You are on page 1of 4

ஹழ்ரத் ஹூது அலைஹிஸ்ஸலாம்

sufimanzil.org/ஹழ்ரத்-ஹூது-அலைஹிஸ்ஸலாம்/

நபி நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சமுதாயத்தினருக்கு பின் தோன்றியது ‘ஆது’


சமூகத்தினர்.

அவர்களுக்கு நபி ஹூத்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களை இறை தூதராக இறைவன்


அனுப்பி வைத்தான், அந்த சமூகத்தார்கள் மிக நேர்தியான மாளிகைகள், அமைப்பதில்
வல்லமை பெற்று விளங்கினர். தங்களின் வலிமையை நினைத்து பெருமை
கொன்டவர்களாக இருந்தனர். அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் வேறு எந்த நாட்டிலும்
படைக்க படவில்லை.

ஹூது நபியின் கூட்டத்தார்களான ஆது சமுதயாத்தினர் வாழ்ந்திருந்த இடம்தான் உபார்


ஆகும். இது ஓமான் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகரத்திலிருந்து 172 கிலோமீட்டர்
தூரத்தில் இருக்கிறது.

திருக்குர்ஆன் அத்தியாயம் 11:50 ல் அல்லாஹ் கூறுகிறான்.


‫َٰل‬
‫َو ِإَلٰى َع اٍد َأَخ اُه ْم ُه وًد ا ۚ َقاَل َيا َقْو ِم اْع ُبُد وا اَهَّلل َم ا َلُك م ِّمْن ِإ ٍه َغ ْيُر ُه ۖ ِإْن َأنُتْم ِإاَّل ُم ْف َتُر وَن‬

“ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி


வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள்
வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள்
பொய்யர்களாகவே தவிர வேறில்லை.

மேலும் திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்

‫ اَّلِتي َلْم ُيْخ َلْق ِم ْثُلَه ا ِفي اْلِباَل ِد‬. ‫ ِإَر َم َذ اِت اْلِعَم اِد‬.‫َأَلْم َتَر َك ْيَف َفَع َل َر ُّبَك ِبَع اٍد‬

உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர்


பார்க்கவில்லையா? (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள், அவர்கள்
போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.

– அல்குர்ஆன் 89:6-8

சிலைகளை வணங்கி கொண்டிருந்த ஆது சமுதாயத்தினரிடம் அல்லாஹ் வழங்கும்


தண்டனைகளைப் பற்றி ஹூது நபி முன்னெச்சரிக்கை செய்தார். ஆனால் அவர்களோ
அதையும் மறுத்து புறக்கணித்தனர். ஹூது நபியையும் உண்மையான விசுவாசிகளையும்
பாதுகாத்து அல்லாஹ் நிராகரிப்போரை அழித்தான்.

இன்னும்,

ஆது சமுதாயத்தினரை நோக்கி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உபதேசம்


செய்ததையும், அதற்கு அவர்கள் அளித்த பதில்களையும் வல்ல நாயன் தனது
திருமறையில்,…

‫ِإْذ َقاَل َلُه ْم َأُخ وُه ْم ُه وٌد َأاَل َتَّتُقوَن‬

1/4
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூது: “நீங்கள் (இறைவனை) அஞ்ச
மாட்டீர்களா?” என்று கூறியபோது:

‫ِإِّني َلُك ْم َر ُس وٌل َأِم يٌن‬

 “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.

‫َأ‬ ‫ُق‬
‫َفاَّت وا اَهَّلل َو ِط يُعوِن‬

ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.

‫َوَم ا َأْس َأُلُك ْم َع َلْيِه ِم ْن َأْج ٍر ۖ ِإْن َأْج ِر َي ِإاَّل َع َلٰى َر ِّب اْلَع اَلِم يَن‬

 “மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக


எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.

‫َأَتْبُنوَن ِبُك ِّل ِر يٍع آَيًة َتْع َبُثوَن‬

 “நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?

‫َو َتَّتِخ ُذ وَن َمَص اِنَع َلَع َّلُك ْم َتْخ ُلُد وَن‬

இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க)


மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?

‫َو ِإَذ ا َبَط ْش ُتم َبَط ْش ُتْم َج َّباِر يَن‬

 “இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும்


கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.

‫َف ُق َهَّلل َأ‬


‫اَّت وا ا َو ِط يُعوِن‬

 “எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.

‫َو اَّتُقوا اَّلِذ ي َأَم َّد ُك م ِبَم ا َتْع َلُموَن‬

 “மேலும், நீங்கள் அறிந்திருக்கும் (பாக்கியமான பொருள்களையெல்லாம் கொண்டு)


உங்களுக்கு உதவியளித்தவனை அஞ்சுங்கள்.

