You are on page 1of 16

ஹழ்ரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைuப்

பற்றி அஷ்ஷெய்கு முஹத்திஸ் ஷாஹ் அப்துல் அஜீஸ்


திஹ்லவி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னது
என்ன? வழிகேடர்களின் பொய்க் குற்றச்சாட்டிற்கு தகுந்த
பதில்!
sufimanzil.org/ஹழ்ரத்-முஆவியா-ரழியல்லாஹ/

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திற்குப் பின்


அரசியல் காரணமாக அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும், முஆவியா
(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் இடையில் நடந்த போர் நிறுத்த சமாதான
உடன்படிக்கையால், அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மேல் கொண்ட வெறுப்பின்
காரணமாக ‘கவாரீஜிகள்’ என்ற முதல் பிரிவு ஏற்பட்டது. இந்த வழி கெட்ட கூட்டத்தினர்
ஒரு தனித் தலைமையை ஏற்படுத்தியும் தனிப் பள்ளியை கட்டிக்கொண்டும் ஒட்டுமொத்த
ஸஹாபா பெருமக்களை காபிர் எனத் தீர்ப்பளித்து தனியே பிரிந்து சென்றனர். நபி
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெயரால் பொய்களைப் பரப்பியும் குர்
ஆனுக்கு மனோ  இச்சைப்படி தவறான விளக்கம் கொடுத்தும் மக்களைக் குழப்பினர்.

ஷீயா என்றொரு கூட்டமானது அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை வரம்பு மீறி


புகழ்ந்தும், அவர்களின் குடும்பத்து வாரிசுகளே 12 இமாம்கள் இஸ்லாமிய பரம்பரை
என்றும் கூறிகொள்கின்றனர்.

இன்று உலகிலுள்ள எல்லா வழிகேட்டு இயக்கங்களின் கொள்கையிலும் கவாரீஜ் மற்றும்


ஷீயாக்களின் கொள்கையின் சாரமும் சத்தும் இருப்பதை அறியலாம்

அப்படியொரு வழிகெட்ட கொள்கை கொண்ட தென்னிந்தியா சென்னை கோவளம்


சர்க்கார் என்பவர், ஷீயாக்களின் கொள்கையை தமக்கே கொண்டு ஆற்றிய உரைகளைக்
கேட்க நேர்ந்தது. அவர் அதில் …

நபித் தோழர்களான ஹழ்ரத் அபூசுப்யான், ஹழ்ரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹுமா


ஆகியோர்களை கேடுகெட்டவர்கள் என்றும், ஹழ்ரத் முஆவியா கொலைகாரன் என்றும்
சொல்லி அவர்களை எதிர்ப்பதாகவும் இன்னும் அறிஞர்களும் அவர்களை எதிர்க்கிறார்கள்
என்றும் சொல்கிறார். அதுதான் எங்களுடைய தீன் என்கிறார். மேலும் இதற்கு எங்களுக்கு
ரஸூலின் ஆதரவு உண்டு என்றும் பறைசாட்டுகிறார்.

முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ரழியல்லாஹு அன்ஹு என்று கூறுவது


மிகப் பெரிய பாவம் என்கிறார். ஹைதராபாத் ஷெய்கு நாயகம் முஹம்மது அப்துல் காதிர்
ஸூபி அவர்களின் ஸில்ஸிலாவின் ஷெய்குமார்களில் ஒருவரான,  இந்தியாவில் மிகப்
பெரும் முஹத்திஸ் அப்துல் அஜீஸ் திஹ்லவி அவர்களின் ‘பதாவா அஜீஸி‘யில் 
அவர்களிடம் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிக்
கேட்கப்பட்டதாகவும் அதற்கு அவர்கள் முஆவியா தன் மனோ இச்சைக்காக
செயல்படக்கூடியவராக இருந்தார்கள் என்றும், முஆவியா பாஸிக் என்றும் சொல்வதாக
சொல்கிறார்.

1/16
மேலும் முஹத்திஸ் அவர்கள் அலி நாயகத்தை அலி அலைஹிஸ்ஸலாம் என்று
ஆரம்பிப்பதாகவும் கூறுகிறார்.  முஹத்திஸாக இருக்கிற இவர்களுக்கு எதுவும் 
தெரியாதா? எல்லாம் தெரிந்த அவர்களே இப்படிக் கூறியிருக்கும் போது நாங்கள் ஒரு
பாஸிக்கை ரழியல்லாஹு அன்ஹு என்று கூற வேண்டுமா? அவ்வாறு கூறுவது
முனாபிக்தனம் என்கிறார். முஆவியா ஸஹாபிதான். ஆனால் நிஃபாக் கொண்ட
நயவஞ்சக ஸஹாபி என்றும் கூறுகிறார்.

காயல்பட்டினம் ஸூபி ஹழ்ரத்தை கொண்டாடக் கூடியவர்கள் என்று சொல்லிக் கொண்டு


முஆவியாவை ரழியல்லாஹு அன்ஹு என்று சொன்னால் நீங்கள் பக்கா முனாபிக்
அல்லவா? என்றும் கேட்கிறார்.

அஹ்லுபைத்களுக்கு கஷ்டம் கொடுத்ததால்தான் நாம் அவரை வெறுக்கிறோம். நமக்கும்


உமையாக்களுக்கம் எவ்விதப் பகையும் இல்லை என்றும் தாம் அஹ்லுபைத்கள் மீது
பற்றுள்ளதனால்தான் இந்த ஸஹாபாக்களை வெறுக்கிறேன் என்றும் கூறுகிறார்.

இவரின் கூற்று எந்தளவிற்கு உண்மையானது? அதன் உண்மைத் தன்மை என்ன என்பதை


மக்களுக்கு மத்தியில் தெளிவுபடுத்தவே இந்தக் கட்டுரை.

முதலில் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உற்றத் தோழர்கள்


பற்றி குர்ஆன், ஹதீதுகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களின் சிறப்புகள்,
அந்தஸ்துகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

ஸஹாபாக்களின் சிறப்புகள்:

ஸஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் வாழும் காலங்களில் அல்லாஹ்வின்


திருப்பொருத்தம் பெற்ற உத்தம சீலர்கள்.

கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக நின்றவர்கள்.

இந்த மார்க்கத்திற்காக தங்களையே உரமாக்கிக் கொண்டவர்கள்.

தோழமையின் அத்தணை இலக்கணங்களையும் நிலைநிறுத்தியவர்கள்.

அவர்கள் இந்த தீனின் சாட்சியாளர்கள். அவர்கள் மூலம்தான் நமக்கு குர்ஆன் கிடைத்தது,


ஹதீதுகளும் கிடைத்தது. எனவே அவர்களை குறை காண்பவர்கள் இந்த தீனை
அழிக்கப்பார்ப்பவர்கள். வழிகேடர்கள்.

‫َتْج ِر ي َتْح َتَه ا‬ ‫َو الَّس اِبُقوَن اَأْلَّو ُلوَن ِم َن اْلُمَه اِج ِر يَن َو اَأْلنَص اِر َو اَّلِذ يَن اَّتَبُعوُه م ِبِإْح َس اٍن َّر ِض َي اُهَّلل َع ْنُه ْم َوَر ُض وا َع ْنُه َو َأَع َّد َلُه ْم َج َّنَٰذاٍت‬
‫اْلَفْو ُز اْلَعِظ يُم‬ ‫اَأْلْنَه اُر َخ اِلِد يَن ِفيَه ا َأَبًد ا ۚ ِلَك‬

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல


விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும அல்லாஹ் பொருந்திக் கொண்டான்.
அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச்
சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள்
ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான
வெற்றி.

