You are on page 1of 8

ஆமையும் ஆணவக் குதிரையும்

ஒரு சமயம், காட்டில் வாழும் எல்லா மிருகங்களும் ஓர் இடத்தில் ஒன்று திரண்டன.

ஒவ்வொன்றும், தங்கள் திறமைகளைக் காட்டத் தொடங்கின. அவற்றில் சிங்கமும்

புலியும்தான் முன்னணியில் இருந்தன. “என்னை விட பலசாலி வேறு யாரும் இல்லை..!”

என்றது புலி. “இல்லை... இல்லை... இந்தக் காட்டில் நானே பெரும் பலசாலி...!” என்று

மார் தட்டியது சிங்கம். ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்தபாடில்லை. யானையும்,

காண்டாமிருகமும் கூட தங்கள் திறமையைக் காட்டத் தொடங்கின. “எங்களைப் போல

பலமும் பெரிய உடலும் வேறு யாருக்கு உள்ளது..? நாங்களே இக்காட்டில் பெரும்

பலசாலிகள்...!” என வீரம் பேசின அவை. எனவே, ஏனைய சிறு சிறு மிருங்கங்கள்

தங்களின் திறமைகளைப் பற்றிக் கூறிக்கொள்ளத் தயங்கின. அவை எப்படி பெரிய

மிருகங்களோடு போட்டி போட முடியும்...! போட்டியிட்டாலும் தோற்கப்போவது இந்த

அப்பாவி சின்ன மிருங்களே!

குதிரைக்குக்கூட வீரம் வந்து விட்டது. “இக்காட்டில், என்னைவிட பலசாலியும்

அதிவேகமாக ஓடக்கூடிய மிருகம் வேறு ஏதேனும் உண்டா...!” என மார் தட்டியது.

சருகுமான் ஒன்று மட்டும் குதிரையை ஆதரித்துப் பேசியது. பொறுத்துப் பொறுத்துப்

பார்த்தது ஆமை. “இதோ பாருங்கள்..! உங்கள் எல்லாரை விடவும் பலசாலியும்

வேகமாக ஓடக்கூடிய மிருகங்கள் வேறு கிடையாது என்ற நினைப்பில் நீங்கள் எல்லாம்


பேசுகிறீர்கள்...!” என்று சிறிது கடுமையாகப் பேசியது. சற்று பொறுமையிழந்த குதிரை,

“ஆமையே, யார் அப்படிப்பட்ட பலசாலி? தயங்காமல் கூறு. ஒரு வேளை, நீதான் அந்தப்

பலசாலியோ...!” என்று சிறிது ஏளனமாகக் கூறியது.

“குதிரையே, ஓடும் அளவுக்கு என்னால் முடியாது. முயல்தான் வெகு விரைவாக

ஓடும்...!” எனக் கூறியது ஆமை. குதிரைக்கு அவமானமாகப் போய்விட்டது. முயலின்

வேகத்தை அறிந்து கொள்ள ஆசைப்பட்டது குதிரை. முயலோடு ஓட்டப் போட்டியில்

ஈடுபட எண்ணியது. ஆமையும் முயலிடம் சென்று, குதிரையின் திமிரை

அடக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. “முயலே, நீ கண்டிப்பாக ஆணவக்

குதிரையை அடக்கியே ஆகவேண்டும்,” எனக் கூறி முயலை உசுப்பி விட்டது ஆமை.

ஒருவாறாக முயலும் ஆமையின் வேண்டுகோளுக்கு இணங்கியது. “சரி... சரி... இன்று

மாலையே போட்டியை வைத்துக்கொள்வோம்...!” என முயல் உற்சாகமாகக் கூறியது.

குறிப்பிட்ட நேரமும் வந்தது. போட்டி ஆரம்பிக்க இன்னும் சிறிது நேரமே இருந்தது. “

எப்படியும் முயலை வென்றுவிட வேண்டும்...!” எனக் குதிரை கங்கணம்

கட்டிக்கொண்டது. முயலும் அவ்வாறே எண்ணியது. போட்டியைக் காண எல்லா

மிருகங்களும் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடின. போட்டியின் நடுவராக ஆமையே

இருந்தது. போட்டி ஆரம்பித்ததும், குதிரையும் முயலும் அதிவேகமாக ஓட

ஆரம்பித்தன. இரண்டுக்கும் மூச்சு முட்டியது; இரண்டும் மிகவும் களைத்துப் போயின.


இறுதியில், குதிரையே ஓட்டப் போட்டியில் வென்றது. குதிரைக்குத் தலைக்கனம்

கூடியது. முயலும் தன் தோல்வியை ஒத்துக்கொண்டது. ஆனால், ஆமைக்கு மட்டும்

மனத் திருப்தி ஏற்படவில்லை. “அட ஆமையே! நான்தான் இக்காட்டில் உள்ள

மிருகங்களில் எல்லாவற்றையும் விட அதிவேகமாக ஓடக்கூடியவன் எனச் சொன்னேன்;

நீதான் கேட்கவில்லை. பார்த்தாயா, இப்போது...!” எனக் கிண்டலாகக் கூறியது குதிரை.

