You are on page 1of 6

ஏக்கருக்கு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம்... வறட்சியிலும் வருமானம் தரும் நாட்டுமுருங்கை!

தென் மாநிலத்தவர்கள் உண்ணும் காய்கறிகளின் பட்டியலில் நாட்டுமுருங்கைக்காய்க்கு முக்கிய இடம் உண்டு.


சாம்பார், புளிக்குழம்பு, குருமா, பொரியல், கூட்டு, அவியல்... என முருங்கைக்காயைக் கொண்டு பலவித
உணவுகள் சமைக்கப்படுகின்றன. குறிப்பாக, முருங்கைக்காய் இல்லாத சைவ விருந்தே கிடையாது என்றுகூட
சொல்லலாம். இப்படி அதிகமாகப் பயன்படுத்தப்படுவதன் காரணம்... அது தன்னுள் கொண்டுள்ள ஊட்டச்சத்து
மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட மருத்துவக் குணங்களே!

முருங்கைக்காய் ஓரளவுக்கு வறட்சியையும் தாங்கும் என்பதால், பாசன வசதி குறைவான விவசாயிகளுக்கு


உகந்த பயிராகவும் இருக்கிறது. அதனால்தான் காய்கறி விவசாயிகள் பலரும் முருங்கையை விடாமல் சாகுபடி
செய்து வருகிறார்கள். அந்த வகையில், கடந்த 15 ஆண்டுகளாக முருங்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்,
திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையாண்டி.

தண்ண ீர் குறைந்ததால் முருங்கை!

காய் பறிப்பில் மும்முரமாக இருந்த சடையாண்டியைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும்


உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘எங்க பூர்வகமே
ீ இந்த ஊருதான். எங்க தாத்தா காலத்துல இருந்தே விவசாயம்
செய்றோம். எனக்கு படிப்பு வரலை. அதனால சின்னவயசுலயே அப்பா கூட விவசாயத்துல இறங்கிட்டேன்.
எங்களுக்கு பதினைஞ்சு ஏக்கர் நிலம் இருக்குது. வாழை, கரும்புனு செழும்பா விவசாயம் நடந்துக்கிட்டு இருந்த
இடம்தான். அப்பறம் கிணத்துல தண்ணி குறைஞ்சுப் போனதால, குறைவான தண்ணியிலேயே வர்ற நாட்டு
முருங்கையைப் போடலாம்னு முடிவு பண்ணினேன்.

பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன, இந்தப் பக்கம் அவ்வளவா முருங்கை சாகுபடி இருக்காது.


செடிமுருங்கையும் அப்ப பிரபலம் ஆகல. நாட்டுமுருங்கையைத்தான் பெரும்பாலும் சாகுபடி செய்வாங்க.
தென்மாவட்டங்கள்ல முருங்கைக்குப் பேர் போனது, வளையப்பட்டிதான். அங்க இருந்துதான் விதைக்குச்சி
வாங்கிட்டு வந்து நட்டேன். அந்த மரங்கதான் பதினஞ்சு வருஷமா மகசூல் கொடுத்துக்கிட்டு இருக்கு” என்று
முன்கதை சொன்ன சடையாண்டி, தொடர்ந்தார்.
50 ஆண்டுகள் மகசூல்!

“இதுக்கு பெரிசா தண்ணி தேவையில்லை. நடவு செஞ்சி முறையா பராமரிச்சா ஒரு மாசத்துல வேர் பூமியில
நல்லா இறங்கிடும். அதுக்குப் பிறகு, வறட்சியைத் தாங்கி வளந்திடும். முறையா கவாத்து செய்தா, கிட்டத்தட்ட
50 வருஷம் கூட மகசூல் எடுக்கலாம். நடவு செஞ்சி 6 மாசத்துல காய்ப்புக்கு வந்தாலும் ஒன்றரை வருஷத்துக்கு
மேலதான் நல்ல மகசூல் கிடைக்கும். வருஷத்துக்கு மூணு போகம் காய் காய்க்கும். அதிகப் பராமரிப்பு
தேவைப்படாத, செலவு வைக்காத பயிர் முருங்கைதான்.