            – திருக்குர்ஆன்  9:100

2/16
நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்…

1.            எனது தோழர்கள் நட்சத்திரங்களை போன்றவர்களாவார்கள். எனவே அவர்களில்


நீங்கள் யாரை பின்பற்றினாலும் நேர்வழி அடைவீர்கள்.

                                                                                       (மிஷ்காத்: 6018)

2.            எனது ஸஹாபாக்களை சங்கை செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள்


தான் உங்களில் மிக சங்கையானவர்கள் ஆவார்கள்.'(மிஷ்காத்: 6012)

3.            என்னைக் கண்ட முஸ்லிமையும் என்னைக் கண்டவனைக் கண்ட முஸ்லிமையும்


நரகம் தொடாது.(திர்மிதி, மிஷ்காத்)

4.            எனது தோழர்களை எவரேனும் ஏசப்பேசக் கண்டால் (அல்லது கேட்டால்) இந்த


கெடுதிக்காக அல்லாஹ்வின் சாபம் அவர்கள் மீது உண்டாகட்டும் எனச் சொல்லுங்கள்.
(ஹழ்ரத் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)   திர்மிதி, மிஷ்காத்

5.            என் தோழர்களை திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு


தங்கத்தை (இறைவழியில்) செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த ஒரு கைக்குவியல்
அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரது) அந்த தருமம் எட்ட முடியாது.

                                 (ஹழ்ரத் அபூசையீத் அல்குத்ரீ ரலியல்லாஹுஅன்ஹு

                                  (ஸஹிஹுல் புகாரி – 3673)

உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உற்ற தோழர் முஆவியா


ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாழ்க்கை சுருக்கம்:

 நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழரும் உமைய்யா


கிலாபத்தின் முதல் கலீபாவாமும் ஆகிய ஹழ்ரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு
அவர்கள் கி.பி 602ம் மக்கா நகரில் பிறந்தார்கள். இவரின் தந்தை அபூ சுபியான்
ரழியல்லாஹு அன்ஹு. தாய் ஹிந்த் ரழியல்லாஹு அன்ஹா. ஆரம்ப காலங்களில் தனது
தந்தை அபூ சுபியானுடன் சேர்ந்து இஸ்லாத்தை பலமாக எதிர்த்தவர்கள். ஹுதைபிய்யா
உடன்படிக்கையின்போதே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். தமது தந்தைக்குப்
பயந்து அதை வெளிக்காட்டாமல் மறைத்து வைத்திருந்தார்கள். 630ல் ஏற்பட்ட மக்கா
வெற்றிக்குப் பின் அதை வெளிப்படுத்தினார்கள்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவுக்குப் பின், இஸ்லாத்தின்


முதலாம் கலீபா ஹழ்ரத் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களால் பைசாந்திய
மற்றும் சிரிய அரசுகளுக்கு எதிராக அனுப்பப்பட்ட இராணுவத்தில் அங்கம் வகித்தார்கள்.

பின்பு கி.பி 640ல் இஸ்லாத்தின் இரண்டாம் கலீபா உமர் ரழியல்லாஹு அன்ஹு


அவர்களால் சிரியா பகுதியின் ஆளுனராக நியமிக்கப்பட்டார்கள். இவரின் ஆளுகையின்
கீழ் பலம் வாய்ந்த சிரிய இராணுவம் உருவாக்கப் பட்டது. அரேபியா மீதான பைசாந்திய
பேரரசின் ஆக்கிரமிப்புகளை தடுப்பதில் இவரின் இராணுவம் முக்கிய பங்காற்றியது.

3/16
கி.பி 656ல் நடைபெற்ற இஸ்லாத்தின் மூன்றாம் கலீபா ஹழ்ரத் உதுமான் ரழியல்லாஹு
அன்ஹு அவர்களின் படுகொலையை தொடர்ந்து, நான்காம் கலீபா ஹழ்ரத் அலீ
ரழியல்லாஹு அன்ஹு அவர்களின்   தலைமையை ஏற்க மறுத்தார்கள்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற சிப்பீன் போரின் முடிவில், கலீபா கலீபா ஹழ்ரத் அலீ
ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.
இதன்படிதான் தொடர்ந்து சிரியாவின் ஆளுனராக இருப்பதோடு, ஹழ்ரத் அலீ
ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைமையை ஏற்பதாகவும் உறுதியளித்தார்கள்.

இதன் பிறகு 661ல் நடைபெற்ற நான்காம் கலீபா ஹழ்ரத் அலி நாயகம் ரழியல்லாஹு
அன்ஹு அவர்களின் ஷஹீதுக்குப் பின்  அன்னாரின் மகனார் இமாம் ஹழ்ரத் ஹஸன்
ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் (ஹழ்ரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹுவின்
மறைவுக்குப் பின் தானோ அல்லது தனது சகோதரனோ மட்டுமே அடுத்த கலீபாவாக
வேண்டும் என்ற ஹழ்ரத் ஹசனின் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் நிபந்தனை)
நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலுடன் கலீபாவாக பொறுப்பேற்றார்கள்.

சிலகாலம் கலீபாவாக இருந்த இமாம் ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்


கிலாபத்தை விட்டுக் கொடுத்தார்கள். அன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அலீ
ரழியல்லாஹு அன்ஹுவின் மகனாகிய ஹசன் ரழியல்லாஹு அன்ஹும் இதனை
ஏற்றுக்கொண்டார். இருப்பினும் யை முஆவியாவும் ஏற்றுக்கொண்டார். இறுதியில் 680ல்
சிரியாவில் மறைந்தார்கள்.

முஆவியா -ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புகள் மற்றும் ஹதீது


கிரந்தங்களில்…

1.            யா அல்லாஹ்! முஅவியாவை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழி


பெற்றவராகவும் ஆக்குவாயாக. அவருக்கு நேர் வழி காட்டுவாயாக. அவர் மூலம்
(மக்களுக்கு) நேர்வழிகாட்டுவாயாக.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீ உமைரா ரழியல்லாஹு அன்ஹு ஆதாரம் :


அத்தாரீஹுல் கபீர் 1405

முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு நேர்வழி காட்டச் சொல்லியும், அவர்


மூலம் (மக்களுக்கு) நேர்வழி காட்டச் சொல்லியும் நபியவர்கள் அல்லாஹ்விடம்
பிரார்தித்திருக்கின்றார்கள். என்றும் மறுக்கப்படாத நபியவர்களின் பிரார்த்தனையைக்
கொண்டே ஹழ்ரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பினை அறிந்து
கொள்ளலாம்.

2.            முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அல்லாஹ்வின் வஹீயை எழுத


நியமிக்கப்பட்டார்கள்.

முஸ்லிம்கள் அபூசுஃப்யான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை (அவர்கள் இஸ்லாத்தை


ஏற்ற பிறகும்) ஏறெடுத்துப் பார்க்காமலும் அவரைத் தம் அவைகளில் அனுமதிக்காமலும்
இருந்து வந்தனர்.

4/16
(இந்நிலையில்) அவர் நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்களிடம்,
‘அல்லாஹ்வின் தூதரே! மூன்று கோரிக்கைகளை எனக்கு (நிறைவேற்றி)த் தாருங்கள்’ என்று
கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள் ‘ஆ(கட்டு)ம்’
என்றார்கள். அபூசுஃப்யான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், ‘என்னிடம்
அரபியரிலேயே மிகவும் அழகான இலட்சணமான பெண் இருக்கிறார். அவர்தான் (என்
மகள்) உம்மு ஹபீபா பின்த் அபீசுஃப்யான். அவரைத் தங்களுக்கு நான் மணமுடித்துத்
தருகிறேன்’ என்றார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள்
‘ஆ(கட்டு)ம்’ என்றார்கள்.

