You are on page 1of 11

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி

உலு ரெமிஸ் தோட்டம்

இளம் ஆய்வாளர்களின்

அறிவியல் விழா 2017

தலைப்பு : உப்பு நீரில்


முட்டை

குழு உறுப்பினர்கள் : ர.ராஜகிருஷ்ணன்

அ.ஹரிபிரியா

சி.நிவேத்தா

மு.கிர்த்தனா

ஆண்டு 3

பொறுப்பாசிரியர்: திருமதி.கி.லெட்சுமி
திருமதி.சு.கவிதா

குழு உறுப்பினர்கள்

ர.ராஜகிருஷ்ணன்

அ.ஹரிபிரியா

சி.நிவேத்தா

மு.கிர்த்தனா

ய.மெல்வின்

ரா.லெட்சுமி
சோதனையின் தலைப்பு : உப்பு நீரில்
முட்டை

பிரச்சனை:-

கடலில் நீச்சல் செய்ததுண்டா? நீச்சல் குளங்களில் நீச்சல்


செய்வதை விட, கடலில் சுலபமாக மிதக்க முடிவதை
நீங்கள் உணர்ந்ததுண்டா? இந்த பரிசோதனையில் மூலம்
அதன் காரணத்தை உங்களால் உணர முடியும். மாறுபட்ட
திரட்டளவு உப்பு நீரைக் கொண்டு முட்டை மிதக்கின்றதா
அல்லது மூழ்கின்றதா என ஆய்வு செய்யவும்.

நோக்கம்

மாறுப்பட்ட திரட்டளவு உப்பு நீரைக் கொண்டு, முட்டை


மிதக்கின்றதா அல்லது மூழ்கின்றதா என ஆய்வு செய்வர்.

உபகரணங்கள்

 உப்பு
 மூன்று முகவை

 கரண்டி

 குழாய் நீர்
 மூன்று முட்டைகள்

இவ்வாய்வில் காணப்படும் 3
மாறிகள்

நிலை மாறி

- நீரின் அளவு, முட்டை, முகவைகளின் அளவு

தற்சார்பு மாறி

- உப்பின் அளவு

சார்பு மாறி

- நீரின் அடர்த்தி
ஆய்வின் வழிமுறைகள்/ நடவடிக்கைகள்

1) A,B,C என்ற மூன்று முகவைகளில் குழாய் நீரை


நிரப்பவும்.
2) B முகவையில் 2 கரண்டி உப்பை கலந்து நன்றாக
கரையும் வரை கரண்டியைக் கொண்டு கலக்கவும்;
பிறகு C முகவையில் 6 கரண்டி உப்பை கலந்து
நன்றாக
கரையும் வரை
கரண்டியைக்
கொண்டு
கலக்கவும்.

3) ஒவ்வொரு முகவையிலும் ஒரு


முட்டையைப் போட்டு, எந்த
முகவையில் உள்ள முட்டை
மிதக்கின்றது மற்றும் எந்த
முகவையில் உள்ள முட்டை மூழ்கின்றது என
கவனிக்கவும்.
பரிசோதனையின் முடிவு

இச்சூழலின் எளிமையான விளக்கம் - அடர்த்தி!


இப்பரிசோதனையில் உப்பு நீரில் போடப்பட்ட முட்டை
மிதப்பதையும் குழாய் நீரில் போடப்பட்ட முட்டை
மூழ்கியதையும் பார்த்திருப்பீர்கள். குழாய் நீரை காட்டிலும்
உப்பு நீரின் உயர்ந்த நிலை காரணமாக முட்டை
பொதுவாக குழாய் நீரில் முழ்குவதைப் போன்று
மூழ்கவில்லை. நீரில் உப்பின் அளவு அதிகரிக்க
அதிகரிக்க முட்டையின் மிதவைத் திறன் அதிகரிக்கிறது.
அடர்த்தி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில்
அடங்கியிருக்கும் பொருளின் அளவை காட்டுகின்றது.
பொருள்களின் அளவு அதிகரிக்கும் போது அதன்
அடர்த்தியும் எடையும் அதிகரிக்கின்றது.

இப்போது ஏன் ஒரு பொருள் மிதக்கின்றது அல்லது


மூழ்கின்றது என்ற கேள்விக்கு
பதில் காண்போம். நீரைவிட
அதிக அடர்த்தி கொண்ட
பொருளை நீரில் போட்டால்
அது மூழ்கும்.
இப்பரிசோதனையில் நீரை விட
முட்டை அதிக அடர்த்தி
கொண்டதால் அது நீரணுக்களை
தள்ளி விட்டு மூழ்கிவிடுகின்றது.
ஆனால், உப்பு நீர் குழாய் நீரை
விட அதிக அடர்த்தியானதால் முட்டையை மூழ்க
முடியாமல் தாங்கிக்கொள்ள முடிகின்றது. ஆதலால்
முட்டை மிதக்கின்றது. நீரின் அடர்த்தியை விட
பொருளின் அடர்த்தி அதிகமாக இருந்தால் அப்பொருள்
மூழ்கிவிடும் என்பது இதன் எளிமயான விளக்கம்.

நீர் முட்டை முட்டை முட்டை


மூழ்கிவிட்ட ஓரளவு மேலாக
து மிதத்தல் மிதத்தல்
குழாய் நீர்
(2 கரண்டி)
உப்பு நீர்
(2 கரண்டி)
உப்பு நீர்
(6 கரண்டி)

You might also like