You are on page 1of 8

நாட்டார் கலைகளில் வில்லுப்பாட்டு

அறிமுகம் :
மனிதன் தோன்றிய காலத்தே தோன்றியது நாட்டார் கலைகள்.நாட்டார் மக்களின் உணர்ச்சிகளின்
வெளிப்பாடு பாடலாகவும், ஆடலாகவும் அமைகின்றன.இக்கலைகள் அழகியல் சார்ந்தது. இவை
மனமகிழ்விற்காக பொழுதுபோக்கிற்காக மட்டும் நிகழ்த்தப்பெறவில்லை.அதன் வழி மக்கள் வாழும்
பகுதிகளின் கலாச்சாரம்,பண்பாடு,நாகரீகம்,பழக்கவழக்கங்கள்,மனவுணர்வு
கள்,சிந்தனைகள்,நம்பிக்கைகள்,எண்ணங்கள் போன்றவற்றை எடுத்துரைத்து அனைவரும் அறியும்
தகவல் தொடர்பு சாதனமாக விளங்குகின்றது.இவற்றை நாம் வாழும் சமுதாயத்தின் ஆவணம்
எனலாம்.இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கலையினை நிகழ்த்துக் கலைகள்,கைவினைக் கலைகள் என
இருவகைகளாக பிரிக்கின்றனர். நிகழ்த்துக்கலைகளில் குறிப்பிடத்தக்கதாக விளங்குவது
வில்லுப்பாட்டு.இக்கலை ஆரம்ப நாட்களில் கோவில்களில் நிகழ்த்தப்படும் கலையாக இருந்தது
என்பதனை “வில்லடிச்சான் கோவிலிலே - விளக்கு வைக்க நேரமில்லை”என்ற நாட்டுப்புற பாடல்
உணர்த்துகின்றது.வில்லுப் பாடல்கள் மக்களின் பொழுது போக்கிற்காக மட்டும் நிகழ்த்தப்பெறா மல்
அதன் வாயிலாக சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்கள்,விழிப்புணர்வு செய்திகள் பரப்பப்பட்டன.
கலை, சமூக வளர்ச்சிக்கும், மன எழுச்சிக்கும் ஒரு கருவியாக பயன்பட்டது.இன்றய தொழில் நுட்ப
வளர்ச்சியானாலும்,திரைப்பட மோகத்தினாலும் தொன்மையான இக்கலை அழிவின் விளிம்பில் உள்ளது.
இதனை மீட்டுருவாக்கம் செய்து பாதுகாக்கும் நோக்கத்தோடும் இன்றய இளைய தலை முறையினர்
அறிந்து கொள்ளும் வகையிலும் இவ்வாய்வு அமைகின்றது.
தோற்றம்:
மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த பொழுது அவனுக்கு உதவிய வில்லில்
கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகி
இருக்கலாம் எனவும்,போரில் ஏற்பட்ட வெற்றியினைக் கொண்டாடும் வகையில் வில்லின் நாணி னைத்
தட்டி அதிலிருந்து ஓசையினை கேட்டு மகிழ்ந்ததன் வழி தோன்றியதாகவும் கருதப்படுகிறது.
இதனைப்போன்று வேட்டைக்கு செல்லும் மன்னை மகிழ்விக்க அருகில் இருந்த வீரர்களில் சிலர்
தாங்கள் கொண்டு வந்த வில்லில் உள்ள நாணினைக் கொண்டும் தண்ணீர் கொண்டு வந்த மண்