அடுத்து ‘தாங்கள் (என் புதல்வர்) ‘முஆவியா’வை தங்களுடைய எழுத்தராக ஆக்கிக்


கொள்ளுங்கள்’ என்றார்கள். அதற்கும் நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள்,
‘ஆ(கட்டு)ம்’ என்றார்கள். அடுத்து ‘படைப் பிரிவொன்றுக்கு என்னைத் தலைவராக்குங்கள்.
முஸ்லிம்களுடன் நான் போரிட்டுக் கொண்டிருந்ததைப் போன்று
இறைமறுப்பாளர்களுடனும் நான் போரிட வேண்டும் (அவற்றின் மூலம் முஸ்லிம்களுக்கு
என்மீதுள்ள வெறுப்பை நான் அகற்றிக்கொள்வேன்)’ என்றார்கள். அதற்கும் நபி
(ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள் ‘ஆ(கட்டு)ம்’ என்றார்கள்.

இதன் அறிவிப்பாளரான அபூஸுமைல் சிமாக் பின் அல்வலீத் (ரஹிமஹுல்லாஹ்)


அவர்கள் கூறுகிறார்கள்:

அபூசுஃப்யான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இவற்றைக் கோராமலிருந்தால்,


அவற்றை நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள் அவருக்குக்
கொடுத்திருக்கமாட்டார்கள். ஏனெனில், நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்)
அவர்கள் தம்மிடம் எதைக் கேட்டாலும் ‘ஆ(கட்டு)ம்’ என்றே கூறுவார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) ஆதாரம் :


முஸ்லிம் 4914

புத்திக் கூர்மையும், திறமையும் படைத்த அபூஸுப்யான் ரழியல்லாஹு அன்ஹு


அவர்களின் மகன் என்பதால் எழுத்தாற்றல், பேச்சாற்றல், நிர்வாகத்திறமை போன்ற சிறந்த
தேர்ச்சிகளை முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பெற்றிருந்தார்கள்.
இத்தகைய  விவேகமான ஒருவரைத்தான் நம்பிக்கை, நாணயத்திற்குரிய பணியான
‘வஹீயை எழுதும் பணி’க்கு நபியவர்கள் அமர்த்தியிருந்தார்கள்.

3. இப்னு அபீ முலைக்கா(ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்.

முஆவியா(ரழியல்லாஹு அன்ஹு), தம்மிடம் இப்னு அப்பாஸ்(ரழியல்லாஹு அன்ஹு)


அவர்களின் அடிமையொருவர் (குரைப்) இருக்க, இஷா தொழுகைக்குப் பின் ஒரு ரக்அத்
வித்ரு தொழுதார்கள். அந்த அடிமை இப்னு அப்பாஸ்(ரழியல்லாஹு அன்ஹு)
அவர்களிடம் சென்றார். (முஆவியா – ரழியல்லாஹு அன்ஹு – அவர்கள் ஒரு ரக்அத்
வித்ரு தொழுத விஷயத்தைக் கூறினார்.) இப்னு அப்பாஸ்(ரழியல்லாஹு அன்ஹு),
‘அவரை (அப்படியே தொழ)விட்டு விடு. ஏனெனில், அவர் இறைத்தூதர்(ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 3764

5/16
3.            ஷாம் (ஸிரியா, லெபனான்) பகுதியில் மழையின்றி வறட்சி ஏற்பட்டபோது
முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் யஸீத் பின் அஸ்வத் (ரழியல்லாஹு
அன்ஹு) அவர்களைக் கொண்டு பிராத்தித்து மழைத் தேடினார்கள். துஆவின் போது:
‘இறைவா! எங்களின் மேன்மைக்குரியவரைக் கொண்டு வஸீலா தேடுகிறோம் என்று
பிரார்த்தித்து விட்டுஇ யஸீதே! உங்கள் கையை உயர்த்தி எங்களுக்காகப் பிரார்த்தியும்
என்றார்கள். உடனே யஸீதும், அவருடன் இருந்தவர்களும் தத்தம் கரங்களை ஏந்தி
மன்றாடினர். பிறகு மழை பெய்தது.

4.            முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மார்க்க அறிவு

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு), அப்துல்லாஹ் இப்னு  உமர்


(ரழியல்லாஹு அன்ஹு), அபூதர் அல் கிபாரி (ரழியல்லாஹு அன்ஹு) போன்ற சுமார் 23
நபித்தோழர்கள் அவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளதை வரலாற்றில் காண
முடிகின்றதென்றால் நபியவர்களிடமிருந்து குறிப்பிடத்தக்களவிலான ஹதீஸ்களை அவர்
கேட்டிருக்கின்றார் என்பதை அதிலிருந்து அறிய முடிவதுடன், மார்க்கம் பற்றிய
விளக்கமுள்ள ஒருவராகவும் அவர் இருந்துள்ளார் என்பதையும்  விளங்க முடிகின்றது.

முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ்கள் ஸஹீஹுல்


புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம் உள்ளிட்ட பிரபல்யமான ஆறு ஹதீஸ் நூட்களிலும்இ அவை
தவிர்ந்த ஏனைய ஹதீஸ் நூட்களிலும் இடம் பெற்றுள்ளன.

5.            ஒட்டு முடி வைப்பதை தடுத்தல்:

ஒரு முறை ஹஜ் காலம் ஒன்றின் போது முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்
(மதீனாவுக்கு வந்து வந்து) மிம்பரில் ஏறி (மதீனாவின் அமீருடைய) மகனின் கையிலிருந்த
சில முடிகளைத் தனது கையில் எடுத்தவராக ‘மதீனா வாசிகளே உங்கள் அறிஞர்கள் எங்கே!
‘பனூஇஸ்ரவேலர்கள் அழிந்தது இதை அவர்களின் பெண்கள் எடுத்த போதுதான்’ என்று
கூறியவர்களாக நபியவர்கள் இதை தடைசெய்வதை நான் கேட்டுள்ளேன். என்று
கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுமைதிப்னு அப்திர்ரஹ்மான் ரழியல்லாஹு அன்ஹு

ஆதாரம் : முஸ்லிம் 5700.

6.            ஹதீதுகளில் பொய் கலப்பதைப் பற்றி அச்சம் கொள்ளல்:

உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் காலத்தில் அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களைத்


தவிர்ந்த எனைய ஹதீஸ்களை அறிவிப்பதை விட்டும் நான் உங்களை எச்சரிக்கின்றேன்.
எனெனில் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அல்லாஹ்வுக்காக மக்களை
அச்சத்தோடு வைத்திருந்தார். ‘அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு
மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுப்பான். நான் சொத்துக்களைப் பாதுகாப்பவன்தான்.
எவருக்கு நான் மனமுவந்து (பைத்துல் மாலிலிருந்து) சொத்துக்களைக் கொடுக்கின்றேனோ
அவருக்கு அதில் அபிவிருத்தி செய்யப்படும், கேட்டதனாலும், எதிர்பார்த்ததன்
காரணத்தாலும் யாருக்காவது நான் சொத்துக்களைக் கொடுத்தால் அவர் உணவுண்டும்
வயிறு நிறையாதவரைப் போன்றவராவார்.’ என நபியவர்கள் கூறியதை நான்
கேட்டுள்ளேன். என்று முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்.

