You are on page 1of 4

மன்னரை முந்தியோர் 4

கழுத்துரு ஓர் உறுதிமொழிச் சின்னம்


- காரைக்குடி  மெ. சண்முகம் 

நாட்டுக்கோட்டை. நகரத்தார்களின் பாரம்பரியச் சிறப்புகளை எடுத்தியம்பும்


மங்கல அணிகலனே கழுத்துரு (கழுத்து + உரு) ஆகும்.

கழுத்துருவை அறியாத நம்மவர் எவரும் இலர் என்று சொல்லும் அளவிற்கு


அது நம் சமூகத்தில் சமூக வாழ்க்கையில் சிறப்பிடம் பெற்றிருக்கிறது.

கழுத்தீரு என்று பேச்சு வழக்கில் வழங்கப்பெற்று நல்லன அல்லன


இரண்டிலும் பங்கு பெறும் கழுத்துரு முற்காலத்தில் நம் பெண்களின்
அன்றாட மங்கல அணிகலனாகவும் இருந்திருக்கலாம் பிறகு பலவித சிரமம்
கருதி 1900 வரை உள்ள கால கட்டப்பெண்கள் அன்றாடம் அணிவதற்கு
இதற்குப் பதிலாக சிறுதாலி ஜோடிப்பு என்பதை அணிந்திருக்கிறார்கள்.
சின்னக்கழுத்துரு என்று வயதானவர்களால் வழங்கப்பெறும் இதற்கும்
கழுத்துருவுக்கும் சிற்சில ஒற்றுமைகள் உள்ளன. இதை இன்றும் நாம்
படைப்பு நகைகளில் பார்க்கலாம். இதற்குப்பிறகு 1980 வரை உள்ள கால
கட்டத்தில் பெண்கள் அன்றாடம் ஜோடிப்புத்தாலியை அணிந்து வருகின்றனர்.
அதன்பிறகு மணமானவர்களின் அன்றாட மங்கல அணிகலனாக சிறுதாலி
இருந்து வருகிறது. இப்படியாகக் கழுத்துரு, அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ப
மாறி வந்திருக்கிறதை நாம் அறிய முடிகிறது.

கழுத்துரு என்ற கோர்வையில் மேற்பகுதி கீ ழ்பகுதி என இரண்டு பகுதிகளும்


இரண்டு பகுதிகளிலும் சேர்த்து 31 உதிரி பரகங்களும் 3 தனி உதிரிபாகங்களும்
இருப்பது நாம் அறிந்ததே!

இந்தக் கோர்வையும், கோர்வையைத் தாங்கி நிற்கின்ற நூலும், பகுதிகளும்


உதிரிபாகங்களும் (உருப்படிகளும்) ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தை

ஏந்தி நிற்கின்றன. நம் முன்னோர்கள் இதற்கு விளக்கம் சொல்லிவிட்டுச்


செல்லாததால் பின்வருமாறு இருக்கலாம் என்பது என் கருத்து.
கழுத்துரு என்ற கோர்வை ஒரு குடும்பம் போன்றது. நம் நகரத்தார் வழக்கில்
சொன்னால் ஒரு புள்ளி இந்தக் கோர்வையைத் தாங்கி இருக்கும் நூல் 21
பாகங்களைக் கொண்டு 3 ஆக மடிக்கப்பெற்று ஒன்றுக்குள் ஒன்றாகக்
கொடுத்து வாங்கப்பெற்று 7 பாகமாக ஆகி இருப்பது. இந்த (3×7 பாகம்) 21 பாகம்
21 தலைமுறைப்பாரம்பரியத்தைக் குறிக்கிறது. இந்து மத சாத்திரத்தில்
மூவேழு இருபத்தியோரு தலைமுறையும் உருவ வழிபாடும் முக்கியத்துவம்
பெற்றுள்ளன. அது போலத்தான் இதிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

கழுத்துருவின் மேற்பகுதி மணமகளையும் கீ ழ்பகுதி மணமகனையும்


குறிப்பிடுகிறது. எப்படித்திருப்பூட்டுதலின் பொழுது மணமகள் மேல் நிற்க
மணமகன் கீ ழ் நின்று (வட்டகைக்கு ஏற்ப சில மாற்றங்கள் இருக்கும்)
திருப்பூட்டி குடும்பத்தைக் கணவனுக்கும் மேலாக நின்று நல்வழி
செலுத்துவேன் என்று மனைவி உறுதிமொழி எடுப்பதைச் சொல்லாமற்
சொல்லுகிறாளோ அதுபோலத்தான் இதுவும்.

