You are on page 1of 21

ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால், நாம் உடனடியாக என்ன செய்ய

வேண்டும்?.

Follow the below steps

1. முதன் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது Computerised EC 1975


முதல் போட்டு பார்க்க வேண்டும்.

கடைசி முப்பது ஆண்டு மட்டுமே EC பார்க்க வேண்டும் என்ற concept


எல்லாம் மலை ஏறிப்போச்சு.

எனவே 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம்
போட்டு பார்க்க வேண்டும். இதற்கு கொஞ்சம் சிலவு ஆகும்.

2.1-Zero value நிலம்

-EC யில் நிலத்தின் மதிப்பு “Zero Vale” மதிப்பு என்று இருந்தால் அந்த நிலத்தில்
ஏதோ வில்லங்க இருக்கு என்று பொருள்.

அது

1.பூமிதான நில வில்லங்கமா? அல்லது 2.புறம்போக்கு நில வில்லங்கமா?


அல்லது 3.வேறு ஏதோ காரணத்துக்கு “zero value “ என்று போட்டு
உள்ளார்களா?. என்று கண்டுபிடிக்க வேண்டும.

எனவே 100% zero value நிலம் வாங்காதீர்.

2. இரண்டாவது நீங்கள் வாங்க போகும் இடம்\நிலம் அமைந்துள்ள


கிராமம், நகரம், மாநகரம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்

1. ரயத்வாரி கிராமமா?

2. ஜமீ ன் கிராமமா?

3. எஸ்டேட் நிலமா?.
4. மிட்டா கிராமமா?

5. மிராசு கிராமமா?

6. ஜாகிர் கிராமமா?.

7. கோயில் ஊழியர்(பூக்கட்டி, தேவதாசி, மாடு


பால் கரப்பவர் etc.) இனாம் இடமா?

8 .சோஸ்திரம் மானிய இடமா?

9. தொழிலாளர்(வண்ணார்ன் , தச்சன்,
காவக்காரன், வெட்டியான்., etc.) மானிய
இடமா?.

10. DC land?.

11. கோயில் இறையிலி கிராமமா?

12. கோயில் தேவதானம் இடமா?

13. தர்மதாய இடமா?

14. அக்ராகார மானிய இடமா?

15. HSD Assignment Land அதாவது அனுபந்த


நிலமா?.

16. RTR நிலமா?.

என்று கண்டுபிடிக்கணும்?.

அது போல ஜமீ ன்தார், பெரும் நிலசுவாந்தார் ஒழிப்பு மூலம் உபரி


17.நில உச்சவரம்பில்(land Ceiling ACT மூலம்) அரசு எடுத்துக்கொண்ட இடமா?

18. நகர நில உச்சவரம்பில்(ULC) அரசு எடுத்துக்கொண்ட இடமா?

என்றும் கண்டுபிடிக்கணும்.

இதை ஏன் கண்டுபிடிக்க சொல்கிறேன் என்றால் இறையிலி, கோயில்


தேவதானம் இடம் , தர்மதாய இடம் , DC Land(பஞ்சமி நிலம்) தவிர மற்ற
எல்லாவற்றையும் பிரிட்டிஷ்கார்கள் ஒழித்துவிட்டார்கள்,

சுதந்திரத்துக்கு பின் இந்திய அரசும், தமிழ்நாடு அரசுகள் ஒழித்து விட்டார்கள்.


எல்லா வகை கிராமத்தையும் ரயத்வாரி கிராமமாக மாற்றிவிட்டார்கள்.

ஒழிக்கும் போது இந்த ஜமீ ன், மிட்டா, மிராசு, எஸ்டேட் owner கில்லாடியாக,
திருட்டு தனமாக அவர்களுடைய பெயரையே திரும்பவும் ரயத்வாரி
சிஸ்டத்தில் சேர்த்துவிட்டார்கள்.

