You are on page 1of 1

தமிழில் எட்டு வகை வேற்றுமைகள் உள்ளன.

கருத்தா (எழுவாய்), செயப்படுபொருள், காரணம்/


கருவி, சேருமிடம், நீங்குமிடம், உடைமை, நிகழுமிடம். விளிப்பொருள் ஆகிய எட்டுப் பொருள்களே
தமிழ்ப் பெயர்ச்சொற்களின் வேற்றுமைகளுக்கு அடிப்படைப் பொருள்கள் (சினி நைனா
முகம்மது.2013), குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைப் பொருள்களை உணர்த்துவதற்காகப்
பெயர்ச்சொற்களின் பின்னால் சேர்க்கப்படும் எழுத்துகளும் சிறு சொற்களும் இந்த
வேற்றுமைகளின் உருபுகள் எனப்படுகின்றன. எழுவாய் வேற்றுமைக்கும், விளி வேற்றுமைக்கும்
உருபு இல்லை; மற்ற ஆறு வேற்றுமைகளுக்கும் உரிய உருபுகள் வழங்கப்பட்டுள்ளன.
வேற்றுமைகளின் வகைகளும் உருபுகளும் கீழ்க்காணும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன
.

அட்டவணை 1.1 : வேற்றுமையின் வகைகளும் உருபுகளும்


வேற்றுமை அடிப்படைப் பொருள் வேற்றுமை உருபுகள்

முதலாம் வேற்றுமை உருபு கருத்தா/ எழுவாய் எழுவாய் வேற்றுமை

இரண்டாம் வேற்றுமை உருபு செயப்படுபொருள் ஐ


மூன்றாம் வேற்றுமை உருபு அ) காரணம் / கருவி ஆல், ஒடு, ஆன், ஓடு உடன்
ஆ) உடனிகழ்ச்சி
நான்காம் வேற்றுமை உருபு சேருமிடம் கு
ஐந்தாம் வேற்றுமை உருபு நீங்குமிடம் இல், இன் இருந்து, நின்று

ஆறாம் வேற்றுமை உருபு உடைமை அது, உடைய

ஏழாம் வேற்றுமை உருபு நிகழுமிடம் இடம், பால், கண்

எட்டாம் வேற்றுமை உருபு விளிக்கப்படுபொருள் விழி வேற்றுமை

* ஏழாம் வேற்றுமைக்குரியது இடப்பொருள் என்பதால், இடத்தைச் சுட்டும் எல்லாம் சொற்களும் ஏழாம்


வேற்றுமை உருபாகலாம்.

You might also like