You are on page 1of 5

1.

இராமகிருஷ்ண தமிழ்ப்பள்ளி
இயங்கலை வகுப்பு
ஐம்பெருங்காப்பியங்கள் (School slide)
ஆசிரியர்
2. ஐம்பெருங்காப்பியம் - வளையாபதி
திகதி :
நேரம் :
விதிமுறைகள் :
ஆசிரியர்
3. வளையாபதி
மாணவர்
4. வளையாபதி யின் பொதுவான வரலாறு
* இக்காப்பியம் இயற்றப்பட்ட காலம் சரியாகத் தெரியவில்லை என்றாலும் 9-ஆம் நூற்றாண்டில்
இயற்றப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வளையாபதியின் கதை சூடாமணி புலவர் இயற்றிய வைசிய
புராணத்தில் 35 ஆவது அத்தியாயத்தில் உள்ளது.

* இது சமண சமயத்தைச் சார்ந்த நூல் என அறியப்படுகிறது.


(சமணம் என்பது மனித ஆன்மாவின் மீது நம்பிக்கை கொண்டு துறவற வாழ்ககை
் யை வாழ்தல் எனப்படும்)

*இக்காப்பியத்தில் மொத்தம் 72 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.


இது விருத்தப்பா யாப்பில் அமைந்துள்ளது.

அடியாருக்கு நல்லார், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகியோர் தங்கள் உரையில்


மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர்.

வளையாபதியின் காப்பியக்கதை முழுமையாகத் தெரியாததற்குக் காரணம் நூல் முழுவதும்


கிடைக்காமையே ஆகும். கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு கதையை உருவாக்கியுள்ளனர் என்பதுவே
உண்மை
எதுவாகினும் வாழ்க்கை விழுமியங்களை எளிமையாகவும் இனிமையாகவும் எடுத்துரைக்கும் காப்பியம்
வளையாபதி.

5. இக்காப்பியத்திற்கு வளையாபதி என்ற பெயர் வரக் காரணம்


என்ன?
ஐப்பெருங்காப்பியங்கள் அனைத்துமே அணிகலன்களின் பெயரால் அமைந்துள்ளன. அதுபோல
வளையாபதியும் வளையல் - அது பெண்கள் கையில் அணியும் அணிகலனைக் குறிக்கிறது. இக்கதையில்
வரும் முக்கியக் கதாபாத்திரமான நவகோடி நாராயணன் என்பவர் எதற்கும் வளைந்து கொடுக்காத
தன்மை உடையவராக இருப்பதனால் இக்காப்பியம் வளையாபதி என்றழைக்கப்படுகிறது.

6. நூலாசிரியர்
நூலாசிரியர் யார் என்று தெரியவில்லை. ஆனால், அவர் பாடல் புனையும் ஆற்றலும் திறமையும்
கொண்டுள்ளவர் என்பது அவர் இயற்றியப் பாடல்கள் வழி தெரிய வருகிறது. கிடைக்கப்பட்டப் பாடல்கள்
அனைத்தும், கவியழகு மிக்கவையாக உள்ளன. மேலும், நூலாசிரியர் திருக்குறள், குறுந்தொகை போன்ற
சங்க கால இலக்கியங்களிலிருந்து கருத்துகள் , சொற்றொடர்கள் ஆகியவற்றை எடுத்துப்
பயன்படுத்தியுள்ளார் என்பதுவும் தெரிய வருகிறது

7. இக்காப்பியம் நிகழ்நத
் ஊர்

சோழ நாட்டின் புகழ்மிக்க நகரம் காவிரிப் பூம்பட்டிணம் ஆகும். இதற்கு இன்னொரு பெயர் புகார். இங்குதான்
இக்காப்பியம் பிறந்தது

8. வளையாபதி காப்பியத்தின் முக்கியக் கதைமாந்தர்கள்


இக்காப்பியத்தின் தலைவன் - நவகோடி நாராயணன்

காப்பியத்தின் தலைவி - இளைய மனைவி பத்தினி

துணை கதைமாந்தர் - மகன் உத்தமன் அல்லது வீரவாணிபன்


.