பாண்டங்களைக் கொண்டும் ஓசை எழுப்பி பாடத் தொடங்கினர். அதோடு உடன் இருந்தவர் களும்
பாட மன்னன் மகிழ்ந்ததாகவும் அதன் பிறகு தொடர்ந்து அரசவையிலும் தொடர்ந்து கேட்டு
மகிழ்ந்துள்ளார்.இதன் வழி வில்லுப்பாட்டு தோன்றியதாக செவிவழிக்கதை கூறப்படுகின்றது.மன
மகிழ்ச்சிக்காக பொழுதுபோக்கிற்காக பாட பயன்படுத்தப்பட்ட இக்கலை காலப்போக்கில் வளர்ச்சிப்
பெற்று சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்வதற்கும் பயன்பட்டு வருகின்றது.
1
பெயர்க்காரணம் :
வேட்டையாட போர்புரிய பயன்படுத்தும் வில்லிலுள்ள நாணினைக் கொண்டு இசைத்து பாடப்
பெறுவதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்பது பொதுவான கருத்தாகும்.கோமதி நாயகம்
அவர்கள் இசை அமைதி,இசைப்பருவம்,இசைக் கருவி பொறுத்து பாடல்கள் பெயர்பெறுவதாகவும்,
வில் என்னும் கருவியினை முதன்மையாகக் கொண்டு வில்லுப்பாட்டு என்னும்பெயர்அமைவதால்
இது இசைக்கும் கருவியால் பெறும் பெயர் எனவும் கூறுகின்றார்.இதனை வில் வில்பாட்டு, வில்லு,
வில்லடி, வில்லவினாவது, வில்லடிச்சான் பாட்டு, வில்லிசை எனப் பல பெயர்களில் அழைக்கின்ற
னர்.
காலம் :
முத்துச்சண்முகம் அவர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக கூறுகின்றார். கோமதி
நாயகம் அவர்கள் சண்முகம் பிள்ளை சோமல ஆகியோர் இக்கலை 15 ஆம் நூற்றாண்டில்
தோன்றியது எனக் கூறிய கருத்தினை சுட்டிக் காட்டுகின்றார். வில்லுப்பாட்டின் தோற்றம் குறித்து
வரையறுத்துக் கூற இயலவில்லை இருப்பினும் 18 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் செல்வாக்குடன்
விளங்கி வருகின்றது.
நடைபெறும் இடங்கள்:
தமிழகத்தின் தென் பகுதியான குமரி,நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களிலும் இராமநாத புரப்
பகுதிகளில் உள்ள கோவில்களில் நடைபெறும் கொடை விழாக்களில் நிகழ்த்தப் பெறுகின் றது.
இன்றய சூழலில் தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள கோவில் விழாக்களிலும்,அரசு விழாக்கள்,
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளிலும் நடத்தப்பட்டு வருகின்றது.இலங்கை மலேசியா
போன்ற அயல்நாடுகளிலும் இக்கலை பரவியுள்ளது.
கால அளவு:
இக்கலை பல இரவுகள் கோவில் விழாக்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளது.ஆனால்

இன்றய கால மாற்றத்திற்கு ஏற்ப ஒரு மணிநேரம் முதல் ஆறு மணிநேரம் வரை சூழல்கேற்ப
நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
கலைஞர்களின் எண்ணிக்கை :
வில்லுப்பாட்டு ஒரு குழுவினைக் கொண்டதாக அமையும். ஐந்து முதல் எட்டு பேர்கள் பங்கு
பெறுவர். இதில் வில்லடிப்பவரே தலைவராவர்.இவர் அண்ணாவி எனப்படுகின்றார்.ஏனையோர்
கேட்டுக் கொண்டிருக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் பக்கவாத்தியக்காரர்களாக குடம் உடுக்கு
தாளம்,கட்டை ஆகிய இசைக் கருவிகளை மீட்டுவர். இவர்களோடு துணைப்பாட்டு பாடுபவர்,
பின்பாட்டு இசைப்பவர் என்வர்களும் இடம்பெறுவதுண்டு.ஆண்களால் மட்டும் நடத்தி வந்த இக் கலை
இன்று பெண்களைத் தலைவர்களாகக் கொண்டும் நிகழ்த்தப்படுகின்றது.