உதிரிபாகங்கள் 31+3 ஐயும் உற்றுப்பாருங்கள் அவற்றின் பெயர்களைச்


சொல்லிப்பாருங்கள் பொருள் தன்னாலேயே தெரியும்.

மேற்பகுதியில் உள்ள திருமாங்கல்யம், திருமகளே உருவான மனைவியைக்


குறிக்கிறது. திருமகள் வருகைபோல் மனைவி வருகையால் பேர்
பெற்றவர்கள் உலகில் பலர் உண்டு. அதிலும் நம்மவர்களில் பற்பலர் உண்டு.

கீ ழ்ப்பகுதியில் உள்ள லெட்சுமி ஏத்தனம் 4 தூண்களாலோ சுவர்களாலோ


எழுப்பப் பெற்றிருக்கும். வட்டைக்குறிக்கிறது
ீ வட்டின்
ீ தலைவனான
கணவனையும் குறிக்கிறது.

மேற்பகுதியில் உள்ள 2 கடைமணிகளும் கீ ழ்பகுதியில் உள்ள 2


கடைமணிகளும் ஆக மொத்தம் 4 கடை மணிகளும் 4 திசைகளையும்
குறிக்கின்றன. அதாவது கணவன் நாற்புறமும் (நாலாபக்கமும்) சென்று
அறவழியில் பொருள் ஈட்ட வேண்டும் என்பதன் பொருள்.

4 ஏத்தனங்களும் உள்ளங்கை பூமியைப் பார்த்திருக்கும் விதத்தில் அமைந்த 4


கைகள் போன்றது. மேல்பகுதியில் உள்ள 2 ஏத்தனங்கள் மனைவியின் 2
கைகள் கீ ழ் பகுதியில் உள்ள 2 ஏத்தனங்கள் கணவனின் 2 கைகள். இந்த 4
ஏத்தனங்களும் அவர்கள் நடத்தப்போகும் இல்லறத்திற்கு அவர்கள் கை
கொடுப்போம் என்று உறுதி கூறுவதன் பொருள் இந்த உறுதிமொழியைத்தான்
சமஸ்கிரு. மந்திரமும் அதன் இயல்புக்கு ஏற்றவாறு சொல்கிறது.
2 சரிமணிகளும் இருபால் குழந்தைகளைக் குறிப்பிடுகிறது. அதாவது
மணியான ஆண், பெண் குழந்தைகளை ஈன்றெடுத்து நற்பெற்றோராகத்
திகழ்வோம் என்பதன் பொருள். வம்ச அபிவிருத்திற்கு ஆண்வாரிசு முக்கியம்
என்றாலும் சமூக அபிவிருத்திக்கு இருபால் குழந்தைகளும்
வேண்டப்பெறுகின்றன.

திருமாங்கல்யத்திற்கு அடுத்த பெருமை பெறுவது உரு. உரு என்றால் உருவம்


என்று பொருள். அப்படி என்றால் யாருடைய உருவம்? நம் தந்தை வழி
தெய்வத்திரு முன்னோர்களின் உருவம். முன் சொல்லியது போல 21
தலைமுறை முன்னோர்களில் திருமணத்திற்கு மணமகனின் தந்தை வழி
அய்யா கலந்து கொண்டோ கலந்து கொள்வதாகப் பாவனை செய்து
கொண்டோ திருமணப்பணத்திருப்பேட்டில் அவர்கள் பெயரில் முதலில்
மொய்ப்பண வரவு வைத்து, தகப்பனார் திருமணம் செய்து வைத்து வாழ்த்தி
வழி நடத்துவதால் இந்த இருவர் நீங்கலாக மீ தி உள்ள 19
முன்னோர்களுக்குத்தான் 19 உரு. அதாவது மணமகன் வழி முன்னோர்களை,
முன்னோர் வழியை உருவேற்றி வாழ்வோம் அவர்கள் எங்களோடு இருந்து
எங்களை வாழ்த்தி வழிநடத்தட்டும் என்று பொருள்.

நம் வழக்கப்படி பெண்களுக்குப் புகுந்த வடுதான்


ீ பிறந்த வட்டை
ீ விட
முக்கியமானது. புகுந்த வட்டைத்தான்
ீ பெருமை பெறச் செய்யவேண்டும் என்ற
எண்ணத்தை உருவேற்றுவதற்காகத்தான் மணமகன் வழி முன்னோர் மட்டும்
குறிக்கப்பெறுகிறது.

