You are on page 1of 6

மனிதன் எதற்கு வேண்டுமானாலும் கணக்குப் பார்க்கலாம்.

ஆனால் சோற்றுக்கு கணக்குப்


பார்க்கலாமா? உண்மையில் உற்றார் உறவினர் என்பவர்கள் கணக்குப் பார்க்கத்தானே செய்கிறார்கள்?
அப்படியிருக்கும் இந்தக் காலத்தில் ஒரு உணவுவிடுதி நடத்துபவர் அப்படி இருக்கமுடியுமா? முடியும்
என்பதை ஜெயமோகனின் இந்தக் கதை சொல்கிறது.

பசி எவ்வளவு கொடுமையானது என்பதை நாம் அறியாதவர்கள் அல்ல. மனிதனுக்கு அவனுடைய


வாழ்வில் எத்தனையோ இல்லாமை இருக்கலாம் ஆனால் உணவு இல்லாமையைப் போலக் கொடியது
வேறு ஒன்றுமில்லை. சங்க காலக் காப்பியமான மணிமேகலை உணவையும் பசியையும்
பற்றிப்பேசுகிறது. அட்சயபாத்திரம் பெற்ற மணிமேகலையிடம் தீவதிலகை என்ற பெண் பசியைப்
பொறுக்கமுடியாத ஏழைகளின் வேதனையைப் போக்குவதுதான் இந்த வாழ்க்கைக்கு உரிய
உண்மையான நெறி என்று சொல்கிறாள்.

உணவு என்பது உயிர்தான்! எனவே அதைக் கொடுப்பவர் யாராக இருப்பினும் அவர்கள் கடவுளுக்கு
நிகராகப் போற்றத் தகுந்தவர். பலனைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலையின்றி எல்லோருக்கும் உணவு
தரும் கெத்தேல் சாகிப் அட்சயபாத்திரம் ஏந்திய மணிமேகலையின் மறு அவதாரம்தான். அவர் ஓர்
அன்னதாதா; உண்மையான ஆன்மீகவாதி. இந்த உலகில் எத்தனையோ அவதார புருஷர்கள்
தோன்றியிருக்கலாம். அவர்களுக்கு எல்லாம் சற்றும் இளைத்தவரல்ல கெத்தேல் சாகிப்.

கெத்தேல் சாகிப்பை நாம் முழுவதுமாகப் புரிந்துகொள்ளஜெயமோகன் காட்டும் மூன்று காட்சிகளின்


சித்தரிப்பும், அந்தச்சித்தரிப்பிலிருந்து எழும் அவரது மூன்று பரிமாணங்களையும்நாம் உணரவேண்டியது
அவசியம்.

உறவும் சரி, பெற்ற தாயும் சரி சோற்றுக்குக் கணக்குப் பார்க்கும்போது கெத்தேல் சாகிப்பின் இந்தப்
பண்பு வார்த்தைகளால் அளவிட முடியாதது. அவர் உணவு விடுதி நடத்துகிறார். எல்லோருக்கும்
இலவசமாக உணவு கொடுக்கிறார். பணம் இருப்பவர்கள் கொடுக்கலாம், இல்லாதவர்கள் வெறுமே
சாப்பிட்டுப் போகலாம் என்பது ஒரு பக்கமிருப்பினும், அதைச் செய்யும் விதத்தில் அன்பு, இரக்கம்,
பாசம் இருப்பது அவசியம். இல்லையேல் அந்தச் செயலால் ஒரு பயனும் இல்லை. இலவசம்
என்பதற்காகச் சாப்பிடுபவன் குற்ற உணர்வு இல்லாமல் சாப்பிடவேண்டும் என்ற அவரின் உயர்ந்த
பண்பு இதனால் வெளிப்படுகிறது. அது மட்டுமல்ல, அந்த உணவின் ருசி, இதுவெறும் கடனுக்காகச்
செய்யும் காரியமல்ல கடமைக்காகச் செய்யும் காரியம் என்பதையும் நமக்குக் காட்டுகிறது. இங்கேதான்
கெத்தேல் சாகிப் வானளவு உயர்ந்து நிற்கிறார். இது அவரது முதல் பரிமாணம்.