ஆரம்பத்துல ரசாயன உரம், பூச்சிக்கொல்லி களைத்தான் பயன்படுத்திக்கிட்டு இருந்தேன். முதல் மூணு வருஷம்
நல்ல மகசூல் கிடைச்சது. அடுத்தடுத்து பூச்சிக்கொல்லி தெளிச்சதுல, முருங்கை இலைகள், பூக்கள்லாம்
கொட்டிப்போச்சு. அதனால, இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். கிட்டத்தட்ட 11 வருஷமா இயற்கை
விவசாயம்தான் செய்றேன். எனக்குத் தெரிஞ்ச இயற்கைத் தொழில்நுட்பங்களை மத்த விவசாயிகளுக்கும்
சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.

விற்பனைக்கு வில்லங்கமில்லை!

முருங்கையில இலை, பட்டை, காய், விதைனு எல்லாத்தையும் விற்பனை செய்ய முடியும். எல்லாத்துலயும்
மருத்துவக் குணம் இருக்கறதால தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க. நான் காயாத்தான் விற்பனை செய்றேன்.
மொத்தம் இருக்கிற 15 ஏக்கர்ல 8 ஏக்கர்ல முருங்கை போட்டிருக்கேன். மீ தி 7 ஏக்கர்ல தென்னை போட்டு
அதுலயும் முருங்கை நடவு பண்ணிருக்கேன். தென்னை, முருங்கை ரெண்டுமே இளங்கன்னாத்தான் இருக்கு.
எட்டு ஏக்கர் முருங்கையிலயும் இப்போதைக்கு ஒரு ஏக்கர்ல மட்டும்தான் காய் பறிச்சு விற்பனை செய்றேன்.
இந்த நல்ல முருங்கை ரகத்தை எல்லா விவசாயிகளும் பயிர் செய்யணும்னு, முருங்கை மரங்கள்ல இருந்து
விண்பதியம் (பார்க்க, பெட்டிச் செய்தி) மூலமா முருங்கை நாத்து உற்பத்தி பண்ணி விற்பனை செய்துட்டு
இருக்கேன்” என்ற சடையாண்டி, நாட்டுமுருங்கை மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.
ஒரு மரத்தில் 2 ஆயிரம் ரூபாய்!

“நடவு செய்த ஒன்றரை வருஷத்துக்குப் பிறகு, நல்ல பராமரிப்புல இருக்கற ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு
சராசரியா 200 கிலோ அளவுக்கு காய் கிடைக்கும். ஒரு கிலோ காய் 10 ரூபாய்ல இருந்து 150 ரூபாய் வரை விலை
போகும். முகூர்த்த நாட்கள்ல இந்த மாதிரி அதிக விலைக்கு விற்பனையாகும். பொதுவா ஜனவரி, பிப்ரவரி
மாசத்துல ஓரளவுக்கு நல்ல விலை கிடைக்கும். குறைந்தபட்ச விலையா கிலோவுக்கு 10 ரூபாய்னு
வெச்சுக்கிட்டாகூட 200 கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஆச்சு. அந்தக் கணக்குலயே ஒரு ஏக்கர்ல இருக்கற 160
மரங்க மூலமா, வருஷத்துக்கு 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்கும்.

50 ஆயிரம் ரூபாய் செலவானாலும் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்.

மொத்த முருங்கை மரங்கள்ல இருந்தும் வருஷத்துக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் நாத்து வரைக்கும் உருவாக்க
முடியும். ஆனா, அதுல 70 ஆயிரம் நாத்துதான் தேறும். ஒரு நாத்து முப்பது ரூபாய்ல இருந்து முப்பத்தஞ்சு ரூபாய்
வரை விற்பனையாகும். குறைஞ்சபட்ச விலையா முப்பது ரூபாய்னு வெச்சுகிட்டாலும் 70 ஆயிரம் நாத்துக்கள்
விற்பனை மூலமா 21 லட்ச ரூபாய் கிடைக்கும். அதுல ஏழு லட்ச ரூபாய் செலவு போக, 14 லட்ச ரூபாய் லாபமா
நிக்கும்” என்ற சடையாண்டி நிறைவாக,
“எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாம, அதிகத் தண்ணி இல்லாம இவ்வளவு லாபம் எந்தப் பயிர்ல கிடைக்குது.
என்னைப் பொறுத்தவரைக்கும் இதுதான் சாமானிய விவசாயிகளோட பணப்பயிர். அதில்லாம இந்த ‘இயற்கை
முருங்கை சாகுபடி’ என்னை விருது வாங்குற வரைக்கும் உயர்த்தியிருக்கு. போன வருஷம் புதுச்சேரியில
நடந்த ஒரு நிகழ்ச்சியில முதலமைச்சர் ரங்கசாமி கையால விருது வாங்கினேன். இந்த வருஷம் அரியலூர்ல
நடந்த ஒரு நிகழ்ச்சியில முன்னாள் ஜனாதிபதி  அமரர் அப்துல்கலாம் கையால ‘சிறந்த விவசாயி விருது’
வாங்கியிருக்கேன்’’ என்று பெருமிதத்துடன் சொல்லி விடைகொடுத்தார் 

தொடர்புக்கு,
சடையாண்டி,
செல்போன்: 97913-74087.