2
கலைஞர்களின் இருப்புமுறை:
வில்லினை இயக்கும் புலவர் நடுநாயகமாக வீற்றிருப்பர்.அவருக்கு இடப்பக்கம் குடத்தினை
இயக்குபவர் சிறிய இருக்கையில் குடத்தோடு கட்டிருக்கும் வில்லினை இடது கையினால் அணைத் து
பிடித்தது போன்று அமர்ந்திருப்பார். அதேபோன்று புலவருக்கு பின்புறம் பின்பாட்டுக்காரர்
தாளம்,கட்டை அடிப்பவர் அமர அதே வரிசையில் உடுக்கு அடிப்பவர் குடத்துக்காரரின் வலக்கை
அடுத்து அமர்ந்திருப்பார்.
வில்லுப்பாட்டுக் கருவிகள்:
வில் :

வில்லுப்பாட்டின் முதன்மைக் கருவியான வில்லினை விற்கதிர் எனவும் அழைக்கின்றனர். இதை


பிரம்பு,மூங்கில் அல்லது முதிர்ந்த பனை மரத்தால் 2.25 மீ முதல் 2.50 மீ அளவு இருக்குமாறு
வடிவமாக்குகின்றனர். இதன் நடுப்பகுதி பருத்தும் முனைப்பகுதி சிறுத்தும் இருக்கும். இதிலுள்ள பருத்த
நடுப்பகுதி பந்தடை என்றழைக்கப்படுகின்றது.அப்பருத்த நடுப்பகுதி துணியால் சுற்றப்பட்டு மண்
குடத்தின் கழுத்து பகுதி சேர்த்து கட்டப்படும். வில் குடத்துடன் சேர்த்து கட்டிருப் பதால் நாண் வடம்
மேலாகவும் கதிர் பகுதி கிழாகவும் அமைந்திருக்கும்.கதிரை வளைக்கும் பொழு து ஒடிந்து விடாமல்
இருப்பதற்கு மணிகள் கோர்க்கப்பட்ட கயிற்றினை சுற்றுகின்றனர். அதன் மேல் கில்தாளைச் சுற்றி
அதன் இரு முனைகளிலும் இரும்பு பூண்கள் பொருத்தப்படுகின்றது. இக்

குப்பிகள் இரும்பு,வெண்கலம்,செம்பு கொண்டு யாளி, விளக்கு,பறவை வடிவங்களில் காணப்படு


கின்றது.இதில் வில்லின் நாண் இழுத்துக் கட்டப்படுகின்றது. இவ்நாண்களில் முன்னர் மாட்டுத்
தோலினையும் இன்றய நிலையில் நைலான் அல்லது வேறு கயிறு வகைகளையும் பயன்படுத்து கின்றனர்.
விற்கதிரின் வளைந்த பின்பக்கத்தில் இடது பக்கம் ஐந்து வலதுபக்கம் நான்கு என
மொத்தம் ஒன்பது என வளையங்களை பொருத்துகின்றனர். இவ்வளையங்கள் கரிக்கொள் என்ற
ழைக்கப்படுகின்றது. இவற்றின் இடது புறமும் வலது புறமும் இரும்புக்கம்பிகள் சொருகப்பட்டு
இடதுபுறம் ஐந்து வலது புறம் ஆறு என வெண்கல மணிகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில்
தொங்கவிடுவர்.இன்றய நிலையில் நீண்ட வில்லினைப் பயன்படுத்தாமல் நிகழ்ச்சிக்கு எடுத்து
செல்லும் வகையில் மூன்று பகுதிகளாக பிரித்து இணைத்துக் கொள்ளும் வகையில் வடிவமக்கப்
படுகின்றது.
வீசுகோல்:
கதைப்பாடும் புலவர் கைகளில் வில்லினை இயக்கும் வகையில் இரு கோல்கள் வைத்திரு

3
ப்பர். இது வீசு கோல் எனப்படும்.இக்கோல் 8.செ.மீ முதல் 10.செ.மீ கொண்டதாக கருங்காலி
மரத்தால் செய்யப்பட்டு கைப்பிடிக்கு மேல் உள்ளிடற்று சிற்சில மணிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
பெரும்பாலும் இவ்வீசுகோல்களை கதைப்பாடும் தலைமைப் புலவரே வில்லின் நாணின் மீது தட்டி
தாளத்திற்கேற்ப இசை எழுப்புவார்.இவர் அண்ணாவி என அழைக்கப்படுகின்றார்.சில நேரங்களில்
புலவர் கதை பாட வேறு வேறொருவர் வீசு கோலினை கையாளுவதுமுண்டு.
உடுக்கு:

வில்லுப்பாட்டின் வழி தெய்வக்கதைகளையும்,வீர மிகுந்த கதைகளையும் உணர்ச்சிமயமாகக்


மக்களிடம் கூற பயன்படும் கருவி உடுக்கை எனலாம். நாட்டார் வழிபாடுகளில் உடுக்கை என்பது
முக்கிய இடம்பெறுகின்றது. ஆனால் இங்கு அவ்வுடுக்கையிலிருந்து மாறுபட்ட சிறிய அளவிலான
சிந்துடுக்கை என்பது பயன்படுத்தப்படுகின்றது.இதன் உடல் பகுதி 17.செ.மீ வாய்ப் பகுதி 14.செ.மீ
விட்டம் கொண்டதோடு உடல் பகுதி வெண்கலம்,மரம் அல்லது பித்தளையால்அமைக்கப்பட்டிருக்
கும்.மெல்லிய பிரம்பு அல்லது பனை நாரால் வட்டவடிவ வளையத்தில் மாட்டுச்சவ்வு ஒட்டப்பட்ட
தட்டுகள் உடுக்கின் இருவாய்ப்புறமும் பொருத்தப்பற்றிருக்கும்.இத்தட்டுகள் உடுக் கை தட்டு எனப்

படுகின்றது.ஒரே அளவு இடைவெளி கொண்ட வளையங்களிலுள்ள ஆறு துளைகளில் கயிற்றி னை


மாறி மாறி கோர்த்து இரு உடுக்கின் வாய்ப்புறமும் பொருந்தியிருக்குமாறு கட்டப் பெறுகி ன்றது.
உடுக்கின் இடைப்பகுதியிலுள்ள பின்னலின் மேல் துணியினை சுற்றி அதனை இடக்கை யால் பிடித்து
வலக்கை விரல்களால் உடுக்கினை தட்டி ஓசை எழுப்புவர். உரத்த ஓசை, மந்த ஓசை
என மாறிமாறி ஏற்பட துணிப்பட்டையினை இறுக்கி நெகிழ்த்தி பயன்படுத்துகின்றனர்.
குடம்:

வில்லுப்பாட்டில் பயன்படுத்தப்படும் மண் குடம் நடைமுறையில் பயன்படுத்தப்படும் குடம்


போன்று அல்லாமல் கழுத்துப்பகுதி சிறுத்தும் வாய் விளிம்பு இன்றியும் உறுதி தன்மைக் கொண்ட தாக
காணப்படும். இதன் உடல் பகுதி 30.செ.மீ விட்டமும், கழுத்துப்பகுதி 8.செ.மீ விட்டமும் கொண்டதாக
வடிவமைக்கப்படும். குடம் வைக்கோல் வளயத்தின் மீது வைத்து அதன் கழுத்துப்
பகுதி வில்லின் நடுப்பகுதியோடு சேர்த்துக் கட்டப்பெறுகின்றது. இவ்வைக்கோல் வளையத்தினை
புரிமணை எனவும்,இந்த புரிமணையில் குடம் வைப்பதற்கு பந்தாடை எனவும் கூறுகின்றனர்.

4
இக்குடத்தின் வாய்ப்பகுதியினை மேசைப்பந்தாட்ட மட்டை வடிவம் உடைய தோல் அல்லது பனை
மட்டையினால் செய்யப்பட்ட பத்தி என்பதனைக் கொண்டு வலதுகையினால் வாய்ப்பகுதி யினையும்,
அதே போன்று இடது கைவிரல் இடுக்கில் சொருகிய மரத்துண்டலான சொட்டிக் கட்டை கொண்டு
உடல் பகுதியினையும் தட்டி ஒலி எழுப்புவர். உடுக்கின் சொற்கட்டுக்கு ஏற்ப இவ்வொலி
அமையும்.உடுக்கையும் குடமும் வில்லுப் பாட்டின் சிறப்பு உறுப்புகள் எனலாம்.
தாளம்:

இரும்பு அல்லது பித்தளையால் நடுக்குழிவுற்று வடிவமைக்கப்பட்டிருக்கும் இணை கருவி தாளம்


எனப்படுகின்றது. இதனை ஜால்ரா,சிங்கி,சிஞ்சி எனவும் அழைக்கின்றனர். தாளம் 5.செ.மீ முதல் 10.செ.மீ
விட்டமுள்ள குழிந்து காணப்படும்.இதன் நடுவே குழிவான பகுதியிலுள்ள

துளையில் நூல் கயிற்றினைக்கட்டி கையில் பிடிப்பதற்கேற்ப உள்ளொன்று புறமொன்றாக முடிச்சிட்டு


வைத்திருப் பர்.இணைத்தாளத்தின் குழிவுப்பகுதியினை ஒன்றோடொன்று தட்டி ஒலி எழுப்புவர். உடுக்கு
குடத்திற்கு ஏற்ப தாளம் அமையுமாறு இதனை இயக்குவர்.
கட்டை :
தேக்கு அல்லது கருங்காலியில் 8.செ.மீ நீளம் 4.செ.மீ அகலம் கொண்டு நீண்ட சதுர வடிவில்
கையடக்கமாக கட்டை அமைந்திருக்கும். இதனை கட்டைத்தாளம்,தாளக்கட்டை என்ற பெயரில்
அழைக்கின்றனர். ஒரு கட்டையினை இன்னொரு கட்டையில் தட்டி உலோகத் தாளத்துடன்
ஒத்திருக்குமாறு இயக்குகின்றனர்.
கட்டமைப்பு:
வில்லுப்பாட்டின் கட்டமைப்பினை ஏழு பகுதியாக வகுக்கலாம். அவையாவன
I. காப்பு விருத்தம்:
பாடத் தொடங்கும் முன்னர் எவ்வித இடையூறுயின்றி நிகழ்ச்சி நடைபெற பிடித்த தெய்வத்தை
வணங்கி தொடங்குவது காப்பு எனப்படுகின்றது. இது விருத்தமாக பாடப்படும்.
II. வருபொருள் உரைத்தல் :
அன்றய நிகழ்ச்சியில் பாடப்பெறும் கதைகளை குறித்து சிறப்பாக முன்னுரை அளித்து பாடலாக
பாடப்பெறுவதாகும்.
III. குருவடி பாடுதல் :
வில்லுப்பாட்டு பாடும் புலவர்கள் இக்கலையினை பயிற்று வித்த தங்கள் ஆசிரியரை
நினைவுகூர்ந்து வணங்கி பாடி மரியாதை அளிப்பர். இது குருவடி பாடுதல் எனப்படும்.
5
IV. அவையடக்கம்:
வில்லிசைக் கலைஞர்கள் தங்களை எளியோராகவும்,கதை கேட்போர்களை சான்றோராகவும் பாவித்து
நிகழ்வில் பிழை நேர்ந்தால் பொறுத்துக் கொள்ளும்படி பாடப்படும் பகுதியாகும்.
V. நாட்டு வளம் (அ) கயிலைக்காட்சி :
கதையின் தொடக்கத்தில் நாட்டைப் போற்றிப் பாடுவதாகும்.இஃது எல்லாக் கதைகளுக்கும்
பொதுவானதாக அமைக்கப்பட்டிருக்கும்.
VI. கதைக்கூறுதல்:
வில்லுப்பாட்டு நிகழ்வின் முக்கிய பகுதியாகும். கதையின் தலைவன் அல்லது தலைவியின்