ஆமைக்கு மனச்சஞ்சலம் ஏற்பட்டது. குதிரைக்குத் தலைக்கனம் எறிவிட்டதை உணர்ந்து

கொண்டது ஆமை. தன் இருப்பிடத்திற்குச் சென்ற ஆமை சிந்திக்கத் தொடங்கியது.

“இக்குதிரையை வெல்ல யாரை அழைக்கலாம்...” எனப் பலவாறாக எண்ணியது ஆமை.

இறுதியில், சுண்டெலிதான் ஆமையின் நினைவில் தோன்றியது.

“ஆமை...! சுண்டெலிதான் பொருத்தமான போட்டியாக இருக்க முடியும்.

அதுதான் அதி வேகமாக ஓடக்கூடியது....!” எனக் கூறிக் கொண்டது ஆமை. பின்னர்,

சுண்டெலி இருக்கும் இடத்திற்கு ஆமை சென்றது; தன் விருப்பத்தையும் கூறியது. சில

மணிநேர முயற்சிக்குப் பின்னர், சுண்டெலியும் குதிரையோடு போட்டிப்போட

ஒத்துக்கொண்டது. “சுண்டெலியே, எப்படியாவது நீ ஆணவக் குதிரையை வென்றே

ஆகவேண்டும்...!” எனக் கேட்டுக் கொண்டது ஆமை. இறுதியாக, சுண்டெலி ஒரே ஒரு

வேண்டுகோளை மட்டும் ஆமையிடம் கூறியது. “இப்போட்டி, இந்த அடர்ந்த

காட்டிலேதான் நடக்க வேண்டும்...!” அனைத்து மிருகங்களும் ஏற்றுக்கொண்டன.


“இந்தக் காட்டிலேதான் நாமெல்லாம் வாழ்கிறோம். எனவே, போட்டி இங்கே

நடப்பதுதான் மேன்மை....!” எனக் கூறியது சுண்டெலி. குதிரையும் சங்கடத்துடன்

ஒத்துக்கொண்டது. போட்டி ஆரம்பமானது. சின்னச் சுண்டெலி அதி விரைவாக காட்டில்

மரங்களுக்கிடையே புகுந்து ஓடியது. பெரிய உடலைக்கொண்ட குதிரையால் சுண்டெலி

போல விரைவாக ஓட முடியவில்லை. இறுதியாக, சுண்டெலி குதிரையைத்

தோற்கடித்தது. குதிரை வெட்கித் தலை குனிந்தது. அன்றிலிருந்து குதிரைக்குத் தான்

என்ற கர்வம் அழிந்தது.

அன்னத்தின் கழுத்து ஏன் நீளமாக உள்ளது?


முன்னொரு காலத்தில், அன்னமும் வாத்தும் நல்ல நண்பர்களாக இருந்தன. அவை

எங்குச் சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்தன. ஆற்றில் நீந்துவதும், வயலில் உணவு

தேடுவதும் அவற்றுக்கு மிகுந்த விருப்பம். அவை சண்டை போட்டுக்கொண்டதே

கிடையாது. அன்னத்திற்கு வாத்தைப்போலவே நீண்ட கழுத்து. ஆனால், அன்னமோ

வாத்தைவிட மாறுபட்டதாக நினைத்துக் கொள்ளும். அன்னம், “ஆங், ஆங், ஆங்!” எனக்

கத்தும். வாத்தோ, “பாக், பாக், பாக்! எனக் கத்தும். ஒரு நாள், அன்னமும் வாத்தும்

ஆற்றங்கரைக்குச் சென்றன. நீண்ட நேரமாகியும் அவை நீந்தவே இல்லை.

நீண்ட நாளாக நான் நீந்தவே இல்லை,” வாத்துக் கூறியது. “இறை தேடிய பிறகு,

நாம் நீந்தலாம். நான் நீண்ட நேரம் நீந்த வேண்டும்.” அன்னம் சொன்னது. அப்படிக்

கூறிவிட்டு “ஆங், ஆங், ஆங்!” எனக் கத்தியது. பின்னர், அவை ஆற்றின் கரைக்குச்

சென்றன. இரைதேடிக் கொண்டே ஆற்று நீரில் நீந்தின. “இங்கு நிறைய தீனி

கிடைக்கவில்லையே!” அன்னம் சொல்லிற்று. “வா, நாம் வேறொரு இடத்திற்குச்

செல்வோம்.” வாத்துக்கு நல்ல பசி. இருந்தாலும், அன்னத்தின் பின்னே தொடர்ந்தது.

ஆற்றின் கரையோரமாகவே அவை நகர்ந்தன. வாத்தோ “பாக், பாக், பாக்.....!” என்றுக்

கத்திக்கொண்டே, மணல் இடுக்குகளில் இரை தேடிக்கொண்டிருந்தது.