துணை கதைமாந்தர் - மூத்த மனைவி அந்தரி


துணை கதைமாந்தர் - சாத்தான் (மூத்த மனைவி அந்தரியின் சகோதரர்)

9. கதைச் சுருக்கம்
நாராயணன் பெருஞ் செல்வம் கொண்ட ஒரு வைர வணிகன். அவன் செல்வம் ஒன்பது கோடி பொற்காசுகள்
பெறும் என்பதால் அவனை மக்கள் நவகோடி நாராயணன் என்றழைத்தனர். பிடிவாதம், மனம் போனபடி
எதையும் செய்பவனாக இருந்த வளையாபதி தன் குலத்துப் பெண்ணான அந்தரி என்பவளை மணம்
முடித்து குடும்பம் நடத்தி வந்தான். நெடுநாள் ஆகியும் அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லாத
காரணத்தால் நவகோடி நாராயணன் வேற்றுக் குலத்துப் பெண்ணான பத்தினியை மணம் முடித்தான். இதை
அறிந்த முதல் மனைவி அந்தரி தன் அண்ணன் சாத்தானுடன் சேர்ந்து பத்தினிக்குப் பல கலகம்
விளைவித்தாள். பத்தினி தாழ்ந்த குலப்பெண் எனக் காரணம் கூறி ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
இதற்கிடையில் அந்தரி தான் கருவுற்றிருப்பதாகப் பொய்க்கூறினாள்.
உண்மை நிலை அறியாது வளையாபதி பத்தினியை விட்டு விலகி விடுகிறான். அதே சமயம் பொருள் ஈட்டும்
பொருட்டுக் கடல் கடந்து வணிகம் செய்ய சென்று விடுகிறான். அச்சமயம் கருவுற்றிருந்த பத்தினி
தன்னால் சுயமாக வாழ முடியும் என்றும் பொருள் நிறைந்த உலக வாழ்ககை
் ஒரு நாள் அழியும் என்று கூறி
துணிச்சலுடன் கால் சென்ற இடம் சென்று விடுகிறாள்.
இதற்கிடையில் சாத்தானுடையப் பிள்ளையைத் தான் பெற்ற பிள்ளை என வளையாபதியையும் ஊராரையும்
நம்ப வைத்தாள் அந்தரி.
ஊரை விட்டுச் சென்ற பத்தினிக்குக் காளிதேவியின் அருளால் தவ மூதாட்டி ஒருவரின் உதவியுடன்
வாழ்ந்தாள். அவளுக்கு ஓர் அழகான ஆண் பிள்ளைப் பிறந்தது. பிள்ளைக்கு உத்தமன் என பெயரிட்டு
நன்னெறிப்பண்புடன் வளர்தத் ாள்.
சிறுவனின் விளையாட்டுத் தோழர்கள் தன் தகப்பனார் பற்றிக் கேளியும் கிண்டலுமாகப் பேசினர். இதனால்
மனமுடைந்த சிறுவன் அதனைத் தன் தாயிடம் முறையிட்டான். பத்தினி தன் மகனிடன் தந்தையின்
பெயரைத் தெரிவித்தவுடன் உத்தமன் அவரைத் தேடிச் சென்று தன்னை மகனாகக் ஏற்றுக் கொள்ளும்படி
வேண்டினான். ஆயினும் எதற்கும் வளைந்து கொடுக்காத நவகோடி நாராயணன் தன் மகனை ஏற்றுக்
கொள்ள மறுக்கிறான்.
இதை அறிந்த பத்தினி தான் வணங்கும் காளிதேவியிடம் முறையிட்டாள். அவளின் அருளால் தன் கற்பின்
உண்மையை ஊரார் முன் நிலைநாட்டினாள். இறுதியில் தன் மகனை ஏற்றுக் கொண்ட நவகோடி நாராயணன்,
அவனுக்கு வீரவாணிபன் எனப் பெயரிட்டான்.
ஆனாலும், பத்தினி இனி இல்லறம் வேண்டாம்! உலக வாழ்க்கை நிலையற்றது! துறவறமே சிறந்தது! என்று
கூறி அவர்களுக்கு விடைக் கொடுத்து துறவறம் பூட்டாள்.

