You are on page 1of 1

ஞா.

பழனிவேலு (2012) 'தமிழ் ) ‘ தமிழ் கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம்’ எனும் மாநாட்டில் ,


கிளையகப் பயிற்று முறையின் மூலம் தமிழ் இலக்கணப் பாடத்தை கற்பித்தல்" என்ற தலைப்பில்
ஓர் ஆய்வுக் கட்டுரையைப் படைத்துள்ளார். இவரது ஆய்வுக் கட்டுரை இலக்கணத்தை ஆய்வுப்
பொருளாகக் கொண்டு அடைக்கப்பெற்றதாகும். கற்பித்தல் என்பது எளிமையிலிருந்து - அருமை
பரிந்ததிலிருந்து புரியாதது, தெரிந்ததிலிருந்து தெரியாதது ஆகியவற்றை நோக்கிப்
படிப்படியான நிலையில் வளர்ச்சியடைவதாகும். இக்கருத்தை மையமாகக் கொடு அமையும்
கற்பித்தல் முறைதான் கிளையகப் பயிற்று முறையாகும். இம்முறையை பின்பற்றி இலக்கணம்
கற்பிக்கும் போது, மாணவர்கள் முழுமையான இலக்கம் ! அறிவை உய்த்துணர்வர். எனவே,
ஆய்வு முடிவில் ஆய்வாளர். அவர்கள் இலக்கணம் கற்பிக்கக் கிளையகப் பயிற்று முறையானது
சிறந்த அணுகுமுறையாகக் கருதப்படுகின்றது என்ற கருத்தை முன் வைக்கிறார். இந்த
ஆய்வுக் கட்டுரையில் புத்தாக்க முறையில் இலக்கணம் கற்பிக்கும் முறை முன் நிறுத்தப்பட்டது.
இதனையே முன்னோடியாகக் கொண்டு, ஆய்வாளர், திருக்குறளை ஒரு புதிய
அணுகுமுறையாகக் கையாண்டுள்ளார்.

மனோன்மணி தேவி அண்ணாமலை (2013), "திரையிசைப் பாடல்கள் வழி குற்றியலுகரம்


கற்பித்தல்" எனும் தலைப்பில் 10 ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஓர் ஆய்வுக்
கட்டுரையைப் படைத்தார். இவர் இலக்கணத்தைக் கருப்பொருளாகக் கொண்டு தமது
கட்டுரையைப் படைத்துள்ளார். தமது கட்டுரையில் திரையிசைப் பாடல்கள் வழி
மாணவர்களுக்குக் குற்றியலுகரம் கற்பிக்கும் முறைகளை வரையறுத்துள்ளார். பாடல்களும் ஒரு
வகை இலக்கியமாகும். அவ்வகையில் இலக்கியத்தைக் கொண்டு இலக்கணம் கற்பிக்கும்
முறையினை இவர் கையாண்டுள்ளார். இந்த முறையையே ஆய்வாளர்

You might also like