You are on page 1of 1

தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டில் மலேசியத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்(University

Technology Malaysia, UTM) இந்துமதி முத்துசாமி என்பவர் ‘சுகூடாய் மாவட்டத்தில் உள்ள மூன்று
இடைநிலைப்பள்ளிகளில் காணும் புகுமுக மாணவர்களிடையே மலாய் மொழி ஆளுமை’ எனும் தலைப்பை
ஒட்டிய ஓர் ஆய்வு செய்துள்ளார். புகுமுக வகுப்பு என்றாலே ஆறாம் ஆண்டின் அரசு தேர்வில் மலாய்
மொழிப் பாடத்தில் சிறந்த தேர்சச ் ிப் பெறாத மாணவர்கள் மட்டும் இடைநிலைப்பள்ளியில் புகுமுக
வகுப்பிற்குச் செல்வார்கள். அவ்வகையில், பேச்சு, எழுத்து, மொழி பயன்பாடு, மாணவர் படைப்பு, சுற்றுச்
சூழல், மாணவர் ஒழுக்கம் ஆகிய கூறுகள் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆகையால்,
இம்மாணவர்களிடையே மலாய் மொழி ஆளுமை சற்று குறைவாகதான் கண்டுள்ளன என்பது
இவ்வாய்வின் முடிவாகும்.

2.4. ஆய்வுக் கட்டுரைகள்


ஆய்வாளர் இரண்டாம் படிவ மாணவர்களிடையே இலக்கண ஆளுமை எனும் தலைப்பை ஒட்டி சில
ஆய்வுக் கட்டுரைகளை இந்த இயலில் விளக்கியுள்ளார். ஆய்வுக் கட்டுரைகளில் ஆய்வாளரின்
தலைப்பில் ஆய்வுகள் செய்யப்படாவிட்டாலும் இத்தலைப்பை ஒட்டிய தரவுகளும் தகவல்களும் ஆய்வுக்
கட்டுரையில் அமைந்திருக்கின்றன.

அவ்வகையில், ஜூன் 2016 ஆம் ஆண்டில், சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழத்தில்


மனோன்மணி தேவி அண்ணாமலை என்பவர் 'இலக்கணம் கற்பித்தலில் புதிய சிந்தனைகள்' எனும்
ஆய்வு கட்டுரையை எழுதியுள்ளார். இலக்கணத்தை மகிழ்ச்சியாகக் கற்பிக்கவும் கற்கவும்
எவ்வகையான வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்று

You might also like