வளையாபதி காப்பியத்தின் கதை இவ்வாறு முடிவுற்றாலும், இந்நூல் சமண சமயக் கருத்துகளையும்


கூறுவதால், சமண நூலில் காளிதேவியைப் பற்றின செய்திகள் இடம் பெற வாய்ப்புகள் இல்லை என்றே
தோன்றுகிறது. இதற்கு முக்கியக் காரணம் இக்காப்பியத்தின் செய்யுட்கள் அல்லது பாடல்கள்
முழுமையாகக் கிடைக்கப் பெறாததே ஆகும்.

10. பண்புநலன்கள்
நவகோடி நாராயணன்
பொருள் ஈட்டுவதில் சிறந்தவனாகவும் நினைத்ததை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாக
இருந்த போதிலும் பிடிவாதக்குணம் உடையவன். மேலும் கருணையற்றவன்.

இளைய மனைவி பத்தினி


அறவொழுக்கம் கொண்டவள், தெய்வ நம்பிக்கையுடையவள்,
உரிமையை விட்டுக் கொடுக்காதவள், வாழ்க்கை நிலையற்றது என்பதை உணர்ந்தவள்

மகன் உத்தமன் அல்லது வீரவாணிபன்


நீதியை நிலைநாட்ட இறுதி வரை போராடக்கூடியவன். தாயையும் தந்தையையும் இணைத்து வைத்தவன்.

துணை கதைமாந்தர் - மூத்த மனைவி அந்தரி


வஞ்சக எண்ணமும் சூழ்ச்சியும் கொண்டவள். பொறாமை குணம் உடையவள்.

துணை கதைமாந்தர் - சாத்தான் (மூத்த மனைவி அந்தரியின் சகோதரர்)


சோம்பேறி, பிறர் சொத்துக்கு ஆசைப்படுபவன், வஞ்சகன், ஊதாரி
11. காப்பியதின் நீதி
அறவொழுக்கம்
வளையாபதியில் உள்ள பாடல்கள் கீழ்க்கண்ட அதிகாரங்களில் உள்ளன.
எ.கா பிறவி பெறுதற்கருமை, கற்புடை மகளிர் , கற்பில் மகளிர், புதல்வரை பெறுதல் & அடக்கமுடைமை
இவற்றை ஆராயும்போது, பொதுவாக வளையாபதியின் நூலாசிரியர் அறவொழுக்கத்தை அதிகம்
வற்புறுத்துவதாக அமைகிறது.

இறைபக்தியை
கடவுள் வாழ்த்து - வாலறிவன் அருகனை வாழ்த்துகிறது.

வீடுபேறு
வினைப்பயன் நீங்கி வீடுபேறு பெற வேண்டும் என்ற எண்னம் வெளிப்படுகிறது.

அறம்
நீதி நூல் - கொலை, களவு, புறங்கூறாதே, , தவம் செய்க. அறத்தையே வலியுறுத்துகிறது.