சிறப்புகள் புகழ்ந்துரைக்கப்படுவதோடு அவர்களின் குணநலன்களை நிரல் பட அடுக்கிக் கொண்


டே பாடிச் செல்லும் பகுதியாகும். அதோடு கிராம தெய்வத்தின் கதை,இதிகாச கதைகள் பாடல் களாக
இப்பகுதியில் தான் நிகழ்த்தப்படும்.
VII. வாழிபாடுதல்:
வில்லுப்பாட்டின் இறுதி பகுதியாகும். சபையில் கூடியிருந்து வில்லிசையினை இரசித்த மக்கள்,கதை
மாந்தர்,கதை கூறுபவர் என அனைவரும் நலம் பெற வாழ்த்தி மங்களமாக முடிவு பெறும் நிலை.
கதைகளின் வகைப்பாடு :
1. இதிகாச புராணக் கதைகள்
2. நாட்டார் கதைகள்
3. தெய்வக் கதைகள்
4. சமுதாயக் கதைகள்
5. வரலாற்று வீரர் கதைகள்
6. நடப்பியல் நிகழ்வுகள்
என மரபுவழிக்கதைகள் முதல் தற்கால நிகழ்வுகள் வரை வில்லுப் பாட்டுக்கு கதைப்பகுதியாக
அமைகின்றன.
நிகழ்த்தப்படும் முறை:
நாட்டார் கலைகள் தொடங்கும் முன்பு இறைவனை வணங்கி தொடங்குவார். அதே முறையில்
முதலில் வில்லுப்பாட்டு கலைஞர்கள் இசைக்கருவிகளை அதற்குரிய இடங்களில் வைக்கின்றனர். அதன்
பிறகு அக்கலைஞர்களில் ஒருவர் வில்லுப்பாட்டின் முதன்மைக் கருவியான வில் நாணிற்கு முன்
வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் படைத்து அதற்கும் பிற இசைக்கருவிகளுக்கும் கற்பூரம் காட்டி
வணங்கிய பின் தலைமைப் புலவர் மேடையில் அமர அவரைத் தொடர்ந்து பிற இசைக் கலைஞர்கள்
அமர்ந்து இசைக்கருவிகளை ஒரு சேர இயக்குவர். இது இராஜ மேளம் எனப்படும். இராஜமேளம்
முடித்தவுடன் தலைமப் புலவர் குரு வணக்கம் அவை வணக்கம் பாடிய பின் கதைப் பகுதியை கூறி

6
அதில் குறிப்பிட்ட பாடலை பாடி நளினத்துடன் நானிணை தட்டுவார்.புலவர் பாடும் போது குடம்
இசைப்பவர் பத்தியினைக் கொண்டு அதன் வாய்பகுதியில் தட்ட பிற கலைஞர்களும் பாட்டிற்கேற்ப
இசைப்பர். புலவர் கதை சொல்லியும் பாடியும் முடிக்கும் போது இடைமறிக்கும்