தான் பல வருடங்களாக சாப்பிட்டதற்கு ஒட்டுமொத்தமாகப் பணத்தை உண்டியலில் போடுகிறான்


கதைசொல்லி. ஒரு பக்தன் கடவுளின் சன்னிதியில் உண்டியலில் காணிக்கையிடும் காட்சிக்கு நிகரானது
இது. கடவுளுக்கு நாம் ஏதேனும் உபகாரம் செய்யமுடியமா? இருந்தும் நம் சிற்றறிவு அதில் சற்றே
திருப்பதி அடைகிறது. அவரது சோற்றுக் கணக்கை எத்தனை எத்தனை பணம் கொட்டிக் கொடுத்தாலும்
தீர்க்கத்தான் முடியுமா? ஏழேழு ஜன்மத்திற்கும் தீர்க்க இயலாத ஒரு கடன் அல்லவா? கெத்தேல் சாகிப்
அவனைப் பார்த்து சற்றே தலையசைத்து ஒரு பார்வை பார்த்து விடமாட்டாரா என்ற ஏக்கம்
அவனுக்கு மட்டுமல்ல நமக்கும் ஏற்படுகிறது. ஆனால் அப்படி பார்த்துவிட்டால் அவர் செய்த
காரியத்தின் மகத்துவம் நமக்கு விளங்காமலே போய்விடும். மாறாக நம் அகங்காரம், “பார்த்தாயா
இதுவரை சாப்பிட்டதற்கு மொத்தமாக கணக்குத் தீர்த்துவிட்டேன்” என்று கொக்கரிக்கும். இத்தகைய
காரியத்தைச் செய்வதும், அதை அன்புடன் செய்வதும் மட்டும் போதுமானது அல்ல. மாறாக அதற்கான
பலனின் மீதும் பற்று வைக்காமல் இருப்பது போற்றுதற்குரியது. இந்த இடத்தில், கீதை காட்டும்
கிருஷ்ணனின் தரிசனம் போன்று, கெத்தேல் சாகிப்பின் விஸ்வரூப தரிசனம் வெளிப்படுகிறது. நாம்
அவரைக் கண்டு பரவசமடைந்து பேச்சடைத்து நிற்கிறோம். இது அவரது இரண்டாவது பரிமாணம்.
அவர் வெறும் உணவை மட்டும் தன் வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறவில்லை. மாறாக உணவுடன்
சேர்த்து அற உணர்வையும் பரிமாறுகிறார். இந்த அறம், நேர்மை, அன்பு, இரக்கம் என்பது எப்போதும்
ஒரு தரப்பை மட்டும் சார்ந்ததல்ல. இரண்டு தரப்பையும் சார்ந்தது. எனவே ஒரு தரப்பு மட்டும்
தீவிரத்துடனும்,தீ ரத்துடனும் இவற்றை நடைமுறைப் படுத்தும்போது அடுத்த தரப்பினரும் அவற்றைப்
பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுவே காந்தியடிகள் மேற்கொண்ட அகிம்சையின்
அடிப்படைத் தத்துவம். ஆகவே கெத்தேல் சாகிப்பின் இந்தப் பண்பு கதைசொல்லியிடம் இயல்பாகப்
படிந்து விடுகிறது. கிடைத்த பணத்தை தன் அத்தையிடம் கொடுத்து அவள் கணக்கைத்
தீர்க்கப்போகிறான் என்றே நாம் நினைக்கிறோம். ஆனால் அவளது மகளைத் திருமணம் செய்வதன்
மூலம் அந்தக் கணக்கைத் தீர்க்கிறான். தன்னைப் புறக்கணித்து அவமானப்படுத்திய அத்தையின்
மகளைக் கட்டிக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் அவனுக்கு இல்லை.இருந்தும் அப்படி ஏன்
செய்கிறான் என்றால் அதற்குக் காரணம் கெத்தேல் சாகிப்புதான். அந்த உணர்வை அவனுக்குக்
கொடுத்தது அவர்தான். இங்கே அவரது மூன்றாவது பரிமாணத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம்.