6/16
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு ஆமிர் அல் யஹ்ஸபி ரழியல்லாஹு அன்ஹு. ஆதாரம்
: முஸ்லிம் 2436

7.            நாங்கள் முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் ஹஜ் செய்தோம்.


நாம் மக்காவை அடைந்த போது பனூ பரூஹ் கோத்திரத்தின் அடிமையொருவர் மக்கா
வாசிகளுக்கு பலதரப்பட்ட கதைகளைச் சொல்லி வருவதாக அறிவிக்கப்பட்டது.
முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அந்நபரிடம் ஒருவரையனுப்பி வரவைத்து ‘இந்தக்
கதைகளைச் சொல்லுமாறு நீர் ஏவப்பட்டுள்ளீரா?’ என விசாரித்தார். அதற்கவர் ‘இல்லை’
என்று பதில் சொன்னார். ‘அனுமதியில்லாமல் இவ்வாறு கதை சொல்ல உம்மைத்
தூண்டியது எது’ என்று முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அந்நபரிடம் கேட்டார்கள்.
‘அல்லாஹ் வழங்கிய அறிவை மக்களுக்கு நாம் எத்தி வைக்கின்றோம்’ என்று கூறினார்.
‘ஹஜ் காலமல்லாத வேறொரு காலத்தில் நான் வந்திருந்தால் உன்னை வெட்டியிருப்பேன்’
என்று அவரிடம் முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள். பின்னர்
மக்காவில் ழுஹரைத் தொழுதுவிட்டு எழுந்த முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு)
அவர்கள் ‘வேதக்காரர்கள் தமது மார்க்கத்தில் 72 பகுதிகளாகப் பிரிந்தார்கள். இந்த
சமுதாயம் 73 பிரிவுகாகப் பிரியும். அதில் ஒன்றைத் தவிர மற்றைய அனைத்தும் நரகம்
செல்லும். அந்த ஒன்று ஒரு ஜமாஅத்தாகும். வெறிபிடித்த நாய்…….. போன்று மனோ
இச்சைகளால் துவண்டு போன ஒரு கூட்டம் எனது சமூகத்திலிருந்து வெளிப்படும்.
அவர்களின் நரம்பு நாளங்களிலெல்லாம், மூட்டுக்களிலெல்லாம் மனோ இச்சைகள்
நுழைந்திருக்கும். அரபு சமுதாயமே முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை நீங்கள் நிலைநாட்டவில்லையென்றால் மற்றவர்கள்
செய்யாததை வைத்து உங்களால் குறைகூற முடியாது’ என நபியவர்கள் கூறினார்கள் என்று
சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஆமிர் அப்துல்லாஹிபனு யஹ்யா ரழியல்லாஹு அன்ஹு ஆதாரம் :


ஹாகிம்443

8. பள்ளியிலிருந்த மக்கள் கூட்டத்திடம் சென்ற முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு)


அவர்கள் ‘உங்களை அமர்த்தியது எது?’ என்று வினவிய போது ‘அல்லாஹ்வை நினைவு
படுத்துவதற்காக அமர்ந்துள்ளோம்.’ என அவர்கள் கூறினர். ‘அல்லாஹ்வுக்காகவா
அமர்ந்தீர்கள்? அதுவல்லாத வேறொன்றுமில்லையா’ என்று அவர்களிடம் முஆவியா
(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கேட்டார்கள். ‘அல்லாஹ் மீது ஆணையாக
வேறெதற்காகவும் நாம் அமரவில்லை’ என்று அவர்கள் கூறினார்கள். அதற்கு முஆவியா
(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘பொய் சொன்னீர்கள் என்பதற்காக நான் உங்களிடம்
சத்தியம் செய்து கேட்கவில்லை. என்னைப் போன்று நபியவர்களோடு
நெருக்கமாகவிருந்து குறைந்த ஹதீஸ்களை அறிவித்தவர் யாருமில்லை. ஒரு முறை
நபியவர்கள் கூட்டமாகவிருந்த தன் தோழர்களிடம் சென்று ‘உங்களை அமர்த்தியது எது?’
என்று கேட்ட போது ‘இஸ்லாத்தின் பால் எங்களுக்கு வழிகாட்டியதற்காகவும், அதை
எங்களுக்கு அருளாக்கியதற்காகவும் அல்லாஹ்வை நினைவு படுத்தி, அவனைப்
புகழ்வதற்காக அமர்ந்துள்ளோம்.’ என்று அத்தோழர்கள் கூறினர். அதற்கு நபியவர்கள்
‘அல்லாஹ்வுக்காகவா அமர்ந்தீர்கள்? அதுவல்லாத வேறொன்றுமில்லையா’
எனக்கேட்டார்கள். ‘அல்லாஹ் மீது ஆணையாக வேறெதற்காகவும் நாம் அமரவில்லை’
என்று அத்தோழர்கள் கூறினார்கள். அதற்கு  நபியவர்கள் ‘பொய் சொன்னீர்கள்
என்பதற்காக நான் உங்களிடம் சத்தியம் செய்து கேட்கவில்லை. ஏனென்றால் அல்லாஹ்

7/16
மலக்குமார்களிடம் உங்களைப் பற்றிப் பொருமையாகப் பேசுவதாக ஜிப்ரீல் (அலை
ஹிஸ்ஸலாம்) என்னிடம் கூறினார்’. என்று நபியவர்கள் சொன்னதாக முஆவியா
(ரழியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸஈதுல் குத்ரி (ரழியல்லாஹு அன்ஹு) ஆதாரம் : முஸ்லிம்7032

அல்லாஹ்வை  நினைவுபடுத்துபவர்களைப் பார்த்து  அல்லாஹ் பெருமைப் படுகின்றான்


என்ற ஹதீஸ்களை நாம் கேட்டிருக்கின்றோம். ஆனால் நபித்தோழர்களில் ஒரு
கூட்டத்தினரைப் பற்றி மலக்குமார்களிடம் அல்லாஹ் பெருமையாகப் பேசுவதாக
வருகின்ற செய்தியை முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவவித்துள்ள
இந்த ஹதீஸிலிருந்துதான் நாம் தெரிந்து கொள்கின்றோம்.

9.  ‘எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம்


பெற்றவராக ஆக்கி விடுகிறான். (போர் ஆதாயங்களை) அல்லாஹ் கொடுப்பவனாக
இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில்
ஒருசாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை
நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட
முடியாது’ இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: என
முஆவியா(ரழியல்லாஹு அன்ஹு) தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.ஆதாரம் :
புகாரி (71)            

10. முஃகீரா இப்னு ஷுஅபா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களால் விடுதலை


செய்யப்பட்ட அவர்களின் அடிமையான வர்ராத்(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்
அறிவித்தார்.

முஃகீரா இப்னு ஷுஅபா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் முஆவியா இப்னு அபீ


சுஃப்யான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். (அதில்
பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:) இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சலாம் கொடுத்தவுடன் (பின்வருமாறு)
கூறுவார்கள்.

லா இலாஹ இல்லால்லாஹு வஹ்தஹு. லா ஷரீக்க லஹு லஹுல் முல்க்கு. வ லஹுல்


ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஉதைத்த
வலா முஉத்திய லிமா மனஅத்த வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல் ஜத்.

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன்


தனித்தவன். அவனுக்கு இணையானவன். எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே
உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்திலும் மீதும்
ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை. எச்செல்வரின்
செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது.)