12. இன்றைய வாழ்வியலில் வளையாபதி காப்பியம்


நம் தமிழ்மொழியில் உள்ள ஐப்பெறுங்காப்பியங்களின் பெயர்களையும் அதன் கதைகளையும் அறிந்து
கொள்வதோடு மட்டுமல்லாமல், அக்காப்பியங்கள் இன்றைய வாழ்வியலோடு தொடர்புபடுத்தி
அதனைக் கற்பதனால் என்ன பயன் என்பதையும் எடுத்துக் கூறினால் மட்டுமே, இன்றைய
தலைமுறையினர் அதனைப் படிப்பதற்கும் ஆராய்வதற்கும் முற்படுவர். இல்லையேல் அவை
ஓலையிலும் ஏட்டிலும் மட்டுமே இருக்கும்.
வளையாபதி காப்பியதில் சொல்லப்பட்ட சில கருத்துகள் இன்றளவும் நம் வாழ்க்கைக்கு
ஏற்புடையதாக இருக்கின்றன. அவை:-

1. குல வேறுபாடு - அக்காலம் தொட்டே குல வேறுபாடுக்கு நம் இனத்தவர்கள் தைரியமாக க் குரல்
கொடுத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. இதையே, ஓடும் உதிரத்திலும் வடிந்து ஒழுகும்
கண்ணீரிலும் ஜாதிகள் தெரிவதில்லை என்பதைத் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையும்,
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பதை பாரதியாரும் பாடியுள்ளனர்.

2. பெண் உரிமை
இக்கதையில் வரும் பத்தினி முதலில் பல இன்னல்களைச் சந்தித்தாலும் இறுதியில் அவருக்கு
நீதி கிடைத்தது. அக்காலம் தொட்டே பெண்கள் தைரியமாக தங்கள் உரிமையை விட்டுக்
கொடுக்காமல் போராடியுள்ளனர் என்பதை இது காட்டுகிறது. அதேப்போல இன்றும் நம்
பெண்கள் தங்களுக்கு அநீதி ஏற்பட்டால் அதனைத் தட்டிக்கேட்கும் உரிமை கொண்டுள்ளனர்.

3. வாய்மையே வெல்லும் - உண்மையை உறங்காது என்பார்கள். இஃது இக்கதைக்கு மிக


பொருத்தம். நவகோடி நாராயணன் தன் மகனையும் மனைவியையும் ஏற்றக் கொள்ள
மறுத்தப்போதும், அவ்வுண்மை ஊர் மக்களுக்கு வெளிப்படுகிறது. ஆகவே, இன்றைய சுழலில்
வாழும் நாம் என்றும் உண்மையை மறைக்காமல் நேர்மையுடன் நடந்து கொள்வதே வாழ்ககை
் க்கு
மேன்மை அளிக்கும். .

4. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - இப்பழமொழிக்கு ஏற்ப நம் தமிழர்கள் குறிப்பாக நவகோடி
நாரயணன் பொருள் ஈட்டும் பொருட்டு தன் குடும்பதை விட்டு வணிகம் செய்ய கடல் கடந்து
செல்வதாகக் கதை அமைகிறது. அதோடு வணிகம் என்பது நம் தமிழர்களுக்கு ஒரு புதிய
தொழில் அல்ல. ஆதிகாலம் தொட்டே நம் இனத்தவர்கள் வணிகம் செய்து பெரும்
பணக்காரர்களான வரலாறு இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் பலரும் இது போலவே தங்கள்
வாழ்க்கை தரத்தை உயர்தத ் செல்வத்தைத் தேடி பிறநாடுகளுக்குப் பயணம் செய்கின்றனர்.

5. செல்வம் நிலையற்றது - பொருள் தேட வேண்டும். ஆனால், அதிக அளவில் பொருள் இருந்தால்
வாழ்க்கையில் நிம்மதி இருக்காது என்பதை உணர்த்துகிறது. இக்கதையில் வரும் பத்தினி
இல்வாழ்க்கை நிலையற்றது என்று, இறுதியில் துறவறம் பூணுகிறாள். அதிக அளவில்
பொன்,பொருள், பணம் தேடாமல் எதிலும் மிதமான மனப்போக்கு இருந்தால் வாழ்ககை் மகிழ்ச்சி
அளிக்கும் என்பதை இக்காப்பியம் நமக்குப் பாடம் புகட்டுகிறது.

13. புதிர்ப்போட்டி

You might also like