You are on page 1of 3

……….. ……………………..…..

…தமிழ் இரண்டாம் மொழி -(2023-2024)


………………. தமிழ் பயிற்சித்தாள்

வகுப்பு:8
…………………..மதிப்பெண்கள்:10

I.கீ ழ்க்கண்ட வினாக்களுக்குரிய விடையை தேர்ந்தெடுத்து எழுதுக:6×½=3

1..அமெரிக்காவில் பூஜே சவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள்


—----------------
பழங்குடியினர்.
அ)மக்காய்ஸ்
ஆ)சுகுவாமிஷ்
இ)செனட்டில்

2. —-----------------களில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம் மக்களின்


வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூர்பவை.
அ) ஆறு
ஆ) ஏரி
இ) குளம்
ஈ) ஊற்று

3. ------------------ பெருந்தலைவர் செவ்விந்தியர்களின் நிலங்களை வாங்க


விருப்பம் தெரிவித்து இருந்தார்.
1. நியூயார்க்கின்
2. சிட்னியின்
3. வாஷிங்டனின்

4.செவ்விந்தியர்கள் தங்கள் நிலத்தை---------------ஆக மதித்தனர்.


1. தந்தை
2. தாய்
3. சேய்

5. எமது மக்கள் இந்த பூமியை எப்போதும் -------------------------.


1. நினைப்பதில்லை
2. மறப்பதேயில்லை
3. வெறுப்பதேயில்லை

6. உங்களுடைய கோரப்பசியானது இப்பூமியைக் கொன்றழித்துப் பாழாக்கி


அதனைப் —------------ஆக்கிவிடும்.
அ) பாலைவனம்
ஆ) சோலை
இ) காடு

II. கீ ழ்க்கண்டப் பாடலைப் படித்துப் பொருளுணர்ந்து அதனைத் தொடர்ந்து


வரும் வினாக்களுக்கு ஏற்ற விடையளி : 3×1=3

தெத்துக்காடு காளப்பநாயக்கன்- பட்டியிலே


செத்திருந்த ஆடுமாடு மெத்தவுண்டாம்
சித்தர்கள் பொருந்திவாழும்- கொல்லிமலை
சேர்ந்திருந்த நாடெல்லாம் காத்தடிச்சுதே

வினாக்கள்:

1. ஆடு, மாடுகள் எவ்வூர்களில் எல்லாம் இறந்தன?


2. சித்தர்கள் வாழும் மலை எது?
3. இப்பாடலின் தலைப்பு யாது?

III. பின்வரும் உரைநடைப் பத்தியைப் படித்து பின்னர் கேட்கப்பட்ட


வினாக்களுக்கு விடையளி: 4×1=4

தாவரங்கள் இயற்கைச் செல்வங்களுள் ஒன்று. இத் தாவரங்களினால்


மனிதர்களும், பிற உயிர்களும் அடையும் பயன்கள் அநேகம். தாவரங்கள்
இல்லையேல் கணக்கற்ற விலங்குகளும், புழு பூச்சிகளும் உயிர் வாழ
முடியாது. ஏனெனில் யானை, காண்டாமிருகம், பசு, முயல், மான், குதிரை
இவற்றிற்குப் புல் பூண்டுகள், இலைகள் தாம் உணவு.
உலக மக்கள் அனைவருக்கும் உணவாக அமைபவை
தாவரங்களில் இருந்து கிடைக்கும் கோதுமை, அரிசி, சோளம், கம்பு,
கேழ்வரகு போன்ற தானிய வகைகள். நாம் அணியும் ஆடைகளில்
பெரும்பாலானவை தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஆடைகளுக்கு
ஏற்றும் வண்ணச் சாயங்கள் தாவர இலைகள், பட்டைகள் இவற்றிலிருந்து
கிடைக்கின்றன. சில தாவரங்கள் மருந்துப் பொருட்களாகவும்
பயன்படுகின்றன.

வினாக்கள் :

1. தாவரங்களை எவ்வாறு அழைக்கிறோம்?


2. விலங்குகளின் உணவு யாது?

3. தாவரங்களில் இருந்து கிடைக்கும் தானிய வகைகள் யாவை?

4. சாயங்கள் எவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன?

× —----------------------×

You might also like