இன்னும் சில அறிவிப்பாளர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது. ஆதாரம் : புகாரி


6330

11. நபிகளாரின் வாக்கு முஆவியா ரழியல்லாஹு அன்ஹு ஆட்சியில் நிறைவேறுதல்:

அனஸ் இப்னு மாலிக்(ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்.

8/16
இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உம்மு ஹராம் பின்த்து
மில்ஹான்(ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டிற்குச் செல்பவராக இருந்தார்கள்.
அப்போதெல்லாம் அவர் நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்களுக்கு உணவு
தருவது வழக்கம். உம்மு ஹராம்(ரழியல்லாஹு அன்ஹா)இ உபாதா இப்னு
ஸாமித்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (இவ்வாறே
ஒருமுறை) நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள் உம்மு
ஹராம்(ரழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் சென்றார்கள். அவர்
நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்களுக்கு உணவு கொடுத்துவிட்டு
அவர்களின் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினார்கள். அப்படியே
நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, சிரித்துக்
கொண்டே கண் விழித்தார்கள். உம்மு ஹராம்(ரழியல்லாஹு அன்ஹா), ‘இறைத்தூதர்
அவர்களே! ஏன் (இப்படிச்) சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு
நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள், ‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள்
சிலர், இறைவழியில் அறப்போர் வீரர்களாக எனக்கு (கனவில்) எடுத்துக்
காட்டப்பட்டார்கள். அவர்கள் இந்தக் கடலின் முதுகில் கட்டில்களில் (சாய்ந்து)
அமர்ந்திருக்கும் மன்னர்களாக அல்லது கட்டில்களில் அமர்ந்திருக்கும் மன்னர்களைப்
போல்… ஏறிச் செல்கிறார்கள்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு உம்மு
ஹராம்(ரழியல்லாஹு அன்ஹா), ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக
என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள். எனவே,
இறைத்தூதர் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, தம் தலையை(த்
தலையணையில்) வைத்(து உறங்க ஆரம்பித்)தார்கள்; பிறகு, சிரித்தபடியே
விழித்தெழுந்தார்கள். அப்போது உம்மு ஹராம்(ரழியல்லாஹு அன்ஹா), ‘இறைத்தூதர்
அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்’ என்று கேட்டார்கள். நபி(ஸல்லல்லாஹுஅலைஹி
வஸல்லம்) அவர்கள், ‘என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், இறைவழியில் அறப்போர்
புரிபவர்களாக எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர்..’ என்று முன்பு போன்றே கூறினார்கள்.
உம்மு ஹராம்(ரழியல்லாஹு அன்ஹா), ‘இறைத்தூதர் அவர்களே! அவர்களில் ஒருத்தியாக
என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள்.
நபி(ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்கள், ‘நீங்கள் (அறப்போருக்காகக் கடலில்)
முதன்முதலாகப் பயணிப்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள்’ என்று கூறினார்கள்.
அவ்வாறே, முஆவியா இப்னு அபீ சுஃப்யான்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின்
(ஆட்சிக்) காலத்தில் (சைப்ரஸ் தீவின் மீது அறப்போர் புரியச் சென்றவர்களுடன் உம்மு
ஹராம்(ரழியல்லாஹு அன்ஹா) அவர்களும் கடல் பயணம் செய்து கடலிலிருந்து (தீவின்
ஒரு பகுதிக்குப்) புறப்பட்டபோது தம் வாகனத்திலிருந்து விழுந்து மரணமடைந்தார்கள்.
ஆதாரம் : புகாரி (2788)

12.  ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரழியல்லாஹு அன்ஹு)


அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக
அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரழியல்லாஹு
அன்ஹு) அவர்கள் இமறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத்
தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று
சொன்னார்கள்.

9/16
– மேற்கண்ட ஹதீஸ் முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்தே மற்றோர்
அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது..  ஆதாரம் : முஸ்லிம்(631)        

13.          நபிகளார் காலத்தில் ஏழையாக இருந்தவர்.

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறியதாவது:

என் கணவர் அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல்முஃகீரா அவர்கள், அய்யாஷ் பின்
அபீரபீஆ மூலம் எனக்குத் தலாக் சொல்லி அனுப்பினார். அவருடன் ஐந்து ‘ஸாஉ’
பேரீச்சம் பழமும் ஐந்து ‘ஸாஉ’ தொலி நீக்கப்படாத கோதுமையும் கொடுத்தனுப்பினார்.
நான் அவரிடம், ‘எனக்கு இதைத் தவிர வேறெதுவும் ஜீவனாம்சம் இல்லையா? நான்
உங்கள் வீட்டில் ‘இத்தா’ இருக்கமாட்டேன்’ என்று சொன்னேன். அதற்கு அய்யாஷ்
அவர்கள், ‘இல்லை (வேறெதுவும் ஜீவனாம்சம் கிடையாது)’ என்று சொல்லிவிட்டார்.
உடனே நான் எனது ஆடையை எடுத்து அணிந்துகொண்டு, அல்லாஹ்வின் தூதர்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சென்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘அவர் உனக்கு


எத்தனை தலாக் சொன்னார்?’ என்று கேட்டார்கள். நான் ‘மூன்று (தலாக்)’ என்றேன்.
(அவ்வாறாயின்) அவர் சொன்னது உண்மையே. உனக்கு ஜீவனாம்சம் இல்லை. நீ உன்
தந்தையின் சகோதரர் புதல்வர் இப்னு உம்மி மக்தூம் அவர்களது இல்லத்தில் ‘இத்தா’
இருந்துகொள். ஏனெனில், அவர் கண் பார்வையற்றவர். நீ உனது (துப்பட்டா) துணியை
அவர் அருகில் கழற்றிவைக்கலாம். உன் ‘இத்தா’க் காலம் முடிந்ததும் எனக்குத் தெரிவி’
என்று சொன்னார்கள். பின்னர் என்னைப் பலர் பெண் கேட்டார்கள். அவர்களில்
முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு), அபூஜஹ்ம் (ரழியல்லாஹு அன்ஹு) ஆகியோரும்
அடங்குவர். (நான் நபியவர்களிடம் அது குறித்து தெரிவித்தபோது) நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள், ‘முஆவியா வசதி குறைந்தவர்; ஏழை. அபூஜஹ்மிடம்இ
பெண்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் சுபாவம் உள்ளது. (அல்லது பெண்களை
அடித்து விடுபவர் என்பதைப் போன்று.) மாறாக, நீ உசாமா பின் ஸைதைப்
பிடித்துக்கொள்’ என்றார்கள். ஆதாரம் : முஸ்லிம் 2965         

13.          நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கொண்ட


நேசம்:

முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி


வஸல்லம் அவர்களின்  லுங்கி, சட்டை, மேலாடை, சில திருமுடிகள், நகங்கள் இருந்தன.
முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் உயிர் பிரியும் நேரத்தில் நபிகள்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சட்டையால் என்னை
கபனிடுங்கள், மேலாடையால் என்னை சுற்றி லுங்கியை எனக்கு உடுத்துங்கள். எனது
கன்னத்திலும், நெற்றியிலும் அண்ணலாரின் திருமுடியையும், நகங்களையும் வையுங்கள்.
எனக்கும் அர்ஹமுர் ராஹிமுனுக்குமிடையே நேசத்தை ஏற்படுத்துங்கள் என்று கூறினர்.
(நூல்: இக்மால் பக்கம் 617)

14.          இஸ்லாமிய கிலாபத்தின் மீதும் அலி நாயகத்தின் மீதும் உள்ள நேசம்:   

அலி(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு)