பின்பாட்டுக்காரர் ஆமா, ஆகா, ஓகோ, அப்படியா, எப்படி,சரி எனப் பல சொற்களை சூழ்நிலைக்


குத்தக்கவாறு கதைக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும்,ஒரே போக்கில் செல்லும் கதையின் வேகத்தை
மாற்றி தொய்வு ஏற்படாமல் இருக்கவும் இது போன்ற சொற்களை இடையிடையே பேசி தொடர்ந்து
நிகழ்சி நடத்தப் பெறுகின்றது.
புகழ் பெற்ற கலைஞர்கள்:
நெல்லை புலிக்குட்டி புலவர்,தோவாளை சுந்தரம்,யாழ்பாணம் சின்னமணி,சொக்கல்லோ
சண்முகநாதன்,நாச்சிமார் கோவிலடி ராஜன்,கலைமாமணி கோவில்பட்டி முத்துசாமி,கலைமாமணி
விளாத்திக்குளம் ராஜலட்சுமி, பூங்குடி ஆறுமுகம் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்களாவர். இக்கால
வில்லுப்பாட்டில் பல புதுமைகள் புகுதப்பெறுவதற்கும் கால அளவில் சுருக்கம், கதையமைப்பில்
மாற்றம், கதைப் பொருளில் புதுமை போன்றவற்றோடு கட்டப்பொம்மன், பாரதி, காந்தியடிகள் கதை,
கண்ணகி கதை, சீதா கல்யாணம் போன்ற கதைகளையும் உருவாக்கியவர் வில்லிசை வேந்தர்’ எனப்
போற்றப்பட்ட பிச்சைக்குட்டிப் புலவர் ஆவார். இவரைப்போன்று பத்மஸ்ரீ சுப்பு ஆறுமுகம் அவர்கள்
காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதைகளை எழுதி நிகழ்சி செய்ததோடு
திருவையாறு தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் நூற்று நாற்பதைந்து வருடங்களாக இல்லாத வகையில்
தியாகப் பிரம்மத்தைப் பற்றி வில்லுப்பாட்டில் கதை நிகழ்த்தி தமிழை ஒலிக்கச் செய்தார். இவருடைய
மகளான பாரதி திருமகன், மகன் காந்தி இவருடனேயே
வில்லிசைபாடிக் கலையை வளர்த்து வருகின்றார்கள். திரைத்துறையில் வில்லிசைக் கலையினை
காந்திமகான் கதை வழியாக புகுத்தியவர் கலைவாணர் என். எசு.கிருட்டிணன் ஆவார்.
வில்லுப்பாட்டின் பயன்:
கதையாகவும் பாடலாகவும் மக்களிடையே மரபு கதைகள் முதல் தற்கால நிகழ்வுகள் குறித்து
கல்வி அறிவு உடையோர் முதல் கல்வி அறிவு பெறாதவர்கள் வரை அறிந்து கொள்ள எளிய வண்ணம்
எடுத்துச் சொல்ல பயன்படுகின்றது.கோவில் விழாக்களில் மட்டும் நடத்தப்பட்ட இக்கலை கல்வி நிறுவன
விழாக்கள் அரசு விழாக்கள் விழிப்புணர்வு நிகழ்வுகள் என அனைத்திலும் தனித்துவம் வாய்ந்தாக
கருத்துக்களை எடுத்துக் கூற பயன்படுகின்றது.ஆனால் திரைப்பட தாக்கத் தினால் அழிவு நோக்கி
செல்லும் இக்கலையினை 2019 ஆம் ஆண்டு நம் பிரதமர் மோடி அவர்கள்

மன்-கி-பாத் நிகழ்ச்சியின் மூலம் எடுத்துக் கூறியது நினைவுக்கூறத்தக்கது.


நிறைவுரை :

7
வில்லுப்பாட்டு கலையோடு அழிவின் விளிம்பில் உள்ள நாட்டார் கலைகளை இன்றய தொழில்
நுட்ப வளர்ச்சியான சமூக வலைதளங்கள்,இணையம் போன்றவற்றை பயன்படுத்தி உலகு அறியச்
செய்து அவற்றின் சிறப்பினை உணரச் செய்தல் வேண்டும். நாட்டுப்புறக்
கலைகளை வளர்க்க அதன் கலைஞர்களை ஊக்குவிக்க அனைத்து கல்லூரிகளிலும் பயிற்சி கூடங்கள்
அமைத்து பயிற்சியளிப்பதன் மூலம் அவர்கள் பொருளாதாரம் உயர்ந்து வாழ்வு சிறப்ப தோடு
நாட்டார் கலைகளும் பாதுகாக்கப்படும்.தொன்மையான இக்கலைகளை விழாக்களில் புதிய முறைகளோடு
நிகழ்த்தி அதன் வழி இன்றய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளச் வழிவகை செய்தல்
வேண்டும்.
துணை நின்ற நூல்கள்:
1. தமிழ் வில்லுப் பாட்டுகள் - தி.சி.கோமதி நாயகம் எம்.ஏ, தமிழ்ப்பதிப்பகம்,சென்னை. 1979
2. சடங்கில் கரைந்த கலைகள் - அ.கா.பெருமாள்,காலச்சுவடு பதிப்பகம்,நாகர்கோவில்.2010
3. நாட்டுப்புறவியல்- மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகம் தொலை நிலைக்கல்வி.
4. வில் பிறந்த கதை–வில்லிசைச் செல்வி இராஜம் புஷ்பவனம் குமரன் பதிப்பகம் கொழும்பு.1991

You might also like