செடிமுருங்கை... நாட்டுமுருங்கை ஓர் ஒப்பீடு!

முருங்கையில் நாட்டுமுருங்கை, செடிமுருங்கை என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில்,


நாட்டுமுருங்கையில் மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். செடிமுருங்கையில் காய்கள் சற்று
திடமாக இருந்தாலும், சற்றே சலசலப்புடனும் இருக்கும். செடிமுருங்கையின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு
ஆண்டுகள். நாட்டு முருங்கையின் ஆயுள் அதிகபட்சம் 50 ஆண்டுகள். செடிமுருங்கை விதை மூலமும்,
நாட்டுமுருங்கை நாற்றுகள், போத்து (விதை குச்சிகள்) மூலமும் நடவு செய்யப்படுகின்றன.

காய் விலை பற்றி கவலையே இல்லை!

ஆண்டு முழுவதும் முருங்கைக்கு விலை கிடைக்காவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. அறுவடை


செய்யாமல் விட்டு விட்டால் முற்றி நெற்றாகும். அதில் இருந்து விதைகளைப் பிரித்தெடுக்கலாம். ஒரு ஏக்கரில்
இருந்து ஆண்டுக்கு 240 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கிட்டத்தட்ட காய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், விதை மூலம் கிடைத்து விடும்.

இலைக்கும் கிராக்கி!

முருங்கை இலைக்கும் (கீ ரை) தேவை அதிகமாகவே இருக்கிறது. இதைப் பற்றி சொன்ன சடையாண்டி,
“இயற்கையில விளையுற முருங்கை இலைக்கும் (கீ ரை), காய்க்கும் நல்ல வரவேற்பு இருக்கு. குறிப்பா
முருங்கை இலைக்கு காயை விட அதிகத் தேவை இருக்கு. இலை பறித்தால் காய் மகசூல் குறையும். அதனால,
விவசாயிகள் இலை விற்பனையில் கவனம் செலுத்துறதில்லை. இலைக்காக சாகுபடி செய்றவங்க, அடர் நடவு
முறையில் 5 அடி இடைவெளியில் நடவு செய்யலாம். 40 நாட்களுக்கு ஒரு முறை இலைகளை அறுவடை
செய்து விற்பனை செய்யலாம். மதுரை மாவட்டத்துல இலைக்கான வியாபாரிகள் இருக்காங்க. இலைக்கான
விற்பனை வாய்ப்பை, விசாரிச்சிட்டு, இலை சாகுபடியில் இறங்கலாம்” என்றார்.

விண்பதியன் முறையில் ஒட்டு நாற்றுகள்!

சடையாண்டி, ‘‘விண்பதியன் முறையில் ஒட்டுக்கட்டி புதிய முருங்கை நாற்றுகளை உருவாக்குவது


இப்படித்தான்-

தென்னைநார்க் கழிவோடு சிறிதளவு பஞ்சகவ்யா, சிறிதளவு அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து ஒரு


மணி நேரம் ஊற வைத்து 40% ஈரப்பதம் இருப்பது போல் பிழிந்து கொள்ள வேண்டும் (ஈரமாக இருக்க வேண்டும்.
பிழிந்தால் தண்ண ீர் சொட்டக் கூடாது. இதுதான் ஊட்டமேற்றிய தென்னை நார்க்கழிவு).

முருங்கை மரம் பூவெடுக்கும் தருவாயில், அந்த மரத்தில் கட்டை விரல் அளவுள்ள குச்சியில் ஓர் இடத்தில்
பட்டையை நீக்க வேண்டும். அந்த இடத்தில், ஊட்டமேற்றப்பட்ட தென்னை நார்க்கழிவை வைத்து, பிளாஸ்டிக்
காகிதத்தால் காயத்துக்குக் கட்டு போடுவது போல இறுக்கமாக கட்டி வைக்கவேண்டும்.