உலகில் எங்கேயும்எப்போதும் இப்படியான மனிதர்கள் தோன்றியபடிதான்இருக்கிறார்கள். அவர்களின்


இருப்பு பிறரையும் அவ்வாறாகமாறுவதற்குத் தூண்டுகோலாக அமைகிறது. அதுவே மண் மீதானஇந்த
வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதாக இருக்கிறது.இவையெல்லாம் கெத்தேல் சாகிப்பை நம்
உள்ளத்தில்என்றென்றுமாக நிலைத்து நிற்பவராகச் செய்து விடுகிறது.இத்தனையும் இந்தக் கதையில்
வெளிப்படுவதன் மூலம் இதுஎன்றென்றைக்குமாக பேசப்படும் ஒரு கதையாகஆகியிருக்கிறது.

சோற்றுக்கணக்கு கேசவமணி

மனிதன் எதற்கு வேண்டுமானாலும் கணக்குப் பார்க்கலாம்.ஆனால் சோற்றுக்கு கணக்குப் பார்
க்கலாமா? உண்மையில்உற்றார் உறவினர் என்பவர்கள் கணக்குப் பார்க்கத்தானே
செய்கிறார்கள்? அப்படியிருக்கும் இந்தக் காலத்தில் ஒரு உணவுவிடுதி நடத்துபவர் அப்படி 
இருக்கமுடியுமா? முடியும் என்பதை ஜெயமோகனின் இந்தக் கதை சொல்கிறது. ஜெயமோகனின்
அறம் சிறுகதைகளில் சோற்றுக் கணக்கு ஆகச்
சிறந்தகதையாகும். இந்தக் கதை தன்னுள் பொதிந்து வைத்திருக்கும்
நுட்பங்கள் அநேகம். இந்தக் கதை நம்முள் ஏற்படுத்தும் தாக்கம்
ஆழமானது. கதையைப் படித்து முடித்ததும் நம் மனம் கொள்ளும்பரவசம், நம் மூளையில் ஏற்ப
டும் பாய்ச்சல் வார்த்தையில்சொல்லும் தரமன்று.
பசி எவ்வளவு கொடுமையானது என்பதை நாம் அறியாதவர்கள்அல்ல. மனிதனுக்கு அவனுடை
ய வாழ்வில் எத்தனையோஇல்லாமை இருக்கலாம் ஆனால் உணவு இல்லாமையைப்போலக் 
கொடியது வேறு ஒன்றுமில்லை. சங்க காலக்காப்பியமான மணிமேகலை உணவையும் பசியையு
ம் பற்றிப்பேசுகிறது. அட்சயபாத்திரம் பெற்ற மணிமேகலையிடம்தீவதிலகை என்ற பெண் இவ்
வாறு சொல்கிறாள்:

ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உயிர்க் கொடை பூண்ட உரவோய்!

பசியைப் பொறுக்கமுடியாத ஏழைகளின் வேதனையைப்போக்குவதுதான் இந்த வாழ்க்கைக்கு 
உரிய உண்மையான நெறி.அணுக்களால் நிறைந்த இந்த உலகத்தில்வாழ்பவர்களுக்கெல்லாம் நீ 
உணவு கொடுத்தால், அதுஅவர்களுக்கு உயிரைக் கொடுத்ததற்குச் சமம். ஆகவே,உன்னுடைய 
அறிவைச் சரியானபடி பயன்படுத்து, எல்லாருக்கும்உயிரைத் தானமாகக் கொடு! என்று சொல்வ
தாக இப்பாடலைபாடியிருக்கிறார் சீத்தலைச் சாத்தனார்.

உணவு என்பது உயிர்தான்! எனவே அதைக் கொடுப்பவர் யாராகஇருப்பினும் அவர்கள் கடவு
ளுக்கு நிகராகப் போற்றத் தகுந்தவர்.பலனைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலையின்றி எல்லோருக்கு
ம்உணவு தரும் கெத்தேல் சாகிப் அட்சயபாத்திரம் ஏந்தியமணிமேகலையின் மறு அவதாரம்தா
ன். அவரைப் பற்றியஉருவம் நம் கண்முன் விரியும் தருணத்தில், கண்ணதாசனின்,
”கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவேஆனாலும் கலங்கமாட்டேன்” என்
ற வரிகள் மனதில்தன்னியல்பாக ஓடுகிறது. அவர் ஓர் அன்னதாதா; உண்மையானஆன்மீகவாதி
. இந்த உலகில் எத்தனையோ அவதார புருஷர்கள்தோன்றியிருக்கலாம் அவர்களுக்கு எல்லாம் 
சற்றும்இளைத்தவரல்ல கெத்தேல் சாகிப்.

