You are on page 1of 1

பெருமதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என

வாதாட வந்திருக்கும் நீதி வழுவா நீதி மான்களே, மணிக்காப்பாளர் அவர்களே மற்றும் என்னுடன்
போட்டியிட வந்திருக்கும் சக மாணவ மணிகளே. உங்கள் அனைவருக்கும் எனது முத்தான
முத்தமிழ் வணக்கத்தை உறித்தாக்குகிறேன். இன்று இந்த பொன்னான வேளையில் நான் பேச
எடுத்துக்கொண்ட தலைப்பு “செம்மொழியாம் தமிழ்மொழி”.

நமது தாய்மொழியின் பெயர் தமிழ். தமிழை “உயர் தனிச் செம்மொழி” என்று அறிஞர்கள் கூறுவர்.
தமிழ் உயர்நத
் மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள்.

செம்மொழியாம் தமிழுக்கு இனிமை என்ற பொருளும் உண்டு. இதைத் தேந்தமிழ், தீந்தமிழ் என்ற
அடைமொழிகள் மெய்பிக்கும். மேலும் தமிழ் என்பதை தம் + இதழ் எனப் பிரித்து தம்மிடத்தில் ‘ழ்’
ழை உடையது தமிழ் எனப் பொருள் கூறுவது உண்டு.

சபையோரே,

தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம் என்பவை. நமது செம்மொழிக்கு
பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள், அக்காலத்திலேயே இனத்திற்கு ஓர் எழுத்தாக
எடுத்து மூன்று இனங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கி இருப்பது போற்றுதலுக்குறியது. த -
வல்லினம் ,மி - மெல்லினம் ழ் - இடையினம்

You might also like