‫َأَم َّد ُك م ِبَأْنَع اٍم َوَبِنيَن‬

 “அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும்,


பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்.

‫َوَج َّناٍت َو ُع ُيوٍن‬

 “இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்).

‫َأ ُف َل ُك َذ‬
‫ِإِّني َخ ا َع ْي ْم َع اَب َيْو ٍم َع ِظ يٍم‬

2/4
 “நிச்சயமாக நான் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்” (எனக்
கூறினார்).

‫َقاُلوا َس َواٌء َع َلْيَنا َأَوَع ْظ َت َأْم َلْم َتُك ن ِّمَن اْلَو اِع ِظ يَن‬

 (இதற்கு) அவர்கள்: “நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு


உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்” எனக்
கூறினார்கள்.
‫َٰه‬
‫ِإْن َذ ا ِإاَّل ُخ ُلُق اَأْلَّوِليَن‬

“இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.

‫َوَم ا َنْح ُن ِبُمَع َّذ ِبيَن‬

 “மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்.”


‫َٰذ‬
‫َفَكَّذ ُبوُه َفَأْه َلْك َناُه ْم ۗ ِإَّن ِفي ِلَك آَل َيًة ۖ َوَم ا َك اَن َأْك َثُر ُه م ُّم ْؤ ِمِنيَن‬

 (இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின் நாம் அவர்களை


அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில்
பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை. -அல்குர்ஆன் 26:124-139

எந்த சமுதாயம் இறைவனை நிராகரித்து இறை தூதரை நம்ப மறுத்ததோ,அவர்களுக்கு


எச்சரிக்கபட்டது போல இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கினான்,
‫َٰه‬
‫َفَلَّم ا َر َأْو ُه َع اِر ًض ا ُّمْس َتْق ِبَل َأْو ِدَيِتِه ْم َقاُلوا َذ ا َع اِر ٌض ُّمْم ِط ُر َنا ۚ َبْل ُه َو َم ا اْس َتْع َج ْلُتم ِبِه ۖ ِر يٌح ِفيَه ا َع َذ اٌب َأِليٌم‬

ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த


பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், “இது நமக்கு மழையைப்
பொழியும் மேகமாகும்” எனக் கூறினார்கள்; “அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக)
அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று – இதில் நோவினை செய்யும்
வேதனை இருக்கிறது:

–அல்குர்ஆன் 46:24

ஆத் கூட்டத்தார்கள் தங்களுக்கு வேதனை தரும் பேரழிவு கண்முன் கொண்டு வரப்படுவது


அறியாமல், அதை மழை தர கூடிய மேக கூட்டங்களாக நினைத்தனர்.

ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால்


அழிக்கப்பட்டனர்.

‫َو َأَّم ا َع اٌد َفُأْه ِلُك وا ِبِر يٍح َص ْر َص ٍر َع اِتَيٍة‬

இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த


கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.

‫َس َّخ َر َه ا َع َلْيِه ْم َس ْبَع َلَياٍل َو َثَم اِنَيَة َأَّياٍم ُح ُس وًما َفَتَر ى اْلَقْو َم ِفيَه ا َص ْر َع ٰى َك َأَّنُه ْم َأْع َج اُز َنْخ ٍل َخ اِو َيٍة‬

3/4
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்;
எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்)
விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
‫ٰى‬
‫َفَه ْل َتَر َلُهم ِّمن َباِقَيٍة‬

ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?

-அல்குர்ஆன் 69:6-8

இப்பொழுது உபாரை சுற்றிலும் யாருமற்ற பாலைவனம் தான் உள்ளது.

ஆயிஷா (ரலியல்லலாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால்


முன்னால் நடப்பார்கள்; பிறகு திரும்பி நடப்பார்கள்; (தம் அறைக்கு) உள்ளே போவார்கள்;
வெளியே வருவார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.)
அவர்களின் முகம் மாறி விடும். வானம், மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பான)
நிலை அவர்களைவிட்டு நீங்கி விடும். எனவே, (ஒரு முறை) நான் அவர்களுக்கு அந்தத்
தவிப்பான நிலை ஏற்படுவதை கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதற்கு நபி(ஸல்)
அவர்கள், ‘(திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ஆது சமுதாயத்தார், அந்த வேதனை
(கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக்
கண்டபோது (தவறாகப் புரிந்து கொண்டு), ‘இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்”
(திருக்குர்ஆன் 46:24) என்று கூறினார்களே அத்தகைய (வேதனையைக் கொணரக் கூடிய)
மேகமாகவும் இது இருக்கலாம் எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள்.  (புகாரி –
3206)

4/4

You might also like