கெத்தேல் சாகிப்பை நாம் முழுவதுமாகப் புரிந்துகொள்ளஜெயமோகன் காட்டும் மூன்று காட்சிக
ளின் சித்தரிப்பும், அந்தச்சித்தரிப்பிலிருந்து எழும் அவரது மூன்று பரிமாணங்களையும்நாம் உ
ணரவேண்டியது அவசியம்.

முதல் காட்சி:
மாமிக்கு கொஞ்சம்கூட மனமில்லை என்பது அன்றைக்குச்சாயங்காலம் சாப்பிடும்போதே தெரி
ந்தது. எல்லாரும் அப்பளம்பொரியல் சாம்பாருடன் சாப்பிடும்போது என்னைஅழைக்கவில்லை. 
சாப்பிட்டு முடித்தபின்னர் அடுப்படியில் ஒருஅலுமினிய பாத்திரத்தில் எனக்கு தண்ணீர்விட்ட 
சோறுஅதிலேயே விடப்பட்ட குழம்புடன் இருந்தது.

இரண்டாம் காட்சி:
அம்மா நல்ல அரிசி வாங்கி மீன்குழம்பு வைத்து அவளேபரிமாறுவாள். ஆனால் எத்தனையோ 
காலமாக நீண்டு நின்றவறுமை. அவளுக்கு பரிமாறத்தெரியாது. ஒரு கண் எப்போதும்பானையி
ல் இருக்கும் சோறையும் சட்டியில் இருக்கும்குழம்பையும் கணக்குபோடுவதை தவிர்க்க தெரி
யாது.அகப்பையில் அவள் சோறோ குழம்போ அள்ளினால் அரைவாசிதிரும்ப கொட்டிவிடுவா
ள். இன்னும் கொஞ்சம் குழம்பு என்றால்அவளுடைய அகப்பை சில சொட்டுகள் தான் அள்ளு
ம். கையோமனமோ குறுகிவிட்டது. சாளைப்புளிமுளமும் சம்பா அரிசிசோறும் அவள் அள்ளி 
வைக்கையில் நான் நாலாவதுஉருண்டைச் சோறில் வயிறு அடைத்த உணர்வை அடைவேன்.
அந்த சோற்றை அள்ளி வாயில் போடுவதே சலிப்பாக தெரியும்.பலவீனமாக ’சாப்பிடுடா’ என்
பாள் அம்மா.

மூன்றாம் காட்சி:
என்னருகே வந்தவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார்.
‘எந்தாபுள்ளேச்சன், புத்தனா வந்நதா?’ என்றார். என்னை வெள்ளாளன்என்று எப்படி கவனித்தா
ர் என்று வியந்து பேசாமல் இருந்தேன்.சோற்றைக் கொட்டி அதன் மேல் குழம்பை ஊற்றினார். 
ஒருபெரிய பொரித்த சிக்கன் கால். இரண்டு துண்டு பொரித்த மீன்.
‘தின்னு’ என்று உறுமியபின் திரும்பிவிட்டார். அதற்கு எப்படியும்மூன்று ரூபாய்க்குமேல் ஆகிவி
டும். என் கைகால்கள் பதறஆரம்பித்தன. சோறு தொண்டையில் அடைத்தது. சட்டென்றுதிரும்பி
ய சாகிப் ‘நிங்ங அவிடே எந்து எடுக்கிணு? தின்னீன்பிள்ளேச்சா’ என்று ஒரு பயங்கர அதட்ட
ல் போட்டார். அள்ளிஅள்ளி சாப்பிட்டேன். அந்த ருசி என் உடம்பெல்லாம் பரவியது.ருசி! கட
வுளே, அப்படி ஒன்று உலகில் இருப்பதையே மறந்துவிட்டேனே. என் கண்களில் இருந்து கண்
ணீர் கொட்டி வாய்வரைக்கும் வழிந்தது.