“வா, மரவேர்களில் இடுக்குகளில் இரை இருக்கிறதா எனத்தேடுவோம்,”

அன்னம் வாத்தை அழைத்தது. வாத்தோ அன்னத்தைப் பின் தொடர்ந்தது. திடீரென,


மணல் இடுக்கிலிருந்து ஒரு மண்புழு வெளியானது. “அடேயப்பா, பார்த்தாயா அந்தப்

பெரிய மண்புழுவை!” மிகுந்த மகிழ்ச்சியோடு கூறியது வாத்து. நாக்குப் பூச்சியோ,

மரங்களின் இடுக்குகளை நோக்கி நகர்ந்தது. அன்னமும் வாத்தும், அந்த மண்புழுவைப்

பின் தொடர்ந்தன. “சீக்கிரமாக வா, மண்புழு நகர்ந்து வேர்களின் இடுக்குகளில் புகுந்து

கொள்ளப்போகிறது!” கண்டிப்பாக அழைத்தது அன்னம். இறுதியாக, மண்புழு

வேர்களின் மத்தியில் மறைந்துகொண்டது. “இப்போது நாம் என்ன செய்வோம்?”

மிகுந்த ஏமாற்றத்துடன், அன்னத்தை நோக்கிக் கேட்டது வாத்து.

அன்னமோ ஒன்றும் பேசவில்லை. அதன் பார்வையோ மண்புழு மறைந்த

வேர்களை நோக்கியே இருந்தது. மண்புழுவோ விரைவாக நகர்ந்தது. சிறிது நேரத்தில்

அது மறைந்துவிட்டது. அன்னத்திற்கும், வாத்துக்கும் வேர்களில் மறைந்துவிட்ட

மண்புழுவைத் தேடுவது சிரமமாக இருந்தது. “உனது அலகை வேர்களின் இடுக்குகளில்

நுழைத்து நன்றாகத் தேடு,” வாத்து சொல்லிற்று. “வேர்களுக்கு இடையே மண்புழு

வாதியாக மறைந்து கொண்டதே!” அன்னம் கூறியது.” ஆமாம், இன்னும் அப்புழு

மறைந்து கொண்டுதான் இருக்கிறது,” வாத்து சொன்னது “முடியுமானால் அப்புழுவை நீ

பிடித்து விடு....!”

அன்னமோ, வேர்களுக்கு இடையே தன் அலகை நுழைத்துத் தேடியது.

நன்றாகத் தேடினால், நிச்சயமாக அந்த மண்புழு மாட்டிக் கொள்ளும். நல்லவேளையாக


அந்தப்புழு தப்பித்து மறைந்து கொண்டது. “பரவாயில்லை, நான் மீண்டும் தேடுகிறேன்,”

அன்னம் கூறிற்று. தன் கழுத்தை நீட்டி மண்புழுவைத் தேடியது. வேர்களுக்கிடையே

மறைந்து கொண்ட மண்புழுவுக்கு மிகுந்த பயம் எடுத்துவிட்டது. “இம்முறை நான்

நிச்சயமாக இறந்துவிடுவேன்...” முனு முனுத்தது மண்புழு. அது வேர்களின்

இடுக்குகளில் மீண்டும் நன்றாக மறைந்து கொண்டது.

திடீரென மண்புழுவின் காதில் ஓர் ஓசை கேட்டது. “ஐயோ....!” அது

அன்னத்தின் அலறல் ஒலி. ஒரு பெரிய மரக்கிளை, வேர்களின் மேல் தொப்பென

விழுந்தது. அந்த மரக்கிளையோ அன்னத்தின் கழுத்தை நசுக்கியது. “வாத்தோ, என்னைக்

காப்பாற்று....!” அன்னம் அலறியது. “என் கழுத்து மாட்டிக்கொண்டது

எடுக்கமுடியவில்லை...!” அன்னம் எவ்வளவோ முயற்சித்தது, ஆனாலும்

முடியவில்லை. தன் தோழனுக்கு நிகழ்ந்த நிலையைக் கண்டு வாத்துக்கு மிகுந்த

வருத்தம். தன் அலகினால் அந்தக்கிளையை நகர்த்த முயன்றது, முடியவில்லை.

அன்னமோ, தன் கழுத்தை வெளியே இழுத்துப் பார்த்தது; முடியவில்லை, வலி

மட்டும்தான் மிஞ்சியது.

“’அந்தக் கிளையைச் சிறிது நகர்த்திவிடு,” அன்னம் கூறிற்று. வாத்து அந்தக்

கிளையை நகர்த்த முயன்றது. அன்னம் தன் அலகை இழுத்துக் கொண்டது. இறுதியாக,

அன்னம் தன் கழுத்தையும் இழுத்துக் கொண்டது. “வாத்தாரே, மிக்க நன்றி....,” மிகுந்த


மகிழ்ச்சியோடு கூறியது அன்னம். வாத்து, அன்னத்தின் கழுத்தைப் பார்த்தது.

அன்னத்தின் கழுத்தில் ஏதோ மாற்றம் தோன்றியது. அன்னத்தின் கழுத்து நீண்டு

காணப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை அன்னத்தின் கழுத்து நீளமாகவே

இருக்கின்றது.

You might also like