You are on page 1of 3

தரவுகள் சேகரிக்கும் முறைமையைத் திட்டமிடல்

இந்த ஆய்வினை மேற்கொள்ள பல ஆய்வுக் கருவிகளை ஆய்வாளர் பயன்படுத்தவுள்ளார். அவை


முன்னறி சோதனை, பின்னறி சோதனை, நேர்காணல், சரிபார் பட்டியல், வினாநிரல், ஒளிப்படக்கருவி
ஆகும். தரவுகள் அனைத்தும் புள்ளி விவரங்களுடன் வெளிவிடுவதற்காகவே இத்தகவல் சேகரிப்புக்
கருவிகளைப் பயன்படுத்தவுள்ளார். ஆய்வாளர் பயன்படுத்தும் அனைத்துக் கருவிகளும் ஆய்வின்
நோக்கங்களுக்கு ஏற்புடையதாக அமையும் என ஆய்வாளர் நம்புகிறார்.

முன்னறி சோதனை

முன்னறி சோதனையானது ஆய்வுக்கான எந்தவொரு நடவடிக்கையை நடத்துவதற்கும் முன்


நடத்தப்படும் சோதனையாகும். ஒரு குறிப்பிட்ட பாடக் கருத்துகளை முற்றும் கற்றுணர மேலும் ஒரு
மாணவன் எந்த அளவு கற்க வேண்டுமென ஆராய உதவும் ஒரு கருவியாக விளங்குகிறது என்கிறார்
ராஜம்மாள் ராஜகோபால்.க. (2006) அவர்கள். இவ்வாய்வில் முன்னறி சோதனையாக மாணவர்களுக்கு
சில பழமொழிகளையும் அதன் பொருளையும் வழங்கி இணைக்கப் பணிக்கப்படும். பழமொழியையும்
அதன் பொருளையும் இணைக்கும் நடவடிக்கையின்வழி மாணவர்கள் பழமொழியின் பொருளை
அறிந்துள்ளனரா என்ற சிக்கலை ஆய்வாளரால் கண்டறிய முடியும்.

பின்னறி சோதனை

ஒரு குறிப்பிட்ட காலப் பயிற்சிக்கோ அல்லது கற்றலுக்கோ பின்னர் ஒருவர் அத்திறநை


அடைந்துள்ளனரா என்பதை அறிவதற்காக நடத்தப்படும் தேர்வாகும். மாணவர்களுக்குப்
பயன்படுத்தப்பட்ட உத்தியின்வழி பழமொழியின் பொருளை அறிந்து எழுதுவதில் எந்த அளவிற்கு
மாணவர்கள் புலமைப் பெற்றுள்ளனர் என்பதை ஆய்வாளர் இச்சோதனையின்வழி கண்டறிய முடியும்.
இம்முறை ஆய்வுக்குட்பட்ட மாணவர்களின் அடைவுநிலை முன்னறி சோதனையில் கிடைத்த
மதிப்பெண்களை விட ஏற்றம் கண்டுள்ளதா என்பதை ஆய்வாளர் கண்டறியவும் இச்சோதனை
துணைபுரியும். இப்பின்னறி சோதனையே ஆய்வாளர் பயன்படுத்திய உத்தியானது எந்த அளவிற்கு
மாணவர்களின் சிக்கலைக் களைத்து வெற்றிக் கண்டுள்ளது என்பதைத் தெள்ளத் தெளிவாக
வெளிப்படுத்தும்.

நேர்காணளல்

நேருக்கு நேர் தகவல் தருவோரைச் சந்தித்து வாய்மொழியாகத் தகவல்களைக் கேட்டுப் பெற


நேர்காணல் உதவுகிறது. ஆய்வாளர் தன் ஆய்வின் தரவுகளைத் திரட்ட நேர்காணல் உத்தியைப்
பயன்படுத்தவுள்ளார். நேர்காணலின் வழி ஆய்விற்கு உட்பட்ட மாணவர்களின் உண்மையான
நிலையினை அறிந்து கொள்ள இந்த உத்தி ஆய்வாளருக்குப் பெரிதும் துணை புரியும் என நம்புகிறார்
ஆய்வாளர். அதோடு மட்டுமல்லாது, மாணவர்களின் வளர்ச்சியோடு தொடர்புடைய தமிழ்மொழிப் பாட
ஆசிரியர்களை நேர்காணல் செய்வதன்வழி, மாணவர்களிடையே ஏற்படும் பழமொழியின் பொருளை
அறிந்து எழுதுவதில் ஏற்படும் சிக்கலைப் பற்றி அறிந்து தீர்வுக் காண உதவியாக இருக்கும் என
நம்புகிறார் ஆய்வாளர்.