உறவும் சரி, பெற்ற தாயும் சரி சோற்றுக்குக் கணக்குப்பார்க்கும்போது கெத்தேல் சாகிப்பின் இந்
தப் பண்புவார்த்தைகளால் அளவிட முடியாதது. அவர் உணவு விடுதிநடத்துகிறார். எல்லோருக்
கும் இலவசமாக உணவு கொடுக்கிறார்.பணம் இருப்பவர்கள் கொடுக்கலாம், இல்லாதவர்கள் 
வெறுமேசாப்பிட்டுப் போகலாம் என்பது ஒரு பக்கமிருப்பினும், அதைச்செய்யும் விதத்தில் அன்
பு, இரக்கம், பாசம் இருப்பது அவசியம்.இல்லையேல் அந்தச் செயலால் ஒரு பயனும் இல்லை. 
இலவசம்என்பதற்காகச் சாப்பிடுபவன் குற்ற உணர்வு இல்லாமல் சாப்பிடவேண்டும் என்ற அவ
ரின் உயர்ந்த பண்பு இதனால்வெளிப்படுகிறது. அது மட்டுமல்ல, அந்த உணவின் ருசி, இதுவெ
றும் கடனுக்காகச் செய்யும் காரியமல்ல கடமைக்காகச்செய்யும் காரியம் என்பதையும் நமக்குக் 
காட்டுகிறது.இங்கேதான் கெத்தேல் சாகிப் வானளவு உயர்ந்து நிற்கிறார். இதுஅவரது முதல் பரி
மாணம்.

தான் பல வருடங்களாக சாப்பிட்டதற்கு ஒட்டுமொத்தமாகபணத்தை உண்டியலில் போடுகிறான் 
கதைசொல்லி. ஒரு பக்தன்கடவுளின் சன்னிதியில் உண்டியலில் காணிக்கையிடும்காட்சிக்கு நிக
ரானது இது. கடவுளுக்கு நாம் ஏதேனும் உபகாரம்செய்யமுடியமா? இருந்தும் நம் சிற்றறிவு அதி
ல் சற்றே திருப்பதிஅடைகிறது. அவரது சோற்றுக் கணக்கை எத்தனை எத்தனைபணம் கொட்டி
க் கொடுத்தாலும் தீர்க்கத்தான் முடியுமா? ஏழேழுஜன்மத்திற்கும் தீர்க்க இயலாத ஒரு கடன் அ
ல்லவா? கெத்தேல்சாகிப் அவனைப் பார்த்து சற்றே தலையசைத்து ஒரு பார்வைபார்த்து விடமா
ட்டாரா என்ற ஏக்கம் அவனுக்கு மட்டுமல்லநமக்கும் ஏற்படுகிறது. ஆனால் அப்படி பார்த்துவி
ட்டால் அவர்செய்த காரியத்தின் மகத்துவம் நமக்கு விளங்காமலேபோய்விடும். மாறாக நம் அ
கங்காரம்,
“பார்த்தாயா இதுவரைசாப்பிட்டதற்கு மொத்தமாக கணக்குத் தீர்த்துவிட்டேன்” என்றுகொக்கரிக்
கும். இத்தகைய காரியத்தைச் செய்வதும், அதைஅன்புடன் செய்வதும் மட்டும் போதுமானது அ
ல்ல. மாறாகஅதற்கான பலனின் மீதும் பற்று வைக்காமல் இருப்பதுபோற்றுதற்குரியது. இந்த இ
டத்தில், கீதை காட்டும்கிருஷ்ணனின் தரிசனம் போன்று, கெத்தேல் சாகிப்பின்விஸ்வரூப தரிசன
ம் வெளிப்படுகிறது. நாம் அவரைக் கண்டுபரவசமடைந்து பேச்சடைத்து நிற்கிறோம். இது அவர
துஇரண்டாவது பரிமாணம்.
அவர் வெறும் உணவை மட்டும் தன் வாடிக்கையாளர்களுக்குபரிமாறவில்லை மாறாக உணவுட
ன் சேர்த்து அற உணர்வையும்பரிமாறுகிறார். இந்த அறம், நேர்மை, அன்பு, இரக்கம் என்பதுஎப்
போதும் ஒரு தரப்பை மட்டும் சார்ந்ததல்ல. இரண்டுதரப்பையும் சார்ந்தது. எனவே ஒரு தரப்பு 
மட்டும் தீவிரத்துடனும்,தீரத்துடனும் இவற்றை நடைமுறைப் படுத்தும்போது அடுத்ததரப்பினரு
ம் அவற்றைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம்ஏற்படுகிறது. இதுவே காந்தியடிகள் மேற்கொண்ட 
அகிம்சையின்அடிப்படைத் தத்துவம். ஆகவே கெத்தேல் சாகிப்பின் இந்தப் பண்புகதைசொல்லி
யிடம் இயல்பாகப் படிந்து விடுகிறது. கிடைத்தபணத்தை தன் அத்தையிடம் கொடுத்து அவள் 
கணக்கைத்தீர்க்கப்போகிறான் என்றே நாம் நினைக்கிறோம். ஆனால்அவளது மகளைத் திரும
ணம் செய்வதன் மூலம் அந்தக்கணக்கைத் தீர்க்கிறான். தன்னைப் புறக்கணித்துஅவமானப்படுத்
திய அத்தையின் மகளைக்கட்டிக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் அவனுக்கு இல்லை
.இருந்தும் அப்படி ஏன் செய்கிறான் என்றால் அதற்குக் காரணம்கெத்தேல் சாகிப்புதான். அந்த 
உணர்வை அவனுக்குக் கொடுத்ததுஅவர்தான். இங்கே அவரது மூன்றாவது பரிமாணத்தை நாம்
உணர்ந்து கொள்கிறோம்.

