You are on page 1of 1

தமிழ் இலக்கியம் கட்டுரை

தமிழ் இலக்கியம் உலகின் தொன்மையான மற்றும் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. தமிழ் இலக்கியம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தொடர்ச்சியான வரலாற்றினைக் கொண்டது. பல்வேறு
காலங்களில் தமிழ் இலக்கியம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு தழைத்து ஓங்கி வளர்ந்து
வந்துள்ளது.

மரபு வழியாக நோக்குகையில் தமிழ் மொழியில் சுமார் 96 வகையான நூல் வகைகள் உண்டு.
தற்காலத்தில் மரபு இலக்கியங்களுடன் பல்வேறு புதிய இலக்கிய வகைகளும் சேர்ந்து தமிழ் இலக்கியம்
அகன்று விரிந்து கொண்டே செல்கிறது.

பண்டைக் காலத்தில் இந்தத் தமிழ் மண்ணில் வாழ்ந்த தமிழ் புலவர்கள் காலத்தால் அழியாத மிகச்
சிறந்த நூல்கள் பலவற்றை நமக்கென விட்டுச் சென்றுள்ளனர். தமிழில் நாம் இன்று காணும்
இலக்கியங்களிலேயே மிகத் தொன்மையானவை சங்க இலக்கியங்களே ஆகும்.

தொன்று தொட்ட காலம் முதல் இன்று வரை நாம் காணும் தமிழ் இலக்கியங்களை பின் வருமாறு
வகைப் படுத்தலாம். இந்த இலக்கியங்கள் உருவான கால அளவைஅடிப்படையாகக் கொண்டு
செய்யப்பட்ட இந்த வகைப்பாடு திரு மு. வரதராசரனாரின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில்
காணப்படுகிறது.

பழங்காலத் தமிழ் இலக்கியம்


 சங்க இலக்கியம் (கிமு 300 – கிபி 300 காலத்தில் இயற்றப்பட்டவை)
 நீதி இலக்கியம் (கிபி 300 – கிபி 500 காலத்தில் இயற்றப்பட்டவை)
இடைக்காலத் தமிழ் இலக்கியம்
 பக்தி இலக்கியம் (கிபி 700 – கிபி 900 காலத்தை சேர்ந்தவை)
 காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200 கால அளவிற்குள் இயற்றப்பட்டவை)
 உரைநூல்கள் (கிபி 1200 – கிபி 1500 காலத்தில் எழுதப்பட்டவை)
 புராண இலக்கியம் (கிபி 1500 – கிபி 1800 காலத்தைச் சேர்ந்தவை)
 புராணங்கள், தலபுராணங்கள்
 இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
தற்கால இலக்கியம் – பத்தொன்பதாம் நூற்றாண்டு
 கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
 புதினம்
தற்கால இலக்கியம் – இருபதாம் நூற்றாண்டு
 கட்டுரை
 சிறுகதை
 புதுக்கவிதை
 ஆராய்ச்சிக் கட்டுரை
பண்டைக் காலம் முதல் இன்று வரை தமிழ் இலக்கியம் தன்னிகரற்ற வகையில் வளர்ந்து செழித்து
காலத்தால் அழியாத பற்பல அறிய படைப்புகளை இந்த உலகிற்கு வழங்கி தமிழரது உன்னதமான
பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இந்த உலகிற்குப் பறை சாற்றுகிறது.

You might also like