அவர்களுக்கும் முரண்பாடுகள்  நிலவின. அவ்விருவரும்  இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின்
இரு வேறுபகுதிகளை ஆட்சி  செய்து வந்தார்கள்.  அப்போது

10/16
இவ்விருவருக்குமிடையிலான முரண்பாட்டை  சந்தர்ப்பமாகப் பயன்படுத்திய ரோம
நாட்டு அரசன் முஆவியா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது எல்லையில் வந்து 
படைகளைக் குவித்த நிலையில்  முஆவியா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு தூது 
அனுப்பி அலி(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க
உதவுவதாகக் கூறினான். அப்போதுகடும்  சினம்கொண்ட முஆவியா(ரழியல்லாஹு
அன்ஹு) அவர்கள் ‘நீ  உனது படைகள் எடுத்துக் கொண்டு உனது நாட்டுக்குத் திரும்பிப்
போகாவிட்டால்

நான் எனது சகோதரர் அலியுடன் உனக்கு எதிராக சமாதானம் செய்து கொண்டு  உன்னை
உனது சகல பிரதேசங்களில் இருந்தும் வெளியேற்றுவேன். அப்போது உனக்கு முன்னால்
விரிந்துள்ள இப்பூமியை உனக்கு நான் சுருக்கிப் போடுவேன்.’ என்றார்கள். 

அது கேட்ட ரோம நாட்டு அரசன் போராட்டத்தை கைவிட்டதுடன் சமாதான


ஒப்பந்தத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தான். (இமாம் இப்னு கதீர், அல்பிதாயா
வந்நிஹாயா,8/119, முஹிப்புத்தீன் அல்கதீப், அல்அவாசிம் மினல் கவாஸிம்)

 இஸ்லாமிய மார்க்கத்தில் நபித் தோழர்களின் சிறப்புகள் பற்றியும் அவர்களின் அந்தஸ்த்து


பற்றியும் அவர்களை குறை சொல்பவர்களின் நிலைபற்றியும் இதன்மூலம் நாம்
அறிந்துள்ளோம். அதேபோல் சஹாபிகளில் ஒருவரான ஹழ்ரத் முஆவியா அவர்களின்
சிறப்பு பற்றியும், அன்னவர்கள் மார்க்கத்திற்கு ஆற்றியுள்ள பணிகள் பற்றியும், நபிகள்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுக்காக கேட்ட துஆக்கள்
பற்றியும், ஹழ்ரத் அலி நாயகத்திடம் கொண்ட நேசத்தைப் பற்றியும் மேற்சொன்ன
ஹதீதுகளிலிருந்து தெரிய வருகிறது.

இக்கட்டத்தில் தென்னிந்தியா சென்னை கோவளம் சர்க்கார் என்பவர் பேசிய பேச்சுக்கள்


எவ்வளவு பாரதூரமானவை, நமது ஈமானை எந்தளவிற்கு கெடுத்து வழிகேட்டிற்கு இட்டுச்
செல்லக் கூடியவை என்பது துலாம்பரமாக தெரிகிறது.

அவர் சொன்ன சொற்களில் உண்மையுள்ளதா? எமது ஷெய்குமார்களில் ஒருவரான


ஹழ்ரத் ஷாஹ் முஹத்திஸ் அப்துல் அஜீஸ் திஹ்லவி பதாவா அஜீஸியில் அவர்
சொன்னபடி சொல்லியிருக்கிறார்களா? என்று பார்க்கும் போது…

பதாவா அஜீஸியின் நகல்

அதன் மொழியாக்கம்:

கேள்வி: ஹழ்ரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு மற்றும்


மர்வானை விமர்சிப்பது இடிந்துரைப்பது பற்றிய
அஹ்லுஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் ஆதார நிலைபாடு
என்ன?

பதில்:

அஹ்லுபைத்தினரை நேசிப்பது ஈமானின் கடமைகளில்


நின்றுமுள்ளது. ஸுன்னத்தின் அடிப்படையைச் சார்ந்ததல்ல.
மர்வானை சபிப்பது அஹ்லுபைத்தின் நேசத்தைச் சார்ந்ததே.
மனதால் அவனை வெறுக்க வேண்டும். குறிப்பாக ஹழ்ரத்

11/16
இமாம் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு மற்றும் அஹ்லுபைத் குடும்பத்தினர்களுடன்
அவன் (மர்வான்) மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டான். அவர்கள் மீது அவன் துவேசம்
கொண்டிருந்தான். இக்காரணங்களால் அந்த ஷைத்தானை மிகவும் வெறுக்க வேண்டும்.

ஆனால் ஹழ்ரத்முஆவியா ரழியல்லாஹு அன்ஹு இப்னு அபூ ஸுப்யான்


ஸஹாபியாகவும் இருக்கிறார்கள். அவர்களின் சிறப்பு குறித்து ஹதீதுகளும் பதிவாகி
இருக்கின்றன. அவர்கள் குறித்து அஹ்லு சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களிடம்
அபிப்பிராயப்பேதம் உள்ளது.

மாவராவுன் நஹ்ர்; உலமாக்கள்,முஃபஸ்ஸிரீன்கள் மற்றும் ஃபுகஹாக்கள் கூற்றின்படி,


ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களோடு ஹழ்ரத் முஆவியா ரழியல்லாஹு
அன்ஹுவின் செய்கைக்கும் மோதல் போக்கு ஏற்பட முக்கிய காரணம், ஹழ்ரத் முஆவியா
ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆய்வின் தவறுகளால் விளைந்தவை.

ஹதீது கலை வல்லுனர்கள் கோர்வை செய்த வரலாற்று  சம்பவங்களைக் கொண்டு


நிறுவுவது என்னவெனில், இந்த செய்கைகள் மனோஇச்சைகளால் ஆனவை.

உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் விசயத்தில் உமய்யாக்கள் மற்றும் குறைஷிகள்


கொண்டிருந்த வன்மத்தின் காரணத்தால் ஹழ்ரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு
அவர்களால் இச்செய்கைகள் நிகழ்ந்தன என்ற குற்றச்சாட்டும் எழுகிறது என்பதன்
தீர்மானத்தின் அடிப்படையில் அவர் பெருங்குற்றவாளி மற்றும் கிளர்ச்சியாளர் என
கருதப்படுவார்கள்.

அதாவது ஃபாஸிக் (பெருங்குற்றவாளி) சபிக்கப்பட மாட்டார். ஆக விமர்சனம் என்பதின்


நோக்கம் அந்த செயல்களை இடிந்துரைப்பதாகும்ஃ எண்ணுவதும் ஆகும்.

சந்தேகமின்றி இதன் ஆதாரம் அறிஞர்கள் நன்கறிந்தவர்கள்.

மாறாக இடிந்துரைப்பது என்பதன் அர்த்தம் லஃனத் (சபிப்பது) என கொண்டால்


மஆதல்லாஹ் (அல்லாஹ் பாதுகாப்பானாக)அஹ்லுஸுன்னத் வல் ஜமாஅத்தினர்
அதைவிட்டு (இடிந்துரைப்பதை விட்டும்,சபிப்பதை விட்டும்) விலகியே இருக்க
வேண்டும்.

பெரும்பாவியின் பொருட்டு இஸ்திக்பார் (பாவமன்னிப்பு) செய்வதே ஸுன்னத் வல்


ஜமாஅத்தின் ஏவலாக இருக்கிறது. சபிப்பது ஹராமாக இருக்கிறது.

