்க புலவர்:-
கடல்:-
முச்சங்குகள்-

வெண்சங்கு
சலஞ்சலம் பாஞ்சசன்யம்
வெண்சங்கு:-
வெண்சங்கு (சாங்கசு பைரம், கடல் நத்தை வகையைச்
சேர்ந்த மெல்லுடலி ஆகும். இது வலம்புரிச் சங்கு எனவும்
சிலுவைச் சங்கு எனவும், தட்சணாமூர்த்திச் சங்கு எனவும்
அழைக்கப்படுகிறது. இந்த இந்தியச் சங்கு இனம் ,
தற்போது டர்பினல்லா பைரம எனவும்
அழைக்கப்படுகிறது. சாங்கசு என்னும்
சங்கினத்தில் சாங்கசு பைரம், சாங்கசு ஆங்குலேட்டர்
லேட்டசு, சாங்கசு லேவிகேட்டர் என்ற மூன்று
சிற்றினங்கள் உள்ளன. இந்த மூன்று வகைகளில் சாங்கசு
பைரம் என்னும் சங்கே சிறப்பானது.
சலஞ்சலம்:-
மாணிக்கத்துக்கு நிகரான விலை கொண்டது அது. நாகரத்தினம் போல அபூர்வமானது
அது. ஆயிரம் இடம்புரிச் சங்குகளால் சூழப்பட்ட சங்கு வலம்புரிச் சங்கு என்றும்,
அதுபோன்ற 1000 வலம்புரிச் சங்குகளால் சூழப்படது சலஞ்சலம் என்றும் நூல்கள்
செப்பும். இது போன்ற சங்குதான் கிருஷ்ணன் கையிலுள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கு
ஆகும்.
பாஞ்சசன்யம்:-
பாஞ்சசன்யம் அல்லது பாஞ்சன்னிபம் என்பது திருமாலுடைய சங்கின் பெயராகும். இந்த
சங்கானது கடலில் கிடைக்கும் வலம்புரி சங்கின் வகையைச் சார்ந்தாக கருதப்பெறுகிறது.
ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார் இந்த சங்கின் அம்சமாக
கருதப்பெறுகிறார். பாஞ்சசன்யம் சங்காயுதம் என்றும், பொதுவாக சங்கு என்ற பெயரிலும்
அறியப்பெறுகிறது.
வணிக கப்பல்:-
சங்குகளை தடுத்து காக்கும் கடல்
அலை:-

You might also like