You are on page 1of 1

பாக்கள் எத்தனை வகைப்படும்?

ஒவ்வொரு வகைப் பாவையும் பற்றிச் சிறுகுறிப்பு


எழுதுக

பாக்கள் என்பது நான்கு வகைப்படும். அவை ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா


ஆகும். ஆசிரியப்பா என்பது அகவலோசையைக் கொண்டிருக்கும். இவை ஈரசைச்சீர்களுக்கு
உரியவையாகும். இருப்பினும், காய்ச்சீரில் சிறுபான்மையில் பயன்படுத்தப்படும். ஆனால், கனிச்சீரில்
வராது. ஆசிரியத்தளைக்கு உரியது இந்த ஆசிரியப்பா. ஆசிரியப்பா கொண்டிருக்கும் செய்யுள்
இரண்டிலிருந்து நான்கு அடி வரை இருக்கும் அதற்குமேல் போகாது.

தொடர்ந்து, வெண்பா. செப்பல் ஓசையைக் கொண்டிருக்கும் பா ஆகும். வெண்பா எந்த


வகையான பிழையும் இல்லாமல் இலக்கணத் தூய்மையுடன் பாடப்படுவதாகும். இவை அனைத்து
ஈரசைச்சீர்களையும் காய்ச்சீரையும் கொண்டிருக்கும் செய்யுள் ஆகும். வெண்டளை மட்டும்
கொண்டிருக்கும் செய்யுள் ஆகும். வெண்பா கொண்டிருக்கும் பாடல்கள் குறைந்தது இரண்டு
அடிகள் கொண்டிருக்க வேண்டும்.

அதனையடுத்து, கலிப்பா உணர்வு சார்ந்த கருப்பொருளைக் கொண்டிருப்பதாகும். இது


துள்ளலோசையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த பாவில் விளச்சீரும் காய்ச்சீர்களையும்
பயன்படுத்தலாம். ஆனால், நடுவில் நிரையசைக் கொண்ட எந்த சீரிலும் கலிப்பா வராது. இந்த பா
கலித்தளைக்கு உரியதாகும். இந்த பா கொண்டிருக்கும் பாடல்கள் குறைந்தது நான்கு அடிகள்
கொண்டிருக்க வேண்டும்.

இறுதியாக, வஞ்சிப்பா. வஞ்சிப்பா வஞ்சித்தளைக்கு உரியதாகும். இவை தூங்கலோசையைக்


கொண்டிருக்கும் பா ஆகும். இவை மூன்று பகுதியாக பிரிக்கப்படும். முதற்பகுதி சீரும் தளையும்
பெற்று தூங்கலோசையாக அமைவது. இரண்டாம் பகுதி முதற்பகுதியையும் இரண்டாம் பகுதியையும்
இணைக்கும் தனிச்சீர். மூன்றாம் பகுதி ஆசிரியப்பாவுக்குரிய இறுதி பகுதிபோல் ஏகாரத்தில்
அமைவது.

You might also like