குறிப்பாக ஹழ்ரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹாபியாக இருப்பதால்


கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆவியா
ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பரிந்துரைக்கவும் அதிகம் பாத்தியப்பட்டவர்களாக
இருக்கிறார்கள். மேலும் இந்த விசயத்திற்கு உரியவர்களான அலி முர்தளா ரழியல்லாஹு
அன்ஹு அவர்கள் ஹழ்ரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை விட்டுக்
கொடுத்து மன்னிக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

 குறிப்பு : 1. காயல்பட்டணம் சூபி ஹழ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின்


சில்சிலாவில் வரும் முஹத்திஸ் ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி ரழியல்லாஹு அன்ஹு
அவர்களின் ஃபதாவா அஜீஸியா வில் எங்கெல்லாம் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு

12/16
அவர்களின் பெயர் வருகிறதோ அங்கெல்லாம் ரலியல்லாஹூ அன்ஹு என்று
கூறப்பட்டுள்ளது.

மேலும் அலி ரலியல்லாஹு அன்ஹு என்றும்   கர்ரமல்லாஹு வஜ்ஹஹு என்றும்


 கூறப்பட்டுள்ளதே தவிர அலி அலைஹிஸ்ஸலாம் என்று கூறப்படவில்லை.

தீர்ப்பிலும் தெளிவாக முஆவியா ரலியல்லாஹூ அன்ஹு அவர்கள் சஹாபி என்று


கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர்களை பழித்து பத்வா செய்வது ஹராம் என்றும்,

விமர்சித்து பழி சுமத்தும் இந்த கூட்டத்தை விட்டு அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர்
தள்ளி இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2. மனோ இச்சைகளால் நிகழ்ந்தவை, பெருங்குற்றவாளி மற்றும் கிளர்ச்சியாளர் என்ற


வார்த்தைகள் கூட ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய
வார்த்தை இல்லை. பிற அறிஞர்களின் கூற்றையே எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

ஹழ்ரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களால் இச்செய்கைகள் நிகழ்ந்தன என்ற


குற்றச்சாட்டும் எழுகிறது என்று தான் இருக்கிறது.

இது குற்றச்சாட்டு என்றுதான் கூறியுள்ளார்கள். உண்மையில் நடந்ததாக கூறவில்லை.


அந்தக் குற்றச்சாட்டை வன்மத்தின் காரணமாக என்றும் குறிப்பிடுகின்றனர்.

எனவே பொதுமக்கள் இவருடைய விஷயத்தில் மிகக் கவனமாக இருக்கும்படி


கேட்டுக்கொள்கின்றோம்.

இமாம் அலி நாயகம் – ஹழ்ரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹுமா விசயம் பற்றி


இமாம்கள் மற்றும் இறைநேசர்கள்:

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒருவர் வந்து,


நபித் தோழர் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிறந்தவரா? அல்லது உமர்
இப்னு அப்துல் அஜீஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சிறந்தவரா? என்று கேட்டபோது, ‘நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஹழ்ரத் முஆவியா கலந்து கொண்ட
போரில் அவர்களின் வாகனம் கிளப்பும் புழுதிமண் ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ்
அவர்களை விட சிறந்ததாகும் என்று பதில் கூறினார்கள். – இப்னு அஸாகிர்.

குத்பு நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது குன்யத்துத் தாலிபீன் என்ற


கிரந்தத்தில் 178 ஆவது பக்கத்தில்

இமாமே ஹைதர் அலி நாயகம் – இமாம் முஆவியா மற்றும் அன்னை ஆயிஷா


ரழியல்லாஹு அன்ஹும் ஆகிய இவர்களுக்குள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும்
பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டாம். ஸஹாபாக்களுக்கு உரிய மரியாதையைக்
கொடுக்க வேண்டும். அவர்களுக்கிடையில் உள்ள கருத்து வேறுபாடுகளை
அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுங்கள் என்கின்றனர்.

இமாம் கஸ்ஸாலி மற்றும் அஹ்லுஸ்ஸுன்னாவின் நாதாக்களின் கருத்துவும் இதுவாகவே


இருக்கிறது.

13/16
அலைஹிஸ்ஸலாம் யாருக்கு சொல்ல வேண்டும்?

புகாரிஷ் ஷரீபில் இமாமுனா அலி நாயகம், இமாமுனா ஹஸன்,ஹுஸைன் நாயகம்


ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோர்களின் பெயர்கள் பின்னால் ரழியல்லாஹு அன்ஹு
என்றே விளிக்கப்பட்டுள்ளது இந்த நபருக்குத் தெரியவில்லை போலும்.

நபிமார்கள் திருப்பெயர்களை சொல்லும் போது மட்டும் அவர்களை


கண்ணியப்புடுத்துவதற்காக ‘அலைஹிஸ்ஸலாம்’ என்று சொல்ல வேண்டும். இது
அவர்களுக்கு சொந்தமாக்கப்பட்டது. அவர்கள் அல்லாதவவர்களின் பெயர்களுக்குப்
பின்னால் ‘ அலைஹிஸ்ஸலாம்’ என்று சொல்லக் கூடாது. ரழியல்லாஹு அன்ஹு, அல்லது
ரஹிமஹுல்லாஹு அல்லது ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்றுதான் சொல்ல வேண்டும்.
அலைஹிஸ்ஸலாம் என்று சொல்வது வழிகெட்ட ராபிழ்கள், ஷியாக்கள் சில
இமாம்களுக்கு உண்டாக்கிய வழக்கமாகும். அதை பின்பற்றி நாம் சொல்லக் கூடாது.

ஆதாரம்: கிதாபுஷ் ஷிபா பாகம் 2, பக்கம் 83

குர்பே ஹக் அல்ல குர்பே பாத்தில்… 

சதக்கத்துல்லாஹ் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இமாமான சட்டக்கலை


வல்லுனர் இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்  இமாம் அலி ரலியல்லாஹு
அன்ஹு அவர்களுக்கும் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும்  இடையே
நடந்த சம்பவங்களைப் பற்றி எதுவும் பேசக்கூடாது என்று கூறி இருக்கிறார்கள் .இதை
மாப்பிள்ளை லெப்பை இமாமுல் அரூஸ் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
தங்களுடைய மஃஆனி ஷரீப் எனும் கிதாபில் உறுதி கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
என்ற ஈமானுடைய பாடத்தில் 39 ஆவது பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள் .

மேலும் இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இவர்கள் இரண்டு


பேருக்கும் மத்தியில் நடந்த விஷயங்களை பேச வேண்டாம் என்று தடை
செய்திருக்கிறார்கள் எனவே சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை சார்ந்தவர்கள் இதுபற்றி
அமைதியாக இருக்க வேண்டும் எதுவும் பேசக்கூடாது முஆவியா ரலியல்லாஹு அன்ஹு
அவர்கள் சஹாபி என்பதால் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஸஹாபாக்களை
திட்டக் கூடாது என்ற கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
பொன்மொழியை ஏற்று நடக்க வேண்டும்.

கிதாபின் பிரதி

மேலும் இதோ மேலே காணப்படக்கூடிய  இந்த கிதாபின் பெயர் தத்ஹீருல் ஜினானி வல்
லிஸான் …..இந்த கிதாபை இமாம் இப்னு ஹஜர் மக்கி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 
கோர்வை செய்து இருக்கிறார்கள்.

முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி தவறாக பேசுவதை விட்டும்


நாவையும் உள்ளத்தையும் பரிசுத்த படுத்திக்கொள்ளுதல் என்ற பெயரிலேயே கிதாபை 
கோர்வை செய்திருக்கிறார்கள்.