சுருங்கச் சொன்னால்,
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கான பொருள்கெத்தேல் சாகிப்பின் வாழ்க்கைதான். 
உலகில் எங்கேயும்எப்போதும் இப்படியான மனிதர்கள் தோன்றியபடிதான்இருக்கிறார்கள். அவ
ர்களின் இருப்பு பிறரையும் அவ்வாறாகமாறுவதற்குத் தூண்டுகோலாக அமைகிறது. அதுவே ம
ண் மீதானஇந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தருவதாக இருக்கிறது.இவையெல்லாம் கெத்தேல் சாகி
ப்பை நம் உள்ளத்தில்என்றென்றுமாக நிலைத்து நிற்பவராகச் செய்து விடுகிறது.இத்தனையும் இ
ந்தக் கதையில் வெளிப்படுவதன் மூலம் இதுஎன்றென்றைக்குமாக பேசப்படும் ஒரு கதையாக
ஆகியிருக்கிறது. 

சோற்றுக் கணக்கு மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் கதை.எப்போது படித்தாலும் புதிது 
போல இந்தக் கதை என்னைவெகுவாக அலைக்கழிக்கிறது. படித்துப் படித்துத் தீராத கதை இது
.

கெத்தேல் சாஹிபின் கரங்கள் அப்படி பிள்ளைபேற்றாலே கனிந்த கரங்கள். அவருடைய


அன்பு இனிய வார்த்தைகளிலோ, அன்பான தொடுகையிலோ அல்ல. வயிறு வெடிக்க
உணவிடும்பொழுதே அவர் தன் மீட்பை கண்டடைகிறார்.
ஒரு சிறுகதை இந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்த முடியுமா? ஏனென்றால் அடிப்படை
உணர்ச்சி அது. பசி. காமம் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். பசி அதிகம்
எழுதப்பட்டதில்லை. ஏனென்றால் அது நேரடியானது. அதில் சிக்கல் ஒன்றும் இல்லை. அதை
அறத்துடன் இணைத்ததனால்தான் அந்த சிக்கலான டெக்ஸ்ச்சர் வந்தது என நினைக்கிறேன்.
மகத்தான கதை. வாசித்துத்தீராத சப்டெக்ஸ்ட் கொண்டது. கதையில் செண்டிமெண்டாக ஏதும்
இல்லை. மிகமிக மேட்டர் ஆஃப் பெக்ட் நடையில் செல்கிறது.ஆனால் ஏனோ அழுகை
வந்தது. அது இன்னும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது வரும் துக்கம்.
தாகத்தின் புனித துக்கம் என்று சுந்தர ராமசாமி எழுதியதை ஞாபகப்படுத்திக்கொண்டேன்.
சோற்றுக்கணக்கு அன்பு,மானுடம் என்பதற்கு இலக்கணமாக விளங்கும் சிறுகதை.என்
பார்வையில் தஙகளின் மிகச்சிறந்த சிறுகதை. நான் கூட நல்லவன் வாழ்வான் கெட்டவன்
அழிவான் போல் ரொமான்டிஸ முடிவைத் தரப் போகிறீர்களோ என்று எதிர் பார்த்தேன்.