40 நாட்கள் கழித்துப் பார்த்தால், அந்தப் பகுதியில் புது வேர்கள் உருவாகி இருக்கும். பிறகு, அந்தக் குச்சியை
வெட்டி எடுத்து, ஊட்டமேற்றிய மண்புழு உரம் நிரம்பிய பிளாஸ்டிக் பைகளில் வைத்து நீர் ஊற்றி 60 நாட்கள்
வளர்த்து நிலத்தில் நடவு செய்யலாம். விவசாயிகள் இப்படி நாற்று தயாரித்து விற்பதன் மூலமும் வருமானம்
பார்க்க முடியும்” என்றார்.

இப்படித்தான் செய்யணும், முருங்கை சாகுபடி!

சடையாண்டி முருங்கை சாகுபடி குறித்துச் சொன்ன விஷயங்களை அப்படியே பாடமாகத்


தொகுத்திருக்கிறோம்.

‘முருங்கையை களர், உவர் மண் தவிர அனைத்து மண் வகைகளிலும் பயிரிடலாம். நிலத்தை நன்றாக உழவு
செய்து, 16 அடி இடைவெளியில் நீளமாக வாய்க்கால்களை அமைத்துக்கொள்ள வேண்டும். வாய்க்கால்களின்
மையத்தில் 16 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்துக்குக் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். இதன்படி
பார்த்தால், செடிக்குச்செடி 16 அடி, வரிசைக்கு வரிசை 16 அடி இடைவெளி இருக்கும்.  ஒவ்வொரு குழியிலும்
மூன்று கைப்பிடி தொழுவுரம், ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு மற்றும் ஒரு கைப்பிடி மண்புழு உரம்
போட்டு... நாட்டுமுருங்கை நாற்றை நடவு செய்து தண்ணர்ீ பாய்ச்ச வேண்டும். அடுத்து 3 மற்றும் 5-ம் நாட்களில்
தவறாமல் தண்ண ீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து வாரம் ஒரு முறை தண்ணர்ீ பாய்ச்சினால் போதும்.

20-ம் நாள் ஒவ்வொரு செடியின் தூரிலும் 200 கிராம் கடலைப் பிண்ணாக்கை வைத்து பாசனம் செய்ய வேண்டும்.
40 மற்றும் 70-ம் நாட்களில் புதிய இளம் கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால்
பக்கவாட்டுக் கிளைகள் அதிகமாக வளரும்.

120-ம் நாளுக்குள்  செடியின் வளர்ச்சியைப் பொறுத்து மூன்றாவது முறையாக கவாத்து செய்ய வேண்டும். 6-ம்
மாதத்திலிருந்து காய்க்கத் தொடங்கும். ஆண்டுக்கு மூன்று முறை காய்ப்பு இருக்கும். ஒவ்வொரு காய்ப்புக்கும் 40
நாட்கள் மட்டுமே காய் இருக்கும். காயை அறுவடை செய்வதற்கு முன்பாக, ஒவ்வொரு மரத்துக்கும் 200 கிராம்
கடலைப் பிண்ணாக்கு கொடுக்க வேண்டும். அதே போல மகசூல் முடிந்தவுடன், ஒவ்வொரு மரத்துக்கும் 30
கிலோ தொழுவுரம் வைக்க வேண்டும். இதை முறையாகச் செய்தால்தான் தரமான விளைச்சல் கிடைக்கும்.
இதைத்தவிர முருங்கையில் வேறு பராமரிப்பு தேவையில்லை.’’

பூச்சி, நோய் பராமரிப்பு!

முருங்கையில் பூச்சி, நோய் பற்றி சடையாண்டியின் அனுபவம்...

முருங்கை இலைகளில் (கீ ரை) துளைகள் தென்பட்டால் புழுத் தாக்குதல் என்று அர்த்தம். இந்தப்புழு கண்ணுக்குத்
தெரியாது. இந்த அறிகுறி தெரிந்தால், இலைகள் முழுக்க நனையும் அளவுக்கு மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்து
புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

சில சமயங்களில் கம்பளிப்பூச்சித் தாக்குதல் இருக்கும். வேப்பெண்ணைக் கரைசல் அல்லது அடுப்புச்


சாம்பலைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

ஒவ்வொரு முறையும் பூவெடுக்கும் முன்பாக பஞ்சகவ்யா கரைசலைத் தெளித்து வந்தால், எந்த நோயும்
தாக்காது. இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள், நோய்கள் வருவதில்லை.

You might also like