(SJ சூர்யா famous டயலாக் நியாபகம் வைத்து கொள்ளுங்கள் (இருக்குது


ஆனால் இல்லை) (அரசு உபரி நிலம் எடுத்தது ஆனால் எடுக்கவில்லை).

இதை கண்டுபிடிக்க முடிந்தால் 50 % அதாவது பாதி வேலை முடிந்தது என்று


வைத்து கொள்ளுங்கள்.

இதை கண்டுபிடிக்க இடம் அமைந்துள்ள கிராமத்தின் VAO (கிராம நிர்வாக


அலுவலர்), நகரம் எனில் RI (Revenue Inspector, Tahsildar)-ரை சந்தித்து அது என்ன
வகையான கிராமம்?. என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒரு 50- ரூபாய் பணம் கட்டி மாவட்ட


ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ரெகார்ட் section -இல் உங்கள் சர்வே நம்பர்-
இன் SLR , RSLR ,OSR ,RSR நகல் வேண்டி விண்ணப்பிக்கவும்.

அதில் தெளிவாக சொல்ல பட்டு இருக்கும்(குறிப்பாக remarks\ குறிப்பு என்று


எழுதி இருக்கும் பகுதியை பாருங்கள்).
(ரயத்வாரி கிராமம் என்றால் பெரிய கம்ப சூத்திர வார்த்தை இல்லை அது
ரொம்ப சிம்பிள், அது குடிமக்கள் எந்த வித புரோக்கர்(ஜமீ ன், மிட்டா,
மிராசு)இல்லாமல் அரசுக்கு நேரடியாக வரி கட்டும் முறை. அவ்வளவே) .

இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் Driving license நீங்களாகவும்


எடுக்கலாம் புரோக்கர்(Driving School) வைத்தும் எடுக்கலாம். நீங்களே நேரடியாக
எடுத்தால் அது ரயத்வாரி கிராமம். ஒரு புரோக்கர்(ஜமீ ன்) வைத்து எடுத்தால்
அது ஜமீ ன் கிராமம்.

3.Double Document நிலம்.

Double document என்று சிறிதளவு சந்தேகம் வந்தாலும் அந்த நிலத்தை


வாங்காதீர். சும்மா இருக்கிறோம் என்பதற்காக கையை அறுத்து கொள்ளாதீர்.

3.1-Power of Attorney(POA) Double Document

அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர். இது double டாக்குமெண்ட்


சிக்கலுக்கு இட்டு செல்லும்.

POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட,


சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள். POA agreement நகல்
வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ்ஸில் power கொடுத்தவரை நேரில்
சந்தித்து விசாரியுங்கள்.

அந்த power பத்திரம் செல்ல கூடியாதா? என்று கேளுங்கள்.

அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா


என்றும் கேளுங்கள்.முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி
கொடுத்தவர்) ளும் விற்கலாம். விற்றால் அது double டாக்குமெண்ட்.

3.2- உயில் பத்திர நிலம் -Double Document.

உயில் மூலம் உரிமை மாறி இருக்கா?

உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.


எது இறுதி/கடைசி உயில்? என்று கவனமாக பார்க்க வேண்டும்.பதிவு
செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை
பத்திரம்.

பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில்


இருக்கா? என்று நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும்.இந்த
பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது
Double Document .

Legal Heir Certificate.

விற்பவற்கு உயில் மூலம் நிலம் வந்து இருந்தால் அவர் வாங்கிய (வாரிசு


சான்றிதழ்) கொடுக்க சொல்லி பாருங்கள்.

திருட்டு உயில்

அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மகன், மகளுக்கு பங்கு தராமல் ஏமாற்றி


விற்கிறாரா அல்லது பழைய stamp பேப்பர் வாங்கி எழுதப்பட்ட திருட்டு
உயிலா ன்னு தெரியவரும்.

3.3-Settlement பத்திர நிலம்-double document

Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து


செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும்.

1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து


நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.

செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலியமாக தான் ரத்து பண்ண


முடியும்.

பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.


EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை
வாங்காதீர்.

உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால். அந்த தாய் பத்திர உயில்


மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்துக்கு லிங்க்
கவனமாக இறங்கியதா(மேட்ச் ஆகுதா )என்று பார்க்க வேண்டும்.

3.4-Update ஆகாத பட்டா மூலம் கிரயம்-double document.

3.4.1-விற்றவர்(பழைய owner) மறுபடியும் வேறொருவருக்கு விற்பதால் வரும்


டபுள் டாக்குமெண்ட்

1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம்


வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டா(சிட்டா, நத்தம்
அடங்கல்)லில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner
என்பதை update செய்யாமல் இருந்தால் 1987 முந்தைய owner & அவரின்
வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால்.

3.4.2-புது owner பட்டாவில் update செய்யாமல் வேறொருவருக்கு விற்பதால்


வரும் டபுள் டாக்குமெண்ட்

அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட புது owner


இல்லை அவரின் வாரிசுகளோ விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால்
அதுவும் double document.

4.- Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?

அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் ஆஹ் என்று பாருங்கள்?.

DTCP approved or CMDA approved என்றால் DTCP & CMDA website யில் approval
நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம்.

Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning


authority )என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின்
approval சரிதானா என்று கேளுங்கள்.
அது பழைய approved layout-ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு
வந்திருக்கும் layout-ஆஹ் என்றும் விசாரியுங்கள்.

Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் க்கு இடம்
விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள்.

நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி


விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ) redraw
செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள்.

எனவே ஜாக்கிரதை.

பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால்


வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை DTCP /CMDA frame work scheme இன் கீ ழ்
approval(வரையறை) செய்ய அலைய வேண்டி இருக்கும்.

நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும். உங்கள் சர்வே நம்பர் இன்
UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா, நத்தம் அடங்கலை, FMB நேரில்
நேரில் சென்று கேளுங்கள்.

இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி


திட்டத்தின் கீ ழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த
பட்டா UDR காலத்து சிட்டா, அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும்
பார்க்கணும்.

VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால் RTI மனுவில் கேளுங்கள்.


RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

5. EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை


என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள் .

8. Legal Heir Certificate.


விற்பவற்கு ஒரிஜினல் owner(தாய், தந்தை, பாட்டன், பூட்டன்)மூலம் & பூர்வக

சொத்து மூலம் நிலம் வந்து இருந்தால் அவர் வாங்கிய (வாரிசு சான்றிதழ்)
கொடுக்க சொல்லி பாருங்கள்.

VAO, டாசில்தார் ரை கரெக்ட் செய்து வாங்கிய திருட்டு வாரிசு சான்றிதழ்


மூலம் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மகன், மகளுக்கு பங்கு தராமல்
ஏமாற்றி விற்கிறாரா என்று தெரியவரும்.

9. .பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும்.

7.1-கூட்டு பட்டா சிக்கல் .

கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு


இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும். இல்லை என்றால்
வாங்கும் உங்களுக்கு சிக்கல். விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை
விற்க வாய்ப்பு இருக்கு
பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம்.

அதனாலே, விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள்.அதன் பின்பு


நிலத்தை வாங்குங்கள்.

10. Minor(சிறுவர், சிறுமியர்) நிலம்

Guardian மூலன் minor நிலம் விற்பனைக்கு வந்தால் அவர் கோர்ட் அங்கீ கரித்த
காப்பாளர்ரா இல்லை மாமன், ம்ச்சான், பெரியப்பா,பெரியம்மா சித்தப்பா, சித்தி,
அத்தை மாமா வா ன்னு உறுதி செய்து கொள்ளுங்கள்.

கோர்ட்டில் இருந்து minor வாழ்க்கை நலன் கருதி விற்கலாம் என்று கோர்ட்


order கொடுக்காத minor நிலம் வாங்காதீர்.