ஆனால் பிரதி பலன் பாராது காட்டும் அன்பின் வெளிப்பாட்டில் தங்கள் ஆதர்ச நாயகர்
லெவ் தோல்ஸ்தாயின் கதா பாத்திரம் போல் ஆகிறான் கதை சொல்லி.
படிக்கையில் கண்கள் கலங்கின என்று சொல்ல எனக்குக் கூச்சம் ஒன்றுமில்லை
தன் சொந்தக்கணக்கில் இருந்து அவன் சற்றே மேலெழுவதுதான் கதையின் உச்சம்.அந்த
எழுச்சியை அக்கணம் கெத்தேல்சாகிப் அளிக்கிறார்.அதற்கு கெத்தேல் சாஹிப்தான் கிரியா
ஊக்கி
ஆம் .இந்த உச்சம் நாடகீயத்தன்மை இல்லாமல் போகிறபோக்கில் ஒரு வரியில்
சொல்லியிருப்பது ஒரு ஆழத்தையும் அழகையும் தருகிறது .
கெத்தேல்சாகிப் யாருக்கும் எந்த போதனையும் அளிப்பதில்லை ,காந்தி சொன்னது போல‌
அவரது வாழ்வே அவர் அளித்த மிகப்பெரும் போதனை அதை நமது நாயகன் நேரடியாக
உணர்ந்து உள்வாங்கிக்கொள்வது ஒரு குரு சிஷ்ய உறவை எந்த அலங்காரமும் இல்லாமல்
முன் வைக்கிறது.
ஒரு வகையில் சொல்லப் போனால் கெத்தேல்சாகிப் அவனை சோற்றாலேயே அடித்து
அவனை ஒரு வகையில் கனிய வைக்கிறார்.
வாழ்வின் யதார்த்தங்களை, உச்சங்களை, தாழ்வுகளை நேர்கோட்டு அளவு கோல்களை
வைத்துத் தீர்மானிக்க இயலாது. அது அனுபவங்கள், அறிதல்கள் வழியாக ஏற்படும்
நம்பிக்கைகள், உணர்வுகள் மற்றும் வாய்ப்புகள் இவற்றின் வெளிப்பாடு.
உங்கள் கதைகளில் எதிர் எதிர்க் கருத்துக்களை வைத்து ஒரு விவாததன்மையை மெலிதாக
ஊடுருவ விட்டு இருப்பது அருமை. பல மனிதர்களின் பலவித மனவோட்டங்களை
அவர்களின் யதார்த்தத்துக்கும் செம்மைக்குமான தடுமாற்றங்களை பதிவு செய்து இருக்கும்
விதம் அருமை.
இலக்கியம், உடனடி வாசிப்பு அனுபவம் மட்டும் இன்றி, அடிப்படை சிந்தைனைகளைத்
தூண்டி, கதைப்பற்றியும், அதைத்தாண்டியும் யோசிக்க வைத்து எம்மைச் செம்மை படுத்த
உதவும் என நம்புகிறேன்.
அறம், சோற்றுக்கணக்கு இரண்டுமே எளிய அழகிய கதைகள். எந்தக்கதை மனதைச்சென்று
தொடுகிறதோ அதுதான் உண்மையான இலக்கியம் என்பதை இந்தக்கதைகளின் மூலம்
காட்டியிருக்கிறீர்கள். இனிமேலாவது நம்முடைய எழுத்தாளர்கள் வாசித்த உத்திகளை
வைத்துக்கொண்டு படம் காட்டமல் சுற்றிலும் நடக்கும் வாழ்க்கையை கொஞ்சம் காட்டினார்கள்
என்றால் நன்றாக இருக்கும்

You might also like