You are on page 1of 2

வித்யாரம்பத்தின் முக்கியத்துவம்

24-10-2023 (செவ்வாய்)

--------------

குருதட்சணையின் மகிமை

--------------

குருதட்சணை என்பது நமது கலாச்சாரத்தின் பாரம்பரிய நடைமுறைகளில்


ஒன்று. எந்த ஒரு மாணவரும், தனது குருவுக்கு நன்றியுடனும்,
மரியாதையின் அடையாளமாகவும் செலுத்தப்படுவதே குருதட்சணை.

மாணவர்கள் தங்கள் குருவிடம் இருந்து கலையின் வழிகாட்டுதல்களை


பெற்றுக் கொண்டு, தங்கள் நன்றிக்கடனை வெளிப்படுத்துவது இதன் சிறப்பு.

குருவுக்கு செலுத்தும் காணிக்கையின் மதிப்பைவிட அதன்பின்னால்


இருக்கும் நன்றியுணர்வுதான் முக்கியம்.

குரு தட்சணை கொடுப்பது, மாணவன் குருவுக்குச் செலுத்த வேண்டிய அறிவுக்


கடனைத் திருப்பிச் செலுத்தும் வழிமுறையாகும். மாணவர்கள் தங்கள்
வளர்ச்சியில் குரு ஆற்றும் பங்கை அங்கீகரிப்பதை இதன் மூலம் அறிந்து
கொள்ளலாம்.

மாணவர்-குரு உறவின் முக்கிய அம்சமாக இந்த நன்றிக்கடன்


பார்க்கப்படுகிறது. இந்த பரிமாற்றத்தால் குரு-சிஷ்யன் இருவருமே
பயனடைகின்றனர்.

என்ன கொண்டுவரவேண்டும்?

நாட்டியக் கலையையும், மந்திர உச்சாடனத்தையும் கற்றுக் கொள்ளும்


மாணவர்கள் குருவுக்கு இந்த நாளில் என்ன செலுத்த வேண்டும்?

 தேங்காய்
 மஞ்சள்/குங்குமம்
 வெற்றிலை-பாக்கு
 துளசி இலை
 பழங்கள்- பூக்கள்
 குருதட்சணை

(ஒரு தட்டு அல்லது பேப்பர் பையில் அந்தந்த குழந்தையின் பெயரை


சீட்டில் எழுதி 24 ந் தேதி கொடுக்கப்பட்ட நேரத்தில் சமர்ப்பிக்கவும்.)

என்ன தட்சணை கொடுக்கிறோம் என்பதைவிட, என்ன மனநிலையில்


குருவுக்கு அர்ப்பணிக்கிறோம் என்பது முக்கியமானது. குழந்தைகள்
பாவாடை-சட்டை அல்லது விருப்பமான பாரம்பரிய ஆடையை அணிந்து
வரலாம்.

You might also like