முற்காலத்தில் கழுத்துருவை மணமகன் வட்டார்


ீ செய்திருக்கலாம் பிறகு
அதற்குரிய பொன்னை மணமகள் வட்டிற்கு
ீ வழங்கி அவர்களையே இதர
நகைகளுடன் சேர்த்து இதையும் செய்யச்சொல்லி இருக்கலாம். (பிறகு வந்த
மாற்றத்தால் எல்லாம் பெண் வட்டாரையே
ீ சேர்ந்து விட்டது) இதை
மணமகன் வட்டார்
ீ கழுத்துருவுக்குப் பொன் கொடுத்தல் (முகூர்த்தம்
வைத்தல்) கழுத்துரு வாங்கப் போகுதல் என்ற நிகழ்ச்சிகள் வாயிலாக அறிந்து
19 உரு என்பது மணமகன் வழி முன்னோர்கள் என்று உறுதி செய்ய
முடிகிறது.

31 உதிரிபாகங்களுக்குமாக மேற்கூறிய எல்லாவற்றையும் சேர்த்துச்


சொன்னால், மணமகள் மணமகனை நோக்கி, 'தங்கள் 21 தலைமுறைப்
பாரம்பரியத்துடன் 21 முன்னோர்களில் 19 பேருக்கு உருவங் கொடுத்து இருவர்
உடன் இருக்க திருமகளே உருவான நான் அவர்கள் வாழ்த்துதலுடனும் வழி
நடத்துதலுடனும் நாலா புறமும் சென்று அறவழியில் தாங்கள் ஈட்டிவரும்
பொருளை வைத்து மணியான ஆண் பெண் குழந்தைகளை ஈன்றெடுத்து,
தங்களுடன் தங்களுக்கும் மேலாக நின்று இல்லறம் நடத்த நான்
சம்மதிக்கிறேன். ‘ தாங்களும் சம்மதிக்கிறீர்கள்` என்று உறுதிசொல்லி மங்கல
அணிகலனை ஏற்கிறாள் என்பதாகும்.

முன்னர்க்காலங்களில் நம்மவர்களில் நன்கு வாழ்ந்த பெரியவர் திருப்பூட்டி


இருக்கிறார். இது விபரம் இசை குடிமானம் என்ற தலைப்பில் சொல்லப்
பெற்றிருக்கிறது.

திருமணத்தன்று 31 உதிரிபாகங்கள் வழியாக மணமகனும் மணமகளுமாக


உறுதிமொழி ஏற்பது போல அமைகிறது. அதன் பின்னர் 2 பகுதிகளிலும்
சேர்த்துக் கோர்க்கப்பெறும் குச்சி, தும்பு, துவாளை என்ற 3 தனி உதிரிபாகங்கள்
கணவனும் மனைவியுமாக உறுதிமொழி ஏற்பதைச் சொல்கின்றன.

குச்சி ஊன்று கோலைப்போன்றது. தும்பு பிடியைப் போன்றது. துவாளை


தடியைப் போன்றது. மணமக்களாக இருந்தவர்கள் கணவன் மனைவியான
பிறகு இல்லறத்தை ஊன்று கோலாகக் கொண்டு ஒருவரை விட்டு ஒருவர்
பிரியாது எதிர்வரும் பிரச்சனைகளை விலக்கி வாழ்வில் வெற்றி பெறுவோம்
என்று உறுதி சொல்வதாகும். தனித்தும்பு இந்த 3 ன் பதிலியே.

இங்ஙனம் சிறந்து விளங்கும் நம் கழுத்துரு அரக்குக்கழுத்துரு விராகன்


எடைக் கழுத்துரு என்பன போன்ற பல நிலைகளைக் கடந்து இன்று Pressing
Type நிலையை அடைந்து சிறிய அளவில் இருக்கிறது. இன்று கழுத்துரு
இருக்கக் கூடிய அளவில்தான் பழைய காலங்களில் திருவாதிரைப் புதுமைக்
(அரைக்கல்யாணம்) கழுத்துரு, இருந்தது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.
இது எந்த நிலையை அடைந்து எந்த அளவில் இருந்தாலும். இது தாங்கி
இருப்பது 21 தலைமுறைப்பாரம்பரியத்தை. இது விதையாவது
ஆயிரங்காலத்துப் பயிருக்கு.

You might also like