நிலம் வாங்குவது ஒரு காண்ட்ராக்ட் அடிப்படையில் எனவே அது valid contract


ஆக இருக்க வேண்டும்.

Minor இடம் போடும் contract செல்லாது. அது போன்று minor ருக்காக நிலம்
விற்கும் அவரது guardian true guardian ஆக இருக்க வேண்டும்.
9.. Trust நிலம்.

Trust நிலம் விற்பனைக்கு வந்தால் trust member யார் யார். Trust இன் bylaw
எண்ண எண்ண?. Trust மெம்பெர் அனைவரும் விற்பதற்கு ஒத்து கொண்டு
போட்ட தீர்மானம் நகல் போன்றவற்றை கேட்டு படியுங்கள்.

11. நிலத்தின் வகைப்பாடு.

நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை


புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில்
க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா,
நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை, சுடுகாடு, சுடுகாட்டுகு
போகும் பாதை , வண்டி பாதை., வாரி, ஏரி, ஏரி நீர் பிடிப்பு பகுதி , குளம்,
கண்மாய் , குட்டை etc.என்று பார்க்கிவேண்டும்.

12. நிலத்தின் பயனாளி யார்?.

முன்னோரு காலத்தில் அது ஜமீ ன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது


ரயட்டுவாரி நிலமா ஆஹ் என்று பார்க்க வேண்டும்?

11.1-மேஜர் இனாம்

11.1-வெள்ளைக்காரன் காலத்துல இனாம் to ராயட்டுவாரி conversion நிலமா?

1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீ ன்


நிலமாக இருந்து ராயட்டுவாரி யாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க
வேண்டும்.

வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீ ன் நிலமாக


மாறியதா என்றும் ஆராய வேண்டும்.

இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும்
B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை. உங்கள் நிலத்தின் சர்வே நம்பர்
குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம்.
11.2-Minor இனாம்

11.2-தொழில் முறை இனாம் நிலம்


தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன், கர்ணம், தலையாரி, வெட்டியான்,
சக்கிலியர், புதிரை வண்ணார் இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.

வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீ காரிக்க பட்ட ஊழிய


மானியங்களான பூசாரி, தேவதாசி, பூ-கட்டும் மானிய நிலமா? என்று பார்க்க
வேண்டும்.

11.3-சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும்.

11.4-ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.

11.5-DC land

சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த DC land (எ) (Depressed Class)


நிலமா? என்று பார்க்க வேண்டும். இதற்கு கலெக்டர் அலுவலகத்தில் record
section இல் இருக்கும் SLR இன் நகல் தேவை.

11.6-Criminal Tribes Settlement Land.

வெள்ளைக்காரன் DC(Depressed Class) அல்லாத பிற இனத்தவருக்கு கொடுத்த


குறவர், கள்ளர்(குற்றபரம்பரை)
Settlement நிலமா என்று பார்க்க வேண்டும்.

மேற்சொன்ன வகை பாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தாவை.

11.8-சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assignment land.

Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்டான (HSD


பட்டா (அனுபந்த பட்டா) , D-பட்டா, HSD நமுனா நோட்டீஸ், TKT பட்டா, F-
Assignment பட்டா, B-memo Notice (பீமா பட்டா), Assignment land என்னும் ஒப்படை
நிலம்)-மா என்று பார்க்க வேண்டும்.

11.9-SC & ST பிரிவினற்கு கொடுத்த AD Assignment Land (Adi-Dravidar)பட்டா உள்ள


நிலமா என்றும் பார்க்க வேண்டும்.

11.10-F-Assignment பட்டா.

இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது. நிலசீர்திருத்த துறை வேறு


revenue டிபார்ட்மென்ட் வேறு.

நில சீர்திருத்த சட்ட நடவடிக்கை மூலம் அரசுக்கு கிடைத்த உபரி


நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-
Assignment பட்டா.

