You are on page 1of 2

வரலாற்று இடங்களைச் சுற்றிப் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்

நம் நாடு புகழ்பெற்ற பல வரலாற்று இடங்களுக்குப் பிரசித்திப் பெற்றவையாகும். மலேசிய


நாட்டின் கடந்த காலம் முதல் நிகழ்காலம் வரை ஏற்பட்ட மாற்றங்களைப் பிரதிபலிக்கும் விதமாக
நம் நாட்டில் வரலாற்றை உள்ளடக்கிய பல சுற்றுலா தளங்கள் உள்ளன. அவ்விடங்களுக்குச் சென்று
சுற்றிப் பார்ப்பதால் நமக்கு பல வகையான நன்மைகள் கிட்டும். அழுத பிள்ளை பால் குடிக்கும்
என்கிற பழமொழிகேற்ப நமக்கு தேவையான வரலாற்று அறிவை வளர்ப்பதற்கு நாம் சுற்றுலா
தளங்களுக்குச் செல்வது ஒரு சிறந்த வழிகாட்டியாக திகழ்கின்றது.
மேலும், சுற்றலா செல்வது சிறந்த மகிழிகளில் ஒன்றாகும். பள்ளியில்
மேற்கொள்ளப்படும் வரலாறு தொடர்பான கல்விச் சுற்றுலாவில் பங்கெடுப்பதன் மூலம்
அவர்களின் பொது அறிவு வளர்கிறது எனலாம். இதன் வழி, மாணவர்கள் கிணற்று தவளையாக
இல்லாமல் வரலாறு அறிந்தவராக இந்த உலகில் உலா வர இயலும். மேலும்
அருங்காட்சியகத்திற்குச் செல்வதால் ஆதிகாலத்தில் மக்கள் பயன்படுத்திய பொருள்கள், உடுத்திய
உடைகள், பண்டமாற்ற வணிகம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஒருவருடைய
அறிவு விருத்தி அடைகிறது எனலாம்.
எனவே, வரலாற்று இடங்களைச் சுற்றிப் பார்ப்பதன் மூலம், மாணவர்கள் வேறுபட்ட
மக்களின் கலை, பண்பாடு, விழுமியம், மொழி, கலாச்சாரம், ஒற்றுமை வேற்றுமைகளைக் காண
இயல்கின்றன. இதன் வழி, நாட்டில் உள்ள பல்லின மக்களின் வரலாற்றைக் கரைத்து குடிக்க
முடிகிறது என்பது தின்னமே. உதாரணத்திற்கு, இபான், கடசான், பிடாயு போன்ற மக்களின்
வாழும் இடங்களுக்குச் செல்லும் போது, அவர்களிம் பெருநாள், நம்பிக்கை, வழிபாட்டு
முறைகள் போன்றவற்றை ஆளமாக அறிந்து புரிந்து கொள்ள முடிகிறது. இதுவே நம் நாட்டின்
நல்லிணக்கத்தைப் பேண வழிக்காட்டியாக அமைகிறது எனலாம்.
அதோடுமட்டுமல்லாமல், வரலாற்று தளங்களுக்குச் சுற்றுலா செல்வதன் மூலம், நம்
நாட்டின் நாகரிக வளர்ச்சியின் படிநிலைகளைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதில் கிஞ்சிற்றும்
ஐயமில்லை. மேலும், அவ்விடங்களின் தோற்றம், ஆக்கம் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாக
அறிந்து கொள்ள முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை எனலாம். இதன் வழி,
மாணவர்கள் தங்களின் தற்போதைய வாழ்விலுள்ள தொழில்நுட்ப ஆதிகத்திற்கு நன்றி கூறுவர்
என்பது வெள்ளிடை மலையாகும். எனவே, மாணவர்களுக்கு நம் நாட்டின் மீதான நாட்டுப் பற்று
மேலோங்கச் செய்யும். எனவே, இச்சமுதாயத்தினர் என்றும் நம் நாட்டின் வளர்ச்சிக்குப்
பங்காற்றுவார்கள் என்பது சாத்தியமே.
மேலும், வரலாறு தொடர்பான மாணவர்களின் ஆர்வத்தையும் கற்றலையும்
துரிதபடுத்த வரலாற்று இடங்களுக்குச் சுற்றுலா செல்லுதல் அவசியமாகும். எனவே, மாணவர்கள்
வரலாறு தொடர்பான கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க முடியும் என்பது உண்மையே. இதன்
வழி, பள்ளிகளில் ஆசான்கள் போதிக்கும் பாடங்களைக் கண்ணும் கருத்துமாக மாணவர்கள் கற்க
வழிவகுக்கும். இவ்வகையான வரலாற்று தகவல்களை அறிவதன் வழி, மாணவர்களின் கற்றல்
திறனையும் எழுத்து திறனையும் மேலோங்கச் செய்யும். இம்மாதிரியான விபரங்கள்
மாணவர்களுக்கு வராலாறு பாடங்களில் நல்ல மதிப்பெண்களைப் பெற கைக் கொடுக்கும் எனலாம்.
ஆகவே, வரலாறு அறிந்த மாந்தர்களை உருவாக்க இது ஒரு சான்றாகும்.
ஆகையால், பலதரப்பட்ட வரலாற்று இடங்களைச் சுற்றிப் பார்ப்பதால், எண்ணிலடங்கா
நன்மைகளை அடைய இயலும் என்பது உறுதியே. இதனால், ஒரு நாட்டினுடைய வரலாற்று
தளங்களைப் பேணிப் பாதுகாப்பதன் மூலம், சுற்றுப் பயணிகளின் வருகை ஒரு நாட்டின்
பொருளாதரத்தை உயர்த்தும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

You might also like