சரிபார் பட்டியல்

மாணவர்கள் பழமொழியின் பொருளை அறிந்து எழுதுவதில் எந்த அளவில் முன்னேற்றம் கண்டு


வருகிறது என்பதைக் குறிப்பெடுக்க ஆய்வாளர் சரிபார் பட்டியலை பயன்படுத்துவார். இக்கருவி
ஆய்வாளருக்க்ய் உடனடியாகத் தரவுகளையும் தகவல்களையும் பெறுவதற்குப் பேருதவியாக
அமையும். ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய சரிபார் பட்டியலைத் தயார் செய்து மாணவர்களை
சோதித்து ஆய்வாளர் மதிப்பிடுவார். இதன்வழி, மாணவர்கள் எந்தப் பகுதியில் பலவீனமாக உள்ளனர்
என்பதைக் கண்டறிய இயலும். ததுமட்டுமின்றி, மாணவர்கள் ஆய்வாளர் பரிந்துரைத்த மூன்று
நோக்கங்களைக் கைவர பெற்றுள்ளனரா என்பதனை அறியவும் இச்சரிபார் பட்டியல் பேருதவியாக
அமையும்.

வினாநிரல்
பழமொழியின் பொருளை அறிந்து எழுதுவதில் மாணவர்களின் ஆளுமைப் பண்புகளை அறிய
வினாநிரல் முறையும் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் பல பழமொழிகள் தொடர்பான சிறு
வினாக்கள் அச்சிடப்பட்டு ஒரு சாராரிடம் வழங்கப்பட்டு அவர்களின் கருத்துகளைக் குறிப்பிடுவதாகும்
என்கிறார் ராஜம்மாள் ராஜகோபால்.க. (2006). வினாநிரல் என்பது தகவல் தருவோரே நிறைவு
செய்யுமாறு அமைக்கப்பட்டுள்ள படிவமாகும். இதில் ஒரு ஆய்வுத் தலைப்புக் குறித்த பல்வேறு
வினாக்கள் இடம் பெற்றிருக்கும். வினாநிரல்கள் கல்வி ஆராய்ச்சியில் பெரிதும்
பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வாளர் தன் ஆய்வுக்குத் தரவுகளைத் திரட்ட வினாநிரல் பட்டியலையும்
பயன்படுத்திக் கொள்ளவிருக்கின்றார். இவ்வினாநிரலை ஆய்வாளர் தமிழ்மொழி ஆசிரியருக்கும்
மாணவருக்கும் வழங்குவார். தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பழமொழியைக்
கற்பிக்கும்மோது எதிர்நோக்கும் சிக்கல்களையும் அவற்றைக் களையும் வழிமுறைகள் தொடர்பான
கேள்விகள் உள்ளடக்கிய வினாநிரலை ஆய்விற்கு முன் வழங்குவார். ஆசிரியர்களின் விடைகளைக்
கொண்டு ஆய்வாளர் ஆய்வினை விளைப்பயன்மிக்க வகையில் மேற்கொள்வார். மாணவர்களுக்கான
வினா நிரல் ஆய்வுக்கு முன் அவர்களுக்குக் கொடுக்கப்படும். இவ்வினாநிரலின்வழி மாணவர்கள்
மாணவர்கள் பழமொழியின் பொருளை அறிந்து எழுதுவதில் முழுமையாகக் கைத்தேர்ந்துள்ளனரா
என்பதை ஆய்வாளர் அறிந்து கொள்வார்.

ஒளிப்படக்கருவி

ஒளிப்படக்கருவியை மாணவர்களின் அடைவுநிலையை ஒவ்வொரு நடவடிக்கையின் போதும்


புகைப்படம் எடுக்கவும் காணொளியைப் பதிவுச் செய்து வைக்க ஆய்வாளர் பயன்படுத்துவார்.
இக்கருவியானது, ஆய்வாளர் ஒவ்வொரு முரையும் பதிவு செய்த படத்தைப் பார்த்தும் புகைப்படம்
பார்த்தும், அதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களைச் சரியாகக் குறிப்பெடுப்பதற்குப் பெரும்
உதவியாக அமையும். மேலும், இக்கருவியின் மூலம் எடுக்கப்படும் ஒளிப்பதிவுகள், புகைப்படங்கள்
ஆய்விற்கு முக்கியமான ஆதாரமாக அமையும். இதனால், செயலாய்வின் முடிவுகள் தவறிப் போக
வாய்ப்பில்லாமல் இருக்கும். ஆய்வாளர் இம்முறையைத் தம்முடைய ஒவ்வொரு
நடவடிக்கையின்போதும் செயல்படுத்தவுள்ளார். நேர்காணல் முதற்கொண்டு இறுதி கட்ட தரவுகள்
சேகரிப்பான வினாநிரல் வரை இவ்வொளிப்படக் கருவி ஆய்வாளருக்குத் துணை நிற்கும்.

You might also like