11.11-1970-B-Memo land =பீமா பட்டா.

B-Memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். ஏன் என்றால் B-Memo
என்பது நில உரிமை பட்டா அல்ல. “அரசின் புறம்போக்கு நிலத்தை
ஆக்கிரமிப்பு செய்தவன் நீ” என்ற govt நோட்டீஸ் மட்டுமே.

B-Memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய


சொல்லும். இதற்கு தீர்வையும் வாங்குவார்கள் . தீர்வை கட்டிவிட்டால் அது
தனியாருக்கு உரிமையானது அல்ல . தீர்வை காட்டினாலும் அது அரசுக்கு
தன சொந்தம் .

Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன்


பார்க்காமல் வாங்காதீர்.

ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா


என்றும் பார்க்க வேண்டும்.

13. 1956-பூமி தான நிலம்

பூமி தான நிலம் வாங்காதீர்.


12.1-Manual EC
கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்க்க வேண்டும்.

Manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில
சுவாந்தார்கள் தான பத்திரம்(கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry காட்டபட்டு
இருக்கும்.

12.2-பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு


இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.

12.3-ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.

Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue


record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.

பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல்


மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின்
சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க
வேண்டும். Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும்.

பூமி தான நிலம் வாங்காதீர்.

பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. பயனாளிக்கு


குத்தகை உரிமை மட்டுமே உண்டு.

எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.

13.-Zero value நிலம்

-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதானம் &
புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.

14.-கோயில் நிலம் -HR&CE(இந்து அறநிலையதுறை)-க்கு பாத்தியப்பட்ட இடமா,


நிலமா
வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம்?-மா என்று பார்க்க வேண்டும்.

கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100%


கோயிலுக்கு சொந்தம்), தேவதானம், தர்மதாயம் ஆக இருக்க கூடாது
அவ்வளவே.

கோயில் நிலத்தில் அறகட்டளை(டிரஸ்ட்-Trust)என்று ஒரு பிரிவு உண்டு


இதையும் வாங்க கூடாது. கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று
தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.

கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால்


அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும்.

இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஏன்னா HR&CE நிறைய


நிலங்களை திருப்பி எடுத்து கொண்டு உள்ளது.

14.-land reforms act.

ஜமீ ன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.

இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர். ஜமீ ன் இடம் இருந்து அரசு எடுத்த
உபரி நிலம் கிராம கணக்கில் B- register லே இருந்து A-register க்கு மாறும்
போது உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது
போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

15.-1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்

இனாம் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme.

RSLR இல் “கிராமத்தார்” என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம்
ஒழிப்பு சட்டம்
மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீ ண்டும் RSLR இல்
உள்ளது போன்று “கிராமத்தார்” என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை
வாங்காதீர்.

அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.

16.-1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும்


ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம்

தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி


கொள்ளலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது.

ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி


பட்டா நிலமா? ன்னு பார்க்கணும்.

இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில
நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவில் லாயர் தான் உங்களை காப்பாற்ற
முடியும் m

17.-1961(மத்திய அரசு) to 1972(TN)Land ceiling act நிலம்

நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க


வேண்டும்.

The Tamil Nadu Land Reforms (Fixation of Ceiling on Land) Act, 1961 came into effect on the
6th day of April, 1960, The notified date of the said Act was 02.10.1962. The reference date
for holding of land was as on 06.04.1960. இந்த தேதிகள் முக்கியம் . இதை வைத்து
எப்போது நிலம் layout போடா பட்டது என்று அறிந்து கொள்ளலாம் . இந்த
தேதிக்கு பிறகு லயூட் போடப்பட்டு இருந்தால் அல்லது நிலம் விற்கப்பட்டு
இருந்தால் பெரும் நிலம் சுவான்தார்கள் அரசு நோட்டீஸ் கொடுத்த பிறகும்
நிலம் அரசு கிட்ட மாட்டாமல் இருக்க புளொட் போட்டு விற்றுவிட்டார்கள்.
எனவே தான் இந்த தேதிகளை நியாபகம் வைக்க சொல்லுகிறேன்

UDR லே ceiling இடம் என்று இருக்கானு பார்க்கணும்.


Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும்.

18.-1976 களின் Urban land Ceiling(ULC) act

ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும்.
ULT(Urban Land Tax)என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில்
நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆபீசில் சர்வே நம்பர் கொடுத்து
விசாரிக்கணும். Innocent buyer என்று சொல்லி land கமிசினர் க்கு மனு
செய்யனும்.

ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு revenue


department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள்.
எனவே ஜாக்கிரதை.

19.- கோர்ட் attached property வாங்காதீர். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி


பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கா என்று பாருங்கள்.

20.-Divorce கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர். அந்த நிலத்தை அவர்


மனைவி maintenance(ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள்
போட்ட பணம் காலி.

எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை எப்படியாவது கேளுங்கள்.

21.-அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம்


அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A
ரெகார்ட் வாங்குங்கள்.

22.-அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i
e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு
கேளுங்கள்?.பாலுமாகேந்திரவின் “வடு
ீ “ படத்தை நினைவில் வைத்து
கொள்ளுங்கள்.

அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,


23.-மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று
VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி
மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி
கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் )

24.-அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால்


இன்னும் நல்லது.

1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு 80 to 100 வருடத்திற்கு


வேண்டும்.

1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும்.

இதன் நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.இது ஏன் கேட்க


சொல்றோம் என்றால்

1.அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால்


போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.

3. அடுத்து அது ஜமீ ன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால்


எடுக்கப்பட்டு ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம்
செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும்.

ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை


பயன்படுத்தி UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை
கரெக்ட் செய்து UDR இல் திரும்பவும் ஜமீ ன் பெயரே ரயத்துவாரி யாக
மாற்றி கொண்டார்கள்.

25.-அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீ து யாராவது பத்திரம்


பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா கேட்டு confirm(உறுதி
)பண்ணிக்கணும்.

26.-.அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம்


முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க.
27.-அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10 தடவை பாருங்கள்.
அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீ து ஏதாவது பிரச்சனை,
வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள்?.இதை ஏற்கனவே
யாராவது வாங்கி இருக்கிறார்களா, தற்போதைய owner யார் என்றும்
கேளுங்கள்

28.-அடுத்துநிலம் விற்பவர் வட்டுக்கு


ீ அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு
எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம்
எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர் க்கு பங்கு
இருக்கா?என்று கேளுங்கள்

29.-.அடுத்து நான் கூறிய டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள்


நிலத்தின் ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள்.

நல்ல லாயர் எப்படி கண்டு பிடிப்பது?.

உங்களுக்கு lawyer refer செய்கிறவரிடம்,

லாயர் எங்கு படித்தார்?,


எந்த ஆண்டில் இருந்து practise செய்கிறார்?,
எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார்?,
த்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார்?

போன்ற கேள்விகள் கேளுங்கள்.

புரோக்கர் சொல்லும் லாயர் இடம் செல்லாதீர்.

மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்றால்


நல்ல லாயாரை கண்டுபிடித்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.

Lawyer க்கு பணம் கொடுக்க அழ கூடாது. அந்த பணம் தான் நிலத்தின்


முதலீடு.நீங்கள் விற்பவருக்கு கொடுக்கும் பணம் அல்ல.

நல்ல விசய ஞானம் உள்ள advocate கண்டுபிடிப்பது உங்கள் சமர்த்தியம்.


30.-. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு govt registered surveyor
பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார்
பின்பு படத்தை வரைந்து தருவார்.

