You are on page 1of 2

எந்த ஒரு சமூகமும் வரலாற்றின் வழி தன்னைத்தானே மாற்றங்களுக்கு

உள்ளாக்கிக் கொண்டும், புதுக்கிக் கொண்டும் வளர்ந்துக்


கொண்டிருப்பதைத்தான் பல உலகச்சமூகங்களின் இயல்பாக
கண்டிருக்கிறேன்.

மார்க்ஸ், ஏங்கல்ஸ், பெரியார், அம்பேத்கர் இவர்களை செரித்துக் கொண்டு,


ஜென்முகத்தை வைத்திருப்பவனுக்கு.. இன்றைய அத்திவரத தமிழ்ச்சூழல்,
அதற்குள் இயங்கும் அரசியல் தமிழ்ச் சமூகத்தின் இருத்தலின் மீ து பலக்
கேள்விகளை எழுப்புகிறது. பல சமூகங்களில் நான் கண்ட வளர்ச்சி என்பது
தமிழ்ச்சமூகத்தில் தேக்கம் கொண்டதா, எனும் சந்தேகம்.. என்னைக்
குடைந்துக் கொண்டே இருக்கிறது.

வரலாற்றின் வழி அறிவுச் சமூகமாக வளர்ந்திருந்த தமிழ்ச் சமூகத்திற்கு


இன்றென்ன ஆனது என்கிற பதற்றம் தொற்றிக் கொள்கிறது.

அத்வைதக் கோட்பாடு, சிறுதெய்வ வழிபாடு, சடங்குகள், சாதீயமுரண்கள்,


பிறவிக் கோட்பாடு, வினைப்பரிகாரம், வேள்விகள், ஞானநெறி..
இவைகளின் வழி பயணப்படும் இந்திய வழிச் சமூகத்தின்
விழுமியங்களாக தமிழ்ச் சமூகம் தன்னை முழுமையாக ஒப்புக்
கொடுத்துவிட்டதா என்கிற கேள்வி பெரிதாக நிற்கிறது.

குறுகிய காலத்திற்குள் ஒருபுறம் கடவுள் மறுப்புவாதம், மற்ற புறங்களில்


சமணம், சைவம், வைணவம் பேசிய தமிழ்ச்சமூகத்திற்குள்.. பின்னோக்கிய
வழியில் வாதப்பிரதி வாதங்களும், சாதீயம் சார்ந்த கட்சிகளும் விளைந்து
வருவது எத்தனை ஆபத்தானது என்பது நம்முன் நிற்கும் பெரும்
பிரச்சனையாகப் பார்க்கிறேன்.
கிறித்துவ மதமும், இஸ்லாமிய மதமும் இந்தியச் சமூகக்கட்டமைப்பினுள்
அந்நிய மதமாக அல்லது அந்த மதம் சார்ந்தவர்கள் எதிரிகளின் முகாமைச்
சார்ந்தவர்கள் என்று கட்டமைக்கப்பட்டது இயல்பா அல்லது
வேற்றுமையில் ஒற்றுமை என்றொரு இந்திய வாதத்தை வைத்தார்களே
அது செத்துப் போனதா.. ? இந்தக் கேள்விகளுக்கு விடைகாண
முயலுகிறேன்.

தமிழ்ச் சமூகமே அடிமைச் சமூகமா..? நாகரிக கலப்புகள் என்பது தவிர்க்க


இயலாத ஒன்றுதான். வட்டிற்குள்
ீ ஒருமுகமும், பொதுவெளிகளில்
வேறொரு முகமுமாகவே இந்தத் தமிழ்ச்சமூக மனிதர்கள் திரிவதாகவே
எனக்குப்படுகிறது.

மடாதிபதிகளும் சமூகத்திற்காக என்று தம்மை பிரகடனப்படுத்துகிறார்கள்.


அரசியல்வாதிகளும் சமூகத்திற்காக தனது சேவை என்று
பிரகடனப்படுத்துகிறார்கள். ஆயின், தமிழ்ச்சமூகத்து பொதுமைகளுள் இந்த
இருவிதப் போக்கின் அரசியல் முரண்களை தமக்குள் செரித்துக்
கொள்ளாமல், தேக்கநிலையிலேயே இருப்பது என்பது.. அடுத்து இந்தச்
சமூகத்தின் அழிவிற்கான முன்னறிவிப்பாகவே கருதுகிறேன்.
தமிழ்ச்சமூகத்திற்கென்று ஒரு இயக்கக்கூறு இல்லாமை அல்லது
அப்படியொரு இயக்கத்தை கட்டமைக்க இயலாமை தமிழ்ச்சமூகத்தை
அழிவிற்கு இட்டுச் செல்கிறது என்று கூறலாமா..? வழுகிறதா

தமிழ்ச்சமூகம்..?

-யுகாந்தன்

You might also like