You are on page 1of 1

நிஷாந்தினி புவனெஸ்வரன் (வி9)

இலக்கிய உரையின் தன்மைகள்.

இலக்கிய உரை எனப்படுவது தமிழின் சிறப்புகளையும் பெருமைகளையும் அழகாக


மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பேச்சாகும். உதாரணமாக, வலையொளியில் நான் கண்ட
ஒரு உரையானது, சென்னை இலக்கிய விழாவில் பர்வீன் சுல்தானா அவர்கள் ஆற்றியது.
அவருடைய உரையில் கம்பீரத்தையும் தைரியத்தையும் காண முடிகிறது. மேலும், அவர்
தணிபாணியில் கருத்துகளை மிக ஆணித்தரமாக கூறவார். எடுத்துக்காட்டிற்கு, தமிழைப்
பற்றி எடுத்துரைக்கும் பொழுது ஆழ்வார்கள் எழுதிய பாடல், கவிதை கன்னிகளைப்
புகுத்தியுள்ளார். அவர் சில சமயங்களில் கேட்பவரின் கவனத்தை ஈர்க்க பல
நகைச்சுவைகளை பயன்படுத்தினார். அதுமட்டுமின்றி, ஒரு சிறந்த இலக்கிய உரையாற்ற
நமக்கு இலக்கியங்களைப் பற்றி நன்கு அறிந்திருத்தல் அவசியம். காரணம், நாம் உரையில்
குறிப்பிடும் ஒவ்வொரு விஷயமும் கருத்துகளும் உண்மையானதாக இருத்தல் மிகவும்
அவசியமானது. தொடர்ந்து, அவர் மிகவும் இயல்பான முறையில் அனைவருக்கும் புரியும்
வண்ணம் உரை அளித்தார். இது கேட்பவர்களின் கவனத்தை ஈர்க்க உதவும். எனவே, ஒரு
சிறந்த உரை இத்தகைய தன்மைகளைக் கொண்டிருக்கும்.

You might also like