You are on page 1of 3

நபி (ஸல்) அவர்களின் நற்குணங்கள்:-

இன்றைய சூழலில் ஒரு மனிதன் மக்களுடைய பிரியத்திற்கு உரியவனாகிறான்


மக்களுடைய புகழை பெறுகிறான் என்று சொன்னால் அவனிடத்தில் மூன்று
தன்மைகள் இருக்க வேண்டும். 1.அவன் செல்வந்தனாக இருக்க வேண்டும்.
2.அரசியல்வாதியாக இருக்க வேண்டும். 3.கல்வி கற்றவனாக இருக்க வேண்டும். இந்த
மூன்று தன்மைகளில் ஏதாவது ஒன்று அவனிடத்தில் இருந்தால் தான் அவன்
மக்களுடைய பிரியத்தையும்,புகழையும் பெறுவான்.

ஆனால் இந்த தன்மைகளில் எதுவும் இல்லாமல் ஒரு மனிதர் மக்களுடைய


பிரியத்தையும்,புகழையும் பெற்றார் என்று சொன்னால் அது நமது கண்மணி நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.

எந்த அளவிற்கு அவர்கள் புகழப்பட்டார்கள் என்று சொன்னால் அவர்களை


கொள்வதற்காக காத்திருந்த எதிரிகள் கூட அவர்களை புகழ்ந்தார்கள் காபிர்கள் கூட
பெருமானாரை புகழ்ந்தார்கள். அப்படி புகழ்வதற்கான காரணம் என்ன? வரலாற்றைப்
புரட்டிப் பாருங்கள் அது சொல்லும்! அந்த காரணம் தான் பெருமானார் (ஸல்)
அவர்களின் நற்குணம்.

இன்று இஸ்லாம் இந்த அளவிற்கு உலகத்தில் பரவி இருப்பதற்கான காரணத்தை


எடுத்து பாருங்கள். அல்லாஹுதஆலா குர்ஆனிலே நரக வேதனை தரக்கூடிய
ஆயத்துக்களையும் சொர்க்கத்திலே சுகம் தரக்கூடிய ஆயத்துக்களையும் கூறுகிறான்
இதை பார்த்து மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்களா? இல்லை! மாறாக
அதிகமானவர்கள் இஸ்லாத்தை ஏற்றதற்கான காரணம் பெருமானாரின் நற்குணம்
தான்.

ٍ ِ‫َوِإ َّن َك َل َع َل ٰى ُخلُ ٍق َعظ‬


‫يم‬
நபியே! நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீ து இருக்கின்றீர் என்று அல்லாஹ்
கூறுகிறான். அல்லாஹுவே இந்த அளவுக்கு நபி (ஸல்) அவர்களின் குணத்தை
சிறப்பித்து கூறுகிறான் என்றால் எந்த அளவுக்கு மக்களிடத்திலே அவர்கள்
அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்தி இருப்பார்கள் என்பதை சற்று
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு மனிதன் தெரிந்தோ தெரியாமலோ நம்மிடத்திலே தவறிழைத்து விடுகிறான்


என்று சொன்னால் அவனை பழிவாங்குவதற்காக வேண்டி நமது உள்ளம் எந்த
அளவிற்கு துடிக்கிறது. அவனை அழிப்பதற்காக வேண்டி நமது எண்ணம் எந்த
அளவிற்கு சிந்தித்து கொண்டு இருக்கிறது. ஆனால் பெருமானார் (ஸல்) அவர்களின்
சிந்தனையும் எண்ணமும் இப்படி என்றுமே சிந்தித்தது கிடையாது.

பெருமானார் (ஸல்) அவர்கள் பஜ்ர் தொழுவதற்காக தினமும் ஒரு பாதையில்


வருவார்கள் அவர்கள் வருகின்ற போது ஒரு மூதாட்டி பெருமானாரின் பொன்
மேனியில் குப்பையை கொட்டுவது வழமையாக இருந்து வந்தது. திடீரென ஒரு நாள்
அந்த மூதாட்டி பெருமானார் (ஸல்) அவர்கள் அந்த பாதையிலே வரும் போது
குப்பையை கொட்டவில்லை. பெருமானார் (ஸல்) அவர்கள் ஆச்சரியப்பட்டு
அதற்கான காரணத்தை ஸஹாபாக்களிடத்தில் கேட்டபோது அந்த மூதாட்டி
நோய்வாய்ப்பட்டுக்கிடப்பதாக பெருமானார் (ஸல்) அவர்களுக்கு செய்தி கிடைக்கிறது.
இந்த நேரத்திலே நம்முடைய உள்ளம் மூதேவி இப்படியாவது ஒழியட்டும் என்று
எண்ணும் அவள் மேலும் பலகீ னம் ஆவதற்காக துஆ செய்வோம்.

