You are on page 1of 7

உற்றுநோக்கல், நேர்காணல், முன்னறி சோதனை, பின்னறி

சோதனைப் போன்ற உத்திகளின் மூலம் அடையாளம் காணப்பட்ட

சிக்கலுக்குறிய மாணவர்களுக்கு நான்கு வாரங்களுக்கு ஆய்வாளர்

‘மறுமலர்ச்சி’ பயில்பொருளைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை

மேற்கொண்டார். நடவடிக்கைகளை செம்மையாக நடத்த ஆய்வாளர்

முன்பதாகவே ‘மறுமலர்ச்சி’ பயில்பொருளைத் தயாரித்தார்.

இப்பயில்பொருளானது ஒவ்வொரு எழுத்துக்களாகவும் அதன் கீ ழ்

சொல்லாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், ஒவ்வொரு

எழுத்தையும் அழுத்தியவுடன் ஒலி மூலம் உச்சரிப்பது போலவும்,

சொல்லை அழுத்தியவுடன் அதன் உச்சரிப்பைக் கூறுவதைப்

போலவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், மாணவர்கள்

சொல்லின் பொருளறிய படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர் தனது சுயகுரலினாலும் சில மாணவர்களின் குரலைக்

கொண்டும் இப்பயில்பொருளைத் தயாரித்தார்.

வாரம் நடவடிக்கை
1 • மூவெழுத்து நான்கெழுத்துச் சொற்கள் கொண்ட

பட்டியலைத் தயார் செய்தல்.

• சிக்கல் கொண்ட மாணவர்களை அடையாளம்

காணுதல்.

• முன்னறி சோதனை

• மாணவர் பின்புலனை ஆராய்தல்.

• ‘மறுமலர்ச்சி ‘ பயில்பொருளை அறிமுகப்

படுத்துதல்.

• நேர்காணல்

2 • ஆய்வாளரின் துணையுடன் மாணவர்கள்

மறுமலர்ச்சி பயில்பொருளைப் பயன்படுத்துதல்.

• மூவெழுத்துக் கொண்ட சொற்களைப் பயில்

பொருளின் துணையுடன் வாசித்தல்.

• மாணவர்கள் பயில்பொருளின் ஒலியின்றி

வாசித்தல்.

• மாணவர்களின் நிலையை குறிப்பெடுத்து வைத்தல்.

3 • ஆசிரியர் மாணவர்களுக்கு மறுமலர்ச்சி

பயில்பொருளை வழங்கி பயன்படுத்தப் பணித்தல்.

• நான்கெழுத்து கொண்ட சொற்களை ஒலியின்

துணைக்கொண்டு வாசிக்கப் பணித்தல்.

• ஒலியின் துணையில்லாமல் வாசிக்க செய்தல்.

• மாணவர்களின் வளர்ச்சியைக் குறிப்பெடுத்து

கொள்ளுதல்.
4 • மூவெழுத்து நான்கெழுத்து சொற்களை ஒலியின்

துணையில்லாமல் வாசிக்க பணித்தல்.

• வாசித்த சொற்களை அவர்களேயே ஒலியின்

துணைக்கொண்டு கேட்டு திருத்துதல்.

• பின்னறி

• நேர்காணல்

• கிடைக்கப்பெற்ற தகவல்களை ஆராய்தல்.

அட்டவணை 2 : செயலாக்க அட்டவணை

முதல் வாரத்தில் ஆய்வாளர் மாணவர்களுக்கு மூவெழுத்து

நான்கெழுத்து சொற்களைக் கொண்டப் பட்டியலை தயார் செய்து

வழங்கி வாசிக்கப் பணித்தார். மாணவர்களும் கிடைக்கப்பெற்ற

வாசிப்புச் சொற்களை ஒவ்வெருவராக வகுப்பில் வாசித்தனர்.

ஆய்வாளர் மாணவர்கள் இளைத்த பிழைகளைக் கொண்டு

ஆய்வுக்குட்பட வேண்டிய மாணவர்கள் யாரென்பதை அடையாளம்

கண்டார். ஆய்வுக்குட்பட்ட மாணவர்கள் வாசிக்கும் பொழுது

மூவெழுத்து நான்கெழுத்துக் கொண்ட சொற்களை வாசிப்பதில்

தடுமாற்றத்தை எதிர்நோக்கியது மட்டுமில்லாமல் தவறாகவே

உச்சரிக்கவும் செய்தனர். உதாரணத்திற்கு தேங்காய் என்பதை தேகாய்


எனவும் மோதிரம் என்பதை மோதிம் எனவும் உச்சரிக்கச் செய்தனர்.