31,-. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாமா என்று


நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற license govt 1990 களில் இருந்து
தரவில்லை என்று செவிவழி செய்தி.. சந்தேகம் என்றால் document
எழுத்துபவரின் லைசெஸ் நம்பர் கேளுங்கள்.

பாதி பேர் 10-வது தாண்டதவர் . மீ தி பேர் காலேஜ் ஹே போகாமல் 700KM


தள்ளி இருக்கும் ஆந்திர, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி
வாங்கினவர்.எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste
செய்கிறார்கள். உங்களுக்கு என்று draft செய்வது குறைந்த நபர்களே.

32.-காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம்


advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும்\பிசகினாலும்
பல லட்சம், கோடி நஷ்டம்.

பிறகு advocate பார்ப்பதற்கு வயதானவர், அவர் நிறைய அனுபவம் இருக்கும்


என்று நினைத்து ஏமாறதீர். பல பெயர் retired ஆகி கல்லூரி போகாமல்,
கோர்ட்டில் practice செய்யாமல் 800KM தள்ளி இருக்கும் ஆந்திர, கர்நாடகவில்
பணம் கொடுத்து LLB பட்டம் வாங்கிவர்கள். அவர்களிடம் சென்று ஏமாறதீர்.

கோர்ட்டில் மட்டுமே சுழலும் advocate இடம் போகாதீர். கோர்ட்டிலும்,


ரெஜிஸ்டர் ஆபீஸ் (SRO) & Revenue department SRO, VAO, TAHSILDHAR, DRO, RDO
யிலும் சுழன்று அடிக்கும் advocate யே நில பிரச்னையை சரி செய்வார்.

திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர் கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்.

33.-.நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ் க்கு நடப்பது நமது வருங்கால


நன்மைக்கே. அதனாலே அலுத்துக்கொள்ளதீர்.கொஞ்சம் சோம்பேறி பட்டாலும்
பணமும் காலி, நிம்மதியும் காலி.

34.-.நான் சொன்ன ஆவணங்கள் இல்லாமல் நிலம் வாங்காதீர்.


305.-அடுத்து லாயர், Govt Approved\Licensed Surveyor Consulting, நிலம் விற்கும்
நபரின் அண்டை வட்டார்,
ீ நிலம் இருக்கும் இடத்தின் அண்டை வட்டார்
ீ இடம்
பேசாமல் இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர்

இப்பதிவுடன்,

குடி இருக்கும் வடு


ீ காட்டபட்டுள்ள FMB, நத்தம் மனையின் UDR காலத்து
நத்தம் சிட்டா அடங்கல், A-Record, NATHAM நத்தம்-Plotted layout.

British காலத்து SLR(Settlement Register நகல்), A -Record இவைகளின் சாம்பிள்


இணைத்து உள்ளேன்.

படித்து பார்த்து நில நிர்வாக அறிவை வளர்த்து , பயன் பெறுங்கள்.

Advocate Nithya
Contact: nwnithya@hotmail.com
High Court at MADRAS.

வெள்ளைக்காரர்கள் மின்சாரமோ & கம்ப்யூட்டரோ இல்லாத காலத்திலேயே


அவ்வளவு வேலை\களப்பணி செய்து இருக்கிறார்கள்.

அவர்கள் போட்ட பிச்சையால்(குடிவார உரிமை)-தான் தமிழ்நாட்டின்


பெருவாரியான மக்கள் நிலத்தை அனுபவிக்குகிறோம்.

வெள்ளைக்காரர்கள் தான் குடிவார உரிமையை பரவலாக கொடுத்தது.

அவர்கள் வரும் முன் நிலம் ஒரு சிலர்(ஜாமீ ன், மிட்டா, மிராசு) இடமே குவிந்து
கிடந்தது.

இதற்கு முன் ஆண்ட எந்த அரசும் எல்லா மக்களும் பயன்பெறும் வகையில்


நிலத்தை பகிர்ந்து அளித்தது இல்லை.