ஆனால் பெருமானார் (ஸல்) அவர்கள் இரக்க உள்ளம் கொண்டவர்கள் அந்தக்


மூதாட்டியை சபிக்காமல் அவள் வட்டிற்குச்
ீ சென்று அவளுடைய நலனை விசாரித்து
அவளுடைய ஷிஃபாவிற்காக வேண்டி துஆ செய்தார்கள். பெருமானாரின் கையை
அல்லாஹ் வெறுமனே ஆக்கியது கிடையாது.
உடனே அந்த மூதாட்டிக்கு அல்லாஹ் ஷிஃபாவை கொடுத்தான். உடனே அந்த
மூதாட்டி பெருமானரை சந்தித்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு இஸ்லாத்தை ஏற்றுக்
கொண்டார்கள் என்று நமக்கு வரலாறு சொல்லிக் காட்டுகின்றது.

கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் குணத்தை பற்றி அன்னை ஆயிஷா (ரலி)


அவர்கள் சொல்லிக்காட்டுகின்ற போது
‫كان خلقه قران‬
பெருமானார் (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாக இருந்தது என்றார்கள்.

பெருமானார் (ஸல்) அவர்கள் தன்னுடைய வாழ்க்கையை குர்ஆனாக ஆக்கிக்


கொண்டார்கள்.

வாக்குறுதி கொடுப்பதிலும் அதை நிறைவேற்றுவதிலும், உடன்படிக்கை செய்வதிலும்


அதற்கு கட்டுப்படுவதிலும், அமானிதங்களை பாதுகாப்பதிலும், மக்களிடத்தில்
அன்பை காட்டுவதிலும் குர்ஆனில் எப்படி கூறப்பட்டுள்ளதோ அதேபோன்று
பெருமானார் (ஸல்) அவர்கள் நடந்தார்கள். அதனால் தான் பெருமானாரை
கொள்வதற்காக காத்திருந்த எதிரிகள் கூட அவர்களை "சாதிக்" உண்மையாளர் "அமீ ன்"
நம்பிக்கையாளர் என்று அவர்களின் பண்பை அழகு கூறினார்கள்.

அபூ ஜஹல் போன்ற மக்கத்து காபிர்களின் பெரும் தலைவர்களெல்லாம் நாங்கள்


முஹம்மத் கொண்டு வந்துள்ள மார்க்கத்தை தான் மறுக்கின்றோம் முஹம்மதை
அல்ல! என்று கூறினார்கள்.

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் உள்ளம் நோகும்படி தன்னிடம்


நடந்து கொண்டவர்களை கூட மன்னிக்கும் மனம் படைத்தவர்களாக விளங்கினார்கள்.

உஹது யுத்தத்தில் பெருமானாரின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை


கொன்ற வஹ்ஷீ என்பவரையும் மன்னித்தார்கள். மேலும் கொல்லப்பட்ட ஹம்ஸா
(ரலி) அவர்களின் குடலை பிடுங்கி ஈரலை மென்ற அபூசுஃப்யானின் மனைவி
ஹிந்தாவையும் மன்னித்து விட்டார்கள்.

உணவில் நஞ்சை கலந்து தன்னைக் கொல்ல முயன்ற யூதப்பெண்ணையும்


நபியவர்கள் மன்னித்துவிட்டார்கள்.

இந்த அளவுக்கு தன்னை மன கஷ்டத்தில் ஆழ்த்தியவர்களை கூட மன்னித்தார்கள்


என்று சொன்னால் அவர்கள் எப்படிப்பட்ட குணம் படைத்தவர்கள் என்பதை நாம்
விளங்கிக் கொள்ள வேண்டும்.

பெருமானார் (ஸல்) அவர்கள் தன்னை கஷ்டப்படுத்தக்கூடியவர்களிடம் கூட


அன்போடும் பொறுமையோடும் நடந்து கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள்.