இதுவே, ஆய்வுக்குட்பட்ட மாணவர்களைத் தேர்ந்தெடுக்க

வழிவகுத்தது. முன்னறி சோதனையின் வழி மாணவர்கள்

கொடுக்கப்பட்ட சொற்களில் எத்தனையை சரியாக வாசிக்கின்றனர்

என்பதை குறிப்பெடுத்துக்கொள்ளப்பட்டது. அடுத்ததாக, ஆய்வாளர்

‘மறுமலர்ச்சி’ பயில்பொருளை ஆய்வுக்குட்பட்ட மாணவர்களுக்கு

அறிமுகப்படுத்தி வைத்தார். ஆய்வாளர் அய்வுக்குட்பட்ட மாணவர்கள்

‘மறுமலர்ச்சி’ பயில்பொருளை எப்படி பயன்படுத்துவது என்பதை

ஆய்வுக்குட்பட்ட மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

அம்மாணவர்களும் ஆய்வாளார் கூறியதை சரியாக

புரிந்துக்கொண்டனர். மேலும், முதல் வாரத்திலேயெ

வகுப்பாசிரியருடன் நேர்காணல் ஒன்று நடத்தப்பட்டு செயலாய்வுக்கு

உதவியாக இருக்கும் கருத்துக்களை ஆய்வாளர் பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது வாரத்தில் மாணாவர்கள் ஆய்வாளர்

துணைக்கொண்டு பயில்பொருளைப் பயன்படுத்த தொடங்கினர்.

ஆய்வாளார் விசையை அழுத்த மாணவர்கள் எழுத்தின் ஒலியை

ஒலிபெருக்கியின் மூலம் கேட்டு கணினியைப் பார்த்து வாசிக்கச்


செய்தனர். பிறகு, இரண்டாவது வாரத்தில் மூன்றாவது நாள்

மாணவர்கள் சுயமாகவே கணினியை இயக்கி பயில்பொருளை

பயன்படுத்த கைத்தேர்ந்தனர். அவ்வாரத்தில் ஆய்வுக்குட்பட்ட

மாணவர்கள் மூவெழுத்து சொற்களை ஒலியின் துணைக்கொண்டு

வாசித்தனர். மாணவர்கள் அவர்களுக்கு தயார் செய்யபட்டிருந்த

ஐம்பது தொகுப்புச் சொற்களையும் வாசித்தனர், அவ்வார இறுதியில்

மாணவர்கள் ஒலியின் துணையில்லாமல் வாசிக்கச் செய்தனர்.

அவ்வாறு வாசிக்கையில் ஆய்வாளர் அவர்களின் நிலையைக்

குறிப்பெடுத்துக் கொண்டார். இது ஆய்வுக்குட்பட்ட மாணவர்கள்

ஒலியின் துணையிலாமல் எவ்வாறு வாசிக்கின்றனர் என்பதை

அறியவே குறிப்பெடுத்துக்கொள்ளப்பட்டது.

மூன்றாவது வாரத்தில் ஆய்வாளர் மாணவர்களுக்கு

பயில்பொருளை வழங்குவதற்கு முன்னரே மாணவர்களே

தன்னிச்சையாக பயில்பொருளைப் பயன்படுத்த முன்வந்தனர்.

இவ்வாரத்தின் நான்கெழுத்துக் கொண்ட சொற்களை

ஆய்வுக்குட்பட்ட மாணவர்கள் பயில்பொருளைப் பயன்படுத்தி

வாசிக்கச் செய்தனர். மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் ஒலியின்


துணைக்கொண்டு எழுத்துக்கூட்டி வாசித்தனர். அவ்வாரதின்

இறுதியில் ஆய்வாளர் ஆய்வுக்குட்பட்ட மாணவர்களை

பயில்பொருளில் ஒலி இல்லாமல் வழங்கினார். அப்பொழுது

மாணவர்கள் ஒலியின் துணையில்லாமல் வாசிக்கச் செய்தனர்.

உதாரணத்திற்கு அம்மா என்ற சொல்லை ஒலியின்

துணைக்கொண்டு பயன்படுத்தும்பொழுது அச்சொல்லின்

உச்சரிப்பானது விசையை அழுத்தியவுடன் ஒலிக்கச் செய்யும்.

ஆனால், ஒலியின் துணையில்லாமல் வாசிக்கும் பொழுது எந்த ஒரு

உச்சரிப்பும் ஒலியும் பயில்பொருளிலிருந்து வெளிவராது. இதுவே

மாணவர்களின் நிலையை அறிய பேருதவியாக இருந்த்து.

ஆய்வாளர் மாணார்களின் அவ்வாரத்திற்கான நிலையை ஆய்வாளர்

குறிப்பெடுத்துக் கொண்டார்.

நான்காவது வாரத்தில் ஆய்வுக்குட்பட்ட மாணவர்கள்

மூன்றெழுத்து நான்கெழுத்துச் சொற்களை ஒலியின்

துணையில்லாமல் வாசித்தனர். மாணவர்கள் இவ்வாறு

வாசிக்கையில் அவர்கள் அவர்களால் சுயமாக யாருடைய

துணையும் இல்லாமல் வாசிக்க முடியும் என்ற எண்ணம்


ஊற்றேடுக்க தொடங்கியது. மேலும் மாணவர்கள் தாங்கள் ஒலியின்

துணையில்லாமல் வாசித்த்தை ஒலியின் துணையுடன் சரிப்பார்த்துக்

கொண்டனர் இதன் மூலம் அவர்கள் இளைத்த பிழைகளை

அவர்களே அறிந்து திருத்திக் கொள்ள

You might also like