வெள்ளைக்காரர்கள் தான் நிலத்தை பகிர்ந்து அளித்தது.


நீங்கள் நிலத்தை வாங்கும் பொழுதும், நிலத்தை விற்கும் பொழுதும்,
நிலத்தில் உழும்பொழுதும், நிலத்தில் கால் வைக்கும் பொழுதும்
வெள்ளைக்காரர்களை நன்றியோடு நினைவூகூறுங்கள்.

ஏன்னெனில் ஜாமீ ன், மிட்டா, மிராசு போன்ற ப்ரோக்கர்களுக்கும் , OC, BC , MBC,


SC & ST போன்ற பட்டியலில் உள்ள ஜாதிகளுக்கும் குடிவார உரிமையே(LAND
OWNERSHIP) என்பதே கிடையாது.

இந்த Trigonometrical சர்வே சிஸ்டம், Revenue Records, ஸ்டாம்ப்(பத்திரம்),


ரெஜிஸ்டர் ஆபீஸ் சிஸ்டம், பட்டா சிஸ்டம், ராயட்டு வரி(கிஸ்தி) எல்லாமே
வெள்ளைகாரன் போட்ட பிச்சை.

வெள்ளைக்காரன் இல்லேன்னா நில நிர்வாகத்தில் நாம் இன்னும்


கற்காலத்தில்லேயே இருந்திருப்போம்.

வெள்ளைக்காரன் அளவுக்கு தமிழ்நாட்டை, இந்தியாவை நிர்வாகம் செய்தவர்


எவரும் இல்லை. வரும் காலத்திலும் இருக்கப்போவதும் இல்லை.

அதற்கு காரணம் England இல் இருந்து வந்த British அரசு அலுவலரின்


dedication(அர்ப்பணிப்பு).

இது விசியம் தெரிஞ்சவங்களுக்கு அதாவது அரசு அலுவலரோட தினமும்


முட்டி மோதுறவங்களுக்கு நல்லாவே தெரியும் & புரியும்.
நில பிரச்சனை எனில் நீங்கள் அரசாங்க அதிகாரிக்கு அனுப்பிய கோரிக்கை
மனு , அதற்கு அவர் உங்களுக்கு அனுப்பிய பதில் லெட்டர் , RTI மனு,
மனுவிற்கு அரசு தான பதில், ஆவணங்கள்.

நிலத்திற்கு உண்டான பத்திர டாக்குமெண்ட், வாரிசு சான்றிதழ்(Legal Heir


Certificate) EC(Manual & Computerised வில்லங்க சான்றிதழ்), UDR காலத்து A -
ரெகார்ட், சர்வே நம்பருக்கு உரிய FMB, Pre -UDR காலத்து A -RECORD, SLR ,
RSLR, RSR , OSR.
நத்தம் நிலம் எனில் நத்தம் நிலவரி திட்டத்தின் தோராய பட்ட, தூய பட்டா,
நத்தம் FMB & நத்தம் சிட்டா அடங்கல் பதிவேடு, தாசில்தார் தரும் நத்தம் NOC
.
இவற்றை எப்பாடு பட்டாவது வாங்கி அனுப்புங்கள்.

இவற்றை போட்டோவாகவோ இல்லை computer center-இல் ஸ்கேன்


செய்தோ nwnithya@hotmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள்.

மேற்கூறிய ஆவணங்கள் இல்லாமல் லீகல் ஒப்பீனியன் தருவது கடினம்.


இந்த பதிவோடு ஒரு பட்டா மனுவின் acknowledgement மாதிரி, subdivision
மனுவின் மாதிரி இணைத்து உள்ளேன். தேவை படுவோர் பயன் படுத்தி
கொள்ளலாம்.
படித்து பார்த்து நில நிர்வாக அறிவை வளர்த்து , பயன் பெறுங்கள்.
http://www.tnlegalservices.tn.gov.in/.../PATTA%20TRANSFER...

You might also like