ஒரு தடவை ஒரு பாதையின் வழியாக நாயகம் (ஸல்) அவர்கள் சென்று


கொண்டிருந்தார்கள். அந்த சமயத்திலே யூத மதத்தை சார்ந்த ஒருவர் நாயகத்தை
முஹம்மதே! என்று அழைத்தார் நபி (ஸல்) அவர்கள் அவன் அருகில் சென்று தன்னை
அழைத்ததற்கான காரணத்தை கேட்டார்கள். அதற்கு அவர் ஒன்றும் இல்லை என்று
கூறினார். நபி (ஸல்) அவர்கள் அமைதியாக அவரை விட்டும் சற்று தூரம் கடந்து
செல்கிறார்கள். மறுபடியும் அவர் முஹம்மதே! என்று அழைத்தார் மீ ண்டும்
பெருமானார் (ஸல்) அவர்கள் அவர் அருகில் சென்று அழைத்ததற்கான காரணத்தை
கேட்க அப்போதும் அவர் ஒன்றும் இல்லை என்று கூற பொறுமையோடு நபி (ஸல்)
அவர்கள் திரும்பி செல்கிறார்கள். மூன்றாவது முறையாக பெருமானார் (ஸல்)
அவர்கள் அவன் கண்ணுக்கு எட்டக்கூடிய தூரத்தை விட்டு கடக்க கூடிய சமயத்திலே
மீ ண்டும் முஹம்மதே! இன்று அழைத்தான் நபி (ஸல்) அவர்கள் அவனிடத்தில் வந்து
அழைத்ததற்கான காரணத்தை கேட்க அவன் அதற்கும் ஒன்றும் இல்லை என்று
கூறினான்.

சகோதரர்களே! இந்த இடத்திலே சிந்தித்துப் பார்க்க வேண்டும் நம்மை ஒருவன் இப்படி


கேலி செய்தால் அவன் மீ து நம் உடைய கோபம் எப்படி இருக்கும்? அவனிடத்தில் நாம்
எப்படி நடந்து கொள்வோம். ஆனால் அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த அன்பே
உருவான அண்ணலம் பெருமானார் (ஸல்) அவர்கள் யார் இஸ்லாம் பரவுவதற்கு
முக்கிய காரணமாக இருந்தார்களோ அவர்களை படைக்கவில்லையென்றால் இந்த
உலகத்தையே படைத்திருக்க மாட்டேன் என்று அல்லாஹ் கூறினானோ அப்படிப்பட்ட
அன்னலம் பெருமானார் (ஸல்) அவர்கள் இப்படி தன்னிடத்தில் மரியாதை இல்லாமல்
தன்னை கேலி செய்தவனிடம் கூட தன்னுடைய பொறுமை குணத்தை காட்டி
அங்கிருந்து சென்று விட்டார்கள். அதற்குப் பிறகு அந்த யூதன் நபி (ஸல்)
அவர்களுடைய சமூகத்திற்கு சென்று தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு நான்
உங்களைப் பற்றி தௌராத் வேதத்திலே படித்திருக்கின்றேன் இறுதியாக ஒரு தூதர்
வருவார் அவர் இன்ன இன்ன தன்மைகளைப் பெற்றிருப்பார் அவர் பொறுமை உள்ளம்
கொண்டவராக இருப்பார் என்று எழுதி இருக்கிறது அதனால் தான் உங்களுடைய
பொறுமையை சோதிப்பதற்காக இவ்வாறு நடந்து கொண்டேன் தவ்ராத் வேதத்தில்
உள்ள விஷயங்களை விட உங்கள் குணம் மிகச் சிறந்ததாக இருக்கிறது என்று கூறி
அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

இப்படி தன் அழகிய நற்குணத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நபர்களை


இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்தார்கள்.

எனவே அவர்களின் வாழ்வை ஒரு அழகான முன்மாதிரியாக நாம் எடுத்துக் கொண்டு


நாமும் அழகான நற்குணத்தோடு வாழ்வோம் வல்ல நாயன் அல்லாஹுததஆலா நம்
வாழ்வை பொருந்தி கொள்வானாக ஆமீ ன் ஆமீ ன் யாரப்பல் ஆலமீ ன் !..

மௌலவி A.அஹ்மது ஆலிம் அஸ்ஹரி


இமாம்,முன ீருல் இஸ்லாம் ஜும்ஆ பள்ளிவாசல்,
வரகனூர்,

சேலம் மாவட்டம்.

You might also like