இந்த கிதாபை இமாம் இப்னு ஹஜருல் மக்கி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்திய


தேசத்தை அந்த காலத்தில் ஆண்ட மன்னரான முகலாய மன்னர் ஹூமாயூன் அவர்கள்
தன்னிடத்தில் விளக்கம் கேட்டதற்காக வேண்டி எழுதிக் கொடுத்தார்கள் என்று அந்த

14/16
கிதாபில் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது .அந்த மன்னரின்
காலத்தில் வாழ்ந்தவர்களில் சில குழப்பவாதிகள் முஆவியா
ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு சஹாபியாக
இருக்கக்கூடிய நிலையில் அவர்களை ஏசி பேசுகிறார்கள்.
இவ்வாறு செய்வது குறித்து நமது கொள்கை என்ன என்பதை
பற்றி விளக்கமாக எழுதி தரவேண்டும் என்று ஹூமாயூன்
மன்னர் கேட்டுக்கொண்டதற்காக

இப்னு ஹஜர் மக்கி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த கிதாபில்


விளக்கம் செய்திருக்கிறார்கள். இதைப் பார்த்து தெளிவடைந்து
கொள்ளவும். ஸஹாபியை திட்ட கூடியவர்கள் யாராக
இருந்தாலும் அவருடைய வழி தப்பானது என்று தெரிந்து
அவர்களை விட்டும் விலகிக் கொள்ளவும்.

நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்


கூறினார்கள்:

எனது தோழர்களை விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 


எனக்குப்பின் அவர்களை உங்களது பேச்சுக்கு ஆளாக்கிக்
கொள்ளாதீர்கள். எவர் அவர்களை நேசிக்கின்றனரோ அவர் என்னை விரும்புவதாலேயே
அவர்களை நேசம் கொண்டார். இன்னும் அவர்களை கோபிப்பவர்கள் என்னைக்
கோபிப்பதாலேயே அவர்களைக் கோபித்தனர். அவர்களுக்கு நோவினை செய்வோர்
என்னையே நோவினை செய்கின்றனர். எவன் என்னை நோவினை செய்வானோ, அவன்
அல்லாஹ்வை நோவினை செய்தவனாகும். அல்லாஹ்வை நோவினை செய்பவன்
சமீபத்தில் வேதனை அளிக்கப்படுவான்.(ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் முகப்பல்
(ரலியல்லாஹு அன்ஹு)

திர்மிதி 3797, மிஷ்காத்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களை நாம் அன்பு


வைப்போம். அவர்களை அன்பு கொள்வதில் எவர் விசயத்திலும் எல்லை மீற மாட்டோம்.
அவர்களில் எவர்களை விட்டும் ஒதுங்கிக் கொள்ளவும் மாட்டோம். அவர்களை
கோபிப்போரை நாமும் கோபிப்போம். அந்த தோழர்களை நேசிப்பது சன்மார்க்கமும்
விசுவாசமும் நன்முறையில் நடப்பதும் (இஹ்ஸான்) ஆகும். ஆவர்கள் மீது பகைமை
கொள்வது குப்ர் (நிராகரிப்பு) நிபாக் (நயவஞ்சகம்) துக்யான் (வரம்பு மீறல்) ஆகும். –
அகீதத்துத் தஹாவிய்யா பக்கம் 467

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அன்னாரின்


குடும்பத்தாரையும் உண்மையாக நேசிக்கிற எவரும் அன்னாரின் உத்தம சஹாபாக்களை
கண்ணியக் குறைவுபடுத்தியோ, திட்டியோ இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை. நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்கும் எவரும் அன்னாரின் கூற்றிற்கு
மாற்றமாக செயல்படமாட்டார். வழிகெட்ட கொள்கையுடைய ஷியாக்காரர்களைத் தவிர.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிக்கும் எவரும் அன்னாரின்


கூற்றிற்கு மாற்றமாக செயல்படமாட்டார். இவர் யார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்

15/16
மேலும், பாருங்கள்! எந்த அஹ்லுஸ் ஸுன்னா இமாமும், அறிஞர்களும் சொல்லாத புதிய
வார்த்தை ஒன்றை இவர் சொல்கிறார். முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
ஸஹாபிதான். ஆனால் நிஃபாக் ஸஹாபி என்கிறார். இது அவர் எந்த கிதாபிலிருந்து, எந்த
அறிஞர் பெருமக்களிடமிருந்து எடுத்துச்சொன்னார் என்று தெரியவில்லை. நபிகளார்
காலத்தில் நயவஞ்சகர்கள் – முனாபிக்குகள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இவர் சொன்ன
மாதிரியான புதுவிளக்கமுள்ள நிஃபாக் ஸஹாபி?? அஸ்தஃபிருல்லாஹ்! இந்த கேடுகெட்ட
கொள்கைக் கொண்டவரிடமிருந்தும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!

நாங்கள் அலியத்துல் காதிரிய்யா ஸில்ஸிலாவை பின்பற்றி எங்கள் ஸெய்குமார்களை


பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஷெய்குமார்கள் மற்றும் அன்னாரது கலீஃபாக்கள் யாரும் இதுமாதிரி கேடுகெட்ட


ஷியாக் கொள்கையை எங்களுக்குப் போதிக்கவில்லை. எங்கள் ஷெய்கு நாயகம்
காயல்பட்டினம் ஸூபி ஹழ்ரத், ஹைதராபாத் ஸூபி ஹழ்ரத் நாயகம், இஸ்மாயீல் ஸூபி
நாயகம், ஷாஹ் வலியுல்லாஹ், ஷாஹ் அப்துல் அஜீஸ் திஹ்லவி, ஷாஹ் அப்துர் ரஹீம்
திஹ்லவி, கௌது நாயகம் ரழியல்லாஹு அன்ஹும் போன்ற நாதாக்கள் மூலம் எமது
தொடர் போய்  இறுதியில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
வரையுள்ள ஷெய்குமார்கள் அனைவர்களின் ஈமானிய பாதுகாப்பு எங்களுக்கு உண்டு.
இந்த வழிதவறிய கொள்கைகளை ஆதரிக்கவும், ஏற்கவும் மாட்டோம்.

முடிவு:

வழிதவறி தடம் புரண்ட ஷியாக்கள் கூறுவதைப் போன்று ஹழ்ரத் முஆவியா


ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தவறான நடைமுறைகள் எதுவும் இருக்கவில்லை.
மாறாக நல்ல விளக்கமுள்ள பெரும் நபித் தோழர்களில் ஒருவராகவே அவர்கள்
இருந்துள்ளார்கள்.

ஆட்சி செய்வதில் மிகவும் திறமையானவராக இருந்திருந்திருக்கிறார்கள். அந்த


திறமையைக் கொண்டு 20 வருடங்கள் சிரியாவை ஆண்டிருக்கிறார்கள். இவர்கள்
ஆட்சியில் அரசுக்கு எதிராக எவ்வித கிளர்ச்சியும் ஏற்பட்டதாக வரலாறு பதியவில்லை.

ஆக நபிகளாரின் உற்றத் தோழராக இருந்து மார்க்கத்திற்காக சேவையாற்றிய உத்தம


சஹாபாக்களையும், குறிப்பாக ஹழ்ரத் முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களையும்
போற்றுவோம். நேசம் வைப்போம்.

வல்ல நாயன் இந்தப் போலி வேசம் போடும் கள்ள ஷெய்குமார்களை விட்டும், வழிகெட்ட
கொள்கை கொண்ட ஷியா, காரிஜிய்யாக்களை விட்டும் நம் அனைவர்களையும்
பாதுகாப்பானாக. பி ஹக்கி செய்யிதினா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

16/16

You might also like